10-10-2004, 10:59 PM
<img src='http://www.yarl.com/forum/files/dsc00475.1.jpg' border='0' alt='user posted image'>
|
நான் நிலை தளர்ந்த போது ...........
|
|
10-10-2004, 10:59 PM
<img src='http://www.yarl.com/forum/files/dsc00475.1.jpg' border='0' alt='user posted image'>
10-10-2004, 11:09 PM
<img src='http://www.yarl.com/forum/files/dsc00472.1.jpg' border='0' alt='user posted image'>
10-10-2004, 11:18 PM
<img src='http://www.yarl.com/forum/files/dsc00465.1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/dsc00464.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00463.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00470.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00468.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00467.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00471.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00474.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/dsc00475.1.jpg' border='0' alt='user posted image'>
10-10-2004, 11:22 PM
<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.20.minuts..jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_1_105.jpg' border='0' alt='user posted image'>
10-11-2004, 03:18 AM
படங்களை பார்க்கும்போது மேலெழும் வேதனை.. கூடவே.. ஆடியடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி மண்ணே சொந்தமடா என்பது போல ஆறடி மண்ணோ.. ஒரு பிடி சாம்பலோ மனிதனை அடக்கும்போது.. அதுவே உண்மையாக உள்ளபோது.. மனிதனின் முன்னேற்றத்திற்கான தேடலும் ஓடலும் நிற்கின்றனவா? இல்லையே.. அவனது தேடலிலும் ஓடலிலும் சமூகம் பயன்பெற்றுக் கொண்டுதானே உள்ளது.. ஆகவே.. அஜீவன் இதற்கெல்லாம் சோர்ந்துவிடாமல்.. உங்கள் வழியில் தொடர்ந்து செல்லுங்கள்.. வாழ்த்துக்கள்!!
.
10-12-2004, 02:49 AM
சோதனையும் சோகமும் நிறைந்த கட்டங்களை தாங்கி கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று மகிழ்ச்சிகர வாழ்வை எட்ட அஜீவன் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
10-12-2004, 12:52 PM
அன்பு அஜீவன்!
எல்லாவற்றையும் தீ கௌவிக்கொள்ளும் காட்சி ஒரு கனவாக இருக்கக் கூடாதா? ஏக்கம் தங்களுக்கு மட்டுமல்ல. தேடித்தேடிச் சேகரித்தவை. வாழும் காலத்தின் செயலிருப்பைப் பதிவுறுத்தும் எவ்வளவோ ஆவணங்கள்..... பொக்கிசங்கள்... தங்களது வேதனையைச் சொல்லில் வரைவது மிகக் கடினம். ஆயினும் தங்கிடம் நான் கண்ட துடிதாட்டம் பாதிப்புக்குள்ளாதது கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். அஜீவன் நிலைதடுமாறியது தங்களது மடலின் தலைப்பிலிருந்துது. ஆயினும் வழமையாக நிலைதடுமாறுபவர்கள் ஏதுமே செய்ய முடியாதவர்களாகி, பெரும் மன இறுக்கத்தினுள் மூழ்கி, தமது ஆளுமையைஞம் பறிகொடுத்துப் பரிதவிப்பார்கள். தலைவர்களாலும், சிறந்த உடல்-உளப் பயிற்சி பெற்றவர்களாலும்தான் திடீரென நடைபெறும் அசம்பாவிதங்களால் தடுமாறாத திறன் காணப்படும். அத்தகைய மனவில்பை தங்களது எழுத்தில் கண்டேன். நிலை தடுமாறிய வேளையிலும் தங்களது தன்னாற்றல் துடிப்பாக இருப்பது எனக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்வையும் கொடுத்தது. தங்களுக்கேற்பட்ட சோக நிகழ்வு பற்றிய விபரணச் சித்திரத்தை தாங்களே, அந்தவேளையிலேயே வரைந்தது என்னை ஆச்சரிய மூட்டத்தவறவில்லை. அதற்கேற்ப படங்களையும் இணைத்து கோவையாக்கியது தங்களிடம் ஒரு போர்க்காலப் பத்திரிகையாளன் ஒருவன் இருப்பதை உணரவைத்தது. ஆம் தங்களிடம் ஒரு துணிச்சலான போர்க் களப்திவாளத் திறன் இருக்கிறது. இவ்வாற்றலை வளமூட்டி அரிய காட்சிப் படிமங்களாக தங்களால் தரமுடியும். தங்களால் நிறையவே சாதிக்க முடியும். இந்த உற்சாகமான அஜீவனுடன்; நாங்கள் எப்போதும் இருப்போம். கிபிஅரவிந்தன் தனது கவலையை தங்களிடம் தெரிவிக்கிறார். தனது உறுதியான கையை நீட்டுகிறார். நன்றி முகுந்தன் குடும்பம். 12.10.2004
10-12-2004, 07:35 PM
உங்கள் அனைவரது வார்த்தைகளும் எனக்கு மேலும் பலம் தருகிறது.
விழும் ஒவ்வொரு கணமும் விழுதுகளாவோம். என்றென்றும் உங்கள் AJeevan <img src='http://www.yarl.com/forum/files/ajeevan.20.minuts..jpg' border='0' alt='user posted image'> [size=15]<b>ஓல்டனில் இடம் பெற்ற தீ விபத்தினால் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில்.............</b> "அது ஒரு கோர இரவு............" என்று வீட்டு பரிபாலன தலைவி திருமதி.அக்னசு மார்ட்டி கூறினார். ஒரு இலக்ரிக் உபகரத்தினால் ஏற்பட்ட தீயால் அனைத்து வீடும் சாம்பலாகியுள்ளது. தீ பற்றிய வீட்டின் அஜீவன் "எனது வீட்டிலேற்பட்ட புகை என்னை தூக்கத்திலிருந்து எழ வைத்தது. நான் வீட்டு யன்னலால் குதித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்து விட்டு அயலவர்களை எழுப்பினேன்." என்கிறார். முழு வீடுகளும் படிகளும் புகை மண்டலாமாக காட்சி தந்த போது பயத்தால் வீரிட்டு கத்தினோம் என்கிறார் திருமதி.மார்ட்டி. நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் சேர்ந்தே தீயைத் தணிக்க முடிந்தது. 10 பேர் இன்னும் வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளை இழந்தவர்கள் விடுதிகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் தற்காலீகமாக தங்கியுள்ளனர். 20 minutes (SWISS NEWS)
10-13-2004, 12:44 PM
அன்புடன் அஜீவன், செய்தியை பார்த்ததும் மிகவும் கவலையாக உள்ளது. நடந்தவை அனைத்தும் நன்மைக்கே என்ற முதுமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இழந்தவைகளை நினைக்கையில் மிகவேதனையாக இருக்கும். ஆனால் ஒரே ஒரு ஆறுதல் விலைமதிக்கமுடியாத உயிரிற்கு எந்த ஆபத்தும் வராதமையே. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்று விட்டதே என்ற அந்த ஆறுதல் தான் மனதை திடப்படுத்த வேண்டும். இழப்புகள் கண்பதும் அதை அடிக்கல்லாகவைத்து மீண்டும் வெற்றி காண்பதும் ஒரு கலைஞனுக்குப் புதிதல்ல. அஜீவன் நீங்கள் மிகவும் உறுதியான கலைஞன். நீங்கள் உறுதியடைந்து தொடர்ந்து வெற்றி பெற எமது வாழ்த்துகளும் உறுதிகளும்.
அன்புடன் ஈழம் திரை நண்பர்கள்.
10-13-2004, 02:44 PM
அன்பின் அஜீவன் அண்ணா அவர்களுக்கு இது ஒரு சோதனை. இறைவன் நல்லவர்களை எப்போதும் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான். நல்லவர்களை அவன் என்றுமே கைவிட்டதில்லை. அண்ணா அவர்கள் புடம் போட்ட தங்கமாய், பீனிக்ஸ் பறவையாய் வெளிவந்து முன்னைவிட பல நல்ல ஆக்கங்களைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அனனவரின் இறை மன்றாடலும் விருப்பமும் அதுவே.
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
***************************************** «ýÒ¼ý,ã÷ò¾¢
10-13-2004, 02:57 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>தீயினால் ஏற்பட்ட சேதம்
சுவிசின் பிராங்குகளில் 1.5 மிலியன் (swissfr.1.5 million) </b></span> <span style='color:brown'>நன்றி இனியவர்களே உங்கள் ஆறுதல் வார்த்தைகள் எனக்கு மேலும் பலம் தருகிறது.............. என் பணிவான நன்றிகள்.......... இந் நிகழ்வு கேள்வியுற்று இணையத்தில் எழுதியிருந்த - தொலைபேசி வழி தொடர்பு கொண்ட - நேரில் ஆறுதல் சொன்ன - எனக்கு பணத்தாலும் பொருட்களாலும் உதவி என்னை நிலை பெற வைப்பதற்கு முயன்ற நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஒரு மனிதனுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இப்படியான தருணங்களில் உணரும் போது என்னுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்ட நண்பர்கள், மீண்டும் என்னுடன் நெருங்கிய போது அவற்றை நினைத்து என்னால் தூங்க முடியவில்லை. விபரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. இன்று காப்புறுதி நிறுவனம் தீயினால் ஏற்பட்ட சேதம் <b>சுவிசின் பிராங்குகளில் 1.5 மிலியன் </b> (swissfr.1.5 millionen) என்று மதிப்பீடு செய்து ஒரு சான்றிதழை போலீசாரோடு இணைந்து வழங்கியிருக்கிறது. எனது வீட்டுக்கு மேலேயிருந்த அடுக்கு மாடிகளில் இருந்தவர்களில் ஒரு குடும்பம் 10'000 பிராங்குகளுக்கு மட்டுமே காப்புறுதி செய்திருக்கிறது. இன்னுமொரு குடும்பம் காப்புறுதி செய்யவே இல்லை. மற்றுமொரு குடும்பம் காப்புறுதிக்கான கட்டணத் தொகையை கட்டாமல் விட்டிருக்கிறார்கள். இவை பிரச்சனையாக உள்ளதாக காப்புறுதி நிறுவனத்தினர் என்னிடம் கூறினார்கள். எனது தற்காலிக செலவுக்காக கொஞ்சம் தொகை தரப்பட்டுள்ளது. ( அதை யாரிடமும் குறிப்பிட வேண்டாம் என்று தெரிவித்ததால் குறிப்பிடாமல் விடுகிறேன். ) இது எனது உணவு, உறவிடம் , உடைகள் மற்றும் அதி முக்கிய தேவைகளுக்காக போதுமானது. பின்னரே காப்புறுதி நட்டஈடு கிடைக்கும். அதுவரை பொறுக்க வேண்டும். இவற்றை நீங்களும் ஒரு பாடமாக தெரிந்து கொள்வதற்காகவே எழுதுகிறேன். with love ajeevan</span> |
|
« Next Oldest | Next Newest »
|