Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
BBC Wrote:[quote=Eelavan]சுயவிமர்சனம் விடுதலைப் புலிகளாலேயே செய்யப்படுகின்றது இதனை நான் அறிவேன் வெறுமனே பொது மக்களும் அடிமட்டப் போராளிகளும் தலைவரால் எல்லாம் முடியும் எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று சொன்னாலும் தலைவருக்கு வரையறைகள் பற்றிய தெளிவு இருக்கிறது அதனையே அவர் அடிக்கடி வரலாறு எனது வழிகாட்டி என்று கூறுவார்

அதே போன்று புலனாய்வுப் பிரிவினர் வெறுமனே எதிரிகளை மாத்திரம் புலனறிவதில்லை மக்கள் மத்தியில் என்ன பேசிக்கொள்கிறர்கள் என்பதையும் அவர்கள் உளவறிவார்கள் அதனை விட போராட்டத்தில் ஈடுபடாத ஆர்வலர்கள் புத்திஜீவிகள் நிறையப் பேர் ஆலோசனைகள் கூறுவார்கள்

இவ்வளவுமிருக்க பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதால் புதிதாக என்ன தெரியவரப் போகின்றது

அப்படியானால் பத்திரிகைகள் விமர்சனம் அல்லது கருத்து தெரிவிக்க தேவையில்லை அப்படித்தானே ஈழவன்? அரசாங்கத்துக்கு ஏரிக்கரை பத்திரிகைகள் (Lake House News Papers) எப்படி சிங் சக் போடுகின்றார்களோ அப்படியே தமிழ் பத்திரிகைகளும் செய்தால் போதும் என்கின்றீர்கள்? அப்படியானால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் சொன்ன சுயவிமர்சனத்துக்குத் தான் இது பதில் நான் சொன்ன புத்திஜீவிகளில் பத்திரிகைகளும் அடங்கும்

பத்திரிகைகள் தமது பத்திரிகா தர்மம்,தார்மீகக் கடமை இவற்றைக் கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடவேண்டும் அது எப்பக்கத்துச் செய்தியாயினும் சரி வெறுமனே சிங் சக் போடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை

இவ்வளவு நாளும் சிங் சக் போட்ட பாடுமீனும் தமிழலையும் எப்படி மாறின பாருங்கள் அதே போன்று மற்றவர்களும் மாற மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்
\" \"
Reply
[b][size=14]கிழக்கே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களே இல்லாதமாதிரி அங்கு நடக்கும் சம்பவங்களையும் போராட்டங்களையும் இருட்டடிப்புச்செய்ய நல்ல பதம் தார்மீகக் கடமை.. இல்லையா ஈழவன்..?

கிழக்கே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்கள் செய்திகள் வெளியே வராமல் தடுக்கப்படவேண்டும்.. இருட்டடிப்புச் செய்யப்படவேண்டும்.. இதுதானே தமிழீழ ஊடகத்துறையின் தார்மீகக் கடமை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
அங்கே போராட்டமா நடக்கிறது?! போராட்டத்தைக் குழப்பும் சதியல்லவா நிகழ்கிறது?!
.
Reply
sOliyAn Wrote:அங்கே போராட்டமா நடக்கிறது?! போராட்டத்தைக் குழப்பும் சதியல்லவா நிகழ்கிறது?!
[b]ஐயா மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதம்.. ஹர்த்தால் எல்லாம் போராட்டமில்லையா..?
அப்படியானால் இயக்கமும் இயக்கம் சார்ந்த ஊடகங்களும் இதுவரை போராட்டமென்று சொல்லியதெல்லாம் பொய்யுரைதானா..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:[b][size=14]கிழக்கே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களே இல்லாதமாதிரி அங்கு நடக்கும் சம்பவங்களையும் போராட்டங்களையும் இருட்டடிப்புச்செய்ய நல்ல பதம் தார்மீகக் கடமை.. இல்லையா ஈழவன்..?

கிழக்கே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்கள் செய்திகள் வெளியே வராமல் தடுக்கப்படவேண்டும்.. இருட்டடிப்புச் செய்யப்படவேண்டும்.. இதுதானே தமிழீழ ஊடகத்துறையின் தார்மீகக் கடமை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இல்லையே அங்கு நடந்த உண்ணாவிரதம் மற்றும் பிரதேசவாதத்துக்கெதிரான போராட்டங்கள் விடுதலைப் புலிகள் மத்தியிலான பிளவைக் கண்டிக்கும் புத்திமான்களின் செய்திகள் புலிகளின் ஆதரவு ஊடகங்கள் என நீங்கள் கூறிக்கொள்பவற்றிலும் வருகின்றன தானே கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் இல்லாமையா அதற்கு ஒரு தளபதி,அரசியற்துறைப் பொறுப்பாளர் நியமித்தார்கள்

அதுசரி தமிழலையில் ஏன் இந்தப்பக்கத்துச் செய்திகள் போடப்படவில்லை கேட்டீர்களா
\" \"
Reply
போராட்டத்துக்கும் அராஜகத்துக்கும் வித்தியாசமிருக்குதல்லவா?!
.
Reply
முன்பும்கூட அவர்கள் கிழக்குமாகாண செய்திகளுக்கும் போராட்டங்களுக்கும்தான் முன்னுரிமை அளித்தார்கள் அது உங்களுக்குத்தெரியுமா..?
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
sOliyAn Wrote:போராட்டத்துக்கும் அராஜகத்துக்கும் வித்தியாசமிருக்குதல்லவா?!
இங்கு நடப்பதுதான் அராஜகம்.. அவர்களது செய்திகளை இருட்டடிப்புச்செய்து குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் முயற்சி..
இதைவிடவா அவர்கள் செய்வது அராஜகம்..?
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
சரி தாத்தா இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம் என்று சொல்லுங்கோ மாறி மாறி அவன் பிழை இவன் பிழை என்றால் எதுவும் நடக்காது இந்தப் பிளவை எப்படி ஒன்றாக்கலாம்
\" \"
Reply
Eelavan Wrote:சரி தாத்தா இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம் என்று சொல்லுங்கோ மாறி மாறி அவன் பிழை இவன் பிழை என்றால் எதுவும் நடக்காது இந்தப் பிளவை எப்படி ஒன்றாக்கலாம்
ஏற்கெனவே இதற்கான பதில் எழுதிவிட்டேன்.. தேடிப்பாருங்கள்.. நிர்வாகம் நசுக்கிடாமல் நீக்கியிருந்தால் உங்கள் துர்அதிஸ்டம்.
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
அது கிடக்கட்டும் வேறை என்ன சொல்லியிருப்பியள் அவங்கள் கேட்டதை கொடுங்கோ என்று சொல்லியிருப்பீர்கள்

சரி இவர் தராகி கருணாவின் நோக்கம் அபிவிருத்தியா என்பதை கேள்விக்குறியாக்கி இருக்கிறாரே அதனைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்

குடும்பி மலைக்கு உலங்கு வானூர்தி ஒன்று வந்து இறங்கி ஏறினதாம் அம்மான் ஓடிப்போயிட்டாரோ?
\" \"
Reply
[b]தராகி அங்கு நடக்கும்போராட்டங்கள்பற்றி எழுதட்டும்.. தேடிப்போன தராகிக்கு மட்டக்களப்பு நிலைமை சிறிதுகூட தெரியாமல் போனது அதிசயம்தான்..

அதாவது உங்களுக்கு வானூர்தி இறங்கி ஏறுவது தெரிகிறது.. அங்கு 5 கோரிக்கைகளை வைத்து நடக்கும் உண்ணாவிரதப்போராட்டம் தெரியாமல்ப்போனது அதிசயத்திலும் அதிசயம்தான்..
Truth 'll prevail
Reply
என்ன தாத்தா சரியான ஒழுங்கமைப்பு இல்லாமல் ஏதோ செய்யப் போய் பிசுபிசுத்து விட்டதாம்
இப்போது அதனை கைவிட்டு விட்டார்களாமே
அடுத்த கட்டமாக அன்னை பூபதி நினைவு தின பேரணி கூட்டம் என்றெல்லோ ஆயத்தம் நடக்குது அம்மான் ஓடிட்டா அந்த மக்களை யார் பார்ப்பார்கள்
\" \"
Reply
மக்களை முன்னுக்குத் தள்ளி பின்னுக்கு தாம் சிரித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது செய்தியாக இருக்கலாம்.. சரியான ஒழுங்கு இருக்கிறது. போராட்டமும் தெடர்கிறது.

ஓடப்பண்ணத்தானே நீங்கள் இவ்வளவு முயற்சியெடுக்கிறீர்கள்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சுட்டமண்ணும் சுடாதமண்ணும் ஒட்டுமா என்பதை காலம்தான் பதில்சொல்லவேண்டும்..
Truth 'll prevail
Reply
அதைத் தான் நான் முதலிலேயே சொன்னேன் ஐந்தோ பத்தோ கொடுப்போம் வாங்கிக் கொண்டு ஓடிப் போய்விடட்டும் எதுக்கு மற்றவர்களை உண்ணாவிரதமிருக்கப் பண்ணி அந்த மனிசன் கஷ்டப் படுகுது

அத்துடன் உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதமிருப்பவர்களால் கூறப்படும் கோரிக்கை விடுதலைப் புலிகள் மீதியில் உள்ள பிளவு நீங்கி ஒற்றுமையாக வேண்டும்
இதைத் திரிபு படுத்தி ஏதோ தேசபிதா அது இது என்று கூறுகிறார்கள் அது உங்களுக்குத் தெரியுமா?
இதனை வலியுறுத்தித் தான் தாய்க்குலம் சார்பில் யோகாம்பிகை வன்னி செல்ல முயற்சித்தார் விடவில்லையாமே அங்கு போகவேண்டாம் இங்கிருந்தே உண்ணாவிரதம் இருங்கோ என்று கூறப்பட்டதாமே

மேடையில் பேசுபவனுக்குத் தான் மக்கள் தன் முன்னால்
போராடுபவனுக்கு மக்கள் தன் பின்னால்
\" \"
Reply
நீங்களே சொல்லிவிட்டீர்கள் காரணத்தை.. பிறகேன் தர்க்கம்.. ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்துத்தான் போராட்டமே நடக்கிறது.. அவை எவை என தமிழ்அலை தளத்துக்குச்சென்று பார்க்கலாமே..?ஆதாரமுள்ள செய்திகள் எவற்றையும் நீங்கள் இதுவரை தரவில்லை.. மேலும் தரப்போவதுமில்லை.. தந்த அத்தனையுமே சந்தேகத்துடன் எழுப்பிய கேள்விகள்.. உங்கள் கேள்விகளை ஒருமுறை திருப்பிப் பாருங்களேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
ஓமோம் உங்களுக்கு மட்டும் கருணா இலை தொடர்பு கொண்டு செய்திகள் தந்தவர் நீங்கள் எதற்கும் மற்ற இணையத் தளங்களையும் பாருங்கோ
நான் சொன்ன அதே தகவல்களை தமிழ் இணைய வானொலியும் தந்திருக்கு
உங்களுக்கு தமிழலை ஆதாரம் என்றால் எனக்கு தமிழ் இணைய வானொலி ஆதாரம்


சரி அந்த ஐந்தம்சத் திட்டத்தை ஒருமுறை
பார்ப்போமா

கருணா அம்மான் எமது தேசபிதா:தமிழீழம் ஒருதேசம் அதற்கு ஒரு பிதா தான் இருக்க முடியும் மாவட்டத்துக்கு மாவட்டம் நகரபிதா தான் நியமிக்க முடியும்

அவருக்கு கொடுக்கப் பட்ட துரோகிப் பட்டத்தை திரும்பப் பெறல் வேண்டும் :அதற்கு முன்னால் கருணா தான் செய்தி வழங்கிய செய்தி நிறுவனங்களைக் கூப்பிட்டு தான் இதுவரை சொன்னது பொய் தமிழீழத் தேசியத்துக்கு விரோதமாக எதனையும் செய்யவும் சொல்லவும் மாட்டேன் என்று அறிக்கை விடட்டும்

கருணா அம்மான் தனி மனிதன் இல்லை அவர்தான் தளபதியாக இருக்கத் தகுதியுள்ளவர்:

தனிமனிதன் என்று சொன்னது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதால் அவர் அந்த அமைப்பின் பொறுப்புகளிலும் தொடர்புகளிலிருந்தும் விலக்கப் படுகிறார் இனி வரும் அவரது நடவடிக்கைகள் அமைப்பு சார்ந்தவை அல்ல தனிமனித நடவடிக்கைகள் என்பது. அத்துடன் போரிடும் ஒரு இராணுவத்தின் களமுனை அல்லது பிரதேசப் படைகளுக்குரிய தளபதிகளைத் தீர்மானிப்பது பொதுசனம் அல்ல முப்படைத் தளபதி இது என்ன இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலா போடுங்கையா ஓட்டு கருணா பெயரைக் கேட்டு என்று சொல்ல எப்போது ஒரு தளபதி தான் செய்த சத்தியத்தை எடுத்துக் கொண்ட கோட்பாட்டை மீறுகிறாரோ அப்பொழுதே அவர் சிறந்த தளபதி என்ற பட்டத்தை இழந்துவிடுகின்றார்

மட்டக்களப்பு மக்களின் விருப்பம் பிரபாகரன் தலைமையில் கருணாவின்வழிகாட்டலில் இயங்கவேண்டும்:
முதலில் தலையிருக்க வாலாடியதற்கு கருணா பகிரங்க மன்னிப்பு கேட்கட்டும் பின்னர் முதலில் கூறிய மாதிரி தமிழ்த் தேசியத்துக்கெதிரான சக்திகளுடன் கூட்டு,கருத்துகள் எல்லாவற்றையும் விடட்டும் பின்னரும் மக்கள் விருப்பம் இருந்தால் பரிசீலிக்கலாம்

தமிழீழப் படைகள் இடையே மோதல் இல்லாது ஒன்று படவேண்டும் :
இதனைத் தான் எல்லோரும் வலியுறுத்துகின்றார்கள் உண்மையான உண்ணாவிரதப் போராட்டத்தின்
தொனிப்பொருளும் இதுவே

வட தமிழீழத்திலுள்ள மட்டு அம்பாறை போராளிகள் திருப்பி அனுப்பப் படவேண்டும்:

இதற்கான விளக்கத்தையும் முதலில் கூறிவிட்டேன் போரிடும் படை எங்கே போரிடவேண்டும் எங்கே தங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள் அல்ல முப்படைத் தளபதி படை என்று வந்த பின்னர் தாய் சொல்லைவிட தலைவன் சொல்லுத் தான் வேதவாக்கு

இதில் எங்கேயாவது ஒருவரி மட்டு அம்பாறை மாவட்டங்களின் அபிவிருத்தி பற்றி சொல்லியிருக்கிறதா கருணாவின் அபிவிருத்தி பற்றித் தான் சொல்லியிருக்கிறது
\" \"
Reply
Mathivathanan Wrote:[b][size=14]கிழக்கே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களே இல்லாதமாதிரி அங்கு நடக்கும் சம்பவங்களையும் போராட்டங்களையும் இருட்டடிப்புச்செய்ய நல்ல பதம் தார்மீகக் கடமை.. இல்லையா ஈழவன்..?

கிழக்கே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்கள் செய்திகள் வெளியே வராமல் தடுக்கப்படவேண்டும்.. இருட்டடிப்புச் செய்யப்படவேண்டும்.. இதுதானே தமிழீழ ஊடகத்துறையின் தார்மீகக் கடமை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே மனதைப் பார்த்துக்க நல்லபடி

கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
கோர்ட்டுக்கு தேவை சிலசாட்சி குணத்துக்குத் தேவை மனச்சாட்சி

மயிலைப் பார்த்துக் கரடி என்பான் மானைப் பார்த்து வேங்கை என்பான்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பான் அதையும் சிலபேர் உண்மை என்பான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
'கருணாவின் பின்னணியில் அமெரிக்கா, இந்தியாவை நுழைக்கவும் சிலர் முயற்சி" - யாழ்ப்பாண பல்கலைக்கழக கருத்தரங்கில் கரிகாலன்

ஜ தினக்குரல் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2004, 18:26 ஈழம் ஸ

'விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவின் செயற்பாடுகளின் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இந்த விவகாரத்திற்குள் இந்தியாவையும் இடையில் இணைத்துக் கொள்வதற்குச் சிலர் முயற்சிக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் சிலரும் இதற்கு உடந்தையாகச் செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன" என்று விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான கரிகாலன் தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில், கிழங்கிலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக உரையாற்றுகையில், இதைத் தெரிவித்த கரிகாலன், 'எமது விடுதலைப் போராட்டம் எண்ணற்ற சவால்களையும், துரோகத்தனங்களையும் சந்தித்திருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்ட எமது தலைவர் பிரபாகரன், இன்றும் மனங்கலங்காது நிதானமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைப் போராட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்டப் போராளிகளும், தளபதிகளும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்பது உண்மையே. விடுதலைப் போராட்டம் இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்த வேளைகளில் எல்லாம், தலைவருக்கு எப்போது நெருக்கடிகள் ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் மட்டக்களப்பில் இருந்து படையை நகர்த்தி நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு உதவி செய்து போராட்டம் தொடர்ந்து உத்வேகம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் உண்மையே. ஆனால், இந்த வரலாற்று உண்மையைக் கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. கருணாவின் துரோகத்தனத்தையிட்டு நான் பெரும் கவலையடைந்துள்ளேன் என்றும் கரிகாலன் தனதுரையில் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு போராளியும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் மனதில் இருத்திக் கொண்டு தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். தலைவரைக் கண்ணால் கண்டிராத போராளிகள் கூட, அவரின் படத்தைத் தமது சட்டைப் பைகளில் வைத்துக் கொண்டுதான் வீரச்சாவை அடைந்தார்கள். தலைவரைச் சந்தித்து விட்டு நாம் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் திரும்புகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் போராளிகள் எங்களைச் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு உணர்வுடன் தான் அவர்கள் அங்கே இருக்கின்றார்கள். விடுதலைக்காகப் போராட எந்த வேளையிலும், அவர்கள் துணிந்து நின்றார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் போராளிகள் முந்திக் கொண்டு புறப்படுவார்கள். அந்த உணர்வுகளையெல்லாம் மழுங்கடிக்கலாம் என்று கருணா இப்போது நினைத்திருக்கிறார். அந்தப் போராளிகளின் உணர்வுகளை எவராலும் மழுங்கடிக்க முடியாது என்பது நிச்சயம்.

கருணா மீது மிகுந்த நம்பிக்கை தலைவருக்கு

'எமது தலைவர்" கருணா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். தன்னுடைய ஸ்தானத்திற்கு அடுத்தபடியாகத் தலைவர் கருதிய தளபதிகளில் கருணாவும் ஒருவர். ஒரு மாவட்டத்தைத் தனியாக ஒப்படைத்துச் சகல நிர்வாகங்களையும் பொறுப்பேற்று நடத்தக் கூடிய அதிகாரங்கள் சகலதையும் கருணாவுக்குத் தலைவர் வழங்கியிருந்தார். மட்டக்களப்பைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் தலைவர் அத்தகைய நிலைமையை ஏற்படுத்தியதேயில்லை.

கருணாவின் வேகமான வளர்ச்சிக்கு அவருடைய ஆற்றல் அடிப்படையாக இருந்ததென்பது உண்மை. அவருடைய செயற்பாடுகளுக்குப் பக்கபலமாக நாங்கள் போராளிகளை இணைப்பதிலும், தலைவருடைய இலட்சிய உணர்வுகளை ஊட்டுவதிலும் மக்களுக்கு சேவை செய்வதிலும் ஈடுபட்டிருந்தோம். இன்றைக்கும் ஆற்றலுடைய படையொன்றைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்ந்து கொண்டிருந்தது என்பது மாபெரும் உண்மையே.

அண்மைக் காலங்களில் கூட போராளிகளுடன் பேசுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் கருணா, தலைவருக்கு மட்டும் தான் நாம் பணிய வேண்டும் தலைவருக்கு ஆபத்து வருகின்தென்றால் அவருக்காகப் போராடி மடிய நாம் தயாராயிருக்க வேண்டும் என்று கூறி அத்தகைய இலட்சிய உணர்வையே ஊட்டுவார். அவர் விடுதலைப்புலிகளின் அணியில் இருந்து பிரிந்து செல்வார் என்பதற்கான எந்த அறிகுறியுமே, சாத்தியக் கூறுமே அவரிடம் காணப்பட்டதில்லை. இதுவும் அவருடைய திறமைகளில் ஒன்று என்று தான் நான் இப்போது கருதுகின்றேன்.

சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது கருணாவுக்கு பெரும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர், வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம், மிகப் பெரிய ஆற்றலுடைய தளபதியாகவே மரியாதையுடன் நோக்கப்பட்டார். வெளிநாடுகளில் எமது மக்களுடன் பேசுகையில், தேசியத் தலைவரைப் பற்றியும், விடுதலையைப் பற்றியுமே அவர் பேசினார். ஆனால், இன்று அந்த மக்களெல்லாம் காறி உமிழ்கின்ற வகையில் கருணாவின் செயற்பாடுகள் அமைந்து விட்டன.

கருணா சுயமாக இந்த நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது எமக்கு நன்றாகப் புரிகின்றது. கருணாவைச் சுற்றி ஒரு வெளிச்சக்தி நிச்சயமாக இருக்கின்றது. கருணா எவ்வாறு விலைபோனார் என்பதை விடுதலைப்புலிகளால் ஐPரணிக்க முடியாதுள்ளது. கருணாவின் பின்னணியில் உள்ள அந்த மாபெரும் சக்தியினுடைய செயற்பாடு தான் அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதுதான் எமது திடமான நம்பிக்கை.

தளபதிகளுக்குப் பயிற்சி வகுப்புக்கள்

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளபதிகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இரானுவப் பயிற்சியோடு போதனைகளும் செய்யப்பட்டன. குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒவ்வொரு நாளும் வந்து கற்பித்தலை செய்து கொண்டிருந்தார்கள். அது எமக்கு மிகவும் பயனுடைய ஒரு நடவடிக்கையாகவே இருந்தது.

இது தளபதிகளினுடைய எதிர்கால நன்மைக்காகவே செய்யப்படுகின்றது என்று தான் நாமெல்லோரும் கருதினோம். அந்த இடத்தில் சகல தளபதிகளும் கூடிப் பேசுகின்ற சந்தர்ப்பமும் எமக்குக் கிடைத்தது. ஆனால், இப்போது தான் தெரிகின்றது எல்லாத் தளபதிகளையும் ஓரிடத்திலே குவித்து விட்டு கருணா தன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்கின்றார் என்று.

எந்தத் தளபதிக்குமே தெரியாமல் தான் தன்னிச்சையாக பல சந்திப்புகளை கருணா ஏற்படுத்தியிருக்கிறார்.

இளநிலைத் தளபதிகளோடு படைகளையும் நன்றாக ஒழுங்கமைத்திருக்கின்றார். அந்த தளபதிகளிற்கு தன்னுடைய விசுவாசத்தை ஊட்டி தனக்காகப் போரிடக்கூடிய ஒரு தயார்படுத்தலையும் செய்திருக்கிறார் கருணா.

நிதி மோசடி கண்டுபிடிப்பு

இந்தப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கருணாவின் நிதி மோசடியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நிதி மோசடி தொடர்பாக தலைவரிடம் கூறுவதற்காக நிதித் துறைப் போராளியொருவர் வந்து விட்டார். இதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

இந்த நிதி மோசடியைக் கண்டுபிடித்தவர் கருணாவின் சாரதியொருவரே. அவரை வைத்தே தனது நிதி மோசடியை மூடி மறைக்கும் முயற்சியில் இறங்கிய கருணா, எங்களுடைய பயிற்சிக் கல்லூரிக்கு அந்த சாரதியை அழைத்துவந்து சாட்சி சொல்ல வைத்து தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க முயன்றார்.

இதேவேளை, கருணாவால் சாட்சி சொல்ல வைக்கப்பட்ட அந்தப் போராளி ஒரு வாரத்திற்குள் இறந்து விட்டார். அந்தப் போராளிக்கு மலேரியாக் காய்ச்சல் வந்ததாகவும் அதனால் மரணமானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டதுடன் அந்தப் போராளிக்கு சோடாவுக்குள் சயனைட் கலந்து கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதும் ஊர்ஐpதப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் போராளிகள் மட்டத்தில் பரவத் தொடங்கியதுடன் கருணா மீது சந்தேகமும் ஏற்பட்டது. இதனால் தான் செய்த நிதி மோசடி உறுதிப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கருணாவுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில் கருணாவின் நிதி மோசடி தொடர்பாக அந்த நிதித்துறைப் போராளி தலைவரிடம் முறையிட்டதையடுத்து கருணாவை தன்னை வந்து சந்திக்கும்படி தலைவர் செய்தி அனுப்பினார். ஆனால், தான் செய்த தவறுகள் வெளிவந்துவிட்டதால் தனக்கு தண்டனை நிச்சயம் என்பது கருணாவுக்கு தெரிந்து விட்டது.

இதனால் தான் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதையோ, இயக்கத்தில் இருந்து ஒதுங்குவதையோ கருணாவால் ஐPரணிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தக் காலப் பகுதி அப்படியானது. உலக நாடுகளுக்குச் சென்று புகழைப் பெற்றுக் கொண்ட அவர் சமாதான காலத்தில் ஒரு தண்டனையை அனுபவிக்க விரும்பவில்லை. யுத்த காலத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பொதுமக்களை சென்றடைவதில்லை. ஆனால், இன்றைய நிலையில் தனக்கு தண்டனை வழங்கப்பட்டால் அது உலகம் முழுவதும் தெரிந்து விடுமென கருணா அச்சமடைந்தார்.

மார்ச் 1 இல் அவசரக் கூட்டம்

கடந்த 1 ஆம் திகதி எங்களுக்கு கருணா அவரசக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் புலிகளின் தலைமை மீது குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், தலைவரின் கீழ் தான் நேரடியாகச் செயற்படப் போவதில்லை. இதற்கு ஒத்துழைக்காதவர்கள் விலகிச் செல்லலாமெனவும் இந்த முடிவு குறித்து எவரும் தன்னுடன் கதைக்கக் கூடாதெனவும் கூறினார்.

ஆனால், கருணாவின் முடிவை மாற்றுவதற்கு நான் எவ்வளவோ போராடினேன். இறுதியாக நான் கருணாவைச் சந்தித்த போது, தலைவரின் கீழ் நாங்கள் உறுதியாக நின்று செயற்படுவோம் என்று கூறினேன். அதற்கு கருணா புலிகளின் தலைமையை விட்டுப் பிரிந்து செல்வதாக நான் நேற்றே ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.

இறுதியாக மட்டக்களப்பில் நடைபெற்ற வதனா என்ற மாவீரரின் நினைவு தினத்தில், தான் புலிகளின் தலைமையிலிருந்து பிரிந்து போவதாகக் கருணா போராளிகளுக்கு அறிவித்ததுடன், அங்கிருந்த தலைவரின் படங்களையும் அகற்றுமாறு போராளிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், போராளிகள் தலைவரின் படங்களைக் கழற்றித் தமது காற்சட்டைப் பைகளுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டனர். கருணாவின் இச் செயல் போராளிகள் மட்டத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இதேவேளை, அங்கு நின்றிருந்த என்னிடம் அரசியல் துறையை நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன், அரசாங்கத்துடன் தனியானதொரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகின்றோம். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி, என்னிடம் ஒரு பத்திரத்தைத் தந்தார். அங்கிருந்த சூழ்நிலை காரணமாக் அந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நான் ஒரு பிரதியைக் கருணாவிடம் கொடுத்து விட்டு மறுபிரதியை நானே அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி வாங்கி வந்தேன்.

இதற்கிடையில், மறுநாள் ஊடகமொன்றுக்குப் பேட்டி கொடுக்க வேண்டும். அத்துடன், உங்கள் பெயரில் அறிக்கை விட வேண்டும் எனவும் கருணா எனக்குக் கட்டளையிட்டார். நான் அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதாகக் கூறிவிட்டே மறுநாள் வன்னிக்கு வந்து சேர்ந்து விட்டேன்.

இரானுவத் தளபதியுடன் கருணாவுக்கு நெருங்கிய தொடர்பு

கருணாவிற்கு இலங்கை இரானுவத்தோடு நெருங்கிய தொடர்புண்டு. இராணுவத் தளபதி மேஐர் nஐனரல் லயனல் பலகல்ல கருணாவோடு அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார். இந்தத் தொடர்புகளைப் பார்க்கும் போது இலங்கை இராணுவத்தோடு இணைந்து தான் கருணா தனது செயற்பாட்டை தொடரப் போகின்றார் என்பது புலனாகிறது.

கருணாவின் இந்தச் செயற்பாடுகளையெல்லாம் போராளிகள் தற்போது நன்குணர்ந்து விட்டனர். எனவே, கிழக்கு மாகாணத்தை ஒரு புனித மாகாணமாக ஒரு எழுச்சி கொண்ட மாகாணமாக மாற்ற முடியுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்குண்டு.

கருணாவால் ஏற்பட்ட கறையை, அவமானத்தை, பிரதேசவாதத்தைத் துடைப்பதற்கு எம் மக்களை அணிதிரட்டி முழு மூச்சுடன் செயற்படவுள்ளோம். இதற்கு நீங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கரிகாலன் தனது உரையில் நேற்றுத் தெரிவித்தார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
United States denies it backed renegade Sri Lankan rebel commander

Associated Press, Tue March 16, 2004 05:42 EST . - - COLOMBO, Sri Lanka - (AP) The United States denied reports Tuesday that it supported a Sri Lankan renegade rebel commander who broke away from the main Tamil Tiger army taking with him nearly half of its fighters. The split is unprecedented in the monolithic rebel organization headed by reclusive leader Velupillai Prabhakaran, and has reawakened fears that Sri Lanka - may slide back into war.
The Sri Lankan government and the Tamil Tigers signed a Norwegian-brokered cease-fire in February 2002 ending 19 years of war that killed nearly 65,000 people.

The division in Tamil rebel ranks comes at a crucial time in Sri Lankan politics.

An ongoing power struggle between President Chandrika Kumaratunga and her political rival Prime Minister Ranil Wickremesinghe culminated last month when the president, accusing Wickremesinghe of being too soft on the rebels, dismissed his government and called April 2 parliamentary elections.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)