Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க நரித்தனம் அம்பலம்....!
#1
அணு ஆயுத ரகசியம் : பாக். குற்றத்தை அமெரிக்கா மூடி மறைக்கிறது!


<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39819000/jpg/_39819497_qadafp203.jpg' border='0' alt='user posted image'>
Abdul Qadeer Khan

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39820000/jpg/_39820825_khan203bodyap.jpg' border='0' alt='user posted image'>
Dr Khan said President Musharraf

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39622000/jpg/_39622713_pakhatf_ap203ix.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39116000/jpg/_39116118_liberty_bbc.jpg' border='0' alt='user posted image'>



லிபியா, ஈரான், வடகொரிய நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில் நுட்பத்தையும், ஆயுத தயாரிப்பு உபகரணங்களையும் ரகசியமாக வழங்கிய பாகிஸ்தானின் குற்றச்செயலை அமெரிக்க அரசு கமுக்கமாக மூடி மறைக்கப் பார்க்கிறது என்று ராணுவ ஆய்வு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது!

ஸ்டேட்டஜிக் ஃபோர்கேஸ்டிங் (ஸ்ட்ரேக் ஃபார்) எனும் ராணுவ ஆய்வு அமைப்பு பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பம் ரகசியமாக அளிக்கப்பட்டதற்கு அந்நாட்டின் தலைமை விஞ்ஞானி அப்துல் காதிர் கானை மட்டுமே பொறுப்பாக்கியதன் மூலம் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுச் செய்த குற்றச்செயலை அமெரிக்க நிர்வாகம் மறைக்கப்பார்க்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானிற்கும், லிபியாவிற்கும், வடகொரியாவிற்கும் அணு ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பத்தையும், யுரேனியம் அணுப் பொருளை ஆயுதமாக்கும் அணுப்பொருளாகா மாற்றவல்ல செயல்முறையையும் அளித்ததன் வாயிலாக பேரழிவு ஆயுதங்களின் பரவலுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளது என்றும், இந்தக் குற்றச்செயலுக்கு காரணம் என்று கூறப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் மாபெரும் பனிப்பாறையின் முனை மட்டுமே என்று சர்வதேச அணு சக்தி அமைப்பின் தலைவர் மொஹம்மது எல். பராடி கூறியிருப்பதை ஸ்டேட்டஜிக் ஃபோர்கேஸ்டிங் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனால் இந்த அணு ஆயுத ரகசியப் பரிமாற்றம் ஏதோ டாக்டர் அப்துல் காதிர் கான் தனித்து செய்தது போல சுட்டிக்காட்டி அந்தப் பிரச்சனையை அப்படியே மூடிவிட முஷாரஃப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது என்று கூறியுள்ள இந்த அமெரிக்க அமைப்பு, பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் ஒளிந்துள்ள தாலிபான், அல்கய்டா பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தானின் உதவி தேவை என்ற ஒரே காரணத்திற்காக முஷாரஃப் அரசின் இந்த குற்றச்செயலை மூடி மறைக்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பாகிஸ்தான் அரசின் முழுமையான ஒப்புதல் இன்றி இப்படிப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப பரிமாற்றத்தை அப்துல் காதிர் கான் மட்டுமே செய்திருக்க முடியாது என்று முகமது அல் பராடி கூறியுள்ளதற்கும், பாகிஸ்தான் அரசுக்கு இதில் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தாங்கள் நம்புவதாக அமெரிக்க அரசு கூறியிருப்பதற்கும் மிகப்பெரிய முரண்பாடு உள்ளதென ஸ்டெட் ஃபார் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹூசேன் ரகசியமாகக் குவித்து வைத்துள்ளார் என்றும், அப்படிப்பட்ட ஆயுதங்கள் மற்ற பொறுப்பற்ற நாடுகளின் கைகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் கூறி ஈராக் மீது படையெடுத்த அமெரிக்கா, அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது மட்டுமின்றி, அதனை மற்ற நாடுகள் தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ள பாகிஸ்தானின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதது அதன் இரட்டை அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது என்று ஸ்டெட் ஃபார் சுட்டிக்காட்டியுள்ளது.

அணு ஆயுத தொழில் நுட்பம் லிபியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டது முஷாரஃப் உட்பட பாகிஸ்தானின் நிர்வாக தலைமைக்கு தெரிந்தே நடந்தது என்று முதலில் கூறிய அப்துல் காதிர் கான், பிறகு அதற்கு தான் மட்டுமே பொறுப்பு என்று கூறியதையும் சில மணி நேரங்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதையும் ஸ்டேட் ஃபார் சுட்டிக்காட்டியுள்ளது.

அணு ஆயுத தொழில் நுட்ப பரிமாற்றம் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்ட அமெரிக்க நிர்வாகம், கமுக்கமாக அந்த விஷயத்தை அமுக்கி முஷாரஃப் அரசைக் காப்பாற்றி விட்டது என்று ஸ்டேட் ஃபார் கூறியுள்ளது.

---------------
webulagam.com and images from BBC.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
Reply
#3
இதைச் சொல்லிச் சொல்லியே சன நாய் அகம் வளத்து பொக்கற்றும் நிரப்பிடுவாங்கள்....முதலாளி தொழிலாளி என்று பிரிவினை வைத்த கள்ளர்.... இப்ப கொத்தடிமை பற்றியும் பறையினம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
kuruvikal Wrote:இதைச் சொல்லிச் சொல்லியே சன நாய் அகம் வளத்து பொக்கற்றும் நிரப்பிடுவாங்கள்....முதலாளி தொழிலாளி என்று பிரிவினை வைத்த கள்ளர்.... இப்ப கொத்தடிமை பற்றியும் பறையினம்....!
அடக்குமுறைக்கள்ளருக்கு வக்காலத்து வாங்குறியள்போலகிடக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)