Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>காமத்தை வெல்வது எங்ஙனம்?</b>
விஷப் பாம்புகள் நடமாடும் வீட்டில் வசிப்பவர்கள் எப்போதும் வெகு ஜாக்கிரதையாக இருப்பதைப் போல, உலகத்தில் வாழும் மக்கள் காமத்துக்கும், பண ஆசைக்கும் உட்படாமல் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரமொன்று இருந்தாலும் அதன் வழியாக நீரணைத்தும் ஒழுகிவிடும். அதுபோல் சாதகன் ஒருவனது மனத்தில் உலகப் பற்று வெகு அற்பமாகவிருந்தாலும் கூட அவனது முயற்சிகளெல்லாம் வீணாகிவிடும்.
பெண்ணாசை, பொன்னாசைகளில் அழுந்திய மனம் பச்சைப் பாக்குக்குச் சமமானது. அது பச்சையாக இருக்கும் வரையில் மேல் தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கும். உள் ஈரம் வற்றியதும் தோல் வேறு, பாக்கு வேறாகப் பிரிந்து விடுகிறது. ஆட்டிப் பார்த்தால் உள்ளே பாக்கு குலுங்கும். அதுபோல, பெண்ணாசையும் பொன்னாசையும் உள்ளே வற்றிப்போனால் ஆத்மா வேறு, உடல் வேறு என்பது தெளிவாகும்.
வேடன் காலடியில் குரங்கு தன் பிராணனை விடுவது போல, அழகிய ஸ்திரீயின் (பெண்) காலடியில் மனிதனும் தன் பிராணனை விடுகிறான்.
குடும்பத்தார்களே, ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.
புகை சூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல், ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும், ஜாக்கிரதையாயும் இருந்தாலும் பெண் நெருக்கத்தினால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
நித்தியானந்தர் ஸ்ரீ சைதன்ய சுவாமியை நோக்கி, "சுவாமி, பகவத்ப்ரேமை விஷயமாக நான் உபதேசித்தவையெல்லாம் ஏன் மனிதரது மனத்தில் யாதொரு பலனையும் கொடுக்கவில்லை?" எனறு கேட்டார். அதற்கு ஸ்ரீ சைதன்யர், "அவர்கள் பெண்களோடு சேர்ந்திருப்பதால், உயர்ந்த உபதேசங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சக்தியற்றிருக்கின்றனர். நித்தியானந்தரே! உலகப் பற்றுள்ளவர்களுக்கு மோட்சமே கிடையாது" என்று பதில் சொன்னார்.
பெண்ணாசையும், பொன்னாசையும் உலக முழுவதையும் பாவத்தில் அமிழ்த்தி விட்டன. பெண்களை லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால் உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது.
ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது என்று கேட்டான். தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : - "ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.
சொன்னவர்...
<img src='http://www.webulagam.com/religion/images/2003/ramakrishna1.jpg' border='0' alt='user posted image'>
பிற்குறிப்பு...
பெண்ணாசையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுமென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசிப்பதிலிருந்து, பெண்களெல்லாம் கொடியவர்களென்றாவது, அவர்களின்மேல் வெறுப்புக் கொள்ள வேண்டுமென்றாவது சொல்வதாகக் கொள்ளுதல் கூடாது. அவர் தமது வாழ்க்கையிலும், உபதேச மொழிகளிலும் பெண் மக்களை சக்தி-ஜகன்மாதாவின் அவதார ரூபங்களாகவே கருதியுள்ளார். ஆண், பெண் இருபாலரும் சிற்றின்ப விஷயங்களில் அகப்பட்டு பகவானை மறக்கக் கூடாதென்பதை வற்புறுத்தவே, ஆத்மலாபமடைய விரும்புபவன் பெண்ணாசையையொழித்தல் வேண்டுமெனக் கூறினார். ஆண் மக்களைப் போன்று பெண் மக்களுக்கும், இவ்வுபதேசம் இன்றியமையாததெனக் கொள்ளல் வேண்டும்.
---------------------
மூலம்...வெப்புலகம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:<b>காமத்தை வெல்வது எங்ஙனம்?</b>
[b]குடும்பத்தார்களே, ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.
புகை சூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல், ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும், ஜாக்கிரதையாயும் இருந்தாலும் பெண் நெருக்கத்தினால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
அதை பெண்ணாசைன்னு சொல்றதை விட சிற்றின்ப ஆசைன்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா ஆண் பெண் இரண்டு பேருக்கும் சிற்றின்ப ஆசை உண்டு.
அவர் பெண்கள் இந்த ஆசைய அடக்கதெரிஞ்சவங்க அப்பிடிங்கிறதாலை ஆண்களுக்கு மட்டும் இந்த கருத்தை சொல்லி அதை ஆணாசைன்னு பெயர் வைச்சாரோ தெரியலை.
மத்தது அவர் சொல்லியிருக்கிற இந்த வரிகள் கண்டிக்கபடவேண்டியது.
"பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்"
இது எப்பிடிபட்ட ஞானியா இருந்தாலும் அவரும் ஒரு ஆண் தான் அவரோட பார்வை அப்பிடிதான் இருக்கும்கிறதை உறுதிப்படுத்துறமாதி இருக்கு.
எது எப்பிடியுருந்தாலும் பெண்கள் இதை பத்தின உங்க கருத்த சொல்லுங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
BBC பிற்குறிப்பில சொல்லி இருக்கிறதைக் கொஞ்சம் படிச்சுப்பாருங்க....ஒருத்தருக்குச் சொன்னது மற்றவருக்கும் பொருந்தும்....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:BBC பிற்குறிப்பில சொல்லி இருக்கிறதைக் கொஞ்சம் படிச்சுப்பாருங்க....ஒருத்தருக்குச் சொன்னது மற்றவருக்கும் பொருந்தும்....!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குறிப்பை அப்பவே படிச்சுட்டேன் குருவி. அது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லலை அந்த கட்டுரை எழுதின நல்ல மனசுகாரர் யாரோ சேர்த்திருக்காங்க. அவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்கிமா ஆண்களுக்கு தான் இதை சொல்லியிருக்கிறார் ப்பிடிங்கிறதும் அது பெண்களுக்கும் பொருந்தும் அப்பிடிங்கிறதும் உண்மை.
எது எப்படியிருந்தாலும் அவர் பெண்களை தாழ்த்தி
[size=14]குடும்பத்தார்களே, ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.
அப்டின்னு சொல்லியிருக்க கூடாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இராமகிருஷ்ணர் அப்படி ஒரு பொருள்படத்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்...???(நீங்கள் குறிப்பிட்டதற்கு) எமக்குத்தரப்பட்ட தகவலின் பிரகாரம் அவர் இரு தரப்பையுமே குறிப்பிடுகிறார் எனத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது...இதற்கு மேல் நாம் செல்வது விதண்டாவதாமாகவேதான் அமையும்....!
இவரின் சீடரான சுவாமிகள் விவேகானந்தர் கூட பெண்களைத் தாயாகாத்தான் பார்க்கச் சொன்னார்.....எனவே இதிலிருந்து உங்கள் கருத்தை அப்படியே ஏற்பதென்பது கடினமே....!
பெண்களின் சில குணங்களைப் பற்றி திருவள்ளுவர் கூட அவ்வளவு திருப்தியாகச் சொல்லவில்லையே....! ஏன்.....????!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:இராமகிருஷ்ணர் அப்படி ஒரு பொருள்படத்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்...???(நீங்கள் குறிப்பிட்டதற்கு) எமக்குத்தரப்பட்ட தகவலின் பிரகாரம் அவர் இரு தரப்பையுமே குறிப்பிடுகிறார் எனத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது...இதற்கு மேல் நாம் செல்வது விதண்டாவதாமாகவேதான் அமையும்....!
இவரின் சீடரான சுவாமிகள் விவேகானந்தர் கூட பெண்களைத் தாயாகாத்தான் பார்க்கச் சொன்னார்.....எனவே இதிலிருந்து உங்கள் கருத்தை அப்படியே ஏற்பதென்பது கடினமே....!
பெண்களின் சில குணங்களைப் பற்றி திருவள்ளுவர் கூட அவ்வளவு திருப்தியாகச் சொல்லவில்லையே....! ஏன்.....????!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
உங்க கட்டுரையில இராமகிருஷ்ணர் சொன்னதா இருக்கிறதை பத்திதான் என்னோடகருத்த சொன்னேன். பெண்ணை பத்தி அவர் என்ன சொல்லியிருக்காருன்னு படிச்சு பாருங்க. நீங்க கேட்டுகிறதால இதோட அதை விட்டுர்ரேன்.
திருவள்ளுவர் பெண்களை பத்தி திருப்தியா சொல்லாலைன்னு சொல்றீங்க, அவர் அப்படி என்ன சொன்னாருன்னு சொல்லுங்க, நா அதுக்கு என் கருத்தை சொல்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதைப்படிச்சுப் போட்டுத்தான் இங்க போட்டது....இப்படி ஒரு கேள்வி எழும் என்று தெரிந்துதான் அந்தக் குறிப்பும் அங்கு போடப்பட்டது.....!
ஆனால் ஒன்று... இராமகிருஷ்ணர் அப்படி சொல்லி இருந்தால் கூட அது எந்த நிலை மனிதரை அவர் அடிப்படையாகக் கொண்டு சென்னார் என்பது தெளிவில்லை...ஆனால் அவை எல்லோருக்கும் பொதுவானதாகவும் கொள்ளத்தக்கவையே...!
சமூகத்தில் பெண்களுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு அலையும் கூட்டங்களுக்கும் அது பொருந்தத்தக்கதாகச் சொன்னாரோ தெரியாது.....????! :roll:
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குறள் கொண்டு ஒரு சின்ன உதாரணம்....
கீழே உள்ள இணைப்பில் போய்...அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்...அல்லது கீழே உள்ள அதே குறள்களில் 51...56 வரை உள்ளவற்றில் பெண்கள் தொடர்பில் சொன்னவற்றில் எத்தனை 'அதி நவீன' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெண்ணியம் என்ற மாயைக்கு எதிரானவை....ஏன்...??! அப்படி ஒன்றும் இல்லை என்றால் மிகுதி நாங்களே சொல்கிறோம்....!
<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-6.gif' border='0' alt='user posted image'>
[url=http://www.tamilcyber.com/resources/kural/1-6.htm]அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:அதைப்படிச்சுப் போட்டுத்தான் இங்க போட்டது....இப்படி ஒரு கேள்வி எழும் என்று தெரிந்துதான் அந்தக் குறிப்பும் அங்கு போடப்பட்டது.....!
ஆனால் ஒன்று... இராமகிருஷ்ணர் அப்படி சொல்லி இருந்தால் கூட அது எந்த நிலை மனிதரை அவர் அடிப்படையாகக் கொண்டு சென்னார் என்பது தெளிவில்லை...ஆனால் அவை எல்லோருக்கும் பொதுவானதாகவும் கொள்ளத்தக்கவையே...!
சமூகத்தில் பெண்களுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு அலையும் கூட்டங்களுக்கும் அது பொருந்தத்தக்கதாகச் சொன்னாரோ தெரியாது.....????! :roll:
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவர் இரண்டு பேருக்கும் சொல்லி இருந்தா ரொம்ப நல்லது.
நா பெண்களுக்கு மட்டும் இல்லை யாருக்கும் கண்ணை மூடிக்கிட்டு ஆதரவு குடுக்கிறது கிடையாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=kuruvikal]குறள் கொண்டு ஒரு சின்ன உதாரணம்....
கீழே உள்ள இணைப்பில் போய்...அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்...அல்லது கீழே உள்ள அதே குறள்களில் 51...56 வரை உள்ளவற்றில் பெண்கள் தொடர்பில் சொன்னவற்றில் எத்தனை 'அதி நவீன' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெண்ணியம் என்ற மாயைக்கு எதிரானவை....ஏன்...??! அப்படி ஒன்றும் இல்லை என்றால் மிகுதி நாங்களே சொல்கிறோம்....!
<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-6.gif' border='0' alt='user posted image'>
[url=http://www.tamilcyber.com/resources/kural/1-6.htm]அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்
முடிஞ்சா இதுக்கு விளக்கம் சொன்னீங்கன்னா, கருத்து சொல்ல வசதியாயிருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 52
Threads: 2
Joined: Nov 2003
Reputation:
0
[quote=kuruvikal]குறள் கொண்டு ஒரு சின்ன உதாரணம்....
கீழே உள்ள இணைப்பில் போய்...அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்...அல்லது கீழே உள்ள அதே குறள்களில் 51...56 வரை உள்ளவற்றில் பெண்கள் தொடர்பில் சொன்னவற்றில் எத்தனை 'அதி நவீன' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெண்ணியம் என்ற மாயைக்கு எதிரானவை....ஏன்...??! அப்படி ஒன்றும் இல்லை என்றால் மிகுதி நாங்களே சொல்கிறோம்....!
<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-6.gif' border='0' alt='user posted image'>
[url=http://www.tamilcyber.com/resources/kural/1-6.htm]அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்
வள்ளுவர் கவி வடிப்பதில்
வல்லவர்
அதே நேரம்
ஆணாதிக்க சிந்தனையிலிருந்து சற்றும் விலகாத
ஆண் அவர்
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
[quote=kuruvikal]குறள் கொண்டு ஒரு சின்ன உதாரணம்....
கீழே உள்ள இணைப்பில் போய்...அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்...அல்லது கீழே உள்ள அதே குறள்களில் 51...56 வரை உள்ளவற்றில் பெண்கள் தொடர்பில் சொன்னவற்றில் எத்தனை 'அதி நவீன' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெண்ணியம் என்ற மாயைக்கு எதிரானவை....ஏன்...??! அப்படி ஒன்றும் இல்லை என்றால் மிகுதி நாங்களே சொல்கிறோம்....!
<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-6.gif' border='0' alt='user posted image'>
[url=http://www.tamilcyber.com/resources/kural/1-6.htm]அறத்துப்பாலில்...வாழ்க்கைத்துணை நலனில்
வள்ளுவம் என்பது ஒரு வணிக சமூகத்தின் வாழ்கை நெறிமுறைகளின் வழிகாட்டி அன்றி சமூகநீதி உள்ள போதனைகள் அல்ல. அத்துடன் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது குறள்களும் ஒருவரால் (வள்ளுவரால்) எழுதப்பட்டவையும் அல்ல என்பதும் இன்றைய linguisticsகளின் கணிப்பு.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
விளக்கமாக தாருங்களேன் தம்பு அண்ணை. என்னை மாதிரி ஆக்களுக்கும் விளங்கவேண்டாமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதே பாருங்க... குறளும் தந்து விளக்கமும் தர நாம் என்ன சாலமன் பாப்பையாவா....?!அல்லது 'சன் ரீவியா' நடத்திறம்....!
உலகப் பொதுமறை குறள்...அதுக்கையும் பிழையும் விமர்சனமும் சொல்லுறது ஒன்றும் பெரிய விடயமல்ல...வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை எடுத்துக் கொண்டு மனிதன் மனிதனாக ஒழுக்கத்துடன் வாழவேண்டும் இதுதான் வள்ளுவரின் எதிர்பார்ப்பு...அதாலதான் முழு மனித சமூகமுமே திருக்குறளை உலகப் பொது வேதம் எனக் கொள்கின்றன...!
திருக்குறளுக்கு பொருள் விளக்கம் தந்தவர்களிடையேயே கருத்துவேறுபாடு நிலவும் போது....அதில் இதில் குறைகாணும் சாதாரண பிரஜைகள் நமக்கு சிந்திக்காமல் விமர்சிக்க காலமா எடுக்கும்....?????!
நமக்கென்னவோ குறள் மனிதனுக்கு நல்ல வழிகாட்டி அப்படி எண்டுதான் சொல்லித்தந்தது...எங்கட சின்ன அறிவுகுக்கு எட்டச் சிந்தித்துப் பாத்தாலும் அது பெரும்பாலும் சரியாத்தான் தெரியுது....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:இதே பாருங்க... குறளும் தந்து விளக்கமும் தர நாம் என்ன சாலமன் பாப்பையாவா....?!அல்லது 'சன் ரீவியா' நடத்திறம்....!
உலகப் பொதுமறை குறள்...அதுக்கையும் பிழையும் விமர்சனமும் சொல்லுறது ஒன்றும் பெரிய விடயமல்ல...வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை எடுத்துக் கொண்டு மனிதன் மனிதனாக ஒழுக்கத்துடன் வாழவேண்டும் இதுதான் வள்ளுவரின் எதிர்பார்ப்பு...அதாலதான் முழு மனித சமூகமுமே திருக்குறளை உலகப் பொது வேதம் எனக் கொள்கின்றன...!
திருக்குறளுக்கு பொருள் விளக்கம் தந்தவர்களிடையேயே கருத்துவேறுபாடு நிலவும் போது....அதில் இதில் குறைகாணும் சாதாரண பிரஜைகள் நமக்கு சிந்திக்காமல் விமர்சிக்க காலமா எடுக்கும்....?????!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்க எந்த விளக்கத்தை வைச்சு
kuruvikal Wrote:பெண்களின் சில குணங்களைப் பற்றி திருவள்ளுவர் கூட அவ்வளவு திருப்தியாகச் சொல்லவில்லையே....! ஏன்.....????!
அப்பிடின்னு சொன்னிங்களோ அந்த உங்களோட சுயவிளக்கத்தை சொல்லுங்க நான் என் கருத்தை சொல்லுறேன்.
பழைய ஆணாதிக்க சமுகத்தோட பாதிப்பில இருந்து சில கவிகள் எழுத்தாளர்களும் தப்பல்லை. இப்போ நிலைமை ஓரளவு சரியாயிருக்கு. இது என்னோட கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எல்லாம் நாம் கேட்ட குறளில இருக்கு எல்லாத்தையும் நாங்களே சொல்ல வேண்டும் என்றும் அதன் பிறகுதான் நீங்கள் அதுக்குக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றால்...அதை இப்ப இதுக்க கொண்டுவர எங்களுக்கு விருப்பமில்லை...!
தெரிந்தால் எழுதுங்கள் தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டுப்போங்கள்...மழுப்பல்கள் வேண்டாம்....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:எல்லாம் நாம் கேட்ட குறளில இருக்கு எல்லாத்தையும் நாங்களே சொல்ல வேண்டும் என்றும் அதன் பிறகுதான் நீங்கள் அதுக்குக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றால்...அதை இப்ப இதுக்க கொண்டுவர எங்களுக்கு விருப்பமில்லை...!
தெரிந்தால் எழுதுங்கள் தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டுப்போங்கள்...மழுப்பல்கள் வேண்டாம்....!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மழுப்பலை குருவி. நீங்களே பச் பொரும் வருமுன்னு சொல்லி இருக்கீங்க. நீங்க என்ன பொருள் எடுத்தீங்கன்னு சொன்னா அதுக்கு என் கருத்த சொல்லலாம்.
நான் ஒரு கருத்த சொல்ல நீங்க அப்பிடி எடுத்தலைன்னு தர்க்கிப்பீங்க. எதுக்கு வம்பு? அதனாலை தான் நீங்க எடுத்த கருத்தை சொல்ல சொல்லுறேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப நீங்கள் தர்க்கிக்க விரும்புறதில்லையோ...எங்களுக்கு என்னவோ தர்க்கத்தில தான் சில வேளைகளில் நியாயம் பிறக்கும் என்று தோன்றுகிறது....!
பிறிதொரு நேரம் குறள் பற்றிக் கதைப்பம்...அதைக் கதைக்க முதல் தெளிவா சிலவற்றை உணர வேண்டி இருக்கிறது....!காரணம் குறள் உலகப் பொது மறை...என்பதால்....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
குருவி, கடவுள் ஆணா பெண்ணாங்கிற சுவாரசியமான கட்டுரை ஒன்றை போட்டிருக்கிறேன் படிச்சு பாருங்க. அதில திருக்குறள், வள்ளுவர். அவரோட பெண்கள் பத்தின கருத்துகளை பத்தியும் சொல்லி இருக்கு.

|