Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பி.பி.சி தமிழ்ச்(துரோக)சேவை?!!
#1
<b>பி.பி.சி தமிழ்ச் சேவை மீது தமிழ் மக்கள் விசனம் </b>

(யாழிலிருந்து மணிமாறன் சனிக்கிழமை, 03 ஏப்பிரல் 2004, 11:39 ஈழம்)

தேர்தல் குறித்த விபரங்களையறிவதை விட மக்கள் மத்தியில் இன்று ஒரு செய்தியுூடகம் பற்றிய கவலையே மக்களைப் பெரிதாகப் பாதித்திருந்தது.

பி.பி.சி தமிழ்ச்சேவையின் செய்தியாக்கங்கள் பக்கசார்பானவையாக இருப்பதாகவும், மிகவும் சுதந்திரமான ஊடகம் என்ற பெயரையுடைய பி.பி.சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் அதன் தமிழ்ச்சேவை இறங்கியுள்ளதான கருத்துக்களே தமிழ் மக்களிடையேயான பேசுபொருளாக இன்று இருந்தது.

தேர்தல் முடிவுகளை அறிவதை விடவும், பி.பி.சி தமிழ்ச் சேவையின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியே இன்று பரவலாகக் காணப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் முடிவுகளின் படி சுமார் 90 விழுக்காடு வாக்குக்களை தமிழ்த் தேசிய முன்னணி பெற்று, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை நிரூபித்துள்ளது.

ஆனால் பி.பி.சியின் தமிழ்ச் சேவையோ கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளராக இருக்கும் தமிழ்த் தேசிய முன்னணியைப் புறந்தள்ளி ஆனந்தசங்கரியையும், டக்ளஸ் தேவானந்தாவையும் பேட்டி காண்பதும், முன்னிலைப் படுத்துவதும் மக்களின் விருப்புக்களை மதிக்காத ஒரு செயலாகவும், ஊடக சர்வாதிகாரத்தை புலப்படும் ஒரு செயலாகவும் நோக்கப்படுகின்ற நிலையை குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

அதிலும் தனது செய்தியாளரான நிமலராஐனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் மிக முக்கிய உறுப்பினரே கரம்பனில் இடம்பெற்ற மாணவி மீதான பாலியல் வல்லுறவின் சந்தேகநபராகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது பற்றி மௌனம் சாதித்து வரும் பி.பி.சி தமிழ்ச்சேவை, இதற்கு மாறாக ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை முன்னிலைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பலையைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தனக்கான செய்தி வழங்கிய ஒரு செய்தியாளரை காட்டுமிராண்டிதனமாக கொண்றொழித்த ஒரு தரப்பை பி.பி.சி தமிழ்ச்சேவை தூக்கிச் சீராட்டுவது குறித்து தமிழ்ச் சேவையின் மீதான வெறுப்புணர்வையே காணக்கூடியதாகவுள்ளது.

மிகவும் சுதந்திமானதும், நடுநிலையானதுமான ஊடகமான பி.பி.சியின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் தமிழ்ச்சேவையின் பாராபட்சமான நிலைப்பாடு குறித்த கருத்துக்களை அதற்கு தெரிவிக்கும் முகமான செயற்பாடுகளை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

நீங்களும் பி.பி.சி.யின் நிகழ்ச்சிகளை கேட்பவர்களாக இருந்தால் தமிழ்ச்சேவையின் நிகழ்ச்சிகள் குறித்த உங்கள் கருத்துக்களை நேரடியாக அவர்களிற்கு தெரிவிக்கலாம்.

email : டிடிஉவயஅடை@ஒடறநடி.உழஅ
Telephone : +44 (0)20 -7557-2719
Fax : +44 (0)20-7497-0297

நன்றி: புதினம்.கொம்

இவர்களும் தேவையானவர்களினால் மாற்றப்பட்டுள்ளார்களா.... இது அவர்களது மேலிடத்துக்கு தெரியுமோ.... அல்லது எல்லோரும் சேர்ந்தோ ஆரறிவார் போக போக தெரியவரும் என நினைப்போமாக இவர்களுக்கு நாம் சரியான பாடம் புகட்டத்தான் வேண்டும்... நீங்களும் அந்தவழிகளில் இறங்கவும் நன்றி Idea
Reply
#2
இன்றாவது புரிந்துகொண்டீர்களே நல்லது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#3
என்னே ஆச்சரியம்.. பற்றி கண்ணடம் தெரிவிப்பவர் பலரும் பிரித்தானியாவில்தான் இருக்கிறார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
அவர்கள் நேற்று தமிழ்தேசிய கூட்டைப்பினரையும் பேட்டி கண்டிருந்தனர்.
Reply
#5
இது பி.பி.சி மீது வீண்பழி சுமத்தும் ஒரு குற்றச் சாட்டு. டக்ளசும் சங்கரியாருமே தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றஞ் சாட்டியிருந்தார்கள் அதனாற்தான் அவர்களைச் செவ்வி கண்டிருந்தார்கள். அதன் பின்பு அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பதற்குச் சம்பந்தனுக்குச் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்கள்.
Reply
#6
இது நேற்று முந்தநாள் செய்த அவதானத்திலிருந்து வந்ததல்ல...நான் 2003 இலிருந்து அவதானித்து வருகிறேன் என்னைப் பொறுத்தவரை அந்தச் செய்தி கூறுவது உண்மை. இதைப்பற்றி அவர்களுக்கு பலமுறை எடுத்துக்கூறி மின்னஞ்சல் போட்டிருக்கிறேன்...இதுவரை பதில் ஏதும் இல்லை!!!
Reply
#7
கடைசி இதிலையாவது ஜனநாயகமுறையிலை அபிப்பிராயம் சொல்லக்கூடியதையிட்டு சந்தோஷம்.. நம்மாக்கள் நடாத்திறதாயிருந்தால் இத்தனைக்கும் அடிச்சு நொருக்கியிருப்பாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
<b>இச்செய்திசேவை 1வருடமோ 2வருடங்களுக்குமுன் நிதிபற்றாக்குறையில் திண்டாடுகிறது என செய்தி அறிந்திருப்பீர்களே... (அதாவது 48மொழியுக்கும் யுகே அரசால் நிதிவழங்குவதில்) இப்ப விளங்குகிறதா..........</b>
Reply
#9
:roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
vasisutha Wrote::roll: :roll:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)