Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரொறன்ரோ ஆலயத்தில் சிறை......?
#21
Manithaasan Wrote:எல்லாமிருக்க கோயில் குருக்களாகவும் முதலாளியாகவும் நிர்வாகியாகவும் Three in One ஆக இருக்கிறவருக்கு கனடா காவல்துறையைப் பற்றித் தெரியாதோ?

எங்கட விவகாரங்கள் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப்போகுது என்ற தைரியம் தான் வேற என்ன.
Reply
#22
vasisutha Wrote:
kavithan Wrote:நான் நினைக்கிறேன் நீங்கள் தற்போது நன்றாக துன்பங்கள் இன்றி வாழ்கிறீர்கள்... அது தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசையும்.. ஆனால் ஒருவனுக்கு எப்போது துன்பம் நேருகிறதோ அந்த நேரம் தான் அவன் கடவுளை நாடுகிறான்...

அடடா என்ன ஒரு கண்டு பிடிப்பு.
வெளியில் பேசுவதை வைத்து ஒருவரை சந்தோசமாக இருக்கிறார் என்று எப்படி நீங்கள் எண்ணலாம்? :roll: சொல்லப் போனால் துன்பங்கள் வர வரத்தான் எனக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை வலுக்கின்றது.
கடவுளாம் கடவுள் அப்படி ஒருவரே இல்லை என்கிறேன்... பிறகும் அவரை நம்பு நம்பு என்று ஏனப்பா தொல்லை படுத்துகிறீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kavithan Wrote:கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை இது எல்லாம் சுத்த மடைத்தனம் என சொல்லி கொண்டிருக்கிற பலர் பின்னர் கடவுள் தான் உலகமே என மாத்தி சொல்வதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன்.. .... இதனை நீங்களும் ஒரு நாளைக்கு உணர்ந்தால் நினைத்து பாருங்கள்....
நீங்கள் சொன்ன வழியிலேயே வாறன்.. நானும் கடவுள் என்று ஒராள் இருக்கிறார் என்று நம்பிய ஆள் தான்.. இப்போது உண்மையை உணரவில்லையா? அதுபோல நீங்களும் ஒருநாள் உணர்ந்து கொள்வீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


பின்குறிப்பு:
உங்களை புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.
கருத்து பதி ல் கருத்து எழுதினேன் அவ்வளவுதான்.


என்னை புண்படுத்தி என்ன சுகம் அடையப்போறியள் ஒண்டும் இல்லை தானே...அதை விடுங்கோ.... உங்களை நான் கஸ்ரப்படுத்தவும் இல்லை கட்டாய படுத்தவும் இல்லை என்ரைகருத்தை நான் சொன்னேங்கோ அவ்வளவு தான்.. அதுக்காக நான் இங்கு அந்த கடவுள் பக்தியோட தேவாரம் தான் பாடிக்கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதைங்கோ.... எப்பவாவது நேரம் கிடைக்கும் போது கடவுளை நினைப்போம் ..ஆனால் வணங்கிறோமா என்பது சந்தேகம் தான்.... கோவிலுக்கு போயே எத்தனை நாளோ தெரியாது..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#23
<b>சாமி அருளியதிலிருந்து</b>
Quote:கோவில் வருமானங்களை வங்கிகளில் இட்டால் அதற்கு அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் என்பதால் இந்தக் கோவிலில் இருந்த கணக்காளரே பணத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றார். கொண்டு செல்லப்படும் பணம் உடனடியாகவே வட்டிக்கு கொடுக்கப்பட்டு அதில் வரும் வருமானத்தினை இக்கணக்காளரே எடுத்துக் கொள்கின்றார். பொதுப்பணம் இப்படி ஒருவரால் வட்டிக்கு கொடுக்கப்பட்டு கணக்காளர் அதன் வருமானத்தினை எடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
தான் வட்டிக்குக் கொடுப்பது கடவுளுக்குத் தெரியவா போகின்றது என்ற துணிவாக இருக்கலாம். மற்றது வட்டியையும் கோவிலுக்கா கொடுப்பது? கொடுத்தாலும் கணக்காளர்தானே வீட்டுக்குக் கொண்டுபோகவேண்டும். ஏன் இரண்டு கணக்கு ஒரே கணக்காக இருக்கட்டுமென்று எண்ணுகிறாரோ என்னவோ!கணக்காளர் மக்களுக்கும் கணக்குவிடுவார் போலிருக்கிறது.

-
Reply
#24
<span style='font-size:25pt;line-height:100%'><b>துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபை எங்கே?</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>
துர்க்கை அம்மன் ஆலய அறங்காவல் சபை என்ன செய்கிறது?</b></span>

இந்த அறங்காவல் சபை உறுப்பினர்கள் பெயர் என்ன? அதன் தலைவர், செயலாளர் பெயர் என்ன?
இந்த அறங்காவல் சபையின் 2003 ஆம் ஆண்டு வருமானம் என்ன? செலவு எவ்வளவு?
எப்போது கடைசியாக ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது? எப்போது கடைசியாக நிதி அறிக்கை வெளியிடப்பட்டது? வருமான வரித்துறைக்கு முறையாக வருமானவரி பத்திரம் ஆண்டுதோறும் அணைக்கப்படுகிறதா? அர்ச்சனை அபிசேகத்துக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்கு வரிவிலக்கு பற்றுச் சுPட்டுக் கொடுக்கப்படுகிறதா? இல்ல என்றால் ஏன்? அப்படிப் பெறப்படும் பணம் யார் கைக்குப் போகிறது? தலைமை அர்ச்சகருடைய மாத ஊழியம் எவ்வளவு? தலைமை அர்ச்சகர் பெயரில் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி என்ன?

தலைமை அர்ச்சகர் பெறும் ஊழியத்தைவிட அதிகமாக சொத்துக்களின் பெறுமதி இருக்கிறதா?

<span style='font-size:25pt;line-height:100%'><b>வன்னிக் குழந்தைகளை பொறுப்பேற்றல்</b></span>

வானொலி மூலம் பலரும் அறிய வன்னியில் வாழும் 10 குழந்தைகளை தனிப்பட்ட முறையிலும் மேலதிகமாக 10 குழந்தைகளை கோயில் அறங்காவல் சபையும் பொறுப்பேற்கும் என்று உறுதிமொழி கூறப்பட்டது.. ஆனால் இந்தக் கொடுப்பனவு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் காரணம் சொல்லப்படாமல் நிற்பாட்டப்பட்டு விட்டது. இது பொது மக்களுக்குத் தெரியாது. பொது மக்கள் இந்த அறக் கொடை தொடர்ந்து கொடுக்கப்படுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிதியுதவியை ஏன் நிறுத்தினீர்கள்? வருவாய் குறைந்து விட்டதா? விலை உயர்ந்த கார்கள் வாங்கப் பணம் இருக்கும்போது இதற்கு மட்டும் பணம் இல்லையா?



<span style='color:blue'><b>பரமார்த்த குருவும் முட்டாள் சீடரும்</b>


நாத்தீகவாதிகள் சைவத்தையும் தமிழையும் அழிக்கிறார்கள் என்று வானொலியில் பேசிய பரமார்த்த குருவும் அவரது முட்டாள் சீடரும் சொன்னார்கள். மெத்தச் சரி. இவர்களும் நாத்தீகர்களா? நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணவென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் சுவை அறியுமோ?
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அறிவதும் இல்லை இல்லை இல்லையே!
(சிவவாக்கியார்)
திருவள்ளுவர்

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான (குறள் 1062);
தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்றிதன்
மெயவருத்தக் கூலி தரும் (குறள் 619)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)
சைவ நன்மணி நா.செல்லப்பா
சத்துள்ள உணவை வீண் விரயம் செய்தல் தருமம் ஆகுமா?

அபிசேகங்களைச் சிவன் ஏற்றுக்கொள்வாரா? அவருக்கு அபிசேகம் வேண்டி உள்ளதா? பரிசுத்தமாக என்றென்றும் விளங்கும் சிவனுக்கு அபிசேகம் செய்தல் வேடிக்கையாகவும் விசித்ரமாகவும் உள்ளது. கோயிலில் உள்ள விக்கிரகத்துக்கு அழுக்குப் பிடித்தல் கூடும்... அவ்வாறு செய்யப்பட்ட விக்கிரகங்களுக்குப் பாலும் தயிரும் நெய்யும் தேனும் பாலும் கொண்டு அபிசேகம் செய்வதனால் மேலும் அழுக்கு ஏற ஏதுவாகிறது. அதனால் ஆலயச் சுற்றாடலும் மாசுபட்டுத் துர்நாற்றம் வீசுவதைப் பல ஆலயங்களில் காணக்கூடியதாக உள்ளது. எத்தனையோ ஏழைப்பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் உதவக்கூடிய சத்துள்ள உணவுப் பொருட்களை அபிசேகம் செய்து வீண் விரயம் செய்தல் தருமம் ஆகுமா? சைவ நீதியகுமா? சாதனைக்குரிய தோத்திரமும் சாத்திரமும் - பக்கம் 63)

தன்னிடமே இருந்து வரும் கஸ்தூரியின் வாசனையை எங்கிருந்து வருகிறதென உணராத கவரிமான் அதைத்தேடிப் புற உலகெங்கும் சுற்றி அலைகிறது. நாமும் கவரிமானைப் போல நம்மிடமே மறைந்துள்ள வாசனையை அறியாது கோயில் குளம் ஸ்தலம் தீர்த்தயாத்திரை, சிவனடியார் கூட்டம் என அலைந்து அலுத்து நிற்கிறோம். (மேற்படி பக்கம் 66)

[size=18]<b>மக்களை ஏமாற்றும் பூசாரிகள்</b>

சைவமத குருமார்கள் அநேகமாக ஆலயங்களிலே தான் தொழில் புரிகிறார்கள். அவர்கள் கிரகதோசம் வினைப்பயன் னெ;றெல்லாம் சைவ மக்களிடையே அச்சம் ஊட்டி அவற்றுக்குச் சாந்தி பூசைகள் செய்யும் படி தூண்டுகிறார்கள். அதனால் அவர்கள் அதிகபண ஆதாயம் பெறுகிறார்கள். சிவாலயங்களில் சிறு தெய்வங்களுடைய விக்கிரகங்களும், நவக்கிரகங்களும் கூடப் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் செய்த பாவ குற்றங்களுக்குத் தெய்வங்களும் சிரகங்களும் கொடுக்கும் தண்டனைகளாலேயே துன்பம் அடைகின்றனர் எனும் கொள்கை பலமாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. சீற்றம் அடைந்த சிறு தெய்வங்களையும் கிரகங்களையும் - விசேடமாக சனி பகவானையும் - பூசைகள், நிவேதனங்கள், அபிசேடங்கள் செய்து சாந்திப்டுத்தித் தமது துன்பங்களுக்கு நிவாரணம் பெறலாம் என மக்களைப் பூசாரிகள் நம்பச் செய்கின்றனர்.
(மேற்படி பக்கம் 82)
திருமூலர்
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்கும் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே!

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தௌ;ளத் தெளிர்ந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்னினே.
படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்கிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே.
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குந் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லொன்றாற் சொலலுமா றெங்கனே.
றூன மிலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிக ளாணுலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.
(திருமந்திரம்)

திருநாவுக்கரசர்
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்குதண் குமரித் துறை யாடிலென்
பொங்கு மாகடல் ஒதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே.

மகாகவி பாரதியார்

மெல்லப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?
‘தமிழ் நாட்டிலே சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்.’
நன்று புராணங்கள் செய்தார்- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் - அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.
ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்!

சாத்திரங்கள் பல தேடினேன் - அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ?
வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த
வேதங்கள் மனிதர் தம் மொழியிலில்லை
வேதங்க ளென்று புவியோர்-சொல்லும்
வெளுங்கதைத் திரளிலவ் வேதமில்லை!

பார்ப்ப னக்குலங் கெடடழி வெய்திய
பாழடைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்!
முன்னாளில் ஐயரெலாம் வேதம் ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் -இவர்
ஏதுசெய்தும் காசுப் பெறப் பார்ப்பார்
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
..................................................................
பிள்ளைக்குப் பூணுhலாம் என்பான் - நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்

[size=20]<b>ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா? 1997ஆம் ஆண்டு சுப்ரமணியர் தந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதா?</b></span>

நாகநாதர் சுப்பிரமணியம் அல்லது மணி அய்யர் என்பவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த அர்ச்சகர் துர்க்கை அம்மன் கோவில் அறங்காவலர்களால்; தமிழ்நாட்டில் இருந்து 1997 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரழைக்கப்பட்டவர்.

இவரது மாத ஊழியம் 1,260 டொலர்கள் என உடன்பாடு செய்யப்பட்டே அழைத்து வரப்பட்டார். ஆனால் ஒத்துக்கொண்டபடி அவருக்குரிய ஊழியம் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் நிர்வாகத்துக்கு எதிராகக் காவல்துறையிடம் முறையிட்டார்.

இதனை அடுத்து அவருக்குரிய ஊழிய நிலுவையைக் கொடுத்து முறைப்பாட்டை திருப்பிப் பெற வைத்தார்கள். அவர் இப்போது வேறு கோயிலில் ஊழியம் செய்கிறார்.

இதனால் அறியப்படுவது யாதெனில் தமிழ்நாட்டில் இருந்து அர்ச்சகர்களை கூட்டி வருதும் வந்த பின்னர் ஒப்புக்கொண்டபடி ஊழியம் வழங்காது அவர்களை ஏமாற்றுவது துர்க் கையருக்கு வழக்கமாக இருந்திருக்கிறது. இருந்து வருகிறது.

துர்க்காதேவி இந்து ஆலய தலைமை அர்ச்சகராகவும் இந்து மத பீடாதிபதியும் ஆன இவர்களுக்கு இப்படிச் செய்வது மோசடி இல்லாவிட்டாலும் 'பாபம்' ஆகத் தெரியவில்லையா? இது ஒழுக்கக்கேடு இல்லையா?

<span style='font-size:25pt;line-height:100%'><b>எடுத்ததெற்கு எல்லாம் தட்சணை ஏன்?</b></span>

இந்து மதத்தில் இருந்து சிலர் கனடாவில் கிறித்துவ மதத்துக்கு மாறி விட்டார்கள். மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கான காரண காரியங்களை ஒரு இந்துமத குரு என்ற முறையில் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா?

காரண காரியங்கள் என்னவென்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். கனடாவில் உள்ள கோயில்கள் எல்லாம் பக்தி வியாபாரம் செய்து மக்களிடம் இருந்து பணம் கறப்பதையே குறியாகக் கொண்டுள்ளன.

மகன்மாரை பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி படிக்க வைத்து உத்தியோகம் பார்ப்பதைவிட ஒரு கோயிலை உருவாக்கிக் கொடுத்தால் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம் என அர்ச்சகர்கள் கணக்குப் போடுகிறார்கள்.

இந்து அர்ச்சகர்கள் எடுத்தது எல்லாவற்றிற்கும் தட்சணை கேட்கிறார்கள்.

கன்னிகாதானம் செய்தால் தட்சணை
பூப்பு நீராட்டு விழா என்றால் தட்சணை
காது குத்து விழா என்றால் தட்சணை
திவசம் செய்தால் தட்சணை
துடக்குக் கழித்தால் தட்சணை
வீடு குடி புகுந்தால் தட்சணை
பூசை செய்வதற்கு தட்சணை
சாந்தி செய்வதற்கு தட்சணை
பரத நாட்டிய அரங்கேற்றமா தட்சணை
மிருதங்க அரங்கேற்றமா தட்சணை
இப்படி எடுத்ததெற்கு எல்லாம் தட்சணை

அதுவும் கொடுத்ததை தட்சணையாக வாங்குவதில்லை. முதலே சயவந பேசி வாங்கி விடுகிறார்கள்! எதையும் சமூக சேவையாக அல்லது தெய்வ சங்கற்பமாகச் செய்வதில்லை.

அந்தக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு அறு தொழில் மட்டும் செய்யலாம் என விதி இருந்தது. அதனால் அவர்கள் அறுதொழிலோர் என அழைக்கப்பட்டனர்.

வேதம் ஓதல் ஓதுவித்தல்
யாகம் செய்தல் செய்வித்தல்
பிச்சை எடுத்தல் பிச்சை கொடுப்பித்தல்
இதுவே அந்த அறு தொழிலாகும்.

இந்தக் காலத்தில் கைநிறைய ஊழியம் வாங்குகிற இந்துக் அர்ச்சகர்களுக்கு தட்சணை கொடுப்பதில் நியாயம் இல்லை.

- திருமகன் சுப்ரமணியம், மொன்றியல்


நன்றி
முழக்கம் இணையத்தளம்
[b][size=18]
Reply
#25
<span style='font-size:25pt;line-height:100%'><b>இது தொடர்பாக மக்கள் கருத்துக்கள் சில முழக்கம் இணையத்தில் இருந்து.</b></span>

<span style='font-size:22pt;line-height:100%'>
கவிஞர் செங்கோன் எழுதிய துர்க்கேசுவரத்து துர்க்கையரின் துர்ச் செயல்கள் என்னும் கட்டுரையை பிரசுரித்ததற்குப் பாராட்டுக்கள். இப்படியாக எம் மத்தியில் சாமி காட்டும் பிராமணர்களுள் மிகப்பெரிய ஆசாமி இவரேதான். திரு. சிவகுமாருக்கு பண உதவி உட்பட, சகலவிதமான உதவிகளையும் செய்வதற்கு தமிழ் மக்கள் முன்வரவேண்டும். எமது கோவில்களில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்றிய பிறகுதான் சமயம் தழைக்கும்.” என்ற ஒரு பெரியார் ஒருவரின் கூற்று உண்மையாகிவிட்டது.

- ஆசைப்பிள்ளை, ஸ்காபரோ


--------------------------------------------------------------------------------

பார்ப்பனர்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் ஆறு வேதம் படித்தல். வேதம் படிப்பித்தல். யாகம் செய்தல் யாகம் செய்வித்தல். பிச்சை எடுத்தல் பிச்சை கொடுத்தல். ஆனால் இன்று அவர்கள் அர்ச்சகர் தொழில் உட்பட எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். அப்புறம் இவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்று எப்படிச்சொல்லிக் கொள்ளலாம்? - தரன், ஸ்காபரோ


--------------------------------------------------------------------------------

தன் மனதில் இன்னும் பிரதேசவாதம் இருக்கின்றது என்ற கருத்துப்பட, ‘ஒரு இலவச திரைப்பட அனுமதிச் சீட்டைக் கொடுப்பதற்குக் கூட ஓர் வடமராட்சியைச் சேர்ந்தவருக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன.;\" என்று சீP ரி ஆர் வானொலியில் சில மாதங்களின் முன் வெளிப்படையாகவே சொன்ன கிருஸ்னா சிவப்பிகாசம் சென்ற வாரம் சீ.ரி.ஆர் வானொலியில் \"கனடாவில் சாதிப்பிரச்சனை இல்லை\" என்று கூறியது சிரிப்புக்கிடமாக இருக்கிறது.. பிரதேசவாதத்தையும் மத வாதத்தையும் கனடாவிற்குள்ளும் கொணடு;வரும் இவரைப் போன்றவர்கள் பலர் சாதியத்தை விட்டுவிட்டு வந்தவர்கள் என்று சொல்வது வேடிக்கையானது. நம்பமுடியாதது. முதலில் பார்ப்பான்கள் பூனூலை அறுத்தெறியட்டும். தாம் உயர்சாதி என்று சொல்வதை நிறுத்தட்டும். பிற மக்களைத் தாழ்த்துவதை நிறுத்தட்டும். பின்னர் நாம் இவர்களைப் பார்ப்பான் என்று சொல்வதை நிறுத்துகிறோம்.

- சுடரகன் (சிவா முருகையா), மிசிசாகா


--------------------------------------------------------------------------------

சைவம் தமிழ் வளர்க்கிறதா?
அது சரியென்றால்- திருக்கோயில் வழிபாடு ஏன் தமிழில் இல்லை? வடமொழி தேவபாசை தமிழ் நீச பாசை - அது இந்துக் கடவுளர்க்கு விளங்காது என்று காஞ்சி காமகோடி சங்கராச்சியார் சொல்கிறாரே? பிராமணர்கள் ஏன் தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்ளாமல் வடமொழிப் பெயர்களை வைத்திருக்கிறார்கள்? பிராமணர்கள் சமய குரவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்கவாசகர் நால்வரதும் பெயர்களை ஏன் வைத்துக் கொள்வதில்லை? தேவாரம் திருவாசம் திருவிசைப்பா திருப்புகழ் எதற்காக கருவறைக்கு வெளியே உள் வீதியில் நின்று பாடப்படுகிறது? துர்க்கை அம்மன் கோயிலில் தமிழ் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றனவா? இல்லை என்றால் ஏன்? தேவார திருவாசகம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? இல்லை என்றால் ஏன்?
- உதயன், மார்க்கம்


--------------------------------------------------------------------------------

கனடியத்தமிழ் வானொலியில் துரோகி டக்கிளசைப் பேட்டி கண்டார்கள். இப்போ கோவில் என்ற பெயரால் ஊரையடித்து உலையில் போடுவது மட்டுமல்லாது, மனிதர்களுக்கு அடிக்க வெனவே ஒரு பிரம்பும் வைத்திருக்கும் ப10சாரிக்குத் துணை போகின்றார்கள். இவர்களுக்கும் நேரத்திற்குநேரம் சோரம்போகும் பச்சோந்திகளுக்கும் என்ன வித்தியாசம்?
- பால்ராஜ் மோகன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

சிரிஆர் வானொலியில் முழக்கம் பத்திரிகையில் வெளிவந்த \"ஆலயச் சிறை\"க்கு எதிராக வக்காளத்து வாங்கும் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. அந்த வானொலி நிலையத்திற்குச் சென்று தமிழர் உணர்வு வானொலி என்று கூறும் நீங்கள் திருடர்களுக்குத் துணை போவதா என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். எங்களுக்குத் தெரியாம நடந்துவிட்டது. சொல்லாமல் அவர்கள் செய்து விட்டார்கள் என்று.. வழமையாக அரை மணிநேரமாக ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சி ஒரு மணித்தியாலமாக ஒலிபரப்பப்பட்டதே...! அதுவும் உங்களைக் கேட்காமல்தான் செய்தார்களா..? என்று நான் கேட்டபோது, ‘கேட்டார்கள்’ என்றார் அவர். அப்போ நீங்கள் ஏன் அரை மணித்தியாலம் கூடத்தேவை என்று கேட்க வில்லையா... என்று கேட்டதும்.... அவர்கள் ஆயிரக் கணக்கில் காசுதந்து விளம்பரம் போடுபவர்கள் என்று சொன்னார்.... அப்போ ஆயிரக்கணக்கில் தந்து விட்டால் நீர் எதற்கும் அனுமதிப்பீரா என்று கேட்டதும், வார்த்தை ஏதும் வெளிவராமல் முகம் மட்டும் வெளிறியது.
- நிந்தியகாந்தன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரால் எனது குடும்பம் இரண்டாக உடைந்து விட்டது. நான் பலமுறை உங்களுக்கு இது குறித்து முறைப்பாடு செய்திருந்தேன். நான் கூறும் அறிவிப்பாளர்களை மக்களுக்கு இனங்காட்டுமாறு இரந்து கேட்கிறேன். என் பிரச்சினையை பத்திரிகையில் பிரசுரிக்கமுடியாது. அது தனிமனித வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று சொல்கின்றீர்;கள். சரி.. எனது குடும்பம்தான் சீரழிந்துபோய்விட்டது. மற்றவர்களின் பெண்டாட்டிகளுக்கும் இவர் போன்றவர்களால் பிரச்சினை நடக்காமல் இருக்க இவர்களை இனங்காட்டுங்கள்.
- தேவராசா அ, ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

ப10சாரி பஞ்சமா பாதகத்தைப் பற்றி கதைக்கிறார். பஞ்சமா பாதகத்துக்குள் காமம் வராதே...! பிறகு எப்படி பெண் தெய்வத்துக்குரிய கோவிலுக்குள் நல்ல குடும்பத்துப் பெண்கள் நுழையவே பயப்படுகிறார்கள்?
- ப10லோகசுந்தரம் சிவா, ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

ப10சாரி சொல்கிறார் திருநாவுக்கரசருக்கு வராத சோதனையா எனக்கு என்று. திருஞாவுக்கரர் மட்டும் அல்ல. சமய குரவர்கள் அனைவரும் தமிழால் இறைவனைத் தொழுதவர்கள். திருநாவுக்கரசருக்கு வந்த சோதனைகளைப் பற்றிக் கதைத்துத் தன்னையும் ஒரு திருநாவுக்கரசராக ஆக்க நினைப்பவர், முதலில் தமிழர்கள் கூடும் கோயிலில் வடமொழியை வெளியேவிடுகிறேன் என்று அன்னைத் தமிழை கோவிலுக்குள் விடலாமே?
- பொன்னையா புஸ்;பகாந்தன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

முழக்கம் பகுத்தறிவுப் பத்திரிகை அது உலகறிந்த விடயம். அது தெரிந்தும் கோவில் விளம்பரங்களை முழக்கத்தில் பிரசுரிப்பவர்கள்தான்; அதைப்பற்றி யோசிக்கவேண்டுமேயொழிய முழக்கம் அல்ல. ஏனென்றால் முழக்கம் யாரிடமும் விளம்பரம் யாசிப்பதில்லை என்பது வணிக நிறுவனங்களுக்குத் தெரிந்த விசயம். கோவில் வணிகத்தில் பணம் சம்பாதிக்க விளம்பரம் தேவை என்று வருபவர்களுக்குத்தானே முழக்கம் விளம்பரம் செய்கிறது. இது எப்படி என்றால் பெரியார் திடலில் சமயக் கூட்டம் நடத்துவது மாதிரி. இது குறித்து முழக்கம் ஒருபோதும்யோசிக்க வேண்டாம்.
- உமாவதி காந்தன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

வேலையை விட்டுவிட்டு சமயப் ”பணி”க்கு வந்தாராம் சிவப்பிரகா சத்தார். தேனை நோக்கித் தான் வண்டு வரும். நம்புகிறேன். அதிக பணம் இப்போது கிடைப்பது ‘நோற்றெல்” வேலையிலா? கோவில் கொள்ளையில்தானே கிடைக்கிறது.? வேலையை விட்டுட்டு ‘சமயப் பணி” செய்ய நானும் தயார்தான். அடுத்து, விமர்சிப்பதில் தரம் தெரிந்தவராம் கிருஸ்ணா. அதனால்தான் அடக்கி வாசிக்கிறாராம்.. ஏன்.. வெளிப் படையான ஊடகங்களில் அடக்கி வாசித்து, இரவு ஊடகங்களில்
தரம்கெட்டு எழுதலாம் என்பது அவர் அறியாததா? - கிருஸ்ணபிள்ளை ரங்கநாதன், ரொரன்ரோ.


--------------------------------------------------------------------------------

மன்னர்: முழக்கம் பொய் எழுதுதாம்... புலம்புறார்... கோயில் தர்மகர்த்தா..


பொன்னர்: முழக்கம் ஆதாரம் இல்லாம இறங்கினதா வரலாறு இருக்கா...?


மன்னர்: அம்மன்ர சீற்றத்துக்கு ஆளாவினம் என்னை எதிர்க்கிறவை.. எண்டெல்லே வானலையில வெருட்டுறார்.


பொன்னர்: இது:: தான் உள்ளுக்க போறதும் பத்தாம ஊசுவுஊசில முறைப்பாடு கொடுத்து றேடியோக் காரரின்ர மடியிலையும் நெருப்புக் கட்டும் விளையாட்டு! அது சரி..! சிவகுமாரின்ர பிரச்சினை என்னவாப் போகுது... ?


மன்னர்: அது கனடிய நீதித்துறை யின் கையில்தான் தற்போது இருக்கு. அது பற்றிக் கருத்துச்சொல்வது நீதித்துறைக்குக் குந்தகம் செய்யும் செயல். தருணம் வரும்போது சொல்லுறன்.


பொன்னர்: தமிழர்களைப் பிளவுபடுத்த சக்தி வந்திருக்காம்... எண்டெல்லாம் கத்தினார்...அது என்னவாம் சக்தி?


மன்னர்: சிவப்பிரகாசத்தார் 'தாயகம்\" பத்திரிகைக் கூட்டத்தோடு சேர்ந்து நடத்தின கூத்துக்குப் பெயர் என்ன வாம்? அந்தநேரம், பொங்கு தமிழ் என்டா பொங்கல் என்ன விலை? என்டு கேட்டிருப்பார்.. இப்ப சக்தி யாம்... எல்லாம் காலம்.. சண்டை தொடங்கி னாத்தான் அவனவன்ர உண்மை முகம் தெரியும். ப10சாரிய வதைச்சதைப் பற்றிக்கேட்டா...! அதுக்குப் பதில் சொல்லாம வீண் அலம்பல் எதற்கு?</span>
[b][size=18]
Reply
#26
ஐயோ ஐயையோ என்று தணியும் இந்த கோவில் வியாபாரம் நம்மவர்களிடையே...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
யாருக்கு தெரியும்
[b][size=18]
Reply
#28
பக்தர்களிக்கும் தெரியாதா.. அப்ப கடவுளை கேக்கிறது தானே....?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
கடவுள் எப்போது பேசினார்:இப்போது பேசுவதற்கு?
Reply
#30
அப்ப கடவுள் பேசமாட்டார் என்கிறீங்காளா....??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
கடவுள் பேச ஆரம்பித்தால் அவர் முதல் வார்த்தை ...............?
Reply
#32
என்ன பேச ஆரம்பித்தால் என்கிறீங்க... முருகன் சிவன்.. கிருஸ்ணன் எல்லாரும் ஏற்கனவே பேசிவிட்டார்களே...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
எந்த முருகன் சிவன் ...பேசினார் என்கிறீர்கள்? உங்கள் பக்கத்து வீட்டு முருகனை குறிப்பிடுகிறீர்களா? (கோபிக்க வேண்டாம். சும்மா ஜோக்)
Reply
#34
நாங்கள் பேசியது கடவுகள் முருகன் சிவன் போன்றவர்களை பற்றியாச்சே.. இதுக்க எப்படி பக்கத்துவீட்டு முருகன் வந்தால்...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
நான் பக்கத்து வீட்டு முருகன் பேசியது கேள்விப்பட்டிருக்கிறேன். கடவுள் பேசியதை இதுவரை அறியவில்லை.அதுதான் அப்படிக்கேட்டேன்
Reply
#36
ம் அப்படியா... கஸ்டம் தான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
நீங்கள் அறிந்தால் அதை எனக்கும் சொல்லலாம்தானே?
Reply
#38
சொன்னால் போச்சு....
[b][size=18]
Reply
#39
kavithan Wrote:சொன்னால் போச்சு....

தம்பி சொல்லுவார் கேளுங்கள் தோழரே...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#40
ஏன் நீங்கள் சொல்லக்கூடாதா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)