Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அவை தேர்தல்லை போட்டியிட்டது மட்டுமல்ல பதவியளுக்கும் அடிபடுறது பௌத்த தர்மத்துக்கே விரோதம் எண்டு ஒரு பிக்கு கருத்து வெளியிட்டிருக்கிறார்
மற்றவங்கடையைக் கழுவ முதல் தங்கடையைக் கழுவலாமே?
விட்டால் கருணாவுக்கு பிரித் ஓதி ஆசீர்வதிக்க போறம் எண்டுவினம்
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
BBC Wrote:புலிகளுக்கு இடையிலான மோதல் ஒரு போர் நிறுத்த மீறல் என்கிறது ஹெல உறுமய
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 8:46 ஈழம் ஸ
விடுதலைப் புலிகளுக்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உள்விவகாரமாக இருந்த போதிலும் அது தேசிய பாதுகாப்பிற்கும், சமாதானத்திற்கும் அச்சுறுத்தல் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அந்தக் கட்சி ஐனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய நிலமை ஒரு போர் நிறுத்த மீறல் என்றும், ஐhதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
Thanx: Puthinam
++++++++++++++++++++++++++++++++++++++
வந்திட்டானுகள் மொட்டை உடையில் இருக்கும் காவி போட்ட கோதாரிகள். இவனுகள் மொட்டை போட்டது சனத்துக்கு மொட்டை போடத்தான் என்டு நினைச்சுக்கொண்டிந்தேன். ஆனால் இப்ப நாட்டுக்கும் மொட்டை போட வெளிக்கிடுறானுங்கள் பாவிகள். புத்தம் சரணம் மொட்டை ஆமி(அதிலயும் சேர்ந்திடுவானுகள் கொஞ்சனாளில்), தர்மம் சரணம் ????????????????.
...... 8)
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Sri Lanka east calm after rebel factional clashes
By Lindsay Beck
COLOMBO (Reuters) - Factional fighting among Sri Lanka's Tamil rebels eased off on Monday after a series of weekend clashes in the east that cast a cloud over efforts to end the island's 20-year civil war.
Officials said there was no confirmation the two factions of the Tamil Tiger rebels had agreed to a truce for local New Year holidays celebrated by both Sinhalese and ethnic minority Tamils.
But there were no reports of fresh clashes despite the Tigers saying they were making inroads into territory held by breakaway eastern commander Karuna.
"In commando style attacks on the Karuna group...the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have recovered large quantities of arms and a large number of cadres," said a report on the pro-rebel Tamilnet Web site referring to clashes on Friday night.
Sporadic fighting continued into the weekend, the military said.
The Tamil Web site said at least 450 cadres in the area had deserted Karuna, the eastern rebel leader whose split shattered the movement's strict internal discipline and who controls some 6,000 of the Tigers' 15,000 fighters.
"There are some rumours to say Karuna's cadres are leaving the area, but that is unconfirmed," said a military official in Karuna's eastern stronghold of Batticaloa.
The Tigers also say they took areas held by Karuna in Ampara, in the south of his territory, without resistance on Sunday, but military officials and truce monitors said there had been no disturbances reported.
"The situation in Ampara, according to our monitors, is calm and quiet. There is no humanitarian crisis," said Hagrup Haukland, deputy head of the Sri Lanka Monitoring Mission, which oversees the island's two-year ceasefire.
The factional clashes were the first major fighting since the Norwegian-brokered truce was signed in February 2002, halting the killing in the separatist war.
It also leaves the two factions holding positions on either side of a main, government-controlled road in the east -- a worry for the army which does not want to be drawn into the fighting.
The Tigers, who have been fighting for a separate Tamil state in the north and east, have in past killed anyone who challenges their authority and have vowed to "get rid of Karuna from our soil".
But although the mainstream appears to have forced Karuna's faction to retreat, local media reported he had foiled their initial onslaught.
"They wanted to surround Karuna's main group...and inflict the maximum possible losses. But Karuna managed to get his men out before they were encircled," The Island newspaper quoted a military source as saying.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Karuna's Cadres Giving Up!
Bandula Jayasekara in Colombo, SLT 2.30 P.M Monday 12 April. Unconfirmed Reports reaching from Batticaloa say that LTTE's renegade, Eastern Commander, Karuna's cadres have begun to give up and reach government controlled areas. Our sources said that nearly 600 cadres from Chenkaladi and 175 cadres from Valachchenai and Kiran had already come to cleared areas and some cadres have re-joined with their families. Reports also say that some of the heavy weaponry has been destroyed by them before coming over to cleared areas. Reports also say that none of the cadres have handed themselves to Prabhakarans troops, instead joined their families.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மட்டக்களப்பு நகரின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் மீட்புப்படையணிகள் வசம்
ஜ தீபன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 16:39 ஈழம் ஸ
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/02/karuna3_22644_435.jpg' border='0' alt='user posted image'>
படம் - தேனகம்
மட்டக்களப்பு நகரின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் படையணிகளால் இன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. விடுதலைப் புலிகளின் பல தாக்குதல் அணிகள் பல்வேறு பக்கங்களிலிருந்தும் மேற்கொண்ட நகர்வினாலேயே இப்பிரதேங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொக்கட்டிச்சோலைப் பகுதியானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு கருணாவின் பிரதான இயங்கு தளங்களாக இருந்த கரடியணாறு தேனகம் மாநாட்டு மண்டபம் மற்றும் தமிழ்அலை அச்சகம், பத்திரிகைக் காரியாலயம் என்பன கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்கு அணிகளுடன் விடுதலைப் புலிகளும் அரசியற் பணியாளர்களும் இப்பிரதேசங்கள் அனைத்திற்கும் வருகை தந்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலையில் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் அமோக வரவேற்புத் தந்துகொண்டிருப்பதைத் காணக்கூடியதாக இருந்ததாக தமிழ்அலை நிழற்பதிப்பின் கொக்கட்டிச்சோலைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலையும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டதையடுத்து வேறிடங்களில் இருந்து கருணாவின் குழுவில் இருந்து பிரிந்து வெளியேறும் போராளிகள் விடுதலைப் புலிகளின் மீட்பு அணிகளை பெருந்தொகையில் நாடிவந்தவண்ணமுள்ளதாகவும் மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கருணாவின் அணியினர் தற்போது தொப்பிக்கலையில் இருக்கும் மீனகம் முகாம் பகுதியிலிருந்து நு}ற்றுக்கணக்கான ஆண், பெண் போராளிகள் விடுதலைப் புலிகளுடன் வந்து மீள இணைவதைக் காணக்கூடியதாக இருந்ததாக தமிழ்நெற் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கருணாவிடம் இருந்து வந்தவர்களின் தகவலின்படி, தமது அணியின் தலைவர் தங்களை விடுதலைப்புலிகளுடன் சென்று இணையுமாறும் அல்லது வீடுகளிற்குச் செல்லுமாறும் தங்களிற்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கரடியணாறுப் பகுதிக்கு விரைந்த விடுதலைப்புலிகளுடன் கருணாவுடன் உள்ள பல அணித் தலைவர்கள் தொடர்புகளை மீளவும் ஸ்தாபித்துள்ளதாகவும் அவர்களும் அவர்களது அணிப் போராளிகளும் எந்நேரமும் தங்களிடம் வந்து சேரலாம் எனவும் மீட்பு அணியின் உறுப்பினர் ஒருவர் பத்திரிகையாளருக்கு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த அரசியல் பணிமனைகள் அனைத்துமே சனிக்கிழமை முதல் காலியாக இருந்ததாகவும், கருணா அணியினர் அவற்றை விட்டுப் பின்வாங்கிவிட்டனர் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை, தங்கள் பிள்ளைகளின் கதி என்னாயிற்று என்ற அங்கலாய்ப்புடன் காணப்பட்ட பெற்றோர் கருணா குழுவில் இருந்து விலகிவரும் போராளிகளிடம் தகவல்களைப் பெற முயற்சித்துக்கொண்டிருப்பதை கொக்கட்டிச்சோலையில் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விடுதலைப் புலிகளுக்கிடையிலான மோதலானது ஆழ்ந்த துயரத்தைத் தருவதாக சிதம்பரம் கூறுகிறார்
விடுதலைப் புலிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலானது ஆழ்ந்த துயரத்தைத் தருவதுடன் சமாதானப் பேச்சுகளுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதென்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சரும் காங்கிரஸ் ஜனநாயகப்பேரவைத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த மோதல்கள் பற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இது எனது வாழ்க்கையில் துயரம் மிக்க நாட்களில் ஒன்றாகும். தற்போதைய சூழ்நிலை குறித்து நான் முற்றுமுழுதாக அதிருப்தி அடைந்துள்ளேன்.
தசாப்தங்கள் நீண்ட இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான திருப்திகரமான சமாதான நடவடிக்கைகள் தீர்வினைப் பெற்றுத்தரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் விடுதலைப் புலிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்களது நலன்களின் மீது அக்கறையுள்ள அனைவரும் தற்போதைய மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்துள்ளதும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளதும் சமாதானப் பேச்சுக்கு ஏற்பட்டுள்ள இன்னுமொரு பாரிய பின்னடைவாகும் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
'தமிழ் இனத்துக்கே சிறப்பான உட்பகை"
இலங்கையில் விடுதலைப்புலிகள் இடையே ஏற்பட்டுள்ள சகோதர யுத்தம் இதயத்தைத் துளைக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம் வருமாறு:
ஈழத் தமிழர் பிரச்சினையை இந்திய மக்களும் குறிப்பாக தமிழ் மக்களும் அனுதாப உணர்வுடன்தான் அணுகினர்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் படை வீரர்களாக மாறினர். அப்படி மாறியவர்களுக்கு உள்ளேயே, தமிழ் இனத்துக்கே சிறப்பான உட்பகை தோன்றிடத் தவறவில்லை.
அதன் காரணமாகப் போராளிக் குழுக்கள் பல அமைந்தன. இவர்களுக்குள்ளேயே தனித்தனியே ஆயுதப் போர் நடத்தின. அப்போட்டியில் பெருந்தலைகளே பல உருண்டபோது, 'சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்" என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுத்தேன்.
மதுரையில் 'டெசோ" மகாநாடு நடத்தி, போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதித்தோம்.
அதற்குப் பிறகும் சகோதர யுத்தம் நிற்கவில்லை. ராஜீவ் காந்தியின் கொடுமையான படுகொலை, ஈழத்தமிழர் உரிமை பெற வேண்டுமென தமிழ் நாட்டு மக்கள் காட்டிய ஆர்வத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.
எத்தனையோ அரசியல் மாற்றங்களுக்கிடையே நோர்வேயின் முயற்சியால் சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் படிப்படியான முன்னேற்றமும் ஏற்பட்டது.
இருள் விலகாதா என எதிர்பார்த்திருக்கும் போது திடுமென ஒரு மின்னல் கீற்று கண்ணைப் பறித்தது போல புலிப் போராளிகளுக்கிடையே கருணா விவகாரம் வெடித்தது.
பாரதி பாடியது போல தமிழ் சாதியின் விதி என்று தான் இதை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளது.
இப்போது போராளிகளுக்குள்ளேயே போர் மூண்டுள்ளது. இந்த வகையான சகோதர யுத்தம் முடிவடையும் வரையில் சமாதானமாகவும், சந்தோர்மாகவும் சஞ்சலம் துளியும் இல்லாமலும் தமிழ் இனத்தவர் வாழ்வதற்கு வழி வகை ஏது? இந்த ஏக்கம் நம் இதயத்தை அல்லவா துளைக்கிறது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மீனகம் முகாமில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து கருணா தப்பியோட்டம்.
ஜ தீபன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 17:52 ஈழம் ஸ
கருணாவும் அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் மீனகம் முகாமிலிருந்து காட்டிற்குத் தப்பியோடியுள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா மற்றும் அவரது பாதுகாவலர்கள், கருணாவிற்கு நெருக்கமானவர்கள் ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளதாக விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான திரு. கரிகாலன் சுவிஸிலிருந்து தமிழ்நெற் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கருணாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எனது சகோதரர் தற்போது வீடு வந்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்த திரு.கரிகாலன், கருணாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த திரு.கௌசல்யன் தற்போது தாயகம் திரும்பி, மட்டக்களப்பு மாவட்ட அரசியல் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கருணாவின் முகாமிலிருந்த போராளிகள் தலைமைப்பீடத்துடன் பாதுகாப்பாக இணையும் நடவடிக்கைகளை அவர் இப்போது ஒருங்கிணைத்து வருகிறார்.
வெளிநாட்டு ஊடகங்களிற்கான காட்சி பொருளாக மாறியிருந்த விடுதலைப் புலிகளின் மீனகம் முகாம் தற்போது மிகவும் குழப்பான நிலையில் இருப்பதாகவும், அங்கே போராளிகளிற்கிடையே எதிர்ந்த எதிர்ப்பலையாலேயே கருணா இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் எனவும் தெரியவருகிறது.
இதேவேளை தென்தமிழீழத்தின் குரலாக வெளிவந்து, கருணாவால் பிரதேசவாதத்தைப் பரப்பும் ஊடகமாக மாற்றப்பட்ட தமிழ் அலை பத்திரிகை நாளை முதல் தனது பதிப்பை ஆரம்பிக்கும் எனவும் தெரியவருகிறது.
கருணாவின் சதி நடவடிக்கை எதிர் பார்க்கப்பட்டதிலும் பார்க்க வேகமாக முறியடிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண மக்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக மக்கள் புதுவருடத்தை மிகவும் சந்தோசமான மனநிலையில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரிவு என்பது முற்றுப்பெற்றுவிட்டதாகவும், கருணாவுடன் நின்ற போராளிகள் தலைமைப்பீடத்துடன் இணைவதையும், சிலர் வீடுகளிற்கு திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் மீனகம் முகாம் போராளி ஒருவர் தெரிவித்தாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Karuna withdraws to jungle hideout
[TamilNet, April 12, 2004 10:42 GMT]
Renegade LTTE commander Karuna,' Mr. Vinayagamoorthy Muraleetharan has retreated to his jungle hideout accompanied by a small number of his closest supporters and bodyguards, Sivagnanam Karikalan, a senior leader of the Liberation Tigers from the east, who is currently visiting Switzerland, told TamilNet.
"My brother who was in Karuna's custody has been released and has returned home," a jubilant Karikalan told TamilNet further. He added most of the people who were held by Karuna in his custody have been released.
Meanwhile, Kausalyan, who was hurriedly asked to return home from his European visit, is in Batticaloa organizing the Political Unit of Liberation Tigers back to normality with an urgency to co-ordinate safe return of fighters from Karuna's camp, according to sources from the ground.
Meenakam camp, the LTTE's military camp that was showcased to western media by Karuna during the early stages of the internal rift, is left abandoned, LTTE sources said.
Sources also said, Tami Alai, the Batticaloa based daily, is expected to be published from tomorrow.
Residents of Batticaloa district appeared happy and relieved by the unexpected sudden end to Karuna's rebellian and wereseen busy preparing to celebrate the Tamil, Sinhala New Year, sources in Batticaloa said.
An AFP report quoting military and rebel sources said that the renegade group has declared an end to their factional war with the rebel group's leadership.
"Over 400 to 500 ... were asked to go home. We were theonly ones left after the others fled," the AFP reported quoted a Tiger fighter identified as Arulmoli saying after joining her parents.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கருணாவின் படை கலைந்தது: புலிகள் கையில் மட்டக்களப்பு
கொழும்பு:
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளை கருணாவின் படைகளிடம் இருந்து விடுதலைப் புலிகள் கைப்பற்றிவிட்டனர். இன்று காலை பல்முனைகளில் தாக்குதல் நடத்திய புலிகள் கொக்கடிச்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து கருணா தலைமையிலான படை எதிர் தாக்குதலை கைவிட்டுவிட்டு, கலைய ஆரம்பித்துள்ளது. மேலும் ராணுவத்தைத் தொடர்பு கொண்டுள்ள கருணா தரப்பு, தங்களால் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை என்றும், இதனால் தற்காப்புத் தாக்குதலையும் நிறுத்திவிட்டுக் கலைவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
கருணா ஆதரவு பத்திரிக்கையான தமிழ் அலை அலுவலகத்தையும் அதன் பதிப்பகத்தையும் புலிகளின் அரசியல் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது.
அதே போல கருணாவின் முக்கிய படைத் தளமான மீனகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் படையினரும் வெளியேறி வருகின்றனர். மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளையும் புலிகள் கைப்பற்றி வருவதால், மீனகத்தை விட்டு வெளியேறிவிடுமாறு அந்தத் தளத்தின் கமாண்டர் தங்களை அறிவுறுத்தியதாக தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர்.
புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டாம் என்று கமாண்டர் கூறியதாகவும், சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுங்கள் அல்லது முன்னேறி வரும் புலிகளுடன் இணைந்துவிடுங்கள் என தங்களை அவர் அறிவுறுத்தியதாக தமிழ்நெட் செய்தியாளரிடம் வீரர்கள் கூறியுள்ளனர்.
அருள்மொழி என்ற பெண் புலி நிருபர்களிடம் பேசுகையில், மீனகம் முகாமில் நாங்கள் இருந்தோம். அங்கிருந்த பல வீரர்களும் தப்பியோடிவிட்ட நிலையில் 400 முதல் 500 பேர் வரை தொடர்ந்து அங்கேயே இருந்தோம். எங்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கமாண்டர் கூறிவிட்டார் என்றார்.
அதே போல கரடியனாறு பகுதியில் உள்ள தேனகம் மாநாட்டு அரங்கையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த அரங்கம் கருணாவின் அரசியல் தலைமையகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்று நிருபர்கள் இந்த அரங்கத்துக்குச் சென்றபோது, அங்கு யாரும் இல்லை. இங்கிருந்த கருணாவின் படையினர் தப்பியோடிவிட்டனர்.
பெரும்பாலான கருணாவின் படைத் தளபதிகளும் மோதலை விரும்பவில்லை என்றும், இணைந்து செயல்பட விரும்புவதாகவும் புலிகளுக்கு செய்தி அனுப்பியபடி உள்ளனர். இதனால் பெரிய அளவிலான சண்டை ஏதும் இன்று நடக்கவில்லை. இவர்கள் விரைவில் தங்களது வீரர்களுடன் வந்து எஙகளுடன் இணைவர் என புலிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே ராணுவத் தரப்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
எங்களது உதவி கிடைக்கும் என கருணா எதிர்பார்த்தார். ஆனால், நாங்கள் உதவி செய்யவில்லை. இதனால் புலிகளின் மிகக் கடுமையான தாக்குதலை சமாளிக்க கருணாவின் படைகளால் முடியவில்லை. அவரது படையினர் தங்களிடம் இருந்த மோட்டார் சைக்களிகள் உள்ளிட்ட உடமைகளை விற்றுவிட்டு தப்பியோடி வருகின்றனர் என்றார்.
புலிகளின் தாக்குதலை கடுமையான போர் பயிற்சி பெற்ற ஜெயந்தன் பிரிகேட் படை தலைமை தாங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நடந்த போர்களில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய படை இது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் ஏராளமான அளவில் உள்ளனர்.
thatstamil.com
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தேசிய நெருப்பில் எரிந்திட்ட பிரதேசவாதம்!
12.04.2004
மட்டக்களப்பின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ் அலை நிழற் பதிப்பினர் இன்று மாலை கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தமிழ் அலை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தமிழ் அலை அலுவலகத்தை முற்றாகக் கைவிட்டுச் சென்றிருந்த கருணா குழுவினரின் பல்வேறு பொருட்கள், நாட்குறிப்புகள், உலர் உணவுகள், பத்திரிகைகள் என்பன ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டன. தமிழ் அலை அலுவலகத்தைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பணியாளர்கள் அதனைச் சுத்தம் செய்வதைக் காணக்கூடியதாகவிருந்தது. தொடர்ந்து பத்திரிகையை வெளியிடுவதற்கான முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் பணியாளர்கள் பெருமளவு மக்கள் திரளாக வந்து போராளிகளைச் சந்தித்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வயது முதிர்ந்த பெரியவர் தலைவரின் பிள்ளைகள் வந்து விட்டார்கள் என்று கூறி போராளிகளைக் கட்டி அணைத்ததுடன் கருணாவின் கட்டுப்பாட்டில் தாங்கள் எதிர் நோக்கிய நெருக்கடிகளையும் அவர் போராளிகளுடன் பகிர்ந்து கொண்டார். அரச இராணுவத்தின் பிடியிலிருந்து மீண்டது போன்ற உணர்வையே அங்கு மக்களின் முகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
பிரதேச வாதத்திற்கு முண்டு கொடுத்த எம் பிரதேசவாதக் கனவான்களே, மீட்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். தேசிய நெருப்பில் எரிந்து அழிந்திட்ட பிரதேசவாத சாம்பலின் மணத்தை நுகர்வீர்;கள்!.
Thanx: Thamil Alai
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
கருணா காட்டுக்குத் தப்பியோடவில்லை இராணுவத்திடம்தஞ்சம் புகுந்துள்ளார் என மட்டக்களப்பிலிருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இது பற்றி புதினத்தில் வந்த செய்தி
ஓரளவுக்கு உண்மை போலத் தெரிகிறது
பிந்திய செய்தி: கருணா, நிலாவனி இருவரும் கொழும்புக்குத் தப்பியோட்டம்
காவலு}ர் கவிதன் திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 20:51 ஈழம்
தேனகம் உட்பட மட்டக்களப்பின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கருணாவும் நிலாவனியும் கொழும்புக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இலங்கை அரசிடம் அல்லது இலங்கை கண்காணிப்புக் குழுவிடம் சரணடைவது குறித்து உயர்மட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா இராணுவ உளவுப்படை முந்திக்கொண்டு, கருணா, நிலாவனி இருவருக்கும் பாதுகாப்பளித்து கொழும்புக்குக் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
விபரமான செய்திகளை அறிந்து கொள்ள புதினம் இணையத்தளத்திற்கு மீண்டும் வாருங்கள்.
\" \"
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இதைப்பற்றி நேற்றே தகவல் அறிய முடிந்தது.
பொலநறுவை இராணுவ முகாமில் சரணடைந்தததாக அறிய முடிந்தது. உண்மை அறியாமல் செய்தி முன்வைப்பது ஆபத்தானது அதனால் அமைதியாக இருந்தேன்.
[b] ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Over 1000 Cadres In Cleared Areas- Karunas Whereabouts Not Known
Bandula Jayasekara in Colombo, SLT 10.00 P.M Monday 12 April. Military officials say nearly 1500 cadres who were under LTTE's renegade, Eastern Commander, Karuna Amman had come to cleared areas today but, they were yet to hear anything about the 4000 odd cadres Karuna claims to be having under his control. Immediately after he broke off with Prabhakaran, Karuna claimed that he has 6000 LTTE cadres under his command. Military officials said, " It is difficult to fathom what had happened to them. There is no communication from them" Karunas whereabouts are also not known though the rumour in Batticaloa is that he had flown out of the area to an unknown destination. However, military officers in the area said that they were not in a position to comment on the rumours that were spreading in the area. Intelligence sources say that though they were in a position to intercept communications from Prabhakarans troops they were unable to listen to any communication from Karunas faction. Reports also said that Prabhakarans group had blocked Karunas communication network before they commenced the attack early Friday.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிந்திய செய்தி: கருணா கொழும்புக்குத் தப்பியோட்டம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 21:28 ஈழம் ஸ
தேனகம் அரசியற் தலைமையகம் உட்பட மட்டக்களப்பின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கருணா கொழும்புக்குத் தப்பியோடியுள்ளதை லண்டனிலிருந்து இயங்கும் ஐபிசி வானொலி உறுதி செய்துள்ளது.
சிறீலங்கா அரசிடம் அல்லது இலங்கை கண்காணிப்புக் குழுவிடம் சரணடைவது குறித்து உயர்மட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா இராணுவ உளவுப்படை முந்திக்கொண்டு, கருணாவுக்கு பாதுகாப்பளித்து கொழும்புக்குக் கொண்டு சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
கருணா தன்னுடன் நிலாவனி, தீந்தமிழ் ஆகிய இருவரை மட்டுமே அழைத்துச் சென்றுள்ளதாகவும், மீதியான ஒருசில முக்கிய உதவியாளர்களைக் கூட்டிச் செல்ல முயன்றபோதும், அவர்கள் அனைவரும் மறுத்து விட்டதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு மறுப்புத் தெரிவித்த ஒரு முக்கிய பெண்போராளி கருத்துக் கூறுகையில், தனது கண்ணுக்கு முன்னே தேசியத் தலைவரின் படத்தைத் தூக்கியெறிந்து உடைத்த போது, தனது நெஞ்சே வெடித்து விட்டது போன்று உணர்ந்ததாகவும், எப்படியும் விரைவில் கருணா, நிலாவனி என்ற இருவரின் படங்களையும் தனது கையாலேயே தூக்கியெறிந்து உடைப்பதற்கு சவாலெடுத்திருந்ததாகவும், இவ்வளவு விரைவில் அந்தக் காலம் கனிந்து வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
சிறீலங்கா அரச பாதுகாப்பில், கொழும்புக்குத் தப்பியோடவுள்ளதையும், அங்கிருந்து வெளிநாடொன்றுக்குத் தப்பிச்செல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததையும் அப்பெண்போராளி உறுதி செய்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தேசியத் தலைமையிடம் இணைந்து விட்டதாகவும், அவர்களில் விரும்பியவர்களை அவர்களது பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு விரைவில் நடைபெறுமென்றும் தெரியவருகிறது.
இதற்கிடையில், கிழக்கிலங்கை மக்களுக்கு தற்போதைய களநிலவரங்களைப் புரியவைப்பதிலும், மீளக்குடியேறும் மக்களின் அவசரத் தேவைகளில் உதவுவதிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா தனது எதிர்ப்பை முற்றாக நிறுத்தி விட்டார் - எரிக் சொல்ஹெய்ம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 22:47 ஈழம் ஸ
தனக்குக் கிடைத்த செய்திகளின் படி, கருணா தரப்பினர் தமது எதிர்ப்பை முற்றாக நிறுத்திக்கொண்டு பின்வாங்கி விட்டதாக எரிக் சொல்ஹெய்ம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கருணாவின் தற்போதைய நிலை என்ன, எங்கே ஒளிந்திருக்கிறார், யார் பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்ற விபரமெதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த சொல்ஹெய்ம், கருணாவின் எதிர்ப்பு முற்றாக நிறுத்தப்பட்டு விட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் ஓர் அவசர சந்திப்பிற்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதை கண்காணிப்புக்குழுவின் பிரதித் தலைவர் ஹேக்ரப் ஹோக்லான்ட் உறுதிசெய்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கருணா தரப்பினர் பாதுகாப்பைக் கோரும் பட்சத்தில், உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு, அடிப்படைப் பாதுகாப்பு வழங்க அரசு தயாராகவிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் சிரில் ஹேரத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தங்களுடன் கருணா தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக வந்த செய்திகளை நிராகரித்துள்ளார்.
மட்டக்களப்பு-அம்பாறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் முழுமையாக தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளதாகவும், அங்கு எதுவித அசம்பாவிதங்கள், குழப்பங்கள் எதுவுமின்றி, நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் எமது புதினம் நிருபர் தெரிவிக்கிறார்.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணாவின் பிரதேசவாதத்தில் குளிர்காய முயன்ற சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு பெரும் ஏமாற்றம்
<img src='http://sooriyan.com/images/stories/karuna/frontline_ar.jpg' border='0' alt='user posted image'>
ஜ தமயந்தி ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 23:50 ஈழம் ஸ
கருணாவின் பிரச்சனைகளைப் பூதாகரப்படுத்தி, சர்வதேச மட்டத்தில் பிரதேசவாதத்தைத் து}ண்டுவதற்கும், விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தை முடுக்கி விடுவதிலும் கடுகதியில் உழைத்த பல சர்வதேச ஊடகங்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.
மட்டக்களப்பு தமிழ்அலை உட்பட, ஐரோப்பா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இயங்கும் சில ஊடகங்கள், கருணாவின் பிரச்சனை குறித்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டமை, பொய் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டமை, கருணா கிளப்பிய பிரதேசவாதத்திற்கு வக்காலத்து வாங்கியமை, மக்களைப் பீதிக்குள்ளாக்கியமை போன்றவை உட்பட, அவசியமற்ற தகவல்களை அநாமதேய ஊடகங்களை மேற்கோள் காட்டி தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், திடிரென கருணா குழுவினர் பின்வாங்கியதுடன், கொழும்புக்குத் தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில், இவ்வூடகங்கள் மிகப் பெரும் வெறுப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ளதுடன், இத்தகைய செயலில் ஈடுபட்ட ஊடகங்கள் சில, வேகமாகவே சுதாகரித்துக்கொண்டு மீண்டும் கருணாவுக்கு எதிரான செய்திகள் சிலவற்றைப் பிரசுரித்து, தங்களது பக்கச்சார்பு நிலையை மீண்டும் நியாயப்படுத்த முயல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியான காலப்பகுதியில், நேர்மையுடன் செயற்பட்ட சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்தில், தமிழ்த் தேசியத்தின் ஒட்டு மொத்த வெற்றிக்காக அனைத்து ஊடகங்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து, இனிவரும் காலத்தில், ஓர் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்த் தேசியத்தின் ஒன்றுபட்ட இனவிடுதலையை நோக்கி அனைத்து ஊடகங்களும் செயற்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இதே செய்தியுடன் யாழ் களத்தில் கருணா பற்றிய செய்தியால் ஏற்பட்ட சலசலப்புகள்,மிண்டு கொடுப்புகள்,சபதங்கள்,எதிர்வு கூறல்கள்,பரப்புரைகள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கின்றேன்
எல்லாமே மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய மாதிரி ஆகிவிட்டது இல்லையா நண்பரே
நேற்று நீங்கள் சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது
செய்நன்றிக்காகவோ சகோதர பாசத்திற்காகவோ அநீதிக்கு துணை நிற்றலாகாது- சத்திய வார்த்தைகள்
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:இதே செய்தியுடன் யாழ் களத்தில் கருணா பற்றிய செய்தியால் ஏற்பட்ட சலசலப்புகள்,மிண்டு கொடுப்புகள்,சபதங்கள்,எதிர்வு கூறல்கள்,பரப்புரைகள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கின்றேன்
எல்லாமே மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய மாதிரி ஆகிவிட்டது இல்லையா நண்பரே
நேற்று நீங்கள் சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது
<b>செய்நன்றிக்காகவோ சகோதர பாசத்திற்காகவோ அநீதிக்கு துணை நிற்றலாகாது</b>- சத்திய வார்த்தைகள்
நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|