Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளின் தற்போதைய அமைதி சரியா????????????
#21
புலிகள் தமது அமைதி பொறுமை அர்பணிப்பு விட்டுக் கொடுப்புக்கள் மூலம் தமிழர் தரப்பு நியாயத்தை எவராலும் மறுதலிக்க முடியாதபடி வரலாறாக ஆவணப்படுத்தி வருகிறார்கள். சிங்களத்தரப்பு தமது குறுகிய சிந்தனையில் தமது இனவாத வெறியை சரவதேசத்திற்கு முன் தமே துகிலுரிந்து காட்டுகிறார்கள்.
http://www.tamilnaatham.com/audio/2006/mar...la20060325.smil
Reply
#22
தம்பியவை, கவலைப்படவேண்டாம், தலைவருக்குத்தெரியும் என்ன செய்யவேண்டும் என்று?. தலைவர் பல விடயங்களினை நாங்கள் எதிர்பாக்காத முடிவுகள் எடுத்து பல வெற்றிகளினை ஈட்டித்தந்துள்ளார்.சில உதாரணங்கள். இந்தியா இராணுவக்காலத்தில் பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்து இந்தியா இராணுவத்தினை வெளியேற்றினார். இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தினைக்கைப்பற்றியபின்பு வன்னியினைக்கைப்பற்ற ஜெயசுக்குரு போரின் போது, இயக்கம் பின்வாங்கி அடித்த அடியில் வன்னி நிலப்பரப்பு,அனையிரவு எல்லாம் கிடைத்தது. புலிகள் தற்போது போகிறபாதை சரியானது.

ஆனால் சிங்களவர் மாறி நினைக்கினம். இன்னும் உப்பிடியே 20,30 வருடங்கள் பிரச்சனையினை இழுத்துக்கொண்டுசென்றால் தலைவருக்கு 70,80 வயதாகிவிடும். பிறகு வேறு ஒருவர் தலைவராகிவிட இலகுவாக வென்றுவிடலாம் என்று நினைக்கினம். அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் தமிழரின் அடுத்த சந்ததியினர் தமிழையும் தமிழீழத்தினியும் மறந்தவர்களாக மாறக்கூடியதாக உள்ளதினால் போராட்டத்திற்கு பங்களிப்பு குறைந்துவிடும் என்றும் நினைக்கினம்.

தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பங்களிப்பினைச் செய்யுங்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply
#23
நீண்ட இடைவெளிக்குப் பின் பலர் சொல்வதுபோல் தலைவரிடம் ஒரு அட்டவணை இருக்கும். அதன் படி அவர் எம்மை வழி நடத்துவார். விரைவில் தமிழீழம் காண்போம். எம் தலைவன் வழி உறுதியுடன் எம் பணி தொடர்வோம்.....தமிழன் தலைசாயான்...
Reply
#24
நீண்ட இடைவெளிக்குப் பின் பலர் சொல்வதுபோல் தலைவரிடம் ஒரு அட்டவணை இருக்கும். அதன் படி அவர் எம்மை வழி நடத்துவார். விரைவில் தமிழீழம் காண்போம். எம் தலைவன் வழி உறுதியுடன் எம் பணி தொடர்வோம்.....தமிழன் தலைசாயான்...

குலோத் அண்ணை
சன்டையில்லாம் அரசியலாலும் தமிழீழம் கிடைக்கும் என்றால் வீண் உயிர் இழப்பு எதற்கு?
Reply
#25
பலர் இங்கே மறந்து விடுவது போர் தொடங்கினால் இப்போது இருப்பதை விட அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்படும் என்பதை.போர் எந்த நேரத்தில் எப்போது துவங்குவது என்பது எம்மால் கணிக்க முடியாத ஒன்று.அது போரிற்கானா ஆயத்தங்கள்,மனித,கருவி வள நிலமைகள், எதிரியின் வள நிலமை ,சர்வதேச ரீதியான எதிர்வினை போன்ற இன்னோரன்ன காரணிகளாலயே தீர்மானிக்கக் கூடிய ஒன்று.இவற்றை களத்தை வழி நடத்துபவர்களாலயே துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.
நாம் எமது வலிமையை எவ்வளவு விரைவாக வளர்க்கிறோமோ, அவ்வளவு விரைவாக எமக்கு வெற்றி கிட்டும்.வெற்றி நிச்சயம் இன்றி அவசரப்பட்டு போரை ஆரம்பிப்பது , வீணாக உயிர்களை இழப்பதிலயே முடியும். ஆகவே எமது வலிமையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பைச் செலுத்தி, வெற்றியை நிச்சயம் ஆக்குவோம்.
Reply
#26
அமைதியே சிறந்தது....

புலிகள் பொறுமை காத்தால் அதற்குண்டான விலையை விரைவில் பெறுவார்கள்....

வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
தினை விதைத்தவன் தினை அறுப்பான்....
,
......
Reply
#27
இந்த பொறுமை சிங்கள அரசாங்கத்துக்கு என்னொமொரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு அல்லஇ உலக நாடுகளுக்கு நாங்கள் தமீழம் அமைக்கபோகிறோம்இ என்பதை அறிவிக்கவே..
Reply
#28
ம் லகி உங்கள் கருத்துக்கு நன்றி,
புலிகளின் பொறுமைக்கு உண்டானா பலன் கிட்டாமல் விட்டால் அவர்கள் நிச்சயமாகப் போரை ஆரம்பிப்பார்கள்.
அதற்கு நீங்களும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் மிகவும் பொறுமை காத்தே, அமைதியைப் பேணி வருகின்றனர்.ஒரு நிலைக்கு மேல் இது சாத்தியப் படாதா ஒன்றாகவே இருக்கும்.ஏனெனில் தமிழ் மக்களை ராணுவ அழுத்தங்களுக்கு உள்ளாக்குவது, என்பது தமிழ் மக்களின் போராட்ட சக்திகளான புலிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலமையாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சிங்களத் தரப்பு தயார் இல்லாத நிலயே இன்று இருகிறது.சர்வதேசமும்,இந்திய அரசும் தேவயான அழுத்தங்களை பிரயோகித்தாலயே சிங்கள அரசு விட்டுக் கொடுக்கும்.இதற்கு சர்வதேசமும்,இந்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தும் இரு தரப்பையும் சமாக நடத்த வேண்டும்.இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கினால் அது சிங்களத் தரப்புக்கு ஒரு அழுத்ததைக் குடுத்து ,பேச்சுவார்த்தயை முன் நகர்த்தக் கூடியதாக இருக்கும்.விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தயில் முனைப்புடன் ஈடுபடுவர்.
ஆகவே இங்கே போர் நடை பெறாமல் இருக்க வேண்டுமாயின் சர்வதேசத்தினதும் ,இந்தியாவினதும் சிறிலங்கா அரசாங்க்கத்தின் மீதான அழுத்தங்கள்,விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் என்பவை முக்கியமானவை.

சிறிலங்கா அதிபர் தற்போது பாகிஸ்த்தானிக்கு விஜயம் செல்ல உள்ளார், பாகிஸ்த்தானிடம் ஆயித உதவி கோர உள்ளார்.இவற்றை இந்தியா கவனமாக அவதானித்து ,விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கி ,ஈழத் தமிழர்களுடனான நல்லுறவை வளர்க்க வேண்டும்.சிங்களத் தரப்பை விட, ஈழத் தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பிற்கு என்றும் விசுவாசமாக இருப்பர்.
Reply
#29
புலிகளின் பொறுமையை தவறாக உபயோகிக்க இலங்கை அரசு முயன்றால் உலகம் அவர்களை காறி உமிழும்.....

இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....

இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?
,
......
Reply
#30
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு இங்கே வாய்ப்பே இல்லை என்பது என் எண்ணம்....

சேது சமுத்திர திட்டம் வந்தபோதே அதை எதிர்த்த ஜெயலலிதா அதற்கு சொன்ன காரணம் புலிகளின் அச்சுறுத்தல் தான்...

அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு வாய்ப்பே இல்லை.... அவர் சட்டமன்றத்திலேயே இந்த தடையை நீட்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்....

கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய மாட்டார்.... அவர் 15 ஆண்டுகளாக புலிகள் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை... ஆனால் அவர் புலிகள் எதிர்ப்பாளர் அல்ல.... தடை நீக்கத்தை அவர் மத்திய அரசுக்கு கோரினால் மீண்டும் அவர் ஆட்சியைக் கலைக்க இங்கு எதிர்க்கட்சியாய் அமையும் ஜெ. போராட்டம் நடத்துவார்....

தமிழ் ஈழம் மலர்ந்தபிறகு தான் புலிகளுக்கும், இந்தியாவுக்குமான உறவு சீர்பட வாய்ப்பு இருக்கிறது....
,
......
Reply
#31
Luckyluke Wrote:புலிகளின் பொறுமையை தவறாக உபயோகிக்க இலங்கை அரசு முயன்றால் உலகம் அவர்களை காறி உமிழும்.....

இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....

இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?


இலங்கையில் சிங்களத்தரப்பை பீடித்திருப்பது பேரினவாதம் என்கின்ற நோய்,இது அவர்களை சிந்திக்க விடாமால் செய்து வருகிறது.இவர்களால் நீங்கள் மேலே கூறியவாறு சிந்திக்க முடிந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு உயிர்களைக் காவு கொண்டிருக்க வேண்டியதில்லை.இன்றய சிங்கள, மற்றும் ஆங்கில பதிரிகைகளை வாசித்தீர்களே அனால், அல்லது மகிந்த அரசாங்கத்தை இயக்கும் ஜேவிபி மற்றும் ஜாதிக கெல உறுமயவின் கூற்றுக்களை வாசித்தீர்களே அனால் இது நன்றாக விளங்கும்.சர்வதேசத்திற்கும் இது இப்போது விளங்கி வருகிறது.சென்ற முறை பேச்சுவார்த்தயில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு முற்றிலும் மாறாகவே இலங்கை அரசாங்கம் நடந்து வருகிறது.இனி இதற்கு மேலும் பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கு பற்றுவதனால் என்ன பலன் என்பதை சர்வதேசம் தான் சொல்ல வேண்டும்?
Reply
#32
ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?

தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....
,
......
Reply
#33
Luckyluke Wrote:ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?

தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....

ஆனால் இந்திய அரசு விரும்பவில்லையே..... ! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
இரு முறை தவறாக பதிவாகி விட்டது...
Reply
#35
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பார்வை இலங்கை பிரச்சினையில் மாறி இருக்கிறது....

ஈழம் கிடைத்தால் ஒகே.... கிடைக்காவிட்டாலும் அதற்காக கவலைப்படப்போவதில்லை.... இது தான் இந்தியாவின் எண்ணம்....

ஈழப்பிரச்சினையில் எந்த விதத்திலும் தாங்கள் மூக்கை நுழைக்க கூடாது என்று இந்தியா முடிவு செய்திருக்கிறது....

என்னைப் பொறுத்தவரை ரணில் இந்தியாவுக்கு சாதகமானவர் தான்.... அவரை இந்தியா விரும்பாமலிருக்க காரணமேயில்லை.....

புலிகள் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ரணில் வந்திருப்பார்....
,
......
Reply
#36
Luckyluke Wrote:ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?

தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....


ரணில் அதிபராகவந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவரது சமாதானத் தூதுவர்களில் ஒருவரான மிலிந்த மொராகாடா கடந்த தேர்தலின் போதுதெரிவித்திருந்தார்.பேச்சுவாரத்தை என்று இழுத்தடித்து புலிகளை பலவீனமாக்கி ஈற்றில் அவர்களை சர்வதேசத்தின் உதவியுடன் அழிப்பதுவே அவர்களது திட்டமாக இருந்தது.இதற்கு அவர்கள் வெளிப்படயாக இனவாதம் பேசாமல் , நயவஞ்சமாக பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதே அவர்களின் உபாயமாக இருந்தது.இதனை சர்வதேச ரீதியாக அம்பலப் படுதுவது கஸ்ட்டமான விடயமே.ஆகவே வெளிப்படயாக இனவாதம் பேசும் எதிரியை விட,தமிழர்களைப் பொறுத்தவரை ரணில் மிகவும் ஆபத்தானவர்.
Reply
#37
பொறுமை காத்தார் உலகாழ்வார்!!!
Reply
#38
பாகிஸ்தான் புலனாய்வுத்துறை உதவியுடனே முஸ்லிம் ஜிகாத் குழு: பாலசிங்கம் அதிர்ச்சித் தகவல்!
[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 17:58 ஈழம்] [ச.விமலராஜா]




கேள்வி: முஸ்லிம் ஜிகாத் குழு இயங்கிவருவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தக் குழு பற்றி நீங்கள் சொல்ல முடியுமா? ஏனெனில் இந்தக் குழு கிழக்குப் பிரதேசத்தில் இல்லை என்று முஸ்லிம்கள் மறுத்து வருகின்றனர்..

பதில்: ஓம். முஸ்லிம் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் இதை மறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதக் குழு இயங்குவதானது சர்வதேச சமூகத்தை நிச்சயம் பாரிய அளவில் கவலை கொள்ளச் செய்யும் என்பதாலே அவர்கள் இத்தகைய மறுப்பை வெளியிடுகின்றனர்.

இந்த ஜிகாத் அமைப்புக்கும் பாகிஸ்தானிய இராணுவ புலனாய்வுத்துறைக்கும் உள்ள உறவு தொடர்பான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். ஆகையால் அவர்கள் பொதுவாக நிராகரிக்கிறார்கள். ஆனால் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் மேலதிக ஆதாரங்களை கையளிப்போம்.

கேள்வி: தற்போதைய சர்வதேசச் சூழலில் ஒரு அரசாங்கமே பாகிஸ்தானுடன் தொடர்புடைய இத்தகைய முஸ்லிம் ஜிகாத் குழு இயங்க அனுமதிப்பது...

பதில்: ஓம். அது ஆபத்தானது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது எமக்கு வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவி மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா பெற்றுக்கொண்டு வருகிறது. மேலும் சீனாவுடனும் நெருங்கிய உறவை சிறிலங்கா கொண்டிருக்கிறது.

ஆகையால் இந்த விடயத்தில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து நாம் பாரிய கவலை கொள்கிறோம். ஜிகாத் குழுவுக்கு பயிற்சியும் உதவிகளும் செய்வதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஜிகாத் குழுக்கள் பற்றி மேலதிகமாக இந்தியா அறிந்துகொள்ளும் போது இந்தியாவிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
கேள்வி: கடும்போக்கு அரச தலைவருடனான உறவு நிலை தொடர்பாக...

பதில்: உறுதிமொழிகளை அளித்துவிட்டு எதையும் செய்யாத மென்மையான போக்கு கொண்டவர்களைவிட கடும்போக்காளர்களுடன் உடன்பாட்டுக்குத் தயாராக இருக்கிறோம். ஆகையால்தான் இந்த சவாலான நிலைமையை எடுத்துக் கொண்டு கடும்போக்காளர்களுடன் பேசி வருகிறோம். இந்தப் பிரச்சனையை அவர்கள் எப்படி கையாள்கிறார் என்று பார்க்கிறோம்.

சிங்களக் கடும்போக்காளர்கள்தான் உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தடங்கலாக உள்ளனர் என்ற உண்மையை சர்வதேச சமூகம் உணரவேண்டும்.

கேள்வி: ஆகையால் அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்?

பதில்: சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறை மீதான செல்வாக்கை சர்வதேச சமூகம் செலுத்த வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமானது முழுவதுமே வெளிநாட்டு நிதியை நம்பி, உதவி வழங்கும் நாடுகளை நம்பியே உள்ளது.

சர்வதேச சமூகத்தின் உதவி வழங்குகிற நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் போதுமான அழுத்தத்தை சிறிலங்கா அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் ஓரளவாவது தமிழ்மக்களுக்கு சாதகமாக நடைபெறலாம். தற்போதைய இறுதி நிலைகளிலாவது இதை சர்வதேச சமூகம் செய்யலாம் என்றார் அன்ரன் பாலசிங்கம்.

நன்றி: ஏபிசி தொலைக்காட்சி

http://www.eelampage.com/?cn=25089
Reply
#39
Reply
#40
jkpoPoj;ij nghWj;jtiuapy; rpwpyq;fh ,uZt ,aj;jpj;jpuij vOjpy; tz;W tplhyk; Mdhy; Nkw;F cyfj;ij mth;fspd; gzpapyhNa nty;y Ntz;bah fl;lahNk; jkpoPoj;Jf;F cz;L ,ijNa Njrpaj;jiyth; mth;fs; murpay; MAjkhf Ve;jpAs;sh;
,jdhy; mjpfk; ,uj;jk; rpe;jkhy; vkJ ,yf;filahyhk; vd ek;GfpNwd;!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)