Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
மீண்டும் பழைய பல்லவியா?


Friday, 30 April 2004

பிரதி பாதுகாப்பமைச்சராக அனுருத்த ரத்வத்தையை சனாதிபதி நியமிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அனுருத்த ரத்வத்தை இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. அவர் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றோ அல்லது தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவோ இல்லை பதிலாக தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படலாம் என்ற தகவல்களே தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தையே சனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசின் கடும் இராணுவப் போக்குக்குக் காரணமாக சூத்திரதாரர்களுள் முக்கியவரான ரத்வத்தையின் பெயர் தற்போது பேசப்படுவது சந்திரிகாவின் புதிய அணுகு முறை தொடர்பாக சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது.

அதிலும் அனுருத்த ரத்வத்தை தற்போதும் சந்தேகத்திற்கிடமான குற்றவாளியாகக் காணப்படுகிறார். அத்தகைய ஒரு நபர் நாட்டின் பாதுகாப்புக்கு நியமிக்கப்படலாம் என்பது இலங்கையின் அரசியல் நேர்மை கேலிக்குரிய ஒன்றாக மாறி வருவதையே காட்டுகிறது.

இதேவேளை ரத்வத்தையை சனாதிபதி சந்திரிகா மீண்டும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக கொண்டு வர முயற்சிப்பது என்பது அவரின் புதிய அரசு வரலாற்றில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறந்து போனதையே காட்டுகிறது.

இதே வேளை இவரை சனாதிபதி சந்திரிகா பிரதிபாதுகாப்பு அமைச்சராகக் கொண்டுவருவதற்கு பண்டார நாயக்க குடும்பப் பின்னணி என்ற ஒரு காரணத்தை விட வேறு எந்தக்காரணங்களும் இருக்கப்போவதில்லை.

அவ்வாறாயின் நாட்டு மக்களின் விருப்புவெறுப்புகளுக்கும் அப்பால் தன்னுடைய பண்டார நாயக்க குடும்பத்தின் நெருங்கிய உறவு நிலை சார்ந்தவர்கள் மாத்திரமே கட்சிக்குள்ளும் தனது கட்சி அலங்கரிக்கும் அரசுக்குள்ளும் பதவி நிலைகளை வகிக்கலாம் என்ற எழுதப்படாத விதி ஒன்றை உண்மையாக்க முயற்சிப்பது போலத்தெரிகிறது.

இதே நிலையில் சனாதிபதி சந்திரிகாவுக்கும் அவர் கூட்டு ஏற்படுத்திய ஜே.வி.பிக்கும் இடையிலான முறுகல் நிலையே இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. அந்த நிலையிலும் ரத்வத்தையை பிரதிபாதுகாப்பு அமைச்சராகக் கொண்டுவர முற்படுவதானது எந்தபிரச்சினைகளுக்கும் மத்தியிலும் சனாதிபதி சந்திரிகா ஒரு குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரத்வத்தையை உயர் பதவி நிலைக்கூடாக பாதுகாக்க முற்படுவது போலவுள்ளது.

ஜக்கிய தேசிய முன்னணி அரசின் காலத்தில் உடத்தலவின் படுகொலைக்காக ஜக்கிய தேசிய முன்னணி அரசினால் நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்குமென இழுத்தடிக்கப்பட்டதை நிச்சயம் மறந்துவிடமாட்டார்.

அந்த வகையில் ரத்வத்தைக்கு வழங்கப்படும் பிரதிபாதுகாப்பு அமைச்சு என்ற அதிகாரத்தின் மூலம் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பாதை திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் இனி ஜக்கிய தேசிய முன்னணி அரசின் உயர் தலைகள் பல பல்வேறு காரணங்களின் பேரில் தண்டிக்கப்படவோ அல்லது நெருக்கடிகளை எதிர்கொள்ளவோ வேண்டிவரும் என்பது மட்டும் நிச்சயம்.

ஆகவே ஒரு வேளை ரத்வத்தை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக சனாதிபதி சந்திரிகாவால் நியமிக்கப்பட்டால் நாட்டில் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்போகிறது என்பதைத் துணிந்து கூறலாம்.

நக்கீரர் ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

<span style='color:red'>கந்தப்பளை நகரம் பொலிஸ் கட்டுப்பாட்டில் தோட்டங்களில்
வேலைநிறுத்தம் தொடர்கிறதுசேதவிபரங்களைத்திரட்ட பணிப்பு;
பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் உறுதி (நூரளை நிருபர் பி.எஸ்.மணியமும், கிருஷ்ணி கந்தசாமியும்)

கந்தப்பளை நகரில் புதன் இரவு இடம்பெற்ற வன்முறைகளையடுத்து ஏற்பட்ட பதற்றநிலை நேற்றும் நீடித்தது. நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நேற்று நண்பகல் நீக்கப்பட்ட போதும், கந்தப்பளை நகரம் மற்றும் ஆவெலிய சந்திமுதல் ஹைபோரட்ஸ் தோட்டம் வரையான பிரதேசங்கள் பொலிஸாரினதும், இராணுவத்தினரினதும் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

நகரில் ரோந்து சென்ற பொலிஸாரைத்தவிர வேறு எவரினதும் நடமாட்டம் இருக்கவில்லை. இதேவேளை இப்பதற்ற நிலை மற்றும் போக்குவரத்து தடையினால் நுவரெலியா, இராகலை பகுதிகள் நேற்றும் களையிழந்திருந்தன. இப்பகுதிகளில் நேற்றும் பாடசாலைகள், அலுவலகங்கள் செயலிழந்திருந்தன.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்தும் இப்பகுதியிலிருந்து பொலிஸாரையும் இராணுவத்தினரையும் உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரியும் கந்தப்பளை நகரை சூழவுள்ள கந்தப்பளை பார்க்தோட்டம், நோனா தோட்டம், சந்திரகாந்தி, எதன்சைட், அகலவத்த, பூப்பளை, கோட்லாஜ், கொங்கோடியா, சமர்ஹில் ஆகிய தோட்டங்களைச்சேர்ந்ததொ ழிலாளர்கள் நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரும் படையினரும் இப்பகுதியில் பாதுகாப்பு என்றபோர்வையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினமிரவு தமது தற்பாதுகாப்பிற்காக தோட்டப்புறங்களில் காவல் கடமையிலிருந்த தோட்ட இளைஞர்களை பொலிஸார் தாக்கியதுடன் அவர்களை விடியும் வரை முழங்காலில் இருக்க வைத்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை நேற்று முன்தினம் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தவேளை 3 கடைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொலிஸார் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு சாதகமாக செயற்பட்டுள்ளதாக இப்பகுதி தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

நட்டஈடு

புதனன்று இரவு இடம்பெற்ற வன்முறைகளின் போது பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தால் கொல்லப்பட்ட நோனா தோட்டத்தைச்சேர்ந்த ஜெயராம், பார்க்தோட்டத்தைச்சேர்ந்த விமல் ஆகியோரின் மரணச்சடங்கிற்கென அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தலா 10 ஆயிரம் ரூபா பணத்தை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சி.பி.ரட்ணயக்கா நேற்று உறவினர்களிடம் கையளித்தார். மேலும் இவர்களின் குடும்பத்திற்கு நட்டஈடாக தலா ஒரு இலட்சம் ரூபா தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மூலம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு

வன்முறையில் கொல்லப்பட்ட இருவரினதும் சடலங்கள் நேற்றுமாலை உறவினரிடம் கையளிக்கப்பட்டன. இதன்போது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் நூரளைநகரம் முதல் கந்தப்பளை வரை பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சேத விபரங்கள் திரட்டல்

கந்தப்பளை நகரில் 30 இற்கும் மேற்பட்ட வர்த்தகநிலையங்கள் அடித்து உடைத்தும், எரித்தும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதன் சேத விபரங்களை உடனடியாக திரட்டும்படி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்போம்

கந்தப்பளை சம்பவத்தில் பொலிஸார் கடமைகளை சரிவரசெய்யாது பக்கச்சார்பாக நடந்துகொண்டிருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். ஆனால் இதுவரை எமக்கு பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எவ்விதமான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான விசாரணைக்குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என பொலிஸ் மா அதிபர் இந்திரா டி சில்வா தெரிவித்தார்.

மோதல் இடம்பெற்ற இடத்தை பொலிஸார் வந்தடைவதற்கு காலதாமதம் ஏற்பட்டது உண்மையே. கந்தப்பளை நகரம் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு 6 மைல் தூரத்திலும் வலப்பனைக்கு 11 மைல் தூரத்திலும் உள்ளது.

எனவே பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேதங்களும் அதிகரித்துள்ளன.சேதங்களை விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்வதற்கு நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன். விசாரணையின் பின்பு இந்த கைதுகள் இடம்பெறும். தற்போது கந்தப்பளை நகரில் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது.

இன்னும் இரு தினங்களுக்கு பொலிஸ் ஊரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என்றார்.



பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கதிர்காமர்
இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் பேச்சு (நமது நிருபர்)

இலங்கையின் சமாதான முயற்சிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமது இந்திய விஜயத்தின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரேஜிஸ் மிஸ்ராவையும் சந்தித்து பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து நீண்டநேரம் ஆராய்ந்துள்ளார். மேலும் இருதரப்பு நலன்கள் தொடர்பாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த்சின் ஹாவுடன் பல சுற்றுப்பேச்சுக்களை நடத்தியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, சக்திவள போக்குவரத்துதுறை என்பனவற்றின் அபிவிருத்தி தொடர்பாக மீண்டும் விரைவில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்த இருநாடுகளின் அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருநாடுகளினதும் அமைச்சர்களது சந்திப்பு தொடர்பாக புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஏப்ரல் 28 ஆம் 29 ஆம் திகதிகளில் இந்திய விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவுடன் இருதரப்பு நலன்கள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக நீண்டநேரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் பேசினார்.இதையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு சபை ஆலோசகர் பிரேஜிஸ் மிஸ்ராவைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்தினார்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் இப்பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான நெருங்கிய இணக்கமான உறவுகளை மென்மேலும் தமது அரசாங்கம் பலப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் ஆவல் கொண்டிருப்பதாக வலியுறுத்திக்கூறினார்.

இலங்கையுடனான நல்லுறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமென இதில் இந்தியா தெரிவித்தது. பரஸ்பர நல்லுறவுகள் தொடர்பான பலதரப்பட்ட விவகாரங்களில்இலங்கையுடன் கூட்டாக அர்ப்பணிப்போடு இந்தியா செயலாற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரு அமைச்சர்கள் மீண்டும் கூடி பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, சக்திவளம், போக்குவரத்துத்துறை ஆகியவை தொடர்பாக இதில் மிக விரிவாக ஆராய்வதென்றும் இவர்கள் முடிவுகட்டியுள்ளனர்.இலங்கையின் சமீபத்திய அபிவிருத்திகள் தொடர்பாக இலங்கை அமைச்சர் இந்தியத் தரப்புக்கு தம்பாராட்டை தெரிவித்தார். இலங்கை சமாதான முன்னெடுப்புக்களை காலங்கடத்தாது மிக விரைவாக மேற்கொள்ளக்கூடுமென இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. அதேவேளை ஐக்கிய இலங்கை என்ற கட்டுக்கோப்புக்குள் ஜனநாயக ரீதியாகவும் தனிநபரின் உரிமைகளை மதிக்கும் விதத்திலும் இலங்கையின் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும் பேச்சுவார்த்தைகள் மூலமாக இதற்கு முடிவுகட்டப்படும் என இந்தியா எதிர்பார்க்கின்றது. முழுக்க முழுக்க உள்நாட்டு அரசியல் நடைமுறைகளைக் கொண்டே இதற்கு பரிகாரம் காணப்படவேண்டுமென்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது சமாதான பேச்சுவார்த்தை முயற்சிக்கு பாதிப்புகூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை (அ.நிக்ஸன்)

புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலில் இருக்கும் போதும் அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையிலும் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் விசாரிக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுவதும் ஏற்புடையது அல்ல என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு காணாமல் போனார்களோ அதேபோன்றதொரு நிலைமை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தமிழ் இளைஞர்கள் முன் அறிவித்தல் இன்றியும் காரணமின்றியும் கைது செய்யப்படுவது குறித்து கேட்டபோதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற் கண்டவாறு கூறினர். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு பிரதித்தலைவர் மாவை சேனாதிராஜா, பிரதம ஹொறடா அடைக்கலநாதன், கூட்டமைப்பின் இணைப்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்; ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே தமிழர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன. ஆங்காங்கே கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களுக்காக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை நியாயப்படுத்த முடியாது.

தற்போது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. அத்துடன் அவசரகாலச்சட்டமும் நடைமுறையில் இல்லை. இந் நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தமிழ் இளைஞர்களை எவ்வாறு கைது செய்ய முடியும். பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பாக ஜனாதிபதி இருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையிட்டு நாங்கள் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

புலிகளுடன் ஜூன் மாதமளவில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இந்தியாவில் அறிவித்திருக்கின்றார். அத்துடன் மத்தியஸ்தம் வகிக்க வருமாறு ஜனாதிபதி நோர்வே நாட்டிற்கு அழைப்பும் விடுத்துள்ளார். நோர்வேயின் விசேட தூதுவர்களும் கொழும்பிற்கும் வன்னிக்கும் விஜயம் செய்யவுள்ளனர். இந்நிலையில் தமிழ் இளைஞர்களை கொழும்பு நகரின் வீதிகளில் சுற்றிவளைத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் கைது செய்வதுடன் தடுத்து வைக்கின்றனர்.இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசாங்கத்திற்கு நாங்கள் எச்சரிக்கை செய்கின்றோம். ஆகவே சமாதானப் பேச்சுவார்த்தை உரிய முறையில் நடைபெற வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஒழுங்கான முறையில் அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்




பிக்குமாரை அவமதித்த அமைச்சர்களுக்கு எதிராக
நம்பிக்கையில்லா தீர்மானம்பேரõசிரியர் ஜி.எல்.பீரிஸ்
(ரொபட் அன்டனி)

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குமார்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்ட அமைச்சர்களுக்கு எதிராக பாராளுமன்ற ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளோம் என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகருக்கும் அறிவித்துள்ளதாக பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சி அலுவலகத்தில் கடந்த வியாழன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு தமது கருத்தை சுதந்திரமாக வெளியிட முடியும். அதற்கு எந்தவித தடைகளும் இருக்கக்கூடாது.

அவ்வாறு தடைகளை ஏற்படுத்தினால் அது பாராளுமன்ற வரப்பிரசாதங்களை மீறும் செயலாகும். இது தொடர்பாக நாம் சபாநாயகருடன் பேசியுள்ளோம். கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவின்போது பிக்குமார் பலவாறாக அவமதிக்கப்பட்டனர். அவர்களை மனவேதனைக்குட்படுத்தினர்.பிக்குமாருக்கு சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கவில்லை.அண்மையில் அரச தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர் சபாநாயகரின் உத்தி÷யாக பூர்வ வாசஸ்தலத்தை சுற்றிவளைத்து சபாநாயகரை இராஜினாமா செய்ய கோருவோம் என்றும் கூறினார்.

இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகத்தை வலியுறுத்துகின்ற கட்சியாகும். எனவே இது தொடர்பாக நாம் மௌனமாக இருக்கமாட்டோம்.

அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்துக்கும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கத்துக்கும் இது தொடர்பாக தெரியப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.இங்கு முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா கருத்து தெரிவிக்கையில்:

மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை வெளியிட சுதந்திரம் வேண்டும்.பாராளுமன்றத்தினுள் நடைபெறுவதை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்துக்கு வெளியே அவமதிக்கக்கூடாது.ஊடகங்கள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறும் செயலாகும். இது தொடர்பாக நாம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பவுள்ளோம் என்றார்.இங்கு முன்னாள் உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில்: பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சிக்கே இருக்கின்றது.

எதிர்க்கட்சியினரை அடக்கும் முறைகளை ஆளும் கட்சியினர் கையாளுகின்றனர்.

இது பாராளுமன்ற நடைமுறைக்கு விரோதமானது. இதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.





நோர்வே குழு புலிகளுடன் பேசிய பின்னர் பேச்சுக்கான
திகதி குறிக்கப்படும்அரசாங்கம் நம்பிக்கை (எஸ்.என்.ஆர்.பிள்ளை)

இலங்கை வரும் நோர்வே பிரதி வெளிவிகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் தலைமையிலான குழு வன்னி சென்று புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அரசுபுலிகளுக்கிடையிலான சமாதான பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஜனாதிபதி மிக விரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை நடத்த அக்கறை கொண்டுள்ளார். விதார் ஹெல்கிசன் நாளை ஜனாதிபதியை சந்திக்கும் போது ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை விபரிப்பார் என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே நோர்வே குழு மூன்றாம் திகதி திங்கட்கிழமை வன்னி சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழச் செல்வனை சந்தித்து பேச்சுவார்த்தைக்கான அடிப்படை குறித்து பேச்சு நடத்தும்.

வன்னியில் புலிகள் இயக்கத்துடன் நடத்தப்பட்ட விபரங்களும் அன்றைய தினமே ஜனாதிபதிக்கு விபரிக்கப்படும் என தெரிகிறது.

இலங்கை வரும் விதார் ஹெல்கிசன் திங்கள் இரவு நாடு திரும்புவார். அவரது குழுவில் இடம்பெறும் நோர்வே நாட்டின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் 5ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து அரசியற் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் தெரிவித்தது. ஆனால் சந்திப்பிற்கான அட்டவணை இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.






தொழிலாளர் வர்க்கத்துக்கு நிவாரணம் வழங்கி நாட்டை கட்டியெழுப்ப
திடசங்கற்பம் பூண்டுள்ளோம் மேதினச் செய்தியில் பிரதமர்
(நமது நிருபர்)

தொழிலாளர் வர்க்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த ஆண்டில் பாரிய பொருளாதார செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.

இதன்மூலம் இலங்கையில் சமூக பொருளாதார பின்னணியை மீண்டும் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கும் அதனூடாக தொழிலாளர் வர்க்கத்துக்கு நிவாரணம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மஹிந்தராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகவாழ் தொழிலாளர் மக்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் இன்றைய தினத்தை மிகச்சிறப்பாக தேசிய மே தினமாகக் கொண்டாடுவது நாட்டிற்கு தொழிலாளர் வர்க்கத்தினால் கிடைக்கப்பெறும் பணிகளை கௌரவிக்கும் பொருட்டேயாகும். இவ்வாறு கடந்த பொதுத் தேர்தலிலே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்த நாட்டின் தொழிலாளர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலிலே மக்கள் பாரிய மக்களாணையை பெற்றுத்தந்தபோதிலும் கூட நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் பிரகாரம், பாராளுமன்றத்திலே தெளிவான பிரதிநிதித்துவமொன்று இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். அதனால் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியும் தைரியமும் எமக்குத் தேவை.

""நாடு முன்னோக்கி'' எனும் தொனிப்பொருளின்கீழ் நாட்டின் சௌபாக்கியத்தைத் தேடிச்செல்லும் இப் பயணத்தில் மக்கள் நேயம் கொண்ட புதிய அரசாங்கத்திற்கு நாட்டின் ஊழிய வளத்திலிருந்து கிடைக்கும் பங்களிப்பு அளப்பரியவையாகும்.

புதிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்க உத்தேசித்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் சிறப்பாக அமையும் பொருட்டு எமது நாட்டின் உழைப்பாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்படுகின்றமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியானது முழுமையாக வெற்றிபெறுவது தொழிலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பிலேயே உள்ளது.

எமது நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு ஊழியத்தை வழங்கும் அனைவருக்கும் நாட்டின் எதிர்கால நலன்கருதி மிகவும் உச்சளவில் பணியாற்றுவதற்கு வலிமையும் உறுதியும் கிடைக்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.






கிரிக்கட் சபைத் தலைவர் இன்று அம்பாறை விஜயம்
காரைதீவு,

இலங்கை கிரிக்கட் சபைத் தலைவர் மொஹான் டி சில்வா இன்று சனிக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்கிறார்.

அவருடன் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் டுலீப் மென்டிஸ், கிரிக்கட் சபைச் செயலளார் லோறன்ஸ் ஆகியோரும் வருகிறார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமொன்றை அமைக்க கிரிக்கட் சபை முடிவு செய்துள்ளது. அதற்குப் பொருத்தமான மைதானத்தை குழுவினர் பார்வையிடுவார்கள்.

இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளரும் அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்ளேனத் தலைவருமான லோறன்ஸ் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அம்பாறை மொன்டி கோட்டலில் வைபவமொன்று நடைபெறவுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபராகவிருந்து ஓய்வு பெற்ற தலைவர் லோறன்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் பதிவுசெய்யப்பட்ட கிரிக்கட் கழகங்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனச் செயலாளர் சிதார்த்லியனகே மேற்படி சங்கங்களின் பிரதிநிதிகளை 10.00 மணிக்கு கூட்டமண்டபத்திற்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.




விடுதலை புலிகளின் மேதின நிகழ்வு மட்டு.களுதாவளை
விளையாட்டரங்கில் மட்டக்களப்பு, வாழைச்சேனை,
களுவாஞ்சிக்குடியிலிருந்து பேரணி ஆரம்பம்
மட்டக்களப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொழிற் சங்கங்கள் பொது நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் மே தின நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பி.ப. 4 மணிக்கு மட்டக்களப்பு களுதாவளை பொது விளையாட்டரங்கில் நடைபெறும்.

வாழைச்சேனை, மட்டக்களப்பு நகரம் களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலிருந்து மேதின பேரணிகள் ஆரம்பமாகும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தலைமையில் வாழைச்சேனை பேரணியும் , தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கம், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோர் தலைமையில் மட்டக்களப்பு நகரப் பேரணியும், பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை தலைமையில் களுவாஞ்சிக்குடி பேரணியும் இடம் பெறும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் பா. அரியநேத்திரன் தலைமையிலான பேரணி படுவான்கரை கொக்கட்டிச் சோலையிலிருந்து ஆரம்பமாகும்.மேதின பேரணிகளில் பொது நிறுவனங்களின் அலங்கார ஊர் திகளும் கலந்து கொள்ளும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், தமிழ் தேசியம், தாயகம் என்பவற்றையும் தொழிலாளர் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.மேதின பொதுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை தலைமையில் நடைபெறும். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் , தொழிற்சங்க பிரமுகர்கள் ஆகியோர் உரையாற்றுவார்கள்.




தமிழ் இளைஞர் கைது குறித்து பிரதமரிடம் ஆட்சேபனை தெரிவிப்பு (அ.நிக்ஸன்)

தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினரின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இவ்வாறான கைதுகள் இடம்பெறுவது தமிழ் மக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் தோற்றுவித்திருப்பதாக மாவைசேனாதிராஜா பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளார். சமாதானப் பேச்சை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை தமிழ் இளைஞர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜக்ஷ மாவை சேனாதிராஜாவுக்கு உறுதியளித்துள்ளார். அவ்வப்போது இடம்பெற்ற சில சம்பவங்களுக்கும் கவலை தெரிவித்துள்ளார்.







கருணா குழுவின் ஆயுத விற்பனையை முறியடிக்கவே
தெஹிவளையில் தேடுதல்தமிழ் மக்கள் அஞ்சத்தேவையில்லை
என்கிறார் பொலிஸ் மா அதிபர் (கிருஷ்ணி கந்தசாமி)

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அப்பாவி தமிழ் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. நாட்டின் பாதுகாப்புக் கருதியே பாதுகாப்புப் படையினர்இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் மா அதிபர் இந்திரா டி சில்வா நேற்று கேசரிக்குத் தெரிவித்தார்.இதேவேளை வியாழன் இரவு தெஹிவளை பொலிஸ் பிரிவில் பொலிஸ் சோதனை தடைகள் போடப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பாவித் தமிழ் மக்கள் பலர் கைதாகி விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இது குறித்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சேனநாயக்கவிடம் வினவியபோது அவர் கருணா அணியினருக்கும் பாதாள உலக கோஷ்டியினருக்குமிடையே ஆயுத விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த ஆயுத விற்பனையை முறியடிக்கும் முகமாக இந்த பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து அப்பாவி பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.இந்த விசாரணையை அடுத்து சகலரையும் விடுதலை செய்துவிட்டதாக குறிப்பிட்ட அவர் ஆயுத விற்பனை தொடர்பாக எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தேடுதல் நடவடிக்கை தொடரும் எனவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்: கருணா விவகாரம் தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. கருணா அணியினர் தொடர்ந்து ஆயுதங்களோடு நடமாடி பாதாள உலகக் கோஷ்டியினருக்கு ஆயுதங்களை விற்பனை செய்துவருகின்றனர். சட்டவிரோத கும்பல்களிடம் ஆயுதம் சிக்குவதன் காரணமாக நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை ஒடுக்குவதே தேடுதல் நடவடிக்கைகளின் பிரதான நோக்கமாகும். தெஹிவளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேகத்திற்கிடமான 14 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். குழந்தையை தனிமையில் விடமுடியாத காரணத்தினால் தம்முடன் அழைத்து வந்துள்ளார். விசாரணையின்பின்பு மேற்படி 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த மூன்று நாட்களாக இந்த பாரிய தேடுதல் நடவடிக்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

குருநாகலில் கருணாவின் சகா என நம்பப்படும் உறுப்பினர் ஒருவர் குண்டுவெடிப்பில் பலியானதையடுத்து கருணாவின் சகாக்களும் தமிழ் குழுக்களும் ஆயுதங்களோடு நடமாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.




மட்டக்களப்பில் புலிகளின் பகுதி நுழைவாயில்களூடாக
வாகனம் செல்ல படையினர் கட்டுப்பாடு

மட்டக்களப்பு,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச நுழைவாயில்களினூடாக இரவு 10 மணிக்கும், அதிகாலை 5 மணிக்குமிடையில் வாகனங்களில் போக்குவரத்து செய்வது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அண்மையில் ஆயித்தியமலை முள்ளாமுனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் ஏழுபேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக படையின் தெரிவித்தனர்.

செங்கலடி கறுத்தப்பாலம், கிரான்பாலம், மாங்கேணி, வலையிறவுப்பால இராணுவ சோதனை சாவடிகளூடாகவும், பட்டிருப்புபால விசேட அதிரடிப்படை முகாமினூடாகவும் மேற்கொள்ளப்படும் போக்குவரத்திற்கே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனையின் பின்செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதனையடுத்து 24 மணிநேரமும் திறந்திருந்த செங்கலடி பதுளை வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மண்முனை துறையினூடான படகுச்சேவையும் 8 மணியுடன் நிறுத்தப்படுகின்றபோதிலும் அம்பியுலன்ஸ் வண்டி சென்றுவர விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. மேதினக் கூட்டம் சேனநாயக்க மைதானத்தில்
(எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் பதுளையில் நடைபெறவுள்ளது. பதுளை சேனநாயக்க மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளார். பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு நகரசபை மைதானத்தில் நடை பெறவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஜே.வி.பி.யும் தனித்தனியாக மேதின ஊர்வலங்களை நடத்தவுள்ள போதிலும் கூட்டத்தை இணைத்து நடத்துகின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின ஊர்வலம் கொழும்பு கம்பல் மைதானத்திலிருந்தும், ஜே.வி.பி. யின் மேதின ஊர்வலம் பொரளை பி.ஆர்.சி மைதானத்திலிருந்தும் ஆரம்பமாகவுள்ளன
</span>

வீரகேசரி
Reply
போராளிகள் மீது தாக்குதல், பொதுமக்கள் ஆர்பாட்டம்

யாழ். புத்து}ர்ச் சந்தியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இருவர் மீது பொலிசார் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து, பொதுமக்கள் அங்கு திரண்டு ஆர்பாட்டம் செய்துள்ளனர்.

நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் புத்து}ர்ச் சந்திப் பகுதியால் வந்துகொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளான உதயகுமார், நிஷாந்தன் ஆகிய இரு போராளிகளையும் அங்கே காவல் கடமையிலிருந்த சிறிலங்கா பொலிசார் ஒருவர் வழிமறித்து அவர்களுடைய மோட்டார் சைக்கிளைப் புூட்டி திறப்பினை எடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பொலிசாருக்கும், போராளிகளுக்கும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலிருந்து துணைப் பொறுப்பதிகாரி துமிந்த ராஐபக்ஷ தலைமையில் வந்த பொலிஸ் குழுவினர் மேற்படி போராளிகளை கடுமையாகத் தாக்கியதுடன், அவர்களது மோட்டார் சைக்கிளையும் தங்களது இராணு ட்றக் வண்டியில் ஏற்றிச் சென்றனர்.

இதன் போது வீதியால் வந்துகொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பொலிசார் தாக்கியதுடன் அந்த வீதியால் வந்துகொண்டிருந்த ஐபிசி தமிழின் யாழ். செய்தியாளர் தவச்செல்வனையும் பொலிசார் தாக்கினர்.

இச்சம்பவத்தையடுத்து அச்சுவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன் குழுமி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொலிசார் மூவர் உதயகுமார், நிஷாந்தன் ஆகிய இரு போராளிகளிடமும், ஐபிசியின் செய்தியாளரிடமும் ஒன்றாக அவர்கள் வந்து மன்னிப்புக் கேட்டனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி புதினம்
Reply
பொண்டுகல்சேனையில் இடம்பெற்றது கிளைமோர்த் தாக்குதல் அல்ல, விபத்து!

ஜ கீர்த்திகா ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:24 ஈழம் ஸ

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொண்டுகல்சேனை எனும் இடத்தில் இடம்பெற்ற தற்செயல் வெடிவிபத்தில் nஐயந்தன் படையணியைச் சேர்ந்த போராளியான நேசராஐ; என்பவர் வீரச்சாவடைந்தார்.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

அவரது வித்துடல் போராளிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

முன்னர், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இந்தப் போராளி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது உத்தியோகபூர்வமாக கிடைக்பெற்ற செய்திகளின்படி இந்த சம்பவம் தற்செயலாக இடம்பெற்றதாக ஐபிசி தமிழ் வானொலியின் நிருபர் தெரிவித்துள்ளார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Another General Election this year?

Alladin Hussein in Colombo, May 1, 2004, 4.26 p.m.. Sri Lankas main Opposition United National Party, has intimated a possibility of yet another General Election end of this year. According to reports, the party is expecting another Parliamentary Election, in another six months time. The main reason for yet another poll has been attributed to the newly elected United Peoples Freedom Alliance, which is a minority government, and seven seats short of a working majority in Parliament.

The Government also failed to secure the most important post of Speaker, which was won by Opposition Candidate and former Minister W.J.M. Lokubandara, on the 22nd of last month. The election for the Speaker post was held at the inaugural sessions of the 13th Parliament.

Meanwhile the United National Party, which secured 82 seats at the April 2, General Election, has discussed ways and means of revamping their party. The partys weaknesses were deeply analysed at a recent party meeting. The Alliance government secured only 106 seats in the 225-member legislature.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்வதாக கதிர்காமர் தெரிவிப்பு

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 01 மே 2004, 6:32 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணந்து வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து லக்ஷ்மன் கதிர்காமர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்ந்து வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்;த்தைகள் எதிர்வரும் ஐ_ன் மாத முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்;.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுமே பேச்சுவார்;த்தை மேசையில் முக்கிய இரு தரப்பினராக பங்கேற்றிருந்ததாகவும், இனிவரும் பேச்சுவார்தைகளின் போதும், பேச்சுவார்த்;தை மேசையின் முக்கிய இரு தரப்பினராக விடுதலைப் புலிகளும், அரசாங்க தரப்புமே விளங்கவுள்ளதாகவும் அவர் இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விரைவில் இடம்பெறவுள்ள பேச்சுவாhத்தைகளின் போது வடக்கு, கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைளை உடனடியாக செயற்படுவது தொடர்பாகவே முதலில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்;ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கதிர்காமாரின் கூற்றுக்கு சிஹல உறுமய கண்டனம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:07 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என லக்ஷ்மன் கதிர்காமர் ஏற்றுக் கொண்டமை வெட்கம் கெட்ட செயல் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு காணும் விடயத்தில் சகல கட்சிகளுடனும் பேசியே தீர்வு காணப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியிருந்ததாக ஐhதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என தற்போது லக்ஷ்மன் கதிர்காமர் கூறியுள்ளமை வெட்கம் கெட்ட செயல் என திலக் கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை குறித்த யோசனைகளை நிராகரித்து வந்த லக்ஷ்மன் கதிர்காமர், திடிரென தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென கூறியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அரசுக்கான ஆதரவினைத் திரட்டுவதற்கான ஒரு தந்திரமெனவும் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முன்;னைய நிலைப்பாட்டிலிருந்து Nஐ.வி.பி.யும் மாறிவிட்டதோ எனத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ள திலக் கருணாரட்ன, விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற லக்ஷ்மன் கதிர்காமரின் இந்த கருத்து தொடர்பாக Nஐ.வி.பி தனது நிலைப்பாட்டினை மிகவிரைவில் வெளியி;ட வேண்டுமெனவும் தெரிவித்;துள்ளார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று புதிய அரசு அவர்களோடு பேசும்!
கொழும்புப் பத்திரிகைக்கு புதுடில்லியில் அளித்த விசேட செவ்வியில் அமைச்சர் கதிர்காமர் தகவல்

இலங்கையின் புதிய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத்தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்து, அவர்களுடன் பேச்சுக்களில் ஈடு படும். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தவேளை, கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலண்ட்| நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் வெளி விவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின்போது அமைச்சர் கதிர்காமர், தமது விசேட செய்தியாளர் எஸ்.வெங்கட்நாராயணனுக்கு புதுடில்லியில் வைத்து வழங்கிய செவ்வியில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார் என்று த ஐலண்ட்| தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது. முந்திய அரசு சமாதானப் பேச்சைத் தொடங்கியபோது, பேச்சு மேசையில் இரண்டு பிரதான தரப்புகளாக அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பங்குபற்றினர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பேச்சை எமது அரசு தொடர்ந்து நடத்தவுள்ளது. நாங்கள் பேச்சை மீளத் தொடங்கும்போதும், பேச்சில் அரசு - தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே பிரதான பங்காளிகளாக இருப்பர். அதாவது, எங்களுடைய அரசும் ஈழத் தமிழர்களின் ஏகப்பிரநிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும் - என்று செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் பதிலளித்ததாக அந்தச் செய்தியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை நிறுவுவது குறித்ததிட்டம் குறித்த செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் கதிர்காமர் பின்வருமாறு பதிலளித்தார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது:- அந்தத் திட்டம் பேச்சில் நிச்சயமாக இடம்பெறும். அதனை அரசு முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள் ஆனால் இதுவிடயத்தில் விடுதலைப்புலிகள் நடைமுறைச் சாத்தியமானதும், யதார்த்தாPதியானதுமான அணுகு முறையை அதிகளவில் கையாள்வார்கள் என்றே நான் பெரிதும் நம்புகிறேன்.

செய்தியாளர்: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனை அண்மையில் கிளிநொச்சியில் சந்தித்தவேளை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை மீளத் தொடங்கலாம் என்று விடாப்பிடியாக நிற்கமாட்டோம் - என என்னிடம் கூறினார்.

அமைச்சர் கதிர்காமர்: என்னுடைய நம்பிக்கையும் அதுவே ஆகும். பேச்சைத் தொடங்கும் வேளையிலே இவை குறித்து நாம் ஆராய வேண்டும் - என்றார்.
நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசஸனும், எரிக் ஹொல் ஹெய்மும் மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள். அவ்வேளை, பேச்சுக் குறித்த விவரங்கள் இறுதியாக்கப்படும். அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் - என்று செய்தியாளரிடம் அமைச்சர் கதிர்காமர் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது குறித்து பேச்சில் பிரதானகவனம் செலுத்தப்படும் - என்றும் அமைச்சர் ஏப்ரல் 29ஆம் திகதி வழங்கிய அந்தச் செவ்வியில் தெரிவித்தார் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கதிர்காமரின் கூற்று மேலோட்டமானதே தெளிவான நிலைப்பாடு தெரியவேண்டும்
புலிகள் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல்

சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் கடைசியாக ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் உற்சாகமளிக்கின்றன. என்றாலும், கதிர்காமர் இந்தக் கருத்துக்களை மேலோட்டமாக வெளியிட்டிருப்பதாகவே புலிகளின் தலைமை கருதுகின்றது. தெளிவானவகையில் - முறைப்படி - தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டால் புதிய அரசுடன் பேச்சுக்களைத் தொடங்குவது பற்றிப் புலிகள் சாதகமாகப் பரிசீலிப்பர். விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் நேற்றிரவு இத்தகவலை வெளியிட்டன.

ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை ஏற்று, அவர்களோடு அரசு பேச்சு நடத்தும் என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இந்தியாவில் இருந்தபோது வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாகக் கேட்ட போதே அந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவித்தன. புதிய அரசுடன் சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்க முன்னர் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விடுதலைப்புலிகள் விரும்புகின்றனர். அந்த விடயங்களை அவர்கள் ஏற்கனவே தெரியப்படுத்தியும் உள்ளனர். முன்னைய அரசுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட சமயம் ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே என்பதை அந்த அரசு ஏற்ற நிலையிலேயே சமாதான முயற்சிகள் இடம்பெற்றன. அந்த நிலைப் பாட்டை இந்த அரசும் ஏற்றுக்கொள் கிறதா? கடந்த அரசு போன்று சமாதானப் பேச்சுக்களில் அரசுடன் விடுதலைப் புலிகளை சமபங்காளிகளாக அங்கீகரித்து, கௌரவத்துடனும், மதிப்புடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தஅரசும் தயாரா? கடைசியாகப் பேச்சுக்களில் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையை முன்வைத்திருந்தனர். அதற்கு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையும் கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசு அதற்கு இணங்கவேண்டும் என்ற மக்களின் ஆணையை ஏற்றுச் செயற்பட இந்த அரசு தயாரா? இந்த மூன்று பிரதான விடயங்களிலும் புதிய அரசிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்று, அவற்றை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே புலிகளின் தலைமை அடுத்தகட்டநகர்வுக்குச் செல்லும் என்றும் தற்போது கதிர்காமர் இந்த விடயங்கள்பற்றி மேலோட்டமாகக் கருத்து வெளியிட்டிருப் பதாகவே புலிகள் கருதுகின்றனர் என்றும் -அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சர் கதிர்காமர் கடைசியாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தெற்கில் கடும்போக்கு சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து அவருக்கு எதிராகக் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கக்கூடும் என்றும் புலிகள் கருதுகின்றனர். சந்திரிகாவின் அரசு சமாதான முயற்சி தொடர்பாக எடுக்கும் இது போன்ற நிலைப்பாடுகளை அவரது பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொள் ளுமா என்பதும், அவற்றின் ஆதர வில் ஊசலாடும் நாடாளுமன்ற பலத்தைக்கொண்டுள்ள அரசினால் அதன் நிலைப்பாடுகளைச் சரிவர அனுசரிக்க இயலுமா என்பதும் ஐயத்துக்குரியது என்ற கருத்தும் புலிகள் வட்டாரங்களில் உள்ளது. இதேவேளை, இந்தத் தடவை சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான சகல விடயங்களையும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே நேரடியாகக்கை யாள்வார் என்றும் புலிகளின் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கதிர்காமரின் கூற்றைக் காரசாரமாக விமர்சிக்கின்றது த ஐலன்ட் நாளிதழ்

தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாகத் தமது அரசும் அங்கீகரித்து சமாதானப் பேச்சை மீளத்தொடங்கும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியதைக் கண்டித்து த ஐலண்ட் நாளிதழ் காரசாரமான ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை தெரிவித்து வந்த கொள்கைக்கு, கருத்துக்கு, அமைச்சர் கதிர்காமரின் கூற்று முற்றிலும் முரணானது என்றும் -
இதுகுறித்து இலங்கையர்கள் விரிவான விளக்கத்தைக் கோருகிறார்கள் என்றும் அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை அரசாக விளங்கும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசுக்குத் தேவைப்படும் 21 எம்.பிக்களைக் கொண்ட, விடுதலைப் புலிகளின் ஏஜெண்டுகளாக விளங்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காகவா இத்தகைய திடீர் மாற்றம் எனவும் அந்தத் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நெடுநாளைய கூட்டணியாக ஈ.பி.டி.பி. கட்சி விளங்குகிறது. அந்தக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் ஐக்கியமுன்னணி அரசின் சோதனையான காலங்களில் எல்லாம் தோள்கொடுத்து உதவியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, விடுதலைப் புலிகளுடன் உறவாடுவதால், டக்ளஸ் தேவானந்தா எப்போதும் அந்தஅரசிலிருந்து விலகியே தூரத்திலேயே - நின்றுள்ளார். அமைச்சர் கதிர்காமரின் தற்போதைய கூற்று அரசின் முந்திய நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானதாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபாநாயகர் தெரிவிலும், அரச வேட்பாளர் டியு குணசேகர தோல்வியுற்றமைக்கு, ஹெல உறுமய பௌத்தபிக்கு எம்.பிக்கள், தமிழர் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் சேர்ந்து வாக்களித்தது தேசத்துரோகமானது என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இப்போது எங்கே நிற்கிறது?
ஐக்கிய தேசிய முன்னணியின் இரண்டு வருடகால ஆட்சியின்போது சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் கைக்கொண்ட நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க நாட்டை விடுதலைப் புலிகளுக்கு அடகுவைத்து விட்டார் என்று கூறி, ஜனாதிபதி சந்திரிகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தது எதற்காக? இப்போது திடீரென அந்த நிலைப்பாடு மாறிவிட்டதா? விடுதலைப் புலிகளைச் சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் என்று சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டு அதனைத்தடை செய்வதற்கான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்வைத்த அமைச்சர் கதிர்காமரே இப்போது பல்டி அடிப்பது எதற்காக? என்றவாறு பல கேள்விகளை முன்வைத்து வரையப்பட்ட தென்னிலங்கையின் பேரினவாதிகளின் குரலாக - ஆசிரியர் தலையங்கம் அரசைவன்மையாகச் கண்டிக்கிறது.

உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கதிர்காமர்-கொலின் பவல் சந்திப்பு?
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ திங்கட்கிழமை, 03 மே 2004, 7:04 ஈழம் ஸ

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்க இராஐhங்க அமைச்சர் கொலின் பவலைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இச்சந்திப்பின் போது இருதரப்பு விடயங்கள் மற்றும் இலங்கையின் சமாதான முயற்சிகள் குறித்து அமெரிக்க இராஐhங்க அமைச்சருடன் லக்ஷ்மன் கதிர்காமர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, ஐனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான ஒழுக்கக் கோவையில் வருடம் ஒன்றுக்;கு அமைச்சர் ஒருவர் நான்கு வெளிநாட்டு விஜயங்களையே மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டு விஐயமாக இது அமையவுள்ளது.

அத்துடன், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான விஜயம் ஒன்றை முடித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reply
இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் அடிப்படையிலேயே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்
[ திருநந்தன், சங்கீத் ] [திங்கட்கிழமை, 03 மே 2004, 19:55 ஈழம் ]

கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையின் நிலைப்பாடு என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று, நோர்வே சிறப்புத் து}துவர் எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்ச்செல்வனை நோர்வே து}துக்குழுவினர் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று காலை 10.45 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் இலங்கைக்கான நோர்வே து}துவர் திரு ஹான்ஸ் பிறஸ்கர், விசேட து}துவர் திரு எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் லிசா கோல்டன் ஆகியோர் இடம்பெற்றனர்.

சமாதான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பது குறித்து, நோர்வே பிரதிநிதிகள், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இன்று சந்தித்து இரண்டு மணிநேர கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

நேற்று நோர்வே பிரதிநிதிகள் சிறிலங்கா ஐனாதிபதியுடன் கலந்துரையாடி, சமாதானப் பேச்சுகள் தொடர்பான அவர்களுடைய கருத்துக்கள், நிலைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு இன்று வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடினர்.

[Image: display.pl?if=20040504MON003.jpg]


இன்றைய சந்திப்பு பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு,

- புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
- அரசு பேச்சுக்களை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிப்பது
தொடர்பாக கூடிய கரிசனையைக் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
- எதிர்காலத்தில் பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
- பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.
- இடைக்கால நிர்வாக சபை அலகைக் கையளித்து அது தொடர்பாக பேசுகின்ற பொழுதுதான் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியதால், அடுத்த கட்டப் பேச்சுக்கள் அங்கிருந்தே ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் அலசப்பட்டது.

ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்த வரையில் கடந்த கால ஒழுங்கில் பேச்சுக்களை முன்னெடுப்பதே எமது தலைமைப்பீடத்தின் உறுதியாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, அண்மைக்காலத்தில் ஒரு புதிய அரசியல் சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகளில் முழு மக்களும் ஒட்டுமொத்தமாக ஆதரவினை வழங்கி தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எமது தலைமைப்பீடத்திற்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம்.

இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபுூர்வ முடிவு தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து நோர்வே அரசின் ஊடாக இருதரப்பும் பேச்சுக்கள் தொடர்பான விளக்கங்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்ள இருக்கின்றன. அதன்பின்புதான் எங்களது உறுதியான தீர்மானங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

பேச்சுவார்த்தையைப் பொறுத்த வரையில் எந்த வரையறைகளோ அல்லது நிபந்தனைகளையோ போடுவது சாத்தியற்றது என்றே கூற வேண்டும். அதை ஒருபோதும் தலைமைப்பீடம் ஏற்காது.

கடந்த காலங்களில் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தலைமையின் நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம்.

நோர்வே அனுசரணையாளர்கள், அரசாங்கத்திற்கும், ஐனாதிபதிக்கும் எங்களுடைய நிலைப்பாட்டை கொண்டு செல்வதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.

அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டில் பாரிய இடைவெளி இருப்பதாக சில கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாக திருப்தியான சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், இலங்கை ஐனாதிபதியும், அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதுள்ள தமது நம்பிக்கையை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த விதமான முன்நிபந்தனைகளும் இருக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

நோர்வே அனுசரணையாளர்களின் பங்கு தொடர்பான மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், முன்னர் செய்த அதே பணியையே அவர்கள் தொடர்வார்கள் என்றார் அவர்.

மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் பின்னணியில் உள்ள கருணாவிற்கும் அவரது குழுவினருக்கும் இலங்கை இராணுவம் அளித்துவரும் தொடர்ச்சியான உதவிகள், தொடர்புகளை இலங்கை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், தவறும் பட்சத்தில் பாரது}ரமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

நன்றி புதினம்
Reply
We dont want Norway, JVP informs President

Alladin Hussein in Colombo, May 3, 2004, 10.00 p.m.. The Janatha Vimukthi Peramuna (JVP), which is the second largest constituent of the ruling United Peoples Freedom Alliance Government has informed President Chandrika Kumaratunga that India should be given the role as mediators in the peace process, and Norway should be sidelined.

The Daily Mirror reported today Ms. Kumaratunga, is facing a dilemma, following the JVP stand that the Norwegians should be sidelined, and instead the role should be given to Neighbouring India. Ms. Kumaratunga is finding difficulty in making such a drastic turnaround.

The President however is yet to response to the JVP request. Citing reasons for their demand, the JVP Propaganda Secretary Wimal Weerawansa is reported to have said that the people are not very satisfied with the Norwegians, as they have failed to play an impartial role in the process. And at many instances have sided with the LTTE, even when the LTTE was wrong.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
We want you, LTTE tells Norway

Alladin Hussein in Colombo, May 3, 2004, 10.29 p.m. . Amidst a hardline stand by the Janatha Vimukthi Peramuna (JVP) that Norway should be sidelined in the peace process, the LTTE has made it very clear that the Norwegians should play a major role in the process. Norway's role is vital and it should continue, LTTE political Wing Leader S.P. Thamilselvam told Norway's special peace envoy Erik Solheim and Ambassador Hans Bratskar when they met at the LTTE peace Secretariat in Killinochci today.
Political sources told the Lanka Academic that in the event President Kumaratunga do decide to sideline the Norwegians, due to pressure from the JVP, it could even lead to serious repercussions. There is immense possibility that the LTTE will not agree to resume peace talks with the new Government, if the Norwegians dont play a vital role in the peace process. They may even go back to war sources warned.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
What role can we play, India asks Sri Lanka

Chennai, May 3 (IANS) :

India is interested in lasting peace in Sri Lanka and had asked the island nation's new government what role New Delhi could play in the country's Norwegian-brokered peace process.

External Affairs Minister Yashwant Sinha said: "During my meeting with Sri Lanka's new foreign minister Lakshman Kadirgamar in New Delhi (last week), he wanted India to play a direct role in the peace process.

"I asked him what sort of role he wants India to play and he promised to get back to me after consultations with his government," Sinha told a news conference here.

"We are interested in the peace process... so that Sri Lankan refugees here can go back to their country."

Sinha said a solution to the ethnic strife in Sri Lanka must come "from within the framework of an unified Sri Lanka and such a solution should come from forces" within that nation.

"No solution can be forced on them," he said.

A decision on a land bridge between Dhanushkodi in India and Thalaimannar in Sri Lanka and a ferry service between Tuticorin and Colombo would be taken only after peace returns to the island, Sinha said.

Asked if India had sought the extradition of Liberation Tigers of Tamil Eelam chief Velupillai Prabhakaran, he said New Delhi had made such a request to Sri Lanka several times.

Prabhakaran is wanted in India for the 1991 assassination of former Indian prime minister Rajiv Gandhi.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிரபல அரசியல் விமர்சகரின் கொழும்பு இல்லம் பொலிசாரால் சோதனை


இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) அவர்களின் கொழும்பு இல்லத்துக்குள் நேற்றிரவு கொகுவெள-கல்கிசை பொலிசார் பெருமளவில் திடிரென புகுந்து தீவிர தேடுதலை நடாத்தியுள்ளனர்.

இவரது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகம் கொண்டே தாம் இந்த தேடுதலை நடாத்தியதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் நடாத்தப்பட்ட சமயம் சிவராம் அவர்கள் மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சுதந்திர ஊடகவியலாளர் தினத்தில் இந்த தேடுதல் நடாத்தப்பட்டது ஊடகத்துறையினருக்கு விடுக்கப்பட்ட ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே கணிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும், பல தடவைகள் கொலைப் பயமுறுத்தல்கள் திரு. சிவராம் அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பொலிசாரின் இந்த தேடுதல் நடவடிக்கையை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரைரட்ணம் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

நன்றி : புதினம்
Reply
Police rummage Tamil journalists home for weapons

Associated Press, Tue May 4, 2004 02:49 EDT . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Police searched the home of a prominent Sri Lankan journalist in the capital Colombo while he was out of town taking part in World Press Freedom Day celebrations, the journalist said Tuesday. ``That the police should have chosen World Press Freedom Day to raid a well-known Tamil journalist's home speaks volumes for the state of media freedom in Sri Lanka - ,'' said R. Thurairatnam, president of the Sri Lanka - Tamil Media Alliance, a watchdog group. Sivaram was attending World Press Freedom Day events in the eastern city of Batticoloa when the search took place.
``The raid on the Tamil journalist's home is an act of crude intimidation aimed at stepping up pressure on Mr. Sivaram's family and thereby prevent him from writing critically on sensitive issues affecting the Tamil people,'' Thurairatnam said in a statement.

Sivaram was threatened with death in 2000 and 2001 by unidentified armed groups believed to be working clandestinely with the Sri Lankan state and by an ethnic Sinhala extremist group, according to reports in Tamil newspapers then.

Sivaram's Web site has gained widespread notoriety for its reporting on Tamil affairs, with special emphasis on human rights violations by government security forces.

In 2001, Sivaram said he feared for his life after Sri Lankan newspapers linked him with Tamil Tiger separatists.

Sri Lanka - 's civil war was born of an ancient conflict between two ethnic groups with their own distinct languages, cultures and history. The majority Sinhalese who are 14 million of Sri Lanka - 's 19 million people are mainly Buddhist. Most of the 3.2 million Tamils are Hindus, like Sivaram.

Mylvaganam Nimalarajan, a British Broadcasting Corp. journalist based in the northern city of Jaffna, was shot to death in his home in October 2000 after being accused of working for the rebels.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தமிழீழப் பாதுகாப்பிற்கான தமிழர்களின் விழிப்புணர்ச்சி

"புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்."

சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து இழைந்துவந்த தமிழின விரோத நடவடிக்கைகளால் தமிழர்கள் அடிமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். இவ்வரலாற்று நெருக்கடியான காலப்பகுதிகளில் தமிழர்கள், தமது தலைவிதியை நொந்து சும்மா இருந்து விடவில்லை.
மாறாகப் பெருமைப்படும் விதத்தில் சவால்களை எதிர்கொண்டு தேசியத் தலைவரின்கீழ் விடுதலைப் போருக்கு உரமேற்றிப் பங்கெடுத்தார்கள். ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகள் விடுதலைக்கு இரத்தத்தால் உரமூட்டிய மாவீரர்கள், மக்களின் வீரம், விளைநிலமாக தமிழர் தாயகம் பலம் பெற்றது.

இப்பலம் பொருத்திய தாயகத்தை சின்னாபின்னப்படுத்திச் சிதைப்பதற்கும், தமிழர்கள் வாழ்வதற்கு கஷ்டமான ஒரு பூமியாகத் தாயகத்தை மாற்றுவதற்கும், பல்வேறு சூழ்ச்சிகரமான தந்திரோபாயங்களை சிங்களம் கையாண்டு வருகின்றது.

இத் தந்திரோபாயங்களை, அரசியல், போரியல், உளவியல், ஒற்றாடல் (புலனாய்வு) போன்ற அனைத்திலும் புகுத்தியே வந்துள்ளது. வருகின்றது. இது ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமுதாய அமைப்பின் அடித்தளத்தைத் தகர்த்துவிடும் நோக்கத்தினைக் கொண்டதாகும்.

இதில் எதிரியால் முன்னெடுக்கும் புலனாய்வுப்போர் பற்றியும், அப்போரை எதிர்கொள்ள தமிழர்கள் புலனாய்வு விழிப்புணர்வுச் சமூகமாக மாறவேண்டிய அவசியம் பற்றியும் இங்கு நோக்குவோம்.

'ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்"

இக்குறள் தரும் விளக்கம் ஒற்றர்கள் இல்லையென்றால் உள் நாட்டிலும், அயல்நாட்டிலும், தகவல்கள் எதனையும் அரசன் அறிந்து கொள்ளமுடியாது. தெரிந்து கொள்ளவில்லையென்றால் பாதுகாப்பாக எதுவும் செய்து கொள்ளமுடியாது. அதனால் அரசு அழியும் ஆபத்து ஏற்படும். இது ஒன்றை எமக்கு உணர்த்துகிறது அதாவது தமிழீழம் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்படவேண்டிய உளவு வலைப்பின்னலின் முக்கியத்துவம் பற்றியதாகும்.

தமிழீழ விடுதலை வீரர்கள் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்து வருகையில், தாய் மண்ணில் சிங்களதேசத்திற்கு சார்பாக தமிழ் ஒற்றர்கள் திறைமறைவில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

இம்மறைமுக சூழ்க்கிகரமான புலனாய்வுப் பரிமாணங்களைப் பின்வருபவைகள் உள்ள.

01. தமிழீழப் பிரதேசங்களுக்குள் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்குள் ஊடுருவி உளவு பார்த்தல்.

02. தமிழீழ மக்களது உளவரனை பலவீனப்படுத்தும் வகையில் நாசவேலைகள், மறைமுகத் தாக்குதல்களை மேற்கொள்ளுதல்.

03. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான எதிரணிகளை உருவாக்கிக் கையாளுதல்.

04 தமிழரின் உரிமைப் போராட்டத்தின் மீதான பற்றுறுதியை திசைதிருப்பும் பொய்யான தகவல்களை பரப்புதல்.

05. தமிழர்களின் தேசியப் பலத்தை சிதைப்பதற்கு 'பிரித்தாளும்' சூழ்ச்சியைக் கையாளுதல்.

இவ்வகையான நாசகாரப் புலனாய்வுப் பிரமாணங்களுக்காக சிங்களம் தமிழ் ஒற்றர்களடங்கிய படையையே எப்போதும் அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றது.
அவையாவன.

01. அகத்து ஒற்றர் (ஊடுரு வலாளர்)
02. இரட்டை வேடம் போடும் ஒற்றர்.
03. மனம் மாற்றப்பட்ட ஒற்றர்.
04. உள்ளுர் ஒற்றர்.
05. காப்பான ஒற்றர்.

இவ்வொற்றர்களது பணி சார்ந்து சிறுவிளக்கத்தைப் பெறுவோம்.

முதலாவது அகத்து ஒற்றர் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்களுக்குள் ஆழமாக ஊடுருவி நிலைபெற்று இருப்பார். இவர் விடுதலைப்போரை பலவீனப்படுத்தும் வகையில் விளை பயன்மிக்க தாக்குதலுக்கான தகவல்களை எதிரிக்கு வழங்குவார். அத்துடன் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் அல்லது அத்தாக்குதலுக்கான பின்புலப் பணிகளை ஒழுங்குபடுத்திக் கொடுப்பார்.

இரண்டாவது இரட்டை வேடும் போடும் ஒற்றர். எதிரிக்கே விசுவாசமாகச் செயல்படும் இவர் விடுதலைப்போராட்டத்திற்கு சார்பானவராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வார். இந்த இரட்டை வேடத்துடன் நடமாடிய படி தகவல் சேகரிப்புகளில் ஈடுபாடுவார்கள். தேவைப்படும் பட்சத்தல் தாக்குதல் சார்ந்த பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

மூன்றாவது மனம்மாற்றப் பட்ட ஒற்றர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்குள் பயன்மிக்கவர்களை எதிரி தமது வலைக்குள் வீழ்த்துவதாகும். இவர்கள் காசுக்காக எதையும் செய்யும் துரோகிகளாக மாறி விடுவார்கள். இம்மோசமான சுயநலக்காரர்கள் தமிழீழ விடுதலைக்கு மோசமான பாதிப்புக்களை உண்டுபண்ணுவார்கள்.

நான்காவது உள்ளுர் ஒற்றர் தமிழர்தாயகப் பகுதிகளிலே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு எதிரிக்குத் தகவல்களை வழங்குபவர். மக்களுக்குள் கசியும் தகவல்களையும் இயக்க நடமாட்டங்கள், செயற்பாடுகள் பற்றிய அவதானிப்பு தகவல்களையும் சேகரிப்பவர்.

ஜந்தாவது காப்பான ஒற்றர் சிறிலங்காப் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இவர்கள் பொருத்தமான மறைப்புப் கதைகளுடன் தமிழீழப் பகுதிக்குள் உள்நுழைந்து புலனாய்வு வேலைகளை மேற்கொள்வார்கள். வேவு பார்த்தல், தகவல்களை உறுதி செய்தல், தொடர்புகைப் பேணுதல் என இவர்களது பணிகள் இருக்கும், கிடைக்கும் அனைத்து அறிக்கைகளையும் பாதுகாப்பாக எதிரியிடம் சேர்ப்பிப்பார்கள்.

இவ்வகையான ஒற்றரடங்கிய படை தமிழீழப் போர்களத்திற்கு அப்பால் இராணுவ சீருடை அணியாத சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால்
வழிநடத்தப்படுகின்றது.

தமிழீழ போர்க்களத்தில் காணப்படும் சிங்களப் படையினரின் பலவீனத்தை ஈடுசெய்வதற்காகவும், தமிழரின் படைப்பலத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், இது சிறிலங்காப் புலனாய்வு அமைப்பினால் பின்னப்பட்டடிருக்கும் உளவு வலைப்பின்னலாகும்.

இத்தகைய எதிரிப் புலனாய்வு அமைப்பிற்கு நவீன நிபுணத்துவ ஆலோசனைகளை இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டிஷ், பாகிஸ்தான் ஆகியநாடுகள் வழங்கி வருகின்றன.

அத்தோடு நவீனத்துவப் புலனாய்வுப் பயிற்சிகள், நவீன தொழில்நுட்ப உதவிகள், நிதி உதவிகள் பயன்மிக்க தகவல் உதவிகள் என அந்நாடுகள் வழங்கி பக்கத் துணையாக இருக்கின்றன.

இவ்வளங்கள் ஒரு புறம் இருக்க தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் ஆளணி வளமும் எதிரிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.

இவ்வளம்மிக்க, பலமுள்ள சிறிலங்காப் புலனாய்வு அமைப்பானது சிங்கள இனவாத பௌத்தமத அடிப்படைக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அவ்வமைப்பிலுள்ள புலனாய்வுகளின் உணர்ச்சி முழுவதும் தமிழரின் தேசிய வாழ்வை சிதைப்பதற்கான எண்ணங்களால் நிரம்பிக்கிடக்கிறது.

இம்மூல எண்ணக்கருவின் இலக்கை எட்டுவதற்காக தமிழரின் மனிதவளத்தையே அதிகம் சிங்களம் பயன்படுத்தி வருவதே சோகமான உண்மையாகும்.

அதாவது தாயப்பகுதியில் உள்ள சந்துபொந்தெல்லாம் சிங்களப் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம் தான் சந்துபொந்தெல்லாம் மாத்திரமல்ல தாயகப்பகுதிகளில் நடைபெறும் செயல்பாடுகளும் தெரியும்.

காரணம் தமிழ் ஒற்றர்களையே உபபோகிக்கின்றார்கள் என்பதுதான்.

சிங்களப் போர்விமானத்தின் விமானிக்கோ, அதனை வழிநடாத்தும் அதிகாரிக்கோ ஒரு இலக்குக்குரிய தகவலும் தெரியாது. ஆனால் விமானத்தினால் விடுதலைப் போருக்கு, தாயகப் பகுதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆழமானது. அவ் இலக்குகளுக்குரிய தகவல்களை வழங்குபவர்கள் தமிழ் ஒற்றர்களே.

இவ்வொற்றர்களால் வழங்கப்படும் தகவல் வளங்களினை ஆரம்பப்புள்ளியாக வைத்தே ஆளில்லாத உளவு விமானம் (U.A.V) தாயக வான்பரப்பில் உளவு வேலைகளை மேற்கொள்கின்றது. இதனால் தாக்குதலுக்கான இலக்குகளை துல்லியமானகப் படம் எடுக்கிறது.

இத்தகைய தொழில்நுட்பப்புலனாய்வுச் செயற்பாட்டிற்கு உயிர்நாடியாக மனிதவளப்புலனாய்வு உள்ளது. இந்த தவிர்க்கப்படவியலாத யதார்த்தத்தை ஒத்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தலைவர் யாசீன் கொல்லப்படுவதற்கு முன்பு இன்னொரு ஹாமாஸ் இயக்கத்தலைவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு நவீன தொழில்நுட்ப உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டது. இதிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்கை அழிப்பதற்கு காரணமாக அமைந்தது.

கண்ணுக்குத் தெரியாத மைகாரின் மேற்பரப்பில் பூசப்பட்டதனாலாகும். அதாவது செய்மதிகளின் உணரிகள் குவியம் கொள்ளக்கூடிய இம் மையை பூசியவர் இஸ்ரேலினால் விலைக்கு வாங்கப்பட்ட ஒற்றராகும்.

இதுபோன்றே மனிதவளப் புலனாய்வு ஆழமாகவும், விசாலமாகவும், உறுதியாகவும் பின்னிப்பிணைந்துள்ளதாக இருக்கும்.

எதிரிப்புலனாய்வாளர்கள் தமது கழுகுப்பார்வையைச் செலுத்தாத எந்த ஒரு துறையும் தாயகப் பகுதிகளில் இல்லை. அதற்கான மூலவளம் தமிழ் ஒற்றர்கள்.

சிறிலங்கா புலனாய்வாளர்கள் மனித மனங்கள் பற்றி நன்கறிந்தவர்கள், அதுவும் தொடர்ச்சியான மன நெருக்கீடுகளுக்குள் உள்ள தமிழர்களுக்கு உளப்பரிகாரம் தேவைப்படும் என்பதனை அறிந்தவர்கள்.

அதாவது எத்தனைய அணுகு மறைகளைக் கையாண்டால் தமிழர்களை உள்வாங்கலாம் என்பதும், எத்தகைய சலுகைகளை வழங்கினால் தமிழர்களது மனங்களை தம்பக்கம் ஈர்த்தெடுக்க முடியுமென்பதில் அனுபவமுள்ளவர்கள்.

இப்படி மனோவியல் ரீதியாக தமிழர்களை சிங்களம் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தம் புலனாய்வுவேலைகளை முன்னெடுக்கின்றது. இச் சூழ்ச்சிகரமான வேலைகளுக்காக தமிழரின் மன அரங்கை ஒரு களமாக மாற்றி, தமிழரின் இருப்புக்கே ஆணிவேராகக் கருதப்படும் பாதுபாப்புபலத்தை சிதைக்கும் இலக்கைக் கொண்டதாகும்.

இவ்விலக்கை எதிரி எட்ட முடியாதவாறு பார்த்துக்கொள்ளக் கூடிய மனப்பலம் ஒவ்வொரு தமிழரிடமும் உண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தாயகத்தைப் பாதுகாக்கும் எண்ணம் மேலோங்க வேண்டும். இவ்விழிப்புணர்ச்சி தமிழர்களிடம் இருக்கும்வரை சிங்களத்தால் எதனையும் சாதிக்கவே முடியாது போகும்.

இங்கு அபிசீனியா (தென்னாபிரிக்கா) நாட்டு மக்களது விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்திய உண்மைக்கதையொன்றை அறிவோம்.

இரு வெளிநாட்டு ஒற்றர்கள் அபிசீனியாவில் உள்ள பொருளாதார வளங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக அந்நாட்டினுள் நுழைந்தார்கள்.

அங்குள்ள மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற முயற்சி செய்த போதும் எந்தவொரு தகவல்களையும் பெறமுடியவில்லை. மாறாக மக்கள் தம் வாயைக் கையால் பொத்திக் கொண்டார்கள். அத்தோடுநின்று விடாது அவ்வொன்றர்கள் தொடர்பான தகவலை தமது மன்னருக்குக் கிடைக்கச் செய்தார்கள். பின்னர் ஒற்றர்கள் இருவரும் மன்னரால் நாடுகடத்தப்பட்டார்கள்.

இத்தகைய உணர்வுமிக்க நிகழ்வுகளும் தமிழர் தாயகத்திலும் வரலாற்றுப் பகுதிகளாக இருக்கின்றன.

எந்தவொரு சலுகைகளுக்கும் மயங்கிவிடாது தம் அடிப்படை வாழ்வை இழந்த தன்மானமுள்ளவர்கள் இவர்கள். எதிரியின் சூழ்ச்சிகரமாக வலைக்குள் வீழ்ந்துவிடாது கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகிய மனப்பலமுள்ளவர்கள் எனத் தமிழர்களின் வரலாறு நீண்டது.

இத்தகைய தனித்துவமான தமிழர்களிடத்திலும் எட்டப்பர்களின் ஆளுமை இருப்பதே சாபக்கேடாகும்.

அதுவும் எதிரி தமிழரின் மனித வளத்தையே பயன்படுத்தி தமிழரின் தேசியப் பலத்தைப் பலவீனப்படுத்த முயல்வதே இன்னும்சோகமானது.

இதுவரை காலமும் சிங்கள இனவாதம் பலியெடுத்த தமிழர்களது, மனித இழப்பு, விடுதலைப் போரில் களமாடிய இளம் வீரர்களது மனிதவள இழப்பு என தமிழ் இனத்தின் இழப்பு ஓர் இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இப்பெருந்தொகையான மனிதவள இழப்பீட்டை நிவர்த்தி செய்வதாயின் இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்படும் என்பது மனிதவள ஆய்வாளர்களது கணிப்பீடு.

இச்சோகமான நிலையில் இனிமேலும் எதிரியின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து உரிமைப்போரை காட்டிக் கொடுக்க முனையும்போது தாமதங்கள் ஏற்படவே செய்யும். அது நெருக்கடிக்குள்ளாகவும் நேரிடும். அதனால் தமிழர்களின் மனிதவளம் இன்னும் பாதிப்பிற்குள்ளாகவே செய்யும்.
தேசத்துரோகம் இழைத்த தமிழ் ஒற்றர்களைத் தமிழீழதேசம் ஒரு போதும் மன்னித்ததும் இல்லை. அத்துரோகிகளும் தம்முயிரை இழக்கவே நேரிடுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழரின் மனவளம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்வதே சிங்களப்புலனாய்வாளர்களின் நோக்கம்.

இத்தளத்தில் நின்று கொண்டே சிறிலங்காப் புலனாய்வு, பிராந்தியப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. இவைகள் தமிழ்ச் சமுதாயத்தின் சகலதுறைகளிற்குள்ளும் தகவல் வழங்குணர்களின் வலையமைப்புப் பணிகளை விரிவாக்கஞ் செய்து கொள்கின்றன.

இவ்வலையமைப்பில் தமிழரின் அறிவுப்பலமுள்ள தகவல் வழங்குனர்களை இணைத்துக் கொள்கின்றனர்.

தமிழரின் அறிவுப்பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. அச்சக்தியை, அப்பலத்தை தமிழ் அன்னையை கேவலப்படுத்தவும், அடிமையாக்கவும் கொன்றொழிக்கவும் முனையும் எதிரிப் புலனாய்வு சக்திகளுக்கு விலை போக இடங்கொடுக்கலாகாது.

தமிழரின் மனிதவளத்தையும் புலமைத் தளத்தையும் தமிழரின் அழிவுக்குப் பயன்படுத்தும் சோகமான வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும்.

எத்தகையவளம், பலமிக்க புலனாய்வு நிறுவனங்களது சவால்களை எதிர்கொள்ளத்தக்க பேரெழுச்சிமிக்க தமிழ்தேசியப்பலம் தாயகத்திடம் உள்ளது.

புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்.

எதிரியின் வஞ்சகக் குரல்களுக்கு வசப்பட்டுப்போகாமலும் எதிரியின் நயவஞ்சக விஷம் பொருந்திய கரங்கள் தாயகத்தின் மீது படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழீழ பாதுகாப்பிற்கு நாம் என்ன மாதிரி தொண்டாற்றலாம் என்பதை தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மனத்திலே எண்ணுதல் வேண்டும். சுயநலத்தை முதன்மையாக்கி வாழும் சிந்தனைத் தளத்திலிருந்து சற்று விலகி நின்று தமிழர்களின் விடுதலைப்போருக்கு வலுச்சேர்க்கத்தக்க வகையில் பாடுபட வேண்டும். அத்துடன் நாம் புலனாய்வு விழிப்புணர்வு பெற்ற சமூகமாகமாறி தாயகத்தின் பாதுகாப்பிற்கான சக்தியாக இயங்குதல் வேண்டும்.

நீலன் ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கிழக்கு நெருக்கடிý நிலைமையை அடுத்து 400 பேர் வெளிநாடுகளுக்கு பயணம்

கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடிýயை தொடர்ந்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலிகளுக்கு எதிராக கருணா கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் இதுவரை இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையமூýடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு திணைக்களம், குடிýவரவு குடிýயகல்வு திணைக்களம் மற்றும் கட்டுநாயக்கா விமான நிலைய வட்டாரங்களை ஆதாரம் காட்டிý குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டிý.) இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் கருணா குழுவினரே எனவும், இவர்களில் மிக அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றதாகவும் சி.ஐ.டிý.யினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேலும் பலர் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 99 சதவீதமானோர் ஒரே நாளில் பெறும் கடவுச்சீட்டுகளையே பெற்றதாகவும் சி.ஜ.டிý.யினர் தெரிவித்தனர்.

கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ளதாகக் கருதப்படும் கருணா குழுவினர் குறித்தும் கொழும்பு வரும் இவர்கள் குறித்தும் பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ரி-56 ரக துப்பாக்கிகள் கருணா குழுவால் மாளிகாவத்தைப் பகுதியில் விற்பனை

கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியில் கருணா குழுவினரால் 15 இற்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பிலிருந்து தப்பிச் சென்றதையடுத்து கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்குள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அவற்றை பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யத் தொடங்கி விட்டார்களாம்.

இவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடந்த புதன்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 15 க்கும் மேற்பட்ட ரி-56 ரகத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் எனினும், இந்த ஆயுதங்களில் எதுவும் தங்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு வகை ஆயுதமும் ஒவ்வொரு விலைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் இயந்திர பிஸ்ரல் 2000 ரூ பாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நகரில் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகளால் பெரும் நெருக்கடி கள் ஏற்பட்டு வரும் நிலையில் கருணா குழுவினரின் ஆயுத விற்பனை மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)