Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மனைவி: (குப்பைவண்டியின் பின்னால் குப்பைக்கூடையுடன் ஓடியபடி) " நிறுத்து நான் வர நேரமாகிவிட்டது....."
கணவன்: கவலைவேண்டாம் தாவியேறிவிடு.. உனக்கான வண்டிதான் அது
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
முதலாமவர்: எனது மனைவி தள்ளுபடிவிலையில் என்ன கிடைத்தாலும் வாங்கிவிடுவாள்...
மற்றவர்: அப்படி என்னவாங்கினார்...
முதலாமவர்: 50 எலிப்பொறிகள்
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒருவர்: கடைசியாக என் மனைவியுடனான சண்டைக்கு நான்தான் காரணம்...
தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறாய் என்றாள்....பாட்டு என்றுசொல்லாது சிம்ரன் தொப்புள் என்றேன் அவ்வளவுதான்...
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு திருமணவைபவத்தில் சிறுவன் ஒருவன் அருகில் இருந்த பெரியவரிடம் கேட்டான் " ஒரு ஆண் எத்தனை பெண்களைத்திருமணம் செய்யலாம் "
அதற்க்கு அவர்; " எத்தனை குழந்தை வேண்டுமோ அத்தனை திருமணம் செய்யலாம்."
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்.?
ஒன்று தான்.....
மனைவி...
ஒன்று தான்....
உன்னைவிட முட்டாள் இருக்கவே முடியாது
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு வாலிபன், வயதானதொரு பெரியவர் தபால் நிலையத்தில் நூறுக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு முத்திரை ஒட்டிக்கொண்டிருப்பதைப்பார்த்தான். அந்த வாழ்ந்து அட்டைகளின் கடிதஉறைகளில் இதயத்தின் சின்னம் போடப்பட்டு இருந்தது. எல்லாம் காதலர் தின வாழ்த்து அட்டைகள்.எனத்தெரிந்தது. ஆச்சரியப்பட்ட வாலிபன் அவரை நெருங்கி என்ன இவை என்று கேட்டான். அதற்கு அவர் இது அத்தனையும் காதலர் தின வாழ்த்து அட்டைகள். யாரென்று ஊகித்துக்கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டவை என்றார். வாலிபன் "சரி எதற்கு இத்தனை " என்றான்... "நான் ஒரு வழக்கறிஞர் மணமுறிவு வழக்குகள் நிறைய வரவேண்டி இப்படி செய்கிறேன் "என்றார் பெரியவர்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கணவனும் மனைவியும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள்
நடுஇரவிற்குப்பின் திடீரென தொலைபேசி அடித்தது.
கணவன் எடுத்தான் பின். "எனக்கு எப்படித்தெரியும்? என்னைப்பார்த்தால் உனக்கு வானிலை அறிவிப்பாளன் போலா தெரிகிறது. முட்டாள் " என்று விட்டு தொலைபேசியை ஓங்கி வைத்தான்.
"யார் தொலைபேசியில் " என்றாள் மனைவி
"தெரியவில்லை.வானிலை தெளிவாகிவிட்டதா என்று கேட்கிறான் இந்த இரவில்..என்ன சொல்ல.."
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='color:red'>எல்லோரைப் பற்றியும் இழிவாகவும், மட்டம் தட்டியும் பேசுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு தேசத்தை மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான்.
அடுத்தவர் மனம் நோகும்படி பேசுவதுதான் அவன் வழக்கம்.
யாரையும் இழிவாகப் பேசி அவர்கள் வருந்துவதைக் கண்டு மனம் மகிழ்வான்.
ஒரு முறை, துறவியருவர் அவனைப் பார்க்க வந்தார்.
அவர் சபைக்குள் நடந்து வரும்போது அரசன் கெக்கலித்துச் சிரித்து
"என்ன கிழவனாரே, எருமைமாடு போல் ஆடி அசைந்து வருகிறீர்? பார்ப்பதற்குக்கூட நீர் எருமை போல்தான் இருக்கிறீர்" என்றான்.
துறவி கோபம் கொள்ளாமல் அரசனைப் பார்த்து,
"நான் வணங்கும் புத்தர் பெருமான் போல் தாங்கள் இருக்கிறீர்கள் அரசரே?" என்றார்.
குழம்பிய அரசன்,
"துறவியே, நான் உங்களை எருமைமாடு என்று இகழ்ந்தேன். நீரோ எம்மைப் புகழ்கிறீரே?" என்றான்.
துறவி 'நறுக்'கென்று பதில் சொன்னார்.
"அரசே! தன்னைப் போலவேதான் உலகம் காட்சியளிக்கும் என்பது தாங்கள் அறியாததா?"</span>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு சிறுவன் திருமணவீடு ஒன்றுக்குச்சென்று இருந்தான். அங்கே உறவினர்களில் ஒரு தாத்தா இவனைப்பார்த்து கன்னத்தில் கிள்ளி அடுத்து உனக்குத்தான் திருமணம்... என்று கிண்டலும் கேலியும் செய்தார். இதை எல்லாம் கவனித்த அந்தச்சிறுவன்... அங்கு மௌனமாகவே இருந்துவிட்டான். சிறிது நாட்கள் கழித்து ஒரு இறந்தவீட்டிற்கு பெற்றோருடன் சென்று இருந்தான். அங்கு அவனை கி;ண்டல் பண்ணிய தாத்தாவின்; மனைவி இறந்துவிட்டிருந்தாள். சிறிது அமைதியாக இருந்த சிறுவன் பின் தாத்தாவின் கன்னத்தைக்கிள்ளி அடுத்தது நீ தான் என்றான்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நல்ல பையன் தான்...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
சனிக்கிழமையில் மனைவியை சந்தோசமாக சிரிக்கவைப்பது எப்படி?
வியாழக்கிழமை ஒரு நகைச்சுவையை சொன்னால் போதும்.. அவர்கள் புரிந்துகொண்டு சிரிக்க சனிக்கிழமை சரியாக இருக்கும்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு கிருத்தவ பாடசாலை மாணவர்கள் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். ஆசிரியை மாணவர்களை நோக்கி ஏன் தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது அமைதியாக இருக்கவேண்டும் என்று கேட்டார். ஒரு புத்திசாலி மாணவி சொன்னாள் "பலர் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் தூக்கம் கெட்டுவிடாமல் இருக்கத்தான்" என்று
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கடற்கரைக்கு சிறுவன் ஒருவன் தந்தையுடன் வந்திருந்தான்... தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு இறந்த மீனைக்கண்டான். தந்தையிடம் என்னாயிற்று என்று கேட்டான். அதற்கு அவர் அது இறந்துவிட்டது சொர்கத்திற்கு சென்றுவிட்டது என்றார்.
சிறுவன் கேட்டான் "ஆனால் கடவுள் ஏன் அதைதூக்கி எறிந்துவிட்டார்..."
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு தாய் அப்பம் சுட்டுக்கொண்டு இருந்தார். அவரது இரண்டு குழந்தைகள் யார் முதல் அப்பத்தைச்சாப்பிடுவது என்று போட்டியிட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். தாய் குறுக்கிட்டு இங்கே இயேசு நாதர் இருந்தால் அவர் சொல்லுவார் "எனக்கு முதல் என் சகோதரனுக்கு கொடுங்கள் "என்று. சரி உங்களில் யார் இயேசு நாதர் ?
முத்தவன் சொன்னான் "அம்மா தம்பி முதலில் இயேசு நாதர் ஆகட்டும் அடுத்த அப்பத்தைச்சாப்பிடும் போது வேண்டுமானால் நான் இயேசு நாதர் ஆகிறேன்"
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
பாட்டியின் நினைவு தினத்திற்கு சிறியவயது பேத்தியும் அவள் தாயும் இடுகாட்டிற்கு சென்றனர். வரும் வழியில் மகள் கேட்டாள் அம்மா ஒரு குழியில் இரண்டு பேரை புதைப்பார்களா என்று. தாய் சொன்னார் இல்லை மகளே என. அப்படியென்றால் இந்தக்கல்லறையில் பொய் எழுதிவைத்திருக்கிறார்கள் பார்த்தாயா? சட்டத்தரணியும் சிறந்த சிந்தனையாளனும் இங்கே உறங்குகிறார்ள் என்று..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு திருட்டு சம்பந்தமாக பிடிபட்ட சந்தேக நபர்களை கொண்டு அடையாளம் காணும் அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் புலனாய்வுத்துறையினர். பல்வேறு முயற்சிகள் மேற்கோண்டும் திருடனை அடையாளம் காணமுடியி;ல்லை. இறுதியில் ஒரு அதிகாரி நான் சொல்வதை திருப்பிச்சொல்லுங்கள் என்று அங்கு அணிவத்திருந்த சந்தேக நபர்களிடம் கூறி " பண்த்தை எடு இல்லையேல் சுட்டுவிடுவேன் "என்று உரக்கக்கத்தினார். எல்லா சந்தேக நபர்களும் இதை திருப்பி உரத்த குரலில் சொன்னார்கள். ஒருவன் மட்டும் "பணத்தை எடு இல்லை செருகிடுவேன் "என்றான்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மனைவி பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். கணவன் அவசரமாக மருத்துவரைத்தொடர்புகொண்டு மனைவியின் நிலையை கூறினான். மருத்துவர் இது முதல் குழந்தையா? என்றார். இல்லை இது கணவன். குழந்தை இன்னும்பிறக்கவில்லை அதனால் தான் உன்ககு போன் செய்தேன் என்றான்.