Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா டென்மார்க்கில்..
#1
[size=15]<b> பூக்கள்
திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா டென்மார்க்கில் இடம்பெற்றுள்ளது </b>

அலைகள் மூவீஸ் தயாரிக்கும், முத்துமாரி அம்மன் கிரியேசன்ஸ் வழங்கும் பூக்கள் திரைப்படத்தின் இனிய பாடல்களின் இசைத்தட்டு வெளியீட்டு விழா ஞாயிறு மாலை 4:00 மணிக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள லின்ட் பாடசாலையில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

முதல் தடவையாக தமிழக சினிமா பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுடன் இலங்கைத் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்கி இக்காரியத்தை ஐங்கரன் நிறுவனம் செய்திருந்தது. ஐங்கரன் அதிபர் திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சுரத்தட்டை வாசிக்க பழக்கிய நோர்வே சுந்தரமூர்த்தி மாஸ்டர், சங்கீதம் கற்பித்த குமுதினி பிரித்திவிராஜ் ஆகியேரையும், பாடிய பாடகர்கள், ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்கள் அனைவரையும் வசந்த் வாழ்த்த, பூக்கள் திரைப்படத்தின் நடிகர் சுகேந்திரா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேற்படி இசைத்தட்டை சங்கீத, வயலின் ஆசிரியை இசைக்கலைமணி திருமதி குமுதா பிரிதிவிராஜன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். இசைத்தட்டின் முதல் பிரதியை திரு. சு. சுப்பிரமணியம் எடுத்து வழங்க திருமதி. அகிம்சா டக்ளஸ் எழில்வளவன் பெற்றுக் கொண்டு தனது வாழ்த்துரையைத் தெரிவித்தார். அடுத்த பிரதியை திருமதி சாந்தினி உதயச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர் தபேலாக் கலைஞர் திரு. சௌந்தரராகவன், திரு.தே.உதயச்சந்திரன், புகைப்பட, சங்கீதக் கலைஞர் முரளி, கலைஞர் சண், வயன் தமிழ் இலக்கியமன்றத் தலைவர் திரு. தர்மா, சங்கீதபூசணம் அளவையூர் திலகேஸ்வரன், தவில் வித்துவான் சங்கரதாஸ், நடன ஆசிரியை திருமதி. சுமித்திரா சுகேந்திரா, திருமதி மாலா சத்தியமூர்த்தி, பூக்கள் திரைப்படத்திற்கான பிரதான பாடலுக்கு நாட்டிய அமைப்பை மேற்கொண்ட நடனஆசிரியை சசிதேவி சந்திரபாலன், இசையமைப்பாளர் சோன் லுண்ட் உட்பட பல பிரமுகர்கள் நிகழ்வின்போது உரையாற்றினார்கள்.

அவர் உரையாற்றிய பின்னர், இன்று டென்மார்க் லின்ட் நகரில் சாதனை படைத்த கலைஞர்கள் நாளை உலக அரங்கில் சாதனை படைப்பார்கள் என்று பொறிக்கப்பட்ட பரிசை இசையமைப்பாளர் வஸந்திற்கு வழங்கினார். இவருக்கான சிறப்பு இசைப்பரிசை திரு.வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் வாழ்த்திக் கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பூக்கள் திரைப்படத்தின் காட்சிகளின் சில பகுதிகள் அவ்வப்போது காண்பிக்கப்பட்டது. பாடலைப்பாடிய குணலிங்கம், ஸ்ரலின்டோஸ், அர்ச்சனா, ஜனனி, லோகன், துசான், சாந்தினி, தன்யா ஆகிய கலைஞர்கள் தோன்றி தங்களுடைய அனுபவங்களை வெளியிட்டனர்.

நடிகவிநோதன் செ.யோகராஜா, கவிஞர் பொன்னண்ணா உட்பட திரு.செந்தில்குமரன், திரு.செல்வக்கதிரமலை, திரு. தனபால், நடிகர்கள் ராஜராஜன், ரவி, சிறிகாந்த், வள்ளுவன், சிந்துராஜ், மனோகரன், ராணி மனோகரன், திருமதி. பொன்னண்ணா, கண்ணன், டிலா சச்சிதானந்தம், பத்மா ஜெயராஜ், சு.சிறீராஜன், செ. அர்ச்சனா ஆகியோர் கருத்துரைகள் வழங்கினார்கள்.

நிறைவாக இசைப்பாடல்களுக்கு வரிகள் எழுதிய ஆசிரியர் கி.செ.துரையின் நன்றியுரை இடம் பெற்றது. உலகமெல்லாம் பரந்திருக்கும் ஈழத் தமிழன் பூக்களைப் போல உலகமெல்லாம் நிறைந்திருக்கிறான். பூக்களை அழிக்க முடியாது அதுபோல ஈழத்தமிழினத்தையும் அழிக்க முடியாது என்பதே இத்திரைப்படத்தின் கருத்து என்றார்.

இந்த நிகழ்ச்சியை திருவாளர்கள் ஜெயராஜ், ஜெயமுரளிசர்மா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இறுதியில் அனைவருக்கும் நன்றிகூறிய இசையமைப்பாளர் வசந்த், பாராட்டுக்கள் மட்டும் முக்கியமல்ல குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள் திருந்துவதற்குக் காத்திருக்கிறோம் என்று கூறி, தயவு செய்து பாடல்களை கணினியில் பிரதிபண்ணி நமது முயற்சிகளுக்கு சிரமம் தர வேண்டாம் என்று அன்போடும், தன்னடக்கத்துடனும் கேட்டுக் கொண்டார்.

http://www.eelampage.com/index.shtml?id=20...52034097260&in=

Thanks:"Saldhaanj"
Reply
#2
நன்றி அண்ணா..

பூக்கள் மலர எனது வாழ்த்துக்கள்
எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதில் தேன்பருகுவோம்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)