Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
Nஐ.வி.பி. - சுதந்திரக்கட்சிக்கிடையில் கடும் முறுகல் நிலை

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 1:45 ஈழம் ஸ

மஹிந்த ராஐபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்தமை உட்பட, அமைச்சர் நியமனங்கள், அமைச்சுக்களின் பிரதான பணிகள் மாற்றியமைக்கப்பட்டமை போன்றன தொடர்பாக, Nஐ.வி.பி.க்கும் சந்திரிகாவின் அணிக்கும் இடையில் கடும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

Nஐ.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா, ஐனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதியுள்ள மிகவும் காரசாரமான கடிதத்தில், இவற்றை விபரமாகத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், லக்ஷ்மன் கதிர்காமரையே பிரதம மந்திரியாக நியமிக்கும்படி கேட்டபோது, ஐனாதிபதி சந்திரிகா அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், ஒரு பௌத்த சிங்களவரை நியமிக்கும் தேவையிருந்திருந்தால் கூட, அநுரா பண்டாரநாயக்காவை அல்லது மைத்திரிபால சேனநாயக்காவை நியமித்திருந்தால், அது தமக்கு திருப்தியளித்திருக்கும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியாக நியமிக்கப்படக் கூடாது என்று மஹிந்த ராஐபக்ஷ விடயத்தில் தாம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தும், சந்திரிகா தான்தோன்றித் தனமாக எடுத்துள்ள அந்த முடிவு, தமக்கு மிகவும் அதிருப்தி அளிப்பதாக உள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்:

சுதந்திரக் கட்சியின் சார்பில் 65 ஆசனங்களும், Nஐ.வி.பி. சார்பில் 40 ஆசனங்களும் பாராளுமன்ற அமைச்சரவையில் உள்ளன. தற்போது சுதந்திரக்கட்சிக்கு 31 அமைச்சுக்களும், 31 பிரதி அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன. Nஐ.வி.பி.க்கு 4 அமைச்சுக்களும் 4 பிரதி அமைச்சுக்களும் வழங்கப் பட்டுள்ளன. அமைச்சுக்கள் வழங்கப்பட்ட விகிதாசாரப் படி பார்க்கையில், இது மிகவும் முரண்பாடாக அமைந்துள்ளன. 65 ஆசனங்களுக்காக 62 பதவிகளும், 40 ஆசனங்களுக்காக வெறும் 8 பதவிகளும் வழங்கப்பட்டுள்ளமை மிகவும் நேர்மையற்ற பதவி வழங்கலை வெளிக்காட்டுகிறது. இது நாம் ஏற்கனவே பேசி ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளுக்கு மிகவும் முரணானது.

இது தவிர, தேர்தலுக்கு முன்னரே இணங்கியபடி, நான்கு அமைச்சுக்களை Nஐ.வி.பி. பெற்றிருந்தாலும், தரப்பட்ட நான்கு அமைச்சுக்களிலும், எம்மைக் கலந்தாலோசிக்காது, தந்திரமாக சில பணிகளை அவ்வமைச்சுக்களிலிருந்து நீக்கியுள்ளமை குறித்து நாம் விசனமடைகிறோம். குறிப்பாக:

1) விவசாய மற்றும் நிலவள அமைச்சிலிருந்து, எம்மைக் கேட்காது திடிரென மகாவலி அபிவிருத்திப் பணியை நீக்கியுள்ளமை.
2) கலாச்சார அமைச்சிலிருந்து சிறீலங்கா திரைப்படத் துறையையும் திரைப்பட சென்சார் துறையையும் நீக்கியுள்ளமை.
3) கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து கிராமிய வங்கி உட்பட நிதி நிறுவன முகாமைத்துவத்தை நீக்கியுள்ளமை.
4) தொழில்வள அமைச்சிலிருந்து சில முக்கிய பணிகளை நீக்கியுள்ளமை.

Nஐ.வி.பி.யும் கூட்டணியின் பிரதான அங்கம் என்ற வகையில், இவை குறித்து பேசித் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, எந்தவித முன்னறிவித்தலுமன்றி, தந்திரமாக, இந்த அமைச்சுக்களின் பொறுப்புக்களைப் பிரித்தெடுத்துவிட்டு, வழங்கியிருப்பது மிகவும் பெரிய குற்றம் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சில நாட்களுக்குள் எழுத்து மூலம் தமது கட்சியின் தலைமைக்கு, ஐனாதிபதி சந்திரிகா பதில் தரவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Lanka considers offering refuge to Karuna

Colombo, April 12. (PTI): Sri Lanka today said it was willing to consider granting refuge to rebel Tamil Tiger leader, V Muralitharan, who abruptly ended a factional fight between the LTTE, Defence Secretary Cyril Herath, said.

The government was willing to consider requests for refuge for Muralitharan, better known as Karuna, who abruptly ended fighting, but is reportedly being pursued by the main guerrilla group, Herath said.

"If there is a request, we are willing to consider it on humanitarian grounds," he said adding "but we have not heard from him. He is very much on his own. But if there is a request for refuge, we will consider."

Herath denied that the military had sent a helicopter to the east of the island to rescue Karuna after he disbanded his fighters and called it 'quits' unable to face the major offensive by the LTTE.

நன்றி - த ஹிண்டு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிந்திய செய்தி: கருணா, நிலாவனி இருவரும் கொழும்புக்குத் தப்பியோட்டம்
காவலு}ர் கவிதன் திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 20:51 ஈழம்

தேனகம் உட்பட மட்டக்களப்பின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கருணாவும் நிலாவனியும் கொழும்புக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நிலாவனி
<img src='http://www.tamilalai.net/Photos/2.JPG' border='0' alt='user posted image'>
Reply
Quote:6000 பேர் பின்னால் நிற்கிறார்கள் அதில் காட்டினார்கள் இதில் கூறினார்கள் என்று பிதற்றியவர்கள் இன்று மௌனத்தில் ஏனோ?
எல்லாம் ஒரு கலர்தான்!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இப்ப 6000 இல்லை தனிய 1தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
காலக்கண்ணாடியில் கருணா

12.04.2004


<b>மட்டக்களப்பு, அம்பாறையை மட்டுமல்ல - தமிழீழத்தை - ஏன் தமிழர் வாழும் முழு உலகத்தையுமே - அச்சத்திலும் ஆதங்கத்திலும் ஆழ்த்தி அலைக்கழித்த ஒரு மன உளைச்சல் இன்று எம்மைவிட்டு அகன்று விட்டது. இருட்டு விலகி வெளிச்சம் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. கருணாவின் முகத்திரை பகிரங்கமாகவே கிழிந்துபோயுள்ள இத்தருணத்தில் கருணா குறித்து எஞ்சியிருக்கும் சில மாயைகளும் அகற்றப்படவேண்டும். இதற்கான சில தடயங்களை ஒலிக்கீற்றுகளாக கருணாவின் கடந்தகாலத்தில் இருந்து மீட்டுவருகிறது இக்கட்டுரை.</b>

தன் மீதான நியாயமான குற்றச்சாட்டுகளை ஒரு தளபதிக்கேயுரிய நேர்மையுடனும் தீரத்துடனும் முகம்கொடுக்கத் திராணியற்ற நிலையில் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரமுற்று மேலும் மேலும் அடுக்கடுக்காகத் துரோகமிழைத்த கருணா இன்று தமிழீழத் தேசியத்தின் சக்திக்கு முகம் கொடுக்கமுடியாமல் தொப்பிகலை முகாமை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

கடந்த சில கிழமைகளாக எதிர்ப்போராட்ட சக்திகள் ஏற்கனவே போட்டுவைத்திருந்த கொழுகொம்புகளைப் பற்றிக் கொண்டது மட்டுமல்ல தனது கற்பனை போன போக்கில் எல்லாம் எதிர்ச்சக்திகளுக்குத் தீனிபோடும் முயற்சியிலும் கருணா இறங்கினார்.

அரசியல் அறிவோ, விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிய ஆழமான பார்வையோ இல்லாதவர்கள் கூட அப்பட்டமாக விளங்கிக்கொள்ளக்கூடியவாறான சில பொய்களையெல்லாம் கருணா இயற்றலானார்.

ஏன்? ஈ.பி.டி.பி போன்ற கூலிப்படையினர் கூட ஏளனம் செய்யுமளவுக்குத் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் முயற்சிகளுக்கு முண்டுகொடுக்கலானார்.

ஆனால், அவரது முயற்சிகள் எடுபடவில்லை. தேசியத்தின் முன் அடிபட்டுப் போய்விட்டன.

ஏதோ இருபது வருடங்களாகத் தலைவரை நன்றாக அறிந்தவர் என்றும் அதனால் தலைவரின் சிந்தனையைத் தான் நன்கு அறிவேன் என்றும் பிரகடனப்படுத்துவதன் மூலம் தன்னைத் தானே எதிர்ச்சக்திகளுக்கு அவசியம் தேவையான ஒரு வேண்டுபொருளாக விளம்பரப்படுத்தினார்.

தற்காப்பு யுத்தம் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்தியது தனது வேலை என்பது போன்ற பாணியிலான கட்டுக்கதைகளை தொப்பிகலையில் இருந்து ஓடுவதற்குச் சிலநாட்களுக்கு முன்னர் பந்துல ஜெயசேகரா என்ற சிங்களப்பேரினவாத ஊடகவியலாளருக்குத் தெரிவித்திருந்தார் (பந்துலவைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையை நிழற்பதிப்பு வெளியிட்டிருக்கிறது).

இந்த மாயை பற்றிய சில உண்மைகளை நாம் தரிசிக்கவேண்டிய தேவையுள்ளது.

ஒரு போர் பல சமர்களைக் கொண்டது. ஒரு சமர் (டீயவவடந) பல சண்டைகளைக் (ஊடயளாநள்) கொண்டது.

ஒரு சமரின் அங்கங்களான தனித்தனியான சண்டைகளைத் தலைமை தாங்கி மூர்க்கமான முறையில் சண்டையிட்டு கொடுக்கப்பட்ட இலக்குகளைச் சென்றடையும் திறமை கைவரப்பெற்ற ஒரு கட்டளைத் தளபதியாக இயங்கும் திறன் கருணாவுக்கு இருந்தது. அது மட்டுமன்றி போரியலை நவீன மயப்படுத்துவது தொடர்பான ஆர்வமும் ஏனைய தளபதிகளைப் போலவே கருணாவுக்கும் இருந்தது.

ஏனைய தளபதிகளை விடவும் சில சிறப்பான சலுகைகள் கருணாவுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கிட்டியிருந்தன. பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டமையால் அளவுக்கு அதிகமாக ஊடகப் பிரசித்திபெற்ற தளபதியாக கருணா உருவெடுத்திருந்தார்.

கருணாவின் வாழ்வை துரோகத்திற்கு முன், துரோகத்திற்குப் பின் என்ற இரண்டு கட்டங்களில் வைத்து ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.

துரோகத்துக்கு முன் தான் பெற்றிருந்த பிரசித்தியைத் துரோகத்துக்குப் பின் கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

துரோகத்துக்குப் பின்னான சமீபத்தைய நாட்களில் தன் இராணுவத் திறமைகள் பற்றிய சில மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை கருணா திட்டமிட்ட வகையில் ஆங்கில ஊடகங்களுக்கு வெளியிட்டுவந்துள்ளார்.

இராணுத் தந்திரோபாய உத்திகளை வகுத்துத், திட்டங்களைத் தீட்டி, வியூகங்களைத் தீர்மானித்துச் சமர்களுக்குத் தலைமை தாங்கும் வல்லமை கைவரப்பெற்ற ஒருவரையே இராணுவ உத்தியாளர் (ஆடைவையசல ளவசயவநபளைவ) என்ற வரைவிலக்கணத்துக்கு உட்படுத்தலாம்.

ஒரு சமரின் சண்டைகள் எவையெவை? அவற்றை எங்கெங்கு நிகழ்த்துவது? எவ்வாறு நிகழ்த்துவது? எப்போது நிகழ்த்துவது? எவ்வளவு விரைவாக நடாத்துவது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற போர்த்தந்திரோபாய உத்திகளை வகுக்கும் திறமை பெற்ற ஒருவரே இராணுவ உத்தியாளர்.

இவ்வாறான ஒரு இராணுவ உத்தியாளராகத் தன்னைத் தானே விளம்பரப்படுத்த முயற்சித்தார்.

துரோகத்துக்கு முன், தனது வாயாலேயே தான் ஒரு உத்தியாளனா அல்லது ஒரு கட்டளைத் தளபதியா என்பதற்கான பதிலைக் கருணா மிகவும் அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும் பலமுறை கூட்டங்களில் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் நாம் பதிவுசெய்துவைத்திருக்கவில்லை.

அண்மையில் தமிழ் அலை நிழற்பதிப்புக்கு சுவிற்சர்லாந்திலிருந்து சிவநாதன் என்ற அன்பர் 2002ம் ஆண்டின் இறுதியில் கருணா ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளை ஒலிக்கீற்றுகளாக பதிவுசெய்து எமக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்திருந்தார்.

அவற்றை இங்கு வெளியிடுகிறோம்.

துரோகத்தின் பின், கருணா தன்னைப் பற்றித் தானே மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டுவந்தற்கு எதிர்மாறான ஆதாரங்களை துரோகத்துக்குப் பல மாதங்களுக்கு முன்னர் அவர் பேசிய பேச்சுக்களின் பகுதிகள் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

கேட்டுப் பாருங்கள்!


பேச்சு ஒன்று http://media.thamilalai.net/karuna_1.ram
பேச்சு இரண்டு http://media.thamilalai.net/karuna_3.ram
பேச்சு மூன்று http://media.thamilalai.net/karuna_4.ram
பேச்சு நான்கு http://media.thamilalai.net/karuna_5.ram

பெருந்திறமைவாய்ந்த தலைவரும், அர்ப்பணிப்புகள் நிறைந்த, தீரம் கொண்ட போராளிகளும் அணித்தலைவர்களும் இருந்த சூழலில் ஒரு திறமைவாய்ந்த கட்டளைத் தளபதியாக செயற்பட்டிருக்கும் வல்லமை கருணாவுக்கு இருந்ததென்பது உண்மைதான்.

ஆனால் துரோகத்தின் பின், இலட்சியத்தைக் கைவிட்டு, கூலிப்படையாகி, உதிரியாகி நின்று, உளநிலை உறுத்தல்களுடன், உறுதியற்ற ஒரு எதிரிப்படையில் கருணாவால் எதையுமே சாதித்துவிடமுடியாது.

எனவே கருணா என்ற முரளிதரன் துரோகத்தின் பின் ஒரு அற்ப பதராகி விட்டார்.

இனியும் அவர் குறித்த மிகைப்படுத்தப்பட்ட அச்சங்கள் எமக்குத் தேவையில்லை!

- இளந்தென்றல்

நன்றி - தமிழ் அலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஐ.பி.சி தமிழுக்கு கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய தமிழ்அலை பத்திரிகையின் ஆசிரியர் வேணுகோபால் வழங்கிய நேர்காணல்

http://www.ibctamil.net/audio/vennu20040412.smil

நன்றி - ஐபிசி தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Little hope for Sri Lanka

Thirty years of civil war have done irreparable harm to Sri Lanka. The fight by the island's Tamils to secure a homeland has claimed more than 60,000 lives and deeply fractured the nation. A peace process appeared to be making progress, but divisions among Sri Lanka's Sinhalese majority derailed those efforts. An election earlier this month deepened the deadlock. Extremist parties are the winners of the recent vote; peace appears to be the loser.

Sri Lanka's Tamils have fought for decades to establish a homeland. More than 65,000 people have died in the bloody struggle and more than 800,000 others have become internal refugees. The long list of victims includes Tamil moderates who were willing to negotiate with the government in Colombo and accept less than the maximalist demands of the Liberation Tigers of Tamil Elam (LTTE). Norway negotiated a shaky ceasefire two years ago; despite some close calls, the ceasefire has survived and offers hope for a more permanent deal.

The peace prospects were shaken last November when President Chandrika Kumaratunga unilaterally dismissed the ministers of defense, interior and the media, and took the portfolios herself, charging that Prime Minister Ranil Wickremesinghe had made too many concessions to the Tamils during the negotiations. The president has no love for the Tamils: a 1999 suicide bombing cost her one eye. She is also a fierce rival of Mr. Wickremesinghe, and many saw this move as an attempt to make up for her party's defeat in the 2001 parliamentary elections.

Four months of negotiations between the two leaders failed to yield a government and Mrs. Kumaratunga, hoping to secure a parliamentary majority, called for elections. The vote, however, yielded an even more divided legislature.

The results gave the president's United People's Freedom Alliance 105 seats, eight seats short of the 113 needed to claim an absolute majority in the 225-member legislature. Mr. Wickremesinghe's United National Party (UNP) trailed with 82 seats. Mrs. Kumaratunga has selected Mr. Mahinda Rajapakse, a veteran politician belonging to her own party, as prime minister. He now must form a Cabinet by the deadline of April 22, when the new Parliament is scheduled to convene.

The problem for the president is that none of the smaller parties are ready to join the Freedom Alliance and help her win that majority. The most obvious potential partner is the National Heritage Party, a radical Sinhalese nationalist party made up of monks, which took nine seats. But it has said that it will not join either of the two main parties. The third largest party, the Tamil National Alliance, the political arm of the LTTE, has 22 seats. It has said that it will join any government that recognizes it as the "sole representatives" of the Tamil people and accepts its plan to devolve authority. The Freedom Alliance has already rejected that proposal.

In other words, the results suggest that the only majority consists of parties opposed to peace. Even if Mrs. Kumaratunga opted for negotiations and she initiated peace talks in 1994 and adopted a hard line only after they broke down her alliance partner, the Marxist People's Liberation Front (JVP), strongly opposes concessions to the Tamils. And the JVP gained seats at the Sri Lanka Freedom Party's expense, which dropped from 77 legislators to just over 60.

Were this not enough, the Tamil parties appear to have split as well. A rebel commander formed his own faction just before the election, and killings of his supporters by LTTE elements have already begun. At least two civilians were reported killed and many more wounded since the main Tamil Tiger group launched a major offensive Friday to retake territory held by the renegade commander.

These results are especially bitter for Japan. Japan has been one of the cochairs of the Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka, which was formed to marshal international support for the peace process. Tokyo has donated $1 billion to help build peace there. That investment may well be put on hold as Sri Lankan politicians struggle to find a common ground that will allow peace negotiations to continue.

Should, with a hung Parliament, the new government effectively stop functioning, Mr. Wickremesinghe might try to cobble together a coalition consisting of his party, the Sri Lanka Muslim Congress and the Tamil National Alliance, but that would put the government at the mercy of the Tamils a party intimately linked to the LTTE and raise serious doubts on any deal it reached. If this all sounds familiar, that is because there are echoes of Northern Ireland in Sri Lanka. That does not inspire much confidence in the island's prospects.

The Japan Times: April 13, 2004
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka 's road to peace on shaky ground with rebel skirmish, cracks in new government

Associated Press, Tue April 13, 2004 03:17 EDT . BETH DUFF-BROWN - Associated Press Writer- COLOMBO, Sri Lanka - (AP) The violent clash between rival factions of separatist Tamil guerrillas was a big step backward on the road to peace, made even bumpier by cracks in the island-nation's new government.
Sri Lankans have enjoyed relative peace of mind during a two-year cease-fire in the 19-year civil war between the military and Liberation Tigers of Tamileelam. The battle against one of the globe's most ruthless outlawed organizations having perfected the suicide bomb has claimed the lives of nearly 65,000 people, most of whom were civilians.

The situation took a sharp turn for the worse in March, when the leader of the large eastern flank of the LTT defected, claiming discrimination against his 6,000 guerrillas by the main faction in the north. On Friday, the northern LTT launched a surprise offensive on the Eastern Tigers, killing some three dozens people, but effectively regaining control of the territory over the weekend and sending Vinayagamoorthy Muralithanran packing off into the jungle.

Sighs of relief were heard across this tropical island off the southern tip of India, as Sinhalese Buddhists and Tamil Hindus began the rituals that ring in their new lunar calendars.

Close observers of the intricacies of Sri Lankan politics, however, say more bad times are ahead. President Chandrika Kumaratunga's government has offered sanctuary to the renegade rebel leader, which will no doubt tick off the LTT leadership, and her new coalition government already is embroiled in squabbles over Cabinet positions and other matters of power.

``The inability of the two coalition partners to resolve their disputes amicably could also spell problems for the peace process because the two coalition partners have very different views about the peace process at this time,'' said Jehan Perera, a political analyst with the independent research center, the National Peace Council.

Perera said the LTT could see the military's offer of protection for Muralithanran as an attempt to undermine the LTT leadership.

Kumaratunga has assured the European cease-fire monitors and the United States in a telephone call with U.S. Secretary of State Colin Powell last Friday that her government would resume talks with the LTT later this month, following the long New Year's holiday.

But at the same time, she has ordered the army to start a new recruitment drive and the People's Liberation Front a Marxist party and Kumaratunga's largest coalition partner is opposed to any concessions for the rebels or to grant the Tigers the autonomy they are demanding in the Tamil-populated north and east. PLF members of the new Parliament, which convenes April 22, boycotted the swearing-in ceremony of Kumaratunga's new Cabinet on Saturday, unhappy with her choices.

``If they can't resolve simple matters like ministerial postings, then they're also unlikely to be able to agree on how to deal with the LTT,'' said Perera.

The last round of peace talks led by former Prime Minister Ranil Wickremesinghe, who was sidelined by Kumaratunga started off well, but have stalled for a year. The rebels have threatened to go back to war if their demand for wide autonomy in the north and east is not accepted.

As the Rev. Lucien Dep, priest of St. Mary's Church in Colombo, put it after Easter Sunday services: ``We are all keeping our fingers crossed. We don't know what we are in for next.''
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:ஐ.பி.சி தமிழுக்கு கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய தமிழ்அலை பத்திரிகையின் ஆசிரியர் வேணுகோபால் வழங்கிய நேர்காணல்

http://www.ibctamil.net/audio/vennu20040412.smil

நன்றி - ஐபிசி தமிழ்

மனசாட்சிக்கு விரோதமாகஇ கருணாவின் பணய கைதிகளாக தமிழலையை வெளியிட்டோம். - ஆசிரியர் வேணுகோபால் பேட்டி

கருணா தரப்பினரால் பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழலை பத்திரிகை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி தமிழலை பத்திரிகை வெளிவரும் என்று தமிழலை பத்திரிகை ஆசியர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழலை பத்திரிகை ஆசிரியர் வேணுகோபால் ஜ.பி.சிக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் எமுத்துருவாக்கம்.


Phழவழ : வுயஅடைநேவ யுசஉhiஎந

கருணா தரப்பினரைப் பற்றி பரப்பாக தகவல்கள் வெளியிட்டு வந்த தமிழலை பத்திரிகை இப்பொழுது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

இந்த பத்திரிகை நிறுத்தப்படவில்லை. நேற்று (12-04-2004) மட்டும் பத்திரிகை வெளிவரவில்லை. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொக்கட்டிச்சோலை பிரதேசம் வந்துள்ளதால் எமது பத்திரிகை வழமையாக - இங்கு ஊழியர்கள் தமது பணிகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று காலை அதாவது சித்திரை புதுவருட தினத்தன்று தமிழலை பத்திரிகை தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனது பணிகளை தொடர்ந்து செல்லும்.

ஆகவே நீங்கள் ஒரு பணய கைதிகளாக வைக்கப்பட்டீர்களா? எப்படி?

கருணா பிரச்சினையைத் தொடர்ந்து எங்களால் சுதந்திரமான கருத்துக்களை அல்லது உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்களது கருத்துக்களை மனம் திறந்து வெளிக்கொணர முடியாத ஒரு சூழ்நிலை அவர்களிடமிருந்து (கருணா) வரும் கருத்துக்களை மட்டுந்தான் பிரசுரிக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டு அதனை வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.

ஒரு பத்திரிகையாளனின் குரல்வளை நசிக்கப்பட்டு கொண்டிருந்த போது உங்களது உணர்வு எப்படி இருந்தது ?

எனது உணர்வு மனசாட்சிக்கு விரோதமான ஒன்றாகவே இருந்தது. இருந்தாலும் அவர்களின் ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளான சூழ்நிலையில் உயிராபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் அதற்கு அடி பணிந்தோம்.

குறிப்பாக கருணா பற்றிய தகவல்களை உங்களது பத்திரிகை வெளியிடும் போது இதனை படிக்கின்ற மக்கள் உண்மையானதென்று என ஏற்றுக்கொண்டார்களா?

தனிப்பட்ட ஒரு குழுவைச் சார்ந்த கருத்துக்கள் மட்டுந்தான் வருகின்றன எனவும் நடுநிலை தன்மையைக் காணமுடியவில்லை எனவும் கூறினார்கள். ஆனால் அச் சூழ்நிலையில் எம்மால் நடுநிலையான தகவல்களை கூற முடியவில்லை.

குறிப்பாகஇ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டது. வடக்குஇகிழக்கு இணைந்தது அல்ல தமிழீழம் கிழக்கு தனியாக வடக்கு தனியாக அதிலும் மட்டக்களப்பு தனியான ஒரு பிரதேசம் என்பதை சுட்டிக் காட்டி தகவல்கள் வெளியாகின. அவ்வாறு தகவல்களை நீங்கள் பிரசுரிக்கின்ற போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.?

நிச்சயம் எங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இதைப் பற்றி அந்த செய்தியை பிரசுரிக்க வேண்டும் என்று கூறியவர்களிடம் நீங்கள் பேசக் கூடிய நிலை அன்று இருக்கவில்லையா?

அப்படி பேசியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அணியினருடன் இவர்கள் ஆதரவானவர்கள் என்று வேறு கண்ணோட்டத்துடன் எங்களை நோக்கலாம் அந்த பயம் காரணமாக அந்த கருத்தை அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக தங்களுடைய பத்திரிகை காரியாலயத்தில் பணியாற்றயவர்கள் எல்லோருமே இப்படி ஒரு பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் அந்நேர பணியை மேற்கொண்டார்களா?

நிச்சயமாக அப்படியொரு சூழ்நிலையில்தான் வேலை செய்தார்கள்.

ஆகவேஇ இப்போது உங்களது மனநிலை எவ்வாறு இருக்கின்றது? இப்போது உங்களது இந்த மகிழ்ச்சியை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பத்திரிகை குறிப்பாக இணையத்தளம் ஊடாக உலகெங்கும் வாழும் மக்கள் படித்திருக்கின்றார்கள். இப்போது நீங்கள் அளிக்கின்ற இந்த கருத்துக்கள் இணையத்தளமுடாகவும் மக்கள் அறிய கூடியதாக இருக்கும். ஆகவே உங்கள் மனநிலை பற்றி இப்போது அறிய தரவேண்டும் என்று மிக அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் ?

நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும் அதிமேதகு தலைவர் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உறுதுணையாக அவரின் போராட்டத்துக்கு கூர்மைப்படுத்துகின்ற சக்தியாக தமிழலை பத்திரிகை தொடர்ந்து தன் பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலகட்டத்திற்குள் அந்த பத்திரிகையின் உணர்வுகள் வேறொரு கோணத்தில் சென்றிருந்தாலும் அதன் இலக்கு தமிழ் மக்களின் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலிக்கும் என மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

சூரியனுக்காக எழுத்துருவாக்கம் வல்லவை
மூலம் ஜ.பி.சி. லண்டன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
விடுதலை நெருப்போடு விளையாடுவோருக்கு கருணா விவகாரம் ஒரு படிப்பினை

13.04.2004


கடந்த 40 நாட்களாக ஊடகங்களின் கவனத்தை கவர்த்திருந்த கருணா விவகாரம் நேற்றோடு முடிவிற்கு வந்துள்ளது. தமிழ் தேதியத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த அனைவருக்கும் இன்றைய புதுவருடம் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

இவ்விவகாரம் ஊடகங்களின் கவனத்திற்கு வந்த நேரத்தில், எமது தேசியத் தலைவர் அவர்கள் இவ்விவகாரத்தை போராளிகளதும் மக்களதும் உயிரிழப்புகள் இன்றி முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியபோது, அது சாத்தியமா என ஆச்சரியப்பட்ட எம் பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் இன்று மகிழ்ச்சி கலந்த நிம்மதியுடன் உலாவருகின்றனர். தமது பிரதேசத்தின் மீது படிந்த பிரதேசவாதக் கறை மறைந்து போனதில் மக்கள் மகிழ்வடைந்து போயிருப்பதையும் இன்று மட்டக்களப்பு எங்கும் காணக்கூடியதாக உள்ளது.

கருணா விவகாரம் ஒரு முடிவிற்கு வந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மீண்டும் மட்டு அம்பாறை மாவட்டம் வந்தமை அனைத்து தரப்பு மக்களையும் மிகுந்த மகி;ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களும் தமது மகிழ்ச்சியை மின்னஞ்சல்கள் மூலம் எமக்கு பெருமளவில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

கருணா விவகாரம் முடிந்து நிலமைகள் வழமைக்குத் திரும்புகின்ற போதும்கூட மட்டக்களப்பில் அது ஏற்படுத்திய வடுக்கள் மாற இன்னும் காலங்கள் தேவைப்படலாம். கடந்த 40 நாட்களில் கருணா ஏற்படுத்தி வைத்துள்ள பாதிப்புகள் அத்தகையவை. பலம் பொருந்திய நிலையிலிருந்த அரசியல், இராணுவ, நிர்வாகக் கட்டமைப்புகளை எல்லாம் கருணா குழுவினரால் மிகவும் சீரழிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்காக ஒன்றுபட்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின்மீது தேவையற்ற ஒரு பிரதேசவாத சிந்தனை கருணா குழுவால் திணிக்கப்பட்டுள்ளது. பழைய நிலைக்கு அவற்றை மீளக் கட்டியமைக்கும் சவால் நிறைந்த பணியை விடுதலைப் புலிகள் நிச்சயம் விரைவாகச் செய்து முடிப்பார்கள் என நம்பலாம்.

எனினும் தீமையிலும் நன்மையைப் போல, கருணா விவகாரம் உலகெங்கும் பரந்து நிற்கும் தமிழ் தேசியத்தை மீண்டும் ஒருதடவை தட்டியெழுப்பிப் பலப்படுத்தியுள்ளது. தமிழ் தேசியம் எத்துணை பலம் வாய்ந்தது என்பதை இவ்விவகாரத்தில் தமிழ் மக்கள் காட்டிய பேரெழுச்சியையும் ஒற்றுமை உணர்வையும் வைத்தே மதிப்பிட முடியும். தவிர, விடுதலைக்கான இந்தப் போராட்டத்தில் நண்பர்களையும் எதிரிகளையும் சரிவர இனம் காணவும் பரந்துதுபட்ட தமிழ் ஊடகங்கள் இந்த விவகாரத்தில் காட்டிய நேர்மையான அணுகுமுறையையும் நாம் கவனத்திற் கொள்ள உதவியது. எல்லாவற்றிக்கும் மேலாக வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டில் விடுதலைப் புலிகள் கொண்டுள்ள விட்டுக் கொடுப்பற்ற உறுதியை சர்வதேசத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட இது உதவியுள்ளது.

கருணா பற்றிய இருப்புகள் இன்றும் தெளிவாகாத நிலையில், அவர் மட்டக்களப்பை விட்டு இன்னும் சிலருடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்ய முனையும் ஒருவனிற்கு வரலாற்றில் என்ன முடிவோ, அது கருணா விவகாரத்திலும் மீண்டும் ஒருமுறை நீரூபணமாயிருக்கிறது. தமிழ் தேசியத்தின் கொழுந்து விட்டெரியும் ஆன்மாவோடும், விடுதலைப் பெரு நெருப்போடும் விளையாட நினைக்கின்ற அனைத்து தரப்பினர்க்கும் கருணா விவகாரம் ஒரு நல்ல படிப்பினை.

நன்றி - தமிழ் அலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இலங்கை ராணுவத்திடம் அடைக்கலம் கோரும் கருணா

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வடமேற்கு காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள கருணா, தனக்கு அடைக்கலம் தருமாறு இலங்கை ராணுவத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.


ஆனால், இதை ராணுவம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. அதே நேரத்தில் கருணா கோரிக்கை வைத்தால் கிழக்குப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல (ண்ச்ஞூஞு ணீச்ண்ண்ச்ஞ்ஞு) மனிதாபிமானரீதியில் அவருக்கு உதவி செய்வோம் என இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே மட்டக்களப்போடு, அம்பாறை மாவட்டமும் கருணாவின் படைகளிடம் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

இப்போது சிறிய அளவிலான தனது ஆதரவாளர்கள், பாதுகாவலர்களுடன் கருணா காட்டுப் பகுதியில் தப்பியோடிக் கொண்டிருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் புலிகளின் படை ஈடுபட்டுள்ளது.

முன்னதாக கருணாவை ஹெலிகாப்டர் மூலம் இலங்கை ராணுவம் காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்தன. இதனை ராணுவத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத் முழுமையாக மறுத்தார். அதே நேரத்தில், கருணா கோரிக்கை வைத்தால் மனிதாபிமான அடிப்படையில் அவர் தப்பிச் செல்ல உதவுவோம் என்றார்.

இந் நிலையில் பொலநறுவ மாவட்டத்தில் உள்ள மின்னேரியா ராணுவ முகாமைத் தொடர்பு கொண்ட கருணா தனக்கு அடைக்கலம் கோரியுள்ளதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பியோடும் முன்பாக கருணாவின் படையினர் தங்கள் வசம் இருந்த கன ரக துப்பாக்கிகள், ஆர்ட்டிலரி துப்பாக்கிகள், மார்ட்டர் லாஞ்சர்கள் ஆகியவற்றை நொறுக்கிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆயுதங்கள் புலிகளுக்கு உதவக் கூடாது என்ற எண்ணத்தில் கருணா இந்த உத்தரவை இட்டதாகத் தெரிகிறது.

மீனகம் முகாமை கருணாவின் படைகள் விட்டுச் சென்றதையடுத்து அங்கிருந்த ஜெனரேட்டர்கள், மின் சாதனப் பொருட்களை பொது மக்கள் புகுந்து அள்ளிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இந் நிலையில் கருணா தரப்பில் மிக பலத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந் நிலையில் கருணாவின் படையில் இருந்த 100 சிறார்களை புலிகள் இயக்கம் இன்று விடுவிக்க இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

Thanx: Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Tigers defeat breakaway faction

<b>The main faction of Sri Lanka's Tamil Tiger rebels is now reportedly in full control of eastern areas after defeating a breakaway group.</b>

The renegade leader, Colonel Karuna, is said to have fled the area and his forces have dispersed.

Hagrup Haukland, a spokesman for the international ceasefire monitors, said talks with rebels were "back on track".

Col Karuna broke away last month and fighting between the two factions erupted on Friday.


On Tuesday, the main faction freed more than 100 child soldiers who had been with the breakaway faction - the biggest single release of underage combatants in Sri Lanka's long conflict.


The UN Children's Fund, Unicef, oversaw the release in the town of Vakarai amid emotional scenes between the child soldiers and parents.


Mr Haukland said monitors had met the man the Tigers had installed as Col Karuna's replacement, Ramesh, in the area on Monday.


"Ramesh met our monitors to re-establish communication with the [Liberation Tigers of Tamil Eelam]. The meeting was good. We are back on track again," said Mr Haukland, the deputy head of the Sri Lanka Monitoring Mission.


Thousands of people have now returned home after a weekend of factional clashes.

Sukumar Rockwood, spokesman for the Red Cross, said it had visited the area and "found the situation returning to normal and that there is no conflict at all".


The BBC's Anna Horsbrugh-Porter in Colombo says it appears the most serious challenge to Velupillai Prabhakaran's leadership of the Tamil Tigers in over 30 years has been effectively quashed.

<b>Protection offer </b>

The whereabouts and fate of Col Karuna are still unknown.

Some reports say he has fled his main base in Thoppigala, 120km (75 miles) north of the capital, Colombo.


Karuna wants a separate rebel administration in eastern Sri Lanka

Sri Lanka's military says it will give him protection if he asks for it.

Armed forces head, General Lionel Balagalle, said: "We don't know where he is, but if he asks for protection, we can give him [it]. This has been our policy and we will stick to it."

Factional fighting erupted last Friday when the northern group crossed the Verugal river, which had been the de facto border between the two parties, and advanced south through Kathiraveli to Vakarai.

The mainstream faction also launched another drive from Amparai, south of Batticaloa.


On Monday, the breakaway group abandoned its huge base at Meenaham.

Military officials said cadres of Col Karuna's faction then surrendered at a local military camp and at police stations.

Military sources said the deaths in the fighting could have been larger than rebels admitted and the losses may have sparked Col Karuna's submission.

Col Karuna declared his own separate administration in the east a month ago.

He cited northern discrimination against the eastern wing as his motivation.

Last Friday's violence flared up just days after a new government was elected.

The administration has vowed to restart peace talks with the Tamil Tigers, which stalled when the rebels pulled out last April.


Thanx: news.bbc.co.uk
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lankan president commences constitutional reforms

Sri Lankan President Chandrika Kumaratunga has commenced constitutional reforms by presiding overthe first round of discussions on the matter, the official Daily News said on Tuesday.

Attended by her close advisors and legal consultants, PresidentKumaratunga had a three-hour preliminary round of discussions on the proposed constitutional reforms at the President's House on Friday.

Kumaratunga is due to meet the newly elected political leaders and constituent party representatives shortly to discuss the political process of effecting constitutional reforms.

Kumaratunga's United People's Freedom Alliance (UPFA) in its manifesto publicized in the campaign for the April 2 parliamentaryelections sought the people's mandate to formulate and promulgate a new constitution since the 1978 constitution had caused problemsfor effective governance.

The UPFA manifesto also pointed out that the new constitution will be placed before the people at a referendum before enactment.

Under the current constitution, Kumaratunga was forced to have an uneasy cohabitation with former Prime Minister Ranil Wickremesinghe who is from rival Untied National Party (UNP) afterhis party won the December 2001 parliamentary elections.

Kumaratunga was at odds with Wickremesinghe over almost all state matters, the Norwegian-brokered peace process in particular.

She accused Wickremesinghe of giving too many concessions to the Tamil Tiger rebels in the peace process.

Kumaratunga's UPFA defeated Wickremesinghe's UNP in the April 2parliamentary elections and vowed to enact a new constitution which will abolish the current executive presidency and introduce new electoral system.

Source: Xinhua
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஐ.ம.சு.மு. பிளவுபடும் அபாயம்: கட்சி உயர்பீடத்தினருடன் சந்திரிகா அவசர மாநாடு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 19:40 ஈழம் ஸ

தமது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு முக்கிய கவனத்திலெடுக்கப்படாதவிடத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியிலிருந்து தாம் விலகிக்கொள்ளப் போவதாக Nஐ.வி.பி. ஐனாதிபதியை எச்சரித்துள்ளது.

ஐ.ம.சு.மு. என்ற கூட்டமைப்பு உடைந்து போகாது ஆட்சியிலிருப்பதற்காக, நாம் வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் இருந்து, ஏப்ரல் 22ல் அமைச்சரவை ஏற்றுக்கொள்ளப்பட எமது ஒத்துழைப்பை வழங்கினாலும், ஆட்சியைத் தொடர்வதற்கு எமது கோரிக்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படுவது அவசியம் என்று Nஐ.வி.பி. அறிவித்துள்ளது.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரக்கட்சிக்கும் Nஐ.வி.பி.க்கும் இறுதியாக எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஒரு விசேட குழு இந்தக் கூட்டணியை மேற்பார்வை செய்து, ஒருங்கமைக்கும் பணியைச் செய்யவுள்ளதாகக் கூறப்பட்ட போதும், இதுவரை இப்படியொரு விசேட குழுவை, கூட்டணியின் தலைவி என்ற முறையில் ஐனாதிபதி சந்திரிகா ஒழுங்குசெய்யத் தவறியுள்ளார்.

அதைவிட, தரப்பட்ட ஆகக்குறைந்த நான்கு அமைச்சுக்களிலிருந்தும், முக்கிய அங்கங்களை நீக்கி, வேறு அமைச்சுக்களின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், எமக்கிடையிலான புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஐனாதிபதி மழுங்கடித்துள்ளார்.

பிரதமர் பதவி உட்பட, பல அமைச்சர்களின் நியமனம், எமக்குத் திருப்தி தருவதாகவோ உடன்பாடாகவோ இல்லை. சில அமைச்சுக்களின் அதிகாரங்கள், பணிகளை மீளமைப்பு செய்துள்ள ஐனாதிபதி, கூட்டணிக் கட்சியான எம்முடன் கலந்தாலோசிக்கவோ தகவல் பரிமாற்றம் செய்யவோ இல்லை.

இந்நிலையில், ஐ.ம.சு.முன்னணித் தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக Nஐ.வி.பி. தெரிவித்துள்ளது.

Nஐ.வி.பி.யின் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயுள்ள கூட்டணியின் நிலைப்பாட்டை சீர்செய்யும் நோக்குடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தின் தலைமையையும், கூட்டணியின் முக்கிய தலைவர்களையும் ஓர் அவசர உச்சிமாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சந்திரிகா.

Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தொப்பிக்கல காட்டுப்பகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்பிரல் 2004, 20:34 ஈழம் ஸ

மட்டக்களப்பிலுள்ள தொப்பிக்கல காட்டுப்பிரதேசம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதை லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலி உறுதிசெய்துள்ளது.

மட்டக்களப்பின் கிரான், வடமுனை வீதிகளின் அடர்ந்த காட்டுப்பகுதியான தொப்பிக்கல பிரதேசத்தில், கருணா அணியினர் பதுங்கியிருப்பதாக முன்னைய செய்திகள் தெரிவித்த போதிலும், அப்பகுதி விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இப்போது வந்துள்ளதாகவும், அதிவிசேட தேடுதல் அணியினர் மேற்கொண்ட கடுமையான தேடுதல் நடவடிக்கையின் பின்னர், கருணா அணியைச் சேர்ந்த யாரும் அப்பகுதியில் காணப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீளவும் விடுதலைப் புலிகளிடம் திரும்பிய போராளிகளில் 269 போராளிகள் எதுவித நிபந்தனையுமின்றி, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில், 15 வயதுக்குக் குறைந்த 33 ஆண்களும் 113 பெண்களும், யூனிசெஃப் நிறுவனப் பிரதிநிதிகளுடாக பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். வாகரையிலுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கலந்துகொண்டார் என்று தெரியவருகிறது.

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும், அவர்களது பெற்றோர்களுடன் அவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல முழுமையான அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மீண்டும் ஒரு அக்கினிப் பாPட்சை

14.04.2004


வரலாறு எப்போதும், தான் சார்ந்திருக்கும் சமூகத் தைப் புடம்போட்டே வந்திருக்கிறது. அந்த ஒழுக்கில் எமது மண்ணும் அதன் விடுதலைப் போரும் மீண்டும் ஒருமுறை அக்கினிப் பரீட்சைக்கு ஆளாகிப் புதுத்தினவுடன் நிமிர்ந்து நிற் கின்றன. தலைவனின் பலம் மீண்டும் ஒரு தடவை நெத்திய டியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாற்பத்தொரு நாட்க ளும் கண்ணிலே எண்ணைவிட்டுக்கொண்டு கவனித்து ஊக ங்களையும் ஒப்பீடுகளையும் செய்துகொண்டிருந்தவர்களுக் கெல்லாம் ஒரே அதிர்ச்சி. தலைவரின் வெற்றியை எதிர்பார்த் திருந்தவர்கள்கூட இவ்வளவு கச்சிதமாக அது அமையும் என்று எதிர்வுகூறியிருக்கவில்லை. தமிழீழத் தேசியம் உடைக்கமுடியாத உருக்குக் கோட்டை என்பதை எல்லோ ரும் இத்தோடு ஐயமறப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

அதற்காக அக்காடா என்று இப்போதைக்கு நாங்கள் ஆறுதல்பட்டு நின்றாலும் எமது தேசிய வாழ்வின் நீடித்த நலன்பற்றிய கருத்துத்தெளிவை இப்போது நாங்கள் பெற் றுக்கொள்ளவேண்டியது அவசியம். இலங்கைத் தீவில் வாழும் தமிழ்பேசுவோர் எல்லாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் எப்போதோ நிகழ்ந்து இப்போதுவரை தன் தடத்தைப் பதியவிட்டுக் கொண்டிருக்கும் தனிச்சிங்களச் சட்டம். இதுதான் பேரினக் கட்சிகள் மூலமாக வெளிப்பட்ட அவர்களின் உள்ளக்கி டக்கை. பேரினக் கட்சிகளின் கொள்கைகள் சகாயவிலையில் சந்தைக்குவரும் இந்த நாட்களில் அவற்றின் நிரந்தர முகத்தை நாங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறோம். சில்லறைக் கூச்சல் களுக்கும் எங்களிற் சிலர் செவிகொடுக்கத் தலைப்ப டுகிறோம். தடியை யார் து}க்கினாலும் இரண்டொருவர் பின்னால் போய்விடுகின்றோம். தரைத்தோற்ற ரீதியாகவோ இனப்பரம்பல் ரீதியா கவோ பார்க்கும்போது, கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்க ளின் நீடித்த பாதுகாப்பும் தனித்துவமும் தமிழீழம் என்கின்ற தேசிய உறுதிப்பாட்டு நிலையால் மட்டுமே உத்தரவாதப்ப டுத்தப்பட முடியும். தொடர்ந்துவந்த பேரின அரசுக்கள் மேம்போக்காக வித்தியாசமான கொள்கைகளைக் கடைப்பி டித்;தாலும், சிறுபான்மையினர் பற்றிய கொள்கையில் மிகவும் கரிசனையாகவே இருந்துவந்திருக்கின்றன. அம்பாரை மாவட்ட எல்லை மட்டக்களப்பின் மேற்குப்புறத்தில் நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அது தெட்டத்தெளிவாகப் புரியும். நிருவாகரீதியான நுட்பமான எல்லைகளை வகுத்து தமிழ் வாக்குகளைச் பெரும்பான்மையாகவிடாது வைத் திருக்கவே எல்லாப் பேரின அரசுக்களும் விரும்பிவந் திருக்கின்றன. இவையெல்லாம் கவனத்திற்கு வருமுன்னர் ஏகப்பட்ட வேறு விடயங்கள் தாண்டப்படவேண்டும் என்பது வேறுவிடயம். இவ்வாறு எமக்கான நிரந்தரப் பிரச்சனைகள் வேறெ ங்கோ இருக்க, புத்திஜீவிகள் என்று இதுவரை எண்ணப்பட்ட சிலர்கூட அப்பாவித்தனமாகத் தாளம்போட்டுக்கொண்டு நின் றதுதான் அந்தக் கேலிக்கூத்தின் உச்சம். உலகத் தமிழ்ச் சமு தாயமே ஒன்றுபட்டு நிற்கும் ஒரு தருணத்தில் முதிர்ச்சியற்ற ஒரு தனிமனிதக் கோரிக்கைக்குச் செவிமடுக்குமுன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப்பார்க்க வேண்டாமா? இன்று மாவட்டக் கோரிக்கை நாளை வட்டாரக் கோரிக்கையாக மாறாது என்பது என்ன நிச்சயம்? இனமோ மதமோ பிரதேசமோ தனிக்கொள்கையோ இந்த உலகத்தில் உள்ள அதை;து வாதங்களைவிடவும் தேசியவாதமே மதிக்கத் தகுந்தது. நீடித்து நிலைப்பது. வலு வானது. அதன்வழியே நாம் அனைவரும் ஒன்றுபட்டு விழிப் புடன் செயற்படவேண்டிய காலம் இது.

Source: Tamil Alai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிரதேச வாதியின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியோருக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் அழைப்பு

14.04.2004


பிரிவினைவாதிகளின் அச் சுறுத்தலால் தங்கள் உடைமைக ளையும் வீடு வாசல்களையும் தொ ழில்களையும் விட்டு வெளியேறிய சகோதரர்களை மட்டக்களப்பு அம் பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு கௌசல்யன் அவர்கள் மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.

இதுபற்றி எமது நிருபரு டன் பிரத்தியேகமாகப் பேசிய அவர், |பேரினவாத நெருக்கடிகளி ல் இருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்வதானால் நாம் தேசியரீதியா கப் பலம்கொள்ள வேண்டும். மட் டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு என்பது அத்தகைய பல த்தினால் மட்டுமே உறுதிசெய்யப்ப டலாம் என்பதை நாம் அனைவரும் புரிந்தே உள்ளோம். தனி நலன் களுக்காக பிரி;வினைவாதம் பேசி யோர் எமது மாவட்டங்களின் எதி ர்காலப் பாதுகாப்பைப் பற்றியோ தமிழர்தம் தனித்துவ வாழ்விற்கான உத்தரவாதம் பற்றியோ கிஞ்சித்தே னும் கவலைப்பட்டிருக்கவில்லை. ஆவர்கள் இப்போது எங்கே இருக் கிறார்கள் என்பதைப் பார்த்தாலே அவர்கள் எவ்வகையானவர்கள் என்பது எல்லோருக்கும் புரியும். அந்த அற்பச் செயல்கள் எமது மண்ணைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. ஏம்மண்ணிற்கே உரித் தான வரவேற்பும் விருந்தோம்பலும் என்றும் மாறப்போவதில்லை. எமது சகோதரர்களுக்கு நேர்ந்த இன்ன லைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் கசிந்து வருந்துகிறோம். வணிகமும் அறிவுசார் துறைகளும் எப்போதும் தேசியமயப்பட்டு நிற் கும்போதே முழுமைபெறும், வலு வடையும். எமது சகோதரர்கள் மீண்டும் இங்கே விரைவில் வர வேண்டும் என்பதே எங்களின் எதிர்; பார்ப்பு. அதற்கான ஒத்தாசைகளை யும் செய்துதர எமது அரசியற்பிரிவு காத்திருக்கிறது|, என்று அவர் தெரிவித்தார்.

Source: Tamil Alai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
எமது தேசியத் தலைவரின் தலைமையில் தொடர்ந்தும் இயங்க விரும்புகின்றோம்

14.04.2004


அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்ட போராளிகளில் பலர் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் தாங்கள்; தொடர்ந்தும் இய ங்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் பிரிவி னைவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்ததாகவும் தலைவரின் கருத்து க்கள் தங்களை வந்தடையாவண்ணம் தடுக்கப்பட்டதாகவும் தெரி வித்த அவர்கள் தங்களின் தேசியக் கடமைகள் நிறைவேறும்வரை பணிசெய்வ தற்கான வாய்ப்பையும் கேட்டுள்ளனர்.

Source: Tamil Alai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணா தப்பிப்பதற்கு சிறீலங்கா இராணுவமே உதவியதாக இந்தியப் பத்திரிகை தெரிவித்துள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 20:55 ஈழம் ஸ

பிரிந்து செயற்பட முனைந்த கருணா, அவருக்கு மிகவும் தேவையான எட்டுப் பேருடன் திடிரென தப்பிச் செல்ல முடிந்ததற்கு சிறீலங்கா இராணுவத்தின் உதவியே காரணம் என்று தங்களுக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் என்னும் இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருணாவும் அவரது நெருங்கிய சகாக்களும் தப்பியோடி, காட்டிற்குள் ஒழிந்திருப்பதாகவும், கொழும்பில் இருப்பதாகவும், வெளிநாடு சென்றுவிட்டதாகவும் பலவிதமான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறீலங்கா இராணுவத்தினர், கருணா குழுவினரைக் காப்பாற்றி சிறீலங்காவிற்குள் ஒரு இரகசிய இடத்தில் ஒழித்து வைத்திருப்பதாக தங்களுக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாகவே இப்பத்திரிகையின் கொழும்பு நிருபர் பி.கே.பாலச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் மட்டக்களப்பின் சில பகுதிகளை வைத்திருந்தபோது, போராளிகள் எவரையும் எந்தப் பத்திரிகையையோ வானொலியையோ பார்க்க கேட்க அனுமதிக்கவில்லை என்றும், ஒரு திறந்த சிறைச்சாலையில் வைத்திருப்பது போன்றே போராளிகளை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருணாவின் முகாமில் அவருக்குக் கீழே கட்டாயத்தின் பேரிலேயே போராளிகள் செயற்பட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது என்று குறிப்பிடும் இந்த நிருபர், அதற்கு ஆதாரமாக, இந்தப் போராளிகள் யாரும் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பார்க்கவோ வைத்திருக்கவோ கூடாது என்று கடுமையான தடை உத்தரவு போடப்பட்டிருந்த போதிலும், போராளிகள் இரகசியமாக தலைவரின் சிறிய படங்களை வைத்திருந்ததுடன், தினமும் காலையில், தலைவர் படத்தின் மீது வழமையாகச் செய்வது போன்று சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னரே தங்களது தினசரிக் காரியங்களில் ஈடுபட்டிருப்பதை விடுவிக்கப்பட்ட பல போராளிகள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பற்றி தினமும் கருணா அவதூறான பல செய்திகளையும் தகவல்களையும் தெரிவித்து வந்த போதிலும், போராளிகள் எவரும் அதை நம்பவில்லை என்பதையும் விடுவிக்கப்பட்ட போராளிகள் உறுதிசெய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டிலிருந்து யாருக்கெதிராக கொடிய யுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரோ, இறுதியாக அதே எதிரிகளிடம் மண்டியிட்டு சரணடைந்து பாதுகாப்புத் தேடியுள்ள கருணா, ஈழத்திமிழினத்திற்கு அவமானம் தேடித் தந்துள்ளார் என்று குறிப்பிடும் இப்பத்திரிகை, கருணாவின் கட்டுப்பாட்டில் கிழக்கிலங்கையின் சில பகுதிகள் இருந்துள்ள 38 நாட்களும் ஈழத் தமிழரின் வீரவரலாற்றில் கறை படிந்த காலப்பகுதி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணாவினால் அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு, மீண்டும் வி.பு.களுடன் இணைந்துள்ளார்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 23:33 ஈழம் ஸ

மட்டக்களப்பு-அம்பாறை விடுதலைப் புலிகள் தனியாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த கருணா, அப்பகுதியின் அரசியற் பொறுப்பாளராக விசு என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி கோபாலனை நியமித்திருந்தார்.

மட்டக்களப்பை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த விசு, புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளுடன் வந்து நேரடியாக இணைந்து கொண்டுள்ளார்.

கருணாவின் பிறப்பிடமான கிரானையே தனது பிறப்பிடமாகவும் கொண்ட விசு, விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு பகுதியின் உயர் பொறுப்பிலிருந்த ஒருவர் என்றும், தனக்கு விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் விசுவை அரசியற் பொறுப்பாளராக கருணா அறிவித்ததாகவும் தெரியவருகிறது.

இதற்கிடையில், கருணா குழுவின் முக்கிய படையணியொன்றின் பொறுப்பாளராக இருந்து காயமடைந்த ஒரு முக்கிய உறுப்பினரும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை உருவாக்கியிருப்பதாகவும், விரைவில் அவரும் நேரடியாக வந்து இணைந்து கொள்வார் என்றும் தெரியவருகிறது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அதை அண்டிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழமை நிலையை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கிழக்கிலங்கை மக்களும் பூரண ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)