Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள பெளத்த பேரினவாதத்தின் காவலன் கருணா...!
#1
[b]<span style='color:red'>சிங்கள இனவாத ஊடகங்கள், கருணாவை சிங்கள இனத்திற்கு விடிவுதந்த ஒருவராகச் சித்தரித்துள்ளன

சிறீலங்காவில், சிங்கள இனம் பல குழுக்களாகச் சிதறுண்டு, தங்களுக்குள் மோதிக்கொண்டிருந்த நிலையிலும், முஸ்லிம் இனமும் தனக்குள் சிதறுண்டிருந்த நிலையிலும், தமிழினம் விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பின் கீழ் ஒன்றாக இணைந்திருந்தமை சிங்கள இனத்திற்கு ஒரு சாபக்கேடாக இருந்ததென்றும், கருணா அதற்கு முடிவு கட்டி, தமிழினத்தின் ஒற்றுமையைக் குலைத்ததன் மூலம், சிங்கள இனத்திற்கு விடிவு தந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அவை வழங்கியுள்ள மேலதிக தகவல்களில் தெரிவித்திருப்பதாவது:

சந்திரிகா-ரணில் பிளவு, ஜே.வி.பி.-சிங்கள உறுமய பிளவு, ஐ.ம.சு.மு.க்குள் பிரதமர் பதவிக்கான பிளவு, முஸ்லிம் கட்சிகளுக்குள் கடும் பிளவு, மலையகக் கட்சிகளுக்குள் பிளவு, பௌத்த மஹா சபைக்குள் ஆதரவாகவும் எதிராகவும் பிளவு, சிங்கள ஊடகங்களுக்குள் பிளவு, சிங்கள மக்களுக்குள் பிளவு என்று பெரும்பான்மைக்குள் கடுமையான நெருக்கடிகள் இருந்தபோது, தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் நின்றமை, சிறீலங்காவின் பௌத்த சிங்கள இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பொருந்தியவர்களாக வெற்றியுடன் காணப்பட்டிருப்பார்கள் என்ற நிலைமை இருந்தபோது, கருணா தன்னை விலக்கிக்கொண்டு, தனி அமைப்பை அறிவித்ததன் மூலம், சிங்கள இனத்திற்கு கருணா என்ற முரளிதரன் ஒரு விடிவெள்ளியாக உருவெடுத்துள்ளார் என்று அந்த ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

கருணா பிரிந்து நிற்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த தற்போது ஆட்சியில் சரியான தலைமை இல்லை என்று கவலை தெரிவித்திருக்கும் சிங்கள ஊடகங்கள், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சிங்கள அரசு, கருணாவின் பிளவை சரியாகப் பயன்படுத்தி, சிறுபான்மை இனத்திற்குரிய ஆகக்குறைந்த உரிமைகளை மட்டுமே வழங்கி, இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சிக்க வேண்டுமென்று விதந்துரைத்துள்ளன.

குறிப்பாக இவ்விடயத்தில், ஜே.வி.பி. மற்றும் சிங்கள உறுமய ஆகியன முக்கிய கவனமெடுத்து, ஐனாதிபதி சந்திரிகாவுடன் கைகோர்த்து, கருணாவின் பிளவை பௌத்த சிங்கள வெற்றிக்கான ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பயன்படுத்த வேண்டுமென்றும், கருணாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களையும் இதற்கு ஏதுவாகப் பயன்படுத்த முன்வரவேண்டுமென்றும் கோரிக்கையும் விடுத்துள்ளன. </span>

நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
kuruvikal Wrote:.............

அவை வழங்கியுள்ள மேலதிக தகவல்களில் தெரிவித்திருப்பதாவது:

சந்திரிகா-ரணில் பிளவு, ஜே.வி.பி.-சிங்கள உறுமய பிளவு, ஐ.ம.சு.மு.க்குள் பிரதமர் பதவிக்கான பிளவு, முஸ்லிம் கட்சிகளுக்குள் கடும் பிளவு, மலையகக் கட்சிகளுக்குள் பிளவு, பௌத்த மஹா சபைக்குள் ஆதரவாகவும் எதிராகவும் பிளவு, சிங்கள ஊடகங்களுக்குள் பிளவு, சிங்கள மக்களுக்குள் பிளவு என்று பெரும்பான்மைக்குள் கடுமையான நெருக்கடிகள் இருந்தபோது, தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் நின்றமை, சிறீலங்காவின் பௌத்த சிங்கள இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.

நன்றி புதினம்...!

எங்கெங்கை பிளவு எண்டு சொல்லுறியளோ அங்கையெல்லாம்
சன நாய் அகம் இருக்குது போல நீங்கள் வழமையா சொல்லுறது மாதிரி
Reply
#3
Kanthar Wrote:
kuruvikal Wrote:அவை வழங்கியுள்ள மேலதிக தகவல்களில் தெரிவித்திருப்பதாவது:

சந்திரிகா-ரணில் பிளவு, ஜே.வி.பி.-சிங்கள உறுமய பிளவு, ஐ.ம.சு.மு.க்குள் பிரதமர் பதவிக்கான பிளவு, முஸ்லிம் கட்சிகளுக்குள் கடும் பிளவு, மலையகக் கட்சிகளுக்குள் பிளவு, பௌத்த மஹா சபைக்குள் ஆதரவாகவும் எதிராகவும் பிளவு, சிங்கள ஊடகங்களுக்குள் பிளவு, சிங்கள மக்களுக்குள் பிளவு என்று பெரும்பான்மைக்குள் கடுமையான நெருக்கடிகள் இருந்தபோது, தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் நின்றமை, சிறீலங்காவின் பௌத்த சிங்கள இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.

நன்றி புதினம்...!
எங்கெங்கை பிளவு எண்டு சொல்லுறியளோ அங்கையெல்லாம்
சன நாய் அகம் இருக்குது போல நீங்கள் வழமையா சொல்லுறது மாதிரி
சாச்சா.. இருக்காது கந்தர்.. அங்கை பிளவு இருந்தாலும் இழவு இல்லை.. எண்டபடியால் குருவியள் சொல்லுறது அங்கை இல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
ஏன் எப்படி வந்தது பிளவு - இத்தால்
இன்னது காரணமாம் உளவு
Reply
#5
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
#6
Mathivathanan Wrote:நீக்கப்பட்டுள்ளது - மோகன்
:idea: :idea: :idea:

ஒண்ணுமோ புரியமாட்டேங்குது நைனா
பேஜாரா எழுவாதிங்க
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)