06-19-2004, 02:58 AM
<b>[size=18]பொண்ணுக்கும் பொண்ணுக்கும் கல்யாணமாம்?!
கேர்ள் ஃப்ரண்ட் என்ற இந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நாடு முழுவதுமே அதிர்ச்சியலைகளை கிளப்பியிருக்கிறது. லெஸ்பியன் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது.
இரண்டு பெண்கள் படுநெருக்கமாக உறவாடுவதாக காட்டப்படுவது நம் கலாச்சாரத்தையே குழிதோண்டிப் புதைப்பதுபோல் இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை அனுமதிக்க மாட்டோம்.. என்று சொல்லி, மும்பையில் இந்தத் திரைப்படம் வெளியான தியேட்டர்கள் எதிரில் போராட்டம் நடத்துகிறது சிவசேனா கட்சி. ஒரு தியேட்டர் கொளுத்தப்பட்டு விட்டது.
வளர்ந்த நாடுகளே வெறுக்கும் முறையற்ற உறவை, ஆணும் பெண்ணுமான குடும்ப அமைப்பில் மாறா நம்பிக்கை கொண்ட இந்தியாவில் திணிப்பது எந்தவகையில் நியாயம்? என்று கொதிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்ஸன்.
இப்படி ஒரு திரைப்படத்துக்கே பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இரண்டு பெண்கள் கணவன் & மனைவியாகவே வாழ்கிறார்கள். நீதிமன்றம் அவர்களுக்கு சட்டபூர்வமான அனுமதியும் தந்திருக்கிறது! எங்கோ அமெரிக்காவில் அல்ல. சில நூறு கிலோ மீட்டருக்குள் இருக்கிற கேரளாவில்!
<img src='http://www.vikatan.com/aval/2004/jul/02072004/p9.jpg' border='0' alt='user posted image'>
திருவனந்தபுரம் அருகே வசிக்கும் நந்துவும் ஷீலாவும்தான் அந்த விபரீத ஜோடி!
காதலுக்கு கண்ணில்லைனுதான் கேட்டிருக்கேன். எம்பொண்ணுக்கு அறிவே இல்லாம போச்சு என்று நந்துவின் பெற்றோரும், எங்களைப் பார்த்து ஊரே சிரிக்கும்படி பண்ணிட்டா.. என்று ஷீலாவின் பெற்றோரும் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்க..
அப்படி எதுவும் நாங்க தப்பா செஞ்சிடல.. என்று தீர்மானமான குரலில் சொல்கிறது இந்த ஜோடி.
கடந்த ஆண்டு இவர்களின் முறையற்ற காதல் வெளியே தெரிந்ததுமே சலசலப்பு எழுந்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் போராட, கடைசியில் நீதிமன்றமே இவர்கள் இணைந்துவாழ அனுமதி அளித்துவிட்டது!
கிரீம் கலர் டைட் பான்ட், செக் ஷர்ட், இடுப்பை இறுக்கி வைத்திருக்கும் பெல்ட்.. பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து ஸ்டைலாக முடிவாரி, மூக்குக் கண்ணாடி வழி பார்வையை கம்பீரமாக்கி, காலுக்கு மேலே கால் போட்டு நந்து நம்முன் பேச உட்கார்ந்ததைப் பார்த்து நாமே ஒரு நிமிடம் சந்தேகித்தோம். அச்சு அசல் டீனேஜ் பையன் மாதிரி இருந்தார்(ள்!).
நந்துவுக்கு நேர்மாறு ஷீலா! பெண்மைக்கே உரிய அடக்கம், மென்மை, பய உணர்வோடு பவ்யமாக நந்துவின் அருகே அமர்ந்தார்.
நந்து முழுக்க முழுக்க ஒரு ஆணைப்போல பாவனை செய்துகொண்டு ஆக்ஷன் கொடுக்க, பேச ஆரம்பித்ததும் பேச்சிலும் ஒரு வேகம், ஆதிக்கம் தெரிந்தது. எங்க வீட்ல ஆம்பள பொம்பள வித்தியாசமில்லாமத்தான் எங்களை வளத்தாங்க. நான் ஷீலாவ காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் அப்பா கத்தினாங்க. பிடிக்கலை. வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். ஆனா, திடுதிப்புனு ஷீலாவ கூட்டிகிட்டுப் போவேனு யாரும் நினைச்சுப் பாக்கல. எங்களோட காதல்ல எந்த தப்பும் இல்லைனு நம்பறோம். அதை இந்த சமூகம் விமரிசனம் பண்ணினா அதைப் பத்தியும் நாங்க கவலைப்படறதா இல்லை.. என்று எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாகப் பேசியவர்,
சிவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் உருவானவர்தானே ஐயப்பன்? அப்படி உருவான கடவுளை கும்பிடற இந்த சமூகம் எங்களை எந்த முகத்தோடு விமரிசனம் பண்ணுது? பகவான் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும்கூட அப்படி ஒரு ஆசை இருந்ததே?
நாங்க ரெண்டு பேருமே திருப்தியா இருக்கோம். ஸ்னேகபூர்வம்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். உள்ளம் ஒண்ணாவும் உருவம் வேறாவும் இருந்து எங்களை மாதிரி அவஸ்தைப்படறவங்களுக்கு உதவி செய்யத் தயாரா இருக்கோம்.. என்றார் படபடவென.
நந்து பேசுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஷீலா, வாய் திறந்தார்..
நான் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தப்ப, ஒரு கல்யாணத்திலதான் நந்துவை சந்திச்சேன். முதல்ல பாத்தப்ப பையன்னுதான் நெனச்சேன். அப்புறம்தான் பொண்ணுனு தெரிஞ்சது. பழகினோம். நல்ல தோழிகளானோம். அடிக்கடி சந்திச்சு பேசவும், நட்பு காதலா மாறிடுச்சு.. என்றவர் தொடர்ந்தார்..
நந்து என்னைக் காதலிக்கறதா சொன்னப்ப நிஜமாவே சந்தோஷப்பட்டேன். எனக்கு வரவேண்டிய புருஷன் எப்படி இருக்கணும்னு என் மனசுல நினைச்சேனோ அதே உருவம் நந்துவுக்கு. என் வீட்டுல விஷயம் தெரிஞ்சதும் அட்டகாசம் பண்ணினாங்க. வீட்டுல இருந்து துரத்திவிட்டாங்க. கவலையே படலை. எனக்கு தோள் கொடுக்க நந்து இருந்தா.. என்றவர், தாங்கள் சந்தித்த போராட்டங்களை அடுக்கினார்.
முதல்ல எங்க அப்பாதான் போலீஸ்ல புகார் கொடுத்தார். இயற்கைக்கு விரோதமான குற்றம் செஞ்சதா எங்க மேல போலீஸ் வழக்கு பதிவு செஞ்சது. ஆனா, வழக்கு பதிவு பண்ணதுல இருந்த தப்பை சுட்டிக்காட்டி நீதிபதி எங்களை விட்டுட்டாரு.
அதுக்கப்புறம் ஊர்க்காரங்களும், எங்க வீட்டுக்காரங்களும் சேர்ந்து நந்து போதை மருந்துக்கு அடிமைனு பொய்ச் செய்தியை பரப்பினாங்க. கள்ளக் கடத்தல்ல எங்களுக்கு பங்கு உண்டுனு குற்றம் சுமத்தி ஜெயில்ல வைக்கப் பாத்தாங்க. அப்பதான் சகயாத்திரிகானு ஒரு இயக்கம் இருக்கறது எங்களுக்கு தெரிஞ்சது. அதில் உறுப்பினரா இருக்கும் டாக்டர் ஜெயஸ்ரீயும், மைத்திரேயனும் எங்களுக்கு உதவினாங்க. அவங்க மட்டும் இல்லேன்னா நாங்க எப்பவோ தற்கொலை செஞ்சிருப்போம்..! என்று அவர் சொல்லிமுடித்தபோது, அங்கே வந்தார் டாக்டர் ஜெயஸ்ரீ (இவரது பாதுகாப்பில்தான் நந்துவும் ஷீலாவும் இருக்கிறார்கள்).
நாற்பத்தேழு வயதாகும் டாக்டர் ஜெயஸ்ரீயை புரட்சிப் பெண்ணாகத்தான் பார்க்கிறார்கள் கேரளாவில். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண் களுக்காகவே ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அவர்களுடைய பிரச்னைகளை சமுதாயத்தின் முன் புட்டுப்புட்டு வைத்தவர். இப்போது லெஸ்பியன் ஜோடிக்கு அடைக்கலம் தந்திருப்பதால் மீண்டும் பரபரப்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார்.
ஜெயஸ்ரீயிடம் பேசியபோது, என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன பண்ணுவேனோ அதைத்தான் நந்து&ஷீலா விஷயத்திலயும் செஞ்சேன்.. என்றவர், ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் இதெல்லாம் புதுசா முளைச்ச விஷயமல்ல. எல்லா காலத்திலயும் இருந்துட்டுத்தான் இருக்கு.
சும்மா கொழுப்பெடுத்துப் போய் இப்படி பண்ணுதுங்கனு எல்லோரும் விமரிசனம் பண்றாங்க. அவங்களோட மனசை யாரும் பார்க்கறதில்லை. மரபுக் கோளாறுகளால் வர்ற குழப்பம் இது. குழந்தை பிறக்கும் முன்னே நிர்ணயிக்கப்பட்ட விஷயம். இதில் அவங்க தப்பு எதுவுமே இல்லே. உடல் உறுப்புக்கள் பெண்போல இருந்தாலும் மனசெல்லாம் ஆண் போலத்தான் இருக்கும். காதல் கனவுலகூட பெண்கள்தான் வருவாங்க. சொல்லப்போனா, இது அந்த பொண்ணுங்களோட விருப்பமே இல்லாம அவங்கமேல விதி திணிச்ச விஷயம். இதைப் புரிஞ்சுக்காம சமுதாயம், சட்டம், குடும்பம்னு எல்லாம் ஒண்ணுசேர்ந்து அவங்களை எதிர்த்தா என்ன பண்ணுவாங்க? செத்துடுவாங்க. அநியாயமா அதுக்கு அனுமதிக்கலாமா? என்று விரிவாகவே பேசினார் ஜெயஸ்ரீ.
சகயாத்திரிகா என்ற அமைப்பு பற்றி விவரித்த ஜெயஸ்ரீ, தேவிகாமேனன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்தறாங்க. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் உணர்வுகளை வெளியே சொல்ல முடியாம, தற்கொலை பண்ணிக்க நினைக்கிறாங்க பலபேர். அவங்களுக்கு முறையான தெளிவை தர்றதுதான் இந்த அமைப்போட நோக்கம். டாக்டர்கள், இன்ஜினீயர்கள், பேராசிரியர்கள் இப்படி பல பெரிய மனிதர்கள் இங்கே வர்றாங்க. அவங்களுக்கு செமினார் வகுப்பு நடத்தறோம்.. என்றார்.
நந்து & ஷீலா தம்பதி பக்கம் திரும்பினோம். எப்படியோ கஷ்டப்பட்டு ஒண்ணு சேந்துட்டீங்க. உங்களோட வருங்காலம் எப்படி இருக்கணும்னு ஆசைப்படறீங்க? என்று கேட்டோம்.
இப்ப சமூகசேவை மையத்தில வேலை செய்யறோம். சம்பளம் வருது. இன்னும் நல்ல வேலையா பார்க்கணும். அமெரிக்காவிலிருந்து சிலர் எங்களைப் பத்தித் தெரிஞ்சு கிட்டு வேலை தர்றதா சொல்லியிருக்காங்க. எங்கே போனாலும், பிரிஞ்சுடாம நாங்க ஒற்றுமையா வாழணும்.. அதான் ஆசை! என்று நந்து நிறுத்த,
ஒரு வீடு கட்டணும். ஒரு குழந்தையை தத்து எடுக்கணும். குடும்பமா வாழணும்.. என்று சொன்ன ஷீலா குடும்பம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்தவராக சிறிது தடுமாறினார்!
===================
[b]மரபுக் கோளாறு மட்டுமல்ல..!
</b>
<i>டாக்டர் ஜெயஸ்ரீயை போலவே, ஹோமோ செக்ஸில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆதரவாக இயங்குகிறார் திருவனந்தபுரம் எஸ்.யூ.டி மருத்துவமனையைச் சேர்ந்த மனநல நிபுணர் பி.பி.எஸ்.சந்த். அவரைச் சந்தித்தபோது,
என்னோட ஆராய்ச்சியின்படி நாற்பது சதவீதம் பேர் இப்படி ஒரே பாலின விருப்பத்தோடு இருக்காங்க. ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் இதெல்லாம் மனநோயாக இருக்கும்னு எண்ணி அதை ஒரு நோயாகத்தான் நினைக்கிறாங்க பலர்.
என்கிட்ட வர்ற நோயாளிகளில் பலர் சொல்லும் காரணங்கள் நாம் சமுதாயத்தில் ஆராய்ந்து மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியவை. கல்யாணம் ஆனவர்கள் தான் ரொம்பவும் பாதிக்கப்படுறாங்க. கணவருக்கு மனைவி மீதோ, மனைவிக்கு கணவன் மீதோ ஈர்ப்பில்லாம சண்டை சச்சரவும் வந்து, விவாகரத்துல போய்க்கூட முடிஞ்சிருக்கு. ஆனால், வெளிப்படையாக நான் ஒரு ஹோமோசெக்ஸ் பிரியன்னு சொல்லிக்க பயப்படறாங்க. காரணம் சமூகம் வீசும் அவச்சொற்கள்..!
லெஸ்பியன் உணர்வு வர மரபுக் கோளாறு மட்டும்தான் காரணம்னு சொல்லிட முடியாது. அப்பா அம்மாவை படுத்தும் கொடுமை, வரதட்சணை கொடுமை, ஆண் ஆதிக்கம், சுதந்திரம் பறிபோகுமோ என்கிற அச்சம்.. இதெல்லாம்கூட உள்ளுக்குள் ஊறி பெண்துணையே பாதுகாப்புங்கிற எண்ணத்தை உருவாக்குதுனு நம்பறேன்..</i>
avalvikatan,com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->