Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி..பகுதி-8
#1
<b>[size=18]வசியக்காரி..பகுதி-8


காதல்விதை விசித்திரமானது
ஒரே ஒரு விதையே
இரண்டு இடங்களில்
முளைகொண்டுவிடுகிறது
பெண்மனதிலும்...
ஆண்மனதிலும்...!


ஒரு இரவில்
ஒரு நூற்றாண்டே கழிகிறது
ஒவ்வொரு காதலனுக்கும்..!


அறுவைசிகிச்சை பிரசவவேதனையுடனேயே
ஒவ்வொரு
காதல் கவிதையையும்
எழுதிமுடிக்கின்றான் கவிஞன்...!


நீ
எப்போது பிறந்தாய்...?
எங்கே பிறந்தாய்...?
நீ பிறந்த இடத்தில் இருந்தே
ஒரு கவிஞனும்
அவன் கவிதைகளும்
பிறந்து வந்திருக்கிறது..!


கவிதையும் காதலும்
சொல்லிக்கொண்டு வருவதில்லை
திடீரென்று...
சொல்லாமலே வருகிறது...!


ஒரு சிறிய கிராமத்துக்கு
நேற்று வரவேண்டிய புகைவண்டி
இன்று வருவதைப்போல்
தாமதமாகவே காதலை சொல்கிறாள்
ஒவ்வொரு பெண்ணும்...!


உணர்வுகள் மயங்கிப்போக
உயிர் போகும் மரண வேதனையிலேயே
ஒவ்வொரு
காதல் கடிதமும்
எழுதிமுடிக்கின்றார்கள்
காதலர்கள்..!


இன்னும்
ஒரு நாள்கூட
முழுமையாக உன்னோடு
வாழ்ந்து பார்கவில்லை
ஆனால்...
ஒருகோடி ஆண்டுகாலம்
வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்
கற்பனையில்...!


ஆடிப்பாடி வேலைசெய்தால்
அலுப்பிருக்காது என்கிறார்கள்
நான்
ஆடிப்பாடாமல் அலுப்பின்றி
வேலைசெய்கின்றேன்
உன் நினைவுகளைச் சுமந்துகொண்டே...!


என்
இதையத்தைக் கடத்திச்சென்ற
காதல் தீவீரவாதியே....
உன்னைத் தேடினேன்
தேடுகின்றேன்
தேடிக்கொண்டே இருப்பேன்
வீரப்பனைத்தேடும்
இந்திய இராணுவம்போல்...!


இன்னும்
சில யுகங்கள்தேவை
இதயத்தில் உண்டான
றணம் ஆற
இன்னும்
சில நூற்றாண்டுகள் தேவை
நெஞ்சில் உண்டாக
காதல் வலி மாற...!


அந்தச் சாலைமரங்களுக்கு
நினைவிருக்கும்
நீ என்னோடு
நடந்த நாட்களை...!


நீ விரும்பிய அனைத்தையும்
நானும் விரும்புகிறேன்
உன்னை நினைவுபடுத்தும்
அத்தனை பொருட்களிலும்
பத்திரமாக அல்ல...
பைத்தியமாக இருக்கிறேன்...!


உன்னைக் குழிப்பாட்ட
மேகம்
மழைநீரை அனுப்புகிறது
ஆனால்
நீ எனது
கண்ணீரைக் கேட்கிறாய்...!


உன்னைத் தாலாட்ட
தென்றல்
தாலாட்டுப் பாடுகிறது
ஆனால்
நீ எனது
அழுகுரலைக் கேட்கிறாய்...!


பச்சைக்குழந்தை
தாயைத்தேடி அழுவதுபோல்
பிஞ்சுக்காதலனாய்
நானும்
உன்னைத்தேடி அழுகின்றேன்
நீ
ஆசையாய் மார்போடணைக்கும்
சுகத்திற்காகவும்
அன்புமொழிபேசி
கலங்காதே என்று
கண்ணீரைத்துடைக்கும்
ஸ்பரிசத்திற்காகவும்...!

(இன்னும் வரும்..)


[b]த.சரீஷ்
19.01.2004 (பாரீஸ்)</b>
sharish
Reply
#2
தேடிக்கிடைத்தபொருள் மீதான இன்பம் என்றும் தீர்ந்து போவதில்லை

வாழ்ததுக்கள் நண்பர் !
காதலில் கவிபுனைய உமைவிட யாருமிலர்

அனுபவித்து எழுதுகின்றீர் வாழ்த்துக்கள்.

தேடிக்கொண்டேயிருங்கள். தேடத்தேடத்தான் இன்பம் பாசம் அன்பு காதல் அதிகரித்தக்கொண்டே போகும்.
[b] ?
Reply
#3
உன்னைக் குழிப்பாட்ட
மேகம்
மழைநீரை அனுப்புகிறது
ஆனால்
நீ எனது
கண்ணீரைக் கேட்கிறாய்...!


ஏனென்றால்!
கண்ணீர்தான்
எனக்கென
என்னவனால் பெய்யப்பட்ட
பாசமழை!!

உன்னைத் தாலாட்ட
தென்றல்
தாலாட்டுப் பாடுகிறது
ஆனால்
நீ எனது
அழுகுரலைக் கேட்கிறாய்...!
தென்றல் பாடுவது
எனக்காக மட்டுமல்ல
ஆனால்
உன்
அழுகுரல்.....
எனக்காக!
என்னை நினைத்து!!
எனக்கு மட்டும்!!!
\" \"
Reply
#4
உலகில் உண்மையான காதலர் உண்மையிலேயே குழந்தைகள் தான். அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

பச்சைக்குழந்தை
தாயைத்தேடி அழுவதுபோல்
பிஞ்சுக்காதலனாய்
நானும்
உன்னைத்தேடி அழுகின்றேன்
நீ
ஆசையாய் மார்போடணைக்கும்
சுகத்திற்காகவும்
அன்புமொழிபேசி
கலங்காதே என்று
கண்ணீரைத்துடைக்கும்
ஸ்பரிசத்திற்காகவும்...!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#5
ஐயோ என்ரை பிள்ளையை வசிய மருந்து குடுத்து கெடுத்துப்போடாள்.. எண்டு பெடியின்ரை தாய் குழறுது.. அது கேக்கேல்லையோ உங்களுக்கு..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
nalayiny Wrote:உலகில் உண்மையான காதலர் உண்மையிலேயே குழந்தைகள் தான். அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

பச்சைக்குழந்தை
தாயைத்தேடி அழுவதுபோல்
பிஞ்சுக்காதலனாய்
நானும்
உன்னைத்தேடி அழுகின்றேன்
நீ
ஆசையாய் மார்போடணைக்கும்
சுகத்திற்காகவும்
அன்புமொழிபேசி
கலங்காதே என்று
கண்ணீரைத்துடைக்கும்
ஸ்பரிசத்திற்காகவும்...!
Reply
#7
ஓகோ....
உலகில் உணமையான காதலர்கள் குழந்தைகளோ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)