Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
kuruvikal Wrote:உங்கள் நாட்டில் என்றால் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான்...

[size=18]திருத்தம்

அடைத்து வைக்கப் பட்டிருந்தார்கள்.

இன்னும்..
ஐரோப்பாவிலும் பல வீடுகளில் இந்த அடைத்து வைப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.
nadpudan
alai
Reply
தாய்நிலத்தில் ஏன் போர்..?
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லைத்தானே என்று இன்று சும்மா இருந்திருக்கலாம்தானே..!

kuruvikal Wrote:அன்று ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் ஏன் நீங்களும் பதிலுக்கு இன்று போல் கேட்டிருக்க வேண்டியதுதானே கேள்வி ஏன் கேட்கவில்லை ஏன் எதிர்க்கவில்லை அதிலிருந்து என்ன புலனாகிறது நீங்கள் ஆடக்கப்படவில்லை நீங்களாகவே அடங்கிப் போனீர்கள் என்பதுதானே.....சாதாரண சிந்தனை இதுகூட புலப்படாமலா ஆண்கள் மீது சுத்தப்பழிசுமத்தல்கள்..தேவையா இது...வேடம் கலையுங்கள் யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்..இல்லையேல் இப்படியே கொக்கரிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

தாய்நிலத்தில் ஏன் போர்..?
அன்று எம் மூதாதையர் கேட்கவில்லைத்தானே என்று இன்று சும்மா இருந்திருக்கலாம்தானே..!

அன்று எம் மூதாதையர் கேட்கவில்லை.
அது அவர்கள் தவறு.
அதற்காக இன்னும் நாம் குனிவோம் என்று நினைத்து நீங்கள் குட்ட முனைந்தால் அது உங்கள் தவறு.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்..இல்லையேல் இப்படியே கொக்கரிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

ஆண்களுக்குப் பெண்கள் பக்கபலம்.
பெண்களுக்கு ஆண்கள் பக்கபலம்.
அது யதார்த்தம்.

அதை விடுத்து
ஆண்தான் உசத்தி என்று வாதிடுவதும்
ஆணிடுவதுதான் சட்டம் என்பதும்
ஆணுக்குத்தான் மூளை அதிகம் என்பதும்.....
nadpudan
alai
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:அப்பிடித்தான் சிலர்....பெண்ணாக இருந்துகொண்டு ஆணாகப் பார்க்கிறார்கள்......
சிலர் ஆணாக இருந்துகொண்டு பெண்ணாகப் பார்க்கிறார்கள்....சத்தியமா பெண்டாட்டிதாசர்களைச் சொல்லேல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

கணணிப்பித்தன்

ஆண்கள் என்னவாகப் பார்க்கிறார்கள் என்பது ஆண்களுக்குத்தான் வெளிச்சம்.

பெண்கள் சமத்துவத்தோடு மனிதராக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.
ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்தால் அவைகளை இங்கே கொண்டு வராதீர்கள்.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:சீதனம் என்பது தம்பதியருக்கே அன்றி ஆண்களுக்கல்ல...ஆனால் அதனால் எழும் ஆதிக்க வெறி மட்டும் பெண்களிடம் தான் வருகிறது ஏன்....இதிலிருந்து புரிகிறதா யார் ஆதிக்க சக்திகளாக விரும்புகின்றனர் எனபது....தமக்குள்ளேயே ஆதிக்கம் போட்டி பொறாமை ஒற்றுமையின்மை கோள் முடிதல் ஆண்களைத் தூண்டிவிடுதல் இப்படிப் பலதும் செய்து கபட நாடகம் போட்டு தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுபவர்கள் பெண்கள்...இதையெல்லாம் ஒட்டு மொத்த குடும்ப நலன் கருதி தாங்கிக் கொள்ளும் சுமை தாங்கிகள் தான் ஆண்கள்...இறுதியில் ஆதிக்க சக்தி என்ற பட்டம் சூட்டுதலும்....இதுதான் ஆண்கள் விழிப்படைய முக்கிய காரணம்...பெண்களே திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்....! ஆண்களாலல்ல மனித சமூகத்தால்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

ஆண்களிடம் சீதனம் வாங்கப் படுவதில்லை.

சீதனம் கொண்டு வரவில்லை என்பதற்காக வதைபடும் பெண்கள் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா?[
சீதனம் கொடுக்க வழியில்லாமல் திருமணமே நடக்காமல் வாழ்ந்து மடிந்து போன பெண்கள் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா..?


நீங்கள் ஆண் என்ற ஒரே காரணத்துக்காக
சமூகப் பிரச்சனைகளை இல்லையென்று வாதிடுகின்றீர்களே..!
nadpudan
alai
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:இதுதான் சீதனம் எண்ட பெயரை தொடர்ந்து வைத்திருக்கக்கூடாது....அதே பெயரைத் தொடர்ந்தால் ஏதோ நாங்கள் அவையின்ர காசில வாழுறமாதிரித்தான் கதைவிடுவினம்....
வாழ்க்கையைத் தொடக்கத் தேவையான மூலதனம் இரு வீட்டாரிடமுமிருந்து!

கணணிப்பித்தன்

இரு வீட்டாரிடமிருந்தும் சீதனமா?
அது எமது சமூகத்தில் எப்போ நடந்தது?
nadpudan
alai
Reply
Quote:kuruvikalஆண் ஆதிக்கம் என
ஒரு சாரார் பகர
பெண் ஆதிக்கம்
கொடிகட்டிப் பறக்குது...!
சீர்திருத்தமதை வரவேற்போம்
ஆணும் பெண்ணும்
சமூகவியல் சமத்துவம் கொண்டிளங்க
நாம் கை கோர்ப்போம்...!
ஆணைச் சாடி பெண்ணின் குற்றம்
மறைத்தல் என்றும் அனுமதியோம்...!
[size=18]பெண்ணிற்கு இனியும் சலுகைகள் தரோம் - என்று
இன்றே பறை சாற்றிடுவோம்...!அடுக்களை இன்று சமத்துவம் கண்டுவிட்டது
சீதனமும் பெயர் மாறி சமனாய் பகிரப்படட்டும்
தனியே பெண்ணைச் சீண்டுதலை ஆணும்
ஆணைச் சீண்டுதலைப் பெண்ணும் தவிர்க்கட்டும்
சமத்துவம் என்று
அநாகரிகம் வளர்ப்பதை சமூகத்திற்காய்
பெண்ணிடமும் ஆணிடமும் தவிர்ப்போம்..!
சமூகக் குற்றங்களில்
பெண் அநுதாபம் களைவோம்
நீதியை நாட்டுவோம்
ஆணைக் கடிதல் தவிர்ப்போம்...!
இத்தனையும் செய்ய ஆண்கள் பலர் தயார்
பெண்கள் தயாரா...?!
nadpudan
alai
Reply
Alai Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]அப்பிடித்தான் சிலர்....பெண்ணாக இருந்துகொண்டு ஆணாகப் பார்க்கிறார்கள்......
சிலர் ஆணாக இருந்துகொண்டு பெண்ணாகப் பார்க்கிறார்கள்....சத்தியமா பெண்டாட்டிதாசர்களைச் சொல்லேல்லை
கணணிப்பித்தன்
ஆண்கள் என்னவாகப் பார்க்கிறார்கள் என்பது ஆண்களுக்குத்தான் வெளிச்சம்.
பெண்கள் சமத்துவத்தோடு மனிதராக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.ஆண்களுக்கும்.. பெண்களுக்கும்.. வித்தியாசம்.. இருக்கெண்டு.. ஒப்புக்கொள்ளுறமாதிரித்தெரியுது..

அதுகும்.. தமிழ்..பெண்கள்.. ஆண்கள.. என்றபடியால்.. நிச்சயமாக.. உசத்தி..இளப்பம்.. ஏற்றம்.. தாழ்வு.. இருக்கத்தான்செய்யும்.. ஒண்டிரண்டு.. விதிவிலக்குகள்.. இருக்கு.. இல்லாமலில்லை.. சின்னப்பிரச்சனையை.. பெரிசாக்கி.. குழப்பியடிக்கிறதுகள..அதுகள்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
sOliyAn Wrote:இதில் ஒன்றை விட்டுவிட்டீர்களே? பெண்கள் ஏன் வீட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும்.. அவர்களை அடக்க சட்டம் இடம் கொடுக்கிறதா? அல்லது அவர்களால் ஆணின் துணை இல்லாமல் வாழ முடியவில்லையா? பெண்கள் வீட்டுள் அடங்கி இருக்க ஆண்கள்தான் காரணமென்றால்.. அவர்களை சட்டத்தின் முன்னே கொண்டு வர ஏன் பெண்கள் பின் நிற்கிறார்கள்? அதற்கு யார் போடும் அடக்குமுறை காரணமாகிறது? கொஞ்சம் விளக்குங்களேன்.

நல்ல கேள்வி கேட்டீங்கள் சோழியான்.
கருவிலிருக்கும் போதே ஒரு குழந்தை வெளியில் தன்னருகில் கேட்கும் சத்தங்களைக் கிரகித்துக் கொள்கிறது.

அங்கு தாயின் குரல் மட்டுமல்ல தந்தையின் குரலையும் குழந்தை உள்வாங்கிக் கொள்கிறது.

தந்தை எப்போதும் மனைவியுடன் அன்பாகத்தான் பேசுகிறாரா..! என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லையென்ற பதில்தான் வரும். பேசுவதுடன் மட்டும் நின்றால் பரவாயில்லை. தந்தையின் அதட்டல்கள், உருட்டல்கள், அதிகாரக் குளறல்கள் எல்லாமே குழந்தையின் மூளையில் பதிவாகிறது.
இத்தனையின் போதும் தாய் பயந்து அழுது ஒடுங்கும் போது குழந்தையும்; சோகமாகிப் போகிறது.

குழந்தை பிறந்த பின் - தொடர்ந்து....
தாயானவள் எப்படி சுற்றியுள்ள ஆண்களால் நடாத்தப் படுகிறாள் என்பதையும் ஆண்கள் எப்படி அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பதையும் பெண்கள் அதை மீற முடியாமல் அடங்கிப் போவதையும் குழந்தை தனது அறியாப் பருவத்தில் கூட மூளையில் பதித்துக் கொண்டே வளருகிறது.

இதுவே வளர்ந்த பின்னும் தான் அடங்க வேண்டியவள்தான் என்ற எண்ணத்தை ஒரு பெண் குழந்தை தனக்குள் வளர்த்துக் கொள்ள ஏதுவாகி விடுகிறது....

இது பற்றி சரியான முறையில் சிந்தித்தீர்களானால் நிறையவே புரிந்து கொள்வீர்கள்.

பெரும்பாலும்-
ஒரு தந்தை என்னென்ன வேலைகளை தினமும் வீட்டில் செய்கிறாரோ - அந்த வேலைகளை ஆண்குழந்தைகளும்,
தாய் என்ன செய்கிறாளோ - அதைப் பெண்குழந்தைகளும் செய்வார்கள்.
என்பதை ஒவ்வொரு குடும்பத்தையும் அவதானித்துப் பார்த்தீர்கள் என்றால் கண்டு கொள்வீர்கள்.
இது பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.
ஆனால் எழுதுவதில் பயன் ஏதும் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை.
nadpudan
alai
Reply
ஐரோப்பாவில் பெண்கள் அடைத்து வைக்கப்படுவதை வைத்து
ராஜன் முருகவேல் என்ற சிறுகதை எழுதியிருக்கிறார்.
வாசித்துப் பாருங்கள்.

பாவம் வசந்தி[/color]
Reply
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'> என்ன நீங்கள் மேலே தமிழீழத்தில் நிற்கின்றீர்களென்று பார்த்தேன்.
இங்கேயும் ஒரு நடை வந்திருக்கின்றீர்கள்.
Reply
உண்மைதான் அலை... உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்.. பெண்களில் பலர் தனஇனம்பிக்கை அற்றவர்களாக அல்லது தமது குடும்பத்தில் பிரிவுகள் வரக்கூடாது என்ற விட்டுக்கொடுக்கும் போக்கில் வாழ்வதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இது குறிப்பிட்ட ஆண்களுக்கு சாதகமாக அமைவது என்னவோ உண்மைதான்.
சுவிசில் நடந்த கறுப்பு ஜுலையிலே, தமிழினி அவர்கள்கூட 'பெண்கள் மேலும் மேலும் கற்றலின் ஊடாக போலித்தனமான அடக்குமுறைகளைவிட்டு வெளியே வரமுடியும்" என்றரீதியில் கருத்து வெளியிட்டார்.
ஆம்: பெரும்பாலான தமிழ் பெண்கள் குறிப்பிட்ட காலத்துடன் கல்வியை நிறுத்திவிடுகிறார்கள். ஏதாவது புதிய விசயங்களை அறியக்கூட அவாவின்றி உள்ளார்கள். உதாரணமாக வீட்டில் கணணி இருந்தாலும்.. அதை தொடக்கூட ஆர்வமில்லாதவர்களாகவே பல பெண்கள் காணப்படுகிறார்கள்.. வீட்டில் உள்ள சற்றலைற் தொலைக்காட்சியில் தமிழ் தொடர்கள் பார்ப்பதற்குகூட... அதை இயக்குவதற்கு பிள்ளைகளையோ கணவனையோ ஏவுவதையே காணக்கூடியதாக உள்ளது. அவர்களால் முடியாது என்றில்லை.. அதைப்பற்றி அறிவதற்கான ஆர்வம் பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்பதையே அவதானிக்க முடிகிறது.
கணவன்.. பிள்ளைகள்.. குடும்பமென பொறுப்போடும் அரமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு இவை எல்லாம் வெகு சர்வசாதாரணம். எனினும் அவர்களுக்கு அவைகளில் ஆர்வமில்லை. இப்படியான ஆர்வமில்லாமைதான் ஆண்கள் தொடர்ந்து தவறு செய்ய அல்லது குறைகேட்க சந்தர்ப்பமாகிறதோ?
.
Reply
யாரப்பா இந்த அலை இந்த கலக்கு கலக்கிறது.
Reply
பிழைதிருத்தம்: இறுதிப்பந்தியில்.... குடும்பமென பொறுப்போடும் அருமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு...
.
Reply
நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....
ஆனால்.....ஆண்குழந்தை கருவிலிருக்கும்போது இதொன்றும் கேக்காதோ? அதென்ன செவிடோ?

கர்ப்பிணிப் பெண்களை இப்படி நடத்துவது எந்த ஊர்க்கதை என்று எனக்குத்தெரியாது.....
எனது சொந்த அனுபவத்தில் என் சகோதரிகளோ அல்லது அயலிலோ....கர்ப்பிணிப் பெண்களுடன் ஏனையோர் கோபமாக பேசமாட்டார்கள், மனம் நோகும்படி நடக்க மாட்டார்கள், அவர்களை கடுமையான வேலை செய்யவும் விடமாட்டார்கள்.....மொத்தத்தில் கடைசி 6 மாதமும் அவர்கள் மகராணிதான்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இன்னொரு தகவல்.....சாதாரணமாக கூடும் தம்பதியருக்குப் பிறக்கும் பிள்ளைகளைவிட காதலில் திளைத்து அன்பால் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்.....
கணவன் அன்பாக நடக்கவில்லை என்றால் அங்கு காதலில்லை.....காதலில்லாத தம்பதிகளுக்கு எதற்கு பிள்ளை வேண்டும்....சமுதாயத்திற்கு ஆரோக்கியமற்ற பிள்ளைகளைத் தர அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
Reply
[quote]யாரப்பா இந்த அலை இந்த கலக்கு கலக்கிறது.
பலர் தேனீர் கலக்கும்போது... அலை கருத்தை கலக்கிறார்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
நாங்கள் ஆண்கள் என்பதற்காக ஆண் சார்பு நிலை எடுக்கின்றோம் என்பதல்ல....பெண்கள் அடக்கப்படவில்லை அடங்கினார்கள் என்பது தான் உண்மை...மனிதக் கூர்ப்பின் வழி நோக்கும் போது ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தான் தோன்றினர் ஒரே சூழலில் தான் வாழ்ந்தனர்...அப்படியிருக்க ஆண் பெண்ணை அடிமைப்படுத்த அல்லது அடக்க முனைந்தால் ஏன் பெண் எதிர்த்துச் சண்டையிடவில்லை....விலங்கள் பறவைகளைப் பாருங்கள் ஆண் பெண் என்றில்லாமல யார் அடக்க முனைந்தாலும் எதிர்த்து சண்டை இடுகின்றன....ஏன் பெண்கள் அப்படி செய்யவில்லை...ஆகவே பெண்கள் தாங்களாக சூழல் காரணிகளின் தாக்கங்களில் இருந்து தப்பி வாழ என்று ஒதுங்கியிருக்கிறார்கள்...அத்துடன் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்...ஆனால் இன்று நிலமை அப்படியல்ல சூழலை மனிதன் வென்று நிற்கிறான் தனது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறான் தனது பாதுகாப்புக்களை நன்கு விருத்தி செய்துள்ளான் எனவே பெண்கள் எனியும் பதுங்கியிருக்க வேண்டிய நியாயம் இல்லை அத்துடன் மனித வளர்ச்சிக்கு ஏற்ப ஈடு கொடுக்கத்தக்கதாக பெண்களையும் சமூகத்திற்கு ஏற்றார் போல் வாழ தயார் செய்வதைத்தான் பெண் விடுதலை ஆண் அடக்குமுறை அது இது என்று வீர வசனங்கள் பேசி பெண்களை உசுப்பி விட வேண்டிய கட்டாயம் உள்ளது...ஆண் பெண்களை அடக்க எண்ணியிருந்தால் இயல்பாகவே உள்ள தனது பலத்தைப் பாவித்து தலை நிமிர முடியாது செய்திருக்க முடியும்...ஆனால் அது இயற்கையின் நியதியல்ல.... அத்துடன் மனித பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விடயமும் கூட....

பெண்ணின் மூளை கனவளவில் சிறியது எனும் போது அங்கு ஆணைவிட குறைந்த இயல்புகள் சில இருக்க வாய்ப்பு நிறைய உண்டு.... எனவே ஆண் மூளைக்கு நிகர்த்தது பெண் மூளை என்பது எடுபட முடியாதது மட்டுமன்றி நீங்கள் ஏற்கவில்லை என்பதற்காக ஆணின் மூளை திறன் கூடியது என்பதை மாற்றவும் முடியாது.....!

பெண்களுக்குத்தான் ஆண்களால் இன்று பிரச்சனை என்பது மிக மிக தவறு..அது மட்டுமன்றி அது பக்கச் சார்பான வாதமும் கூட...இன்று பல ஆண்கள் பெண்களால் திட்டமிட்ட வன்மங்களுக்கு இலக்காகி தமது வாழ்வியல் உரிமைகளை இழந்து வருகின்றனர் என்பது உண்மை.....அதை ஆண்கள் மனிதர்கள் என்ற வகையில் தட்டிக் கேட்க எமக்கு உரிமையுண்டு அதை யாரும் பெண்களுக்கெதிரான வாதம் என்று கூறி பெண்களின் தவறுகளை மறைக்க முயலக் கூடாது....!

சீதனம் கொடுப்பதே பெண்கள் தான் அப்படியிருக்க ஆண்கள் கேட்க நாங்கள் கொடுக்கிறோம் என்பது தவறானது ...நீங்கள் கொடுக்காமல் விட்டால் ஆண்கள் வாங்க மாட்டார்கள் ...அதே போல பெண்களைத் திருமணம் செய்துதான் வாழ் வேண்டும் என்பதும் உங்களால் ஆண்கள் மீது திணிக்க முடியாது...சமத்துவம் என்று வரும் போது தனிக்கட்டைகளாக வாழவும் தயாராகத்தான் வர வேண்டும்...ஆண் தனக்கு ஒத்துவரும் என்றால் திருமணம் செய்து வாழ்வான் இல்லாட்டி ஏன் வம்பில் மாட்டுவான் என்று விலகி நிற்பான்...அது அவர்களின் சுதந்திரம்...சீதனம் கேட்கவும் ஆணுக்கு சுதந்திரம் உண்டு கொடுக்க முடியாதவர்கள் விலக வேண்டியதுதானே....அப்படி எல்லாப் பெண்களும் விலகுவார்களா........?! முயற்சி இருந்தால் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.....அதற்காக ஆணின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டதிட்டங்களை வரைவதை நாம் வன்மையாக எதிர்கிறோம்...அது அவனின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு ஒத்தது....

எங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதையே நாம் எதிர்க்கின்றோம்....எமக்கு பெண்களைப்பற்றிய அவர்களின் விசேட சலுகைகளுடன் கூடிய உரிமைகள் பற்றிய கவலயில்லை...நாங்களே உரிமைகள் இழந்து கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு விசேட உரிமைகள் இல்லை என்பது மட்டும் என்ன நியாயம்.....பெண்கள் தங்கள் உரிமைகள் என்று எங்களை அடக்க முயலும் போது நாங்கள் அடங்க மாட்டோம்...ஆண் அடங்கியதாக வரலாறு கிடையாது மனிதனில் அல்ல எந்த இனத்திலும் தான்...பெண்களுக்கு என்ன மனித உரிமைகள் ஆணுக்கு நிகர்த்ததாக உள்ளதோ அது வழங்கப்பட்டே உள்ளது எடுத்துக் கொள்ளாதது எமது பொறுப்பல்ல ....ஆண்கள் அடக்குவதாக சொல்லி தங்கள் இயலாமையை மறைத்து ஆண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதியோம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:ஆண் பெண்களை அடக்க எண்ணியிருந்தால் இயல்பாகவே உள்ள தனது பலத்தைப் பாவித்து தலை நிமிர முடியாது செய்திருக்க முடியும்

வாழ்த்துக்கள்!!!


Reply
வணக்கம் குருவிகள்...

அடிப்படைப்படைப் பிரச்சினைகள் அல்ல, அடிப்படைப் பிரச்சினை. ஒருமை!
பெண் விடுதலை, அல்லது பெண்ணியம் என்பதன் தோற்றம் ஒரே ஒரு
அடிப்படையை வைத்துத்தான் உருவானது. உங்களுக்கு ஒரு அடிப்படை,
இன்னொருவருக்கு ஒரு அடிப்படை என்பது பெண் விடுதலையைப் பொறுத்தவரை
இருக்கமுடியாது. அப்படியிருந்தால் அது பெண்விடுதலைக்கு அப்பாற்பட்டது.

பெண் விடுதலைக்கான அடிப்படை இதுதான்: பெண்களுடைய சுயசிந்தனையும்
அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாடும். இதை மையமாக வைத்துத்
தான் "உண்மையான" பெண் விடுதலைக் குரல் எழும்பிற்று.

நீங்கள் முன்வைக்கின்ற பிரச்சினைகளெல்லாம், உங்கள் வெளித்தோற்றப்
பார்வையின் வெளிப்பாடு மட்டுமே. அவற்றின் உட்புகுந்த ஆய்வு அல்ல. எப்படி
நமது மூத்த தமிழர்கள் "சூரியகிரகணத்திற்கு", சூரியனைப் பாம்பு விழுங்குகிறது
என்று காரணம் கற்பித்தார்களோ, அதுபோலத்தான் உங்கள் பார்வையும் இருக்கின்றது.


Reply
Quote:பெண் விடுதலைக்கான அடிப்படை இதுதான்: பெண்களுடைய சுயசிந்தனையும்
அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாடும். இதை மையமாக வைத்துத்
தான் "உண்மையான" பெண் விடுதலைக் குரல் எழும்பிற்று.
பெண்களுடைய சுயசிந்தனையையும் அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாட்டையும் மையமாகக் கொண்டு 'உண்மையான" பெண்விடுதலைக் குரல் எழும்பினதென்றால்.. அந்தக் குரலானது யாருக்கு எதிராகக் கிளம்பியது? பெண்ணின் அனுமதியின்றி, சுயசிந்தைனைக்கும் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் ஆண்கள் எவ்வாறு தடைபோட முடியும்? இன்று எமது விடுதலைப் போராட்டத்தை எடுத்துப் பாருங்கள்.. எவ்வளவு தியாகங்கள்.. அழிவுகள்.. சாதனைகள் என்று வளர்ந்து வந்திருக்கிறது? அதைப்போல பெண்விடுதலையை முன்னெடுக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.. விடுதலை என்றால் என்னவென்று கற்றுக்கொள்ள வேண்டும்.. தியாகம் மனத்தைரியம் அவர்களுக்குள் உருவாகவேண்டுமல்லவா?! தைரியமும் தியாகமும் இன்றி, 'குரைக்கிற நாய் கடியாது" என்பதற்கேற்ப வெறுமே 'ஆண்கள்.. ஆண்கள்.." என்று ஆண்கள் மீது கரிபூசுவதையும்.. அந்தப் பூசல்களை தமது கம்பீர மீசைகளாக ஏற்று ஆண்கள் அலட்சியமாக இருப்பதையும்தானே பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் மேடைகளில் அடுக்குமொழிகளில் கத்திக் குழறி, இரத்தத் திலகமேற்று, பாராளுமன்றம் சேர்ந்து, சிங்களப் பகுதியில் சிங்களச் 'சிறி" இலக்க ஜீப்பிலும், தமிழ் பகுதியில் தமிழ் 'சிறி" இலக்க ஜீப்பிலும் பவனிவந்த அரசியல் வேசதாரிகள் கண்ணை மூடிக்கொண்டு, உரிமைகளுக்காகப் போராடுவதைவிடுத்து, சிங்களம் மேலான குரோதத்தை தமிழருள் வளர்த்தெடுத்து, தமிழரை சிங்கள மொழி தெரியாதவராக மாற்றியதைப்போல, வெறுமே பெண்களின் விடுதலை என ஆண்கள்மேல் பெண்களுக்கு குரோதத்தை வளர்த்து, அவர்களை ஆண்களைப் புரியாதவர்களாக மாற்றி வாழ்வைப் பொறுத்த சூனியங்களாக மாற்ற விளைவதா பெண்ணியம்?!
பெண்களுக்கு விடுதலை வேண்டுமானால் ஆண்களைப் பிழை கூறுவதல்ல அர்த்தம். கருத்துகளின் ஊடான விழிப்பும், அதன் கடைப்பிடித்தலும், செயற்பாடுமே விடுதலையை வரவழைக்கும். அன்றேல் உலகம் உள்ளளவும்.. ஆண் துவேசிப்புமாத்திரமே இலக்கிய இதிகாசங்களாக முற்போக்கெனும் பெண்களால் வரிகளாகும் வளர்ச்சியின் எல்லை முடிவிலி நோக்கி நீளும்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)