Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்போம் - கற்போம் - தெளிவோம்
#1
வணக்கம் நண்பர்களே...

இன்றைய உலகில் வழமையான அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, உறையுளுடன்
புதிதாகச் சேர்ந்திருப்பது தகவல் மற்றும் தொடர்பூடகங்களாகும். அதன் அடிப்படையில்
இன்று அனைவருக்கும் அவசியத் தேவையாகி வளர்ந்துவருவது கணணியும், இணையமும்
ஆகும். புலம் பெயர்ந்து வாழும் மண்ணில் பொதுவாக தமிழர்கள் அனைவரும் கணணி
வைத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் தமக்காக அல்லாவிடினும், படிக்கின்ற தமது
பிள்ளைகளிற்காக ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்கள். கணணி பற்றிய அறிவில்லாவிட்டாலும்
கூட, தற்பெருமைக்காக வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர். "அந்த வீட்டில் இருக்கிறது" நமது
வீட்டில் இருந்தால் என்ன?" என்ற போட்டியோடு வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர். அதே போல்
தான் இணையமும். இணையத்தை தகவற் களமாக அல்லது தொடர்பூடகமாகப் பயன்-
படுத்துகிறார்களோ இல்லையோ அது வேறு விடயம். மொத்தத்தில் கணணி வைத்திருப்பவர்களும்
இணைய இணைப்பு உள்ளவர்களும் அிதிகமாகி வருகிறார்கள் என்பது உண்மை.

எனவே இணையம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதுபற்றிய சந்தேகங்களைத் தெளிவு
படுத்திக் கொள்ளவும், புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், ஏற்படும் பிரச்சினைகளிற்கான
தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் வசதியான முறையில் யாழ் கருத்துக் களத்தில் இந்த இணையம்
பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நண்பர்களே, இணையத்தில் உங்களிற்கு ஏற்படும் சந்தேகங்கள்,
பிரச்சினைகளை இந்தத் தலைப்பின் கீழ் முன்வையுங்கள். அதற்கான தீர்வுகளும், ஆலோசனைகளும்
இணையத் துறையில் ஆர்வமும், அறிவும் உள்ளவர்களால் வழங்கப்படும்.

[b]கவனத்திற்கு: இணையம் சார்ந்த கேள்விகள் மட்டுமே இங்கு எழுதப்படல் வேண்டும்.
நேரடியாகக் கணணி சார்ந்தவை கணணிப் பகுதிக்குள் எழுதப்படல் வேண்டும்.


Reply
#2
கேட்போம் - கற்போம் - தெளிவோம்
மிகவும் அருமையான தலைப்பு தொடரவும்

அத்தோடு கணணியிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இணையம்.
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#3
மிகவும் பயனுள்ள ஒரு பகுதியை ஆரம்பித்து விட்டு , தெடராமல் நிறுத்தி வைத்து உள்ளீர்கள் போல்
தகவல்களை தமிழில் மொழி பெயர்ப்பதுதான் சிறிதளவு சிரமமாக உள்ளது..
இப்படித்தான் நான் வாழும் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் கணனி பற்றி பயன் அடைய வேண்டும் என்று விரும்பி இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து மொழிபெயர்ப்பதில் மிக சிரமப்படுகிறேன்.

இப்பகுதியில் மீண்டும் பல ஆக்கங்கள் வர எனது வாழ்த்துக்கள்.
நன்றி
Reply
#4
நான் அடிக்கடி இந்த லினுக்ஸ் பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு.

எப்படி தொடங்குவது என்ற தெரியாததினால் தொடங்கவேயில்லை.
சென்ற கிழமை ஒரு தொடுப்பை கண்டேன். படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தையும் சொல்லுங்கள்.
http://barathee.beigetower.org/publish/sof...waresamadhi.pdf
Reply
#5
பயனுள்ள பகுதி
நன்றி
Reply
#6
மிகவும் பயனுள்ள பகுதி
நன்றி
Reply
#7
வணக்கம்....

இளங்கோ,
லினுக்ஸ் பற்றிய தகவலுக்கு நன்றி. லினுக்ஸ்-இனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கான விளக்கங்கள் உள்ளன.

சோபனா,
சந்தேகங்களைக் கேட்டால் பதில் சொல்லலாம். இதுவரையும் சந்தேகங்களை எவரும் கேட்கவில்லை. அதனால் இந்தப் பகுதி தொடரவும் இல்லை.

Quote:இப்படித்தான் நான் வாழும் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் கணனி பற்றி பயன் அடைய வேண்டும் என்று விரும்பி இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து மொழிபெயர்ப்பதில் மிக சிரமப்படுகிறேன்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம் தானே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாங்களும் முடிந்தளவு, நேரமிருந்தால் உதவி செய்யலாம்.

நன்றி ராகவன்.

சந்தேகங்களைக் கேளுங்கள். களநண்பர்கள், அனுபவம் உள்ளவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.


Reply
#8
[size=14]தொடர்ந்து எழுதுங்கள்.
இளங்கோ இளைஞன் இப்படித் தொடர்ந்திருக்கும் (பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். சொன்னால் இனைத்துக் கொள்கிறேன்...........) உங்களிடமிருந்து விடயங்கள் வந்திருப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள். பிரச்சனைகளைக் கேட்பார்கள்.

நீங்கள் கற்றவற்றை அடுத்தவர் பயன் பெற விரும்பும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இப் பணி தொடரட்டும்...................
Reply
#9
Quote:சந்தேகங்களைக் கேட்டால் பதில் சொல்லலாம். இதுவரையும் சந்தேகங்களை எவரும் கேட்கவில்லை. அதனால் இந்தப் பகுதி தொடரவும் இல்லை.

<b>
அண்ணா உங்கள் பணி ரொம்ப நன்றாக உள்ளது. யாருமே தங்களது சந்தேகங்களை இன்னும் கேட்கவில்லையே. அவர்களும் நான் நினைப்பது போல யாராவது முதல் சந்தேகத்தை முன்வைக்கட்டும் என்று இருக்கிறார்களோ என்னவோ? சரி சரி. சுட்டி வெண்ணிலாவுக்கு நிறைய கணனி சம்பந்தமான சந்தேகங்கள் உள்ளன. நான் முதலில் கேள்வியை கேட்க நினைத்தாலே பயமாக இருக்கிறது. எனவே ஒரு குட்டி சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்கள் என நினைக்கிறேன்.</b>
<b>யாழ் களத்தில் (நிர்வாகி கண்கணிப்பாளர்) இவர்கள் களத்தில் இருந்தால் முறையே (பச்சை செம்மஞ்சள்) நிறங்களில் தென்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் நான் களத்தில் நுழையும் போது அவர்கள் களத்தில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட நிறங்களில் தெரிவதில்லையே ஏன்?</b>
சுட்டி வெண்ணிலாவின் சந்தேகத்தைப் பார்த்து சிரிக்காதீர்கள்
----------
Reply
#10
Quote:யாழ் களத்தில் (நிர்வாகி கண்கணிப்பாளர்) இவர்கள் களத்தில் இருந்தால் முறையே (பச்சை செம்மஞ்சள்) நிறங்களில் தென்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் நான் களத்தில் நுழையும் போது அவர்கள் களத்தில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட நிறங்களில் தெரிவதில்லையே ஏன்?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓம். முன்னர் இப்படியான செயற்பாடு நமது களத்தில் இருந்தது. அதாவது களப் பொறுப்பாளர், உப பொறுப்பாளர், மட்டுறுத்துனர் ஆகியவர்கள் இணைப்பில் இருந்தால், பச்சை-சிவப்பு-செம்மஞ்சள் ஆகிய நிறங்களில் சிறப்பாய் அடையாளம் காட்டும் செயற்பாடு முன்னையதில் இருந்தது.

தற்போது களப்பொறுப்பாளர், உப பொறுப்பாளர், மட்டுறுத்துனர் ஆகியவர்கள் இணைப்பில் இருந்தால் அவர்கள் அனைவரது பெயர்களும் மொத்த எழுத்தில் காண்பிக்கப்படும்.

முன்னைய செயற்பாட்டை நமது களப் பொறுப்பாளர் மோகன் அண்ணா நீக்கிவிட்டார். [காரணம் அனைவரும் கள அங்கத்துவர்கள்தானே. பிறகெதுக்கு அவர்களுக்கு மட்டும் நிறங்களில் பெயர் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->]


Reply
#11
நல்ல தலைப்பு இளைஞன் அவர்களே!

எனக்கு தமிழ் மொழியை எளிமையாக கற்றுக் கொடுக்கும் தளம் இருந்தால் சொல்லுங்களேன்.

தமிழ் எழுத படிக்க தெரியாத என் சித்தப்பா மகனுக்கு படங்களோடு அல்லது சப்தத்தோடு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நான் கேட்ட இணைய சந்தேகம் சரிதானா என்று பார்த்து சொல்லுங்கள்.
¯í¸û ÀÃ狀¡¾¢
Reply
#12
Quote:<b>நான் இரு மின்னஞ்சல் முகவரிகள் வைத்திருக்கிறேன். அதில் இந்த முகவரிக்கு (example@yarlmail.com) வரும் மின்னஞ்சல்கள் யாவும் எனது சகோதரனுக்கு போகின்றது. அவரது முகவரிக்கு. ஆனால் இந்த முகவரியில் msn mesenger உண்டு. </b>

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்கள் உங்களுடைய

சகோதரனுக்கு போவதற்கு இரண்டு விதமான செயற்பாடுகள் கையாளப்படலாம்:

1. உங்கள் சகோதரரிடம் உள்ள மின்னஞ்சல் சேவையில், உங்கள் மின்னஞ்சல் முகவரியின் பயனாளர் பெயரையும், மறைவுச் சொல்லையும் கொடுத்து அங்கு வரும் மின்னஞ்சல்களைத் தானாகவே தனது முகவரிக்குக் கொண்டுவருமாறு செய்திருக்கலாம். (அதாவது உங்கள் சகோதரர் தன் வீட்டுப் பணியாளரிடம் உங்கள் அஞ்சல்பெட்டியின் திறப்பைக் கொடுத்து அதனுள் உள்ள கடிதங்களை எடுத்துவருமாறு சொல்வது)
-->இதற்கு POP3 எனப்படும் மின்னஞ்சல் சேவை வழங்கியின்(server) முகவரி தேவை. (pop.yarlmail.com). அத்துடன் username, password தேவை.

2. உங்கள் மின்னஞ்சல் சேவையில், உங்கள் சகோதரரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அங்கு கொண்டுபோய்ச் சேர்ப்பிக்குமாறு செய்திருக்கலாம். (அதாவது உங்கள் வீட்டுப் பணியாளரிடம், உங்கள் சகோதரரின் வீட்டு முகவரியை மட்டும் கொடுத்து,
உங்களுக்கு வரும் கடிதங்களைக் கொடுத்தனுப்புதல்)
-->இதற்கு மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும்.


Reply
#13
<b>ஆனால் எனது நண்பரின் பெயரில் ( அவரும் யாழ் கள உறுப்பினர் தான்) நுழைந்த போது மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த நிறங்களில் தானே தென்பட்டார்கள். அதெப்படி?</b> :roll:
----------
Reply
#14
<b>இளைஞன் அண்ணா தெளிவான விளக்கத்திற்கு நன்றி</b>
----------
Reply
#15
Quote:ஆனால் எனது நண்பரின் பெயரில் ( அவரும் யாழ் கள உறுப்பினர் தான்) நுழைந்த போது மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த நிறங்களில் தானே தென்பட்டார்கள். அதெப்படி?

ம்... நீங்கள் குறிப்பிட்ட பின்னர் தான் நானும் தேடிப்பார்த்தேன். உங்களுடைய Boardstyle என்பதை FI Subsilver shadow என்பதற்கு மாற்றினால், நீங்கள் விரும்பியது போல பச்சை செம்மஞ்சல் ஆகிய நிறங்களில் நிர்வாகி, மட்டுறுத்துனர் ஆகியவர்களின் பெயர்கள் காண்பிக்கப்படும்.

கருத்துக்களத்தின் மேற்பகுதியில் பார்த்தீர்கள் என்றால் Profile என்று ஆங்கிலத்தில் அல்லது "சுயகுறிப்புகள்" என்று தமிழில் ஒன்று இருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் உங்களுடைய தரவுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

Boardstyle இனை எப்படி மாற்றுவது என்பது பற்றிய விளக்கத்தினை "கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழிமுறைகள்" என்ற தலைப்பில் வலைஞன் எழுதியுள்ளார். http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

FI Subsilver shadow என்னும் இந்த Boardstyle இல் மட்டுந்தான் நீங்கள் விரும்பிய அந்த செயற்பாடு உள்ளது. மற்றவற்றில் இந்த செயற்பாடு இணைக்கப்படவில்லை.


Reply
#16
Quote:எனக்கு தமிழ் மொழியை எளிமையாக கற்றுக் கொடுக்கும் தளம் இருந்தால் சொல்லுங்களேன்.

தமிழ் எழுத படிக்க தெரியாத என் சித்தப்பா மகனுக்கு படங்களோடு அல்லது சப்தத்தோடு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அப்படியொரு இணையத்தளம் ஒன்றை முன்னர் எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் முகவரி தெரியவில்லை. மற்றைய நண்பர்கள் அறிந்திருந்தால் கூறுவார்கள்.

அதேபோல தமிழ் படிப்பதற்கான சில மென்பொருட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் இறுவட்டில் (CD) பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.


Reply
#17
இதில் ஒன்று இருக்கிறது.. தமிழ் கற்பதற்கான இணையம்
http://www.learntamil.com/
[b][size=18]
Reply
#18
தமிழ் கற்பதற்கான இணையம்

http://www.geocities.com/avarangal/learntamil.html

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/

http://www.talktamil.4t.com/

http://www.tamil.net/spokentamil/

http://www.ukindia.com/zip/ztm1.htm
[b][size=18]
Reply
#19
நன்றி கவிதன். தேடித் தெரிந்தெடுத்து, பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

நண்பர் பரஞ்சோதி,
உங்கள் தேடலுக்கு பதில் கிடைத்துவிட்டதா? உங்கள் கேள்வியால் நாங்களும் பயனுற்றோம். நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#20
இணைப்புக்கு நன்றி கவிதன்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)