Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்?
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 23:34 ஈழம் ஸ
மட்டக்களப்பிலிருந்து கருணாவைத் தப்பிக்க வைத்து, கொழும்பிலிருந்து வெளிநாடு செல்வதற்கு சிறீலங்கா அரசே உதவியதாக, கொழும்பிலிருந்து இயங்கும் இணையத்தளம் செய்தி வெளியிட்டு;ள்ளது.
கருணாவின் மனைவியும் குழந்தைகளும் ஏற்கனவே மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டதாகவும், அவுஸ்திரேலியாவிலுள்ள அவர்களுடன் கருணாவும் சென்று இணைந்து கொண்டுள்ளதாகவும், இதற்கு சிறீலங்காவின் பாதுகாப்புப் படையே உதவி வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
கருணாவுக்கு எந்த ஆபத்தும் வராது பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துவரும்படி சிறீலங்காவின் பாதுகாப்புப் படைக்குப் பொறுப்பாகவுள்ள ஐனாதிபதி சந்திரிகா உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவுக்கமைவாகவே கருணாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவ்விணையத்தளம் மேலும் தெரிவிக்கின்றது.
Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
India News: LTTE man shot by Karuna fled India after Gandhi killing
14-April-2004
New Delhi, India : A Tamil Tiger intelligence operative shot dead by renegade commander Karuna in Sri Lanka had escaped from India three months after the assassination of former prime minister Rajiv Gandhi in 1991.
Neelan, as the long-standing member of the intelligence wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was known, was one of the earliest to set up a base in India when the LTTE decided to kill Gandhi.
Neelan, whom Indian investigators referred to as Kanthan, crossed over to Tamil Nadu clandestinely from Sri Lanka's north some time in 1990 on the order of Pottu Amman, the LTTE intelligence chief.
His arrival was not known then to Indian intelligence and security agencies, which were, however, keeping a close watch on the LTTE's political section members all over Tamil Nadu.
Accompanying Neelan to India was a trusted wireless operator who went by the nom de guerre Ramanan. The call sign of Neelan's transmitter was 95.
It was Ramanan who sent Neelan's messages to Pottu Amman, who had planned the assassination of Rajiv Gandhi, and received instructions from the latter. Pottu Amman's call sign on the wireless was 910.
But Indian officials believe that although Neelan was asked to set up a secret base in Tamil Nadu, he was probably not aware that the Tigers had decided to do away with Rajiv Gandhi, who was then on a comeback trail in Indian politics.
Nevertheless, Neelan carried out faithfully whatever he was instructed to by Pottu Amman, whose main LTTE intelligence operative in Tamil Nadu was Sivarasan, who was widely known as the "one-eyed-jack".
Initially, Sivarasan used Neelan's wireless to communicate with Pottu Amman.
Neelan also met Nalini, an Indian girl who played a key role in the assassination of Rajiv Gandhi and who witnessed the Congress leader blow up at an election rally near Madras on May 21, 1991.
Once the deed was done, LTTE operatives were on the run in Tamil Nadu. They included Neelan, who kept changing his hideouts.
Sivarasan killed himself in Bangalore in August 1991 after being cornered by security forces.
At one stage, Neelan became upset, telling a confidant that Pottu Amman appeared to be more concerned about trying to save Sivarasan and not him (Neelan).
As the LTTE operatives became desperate in Tamil Nadu, Pottu Amman went against his original plans and asked his intelligence unit members to take help from the political section of the group -- who were under watch from Indian authorities but knew Tamil Nadu better than the intelligence operatives -- and try to escape.
But the Indian investigators came to know of this. In July 1991 -- two months after Gandhi's killing -- they published the photographs of Neelan and of Dixon, a member of the LTTE political section, and stepped up their hunt for the two.
However, Neelan continued to evade the Indian authorities and escaped to Jaffna in August 1991.
Neelan remained an active member of the Pottu Amman-led LTTE intelligence section in Sri Lanka's north and east and was linked to several assassinations, mainly of Tamils opposed to the LTTE.
Last month, he fell into the net of V. Muraleedharan alias Karuna, the former regional commander of LTTE who broke away on March 3 and took control of the two districts of Batticaloa and Amparai.
One published report in Colombo had suggested that Karuna could use Neelan as a bargaining chip, probably with India.
But Karuna did not do that. Instead, just before fleeing his base in eastern Sri Lanka, Karuna shot Neelan dead.
Indo-Asian News Service
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும்
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும்" - இந்த ஆன்றோர் நெறி தென் தமிழீழத்தில் ஒருதடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கே பெரும் புள்ளியாய் வந்த கருணாவின் ஆட்டம் 40 நாள்களில் ஒடுக்கப்பட்டிருக்கிறது. தன்னைக் கவ்விய சூதை இந்த 40 நாள்களில் வென்றிருக்கிறது தர்மம்; வரலாற்றுத் துரோகத்துக்கு எதிரான தர்மயுத்தம் பெரிய எதிர்ப்பேதுமின்றி சிலநாள்களிலேயே வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
இந்த 40 நாள்களும் கருணா போட்ட வாய்ப்பந்தலை - வாய்வீச்சுப் பிரபலாபத்தைக் கேட்டவர்கள்இ இப்போது கருணாவும் அவரது கும்பலும் புறமுதுகிட்டு ஓடித் தப்பியதைப் பார்த்து வாயடைத்துப்போயிருக்கின்றார்கள். தென்தமிழீழத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து ஆரம்பம் முதலே புலிகளின் தலைமை குழப்பமோஇ பதற்றமோ காட்டாமல் தெளிவான - நிதானமான - உறுதியான - போக்கை வெளிப்படுத்தியது. வெறும் வாய்ச்சவடால் விடாமல்இ "இது கருணா என்ற தனி மனிதனின் பிரச்சினை. அதற்குரிய வகையில் அது அணுகப்படும்" - என்ற திட்டவட்டமான தகவலை வெளிப்படுத்தியதோடு அமைதி பேணியது. ஆனால்இ தென்னிலங்கை ஊடகங்களும்இ இந்திய செய்தி நிறுவனங்களும்இ இந்திய சார்புடைய பிற செய்தி அமைப்புக்களும்தான் ஒன்றுமில்லாத கருணாவை ஊதிப்பெருப்பித்து பெரும் இராணுவ வித்தகராகவும்இ வலிமைமிக்க சக்தியாகவும் வெளிப்படுத்தி நின்றன. கருணாவும் தன்பாட்டுக்கு இந்த ஊடகங்களைப் பயன்படுத்தி தன்மானத் தலைவன் பிரபாகரனுக்கு நிகராக - ஏன்இ சில சமயங்களில் அவரைவிடப் பெரிய தலைவராக - வெளியுலகிற்கு அம்பலப்படுத்த முயன்றார்.
ஈழத் தமிழர்கள் நடத்திய பல வரலாற்றுச் சமர்கள் தன்னொருவனால் மட்டுமே சாத்தியமாயிற்று என்றும் இல்லையேல் அவை தோல்வியில் முடிந்திருக்கும் என்றும்இ ஏன் தலைவர் பிரபாகரன்கூட தன்னால்தான் காப்பாற்றப்பட்டு உயிர் வாழ்கிறார் என்றும்கூட நீட்டி முழங்கினார் கருணா. வன்னியில் உள்ள புலிகளின் தலைமைஇ இந்த யுத்தநிறுத்த காலத்தில் அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைத் தாண்டித் தனது எல்லைக்குள் வந்து எதுவும் செய்துவிடாது என்ற நம்பிக்கையில்தான் இப்படி எல்லாம் முழங்கினார் கருணா. இப்படி எல்லாம் வரலாற்றுத் துரோகம் புரிந்தார் அவர்.
ஆனால்இ நிஜத்தில் நிலைமையோ வேறாகவிருந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைத் தாண்டி வந்து புலிகளின் படைகள் மட்டு.இ அம்பாறை மாவட்டங்களுக்குள் திடீரென வந்து விஸ்வரூபம் எடுத்து நின்றபோது கருணா கும்பல் நிலை குலைந்து போனது. தனது தாயகம் என்று பிரதேசவாதம் பேசிய இடத்தை விட்டே அது ஓட்டம் பிடித்தது. அப்போதுதான் "வெறும் மண் குதிரை"யைப் பார்த்து ஆஹாஇ ஓஹோ என்று புளுகித்தள்ளிய தென்னிலங்கை மற்றும் இந்தியசார்பு ஊடகங்களுக்கு உண்மை புரிந்தது. மாவீரனாகத் தாம் போற்றிப் புகழ்ந்த கருணாஇ நின்று யுத்தம் புரியக்கூடத் திராணியோஇ தைரியமோ இல்லாமல் ஓட்டம் பிடித்தது கண்டு அவை வாய் பிளந்து நிற்கின்றன. ஒரு வீரன் எந்த நெருக்கடி வந்தாலும் தனது ஆயுதத்தைக் கைவிடமாட்டான். அல்லது ஆயுதத்தைக் கேவலப்படுத்தவோ அல்லது அழிக்கவோ முற்படமாட்டான். ஆனால்இ கருணா தன்னிடமிருந்த ஆயுதங்களில் கணிசமான ஒரு தொகுதியைத் தீவைத்து எரித்து அழித்துவிட்டுச் சென்றார் என வெளியான செய்திகள் கருணாவின் கேடுகெட்ட தரத்தை வெளிப்படுத்தப் போதுமானது.
இந்த யுத்தநிறுத்த காலத்திலும் பெரும் இரத்தக்களறி ஏதும் இல்லாமல் கருணாவின் கொடூரப் போக்கிலிருந்து மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டப் பிரதேசங்களை விடுவிக்கும் தனது படைநகர்வை கனகச்சிதமாகச் செய்ததன்மூலம் தனது இராணுவ வல்லமையைப் புலிகளின் தலைமை மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கின்றது. உண்மையை உலகுக்கு எடுத்தியம்ப முயன்ற கொழும்புப் பத்திரிகை நிறுவனங்களை கருணா கும்பல் தனது அடாவடித்தனங்களினால் நெருக்குதலுக்குள்ளாக்கிஇ அந்தப் பத்திரிகைகளைத் தென்தமிழீழத்துக்கு வரவிடாது தடுத்தது. என்றாலும் அப்பத்திரிகைகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாமல் உண்மையை உலகிற்கு உரைக்கும் - உணர்த்தும் - தமது பணியை விடாது புரிந்தன. அவற்றின் நிலைப்பாடு சரி என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
LTTE Admits, they Developed a Sophisticated Military During Truce
Bandula Jayasekara in Colombo, SLT 3.30 P.M Friday 16 April. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) has admitted that the organization developed a sophisticated military machinery since they signed the ceasefire agreement with the government of Ranil Wickreamasinghe two years ago. A report says that Prabhakaran has unlimited supplies of ammunition and a sophisticated command and control system under them.
A report written by the editor of pro-LTTE website, Tamilnet, says "The manner in which Karuna was checkmated is a limited demonstration of the military prowess and sophistication that the LTTE has developed since it signed the ceasefire agreement with the Sri Lankan government two years ago. Even a seasoned senior LTTE Commander like Karuna was not aware of the real capacity of the Special Forces and psychological operation units that Prabhakaran raised during the last two years."
Last week LTTEs renegade eastern commander Karuna said that Prabhakaran had taken delivery of 11 arms shipments since the ceasefire came into being in 2002.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கலையும் கதிர்காமரின் கனவுகள்
சனாபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரதுங்காவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரும்இ சந்திரிகா குமாரதுங்கா அமைக்கப்போகும் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளவருமான லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு அதிஸ்ரமற்றவர்.தன்னுடைய விசுவாசத்தை எப்படித்தான் காட்டினாலும் அவரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நகரவிடாது தடுப்பதில் சிங்கள பேரினவாதம் குறியாக இருப்பது தற்போது தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
என்றும் சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்திலிருந்து அந்த மக்களின் குரல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிரான சில கோடரிக் காம்புகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற கோதாவில் கருத்துச் சொல்ல மட்டுமே சில தமிழர்கள் தேவை.
மற்றும்படி இலங்கையின் அரசின் உயர்பீடங்களை அலங்கரிக்கும் அளவுக்கு அவர்களிற்கான வாய்ப்புக்களை வழங்க எந்தச் சிங்கள கட்சிகளும் தயாரில்லை என்பதே யதார்த்தம்.
இந்தப் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளிவரமுன்னரே சந்திரிகாவின் தலைமையிலான ஜக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் சார்பில் பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமர் நியமிக்கப்படலாம் என சனாதிபதி சந்திரிகாவின் தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால்இ தற்போது பிரதமாராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு லக்ஸ்மன் கதிர்காமர் புறந்தள்ளப்பட்டுவிட்டார்.
லக்ஸ்மன் கதிர்காமர் பிரதமராக நியமிக்கப்படாததற்குக் கூறப்படும் நொண்டிச்சாட்டு அவர் நேரடியாக மக்களினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தேசியப்பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் என்பதாகும்.
ஆனால் உண்மை அதுவாக இருக்க முடியாது இலங்கையின் நாடாளுமன்றதில் ஒரு தமிழர் பிரதமராக நியமிக்கப்பட்டுவிடலாம் என்ற காழ்ப்புணர்ச்சி மட்டுமே.
இதனை அந்த சட்டத்தரணி கதிர்காமருக்கும் புரியாமல் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரின் தொங்கிப்பிழைக்கும் எஜமான விசுவாசம் கண்டு கொள்ளப்போவதில்லை.
இதற்கு முதல் இலங்கையின் பொலஸ்மா அதிபராக இருந்த ஆனந்தராஜாவிற்கும் ஒரு தமிழர் என்ற வகையில்தான் பொலிஸ்மா அதிபராக இருப்பதற்கான பதவி நீடிப்பு வழங்கப்படாது ஒதுக்கப்பட்டார்.
இப்போது கதிர்காமர் வரலாற்றின் தமிழினத் துரோகிகளான இவர்களுக்கு அவர்கள் சார்ந்த இனம் வழங்கும் தண்டனைகளை விட அவர்கள் யாருக்கு விசுவாசமாக இருந்தார்களோ அவர்களே இவர்களுக்கு வழங்கிய தண்டனையாகும்.
கதிர்காமரின் கனவுகள் எத்தனை கலைந்து போயின முதலில் ஜக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பதவிஇ பின்னர் பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் செயலாளர் கனவுஇ இப்போது பிரதமர் கனவு.
போகிறபோக்கில் மிகவிரைவில் நாடாளுமன்றில் கதிர்காமர் வாய்விட்டே பாடக்கூடும் கனவே கலையாதே..... என்று..
நன்றி - வேழினி ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakkural.com/2004/April/16/moorthy.gif' border='0' alt='user posted image'>
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கிழக்கு மக்களின் உணர்வலைகள்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 41 தினங்களாக இடம்பெற்று வந்த கருணாவின் தனிப்பட்ட நடவடிýக்கைகள் விடுதலைப்புலிகளின் தலைமையினால் முடிýவுக்குக் கொண்டுவரப்பட்டு அப்பகுதி மக்களும், பிரதேசமும் இயல்புக்கும், அமைதிக்கும் திரும்பியுள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் விரைவானதும், விவேகமானதுமான மீட்பு நடவடிýக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும் மோதல்களும், உயிரிழப்புகளும் ஏற்படுமென மக்கள் அச்சமடைந்திருந்த வேளையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூýறியது போல், எந்தவித இரத்தக் களறியுமின்றிக் கருணாவின் நடவடிýக்கைகள் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டதால் கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கருணாவைத் தமிழர் தாயகத்திலிருந்து அகற்றும் விடுதலைப்புலிகளின் நடவடிýக்கைக்கு ப10ரண ஆதரவை வழங்கிய கிழக்கு மாகாண மக்கள், தமது தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை முழு உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கருணாவின் தனிப்பட்ட முடிýவுகள், செயற்பாடுகள், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிýக்கைகள் குறித்து கிழக்கு மாகாண மக்கள் சிலரின் உணர்வலைகளைப் பார்ப்போம்.
ஏ.டிý.கமலநாதன், பிராந்திய உத்தியோகத்தர், மட்டு. திறந்த பல்கலைக்கழகம்.
மட்டு. - அம்பாறை மாவட்டம் வே.பிரபாகரனின் நேரடிýக் கண்காணிப்பின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த 41 நாளும், இம்மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு வீடும் மரண வீடுகள் போலவே காட்சியளித்தன. ஆனால், மீண்டும் சுபீட்சகரமான நிலை தோன்றியுள்ளதையிட்டு, மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆர்.மரியதாஸ், நிர்வாக உத்தியோகத்தர், மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லம்.
கடந்த 41 நாட்களும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மக்களுக்கு கரிநாளாகவே இருந்தது. கருணா என்ற தனி மனிதனால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தக் காலப்பகுதியில் நீ யார் பக்கம்? நான் யார் பக்கம்? என்ற இரு பிரிவினை காணப்பட்டன. ஆனால், இப்போது, எல்லோரும் ஒரே பக்கமே என்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க, தமிழ்த் தேசியப் பத்திரிகையான ' தினக்குரல்" பத்திரிகையைக் கருணா தரப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனைக்குத் தடை செய்ததன் மூýலம் கருணாவின் அராஜகம் வெளியுலகத்திற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழினத்தின் குரலாகச் செயற்பட்டு வந்த 'தினக்குரலை"ப் பெறுவதற்காக நாம் பல மைல் தூரம் பயணம் செய்து பெற்றுக் கொண்டோம். இந்தக் காலப்பகுதியில் இப்பத்திரிகை ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கு மனித உரிமைகள் இல்லத்தின் சார்பாகவும், இந்த நாட்டு பிரஜை என்ற வகையிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எம்.தேவராஜன் - பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.
வைத்தியசாலையிலிருந்தும் மட்டு. - அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் வட பகுதியைச் சேர்ந்தவர்களை கருணா தரப்பினர் வெளியேற்றியதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிýக்கின்றோம். மக்களின் மிக அத்தியாவசிய தேவையான வைத்திய சேவையை கருணா தரப்பினர் ஸ்தம்பிதமடையச் செய்தது எவராலும் ஏற்றுக் கொள்ள முடிýயாதவொன்று. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் இலாபம் அடைய முற்பட்டனர். இதற்கு விடுதலைப்புலிகளின் தலைமைப் பீடத்தினால் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதேசவாதத்தை 99 சத வீதமான வைத்தியர்கள் எதிர்த்தாலும் கூýட, ஒரு சதவீதமான வைத்தியர்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
கருணாவின் இந்தச் செயற்பாட்டிýனால் சாதாரண மக்களும், நோயாளிகளும் உள, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.புண்ணியமூýர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பதில் அரச அதிபர்.
வடபகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணா தரப்பினரால் வெளியேற்றப்பட்ட விடயத்தை நாம் வன்மையாகக் கண்டிýக்கின்றோம். இதேவேளை, வெளியேற்றப்பட்டவர்கள் இது குறித்து மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனக்கோ, பொலிஸாருக்கோ அறிவிக்காத காரணத்தினால் எந்தவித நிவாரணங்களையும் எம்மால் பெற்றுக் கொடுக்க முடிýயாது போய்விட்டது.
கருணா தரப்பினரால் இங்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மாவட்டச் செயலாளர் என்ற வகையில் எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கு இரு பிரிவினர் செயற்பட்டதால் யாருடைய கருத்தை ஏற்றுக் கொள்வது? எவ்வாறு செயற்படுவது? என்பது குறித்து மக்கள் மத்தியிலும், எம்மத்தியிலும் ஒரு வித தளம்பல் நிலை காணப்பட்டது. ஆனால், இன்று எல்லோரும் புலிகளின் தலைமையை ஏற்றுத் தமது ஆதரவை நிரூýபித்துள்ளனர்.
வேனுகோபால், ஆசிரியர், 'தமிழ் அலை".
கருணா தரப்பினர் நான் உட்பட அனைத்து ஊழியர்களையும் கைப்பொம்மைகளாகவே நடத்தினார்கள். இந்த நிலையில், தங்கள் தொடர்பான செய்திகளை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் எனவும், மாறாக, செயற்பட்டால் சுடப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தினார்கள்.
தமிழீழத் தேசியத் தலைமையினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வகைப் போராட்டத்தையும், கூýர்மைப்படுத்தும் இலட்சியதாகம் நிரம்பிய "தமிழ் அலை' கடந்த 41 தினங்கள் தனது இருண்ட யுகத்தில் தமது சேவையை வழங்கியமை குறித்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், கருணா என்ற ஒரு தனி மனிதனின் பிரதேசவாத முற்றுகைக்குள்ளான 'தமிழ் அலை" தமது நிறைவான சேவையை வழங்காதது குறித்து, பிரதம ஆசிரியர் என்ற வகையில் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எஸ்.பாக்கியராஜா, பீடாதிபதி, மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி.
நெருக்கடிýயான நிலையில், நாம் கடந்த 41 நாட்களையும் கடந்து வந்துள்ளோம். உண்மையில் கருணாவினால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும் இரத்தக் களறி தவிர்க்கப்பட்டதற்கு முதலில் கடவுளுக்கும், அடுத்த படிýயாக எமது தேசியத் தலைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வணபிதா. சிறிதரன் சில்வெஸ்டர், இயக்குநர், கிழக்கு மனித மேம்பாட்டு நிறுவனம்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, விடுதலைப்புலிகளின் தலைமைப் பதவிகளில் கிழக்கு மாகாணத்தவர்களுக்குரிய இடம் வழங்கப்படவில்லை போன்ற கருணா முன்வைத்த கருத்துக்களை விட, அவரின் நடைமுறைகள் மக்கள் மனதில் சந்தேகத்தையும், அதிருப்தியையும் தோற்றுவிப்பனவாக அமைந்து விட்டன. ஊடகங்களில் அவர் மேற்கொண்ட அதீத பிரசாரம், அரசாங்கத்துடனும், தமிழ் மக்களின் விரோதிகளுடனும் அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு ஆகியவை மக்களிடையே கருணா மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.
அத்துடன், தேர்தல் நேரத்தில் அவர் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியமை எவராலுமே ஏற்றுக் கொள்ளப்படாததாகி விட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக் கொண்டமையை எவராலுமே ஜீரணிக்க முடிýயவில்லை.
எனினும், 72 மணித்தியாலங்களில் பொது மக்களுக்கோ, போராளிகளுக்கோ பாரிய இழப்பு எதுவுமின்றி கிழக்கை மீளக் கைப்பற்றியமை பாராட்டத்தக்கது.
நடைபெற்று முடிýந்த கறைபடிýந்த சம்பவத்தை மறந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அனைவரும் நடைபோட வேண்டும் என்றார்.
இந்திரகுமார் பிரசன்னா, செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ).
கருணா விவகாரம் ஒரு தனிநபர் பிரச்சினை. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க அவர் மேற்கொண்ட தந்திரமே பிரதேசவாதம்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளோ அன்றி அவர்களுக்கெதிரான எந்தவொரு அமைப்புமோ பிரதேசவாதம் பேசியதில்லை. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கைத் துண்டாட நினைத்ததில்லை. ஆனால், அந்தக் கைங்கரியத்தைச் செய்ய முனைந்தவர் கருணாவே! அவரின் வரலாறு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஓர் கறைபடிýந்த அத்தியாயம்.
உண்மை பிடிýவாதமானது. அது என்றாவது ஜெயித்தே தீரும். அந்த வகையில் வீராப்புப் பேசிய கருணாவின் சுயரூýபம் சொற்ப நாட்களிலேயே வெளிப்பட்டு அவரின் ஆட்டம் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டமை பாராட்டத்தக்கது. தனது சொந்த வாழ்வில் தன் பெற்றோருடன் கழித்ததை விட அதிக காலம் போராட்ட வாழ்விலேயே செலவிட்ட கருணா, தான் சம்பாதித்த பெருமைகளை சுயநலத்திற்காக இழந்து இன்று கேவலப்பட்டு நிற்பதைக் காண முடிýகின்றது. அவரின் பிரதேசவாத கோர்ம் தென்னிலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளின் அபிலாiர்களுக்கு ஆக்கமளிப்பதாக அமைந்தமை கவலைக்குரியது. அதேவேளை, 'மானத் தமிழன் ஒரு போதும் மாற்றான் காலில் மண்டிýயிடமாட்டான்" எனக் கூýறிவந்த அவர், இன்று அரச படைகளிடம் தஞ்சமடைந்து தனது ஈனத்தனத்தை வெளிக்காட்டிýயுள்ளார். அவரின் செயற்பாடுகள் அகில உலகிலும் விடுதலைப் புலிகள் கட்டிýயெழுப்பி வந்த பெருமைக்கு அபகீர்த்தியாக அமைந்துவிட்டன.
போராளி ஒருவன் தன் உயிரினும் மேலாக மதிப்பது தனது அமைப்பு, கொள்கை, ஆயுதம் என்பவற்றையே. தனது விடயத்தில் இது மூýன்றையும் தூக்கி வீசிய கருணா, தப்பியோடும் போது தம்மிடமிருந்த ஆயுதங்களையும் அழித்து விட்டுச் சென்றுள்ளார். இத்தகைய செயற்பாட்டை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடிýயாது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தந்து தமிழ்நாட்டிýல் ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் சிறையில் வாடிýய வரலாறுகள் மத்தியில் தமிழர் தாயகத்திலேயே ஆயுதமேந்திப் போராடிýய ஒரு முன்னைநாள் போராளி போராட்ட வரலாற்றிற்கே கறையை ஏற்படுத்திச் சென்று விட்டார்.
பிரதேசவாதம் கிளப்பப்பட்டுள்ள இன்றைய நிலைமையில் மட்டக்களப்பு- அம்பாறை மக்கள் பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒரு தாய் மக்களாக 'புலிகளே தமிழர், தமிழரே புலிகள்" என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், தேசியத் தலைமைக்கும் விசுவாசமாகச் செயற்பட வேண்டும்.
சமன் மாணிக்க ஆராச்சி, செய்தியாளர், லக்பிம - அம்பாறை.
கருணா மிகப் பலமான நிலையிலுள்ளார். அவர் பிரபாகரனின் எட்ட முடிýயாத இடத்தில் உள்ளார் என்றே உலகம் நம்பியிருந்தது. ஆனால், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இன்றி, ஒரு சில தினங்களில் கருணாவின் கீழிருந்த நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டிýன் கீழ் கொண்டு வந்தது மெச்சத்தக்கது.
பாரியதொரு யுத்தம் நிகழப் போகின்றது என சர்வதேசமே எண்ணிக் கொண்டிýருக்கையில், மிகவும் இலாவகமாக நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு நொந்து போயிருந்த மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மீண்டுமொரு சண்டை தம்மீது திணிக்கப்படுமோ, தாம் பாதிக்கப்படுவோமோ என மிகவும் அஞ்சியிருந்தனர். அத்தகைய நிலையொன்று ஏற்படாது கருணா விவகாரம் முடிýவுக்குக் கொண்டு வரப்பட்டமை மிகவும் பாராட்டத்தக்கது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்.
ஒரு தேசிய இனத்துக்கு ஒரு தேசியத் தலைவரே இருக்க முடிýயும். ஈழத் தமிழருக்கு வே.பிரபாகரனே தலைவர். அந்த நிலை மீண்டும் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தரும் விடயம்.
அதேசமயம், எமது தேசியத் தலைமை இது போன்ற நிகழ்வொன்று எதிர்காலத்தில் மீள என்றுமே நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிýயது அவசியம்.
மட்டக்களப்பிலிருந்து வட பகுதி மக்களை வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மட்டக்களப்பு தமிழ் மக்கள் அனைவருக்குமே தலை குனிவை ஏற்படுத்திய ஒரு விடயம். இருப்பினும், இது ஒரு சிறு கும்பலாலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிýக்கையில் மட்டக்களப்பு மக்களுக்கு தொடர்பில்லை. அதேவேளை, அதனைத் தடுக்கவும் முடிýயாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர்.
மறுபுறம், பாரிய மோதலொன்று ஏற்பட்டு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படும் என அனைவரும் எதிபார்த்திருந்த வேளை, புத்திசாதுரியத்துடன், மிகக் குறைந்த உயிரிழப்புடன் கருணா விவகாரத்தை முடிýவுக்குக் கொண்டு வந்த பெருமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்கேயுரியது. இது அவரின் சாதுரியத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாகவுள்ளது.
எஸ்.கே.தாஸ், வர்த்தகர்.
கருணா மேற்கொண்ட தீர்மானம், அவரின் செயற்பாடுகள், இறுதியாக அவர் மேற்கொண்ட நடவடிýக்கை ஆகியவை மட்டக்களப்பு மண்ணில் பிறந்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் அவமானமான விடயமாகும். அவர் போராட்டத்தை மட்டுமன்றி தான் பிறந்த மண்ணையும் கொச்சைப்படுத்தி விட்டார்.
அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, இனிமேலும், இதுபோன்றதொரு துரோக நிகழ்வு என்றுமே தோன்றாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
How the LTTE neutralised Karuna
By V.S. Sambandan
COLOMBO, APRIL 16. A mix of psychological operations, planned military manoeuvres, elimination of political rivals and the timing of the launch of the offensive were instrumental in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) wresting control from the rebel military commander, V. Muralitharan (`Col.' Karuna) in eastern Sri Lanka.
According to sources in eastern Sri Lanka, some key moves that brought a swift end to the LTTE's Good Friday offensive against Karuna were made before the formal launch of the attack on April 9.
The killing of a pro-Karuna contestant in the parliamentary elections, Rajan Sathiyamoorthy, and the attacks on the Batticaloa Government Agent, Mounaguruswamy, and an academic of the eastern University, Tiruchelvam, in March are seen as pre-emptive strikes against Karuna's supporters.
Sathiyamoorthy's killing, the sources say, was one that effectively choked a crucial political option for Karuna. ``Sathiyamoorthy was his staunch supporter and he would have been able to espouse Karuna's case to the outside world,'' a Batticaloa resident said.
``Similarly, after Prof. Tiruchelvam and Mr. Mounaguruswamy were attacked, the support for Karuna was severely dented.''
If Sathiyamoorthy's killing cut the political base of Karuna, at the military level, the cadres who launched the offensive were ``eastern fighters, not the northern cadres,'' the sources said.
``As soon as the first offensive was launched, there was pressure from the parents on Karuna to release his cadres.
Their rallying point was `we did not send out fighters to wage a war against our own people','' the sources said.
Moreover, most of Karuna's fighters, according to the sources ``were recruited after the ceasefire agreement and not all of them had battle-experience.''
The decision by the LTTE to deploy the `Jayanthan Brigade' that was instrumental in the Elephant Pass victory of April 2000 against the Sri Lanka Army is said to be another move that turned the tide against Karuna.
According to a columnist in The Daily Mirror, the LTTE sent its newly raised Special Forces, a surprise element in the four-day offensive.
The sources in the east said the major difference was brought about by ``small groups of infiltrators,'' who went in as civilians.
``They spoke their same rebel language and in key places, these small groups were effective as Karuna's cadres either just left their bases or joined the LTTE's forces.''
The timing of the offensive just after the April 2 parliamentary elections and before the new government faces Parliament on April 22 is seen as another factor that effectively neutralised the political focus on the LTTE's internal battle.
The exact whereabouts of Karuna remain unknown and the LTTE is reportedly continuing the search for its former special commander for Batticaloa and Amparai who was till his expulsion on March 6, the longest serving regional commander.
Thanx: The Hindu
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விடுதலைப்புலிகளின் வரி நடைமுறைகள் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் நிறுத்தம்
17.04.2004
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த வரி அறவீடுகள் அனைத்தும் தமிழீழ தேசிய நிதிக்கொள்கைக்கமைய நிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளர் இ. கௌசல்யன் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை மாவட்ட செயலகத்தில் நேற்று பி.ப. நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரதி நிதிகள் சந்திப்பில் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழத் தேசிய நிதிக்கொள்கைக்கு அமைவாக நிதித்துறைப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டவுடன் வரி நடைமுறை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
Source: TamilAlai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakkural.com/2004/April/17/moorthy.gif' border='0' alt='user posted image'>
Source: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா மீதான 'இந்து" வின் ஆதங்கம்
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திற்கு எதிராக கருணா மேற்கொண்ட கிளர்ச்சியின் போது தெளிவான ஒரு கட்டத்தில் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றிய பெறுமதியான பல கேள்விகளை அவர் எழுப்பிருந்ததாகவும் பிறிதொரு கட்டத்தில் அவரது கிளர்ச்சி, இலங்கையின் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் நீங்கலாக வெறுமனே அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானது என்பதை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கும் 'இந்து" நாளேடு சகல தரப்பினரதும் தெளிவான சிந்தனை, நோக்கம் மற்றும் அரசியல் விருப்பங்கள், வேறுபட்ட இந்தக் கருத்து வெளிப்பாடுகளை தமிழர் விவகாரத்திற்கு சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட பரந்தளவிலான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மாற்ற முடிýயும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
கருணா ஆயுத ரீதியாக இத்தனை தூரம் பலவீனமாக இருந்த போது புலிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தம் மேற்கொண்ட சமயம் எவரும் சண்டையை தடுப்பதற்கு முயற்சிக்கவில்லையென்ற கவலையையும் இந்துவின் ஆசிரியர் தலையங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.
நடந்து முடிýந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பதில் உரிமையாளராக போட்டிýயிட்ட தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வெற்றியை தமிழ் மக்கள் அளித்திருக்கும் மகத்தான ஆணையென்று சர்வதேச செய்தி ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் விபரித்திருக்கிறார்கள். ஆனால், கூýட்டமைப்பின் இந்த வெற்றி தகுதி பெறாத ஒன்று என்றும் ஏனென்றால், பலவந்த பிரயோகத்தின் மூýலமும் போட்டிý வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டுமே இந்த வெற்றி பெறப்பட்டு இருப்பதாக இந்து நாளேடு கூýறுகிறது.
அடக்குமுறை ஒன்றைத் தவிர வேறு எந்த வழியிலும் விடுதலைப் புலிகள் முரண்பாடுகளை அணுக முடிýயாது என்பதை 'இலங்கை" கரையில் கருணாவின் குறு அத்தியாயம் மீள உறுதிப்படுத்தியிருக்கிறது.
உள் மட்டத்திலேயோ அல்லது வெளி மட்டத்திலேயோ சவாலிடுபவர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போதுமே பொறுத்தது கிடையாது.
தனது அமைப்புக்குள்ளான எதிர்க் குழுக்களையும் கிளர்ச்சியாளர்களையும் பட்டரினூடாக கத்தி செலுத்துவதைப் போலவே புலிகள் இயக்கம் கையாண்டிýருக்கிறது. ஆகவே, விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிரான கருணாவின் கிளர்ச்சி ஏற்பட்ட நேரமே புலிகளுக்கு ஒரு விவகாரமாக அமைந்தது.
கருணாவின் படைக்கு எதிராக கிழக்கில் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் கருணா ஓடிýப் போனமை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகளே என்ற அந்தஸ்துக்கு சவாலிடப்பட முடிýயாத ஒரு உரிமையை பிரபாகரன் கோருவதற்கு வழிவகுத்திருக்கிறது.
ஆனால், பலமும் அச்சுறுத்தலுமே இத்தகையதொரு உரிமையைக் கோருவதற்கு அவசியமான கூýறுகள் என்பதை கிளர்ச்சித் தலைவரைத் தோற்கடிýத்த விதம் காட்டுகிறது. புலிகள் ஒருபோதுமே இவற்றுக்கு ஜனநாயக முறையை சோதித்துப் பார்த்ததில்லை.
அண்மையில் நடந்து முடிýந்த பொதுத் தேர்தலில் புலிகளின் பதில் உரிமையாளராகப் போட்டிýயிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு பெற்ற வெற்றியும் தகுதியானதல்ல. ஏனென்றால், பலவந்தப் பிரயோகம், போட்டிý வேட்பாளர்கள் மீதான அச்சுறுத்தல்களின் மூýலமே இந்த வெற்றி பெறப்பட்டிýருக்கிறது.
கருணாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதலின்றி புலிகள் தமது முயற்சியில் வெற்றி பெற்றிருக்க முடிýயாது என்பது தெளிவு. ஆனால், முற்றிலும் குறுகியதொரு விளக்கத்தை நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இங்கு கொடுத்திருக்கிறது.
மார்ச் 3 ஆம் திகதியன்று கருணாவின் கிளர்ச்சியை தடுத்து உடனடிýயாகவே தாக்குதலுக்கான ஆயத்தங்களை புலிகள் ஆரம்பித்த போது யுத்த நிறுத்த உடன்படிýக்கையானது வெறுமனே அரசாங்கத்தின் ஆயுத படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலானதென்றே கண்காணிப்புக் குழு கருதியதாகத் தெரிகிறது.
வன்னித் தலைமை குற்றம் சாட்டிýயது போல மூýன்றாவது சக்தியின் ஆதரவோ அன்றி இலங்கை படைகளின் வெளிப்படையான ஆதரவோ இன்றி ஆயுதங்களைப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுமின்றி போராளிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கருணாவுடனான சண்டையை தடுப்பதற்கு எவருமே தயாராக இருக்கவில்லை.
உயர் இராணுவ தந்திரங்களின் மூýலம் ஏறத்தாழ வன்முறையற்ற ரீதியில் புலிகள் வெற்றியை ஈட்டிýயிருக்கின்றனர். ஆனால், கருணா தனது வரையறைகளை உணர்ந்து கொண்டமைக்கும் பின்வாங்கிச் செல்வதற்கு முடிýவு செய்தமைக்குமே கூýடுதலாகக் கடமைப்பட்டிýருக்க வேண்டும்.
சண்டையில் ஈடுபட வைக்காமல் தனது போராளிகளை கலைந்து செல்லுமாறு கருணா உத்தரவிட்டு இரத்தக் களரியை தவிர்த்திருக்கிறார். தாக்குதல் ஆரம்பத்தில் சில சேதங்கள் ஏற்பட்டன. ஆனால், தொடர்ந்து சண்டை இடம்பெற்றிருந்தால் இரு தரப்பினருக்குமே கூýடுதலான உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டிýருக்கும். பொதுமக்களும் இடையில் சிக்கியிருப்பர்.
விடுதலைப் புலிகளிலிருந்து தான் பிரிந்த பின்னர் அந்த இயக்கம் பெரிதும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது என்று கருணா நம்பிக்கையாக பிரகடனம் செய்த பின்னர் பின் வாங்கிச் சென்றதற்கு அவர் எடுத்த முடிýவு இலகுவானதாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அதுவே சரியான தேர்வாகும்.
இவையெல்லாம் சமாதான முயற்சியை எங்கே கொண்டு வந்து விடுகிறது? இந்தக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதாவது இலங்கை அரசாங்கம் நோர்வே மற்றும் புலிகளுக்கு இந்த நிகழ்வை உறுதியான உடலில் அடிýத்த அடிýயென்றும் இப்போது அது சரியாகிவிட்டதென்றும் காட்ட முற்பட்ட தன்மையே காணப்படுகிறது.
ஆனால், மிகவும் தெளிவான ஒரு கட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை சம எண்ணிக்கையில் கொண்டிýருக்கும் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றி பெறுமதியான கேள்விகளை கருணா எழுப்பியிருந்தார்.
பிறிதொரு கட்டத்தில் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட இதர தரப்பினர் நீங்கலாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் சம்பந்தப்பட்டது என்பதை அவரது கிளர்ச்சி தெளிவுபடுத்தியிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிýந்த தேர்தல் இலங்கைத் தீவின் ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டு நிழல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை உருவாக்கியிருக்கிறது. பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள முடிýயாமல் ஜனாதிபதியின் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் ஸ்திரமான அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துக் கொண்டிýருந்தாலும், சகல தரப்பினரதும் தெளிவான சிந்தனை, நோக்கம் மற்றும் அரசியல் விருப்பங்கள் பிளவுபட்ட இந்தக் கருத்து வெளிப்பாட்டை தமிழர் விவகாரத்தில் பரந்தளவிலான தீர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடிýயும் என்று இந்துவின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிýருக்கிறது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணாவுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீண்டும் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை விடுதலைப் புலிகள் மீண்டும் தமது ப10ரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையடுத்து கருணா மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்டுவந்த பல முக்கியஸ்தர்கள் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய முன்வந்துள்ளனர்.
இது தொடர்பான தங்கள் விருப்பத்தை அவர்கள் உள்@ர் தலைவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
வினோதன் படையணித் தளபதி ஜிம்கெலி தாத்தா, கருணா அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் விசு, நிர்வாகப் பொறுப்பாளர் துரை, வாகனப் பிரிவுப் பொறுப்பாளர் திருமால் மற்றும் நிசாம், சர்மா உட்படப் பலர் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, கருணாவின் பிடியில் மட்டக்களப்பு இருந்த காலத்தில் அட்டகாசம் புரிந்தவர்களை மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், விடுதலைப் புலிகளின் வாகரை மீட்பு நடவடிக்கையின்போது காயமடைந்த தளபதி பாரதிராஜ் புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
'கேணல்" தரம் வழங்கி ரமேர்; கௌரவிப்பு
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியான த.ரமேர்{க்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் கேணல் தரம் வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தளவு உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புடன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை மீளக் கைப்பற்றியமைக்காகவே அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக தெரிகின்றது.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அதன் படையணித் தளபதிகளின் தரங்கள் அவர்களது மறைவுக்குப் பின்பே வழங்கப்படுவது வழக்கம். விதிவிலக்காக குறிப்பிட்ட சில தளபதிகள் மாத்திரமே கேணல் தரத்திலுள்ளனர். அந்த வரிசையில் கேணல் ரமேர்{ம் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Army rejects LTTE request to carry arms in cleared areas
Alladin Hussein in Colombo, April 17, 2004, 5.13 pm. The LTTE is reported to have requested the Sri Lankan Army to allow them to carry weapons in cleared areas, in the North and East province, sources said. However, the Army is reported to have strongly rejected to this LTTE appeal. The LTTE made this request, early this week (15th), during an LTTE Army meeting held in Vavuniya. The meeting was chaired by the Sri Lanka Monitoring Mission Chief Major General Trond Furuhovde.
The security forces also emphasized that the LTTE should not kidnap persons or recruit children for war, while also requesting them not to extort money from the public, famously known as Tiger Tax.
Brigadier Vajira Wijeyagoonewardena and Col. Laksiri Amaratunga represented the Sri Lanka Army, while the LTTE was represented by leaders Kausalyan and Ramesh.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
TNA opposes Presidents move to change the constitution
Alladin Hussein in Colombo, April 17, 2004, 5.15 pm. Amidst strong opposition by many minorities political parties against President Chandrika Kumaratungas decision to change the constitution, the LTTE backed Tamil National Alliance has also declared their strong opposition to her decision to change the constitution.
The TNA has accused that the President is trying to change the constitution not for the benefit of the country but merely for her own personable benefits. According to TNAs S. Addaikalanathan, President Kumaratunga is trying to change the constitution, for her own personal gain, he has claimed.
The TNA, which contested under the Illankai Thamil Arasu Kachchi at the recent General Elections, secured 22 Parliamentary seats and will sit in the Opposition, when it resumes on the 22nd.
President Kumaratunga early this week appointing a panel comprising: Foreign Minister Lakshman Kadirgamar, Presidents Councils M.M. Zuhair and Dr. Jayampathy Wickramaratne, Professor Ranjith Ameresinghe, Mr. R.K.W. Gunesekera, Professor Gamini Keerawella and Mr. Nigel Hatch, as her first step towards amending the constitution.
She is also scheduled to meet this panel, shortly, to discuss the recent people's mandate to repeal and replace the 1978 Constitution, the Presidential Secretariat claimed this week..
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சகாக்களையும் கைவிட்டு கருணா மாயம்
கொழும்பில் தவித்த 8 பேர் புலிகளால் மீட்பு!
விடுதலைப் புலிகளின் மீட்பு அணிகளின் அதிரடித் தாக்குதல்களை அடுத்து மட்டக்களப்பிலிருந்து தப்பியோடிய கருணா, தன்னுடன் இருந்த எட்டுப் பேரையும் நட்டாற்றில் கைவிட்டுக் கம்பி நீட்டியுள்ளார்.
கொழும்பில் தனித்து விடப்பட்ட நிலையில் செய்வதறியாது தவித்து நின்ற அந்த எட்டுப் பேரையும் புலிகள் மீட்டு நேற்றுமுன்தினம் மாலை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தனர். கருணாவால் தளபதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த ஐpம்கெலி தாத்தா, திருமால், றொபேட், துரை ஆகியோரும் கருணாவின் மெய்ப்பாதுகாவலர்கள் நால்வருமே இவ்வாறு அநாதரவாகக் கைவிடப்பட்டனர்.
கருணா தப்பிச்சென்ற இடம் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. கருணாவைத் தமிழீழத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம் பித்த விடுதலைப் புலிகளின் படைய ணிகள் கஞ்சிகுடிச்சாறுப்பகுதியை மீட்டு தரவைப் பகுதி நோக்கி முன்னேறிய சமயம் கருணாவுடன் அவரது விசுவாசிகளான நிலாவினி, வரதன், காயா, ஐpம்கெலி தாத்தா, திருமால், றொபேட், துரை ஆகியோரும் தப்பி ஓடினர். இவர்களுடன் கருணாவின் நான்கு மெய்ப்பாதுகாவலர்களும் சென்றனர்.
இவர்கள் முதலில் மின்னேரியா இராணுவத்தளத்துக்கு சென்றனர். அங்கிருந்து கருணா, வரதன், நிலாவினி, காயா ஆகியோர் ஒருவாகனத்திலும் ஏனைய எட்டுப்பேரும் இன்னொரு வாகனத்திலும் ஏற்றப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.பிரஸ்தாப எண்மர் சென்ற வாகனம் கொழும்புக்குச் சென்றதாகவும் அங்கு தாங்கள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தற்சமயம் தெரிவித்தனர்.
தாங்கள் சென்ற இடத்துக்குக் கருணா வரவில்லை என்றும் அவரிடம் தொடர்புகொள்ளத் தாங்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தமக்கு என்ன நடக்குமோ என்று தெரியாது அச்சம் அடைந்த அவர்கள் மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பில் இருந்து இரு வாக னங்கள் உடனடியாகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மட்டக்களப்புக்கு அழைத்துவரப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் அவர்கள் தங்கியிருந்த இடம் தொடர்பான விவரங்கள் நேற்றிரவுவரை தெரியவரவில்லை.
Source: Uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மரணித்த பிரதேசவாதம்: சிங்களத்திற்கான மீளமுடியாத தோல்வி
மட்டு-அம்பாறை மாவட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வலிந்ததொரு பிரதேசவாதத்திற்குள் சுமார் 39 நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. சமூக வாழ்வியலின் உச்ச உணர்வலையாக இருக்கும் தான் சார்ந்த சமூகம் குறித்த ஒட்டுதல், தனது இருப்பிற்கான போராட்டம் என்பவற்றின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழர் தரப்பு கொண்டுள்ளதாகத் திணிக்கப்பட்ட கருத்தானது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்ற போதிலும், அதனை செயலாக்கம் பெறவைப்பதற்கான நெருக்குதலை கருணா இறுதி வரை கொடுத்து வந்தார். ஏனெனில், கருணா கிழக்கின் சக்தியாக தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையை சதியாளர்கள் அவருக்கு ஏற்படுத்தியிருந்தார்கள்.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஒரு தரப்பாக மாறியிருந்த முப்படைத்தளபதி பலகல்லவும், ஐனாதிபதி அலுவலகமும் கருணாவை ஒரு தாக்கமிகு பாத்திரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மறைமுகமாகச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக திராணியற்ற ஒரு படையைக் கொண்டுள்ள சிறீலங்கா, எதிராளியான தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்த முன்னின்ற அதேவேளை, தமிழர் தரப்புப் பிளவுபட்டால், தமிழர்களின் பேசும் பலம் குறைக்கப்படலாம் என்பதிலும், தமிழர்களின் ஒரே தலைமை விடுதலைப்புலிகள் தான் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடனும் ஒரு நீண்ட கால நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்தது.
இதனடிப்படையில் கருணாவிற்கான சகல ஆதரவுகளையும் வழங்கும் உத்தரவாதத்தை மேற்படி தரப்பு வழங்கியிருக்க வேண்டும். அதன் காரணமாக கருணா தனித்து இயங்குவதற்கான நடவடிக்கைகளாக நிதி மோசடி, வயதுகுறைந்த போராளிகளை தலைமைக்குத் தெரியாமல் இணைத்தல், தனது நம்பிக்கைக்குரியவர்களை பொறுப்புக்களில் நியமித்தல் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வந்தார். ஆனால் தலைமைப்பீடம் இவரது நடவடிக்கைகள் பற்றிய ஐயப்பாட்டினை உடனேயே வெளிப்படுத்தியதானது, 'சதிக்கான காலம் கனிய முதலே" தனது சதித் திட்டத்தை அறிவிப்பதற்கான சங்கடத்திற்குள் கருணாவைத் தள்ளியிருந்தது.
மறுபுறத்தே கருணாவின் இந்தத் திடிர் அறிவிப்பு சிறீலங்காவின் திட்டத்தை உருக்குலைப்பதாகவே இருந்தது. போர் ஒன்று மீண்டும் ஆரம்பமாகும் போது மட்டு-அம்பாறைப் பிளவு தொடர்பான தனது நிலைப்பாட்டை கருணா அறிவிப்பதற்கான தயாரிப்புக்களிலேயே சிறீலங்கா கருணாவை ஈடுபடுத்தி வந்தது. ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையில் இச்சதி அறிவிப்பு வெளியிடப்படும் போது, தமிழர் தரப்பு போரரங்கைச் சந்திக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதுடன், வட-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வர அது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும்.
எனவே 'முழுமை பெறாத சதியாக" இது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கருணா பாதுகாப்புப்படைகளுடனான ஒப்பந்தமொன்றிற்கான வரைவைப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பிய போது, அதனை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையை பாதுகாப்பமைச்சு வெளிப்படுத்தியது. நோர்வே, ஐப்பான், கண்காணிப்புக் குழு ஆகியன இப்பிரச்சினையானது விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினை என்ற கருத்தை ஏற்றிருந்தமை பாதுகாப்பமைச்சகம் மேற்படி முடிவை நாட நிர்ப்பந்தித்திருக்கலாம். ஆனால் தொலைபேசி மூலம் பலகல்லவுடன் தொடர்ச்சியான தொடர்புப் பேணலை மேற்கொள்ளும் கருணாவிற்கோ சிறீலங்காவின் இந்த முடிவு ஒரு இழப்பாக இருந்தது.
ஏனெனில், பாதுகாப்பமைச்சின் இந்த நிலைப்பாடு கருணாவினால் சற்றுமே எதிர்பார்க்கப்படாத ஒன்று. கிழக்குப் பிராந்தியத்திற்கான தளபதிகள் அனைவரும் தலைமைப்பீடத்துடன் இணைந்து நின்ற போது, தனது நிலையைப் பேணுவதற்கான உச்சக்கட்ட ஆயுதமாக நம்பியிருந்த ஒரு ஒப்பந்தம் உயிர்பெறவில்லை என்பது கருணாவைத் தளம்ப வைத்தது. இதன் காரணமாக பிரதேசவாதத்தை முழுமூச்சுடன் உயிர்ப்பிக்கும் திட்டத்தில் அவர் பேராசிரியர்கள், மாணவர்கள், புத்திஐPவிகளைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்த முனைந்ததுடன், தனது பலம் குறித்த ஆயுத, ஆளணிகளை சர்வதேச ஊடகங்களிற்கு காட்சிப் பொருளாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டார்.
இவ்வாறானதொரு தளர்வு நிலையைக் கருணா அடைந்த போதும், சிங்களம் தனக்கான ஆயுத, நிதித் தேவைகளிற்கான பின்புலமாக நிற்கும் என்கிற நம்பிக்கையை அவர் இறுதிவரை கொண்டிருந்தார். சிங்களம் கூட தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினு}டாக படைகளையும், ஆயுதங்களையும் வாகரை நோக்கி நகர்த்த கருணாவிற்கு உதவியமை, வடபுல மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்துகூட வெளியேற்றப்படத் துணை நின்றமை, மட்டக்களப்பு நகரப்பகுதியில் ஆயுதபாணிகளாக செயற்பட அனுமதித்தமை போன்ற செயற்பாடுகளின் மூலம் இதனை நிரூபித்தன. இதற்கும் மேலாக முப்படைத் தளபதி இறுதிவரையும் கருணாவின் காப்பாளனாகவே தன்னைக் காட்டிவந்தார்.
மட்டு-அம்பாறை மீட்புப் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு ஓரிரு தினங்களிற்கு முன்னர், லயனல் பலகல்ல இந்தியச் செய்தி நிறுவனமொன்று வழங்கியிருந்த செவ்வியில், 'கருணாவின் கையாளுகை வித்தியாசமானது, அவர் கிழக்கில் வரியிறுப்புக்களை மேற்கொள்வதில்லை, அவர் கொலைகளைச் செய்வதில்லை, பலவந்தமாக ஆட்கடத்தல்களைச் செய்வதில்லை, அவர் மிகவும் உறுதியான ஆதரவுத் தளத்தை மக்கள் மத்தியில் கொண்டுள்ளார், கருணா தொடர்ந்து இவ்வாறிருந்தால் புலிகள் பலவீனப்பட்டுப் போவார்கள்" என்று தெரிவித்திருந்தார். இதுவே லயனல் பலகல்லவின் நேரடிப்பங்கிற்கான ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, கருணா பற்றி அவர் செவ்வியில் தெரிவித்திருந்த கருத்துக்கள், ஒரு நாட்டின் முப்படைத் தளபதிக்கான இராஐதந்திரக் குணாம்சங்களை கொண்டிராத ஒருவராகவும், தான் சார்ந்திருந்த ஒரு விடயத்தினை, தனது எதிராளிகளிடையே தம்மால் அரங்கேற்றப்படும் ஒரு சதியை மறைப்பதற்குரிய இராணுவ இரகசியம் பேணும் தன்மையைக் கொண்டிராத ஒருவராகவுமே சிறீலங்காவின் முப்படைத் தளபதியை அடையாளப்படுத்தியது. இவ்வளவிற்கும் பலகல்ல சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினை 1984ல் ஆரம்பித்தவர் என்பதோடு, அதற்கான தலைவராக நீண்டகாலம் இருந்தவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
1993ல் இடம்பெற்ற தவளைப் பாய்ச்சல் (பூநகரித் தாக்குதல்) நடவடிக்கை குறித்த புலனாய்வை சரியாக மேற்கொள்ளவில்லையென்று இராணுவ நீதிமன்றால் கண்டிக்கப்பட்டு பதவி மாற்றத்திற்கு உள்ளாகி, இராணுவ ஆட்டிலறிப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். எனினும் தனது நீண்டகாலப் பணியான புலனாய்வில் அக்கறை கொண்டதொருவராகவே அவர் இவ்வாறான சதி நடவடிக்கைகளில் நேரடியாகத் தன்னை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் கருணாவின் சதி முயற்சிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போது நேரடியாக உதவக்கூடியதொரு தரப்பாக சிறீலங்கா இராணுவம் இருப்பதற்கான சு10ழ்நிலைகளை இராஐதந்திரக் களநிலை அதற்கு வழங்கவில்லை.
ஆனால், கருணாவோ தனது தப்பியோடலைப் பற்றிய சிந்தனையின்றி, சிறீலங்கா இராணுவம் தனக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இறுதிவரை இருந்துள்ளார். எனவேதான் சடுதியானதொரு தப்பியோடலை மேற்கொள்ள அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அதன் போது புலனாய்வுதுறைப் போராளியான லெப். கேணல் நீலனை பேரம் பேசுபொருளாக அவர் கடத்த முனைந்து, அது சாத்தியமற்றதானதும் அவரைப் படுகொலை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் நீலனைப் பற்றி சிங்களப் பத்திரிகையாளர் ஒருவருக்கு பிரஸ்தாபித்திருந்தார். கருணாவின் திட்டங்கள் அனைத்துமே பொய்த்த போதும் சிறீலங்கா அவரைக் காப்பாற்றுவதில் கை கொடுத்திருக்கிறது.
எனினும், கருணா தங்களிடம் இல்லை, ஆனால் அவர் அடைக்கலம் கோரினால் அதனை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பலகல்ல முன்னெச்சரிக்கையாக அறிவித்திருந்தார். இதுவே தங்களின் பங்கு இந்தச் சதி முயற்சியில் இருக்கிறது என்பதை மறைப்பதற்காக அவர்கள் கருணாவையும்; அவரது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்ற வேண்டிய தேவையில் இருந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. எனினும் கருணா தங்களிடம் இருக்கிறார் என்பதை சிங்களம் ஒத்துக் கொள்ளாதவரை, கருணாவினது இருப்பு மட்டும் கேள்விக்குரியதல்ல, சமாதானப் பேச்சுக்கான சாத்தியங்களும், தற்போதைய அரசின் சமாதான விருப்பும் கேள்விக்குரியனவே.
இந்தச் சதியில் சம்பந்தப்பட்டதன் மூலம் சிறீலங்கா, தமிழர் தரப்பின் நம்பிக்கையீனத்திற்கு மட்டுமுள்ளாகவில்லை. மாறாக தமிழர் தரப்பைப் பலப்படுத்தும் ஒரு மாறுபட்ட களத்தையமைத்துக் கொடுத்துள்ளது. இச் சதியையடுத்து தமது தளங்கள் முகாம்களை தமிழர் தாயகமெங்கும் மாற்றியமைக்கும் தேவையை தமிழர் தரப்புப் பெற்றுள்ளது. இதுவே ஆண்டாண்டாக சிறீலங்காவின் புலனாய்வுத்துறை தமிழர் தரப்பின் தளங்கள், முகாம்கள் தொடர்பாக சேகரித்த தகவல்களை ஒட்டுமொத்தமாகப் பயன்பாடற்றதாக மாற்றப் போகிறது. இதன்மூலம் தாங்கள் அரங்கேற்ற முயன்ற சதியானது தங்களையே ஒரு துன்பியலிற்குள் தள்ளும் நிலையை சிறீலங்கா அடைந்துள்ளது.
மறுபுறமாக இந்தச் சதி எதிர்ப்பு எப்படியிருந்தது என்பதனை ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் கொழும்பு நிருபரின் வார்த்தைகளிலேயே உள்வாங்கிக் கொள்வோம். 'பிரபாகரன் முன்னிருந்ததை விடப் பலம்பொருந்திய சக்தியாக இப்போது பரிணமித்திருக்கிறார். இந்நடவடிக்கை மூலம் ~தான் வெல்லப்பட முடியாதவர்| என்ற பதத்திற்கு மேலும் வலுச் சேர்த்துள்ள பிரபாகரன், குறைந்த இழப்புக்களோடு நடவடிக்கையை முடிவிற்கு கொண்டு வருவேன் என்பதைச் செயலிற் காட்டி, திட்டங்களை நேர்த்தியாகவும், செவ்வனேயும் செயற்படுத்தும் ஒருவராக மாத்திரமல்ல, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் ஒருவராவும் தமிழர்களிடையே அவர் திகழ்கிறார் என்று அந்த நிருபர் தெரிவித்துள்ளார். ஆம் இதுவே சிங்களத்தின் தோல்விக்கான சாட்சியமுமாகிறது.
Thanx: சுதர்மா - கனடா / TamilNatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
தேசிய முன்னனி பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் சுய விருப்பின் பெயரில் விலகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
(முழுமையான செய்திகள் இன்னமும் கிடைக்கவில்லை)
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ராஜீவ் கொலையில் நீலனுக்குத் தொடர்பு இருந்ததை மறுக்கிறார் இந்திய உயர் அதிகாரி டி.ஆர்.கார்த்தியேகன்
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்ட உதவிப் புலனாய்வுப் பொறுப்பாளர் நீலனுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் பங்களிப்பு இருந்ததை மறுக்கிறார் படுகொலை வழக்கை விசாரணை செய்த இந்திய விசேட விசாரணைப் பிரிவின் தலைவரான டி.ஆர்.கார்த்தியேகன் நீலன் கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு மருத முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு ராஜீவ் கொலையுடன் நேரடி தொடர்பு இருந்ததற்கு ஆதாரமில்லையென கார்த்திகேயன் கூறினார்.
ஆனால்இ சிவராசன்இ நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தியாதாகவும் தான் சொந்தமாக வயலர்ஸ் செட்டை பெற்றுக் கொள்ளும்வரை சிவராசன் நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தினால் எனவும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
1990 இறுதிக் காலாண்டுப் பகுதியில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானால் நீலன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு புலனாய்வுத் தளத்தை அமைக்கவே அவர் அங்கு அனுப்பப்ட்டதாகவும் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
நீலனின் வயலர்ஸ் செட்டை சிவராசன் பயன்படுத்தினாலும்இ ராஜீவ் கொலைச் சதியில் ஈடுபட்ட குழுவில் நீலன் அங்கம் வகிக்கவில்லை எனவும் கார்த்தியேன் தெரிவித்துள்ளார்.
நீலன் படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பல இந்திய தமிழ்இஆங்கில மொழிப் பத்திரிகைகளும்இ கொழும்பில் இருந்து வெளியாகும் சில ஆங்கிலப் பத்திரிகைகளும் ராஜீவ் படுகொலையுடன் தொடர்புடைய நீலன் கொலை செய்யப்பட்டு விட்டாரென்ற தலையங்கத்துடன் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டிருந்தன.
தினக்குரல்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரு அரசியல் இயக்கத்தை முதன் முதலில் முன்னெடுத்த ஒரு கட்சியின் மூலவர்களுள் ஒருவர் என்பதை ஏற்பதில் எவருக்கும் தயக்கம் வேண்டியதில்லை. எனினும், நடைமுறை அரசியலில் மலையக மக்கள் பற்றியோ முஸ்லிம்கள் பற்றியோ தென்னிலங்கையில் குடி யேறிய பல்வேறு தமிழ் பேசும் மக்கள் பற்றியோ கூடத் தமிழ்த் தேசியவாதத் தலைமை எதற்குமே தெளிவான ஒரு பார்வை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி 1948 இல் தோற்றுவிக்கப்பட்ட போதும், 1956 வரை மட்டக்களப்பில் அதன் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் சூ ழ்நிலை ஏற்படவில்லை. 1948 இல் மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்ட போதும், 1956 வரை அதைப் பறிக்க உதவி செய்த தமிழ்க் காங்கிரஸ் தலைமை வடக்கில் மக்களால் நிராகரிக்கப்படவில்லை. இலங்கை முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களுக்கு சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடந்த எண்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு துரோகியாகவே தெரிந்துள்ளார். முஸ்லிம்கள் தமிழ் பேசுவதால் மட்டும் எல்லாத் தமிழருக்கும் பொதுவாக உருவாக்கக் கூ டிய ஒரு கோரிக்கையை அவர்கள் சார்பிலும் முன்வைக்க இயலாது என்ற எளிய உண்மை என்றுமே தமிழ்த் தேசியத் தலைமைகளுக்கு உறைத்ததில்லை. இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சியை விடத் தமிழ்க் காங்கிரஸ் தனது யாழ்ப்பாண வேளாள மேலாதிக்க அரசியல் காரணமாக யதார்த்தமான ஒரு பார்வையைக் கொண்டி ருந்தது.
தமிழ் மக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பதற்கான முயற்சிகளில் தமிழ்க் காங்கிரஸ் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டிலும் நியாயம் உண்டு. சமர்;டி க் கோரிக்கை, தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற கருத்துக்களை வன்மையாக எதிர்த்த வரலாறு தமிழ்க் காங்கிரஸினுடையது. வட்ட மேசை மாநாடு என்று ஜி.ஜி.பொன்னம்பலம் பேசியபோது வட்ட மேசையா சதுர மேசையா என்றெல்லாம் கிண்டல் செய்து அவரை ஓரங்கட்ட முயன்ற பெருமை தமிழரசுக் கட்சியினது. எனவே, தமிழ்க் கட்சிகள் என்பன தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்த விரும்புகின்றன என்பதை தான் என்றுமே நம்பியதில்லை. தமிழ் மக்களைத் தம் ஏகபோக ஆதிக்கத்தினுள் வைத்திருக்க ஒவ்வொரு கட்சியும் முயன்றுள்ள அளவுக்கு அவர்களை ஒற்றுமைப்படுத்த என்றுமே முயன்றதில்லை. இப்பத்திரிகையில் முன்பு குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது சாதி, வர்க்கம் என்ற ஆதிக்க முரண்பாடுகளை மீறி இயலுமானதல்ல. முதலில் சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய நேர்மையான அறஞ்சார்ந்த ஒரு நிலைப்பாட்டை ஒரு தலைமை மேற்கொள்ளாத வரை, அதனால் ஒரு தேசிய இனத்தையோ ஒரு நாட்டையோ ஒற்றுமைப்படுத்த இயலாது.
சாதி பேதங்களை தமிழரசுக் கட்சித் தலைமை களைந்ததாகப் பேசப்பட்டது. அதே தலைமை தான் 1960 களில் சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சியிற் சாதி வெறியர்கள் தரப்பில் நின்றது. இன்னமும் தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் வடக்கில் பல இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றனவென்றால், கால் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டம் சாதித்தது என்ன?.
நாம் முதலில் பாசாங்குகளை விட்டொழிக்க வேண்டும். நாம் எமது கண்களை மூ டிக் கொள்வதால் பிரச்சினைகள் இல்லாது போய் விட மாட்டா. உண்மை நிலை ஏதென்றால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியதாக எந்தத் தலைமையும் பெருமை பேச முடியாது. தமிழர்களை ஒற்றுமைப்படுத்திய பெருமை உண்மையில் சிங்களப் பேரினவாதிகளுக்கேயுரியது. எனினும், மிகப் பெரிய பேரினவாதியான டி.எஸ்.சேனநாயக்க தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடி யேற்றத்தின் மூலம் தமிழரைச் சிறுபான்மையினராக்க முயற்சி எடுத்த போதோ, அது தெட்டத் தெளிவான விளைவுகளை ஏற்படுத்திய போதோ, மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்த போதோ தமிழர்களால் ஏன் ஒற்றுமைப்பட இயலாது போனது? எந்தத் தமிழ்த் தலைமையும் இவை பற்றிப் பேசிய அளவுக்கு நடைமுறையில் சமூ கத்தை விழிப்ப10ட்டத் தவறிவிட்டது ஏன்? 1956 இல் சிங்கள மொழிச் சட்டம் வந்தபோது தமிழுக்கு ஆபத்து என்ற கோர்த்தை முன் வைத்து ஒருவிதமான தமிழர் ஒற்றுமை உருவானது. உண்மையில் தமிழ் பேசும் தேசிய இனங்களின் நலனுக்கு சிங்கள மொழிச் சட்டத்தை விடத் தமிழர் நடுவே வளர்த்துவரப்பட்டுள்ள ஆங்கில மோகமும் மேலை நாடுகள் பற்றிய மனோரீதியப் படிமங்களும் தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியாகி வந்துள்ள பண்பாட்டுச் சீரழிவு அம்சங்களும் கூ டிய தீங்கு செய்துள்ளன.
தமிழரின் ஒற்றுமை பற்றி 1956 இல் ஏற்பட்ட விழிப்பால் முஸ்லிம்களையும் தமிழரையும் ஒற்றுமைப்படுத்த இயலாது போனதற்கு என்ன காரணம்? தனியே முஸ்லிம் தலைவர்களை மட்டுமே பழி சொன்னால் சரியாகுமா? 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகத்தின் பின்பு ஏற்பட்ட சரிவைச் சரிக்கட்டி, நிமிர்த்த உதவியவை 1970 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தரப்படுத்தலும் 1972 ஆம் ஆண்டு வந்த அரசியல் யாப்புமே. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழத்துக்காக மக்கள் வாக்களித்ததாக நான் நம்பவில்லை. த.வி.கூட்டணியால் தமிழீழத்தை அல்ல ஒரு தந்திக் கம்பத்தைக் கூ ட போராடி வென்றுதர இயலாது என்பது பலரும் அறிந்ததே. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கு எதிரான குரலாகவே 1977 தேர்தலில் மக்கள் பெருவாரியாகத் த.வி.கூ ட்டணிக்கு வாக்களித்தனர்.
அதன் பின்னர் உக்கிரமடைந்த ஒடுக்குமுறை இரானுவ அடக்குமுறையாகவும், போராகவும் மாறிய பின்பு, தமிழ் மக்களிடையே தேசிய இன அடிப்படையில் போராட்ட ஒற்றுமைக்கான வாய்ப்பு ஏற்பட்டது. வட-கிழக்கு முஸ்லிம்களையும் அணைத்துச் செல்லும் வாய்ப்பும் ஏற்பட்டது. அது எவ்வாறு சிதறடிக்கப்பட்டது என்பதைப் பற்றித் தமிழ் மக்கள் சுயவிமர்சனப் பாங்காகவும் ஆராய வேண்டும்.
இப்போது பேசப்படும் தமிழ் மக்களின் ஒற்றுமைப் பிரகடனம் எதுவுமே தேர்தலில் ஆசனங்களைத் தக்க வைப்பதற்கான தந்திரமே அல்லாமல் வேறல்ல. மட்டக்களப்பில் தேர்தலில் வெல்ல கருணா சொற்படி, கேட்கக் கூடி யவர்கள் இருக்கலாம் என்றால், நாளை வட-கிழக்கின் இன்னொரு பகுதியில் இதுபோல ஒரு பிளவும் போட்டித் தலைமையும் உருவானால், அதற்கு உடன்பட்டுப் போகக் கூ டிய தலைவர்களைத் தான் நாம் கொண்டி ருக்கிறோம். இன்று, பாராளுமன்றத் தலைமை என்பது பதவிக்காக வால் பிடிப்பது என்றாகி விட்டது. இது இப்போது மக்களுக்குத் தெளிவாகி விட்டது. மட்டக்களப்புப் பிரதேசவாதம் பெரிதாக எழுவதற்கு அடிப்படையில் ஒரு நியாயமுமே அற்ற ஒரு சூழ்நிலையில் அது கிளறிவிடப்படக் கூடும் என்றால், தமிழ்த் தேசியவாதம் ஆற்ற வேண்டிய சமூ க அரசியல் பணிகள் இன்னமும் நிறையவுள்ளன.
இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்கள் தமது இருப்பை முற்றாகவே தம் வசமாக்க இயலும் என்றால், தவறான போக்குகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்க இயலும் என்றால், ஒரு சிலரால் ஒரு விடுதலை இயக்கத்தை எளிதாகப் பிளவுபடுத்த இயலாது போய்விடும்., இதிலுள்ள பலவீனத்தைத் தான் தமிழ் மக்களின் விடுதலையை எதிர்ப்போர் பயன்படுத்துகின்றனர்.
கருணாவின் கடந்த காலம் பற்றிய விமர்சனங்கள் பயனற்றவை. அவை அவரைவிட அவர் மீது குற்றஞ்சுமத்துவோரது தகைமை பற்றியும் வினாக்களை எழுப்பக் கூ டும். முக்கியமானது ஏதெனில், அவரது சமகால நடத்தை கருணாவுக்கும் கதிர்காமருக்கும் வேறுபாடு தெரியாத விதமாக அவரது போக்கு இப்போது அமைகிறது. அதை இயலுமாக்கியவர்கள் தாம் வேண்டியதைச் சாதித்து விட்டனர். கருணா போனாலும் அதன் பாதிப்பைத் தமிழ் மக்களின் போராட்டம் நீண்ட காலத்துக்கு அனுபவித்தே தீரும்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|