Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இல்ல பருப்பு சாப்பிட வேணும் எண்டு விரும்பிறவனுக்கு வேக வைக்கத் தெரியும்...வேக வைப்பான்.... உண்பான்...சுயமா...!
இல்ல பருப்பு வேணாம்..... போடுற எலும்புகளே போதும்.... பொறுக்கி திண்டே தீருவேன் என்பவனுக்கு பருப்பு வெந்தா என்ன விட்டா என்ன.....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kuruvikal Wrote:இல்ல பருப்பு சாப்பிட வேணும் எண்டு விரும்பிறவனுக்கு வேக வைக்கத் தெரியும்...வேக வைப்பான்.... உண்பான்...சுயமா...!
இல்ல பருப்பு வேணாம்..... போடுற எலும்புகளே போதும்.... பொறுக்கி திண்டே தீருவேன் என்பவனுக்கு பருப்பு வெந்தா என்ன விட்டா என்ன.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கந்தர் சொன்னது இவனுக்கு விளங்கேல்லைப்போலை..
உந்தப்பருப்பு எவ்வளவு வேகவைச்சாலும் வேகாது எண்டுதான் சொல்லுறார்.. பருப்பிலை உப்பு சேந்திட்டிது கொட்டவேண்டியது எண்டுதான் சொல்லுறார்..
அதுக்குள்ளை தான் சாப்பிடுறதையும் சொல்லிக் காட்டியிருக்கிறான் பாருங்கோ..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
kuruvikal Wrote:இல்ல பருப்பு சாப்பிட வேணும் எண்டு விரும்பிறவனுக்கு வேக வைக்கத் தெரியும்...வேக வைப்பான்.... உண்பான்...சுயமா...!
இல்ல பருப்பு வேணாம்..... போடுற எலும்புகளே போதும்.... பொறுக்கி திண்டே தீருவேன் என்பவனுக்கு பருப்பு வெந்தா என்ன விட்டா என்ன.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பருப்பை வேக வைக்கிறது வாயால அல்ல.
முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில தெரியும், குருவி
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
முயல் பிடிக்கிற நாயை முன்யயில
தெரியும் என்று எல்லாரும் செல்லிறியல்
கந்தர் தயவுசெய்து விளங்படுத்திவிரா
தா....க ...நாட்டில க......கொ....க...ஏ...என்று
நல்லா தெரியுது :oops:
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>Prabhakarans combatants head for Thoppigala </span>
Another round of internecine battle feared in East
by Hemantha Randunu
(Reproduced from The Island, June 16, 2004)
A group of over 100 cadres of Prabhakaran's elite fighting unit has been sent to the East as reinforcement in response to calls from the combatants of the Prabhakran faction who suffered heavy losses in confrontation with the Karuna faction on Sunday.
These combatants would head for the Toppigala jungle, where there is a heavy formation of Karuna's fighting units, sources said.
If they managed to reach the jungles, there would be a blood bath again, sources added.
The Wanni leadership had sought permission from the Navy and the SLMM to ferry these combatants across to the Verugal area under the false pretext that they were returning to the East after leave.
The Prabhakaran faction had employed a similar ruse to bring combatants to the East before launching an attack on the Karuna faction a few months ago. And the Karuna faction accused the SLMM of promoting war in the East by allowing Prabhakaran's men to enter the eastern sector.
The Navy, sources said, had received instructions from the top to escort these LTTE cadres, who were coming from Mullativu.
http://www.go2lanka.com/stories/160604_1.html
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Dead dove prompts Sri Lanka probe
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40275000/jpg/_40275333_dovebody2.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40275000/jpg/_40275303_dovebody_ap.jpg' border='0' alt='user posted image'>
The Sri Lankan authorities have ordered an inquiry after a dove freeing ceremony intended to symbolise peace went disastrously wrong.
One bird was dead before take-off and "dropped like a brick" soon after it left the hands of the public security minister at a ceremony last weekend.
A BBC cameraman who witnessed the incident said that the dove may have died due to excessive humidity.
At this time of the year temperatures can reach 33C.
Heat exhaustion
"The dove was one of seven due to be released by dignitaries and politicians at a United Nations ceremony last weekend," said BBC cameraman Sriyantha Walpola.
"But because the birds had to wait at least 30 minutes in the excessive humidity before they were released, many of them appeared to be weak.
"Unfortunately the bird that was due to be freed by the Public Security Minister, Ratnasiri Wickremanayake, was dead almost as soon as it was handed to him by a white gloved soldier," he said.
Instead of soaring majestically into the air to symbolise the government's commitment to peace and goodwill, the dove "dropped like a brick" on to the ground.
The incident happened in front of other government ministers and prominent dignitaries including the visiting Commander of US Forces in the Pacific, General James Campbell.
All the doves had successful take-offs apart form the one belonging to Mr Wickremanayake, who is also Sri Lanka's deputy defence minister.
The military police will look into the circumstances and try to see if there was any sabotage
Sri Lankan defence ministry spokesman
A three member delegation of the military police led by an army major have now been called in to investigate the mystery of the dead dove.
Such an incident is seen as inauspicious by many Sri Lankans, who since the weekend have written to newspapers expressing fears that the death of the dove could symbolise the demise of the country's peace process.
It has assumed added significance because Tamil Tiger rebels have warned that the country risks sliding back into a state of war unless the government of President Chandrika Kumaratunga revives peace negotiations.
bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
பருப்பை எப்படி வேகவைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். உங்கள் கறிச்சட்டியை கருகவிடாது பாத்துக்கொள்ளுங்கள். கோட்டு, ரையோட உபதேசம் செய்ய வந்திட்டினம்.
இப்பிடித்தான் இந்தியன் ஆமி வர இனி புலிகள் சரி எண்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் பின்வாங்கியபோது இனி புலிகளால் எழும்பமுடியாது என்றார்கள். கருணாவின் திருகுதாளங்கள் பிடிபட்டு கருணா பிரிவதாக தெரிவித்தபோது இனி புலிகள் சரி என்றார்கள். இப்படி எத்தனை தடவை புலிகள் சரி என்று என்றார்கள். இப்பவும் சொல்கின்றார்கள். நாளையும் சொல்வார்கள். இவர்கள் சொல்லட்டும். நாங்கள் உறுதியாக இருப்போம்
<b>
?
?</b>-
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/brattsk_meets_tchelvan_1_26554_435.jpg' border='0' alt='user posted image'>
உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவதை அரசு தவிர்க்க வேண்டும்: நோர்வேத் தூதுவரிடம் தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு
சமாதான முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை விசுவாசமிக்க பங்காளர்களாக அரசாங்கம் நேர்மையாகக் கருதுமேயானால் உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியாவது தடுக்கப்பட வேண்டுமென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்ட நிலவரம் தொடர்பாக குரோதத் தன்மையுடன் செய்திகளை வெளியிடுவது தமிழ் மக்களின் நெஞ்சங்களை புண்படுத்தியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறஸ்கருடனான சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்திருக்கின்றார்.
இயல்பு நிலையை ஏற்படுத்தவும் இராணுவ அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்படாமை குறித்தும் தமிழ்ச்செல்வன் தனது அதிருப்தியை நோர்வேத் தூதுவரிடம் வெளியிட்டிருக்கின்றார்.
மேலும் மனிதாபிமான உதவிகளை செயற்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றும் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் கொண்டுள்ள கவலை குறித்து நோர்வே தூதுவரிடம் தமிழ்ச்செல்வன் கூறியிருக்கின்றார்.
சமாதான முயற்சிகள் எதிர்பார்த்த அளவு இடம்பெறாதது குறித்தும் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேவேளை சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் நோர்வே எடுத்து வருகின்ற பல்வேறு முயற்சிகள் குறித்து நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறஸ்கர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் எடுத்து கூறியிருக்கின்றார்.
அத்துடன் பிறசில்சில் இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடர்பாகவும் அவர் விளக்கியிருக்கின்றார்.
--------------------------
Tigers slam Sri Lankan state media for vicious propaganda
[TamilNet, June 16, 2004 10:01 GMT]
The Liberation Tigers Wednesday expressed serious concern about ‘malicious and false propaganda’ in Sri Lanka’s state controlled media regarding the situation in the Batticaloa district, during discussions with the Norwegian Ambassador in Colombo. “If the Sri Lankan Government is honest in taking the LTTE as a sincere partner in the peace process, this type of clandestine media activity should stop forthwith”, Mr. S. P Thamilchelvan told the ambassador. There is yet no agreement on restarting the talks the ambassador told the press at the conclusion of the meeting.
The Norwegian Ambassador met Mr. Thamilchelvan, head of the Tigers’ political division, and Mr. B. Nadesan, head of the Thamil Eelam Police Service at the LTTE Peace Secretariat in Kilinochchi Wednesday morning.
The Norwegian ambassador briefed Mr. Thamilchelvan and Mr. Nadesan about the recent meeting of Sri Lanka aid donors in Brussels.
Mr. Thamilchelvan expressed concern over the lack of progress in taking forward the peace process. He had pointed out the lack of political will in Colombo to resume talks on a firm basis. Mr. Thamilchelvan raised serious concern that the cease-fire agreement is yet to be implemented fully to bring about normalcy and minimizing military violations. He re-emphasized the lack of a proper mechanism for the delivering humanitarian assistance to the war affected people in the northeast.
Mr. Thamilchelvan told Mr. Brattskar that the Sri Lankan state media, the Tamil service of the Sri Lanka Broadcasting Corporation in particular, engaged in a vicious campaign of propagating false news about alleged confrontations in the east between Tigers and some breakaway elements of the LTTE.
The SLBC Tamil service is accommodating a one hour direct broadcast of malicious propaganda from the Tamil Broadcasting Corporation (TBC) London, a radio run by a former Tamil paramilitary group, Mr. Thamilchelvan said.
He said the vicious propaganda is aimed at maligning the LTTE and creating North-East regionalism among the listeners. The radio is vilifying the Tamil cause, he said.
At the conclusion of the meeting, the Norwegian ambassador responded to questions from the local press.
“We are continuing discussions on the issue of the peace talks. I think that we still are some way away from agreeing on the modalities and the timing for talks. But, as facilitator, it is important for us with continuing discussions with both the parties. My visit today is a routine visit, one that I will continue to have”, Mr. Brattskar said.
Responding to a question regarding reports in Colombo media about incidents in the Batticaloa district, he said:
“We had also discussion on the situation in the East. There has been some concern as some segments of the media are giving some incorrect picture of what is happening in the east. Mr. Thamilchelvan presented his views on the goings on in the East and I will of course convey those to the government”.
Answering another question about the next stage of the peace process he said:
“This is a decision that needs to be taken by both the parties. We will continue go back and forth between the parties, as facilitator until there is an agreement between both the parties on the future steps. I feel we are not quite there, but we will continue our discussions. That is our role”.
“As I said earlier, we are yet to arrive at agreement about modalities, format and the timing regarding resuming the peace talks”.
tamilnet & puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சமாதானத்தைக் குழப்பும் தீய சக்திகள் ஊடகங்களில் பொய் பிரசாரங்கள்
சமாதானத்தைக் குழப்பும் தீயசக்திகள் ஊடகங்களில் சில பொய்யான செய்திகளைப் பரப்பி மக்களை குழப்ப நிலைக்கு இட்டுச் செல்வதாக விடுதலைப் புலிகளின் மட்டு.அம்பாறை அரசியல் பிரிவு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்டுகள் சேனைப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலை தரும் விடயமாகும்.
நேற்று வவுணதீவில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் இத்தாக்குதல் சம்பவத்தை ஒத்துக் கொண்டதாகவும், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படுகின்றன.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
'போரிடும் வல்லமை சேர்ப்போம்" வெளியீட்டு விழாவில் தேசியத் தலைவர் கலந்துகொண்டு சிறப்பிப்பு!
'போரிடும் வல்லமை சேர்ப்போம்" இறுவெட்டு வெளியீட்டு விழாவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட இவ் இறுவெட்டை வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு பற்றிய செய்தி நேற்றே இங்கு தரப்பட்டிருந்தது...இந்நிகழ்வு தொடர்பான படங்கள் சில....
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/ltte_medics_1_26533_435.jpg' border='0' alt='user posted image'>
LTTE leader Mr. V. Pirapaharan lighting the ceremonial lamp at the 'Empowering the struggle'
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/ltte_medics_2_26537_435.jpg' border='0' alt='user posted image'>
LTTE leader Mr. V. Pirapaharan lighting the flame of sacrifice at the 'Empowering the struggle'
LTTE leader Mr. V. Pirapahran receiving the first copy of the Audio CD 'Empowering the struggle' from Dr. Ajanthan...for one more image ...click here
tamilnet.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மாவீரர் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவு வைபவம் அம்பாறை மாவட்ட அரசியல் செயலகத்தில் நடைபெற்றது
அம்பாறை மாவட்ட அரசியல் செயலகத்தினால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவு வழங்கும் வைபவம் அண்மையில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக விடுதலைப் புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், தலைமைப் செயலகப் பொறுப்பாளர் மாசல், மாவீரர் நலன்காப்புப் பொறுப்பாளர் ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசியத் தலைவர் நிதியத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள மாவீரர் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவுக் தொகையாக ஒவ்வொரு மாவீரர் குடும்பங்களுக்கும் ரூபா 6000 வீதம் வழங்கப்பட்டு வருவதாக அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்தார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிறிலங்காவின் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் கைது....!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சராகவுள்ள ரி.பி.எக்கநாயக்க, கொள்ளுப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட விபச்சார விடுதியொன்றை நடாத்தியதற்கான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திரிகா தலைமையிலான முன்னைய மக்கள் கூட்டணிக் கட்சியிலும் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய எக்கநாயக்க, இதுபோன்ற பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என்று புகார் எழுந்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விபச்சாரிகள் உட்பட பல உயர்மட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், இவ்விடுதி பல தடவை பொலிசாரின் முற்றுகைக்கு உள்ளானபோதும், உயர்மட்ட அரசியல் ஊடுருவல் காரணமாக, இவ்விடுதியின்மீது நடவடிக்கை எடுக்கமுடியாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதினம்.com & sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மட்டு. மாவட்டத்தில் மோதல்கள் இல்லை...! சிறிலங்கா அரச ஊடகங்களே குழப்புகின்றன: மட்டு. அம்பாறை அரசியல்துறை கண்டனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக அரச ஊடகங்கள் தெரிவித்து வரும் பொயப்; பிரசாரங்கள் தொடர்பாக விடுதலைப்புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஊடகப் பிரசாரங்கள் சமாதான முன்னெடுப்புக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டு. அம்பாறை அரசியல்துறையினரால் நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் வருமாறு:-
சிறிலங்கா அரச ஊடகங்களிலும், தனியார் ஊடகங்களிலும் அண்மைக் காலமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் திட்டமிட்ட hPதியில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் கடந்த சில நாட்களாக தொப்பிக்கல காட்டுப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் இடையே பெரும் மோதல்கள் நடந்து வருவதாகவும், 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இப் பகுதியில் இவ்வகையான எந்தவொரு மோதலோ அல்லது ஆள் இழப்புக்களோ ஏற்படவில்லையென்பதே உண்மையானதாகும். இந்நிலையில் அரச ஊடகங்களில் திட்டமிட்ட hPதியில் பரப்பப்பட்டு வரும் இவ்வகையான செய்திகளையிட்டு நாங்கள் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறான செய்தியின் உண்மைத் தன்மை பற்றித் தெளிவாக அறிந்து ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
இத்தகைய போலிச் செய்திகளை உண்மையானவையென நம்ப வைப்பதற்கான முயற்சிகளும் சிறிலங்கா படைத்தரப்பினால் முடக்கிவிடப்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பிரதேச எல்லைப் புறங்களிலுள்ள இராணுவ முகாம்களிலிருந்து தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. பயிற்சி என்ற hPதியில் இராணுவத்தால் நடத்தப்படும் இந்த எறிகணை வீச்சுக்கள் அங்கே ஒரு மோதல் இடம்பெறுகிறது என்ற மாயத் தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.
மேலும் சிறிலங்கா அரச ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மோதலின் போது உயிர் இழந்தவர்களின் 17க்கும் மேற்பட்ட சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்துள்ளதா? என்ற வினாவும் இங்கே எழுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதில் நம்பிக்கை வைத்துள்ளதுடன், இதற்கு எவ்வித குந்தகமும், பாதகமும் ஏற்படாத வகையில் புரிந்துணர்வுடன் நடந்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இடம்பெறும் சம்பவங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை வலிந்து யுத்தத்திற்கு இழுக்கின்ற சீண்டல் நடவடிக்கைகளாகவே கருத முடிகிறது.
இவ்வகையான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் சமாதான முன்னெடுப்புக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச் செய்தியினைப் பரப்பும் ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஒரு மூன்றாம் தரப்பாகச் செயற்பட்டு சமாதான நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்துவதாக நாம் கருத வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இருவர், பல்கலைக்கழக வளாகத்துக்குள் துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி, குறிப்பிட்ட இருவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் அங்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த விரிவுரையாளர்கள் இருவரும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனை நேரில் கண்ட சாட்சிகள் நிரூபித்துள்ளதாகவும் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரங்கள், இவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இவ்விரண்டு விரிவுரையாளர்களும் நீண்ட நாட்களாகவே இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து நிர்வாகம் கவலையீனமாக இருந்து வருவது வேதனையானது எனவும் அத்துண்டுப்பிரசுரம் தெரிவித்துள்ளது.
இந்த விரிவுரையாளர்களுள் ஒருவர், சில வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழில் முகாம்களை பலப்படுத்தும் படையினர்!
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படை முகாம்கள் படையினரால் பலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படை முகாம்கள் மற்றும் காவலரண்கள் இரவிலேயே படையினரால் பலப்படுத்தப்படுவதாக அச்செய்திகள் மேலும் கூறுகின்றன.
முன்னர் நகரையண்டிய முகாம் பகுதியிலேயே படையினர் அதிகம் நிலை கொண்டிருந்ததாகவும், தற்போது குடாநாட்டின் எல்லா பகுதிகளிலும் படையினர் அதிகம் நடமாடுவதை அவதானிக்க முடிவதாகவும் யாழிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து நான்கைந்து நாட்களாக இடம்பெறும்;;; இந்நடமாட்டமானது, இன்று நடைபெறவிருக்கும் கண்டன ஊர்வலத்தினை ஒழுங்கு செய்பவர்களை இனம் காண்பதற்காகவும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இடம்பெறுவதாக அமையலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ் குடாநாட்டின் வல்வெட்டித்துறை பகுதியில் தரையிறங்கு கலம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் இத்தகைய கலமெதுவும் இப்பகுதியில் காணப்பட்டிருக்கவில்லை எனவும், இத்தரையிறங்கு கலம் மக்களை பெரிதும் சந்தேகத்துககும் அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் - புலிகள் கலந்துரையாடல்
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்குமான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை முற்பகல் தமிழீழ விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடியாறு மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் மணிவாசகத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்.அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் யோகா, அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் மற்றும் காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அரசுக்கு காய்ச்சல் 113 என்கிறார் ஜி.எல்.பீரிஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் காய்ச்சல் 113 எனப்படும் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தேவைப்படும் ஆகக்குறைந்த பெரும்பான்மையான 113 ஆசனங்களைக் கொண்டிராத நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும் அவதிப்படுவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயமுறுத்தல், தாக்குதல்கள், இரகசிய பேரம் பேசல்கள் முதலான வழிமுறைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்க அரசாங்கம் முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே, சமதான முயற்சிகள், பொருளாதார அபிவிருத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் முதலான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் 113 நாடாளுமன்ற உறப்பினர்களைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விரக்தியின் விளிம்பில் வெற்று வேட்டுப் பிரசாரங்கள்
பதிவு செய்தவர் Mohan காலம் June 21, 2004 11:08 AM
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் கிழக்கு நிலைமைகள் தொடர்பாக - தென்தமிழீழக் களநிலைவரங்கள் சம்பந்தமாக - நிலைமையைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். கருணா அணியினரின் பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர் என சிங்கள ஊடகங்களினால் அறிவிக்கப்பட்ட தளபதி ரமேஷ், உயிருடன் வந்து அளித்த செவ்வியும் தெரிவித்த தகவல்களும் தவறான பிரசாரங்களுக்கு இதுவரை கருவியான தென்பகுதி ஊடகவியலாளர்களின் கண்களைத் திறந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தொப்பிகல காட்டுப் பகுதியில் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நிகழாத நிலையில் - ஒன்றுமில்லாததை - தெற்கு ஊடகங்கள் அவ்வளவு பெரிதாக ஊதிப்பெருப்பித்தது ஏன்? தளபதி ரமேஷ் பலியானார்!, பொட்டு அம்மான் உயிரிழந்தார்!, கிழக்கு யுத்தத்தில் 85 புலிகள் சாவு!, கிழக்கில் கணிசமான பகுதி கருணா குழு வசம் வீழ்ந்தது! என்றெல்லாம் அடிப்படை ஒன்றுமில்லாமல் பரபரப்பான செய்திகளை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வெளியிடக் காரணம் என்ன?
பல தரப்பிலும் இப்போது எழுப்பப்படும் வினாக்கள் இவைதான். இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறையின் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள விரக்தியின் உச்ச வெளிப்பாடே இதுவன்றி வேறில்லை. தளபதி ரமேஷ் கரடியனாறு தேனகம் விடுதியில் கடந்த சனியன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டியது போன்று, போர் நடைபெற்ற காலத்தில் அரச ஊடகங்கள் உட்பட தெற்கு ஊடகங்கள் எவ்வாறு பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் உண்மை போன்று பரப்பினவோ அது போன்ற நிலைமைதான் இப்போது அரங்கேறியிருக்கிறது.
யுத்த காலத்தில் பொய்ப்பிரசாரத்தையும், புரட்டுப்பரப்புகளையும் கூட, ஆயுதங்களாகப் பயன்படுத்திய அரசுத் தரப்பு, இந்தச் சமாதான காலத்திலும் அதையே நாடியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நேர்ந்த தனிமனித பிறழ்வு, கருணா விடயம், தலைவருக்கு அடுத்த மட்டத்தில் - உயர் நிலையில் - உயர் தரத்தில் - பேணப்பட்ட ஒரு தளபதி கேவலமாகிப் போனமை தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிர்ஷ்டமே. ஒரு கசப்பான நிகழ்வும் கூட. அந்தத் தனி மனிதனின் அற்பத்தனத்தை - துரோகப்போக்கை - தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த சிங்கள இராணுவமும் அதன் புலனாய்வுப் பிரிவும் அம்முயற்சிகளில் தோற்று, இன்று அவ்விடயத்தில் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதன் வெளிப்பாடே பொய்ப்பிரசாரத்தின் உச்சக்கட்டம்.
தன்னுடைய 41 நாள் அட்டகாசத்துக்குத் தாம் பயன்படுத்திய முக்கிய தளபதிகளில் ஒரு குழுவினரை, மட்டக்களப்பு-அம்பாறையை விட்டுக் கொழும்புக்குத் தாம் தப்பி ஓடியபோது கூட்டிக்கொண்டுசென்றார் கருணா. ஆனால், அதில் ஒரு குழுவினர் எப்படியோ கருணா தரப்பின் பிடியிலிருந்து நழுவி புலிகளின் தலைமையிடம் சரணடைந்து விட்டனர். கருணாவுடன் எஞ்சியிருந்த முக்கிய மகளிர் அணியின் உறுப்பினர்களும் இப்போது கருணாவுக்கும் இராணுவத் தரப்புக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு புலிகளின் தலைமையிடம் வந்து சேர்ந்துவிட்டனர். கருணாவின் காலத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மகளிர் விசேட தளபதியாகவிருந்த நிலாவினி, தளபதியாகவிருந்த தீந்தமிழ், துணைத் தளபதியாகவிருந்த லாவண்யா, மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பிரேமினி ஆகியோரே புலிகளின் தலைமையிடம் வந்து சேர்ந்திருக்கின்றனர். இவர்களும் கருணாவைக் கைவிட்ட நிலையில் இன்று கருணா குழு கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான்! கருணாவும் அவரது ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்பாளர் வரதனும்தான் இன்று இராணுவத்தினர் வசம் எஞ்சியிருக்கின் றனர்.
அதுமட்டுமல்ல, கருணாவுடன் இதுவரை - கடைசி நேரம் வரை - இருந்த முக்கிய புள்ளிகள் பலர் புலிகளின் தலைமையிடம் வந்துவிட்டதால் கருணாவைப் பயன்படுத்தி இராணுவத்தரப்பு புரிந்த திருகுதாளங்கள் எல்லாம் புலிகளின் தலைமைக்கு அப்பட்டமாகத் தெரிய வந்துவிட்டன. சம்பந்தப்பட்ட பெண் முக்கியஸ்தர்கள் இதுவரை நடந்த சம்பவங்களையெல்லாம் விரைவில் செய்தியாளர்களுக்கு எடுத்துரைப்பார்கள் என்று தளபதி ரமேஷ் வேறு அறிவித்திருக்கின்றார்.
அதாவது, கருணா குழுவின் பெயரைப் பயன்படுத்தி இராணுவத் தரப்பு மேற்கொண்ட இசகுபிசகு நடவடிக்கைகள் எல்லாம் விரைவில் புட்டுப்புட்டு வைக்கப்படவுள்ளன, அம்பலமாகவுள்ளன. இதனால், தமது எத்தனங்கள் - முயற்சிகள் - எல்லாம் தோற்றுப்போய் - உண்மை அம்பலமாகப் போகிறது என்ற விரக்தியின் எல்லையில் நிற்கும் இராணுவத் தரப்பு, வேறு வழியின்றி அவிழ்த்துவிடும் வெற்று வேட்டுப் பிரசாரங்களே இப்போது தென்னிலங்கை ஊடகங்களை ஒன்றுமில்லாமல் கலகலக்க வைத்திருக்கின்றன.
நன்றி: உதயன் and yarl.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2002/11/sub-committee_batti_3_201102.jpg' border='0' alt='user posted image'>
image from tamilnet photo library
கருணா சிறிலங்கா இராணுவத்துடன் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்: புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி பி.பி.சி.க்கு தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுக்கு சிறிலங்கா இராணுவம் அடைக்கலம் கொடுத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாவுடனிருந்து தற்போது விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் படையணித் தளபதியாகவிருந்த நிலாவினி லண்டன் பி.பி.சி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். கருணா இராணுவத்துடன் தான் இருக்கிறார். இதனை சிறிலங்கா இராணுவம் மறுக்க முடியாது. ஏனெனில் நாங்களும் அங்கிருந்து தான் வந்திருக்கிறோம். இதனை நாங்கள் உறுதிப்படுத்துவோம். எனவும் நிலாவினி பி.பி.சி.செய்தியாளர் கேட்ட போது குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது,
கருணாவின் செயற்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை, எங்களை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் பலமுறை வற்புறுத்திய போது எங்களை விடாது வைத்திருந்தார்.
நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். கடுமையான அழுத்தத்தின் மத்தியில் எங்களுக்கு பிடிக்காததால் தப்பி வந்தோம். நாங்கள் வரும் வரை இராணுவப் பாதுகாப்புடன் தான் கருணாவும் இருந்தார். அவரோடு போன நாங்களும் அங்குதான் இருந்தோம். அவர் வேறு இடத்திற்கு பிரிந்து சென்றவுடன் நாங்கள் அங்கிருந்து வந்து விட்டோம் எனவும் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுடன் தப்பி ஓடிய முன்னாள் மகளிர் பிரிவுத் தளபதியான நிலாவினி மற்றும் தீந்தமிழ், லாவண்யா, முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் பிறேமினி ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கருணா நுகேகொட வீட்டில் படைப்புலனாய்வு பிரிவின் பாதுகாப்பிலிருந்ததாக நிலாவினி பகிரங்கமாக தெரிவிப்பு!
தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட கருணா கொழும்பில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டதையடுத்து கொழும்புக்கு கருணாவுடன் தப்பிச் சென்றவர்களில் முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் படையணித் தளபதி நிலாவினி மற்றும் தீந்தமிழ், லாவண்யா, பிறேமினி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளார்கள்.
கருணாவின் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறிச் சென்ற விபரங்கள் தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் தளபதி ரமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இம்மாநாட்டில் நிலாவினி மற்றும் மூவரும் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நிலாவினி பதிலளிக்கும் போது தெரிவித்ததாவது:-
கருணாவுடன் கொழும்பில் நுகேகொட எனுமிடத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில் ஒரு வீட்டில் இருந்து வந்தோம். எங்களுடன் கருணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர்.
அடிக்கடி டக்ளஸ் தேவானந்தா நுகேகொட வீட்டுக்கு வந்து கருணாவை சந்தித்து போவார். அத்துடன் அவர்களுடன் தொலைபேசி தொடர்புகளும் இருந்து வந்தது. அவர்களது நடவடிக்கை செயற்பாடுகள் மூலம் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் திட்டம் காணக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்த நிலாவினி மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு தப்பிச் செல்ல நேர்ந்த போது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கியத் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் வாகனம் மூலமே தப்பிச் சென்றோம். நாங்கள் நான்கு பேரும் பதினேழு ஆண்களுமாக மயிலவட்டவான் ஊடாக புலிபாஞ்சகல் பாலம் வரைச் சென்றோம். அங்கு கருணா அலிசாஹிர் மௌலானாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருமாறு சொன்னார்.
பின்னர் அலிசாஹிர் மௌலானாவும் ஒரு சிறிலங்கா பொலிஸ்காரரும் வந்து எங்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்றனர்.
கொழும்பு சென்ற நாங்கள் ஏப்ரல் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஹில்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டோம்.
பின்பு நுகேகொட எனுமிடத்தில் ஒரு வீட்டில் இராணுவப் புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டோம்.
ஒருநாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு என்னை இணையுமாறு கேட்டிருந்தார். ஆனால் கூடிய பாதுகாப்புப் போடப்பட்டிருந்ததால் தப்பிவர முடியவில்லை. பின்னர் எனது கையடக்கத் தொலைபேசியும் பறிக்கப்பட்டது.
எங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிய போது உங்களை இந்தியா அல்லது வேறு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கருணா கூறியதாக தெரிவித்த நிலாவினி கருணா மூன்று மாதம் வெளிநாடு ஒன்றுக்கு சென்று தங்கியிருந்து விட்டு பின் வருவதாகவும் குறிப்பிடிருந்தார் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் கருணாவின் போக்கு எங்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. நாம் தனிமைப்படுத்தப்பட்டு எங்களை விட்டு செல்லும் ஏற்பாடு போலவே தோன்றியது.
கருணா எங்களை விட்டு விலகிய சந்தர்ப்பத்தை பார்த்து எனது அத்தான் முறையிலான உறவினர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி பின்னர் குருநாகல் வரைக்கும் வந்தோம். அங்கிருந்து செங்கலடிக்கு வந்து விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி இங்கு வந்துள்ளோம்.
எனத் தெரிவித்த நிலாவினி கருணா என்ற தனி மனிதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்ததை இப்போது உணர்ந்து கொண்டோம் என்றார்.
---------------------------------------
மட்டு படுகொலைகளுக்கும் கருணாவுக்கும் தொடர்பு இருந்தது: சரணடைந்த நிலாவினி தெரிவிப்பு!
மட்டக்களப்பில் இடமபெற்ற தமிழ் படுகொலைக்கும் கருணாவுக்கும் தொடர்புகள் இருந்ததாக விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நிலாவினி மேலும் தெரிக்கையில், மட்டக்களப்பில் படுகொலைகள் இடம் பெற்ற பின்பு கருணாவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வரும் அந்த தொலைபேசி அழைப்புக்களில் கொலை செய்யப்பட்டவர் கொலை செய்யப்பட்ட முறை தொடர்பாக கொலையாளிகள் கருணாவுக்கு தெரிவிப்பார்கள். கருணா அதனைக் கேட்டு குதூகலிப்பார் எனவும் நிலாவினி குறிப்பிட்டார்.
படங்கள்: மட்டக்களப்பு ஈழநாதம் & puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|