Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐ.ம.சு.மு. தலைவராக ரட்ணசிறி விக்ரமநாயக்கா நியமிக்கப்படவுள்ளார்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவி முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்காவிற்கு வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து திடீரென இராஜினாமாச் செய்துள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில் முன்னாள் பிரதமரும், கட்சியின் முன்னாள் பிரதித் தலைவருமான ரட்ணசிறி விக்ரமநாயக்காவை தலைமைப் பதவிக்கு நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் சகோதரரும் அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்கா ஆர்வம் காட்டிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
puthinam.com
-------------------------------------
இந்த ரட்னசிறி விக்கிரமநாயகா.. ஒரு பெளத்த சிங்கள பேரின வெறிபிடித்த இனவாதி என்பது குறிப்பிடத்தக்கது... இவரை இப்பதவிக்கு நியமிப்பதுதானது ஜேவிபிக்கு தலையில் வைக்கும் ஐஸ் போன்றது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஜாதிக ஹெல உறுமய அரசுடன் விரைவில் இணையும்...?
பௌத்த பிக்குகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமய விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஒரு இரகசிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் ஐ.பி.சி.க்கு கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்த ஐhதிக ஹெல உறுமய, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பெரும்பான்;மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் நிருபிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் பதவியை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்த போதும் அதற்கு ஐhதிக ஹெல உறுமய ஒத்துழைக்க மறுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டபடி ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் இந்த வாக்கெடுப்;பு நடைபெற்றிருந்தால், அது எதிர்;க்கட்சிகளின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதாக அமைந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]ஒக்டோபரில், இடைக்கால நிர்வாக சபை தொடர்பான விவாதம்
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்துக்கான அழைப்பை ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்திருந்ததையடுத்து, கடந்த மாதம் இந்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மீண்டும் ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, மூன்று நாட்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளையில் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் சம்;மதம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam.com
---------------------------
அப்ப எப்பதானாம் தீர்வு..??????!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்ப எப்பதானாம் தீர்வு..??????! (people's view)
_________________
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வரும் காத்திருங்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
காத்திருக்கிறதாலை கிடைக்கிற சுகம் எவ்வளவு.. இப்படி காத்திருந்தாலே இருக்கிற சுகத்தை கெட்டியா பிடிச்சுக்கொள்ளலாம்..
இப்ப சமாதானம் பற்றி விலாவாரியா நடக்கிது பிரச்சாரம்..
முரசம் தணிஞ்சிடுத்து..
மிளகாயரைக்கிறதிலைதான் கவனமாயிருக்கினம்..
இஞ்சை இருக்கிறதுகளும் அங்கை போய் அவதானிச்சுக்கொண்டுதான் வந்திருக்கிதுகள்.. உண்மை பொய் போய் வந்ததுகளுக்குத்தானே தெரியும்..
கடைசி சமாதானப்ப்படகு.. ஏற்கெனவே பல ஓட்டை பச்சப்பண்ணி பச்சப்பண்ணித்தான் ஓடுது.. தாண்டால் தமிழன் தமிழனுக்குச் செய்த வினையெண்டு கொள்ளவேண்டியதுதான்..
Truth 'll prevail
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b>இ.தொ.கா. முடிவை மாற்றிக்கொண்டது
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது </b>
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினுள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க திட்டமிட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான அரசாங்கம் கடந்த இருமாதங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து இ.தொ.கா. தீவிரமாக ஆலோசித்து வந்தது.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விலகியிருந்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஜே.வி.பி. யுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி பதவி விலகியதாக கருதப்படுகின்றது.
ஜனாதிபதி பதவி விலகியதையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முடிவினை இ.தொ.கா. மாற்றியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தாம் அரசாங்கத்துடன் இணைவது தமது கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும், தமது செல்வாக்கு குறைவடையலாம் என்றும் இ.தொ.கா. வின் தலைமைப்பீடம் கருதுவதாக தெரிகின்றது.
இதனைவிட இடைக்கால நிர்வாக சபை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும், அதனை விடுதலைப் புலிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையினை இ.தொ.கா. கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கத்துக்குள் இவ்விடயம் தொடர்பிலும் முரண்பாடு காணப்படுகின்றது. பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் முறையினையும், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையினையும் மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு இ.தொ.கா. முற்று முழுதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையல் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில் பயன் இல்லையென இ.தொ.கா. கருதுவதாக தெரிகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக்கட்சி, கம்யுூனிஸ்ட் கட்சி ஆகியன அரசாங்கத்துக்கு இ.தொ.கா. ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளன.
சில தினங்களுக்கு முன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட கம்யுூனிஸ்ட்கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான டியு. குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியின் பிரமுகரும் அமைச்சருமான திஸ்ஸவிதாரண ஆகியோர் இ.தொ.கா. பிரமுகர்களிடம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு இ.தொ.கா. ஆதரவளித்தால் ஜே.வி.பி. யினரின் நெருக்குதல்களைக் குறைக்க முடியுமென்று இக்கட்சியின் தலைவர்கள் எதிர்பார்ப்பதாக தெரியவருகின்றது.
அரசாங்கத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ள போதிலும் தேசிய ஹெல உறுமய அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இது குறித்து தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் ஹெல உறுமய இடைக்கால நிர்வாக சபை குறித்து பேசக் கூடாதென்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. இதனால் ஹெல உறுமயவின் ஆதரவு அரசாங்கத்துக்கு உறுதியாக கிடைக்கும் நிலை இல்லை. அரசாங்கமும் ஹெல உறுமயவின் ஆதரவினை முழுமையாக நம்பவில்லையென அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
from puthinam.com
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b>வைகோ மீதான பொடா வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது </b>
மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலர் வைகோ மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை, தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
சென்னை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார், நேற்று மனுவைத் தாக்கல் செய்தார். அதில் வைகோ மீதான பொடா வழக்கை மாநில அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பொடா மறுஆய்வுக்குழு அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து வழக்கை திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்கறிஞர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், தமிழக அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையில் தாம் செயல்பட்டதாகவும், இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் திரும்பப் பெறும் மனு குறித்த முடிவு வைகோவின் சிறப்பு விடுப்பு மனு மீதான தீர்ப்பிற்குப் பிறகே தெரியவரும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படுவதற்கு 3 தினங்கள் முன்பாக தமிழக அரசு பொடா வழக்கைத் திரும்பப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கான எந்தவித காரணமும் இல்லை என்று பொடா மறுஆய்வுக்குழு கூறியிருந்தது.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வைகோ பேசினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர், கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
சுமார் 19 மாத கால சிறைவாசத்திற்குப் பின்னர், கடந்த மக்களவைத் தேர்தலின்போது தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று வைகோ, ஜாமீனில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுதலை குறித்துக் கருத்துக் கூறிய கலைஞர் கருணாநிதி, வைகோ 19 மாதங்களாக காரணமின்றி அனுபவித்த கொடிய சிறைவாசத்திற்கு ஜெயலலிதா என்ன காரணத்தைச் சொல்ல முடியும் என்று வினவினார்.
வைகோ சிறைவாசம் அனுபவித்ததற்கே காரணம் எதுவும் இல்லை என்று பொடா மறுஆய்வுக்குழு கூறியுள்ளதால், வைகோ அனுபவித்த சிறைவாசத்திற்கு என்ன பிரதிபலனை ஜெயலலிதா செய்யப்போகிறார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
from puthinam.com
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b>இடைத்தரகரின்றிப் பிரபாகரனுடன் பேச்சுக்கள் நடத்த சந்திரிகா விருப்பம்! </b>
தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை எனவும் தொவிப்பு.
ஜ கிளிநொச்சியிலிருந்து கிருபா ஸ ஜ வியாழக்கிழமைஇ 12 ஓகஸ்ட் 2004இ 12:40 ஈழம் ஸ
இடைத்தரகர்களைத் தவிர்த்து நான் நேரடியாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகின்றேன் ஆனால் அது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை அவ்வாறனதொரு சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை இனப்பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என சனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தி ஸ்தாபனம் ஒன்றிக்கு நேற்று அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தொவித்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே இவ்வாறான கொள்கையை நான் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
இடைக்கால நிர்வாகம் குறித்துப்பேச நான் தயாராக இருக்கின்றேன் இது பற்றிப் பேசும் போது நிதி மற்றும் பாதுகாப்பு விடயங்களே முக்கிய பிரச்சினைகளாக இருக்கும் அவ்வாறான பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து முடிவு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நான் தயாராக உள்ளேன் இதை நான் நோர்வேக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
அத்துடன் சர்வதேச கடல் வளம் சர்வதேச மயப்பட்டிருந்ததால் சர்வதேசக் கடற்பரப்பில் இருக்கின்ற சில விடயங்களும் பேச்சவார்த்தைகளின் போது ஆராயப்பட வேண்டியுள்ளது. அதாவது இலங்கை வருகின்ற கப்பல்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கடல் வழியே எவ்வாறு கொண்டு வருவது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகள் எல்லாம் பேசித் தீர்வு காண்பதற்கு நீண்ட நாட்கள் எடுக்கலாம். அதற்குள்ளான சில விடயங்களைக் கதை;துத் தீர்வைக்காண்பதற்காகவே இந்தப்பேச்சுவார்த்தையினை நடத்த நான் தயாராக இருக்கன்றேன்.
ஜே.வி.பியைப் பொறுத்தவரையில் அவர்களது கொள்கையிலிருந்து அவர்கள் பார்க்கும் போது அவர்கள் எடுத்த கொள்கை சரியானது. ஆனால் தற்போதைய நிலைமையில் இந்த நாட்டில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆரம்பிக்கப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடையும் எனவே அவ்வாறான கட்டத்தில் நான் எதற்கும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. எனவே உடனடியாகப் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கு நான் முனைப்பாக இருக்கின்றேன்.
இந்த முயற்சிக்கு நான் நேரடியாக அதாவது நோர்வே போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியான பேச்சுவார்த்தை நடக்குமானால் அதுவும் சிறந்த வழியாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. எனவே உடனடியாக பேச்சுவார்த்தையினை ஆரம்பித்து சமாதான முயற்சிகளை தொடருவதே எனது நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஈழநாதம்
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாவம் சந்திரிக்கா... புலியோட ஒருக்கா கைகுலுக்க ஆசைப்படுறா போல.... உதை லவ்சு பண்ணி வீட்டோட கோவிச்சுக் கொண்டு கலியாணம் முடிச்ச விஜய குமாரதுக்காவுக்கு அன்பு மனைவியா இந்தியாவில பதுக்கி இருக்கேக்க இருந்த மனதோட சொல்லி இருந்தா புலி தானா வந்தே கை கொடுத்திருக்குமே.... இப்ப பண்டாரநாயகாவின் மகளா எல்லே கேக்கிறா...அதுதான் பிரச்சனையே....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
புதினம்காரரை இங்கே கூட்டி வந்து எழுத வைக்கலாமே? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பேசுறாவோ இல்லையோ.. விடுதலைப்புலிகளின் தலைவரை கை குலிக்கினார் சந்திரிக்க என்று வரலாற்றில் எழுத ஆசைப்படுறாவே என்னவோ..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
vasisutha Wrote:புதினம்காரரை இங்கே கூட்டி வந்து எழுத வைக்கலாமே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது மோகன் அண்ணா சொல்ல வேண்டியது...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:அவர்கள் அந்த வெட்டும் இடங்களில் சென்று அந்தப் படைப்பாளிகளை இங்கும் கூட்டி வந்து இங்கும் அவர்களை எழுத விடலாமே...வெட்டி ஒட்டி.... வேலை மிணக்கடுறது....தேவையா....???!
கவிதைப் பகுதிக்குள் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கு போல. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏதாவது பிரச்சனையோ... இல்லை இன்று களம் அனல் பறக்கிற மாதிரி இருக்கு...! நாங்கள் எஸ்கேப் ஆகிட்டம...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
புதினம் போடுறதில புதினம் ஒண்டும் இல்ல...அது புதினத்துக்கு விளம்பரமில்ல...அதாவது பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்கும் நாங்கள் விளம்பரம் தேடேல்ல....! அது மட்டுமன்றி போடுறது செய்தி... நாலு பேர் அறிய வேண்டிய பொதுவிடயம்..அவை தனிப்பட்டவருக்குச் சொந்தமானவையல்ல...கவிதைகள் அப்படியன்று....! எல்லோரும் அறிய வேண்டிய அவசியமும் கவிதைகளுக்குக் கிடையாது....செய்திகளை தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொள்வதும் நன்று...எல்லாம் தெரிந்தது போல தாந்தோன்றித்தனச் செயற்பாடுகள் அவசியமில்லாதவை...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
புதினத்தில வாற செய்திகளை ஐபிஸி. சங்கமம். ரிரிஎன் போன்ற பல ஊடகங்களில் கேட்கலாம். ஆனால் கவிதை அப்படி இல்லை. தேடித் தேடித்தான் படிக்கவேணும். களத்தில் வருகிறவர்களுக்கு தேடும் வேலையும் குறைந்து விடுகிறது.
முடிந்தால் எல்லா இடமும் கேட்கிற இந்த செய்திகளை கொண்டுவந்து போடாமல் நாங்கள் கேள்விப்படாமல் இருக்கிற செய்திகளை கொண்டுவந்து போடுங்கோ. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இந்த களமும் மு}டப்பட போகிறதோ.....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
சரி இண்டைக்கு பொழுது நல்ல பம்பலா போச்சு. நான் போயிட்டு வாறன் குருவி அண்ணா. will you forgive me?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கவிதை சொல்வது அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்தியல்ல... செய்திக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன....பரிமானம் என்ன..... செய்திகள் என்ன கற்பனையா...அதுபோக இவ்வளவையும் நீங்கள் வேறு ஊடகங்கள் மூலம் அறியமுடியும் என்றால் வீண் பணச் செலவில் வேலை மிணக்கட்டு தமிழில் செய்திகள் பதிபவர்கள் என்ன ஏமாளிகளா....இப்படித் தெரிந்திருந்தால் புதினத்தில எல்லாத்தையும் கவிதையாவே எழுதிடுவினமே...!
அதுபோக நீங்கள் வசதி படைத்தவர்கள்....வானொலி தொலைக்காட்சி பாப்பியள்.... எங்களைப் போல பாமரமக்கள்... இணையம்தான் பார்க்க முடியும் கொஞ்சப் பணச்செலவில்... அதுக்க ஊர்ப்புதினம் அறிய வேண்டும்.... வீடுவாசல் இருக்கோ உறவுகள் என்னபாடோ என்று அறிய.... யாரோ பொழுது கழிக்க எழுதும் கவிதைக்கு வக்காளத்து வாங்க.... செய்திகளை உதாரணமாக கையாளும் உங்கள் அறிவோ பேரறிவு.....!
கவிதைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்களே நீங்கள் போட்ட கவிதைகளில் எவ்வளவு போலித்தனம் இருக்கென்பதை எங்களால் காட்ட முடியும்...ஆனால் நாங்கள் போடும் செய்திகளில் உள்ள போலித்தனத்தை உங்களால் காட்ட முடியுமா....?????! செய்திகள் சொல்வது மக்களின் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விடயங்களை....! அவை அவசியம்...கவிதை அவசியமில்லாதது...பொழுது போக்கு அம்சம்....! அதை தேடி என்ன அடுத்த பிறவியிலும் வந்து வாசித்துக் கொள்ளல்லாம்....! நாங்க இலக்கியங்களில் படிக்கவில்லையா...கவிதைகள்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|