Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.richardmay.com/coupbeach.jpg' border='0' alt='user posted image'>
காலை சோபை இழந்து
கவலைதோய்ந்த பொழுதாய்
இன்றுடன் ஆயிற்று சில திங்கள்
அவள் தொலைபேசி ஊடல் இல்லை
மின்னஞ்சல் மென்வருடல் இல்லை
என்னவாயிற்று என்னை மறக்க
என்றென்றும் நினைப்பதில்லை அவள்
அலுவலகம் சென்று அதட்டும் வேலைக்கிடையிலும்
அவளின் மின்னஞ்சல் தேடும் விழிகள்
மதியநேரம் வாசலோரம் மணியடிக்கும்
தபால்காரனை தாவித்தேடும் ஆசை மனசு
சில்லறையாய் தொலைபேசி சினுங்கினால்
ஆவல்பொங்க அதைநோக்கின் யாரோ தொடர்பில்
பாசத்தின் பொறுமையை சோதிக்கின்றாளா ?
ஓர் நொடி எனை மறக்காதவள்
ஓசையின்றி கழிந்த ஈர்திங்களாய் எங்கு சென்றாள்
அன்னைமுகம் காண விரைந்தவள்
அங்கேயே ஜக்கியமாகிவிட்டாளோ !
"என்னவாயிற்று என் செல்லக்குட்டிக்கு ? "
இறுதியாய் அவளுடன் கதைத்தது நினைவில் வந்தது
" நான் சந்தோசமாய் வந்து சேர்ந்துவிட்டேன் "
" நேரத்திற்கு சாப்பிடனும், நேரத்திற்கு உறங்கணும்."
"யாருமில்லா நேரம் தொடர்பு கொள்கின்றேன் "
ம்
இன்றுவரை தனிமை உன்னை ஆட்கொள்ளவில்லையா ?
இனி
கதைக்கும்போது நன்றாக கேட்டுக்கொள்ளவேண்டும்
எனை ஏன் மறந்தாய் என்று
ஏசித்தீர்க்கவேண்டும் - மனசுக்குள்
கடுமையாக திட்டித்தீர்த்துக்கொண்டேன்
இன்றுவரை நேரில் ஓர் வார்த்தை
கடுமையாய் பேசியதில்லை
நினைத்துக்கொண்டிருந்தபோது
தொலைபேசி சினுங்கித்தொலைத்தது
ஆவலுடன் நோக்கினேன்
புதிய இலக்கம்
எடுத்தவேகத்தில் ஏச நினைத்தேன்
மறுமுனையில் மௌனமும் சினுக்கமும்
"என்ன நடந்தது ? " " ஏன் அழுகின்றாய் ? "
"உனை மறந்து நிறைய நாள் இருந்திட்டேன்டா "
"எனை மன்னித்துக்கொள்ளடா "
"என் வீட்டில் எல்லாம் எதிர்ப்பு"
"நாம் இணைவது இனி இறைவன் கரங்களில்தான்"
அனலுடன் இருந்த என் மனசு
உறைபனியாய் விறைத்து நின்றது
எனை மறந்தாய் என நினைத்தேன் - நீயோ
எனை மறக்கமுடியாமல் உனையே வதைக்கின்றாயே
"அழுவதை நிறுத்து"
"என் அருகினில் நீ இருப்பாய்"
"என்றும் எமை யாரும் பிரிக்க முடியாது"
"நாம் என்றோ இணைந்துவிட்டோம்"
"இது தற்காலிக பிரிவு"
"பொறுமை கொள் உன்னை"
"விரைவில் மீட்டுக்கொள்வேன்"
ஆறுதல் வார்த்தைகூறி ஆசுவாசம் செய்து வைத்தேன்
இன்றுவரை அவளை திட்டியதில்லை
கோபம் வந்தாலும் எனக்குள்ளேயே
பொசுக்கி போட்டு என்னை மாற்றிக்கொள்வேன்
பாசம் மிகுமிடத்தில் கோபம் ஏன் தோன்றுகின்றது
கலங்கிய அவள் விழிகள்
சினுங்கிய அவள் குரல்
கேட்ட செவிகள் இன்றுவரை
இமைகளை மூடவிட்டதில்லை
உறங்கா விழிகளுடன் அவளிற்காய்
28.04.2004
[b] ?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் காத்திருங்கள்... தடைகள் தாண்டி உங்கள் அவள் வெகு விரைவில் வந்து சேர்வாள்... உங்கள் அவளாகவே....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.horacktalley.com/images/torncouple.jpg' border='0' alt='user posted image'>
[size=18]சந்திப்புகள் எதிர்பாராதவை
பிரிவுகள் நிரந்தரமானவை
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பா...பா...பரணி....
அந்த நிலா கறுப்பு நிலா வெள்ளை நிலா...
கவர்ந்த கள்வர்..
இடையே வந்து குழப்பிவிட...
அவளும் குழம்பி...
பின் கள்வர் திருகுதாளம்
திருத்தி அனுப்ப....
மீண்டும் பரணி மடி சேர்ந்ததோ....!
கவனம்...
இப்ப... நிலாக்களைக் கவரவே
கள்வர் அதிகமாப் போச்சாம்....!
இணையமும் கையடக்க தொலைபேசியும் அதற்கு உறுதுணையாம்...
நிலாக்களும் அடிக்கடி மதியிழக்குதுகளாம்...!
இது காதல் இன்ரபோல் செய்தி...!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
வெற்றிக்கு வாழ்த்து சொல்லிப்போட்டு பறந்து போறதைவிட்டு குருவி ஏன் புகையிது..
:?:
Truth 'll prevail
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:வெற்றிக்கு வாழ்த்து சொல்லிப்போட்டு பறந்து போறதைவிட்டு குருவி ஏன் புகையிது..
:?:
என்ன தாத்தா இப்படிச் சொல்லிப் போட்டிங்க... வெற்றிக்கு முன்னால வென்றதைத் தக்க வைக்க கத்துக்க வேணாமோ.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
[quote=AJeevan]<img src='http://www.horacktalley.com/images/torncouple.jpg' border='0' alt='user posted image'>
[size=18]சந்திப்புகள் எதிர்பாராதவை
பிரிவுகள் நிரந்தரமானவை
பிரிவு என்பது நரகசுகம்
கவிஞன் சொல்லிவிடலாம்
அனுபவிக்க முடியாது - பிரிவு
என்பது விசம் சிறுக சிறுக
எம்மை தின்றே கொண்றுவிடும்
[b] ?
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ரதியோ
இனியோ
விதியின்
வழியோ
எதுவோ...
நின்
காதல்
வெல்க!
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
அண்ணா உங்கள் கவிதை மிக அருமை... நான் அதை ஆங்கிலதில் எழுதப்போகிறேன்...
எங்கே உங்களே காணவில்லை MSN இல்?
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Paranee Wrote:வணக்கம் குருவிகள்
நிலவின் மனசில் இருந்துவிட்டால்
கள்வரென்ன கயவராலும் கவரமுடியாது
மனதோடு வந்தகாதல்
என்றும் மடிந்ததாய் கதைகளில்லை
மலரோடு நீங்கள் வைத்தகாதல்
என்றும் வாசமிழப்பதில்லைதானே ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
kuruvikal Wrote:பா...பா...பரணி....
அந்த நிலா கறுப்பு நிலா வெள்ளை நிலா...
கவர்ந்த கள்வர்..
இடையே வந்து குழப்பிவிட...
அவளும் குழம்பி...
பின் கள்வர் திருகுதாளம்
திருத்தி அனுப்ப....
மீண்டும் பரணி மடி சேர்ந்ததோ....!
கவனம்...
இப்ப... நிலாக்களைக் கவரவே
கள்வர் அதிகமாப் போச்சாம்....!
இணையமும் கையடக்க தொலைபேசியும் அதற்கு உறுதுணையாம்...
நிலாக்களும் அடிக்கடி மதியிழக்குதுகளாம்...!
இது காதல் இன்ரபோல் செய்தி...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
காதலென்று கண்டவுடன் களிக்கவென்றால்
மனிதருள் தேடியிருப்போம்
ஒன்று...
நேசத்துள் புனிதம் காண
தகுந்தது மலரென்பதால்
நேசம் வைத்தோம் மலர் மீது
அது காதலையும் வென்ற
ஓர் உணர்வு நிறை உறவு...
அழிவில்லாதது....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
முதல் கவிதை வரைந்து சில
நாட்களில் இந்த கவிதையும் வரையவேண்டியதாகிவிட்டது.
[size=18]<b>நெய்தலை பாலையாக்கிவிடு</b>
இந்த உலகத்திலை எல்லாத்திற்கும் ஒரு விலை இருக்கு விலை மதிக்க முடியாதது கண்ணீர் மட்டும்தான் நீ சிந்திற கண்ணீரிற்கு ஒரு அர்த்தம் இருக்கணும் சரியான காரணம் இருக்கணும் உன்னைமாதிரி பெண்கள் என்னை மாதிரி ஆண்களை அழவைக்கவேண்டுமேயொழிய நீங்கள் அழக்கூடாது - ஜெய் திரைப்படம்
<img src='http://www.bekkoame.ne.jp/~t.s.hawk/jpg/takaq022.jpg' border='0' alt='user posted image'>
உன் விழி விதைக்கும்
கண்ணீர் முத்து தரைசேரமுன்னம்
என் கரம் அதை ஏந்தும்
நீ அழுவதற்காக நான் காதலிக்கவில்லை
உன்னை அழகாக்கவே காதல் செய்தேன்
விழியோடு நிறைந்த நீர் இனி
வற்றிப்போகட்டும் ஆனந்தத்தில்கூட
நீ அழுதிடக்கூடாது
புூக்கள் அழுது இந்த புூமி பார்த்தில்லை
நீ அழுது இனி நான் பார்க்ககூடாது
அழுதிடத்தோன்றினால் என்னை நினை
உனக்காய் நான் அழுதுகொள்கின்றேன்
புூவிற்காய்த்தானே இந்த வானம் அழுகின்றது
உனக்காய் அழுவதால் நான் உற்சாகம் பெறுகின்றேன்
கொடுப்பதிலும் பகிர்வதிலும்தானே காதல்
வாழ்க்கை கசப்பின்றி இனிதே நகர்கின்றது
பனித்துளி வீழ்ந்து நிற்பதால்
மலர்கள் அழுவதாய் கற்பனை செய்யும்
கவிஞர் கூட்டம் கவி மனம் தெளியவேண்டும்
உனக்காய் நான் அழுது
உனக்காய் நான் உதிர்ந்து
விளக்கம் சொல்வேன்
தண்ணீரில் மீன்கள் அழுவதில்லை
அழுதாலும் யாரும் அறியப்போவதில்;லை
என் மனதோடு நீ வாழும்போது
நீ அழக்கூடாது உனக்காய்
நான் அழுவேன் யாரும் அறியப்போவதில்லை
கடலில் சேர்ந்த நதி எதுவென
பிரிகை பார்க்க முடியாது
என் கண்ணீரிலும் யாரும் பேதம் பார்க்கமுடியாது
அழுவது நான் உனக்காக அது
எனக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும்
இன்றுமுதல்
இம்மடல் உன் கரம் கிடைக்கும்போது
நெய்தலாய் நிற்கும் விழியை பாலையாக்கிவிடு
காரணம் எதுவாகினும் உன்
கண்ணீர் சிந்திவிடக்கூடாது
அர்த்தம் இருந்தாலும்
உன் அழும்விழி நான் காணக்கூடாது
எனக்காய் இதை செய்துகொள்
உனக்காய் நான் எதுவும் செய்வேன்
[b] ?