02-27-2004, 11:40 PM
<span style='color:#ff0000'>புதிய சர்ச்சை உருவாகிறது \"வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்
[size=14]இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு முற்படுவதை தங்களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
22.2.2004 திகதியிட்ட மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கை தமிழரசுக் கட்சியின்
யாப்பு விதிகளுக்கு முரணாக செயலாளரான மாவை சேனாதிராசா நடந்திருப்பது குறித்து நீதிமன்றம் செல்லவுள்ளேன். எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வீட்டு சின்னத்தை பாவிக்க அனுமதிக்க வேண்டாம்.
திருமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரையின் மறைவையடுத்த கட்சியின் பொருளாளராக இருந்த நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். மாவை சேனாதிராசா செயலாளராக தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி தங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் எஸ்.சின்னத்துரை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியை போல இலங்கை தமிழரசுக் கட்சி விவகாரமும் நீதிமன்றம் செல்லுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
இது குறித்து இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை. சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில் ஆவரங்கால் சின்னத்துரை லண்டனில் நீண்டகாலம் தங்கியிருப்பதால் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகிறார். அவரின் கலந்தாலோசனைப்படி நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய சக்தியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழர் ஒற்றுமையை விரும்பாத குலைக்க விரும்பும் சக்திகள் வீ.ஆனந்தசங்கரிக்கு நெருக்கமான ஆவரங்கால் சின்னத்துரையை பயன்படுத்தி இலங்கை தமிழரசுக்கு கட்சிக்கு சட்டச் சிக்கல்களை கொடுக்கலாமென்றே கூறப்படுகிறது.
கடந்த செவ்வாயன்று நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த பின்னர் ஆட்சேப நேரத்தில் ஈழமக்கள் ஜனநாயக்கக்கட்சி யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் க.சின்னத்துரை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து தமது ஆட்சேபத்தை தெரிவித்தது. 1981ஆம் ஆண்டில் முதலாம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தெரிவத்தாட்சி அலுவலர்கள் சமர்ப்பிக்கப்படும் நியமனப் பத்திரங்களை ஏற்பதற்கு உரியவிதி முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றதென்று கூறி ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன் நீதிமன்றம் சென்று இடைக்கால தடையுத்தரவு வழங்குமாறு விண்ணப்பிக்கப்படுமா? அல்லது தேர்தல் முடிந்த பின்னர் இயங்குவதற்கு தலையிடி கொடுக்க முற்படுவார்களா என்பதே அரசியல் அரங்கில் தற்போது எழுந்துள்ள வினாவாகும்.
தமிழர்களின் ஒற்றுமைகருதி விவகாரத்தை இத்தோடு விடாமல் இலங்கை தமிழரசுக்கட்சியும் நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டால் தமிழ் மக்கள் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாமென தமிழர் விடுதலைக்கூட்டணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தமிழ் அரசியலிலும் வக்கிரத்தன்மை வளருமானால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே என்றும் அவர் தெரிவித்தார்.</span>
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->