Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிசய நிகழ்வு
#1
யாழ் குப்பிளான் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிசய நிகழ்வு.
- பண்டார வன்னியன் - Sunday, 02 April 2006 23:03

யாழ் குப்பிளான் என்ற இடத்தில் வெள்ளாடு ஒன்று மனித முகத்தை ஒத்த முகஅமைப்புடன் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இன்று நண்பகல் 12.30மணியளவில் இந்த மனிதமுக அமைப்பைக்கொண்ட அபூர்வ ஆட்டுக்குட்டியை தாயாடு ஈன்றெடுத்திருக்கின்றது. (படங்கள் உள்ளே).
அபூர்வமுக அமைப்பு உடல் அமைப்புடன் காணப்படும் இந்த ஆட்டுக்குட்டியைப்பற்றி கேள்வியுற்ற பெருந்தொகையான மக்கள் அக்குட்டியை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

குப்பிளான் தெற்கு ஞானவைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடோன்றில் வசித்து வரும் அரியமுத்து பாலச்சந்திரன் என்பவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்றே இவ் அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றெடுத்துள்ளது.


<img src='http://www.sankathi.org/images/stories/April2006/kuppilan-1.jpg' border='0' alt='user posted image'>


இக்குட்டி தாயாட்டினால் ஈன்றெடுக்கப்பட்டு சில மணித்தியாலயங்கள் மட்டும் உயிருடன் காணப்பட்டது என்றும் பின்னர் அது இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மனித முகத்தை ஒத்த முக அமைப்பை கொண்ட இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை பார்க்கையில் இந்துக்களால் வழிபடப்படும் ஆஞ்சநேயரின் தோற்றத்தில் இருப்பதாகவும் அவ் ஆட்டுக்குட்டியை பார்வையிட வந்திருந்தோர் கூறினர்.

<img src='http://www.sankathi.org/images/stories/April2006/kuppilan-2.jpg' border='0' alt='user posted image'>

இந்த அபூர்வமுகத் தோற்றம் கொண்ட ஆட்டுக்குட்டியை யாழ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் ஆராய்ச்சிகளுக்கு வழங்கவுள்ளதாக அவ் ஆட்டுக்குட்டியை ஈன்ற தாயாட்டின் உரிமையாளர் பாலச்சந்திரன் கூறினார்.

<img src='http://www.sankathi.org/images/stories/April2006/2-04-06-3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)