Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளின் தற்போதைய அமைதி சரியா????????????
#1
விடுதலைப் புலிகளின் தற்போதைய அமைதி சரியா????????????
Reply
#2
சரியில்லை.
.
Reply
#3
அரச ஒடுக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சு.ப.தமிழ்ச்செல்வன்
[வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2006, 20:14 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை இனியும் தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பிரதேச மக்களுக்கான சமகால அரசியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை:

கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் சமாதானப் பேச்சுக்களில் பொறுமையுடன் ஈடுபட்டு வந்தோம்.

சமாதானத்தின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நோக்கத்திலேயே பேச்சுக்களில் பங்குகொண்டோம்.

ஆனால் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் அப்படிச் செயற்படாமல் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் நாம் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அமைதி வழியில் தீர்வு காணலாம் என்றுதான் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.

இதன் மூலம் போரை நிறுத்துவது மட்டுமல்ல- தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படைகளை படிப்படியாக விலக்கி இடம்பெயர்ந்த எமது தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தலாம் என்று எண்ணினோம்.

ஆனால் சிறிலங்கா அரச படைகள் இதனைக் கவனத்தில் எடுக்கவில்லை.

இதனால் சிறிலங்கா அரசு மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டு பொறுமையின் எல்லையில் நிற்கின்றோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.




நன்றி புதினம்.
Reply
#4
ம்ம்ம்ம்ம்.... தமிழ்செல்வன் யுத்த நிறுத்தம் கையெழுத்தானதன் பின் தொடர்ந்து உதையே சொல்லி வருகிறார். அவங்களும் எல்லாவகையிலும் அடக்குமுறைகளோ, கைது செய்து காணாமல் போறதையோ, ... தொடர்ந்து செய்கிறாங்கள்!! ... நாங்களோ ... பொறுமை! ... பொறுமை!! ... தாரக மந்திரத்தைப் பாடிக் கொண்டிருக்கிறம்!!

நாளை எல்லாச் தமிழ்ச் சனமும் அழிந்தாப் பிறகுதான் உந்தப் பொறுமையின் எல்லை வருமோ தெரியாது!!!
Reply
#5
இனியும், இனியும் பொறுமை காத்தால், தமிழனை இழிச்ச வாயன் எண்டு சி;ங்களம் நினைத்து விடும்.

கடந்த நான்கு ஆண்டுகள் தமிழின் காத்த பொறுமைக்கு சிங்களம் தந்த பரிசு
கௌசல்யன், பாவா, சேனாதி;, டிக்கான் இன்னும் நு}ற்றுக்கும் மேலான போராளிகளினதும், மக்களினதும் கொலை.

விடுதலைப் புலிகளின் தலைமை இதற்கு மேலும் பொறுமை காத்து காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து இன்னும் சில நாட்களிற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#6
எனக்கும் பொறுமையின் விளிம்பில் தான் இருக்கிறேன்

இனியும், இனியும் பொறுமை காத்தால், தமிழனை இழிச்ச வாயன் எண்டு சி;ங்களம் நினைத்து விடும்.

கடந்த நான்கு ஆண்டுகள் தமிழின் காத்த பொறுமைக்கு சிங்களம் தந்த பரிசு
கௌசல்யன், பாவா, சேனாதி;, டிக்கான் இன்னும் நு}ற்றுக்கும் மேலான போராளிகளினதும், மக்களினதும் கொலை.

விடுதலைப் புலிகளின் தலைமை இதற்கு மேலும் பொறுமை காத்து காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து இன்னும் சில நாட்களிற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
Reply
#7
விடுதலைப் புலிகள் தற்போது நடந்த பேச்சுக்கு முதல் மறைமுக தாக்குதல்கள் செய்தார்கள் இப்போது அதையும் நிப்பாட்டி. அவங்கள் தான் இப்ப கொலை செய்யிறங்கள் ஒரு நாடு ஏன் என்று கேட்பது இல்லை?

விடுதலைப் புலிகள்
Reply
#8
என்னை பொறுத்தவரை இந்த பொறுமை மிகவும் சரியே! (சாவினில் சந்தோசப்படுவதாய் நினைக்க வேண்டாம்) ஏனெனில் சர்வதேச சமூகம் எம்மை ,தமிழீழ விடுதலைப்புலிகளை புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். நாங்கள் விடுதலைக்காக மட்டுமல்ல , அமைதிக்காகவும் உயிர் கொடுக்கிறோம் என்பதை அவர்கள் இப்போது உணரத்தலைப்பட்டுள்ளனர். இதற்க்கு காரணம்... புலிகளின் பொறுமையே. முன்னையா கால கட்டத்து பேச்சுக்களில் சின்ன பிரச்சினைகளுக்காக, எங்கே நாம் ஏமாற்றப்பட்டு விடுவோமா என்ற பயத்தின் வெளிப்பாடாய் சமாதானத்தை முறித்து கொண்டதால் சர்வதேசத்திற்க்கு நம்பிக்iகின்றி போது. ஆனால் இம்முறை நடைபெறும் சமாதானப் பேச்சு வார்த்தையானது சிறிலங்கா என்ற ஒரு நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நடாத்தப்படவில்லை. சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைத்தே நடாத்தப்படுகின்றது. எனவே அவர்கள் எம் பக்கம் சாய்க்க நாம் சில விலை களைக் கொடத்தே ஆக வேண்டியவர்களாகிறோம்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
வணக்கம ;நிதர்சன்

விடுதலைப்புலிகள் தற்போது ஒரு தாக்குதல் செய்தால் எல்லா நாடுகளும் கண்டிக்க வந்து விடுவான்கள்
Reply
#10
அட பொறுங்கப்பா,,, எடுத்தம் கவிழ்த்தம் எண்டு இருக்காமல் கொஞ்சம் பொறுமை காக்கிறது நல்லது, ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அரசாங்கமே குழப்பிப்போட்டு புலிகள்தான் குழப்பி அடிச்சார்கள் எண்டு உலகத்தை நம்ப வைத்தார்கள், இப்பொழுது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரா கண்டன அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றன,

இப்ப மொட்டைகள் (பிக்குகள்), ஆவேசமா நிற்குதுகள், சம்பிக்க ரணவக்காவுக்கு மண்டை கழண்டுபோச்சு கண்டபடி அறிக்கை விடுது, 1லச்சத்துக்கு அதிகமான இலங்கை இராணுவம் உலக நாடுகளின் உதவியோடன் புலிகளை வெல்லமுடியாது பேச்சுவார்த்தை மேசையில உட்கார்ந்திருக்கினம்,

இந்த சமாதனப்பேச்சுவார்த்தைகள் மூலம் சிங்களம் தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுக்கும் என்று தமிழரின் தலைமையோ, தமிழ் மக்களோ எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்த சந்தர்ப்பம் அதாவது புலிகளின் பொறுமை எல்லையை உலக நாடுகள், அறியவேண்டும், இலங்கையில் சிறுபான்மை இனம் தனி நாடு கோருவதில் தவறு இல்லை என அவர்கள் உணர்வாகள், புலிகள் எப்பொழுது செயல் மூலம் காண்பித்துவிட்டு சொல் மூலம் வெளிப்படுத்துவார்கள்,, ஆனால் கடந்த மாவீரர் தின உரையில் தலைவர் வே.பிரபாகராரன் அவர்கள் சொல்லால் வெளிப்படுத்திவீட்டார், நிச்சயம் அது செயலால் காண்பிக்கப்படும்,

இப்பொழுது சகல வழிகளாலும் புலிகளை போருக்கு அழைக்கும் நடவடிக்கை மும்மூரமாக வெளிப்படையாக நடக்கிறது, இதைனை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒன்று விளங்கி இருக்கவேண்டும், யுத்ததில் கை ஓங்கி இருந்த புலிகள், தங்களின் விவேகமான காய் நகர்த்தல் மூலம் சர்வதேச மட்டத்திலும் அவர்களின் கை ஓங்கி இருக்கின்றது, ஆகவே இதனை உடைக்க அவர்களாகவே போரை தொடங்க வைத்து சர்வதேசத்திடம் புலிகளை மண்டியிட வைப்பதே சிறந்த வழி என சிங்களவன் தப்பு கணக்கு போடுகிறான்,,

<b>இந்த பொறுமை சிங்கள அரசாங்கத்துக்கு என்னொமொரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு அல்ல, உலக நாடுகளுக்கு நாங்கள் தமீழம் அமைக்கபோகிறோம்</b>, என்பதை அறிவிக்கவே.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
சர்வதேசம் என்னதான் சோன்னாலும் அது அரசுக்குதான் வால் பிடிக்கும்
Reply
#12
கவிதா, விடுதலைப்புலிகள் ஒரு தாக்குதலை தொடுத்தால் அதனை எதிர்க்கும் வல்லமையில் சிறிலங்கா இராணுவம் இல்லை. அதே நேரம் அதற்க்கு எதிராக வரும் கண்டன அறிக்கைகள் எதையும் சாதிக்க போவதுமில்லை. அறிக்கை விடப்போகும் அரசுக்கோ இல்லது நபருக்கோ விடுதலை; புலிகளது உண்மையான போராட்டத்தின் நியாயத்தை புரிய வைப்பது தான் இன்றை அமைதியின் நோக்கமாக இருக்கலாம். இதுவும் தொடரும் என்பதற்கல்ல, குட்ட குட்ட குனிந்து நின்ற தமிழினத்தின் வரலாறு என்றோ காணமல் போய் விட்டது குட்டுபவன் தலையிலும் குட்ட வேண்டும் குட்டுவது தெரியாமல் குட்ட வேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.
சர்வதேசம் இனியோரு தாக்குதலுக்கு கண்டன அறிக்கை விட புலிகள் சந்தர்ப்பத்தை அளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இனி ஒரு அறிக்கை புலிகள் தாக்குதல் நடாத்துகின்றனர் என்று வருமாக விருந்தால்..? அது தமிழீழம் முழுவதும் மீட்டுவிட்டார்கள். அவர்கள் தனி தமிழீழத்தை அமைத்து விட்டார்கள். அதை அங்கீகரக்கலாமா விடலாமா என்று தான் வரலாமே தவிர...தாக்குதல் நடத்துகின்றனர் என்று வர சந்தர்ப்பம் மிக குறைவு...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
ஆம் புலிகள் பொருமை காப்பது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது புலிகள் போரில் மட்டும் அல்ல அரசியலிலும் திறமையானவர்கள் என உலக நாடுகள் விளங்கிக்கொள்கிறது!!!
புலி பதுங்குவது பயத்தில் அல்ல பாய தான் என்பதை சிங்களவன் மட்டும் விளங்கிகொள்ளவில்லை!!!!
!!!
Reply
#14
விடுதலை புலிகள் பொறுமை இழக்கும் போது இலங்கை இராணுவத்துக்கு என்ன நடக்க போகுது என்று இருந்து பார்ப்பம். காலம் நெருங்குகிறது. என்னை பொறுத்தவரை இந்த பொறுமை மிகவும் சரியே
! ! !!
Reply
#15
விடுதலை புலிகள் பொறுமை இழக்கும் போது இலங்கை இராணுவத்துக்கு என்ன நடக்க போகுது என்று இருந்து பார்ப்பம். காலம் நெருங்குகிறது. என்னை பொறுத்தவரை இந்த பொறுமை மிகவும் சரியே
! ! !!
Reply
#16
98ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளைப் பார்த்த வெளியுலகத்துக்கும், இப்போது பார்க்கும் வெளியுலகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பல உண்மைகளை இப்போது அது கண்டு கொண்டிருக்கின்றது. எனவே தக்க நேரத்தில் தக்க முடிவை தேசியத்தலைவர் எடுப்பார் என நம்புவோமாக!
[size=14] ' '
Reply
#17
தூயவன் Wrote:98ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளைப் பார்த்த வெளியுலகத்துக்கும், இப்போது பார்க்கும் வெளியுலகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பல உண்மைகளை இப்போது அது கண்டு கொண்டிருக்கின்றது. எனவே தக்க நேரத்தில் தக்க முடிவை தேசியத்தலைவர் எடுப்பார் என நம்புவோமாக!


பத்து வருடத்தில் செய்ய வேண்டிய திட்டத்தை நான் இப்போதே போட்டு விடுவேன் என தலைவர் ஒருமுறை சொல்லி இருந்தார்... அப்படிப்பார்த்தால் அவர் ஏற்கனவே எப்போ என்ன செய்ய வேண்டும் என நன்கு கணக்கிட்டிருப்பார்... அவர் சொன்னதை மட்டும் செய்பவர் அல்ல சொல்லாததையும் செய்பவர்...

சண்டை என்பது புலிகளால் ஆரம்பிக்க பட மாட்டாது.. அது இராணுவத்தால் தான் ஆரம்பிக்கப்படும் என்பதை நான் நம்புகிறேன்... அது <b>தமிழீழ பிரகடத்தினால் கூட இருக்கலாம்.. </b><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#18
தூயவன் எழுதியது:
98ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளைப் பார்த்த வெளியுலகத்துக்கும்இ இப்போது பார்க்கும் வெளியுலகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பல உண்மைகளை இப்போது அது கண்டு கொண்டிருக்கின்றது. எனவே தக்க நேரத்தில் தக்க முடிவை தேசியத்தலைவர் எடுப்பார் என நம்புவோமாக!

நான் எனன நினைககிறேன் என்றால் தற்போது நடக்கிற தாக்குதலுக்கு இலங்கை அரசுக்கு தொடர்பு இருக்குது என்று கண்கணிக்குலு கூட !!!!!!!!!!!!!!!!
Reply
#19
எமது போராட்டத்தினை உயர்ந்த ராஜதந்திரத்தோடும், நவீன படைத்தொழினுட்பத்துடனும் வளர்த்தெடுத்திருக்கின்றோம் - தமிழினி
- பாண்டியன் - ளுயவரசனயலஇ 25 ஆயசஉh 2006 03:30

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் சிங்கள தேசம் பல் வேறு பட்ட சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை(22.03.06) முல்லைத்தீவு முள்ளியவளையில் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ்க் கலையரங்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
தற்போதைய ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் போக்குகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வெற்றிக்கு இட்டுச் செல்லும.; நாங்கள் விடுதலைப் போராட்டத்தை மிகவும் உயர்ந்த, இராஜ தந்திரத்தோடும், நவீன படைத் தொழில் நுட்பத்தோடும் வளர்த்தெடுத்திருக்கின்றோம். எமது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளார் என்று தெரிவித்த அவர்,

தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும், கருத்துகளும் எதிரிகள் எதிர்பார்த்ததைப் போல் இல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான பலா பலன்களைக் கொடுக்கும். அது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றி இலக்கை நோக்கி போராட்டத்தை மேலும் வேகமாக நகர்த்திக் கொண்டு செல்லும் என்பது தான் உண்மை. ஏனென்றால் போராட்ட வரலாற்றில் தமிழர்களுக்கு அவலத்தைத் தந்தவனுக்கு அவலத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொறிவைத்து பொறிக்குள் விழுத்த நினைத்த அரசியல்; சக்திகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிராக அந்தப் பொறியை திருப்பி வைத்திருக்கின்றோம் எனத் தெரிவித்த அவர், இந்தச் சமாதானச் சூழல் மூலமாக தமிழ் மக்களை விடுதலைப் போராட்டத்தில் இருந்து அன்னியப் படுத்தி விடலாம் என்றும் தமிழ் மக்களின் போராட்ட மனநிலையை நீர்த்துப் போகச் செய்யலாம் என்றும், இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலம் குன்றிய விடுதலைப் போராட்டமாக மாற்றி அமைக்கலாம் என்ற நோக்கத்தோடு ஸ்ரீலங்கா அரசால் இச் சமாதானச் சூழல் நீட்டப்பட்டுக் கொண்டு செல்கிறது.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வைக்கப்பட்ட இச் சமாதானப் பொறியை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்கின்ற ஒரு அரங்காக சமாதானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என்றும் தமிழினி மேலும் தெரிவித்தார்.

http://www.sankathi.net/
Reply
#20
கள உறவுகளே கடந்த கால மாவீரர் உரையில் தலைவர் மிகவும் தெழிவாக சொல்லியிருப்பது யாதினில் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின் நாமும் எமது போரரட்ட பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.நாம் 20 வருடங்களாக போரிட்டு சர்வதேசத்தில் சம்பாதித்ததை விட கடந்த 4 ஆண்டுகளாக இழப்புகளுக்கிடையிலும் சம்பாதித்தது எவ்வளவோ மேல்.இன்று கமாசைப் பாருங்கள் தேர்தலில் வென்றிருந்தும் சர்வதேசத்தின் முன்னால் அவர்களால் எழுந்து நிற்க முடியவில்லை.இந்த நிலை மலரப் போகும் தமிழீழத்திற்கும் வரக்கூடாது.இப்போது நடக்கும் பேச்சு வார்த்தை வெறுமனே தமிழ் தேசியத்திற்கும் அரசுக்குமான பேச்சு வார்த்தையல்ல.நோர்வே நடுவில் நின்றாலும் பின் புலமாக வேறு நாடுகளும் உள்ளன.உதாரணமாக சென்ற பேச்சுவார்த்தையின் போது முதல் நாளே பேச்சு வார்த்தைகள் முறிவடைய இருந்ததாகவும் நோர்வே அவசர அவசரமாக அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசி அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டாம் நாள் பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.எனவே கடந்த(2005)மாவீரர் தின உரையில் எல்லாவற்றையும் அடக்கியுள்ளார்.ஒப்பந்தத்தில் 14 நாள் காலக் கெடு என்று உள்ளது.அந்த காலக் கெடுவை யார் விதிப்பது என்பதும் பெரும் பிரச்சனையாக அமையலாம்.பெறுத்திருந்து பார்ப்போம் அதுவரை எமது தேசியத்தைப் பலப்படுத்துவோம்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)