Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி
<b>புதிய பதில்துணைவேந்தரை நியமிக்குமாறு பேராசிரியர் மேகனதாஸ் கோரிக்கை </b>

நேற்றுடன் தமது துணைவேந்தர் பதவிக்காலத்தினை நிறைவு செய்துள்ள பேராசிரியர் சு. மோகனதாஸ், தமது பணிகளை பொறுப்பேற்பதற்கு வசதியாக புதிய பதில் துணைவேந்தர் ஒருவரை நியமனம் செய்யுமாறு கல்வி உயர்கல்வி அமைச்சுக்கு கடிதத்தின் மூலம் வேண் டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ரட்ணஜீவன் கூலினை பல்கலை க்;கழக ஆணைக்குழு நியமித்திருந்தது. எனினும் அவரது நியமனத்திற்கு யாழ். பல்கலைக் கழக சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக ரட்ணஜீவன் கூல் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பதில் துணைவேந்தராக தொடர்ந்து பதவி ஏற்குமாறு பேராசிரியர் மோகனதாஸை பல்கலை க்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து அவரும் பதில் துணைவேந்தராக நேற்றுவரை பதவியேற்று வந்திருந்தார்.

இந்த நிலையில் தாம் ஓய்வு பெறவேண்டியுள்ளதால் தமது பதவியினை பொறுப்பேற்பதற்கு வசதியாக வேறு ஒருவரை பதில் துணைவேந்தராக நியமிக்கும் படி அவர் கல்வி, உயர்கல் வி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரிடமிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை இந்தக்கடிதம் குறித்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


நன்றி: சங்கதி
[size=14] ' '
Reply
<b>யாழ். மாணவர்கள் கடும் எதிர்ப்பு: ரட்ணஜீவன் கூலின் வரவேற்பு நிகழ்வு இரத்து! </b>

யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ரட்ணஜீவன் கூலுக்கு நேற்று புதன்கிழமை அளிக்கப்படவிருந்த வரவேற்பு நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.

தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரான ரட்ணஜீவன் கூலின் நியமனத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகமும் மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 15 ஆம் நாள் பொறுப்பேற்க வேண்டிய ரட்ணஜீவன் கூல் பொறுப்பேற்கவில்லை. அவருக்குப் பதிலாக தாற்காலிக துணைவேந்தராக பேராசிரியர் சி.மோகனதாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரும் புதிய துணைவேந்தரையோ அல்லது வேறு ஒரு தாற்காலிக துணை வேந்தரையோ நியமிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ரட்ணஜீவன் கூலுக்கு வரவேற்பளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கடைசி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது.

தனக்கான எதிர்ப்புக்கள் தொடர்பில் ரட்ணஜீவன் கூல் கூறியுள்ளதாவது:

நான் ஒரு துரோகி என்றும் இராணுவத்தினருடனும் எதிரிகளுடனும் இணைந்து செயற்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக நான் செய்த குற்றம் என்ன என்று கூறவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை நான் ஏற்றால் கொலை செய்யப்படுவேன் என்று பல அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

நான் அங்கு போனால் அவர்கள் என்னைத் தாக்குவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.

வட மாகாண அபிவிருத்திக்காக நான் பங்களிப்புச் செய்ய விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் பொறியியல் துறை மேம்பாட்டுக்கான பரிந்துரைகளையும் திட்டங்களையும் வைத்திருக்கிறேன். ஆகையால் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எனது விளக்கத்தை கேட்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் ரட்ணஜீவன் கூல்.

இதனிடையே இந்த விடயம் தொடர்பாக கத்தோலிக்க ஆயர்கள் குழுவினர் விடுதலைப் புலிகள் தரப்பைச் சந்திக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதினம்
Reply
<b>சமூகத்தைப் புரிந்துகொண்ட ஒருவரே துணைவேந்தராக நியமிக்கப்படவேண்டும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கை</b>

எமது சமூகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பல்கலைக்கழகத்தைச் சரி யாக வழிநடத்தக்கூடிய பொருத்தமான துணைவேந்தர் ஒருவர் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கலைப்பீட மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக கலைப்பீட ஒன்றியம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எமது சமூகத்தினைச் சரியாகப் புரிந்துகொண்டு எமது பல்கலைக்கழகத்தினை சரியான வகையில் வழிநடத்தக் கூடிய ஒரு துணைவேந்தரை உடனடியாக நிய மிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது எமது பல்கலைக்கழகத் திற்கு துணைவேந்தராக கடமையாற் றிய பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர் களுடைய பதவிக் காலம் முடிவடைந் துள்ள நிலையில் அவர் மீண்டும் ஒரு வாரம் பதில் துணைவேந்தராகக் கடமை யாற்றி அப்பதவிக்காலமும் நிறை வடைந்துள்ளது.

தற்போது துணைவேந்தர் இல்லாத நிலையில் எமது பல்கலைக்கழகம் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. ஏற்கனவே ஸ்ரீலங்கா ஜனாதிபதி யினால் துணைவேந்தராக நியமிக்கப் பட்ட பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் அவர்களை எமது மக்களும் மாணவர் களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது பல்கலைக்கழகத்திலே குழப்பமான சூழ்நிலையினை ஏற்படுத்தி எமது மாணவர்களது கல்வி நடவ டிக்கைகளைக் குழப்ப வேண்டும் என்ற கபட நோக்கத்திற்காகவே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காது இழுத்தடித் துச் செல்கின்றார்.

எனவே, ஜனாதிபதியின் இந்த குள்ளத்தனமான நிலைப்பாட்டினை நாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் கேட்கின்றோம். எமக்குப் பொருத்தமான ஒரு துணைவேந் தரை உடனடியாக நியமித்து எமது கல்விச் செயற்பாட்டினை நாம் குழப்பமில் லாது மேற்கொள்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உதயன்
Reply
எதிர்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கவிருக்கும் யுத்தத்தால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து எழும் எழுச்சியை / எதிர்ப்பை அடக்கவே இந்த கூல் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே நானும் கருதுகின்றேன்.
Reply
கூலின் பத்தாண்டு சாதனை : - ருகுணு பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடத்தை தொடங்கச் சென்ற கூல் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை. திறந்த பல்கலைக்கழகம் சென்றார். அங்கும் சரி வரவில்லை. பேராதனையில் கணணிப் பொறியியல் தொடங்கச் சென்றார். துறைத் தலைவர் பதவியையும் பறித்து துரத்தியடித்தார்கள். இப்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் இலும் துரத்தி விட்டார்கள். யாழ். பல்கலைக்கழகம் என்ன குப்பைத் தொட்டியா?

தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையே இன்று எமது எதிரிகளுக்கு முன்புள்ள மிகப் பெரிய சவாலாகும்.

தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த இவர்கள் தொடர்ந்து முயலுகிறார்கள்.

1997 இல் 'The Exile Returned' நூல்மூலம் தமிழ் மக்களிடையே மத ரீதியான சர்ச்சைகளைத் தோற்றுவிக்க முயன்று வெற்றி பெற முடியாமல் போன ரட்ணஜீவன் கூல் மீண்டும் ஸ்ரீலங்காவுக்குள் பிரவேசித்த பின்னர் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார். தனது உறவினரான லக்ஸ்மன் கதிர்காமரின் சிபாரிசினால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குள் புகுந்துகொண்ட இவர் அந்தநாள் முதல் திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2003ஆம் ஆண்டு இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலிலும் போட்டியிட்ட கூல் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தார். அப்போது இவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உறுப்பினராக இல்லை. ஆனால் அப்போதும் DSc பட்டம் இருந்தது. இவருடைய கல்வித் தகைமையை இன்று புகழ்ந்துரைக்கும் ஒரு சில கல்விமான்கள் கண்ணில் அப்போது இந்தப் பட்டம் கண்ணில் படாததன் மர்மம் என்ன? இன்று கூலை விதந்துரைப்போர் சிலர் அன்று கூலை எதிரத்துப் போட்டியிட்டனர். மூவரில் ஒருவராக வெற்றியும் பெற்றனர்! சந்திரிகாவுக்கு காவடி எடுத்தனர். பதவி கிட்டவில்லை. வயோதிப காலத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அதிகாரக் கதிரையில் உள்ள கூலிடம் சரணாகதியடைந்தனர்

கூல் இவர்களைப் போன்றவர்களை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு நிவாரணம் தேடிப் போனவாக்ள் அனைவரையும் சந்தித்தார். அவர்கள் பிரச்சினையிலுள்ள நியாய, அநியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காது அவர்கள் அனைவரையும் இரட்சிப்பதாக வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு தனது முகவர்களாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

விரிவுரையாளர்களாக விரும்பியவர்கள், பேராசிரியர் பதவி கிட்டாதவர்கள், பரீட்சை குளறுபடி செய்தவர்கள், பல்கலைக்கழகப் பணத்தை மோசடி செய்தவர்கள், பணியாற்றிய இடமெல்லாம் திருடியவர்கள் இவர்கள் எல்லோருக்கும் கூல் அபயமளித்தார். சிங்கள தேசத்தின் நீதி-நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளால் இவர்களைப் புகுந்து வரச்செய்து துயர் நீக்கினார். அதுவும் முடியாதவர்களுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் மூலம் அதிகார வரைமுறையை மீறிய கடிதங்களைப் பெற்று நிவாரணம் வழங்கினார்.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை தெரிவுசெய்தபோது தனக்கு வேண்டியவர்களைப் புகுத்தினார். இதன்மூலம் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்தினார். தனது அடியாளான கொழும்பிலிருந்து பேரவைக்கு வருகை தரும் வைத்தியரான ஒரு பேரவை உறுப்பினர் மூலம் தேர்தல் முறையையும் மாற்றியமைத்தார். 2003 இல் முன்னுரிமை வாக்குகள் முறை இருந்தது. முதலாம் விருப்புத் தேர்வுக்கு 5 புள்ளிகளும், இரண்டாம் விருப்புத் தேர்வுக்கு 3 புள்ளிகளும், மூன்றாம் விருப்புத்தேர்வுக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது. இனி எத்தேர்வுக்கும் சம புள்ளிகள் எனத் தேர்வு முறையை மாற்றி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அமரர் பேராசிரியர் அ.துரைராசா அவர்கள் பொறியியற் பீடமொன்றைவன்னி முறிகண்டியில் அமைக்கத் திட்டமிட்டார். இந்தப் பீடத்தை வன்னிக்கு வெளியில் மாற்ற கூல் முயற்சிசெய்தார். வவுனியா வளாக நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகள் பகர்ந்தார். வளாகத்தை தனிப்பல்கலைக்கழகமாக்குவேன் எனக் 'காகிதத்தில் கப்பல் விட்டார்'. அங்குள்ள வளாக ஆசிரியர் சங்கத்தலைவரை கைக்குள் போட்டார். அவர் கூலின் கீழ் ஆய்வு மாணவனாக இருந்தார். அவருக்கு PhD பட்டம் தருவதாகக் கூறி அவரைத் தன் அடியாளாகப் பயன்படுத்தினார். கூலின் நாச வேலைகளின் உச்சமாக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வவுனியா வளாக ஊழியர்களும் மாணவர்களும் மோதிக் கொண்டனர். ஆனால் தமிழ் மக்களின் காவலர்களின் தலையீட்டால் அப்பிரச்சினை சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.

இம்மாதம் 23ஆம் திகதி வவுனியா வளாக ஆசிரியர் சங்கத் தலைவர் வவுனியாவில் ஆசிரியர்-மாணவர்-ஊழியர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தின் கூட்டமொன்றைக் கூட்டி கூலுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்றார். ஆனால் இம் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. பிரதேசவாதம் என்ற கேடுகெட்ட ஆயுதத்தை வவுனியாவில் உபயோகிக்கும் கூல் யாழ்ப்பாணத்தில் மதவாதத்தை விதைத்து வருகிறார்.

தமிழ் மக்களின் பொறுமையை கூல் தவறாகக் கணித்துள்ளார். சுலபமாக ஏமாற்றிவிடக்கூடிய முட்டாள்கள் என எடை போட்டுள்ளார்.

வருக தேசத் துரோகியே! எமது வாசலில் உன்னை எதிர்கொள்வோம்!!
நீ கற்றுக்கொள்ளப் போகும் பாடம் சகல தேசத் துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகட்டும்!!!

" மரங்களின் வேர்களில் கோடரிகள் வைக்கப்பட்டுள்ளன. கனி கொடாதவை எல்லாம் வெட்டுண்டு அக்கினியில்
னி தள்ளப்படும் "

23.03.2006
பல்கலைக்கழக நற்பணி மன்றம்

மேற்குறிப்பிட்ட விடயம் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது. உங்கள் பார்வைக்கும்
Reply
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந் தராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் இரட்ணஜீவன் ஹுல் தாம் தமிழ்த் தேசியத் துக்காக உழைப்பவன் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டிவிட்டு அதன் பின்னரே தமது பதவிக்கு வருவது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்த்தேசிய விழிப்புணர்வுக் கழகம் விடுத்த ஓர் அறிக்கையில் மேற்கண்ட வேண்டு கோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
"தமிழ் விரோதப் போக்குடையவர்' என்ற கருத்தை அடுத்து வரும் ஆண்டுகளில் மாற்றி அமைத்த பின்னரே பேராசிரியர் ஹுல் தமிழ்த் தேசியத்துக்காக உழைக்கும் ஓர் உயர் கல்வி நிறுவனத்தின் அதிகாரியாக வருவது பொருத் தமாக இருக்கும் என்றும் விழிப்புணர்வுக் கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
யாழ்.பல்கலைக்கழகம் என்பது கடந்த பல வருடங்களாக தமிழ்த்தேசியத்திற்கா கவும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அயராது உழைத்துவருகின்ற ஓர் உயர் கல்வி நிறுவனமாகும். இந்த உணர்வுகளைத் தடுப் பதற்கு சிறிலங்கா அரசும் அரசின் ஆக்கிர மிப்புப் படையினரும் கடும் பிரயத்தனம் மேற் கொண்டுவருகின்றன. ஆனாலும் பல்கலைக் கழக சமூகத்தின் விடுதலை உணர்வைத் தடுத்துவிட முடியவில்லை. தங்களால் இய லாத ஒரு விடயத்தை இன்று இரட்ணஜீவன் ஹுல் என்கின்றவரை துணைவேந்தராக நியமிப்பதன் ஊடாக சாதித்துவிட முயல் கின்றனர். எனவே, அரசினதும் அரச படை களினதும் ஆதரவோடு பேராசிரியர் அவர் கள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்த ராகக் கடமையாற்றுவது ஒருபோதும் சாத்திய மற்ற ஒரு விடயமே.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை யில் பெருமளவு ஆக்கிரமிப்புப் படையினர் பேராசிரியர் ஜீவன் ஹுலுக்கு ஆதரவாகத் துண்டுப் பிரசுரங்களையும் சுவரொட்டிகளை யும் பல்கலைக்கழகச் சூழலில் ஒட்டிக்கொண்டு திரிவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் அவற்றைக் கிழித்தெறிந்தபோது படையினருக்கும் மாண வருக்குமிடையே முறுகல் நிலைகூடத் தோன்றியது. இந்நிலையில் பேராசிரியர் ஜீவன் ஹுல் அவர்கள் துணைவேந்தராக வரு வது மாணவர்களின் நலனிற்காகவா? அல்லது ஆக்கிரமிப்புப் படைகளின் நலனிற்காகவா? என்ற கேள்வி குடாநாட்டு மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.
மாணவர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தென்பகுதியில் உள்ள செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வருவதற்கு கடும் பிரயத்தனத்தை பேராசிரி யர் மேற்கொள்வது இவர்மீது இன்னமும் சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. என வேதான், இவரிடம் பகிரங்கமாகப் பின் வரும் வேண்டுகோளைக் குடாநாட்டு மக் கள் சமூகம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் மீது மாணவர்கள், மக்கள் கொண் டுள்ள "தமிழ் விரோதப் போக்குடையவர்' என்கின்ற விடயத்தை அடுத்துவரும் ஆண்டு களில் மாற்றி அமைத்து "தமிழ்த்தேசியத்திற் காக உழைப்பவன்' என்ற பெயரை நிரூ பித்துக் காட்டிய பின்னர் தமிழ்த்தேசியத்திற் காக உழைக்கின்ற ஓர் உயர்கல்வி நிறுவனத் தின் அதிகாரியாக வருவதே பொருத்தமா கும் என்பதை கூறிவைப்பதோடு, சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு சேர்ந்து எமது மாணவர்களின் சுமுகமான கல்விச் செயற் பாட்டிற்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் எனவும் கேட் டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.uthayan.com/pages/news/today/11.htm
Reply
விளங்காதவர்கள்,தெளிவில்லாதவர்களுக்கு இபோது ஜீவன் கூலின் போக்கு எத்தகையது என்பதுவும்,அவரிற்கான ஆதரவு எங்கிருந்து வருகிறது என்பதுவும்,ஏன் இராணுவம் அவரிற்கு ஆதராவாகச் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்பதுவும் இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.அவர் வருவதன் நோக்கம் இராணுவம் அவருக்காக ஆதரவுச் சுவரொட்டி எழுதி ,ஒட்டியதில் இருந்து எல்லோருக்கும் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.இனியும் யாராவது தமக்கு தெளிவு இல்லை என்று சொல்வராகில் அவர்கள் தேசியப் போராட்டத்திற்கு எதிரானவர்களாகவே கணிப்பிட நேரும்.
Reply
பேராசிரியர் கூலும் சைவசமயமும் படும்பாடு. - க.குழந்தைவேல்


Tuesday, 28 March 2006



--------------------------------------------------------------------------------
அண்மைக் காலங்களில் பேராசிரியரைப் பற்றி வெளிவந்த கண்டன அறிக்கைகள், வாதிப் பிரதி வாதங்கள் சுவையாக இருந்தன. பேராசிரியர் அவர்கள் தன்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றச் சாட்டுகளுக்குத் தெரிவித்த மறுப்பும் விளக்கமும் ஆழமாக இருந்தன!

பல வருடங்களுக்கு முன்னர் நான் வெளிநாடொன்றில் ஒரு நண்பனுடைய வீட்டுக்குச் சென்றிருந்த போது, பேராசிரியர் எழுதிய ‘Exile Returned’ ன’ புத்தகம் கைக்குக் கிடைத்தது. ஒரு தமிழர், யாழ்ப்பாணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்ற ஆவலில் அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன்.

புத்தகத்தை எழுதியவர் யார் என்று அந்தநேரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு ஊகத்துக்கு வந்தேன். ஒன்றில், எழுதியவர் மேற்கத்தேய ஏகாதிபத்தைத் திருப்திப்படுத்த சைவத்தை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்கலாம்-தமிழரையும் இழிமைப்படுத்தியிருக்கலாம். அல்லது எழுதியவர் ஒரு sex pervert (பாலியல் பிறழ்வுகள் நிறைந்த ஒருவர்) ஆக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். சைவத்தை, சைவம் காட்டிய தியான, யோக, பரதக்கலைகளையும், வைத்தியத்தில் விஞ்ஞானத்தில் எமது முன்னோருக்கிருந்த ஞானத்தையும் மேற்கத்தேய உலகம் வியந்து அரவணைத்து அறிய முன்வர, ஒரு தமிழர் சைவத்தையும் அதன் பாரம்பரியத்தையும்; கொச்சைப்படுத்தி எழுதியதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும்?

யாழ்ப்பாணத்தில் நடந்ததாக அவர் கூறும் எல்லாவிதமான பாலியல் கூத்துகளும். சில்மிஷங்களும், உபநிஷதங்கள், புராணங்கள் என்பவற்றில் அவர் தேடி எடுத்து அலசும் விஷயங்களும், சொல்லும் விதமும், பழையநாளைய மஞ்சள் புத்தகத்தை அல்லது இன்றைய போனோகிராபிக் புத்தகங்களை வாசிப்பதைப் போன்ற எண்ணத்தைத்தான் மேலோங்கவைக்கின்றன. சமூகத்தைப்பற்றி, பாலியலைப்பற்றி இருப்பதாகச் சொல்லப்படுகின்ற அவ்வளவு பிறழ்வுகளையும் கோணங்கித்தனங்களையும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகக்காட்ட முயற்சிப்பதுதான் கவலைக்குரியது. உதாரணத்துக்கு, ஒன்று இரண்டுடன் முடித்திருக்கலாம். ஆனால் புத்தகம் எழுதியதன் முழு நோக்கமுமே இதற்காகத்தான் என்பது போன்ற எண்ணம்தான் வாசித்தபோது ஏற்பட்டது. யுhழ்ப்பாணத் தமிழ் கலாசாரத்திலுள்ள, எண்ணற்ற அழகான, காத்திரமான, மெச்சப்படவேண்டிய வழக்குகள், சட்டதிட்டங்கள், எண்ணக் கருத்துகள் என்பன சொல்லப்படாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன! ஆல்லது அதுதான் நோக்கமாக இருந்திருக்குமா என்ற சந்தேகத்தையும் விதைக்கின்றன.


கிறீஸ்தவ, சைவசமயப் போலிகளை உள்ளடக்கிய, எமது மத, கலாச்சார ரீதிகளில் நடக்கின்ற போலிகளை ஆராய்ச்சி செய்ததாக பேராசிரியர் விளக்கம் கொடுத்தாலும்கூடப் புத்தகத்தை வாசிக்கும் போது அவருடைய நோக்கம் என்ன என்பது கூறாமல் தெரியும்.

அவர், தன்னுடைய சமய முறைகளை இறுகப் பேணுவதால், பொட்டு இடுவதில்லை. சேவல்விளக்கு ஏற்றுவதில்லை. மாலை இடுவதில்லை என்று தன்னுடைய நடைமுறைக் கொள்டகைகளுக்கு விளக்கம் தருகிறார். மிகவும் நல்லது. ஒரு மதத்தில் இப்படிச் செய்ய வேணடும் என்று சொல்வதைப் போலி என்று வாதிட்டுக்கொண்டு, தனது மதத்தில் சொல்லப்படுவதாக அவர் கூறும் விடயங்களை மெய் என்று வாதிடுவது எந்தத் தர்க்க நியதிக்குள் அடங்கும் என்பது doctor of science பேராசிரியருக்குத்தான் வெளிச்சம்! பொட்டு வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் போலி என்றால் பொட்டு வைக்கக்கூடாது, விளக்கு ஏற்றக்கூடாது என்று அர்த்தமற்ற கொள்கை வைத்துப் போராடுவதும் அதே போலிதான். அர்த்தமில்லாத அடிதடி. ஒருமதப்பிரிவினர் செய்வதை தனது மதப் பிரிவினர் செய்யக்கூடாது என்று வற்புறுத்துவதாக, அதை ஒரு பெரிய issue வாக்கிக் கட்சி பிரித்துக் குடுமிபிடிச்சண்டைகளை உருவாக்கிப் பிளவுகளை ஏற்படுத்தல், நாட்டுக்கோ, தமிழனுக்கோ எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை, மாறாக வேண்டத்தகாத விளைவுகளை உருவாக்கி எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கிவிடும் என்பது பேராசிரியருக்கு விளங்காத ஒன்றா?

சமய அனுட்டானங்களை, விதிழுறைகளை ழுற்றுமாக விஞ்ஞான அறிவைக்கொண்டு ஆராய வெளிக்கிடக் கூடாது. அத்திவாரமே ஆட்டம் கண்டு விடும். சமயம் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது என்றுவைத்துக்கொள்வதாயின், அவரவர் சமயத்தை, அவரவர், அவரவரால் கொள்ளக்கூடிய அளவு கொள்ளட்டும். இதில் குடுமிபிடிச் சண்டை வரவேண்டிய தேவையில்லை.

மத, கலாச்சார ரீதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்த (இருக்கின்ற?) போலிகளை ஆராயவெளிக்கிட்ட பேராசிரியர், அன்று தொடக்கம் இன்று வரை இருக்கும் மூன்றாவது மதத்தைத் தொடாமல் விட்டுவிட்டுவிட்டாரே? ஈரானிலிருந்த அயத்தொல்லா, லண்டனிலிருந்த சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை வைத்தமாதிரியல்லோ ஆகியிருக்கும்! ஆல்லது டென்மார்க்கின் பத்திரிகையில் ஒரு காட்டூன் வந்ததற்காக உலகம் முழுவதும் போராட்டமும், டெனிஷ் தூதரகத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்த மாதிரியுமல்லோ போயிருக்கும்! சைவத்தின் போற்றப்படவேண்டிய கொள்கைகள் தான் பேராசிரியர் இன்று துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட வழிவிட்டிருக்கின்றன!

ஆனாலும் அதிலும் கூட ஒரு குழப்பம். சேவல் குத்து விளக்கும் வேண்டாம். மாலையும் வேண்டாம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசல் தூண்களின் மேல் இரு நந்திகள் நின்கின்றனவே? அதை இடித்து விட்டு உள்ளே போனால் நந்திக்கொடி வேறு காத்துக் கொண்டிருக்கிறதே? அதனையும் ஒரு ‘வழி’ பண்ணி விட்டுச் சென்றால் அடுத்து, நந்தியில் வீற்றிருக்கின்ற சாஷ்;சாத் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கின்றாரே? Useless Asian Values….. ….. Only Barbarism! திருநெல்வேலியின் land value தெரியாமல் இப்படி ஒரு wastageஆ? கோயிலை இடித்துத்தள்ளிவிட்டு அந்த இடத்தில் பொறியியல் பீடத்துக்கு ஒரு Research Centre கட்டிவிடவேண்டும்! பல வருடங்களாக அண்டை அயல்களில் வசித்த, நண்பர்களாயிருந்த, சைவர்களுடைய கொள்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்க முடியவில்லை……. தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காக-கொள்கைகளில் தெளிவும், பற்றுறுதியும், விட்டுக்கொடுப்புச் செய்யாத வைராக்கியமும் கொண்ட தமிழர் தலைமையான புலிகளோடு ஒத்துழைப்பது முடியிற காரியமா? கூரை ஏறிக் கோழி பிடிக்க வழியில்லை@ வானம் ஏறி வைகுண்டம் போற நினைப்பு!

இதய சுத்தியோடு செய்யப்படுகிற பிரார்த்தனைகளுக்கும், ஜெபங்களுக்கும்தான் ஆண்டவர் அனுக்கிரகம் பண்ணியதாக கதைகளுண்டு!

http://www.sooriyan.com/index.php?option=c...id=3025&Itemid=
Reply
நெத்தியடி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Plan Your Work. Work Your Plan
Reply
நன்றாகச் சொன்னீர் நாரதர். இன்னும் யாராவது கூல் புராணம் பாடினால் அவரை விட முட்டாள் யாரும் இல்லை.

தான் போக வழியில்லை வாலுக்கு இடம் கேட்டுதாம் ...என்று ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகுது......இவர் கூல் இப்ப பதில் துணைவேந்தர், வளாக முதல்வர் என்று கொழும்பில இருந்துகொண்டு ஆட்டமாடுறார்.

ஆனால் பேராசிரியர் பரமேஷ்வரன் அதை ஏற்காமல் தான் படிச்ச மனுசன் என்று காட்டிப் போட்டார்.
Reply
<b>ரட்ணஜீவன் கூலின் நியமனத்திற்கு எதிராக யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம;</b>

சிறீலங்கா பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு பேரசிரியர் ரட்ண ஜீவன்கூலை யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்தமைக்கு கண்டனம் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.
யாழ்பல்கலைக்கழக ஊழியர்கள் தமது பணிகளை இன்று முற்பகல் 11.00 மணியுடன் இடை நிறுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் ஒன்றை நடாத்த உள்ளனர்.

தமிழ் இன விரோதியான இவரை ரட்ணஜீவன் கூலை துணைவேந்தராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும், இடம் மாற்றம் செய்யப்போவதாகவும் மிரட்டி வருவதாகவும் யாழ். பல்களைக்கழக ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தகவல்:சங்கதி
[size=14] ' '
Reply
நாரதர்

தாங்கள் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கள் பொறியியல்துறை கல்வியை சிறப்பாக முடித்துக்கொண்டதாக எழுதியிருந்தீர்கள். எந்த பல்கலைக்கழகம் என்று தெரிவிக்க முடியுமா?

யாழ்ப்பாண மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்.?
எனது உறவினர் ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பௌதிக துறையில் படிக்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அங்குள்ள நிலைமை காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க முடிந்தால் தனது படிப்பை தங்களைப்போல சிறப்பாக முடித்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றார். இதற்கான தங்கள் ஆலோசனையை இந்த களத்தில் எழுதினால் இவரைப்போன்ற நிலையில் உள்ள மற்றவர்களும் படித்து பயன்பெற முடியும். நன்றி.
''
'' [.423]
Reply
Jude Wrote:நாரதர்

தாங்கள் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கள் பொறியியல்துறை கல்வியை சிறப்பாக முடித்துக்கொண்டதாக எழுதியிருந்தீர்கள். எந்த பல்கலைக்கழகம் என்று தெரிவிக்க முடியுமா?

யாழ்ப்பாண மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்.?
எனது உறவினர் ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பௌதிக துறையில் படிக்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அங்குள்ள நிலைமை காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க முடிந்தால் தனது படிப்பை தங்களைப்போல சிறப்பாக முடித்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றார். இதற்கான தங்கள் ஆலோசனையை இந்த களத்தில் எழுதினால் இவரைப்போன்ற நிலையில் உள்ள மற்றவர்களும் படித்து பயன்பெற முடியும். நன்றி.



ஜூட்,

தலைப்பில் இருந்து விலகி தனிப்படத் தாக்க உதேசித்துள்ளீர்கள், நன்று.


உமது உறவினர் ஒரு சைவராக இருந்தால் ,அவர்கள் மதம் மாறினால் ,அதற்கு பிரதி உபகாரமாக கூல் சகோதரர்கள், உமது உறவினருக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் படிக்க எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.இது எனக்கு தனிப்பட தெரிந்த விடயம்.

ஆகவே கூல் கட்டாயம் துணை வேந்தர் ஆவது உம் போன்றவர்களுக்கு அவசியமான ஒன்று.

அத்தோடு நீரும் ஏன் வீணா தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர் போல் எழுதி வருகிறீர்,எல்லாரும் போராட்டத்தை விட்டுப் போட்டு
எவ்வாறு அமெரிக்காவிற்கு புலம் பெயருவது எவ்வாறு என்று எழுதலாமே.

நீர் என்னைத் தனிப்பட விமர்சிக்க முயன்றுள்ளீர்.உமக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நான் சுய நலமானவன் தான்,இதில் மறைக்கவோ, மறுக்கவோ ஒன்றும் இல்லை.என்னால் குறைந்த பட்சமாகச் செய்யக் கூடியது இங்கிருந்து போராட்டத்தை முன் நடத்துபவர்களுக்காக ஆதரவாகச் செயற்படுவதும். போராட்டதிற்கு எதிராக இணயத்தில் மேற் கொள்ளப் படும் எல்லாப் பிரச்சாரங்களுக்கும் எனக்குக் கிடைக்கும் நேரத்தை உபயோகித்து பதில் கொடுப்பது.

நான் எனது மதம் என்ற ரீதியில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படவில்லை.எனது மதத்தவன் என்கின்ற படியால் போராட்டதைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒருவருக்கு ஆதராவகச் செயற்படவில்லை.ஆகவே ஒப்பீட்டளவில் உம்மை விட நான் சுய நலன் குறைந்தவன் என்றே கருதுகிறேன்.உலகில் நூறு சதவிகிதம் சுய நலம் இல்லாத மனிதர்கள் என்று என்னால் தற்கொடைப் போராளிகளை மட்டுமே கருத முடியும்.ஆகவே சுய நலம் என்பது ஒப்பீட்டிடளவிலானது.அதன் அடுத்த முனயில் உம்மையும்,கூலையும் நான் காணுகிறேன்.
Reply
narathar Wrote:நான் எனது மதம் என்ற ரீதியில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படவில்லை.எனது மதத்தவன் என்கின்ற படியால் போராட்டதைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒருவருக்கு ஆதராவகச் செயற்படவில்லை.ஆகவே ஒப்பீட்டளவில் உம்மை விட நான் சுய நலன் குறைந்தவன் என்றே கருதுகிறேன்.

நாரதரே

வழக்கம் போல தவறு செய்கிறீர்களே?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் ஹூலின் மதத்தை சேர்ந்தவர் என்று கருதி தாங்கள் இந்த மத அடிப்படையிலான தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியிருப்பது போல தெரிகிறதே. அங்கே தானே பெரும் தவறு நிகழ்கிறதே!! எனது கையெழுத்தை தாங்கள் கருத்துடன் படிப்பதே இல்லையா நாரதரே?. நாம் கேட்டதெல்லாம் நமது உறவுக்கு ஒரு வழிதான். தெரிந்தால் உதவுங்கள். தெரியாவிட்டால் விடுங்கள். மதச்சண்டையெல்லாம் என்னோடு வேண்டாம் நாரதரே. மதம் பற்றிய எனது வரலாறு தெரிந்தால் தாங்கள் திகைத்து போவீர்கள். மதத்தையை அறியாமல் பிறந்து வளர்ந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ...ம்.... உடனேயெ நான் என்னைப்பற்றி எழுதுகிறேன் என்று வழமைபோல தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒரு கேள்விதான். அவ்வளவே.
''
'' [.423]
Reply
Jude Wrote:
narathar Wrote:நான் எனது மதம் என்ற ரீதியில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படவில்லை.எனது மதத்தவன் என்கின்ற படியால் போராட்டதைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒருவருக்கு ஆதராவகச் செயற்படவில்லை.ஆகவே ஒப்பீட்டளவில் உம்மை விட நான் சுய நலன் குறைந்தவன் என்றே கருதுகிறேன்.

நாரதரே

வழக்கம் போல தவறு செய்கிறீர்களே?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் ஹூலின் மதத்தை சேர்ந்தவர் என்று கருதி தாங்கள் இந்த மத அடிப்படையிலான தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியிருப்பது போல தெரிகிறதே. அங்கே தானே பெரும் தவறு நிகழ்கிறதே!! எனது கையெழுத்தை தாங்கள் கருத்துடன் படிப்பதே இல்லையா நாரதரே?. நாம் கேட்டதெல்லாம் நமது உறவுக்கு ஒரு வழிதான். தெரிந்தால் உதவுங்கள். தெரியாவிட்டால் விடுங்கள். மதச்சண்டையெல்லாம் என்னோடு வேண்டாம் நாரதரே. மதம் பற்றிய எனது வரலாறு தெரிந்தால் தாங்கள் திகைத்து போவீர்கள். மதத்தையை அறியாமல் பிறந்து வளர்ந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ...ம்.... உடனேயெ நான் என்னைப்பற்றி எழுதுகிறேன் என்று வழமைபோல தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒரு கேள்விதான். அவ்வளவே.




கூலின் நியமனம் தமிழ் ஈழ விடுதலைப் போரைச் சிதைப் பதற்காக ஜேவிபியினால் மேற் கொள்ளப் பட்ட நியமனம் என்று எழுதி விட்டு இப்போது, நீர் கேட்கும் கேள்வியின் அர்த்தம் என்ன?
இங்கே நீர் என்ன அடிப்படயில் கூல் துணை வேந்தர் ஆக வேண்டும் என்று வாதாடுகிறீர்,தலைப்பு அது தானே? நீர் அவ்வாறெனில் ஜேவிபியின் உபாயத்திற்கு, அதாவது தேசிய விடுதலைப் போரட்டத்திற்கு எதிராக கூலின் நியமனம் நடை பெற வேண்டும் என்று வாதாடுகிறீரா?

இதில் இருந்து என்னால் யூகித்து அறிந்து கொள்ளக் கூடியது , நீர் கூலின் மதம் சார்ந்தே இங்கே விவாதிக்கிறீர் என்பதுவே,இது ஏற்கனவே உமது வாதங்களில் இருந்து தெரிவது.ஏனெனில் எப்போதெல்லாம் கூலின் மத வெறி இங்கே சுட்டிக்காட்டப் படுகிறதோ அப்போதெல்லாம் நீர் வந்து எழுதிகிறீர்.

நீர் தலைப்பில் இருந்து விலகி என்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கிய படியால் எனது நிலயை உம்மொடு ஒப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டது.அதில் பிழை இருப்பின் நீரே தெளிவு படுத்தலாமே.அதாவது உமது மதம் அல்லது உட் பிரிவு , எவ்வாறு கூலின் மதத்தில் அல்லது உட்பிரிவில் இருந்து வேறு படுகிறது என. கூலை நீர் ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்கலாமே? இங்கே முன்னுகுப் பின் முரணாக கருத்துக்களைச் சொல்லிக் கொன்டிருப்பது யார்?
Reply
ஜூட் அண்ணா உண்மையில் உங்களுக்கு இது தொடர்பான தகவல் தேவை எனில் என்னுடன் தனிமடல் மூலமாகவோ அல்லது வேறு ஒரு தலைப்பிலோ இது பற்றி விவாதிக்கலாமே எனக்கு அமெரிக்க பல்கலைக்கழக அனுமதி நடைமுறை பற்றி தெரியாது ஆனால் பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் எப்படி அனுமதி எடுப்பது என்பது பற்றி எழுத முடியும்

தனிப்பட்ட முறையில எமக்குள் சண்டை பிடிப்பது சரியில்லைதானே அது தேசியத்துக்கு எதிரானவர்களுக்கு எம்மைபலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாகும் இது உங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
narathar Wrote:நீர் தலைப்பில் இருந்து விலகி என்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கிய படியால்

எங்கே தங்களை விமரிசித்தேன்? தாங்கள் எழுதிய தகவலின் அடிப்படையில் நமது உறவினனும் தங்களைப்போல படித்து முடித்தால் அவன் குடும்பமும் வாழும், அவனும் தங்களைப்போல வாழ வழி கிடைக்கும் என்ற நப்பாசையில் ஒரு உதவி கேட்டேன். சுயநலவாதி என்று ஒத்துக்கொள்கிறீர்கள். தாங்கள் கண்ட வழியை (மதம் மாறுவது தவிர) மற்றவர்களுக்கு காட்ட மனம் வராவிட்டால் விட்டுவிடுங்கள் என்று எழுதி விட்டேனே. வேறுயாரிடமாவது கேட்டு களத்திலேயே எழுதிவிடுகிறேன். மற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் பயன்பெறுவார்கள்.

narathar Wrote:எனது நிலயை உம்மொடு ஒப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டது.அதில் பிழை இருப்பின் நீரே தெளிவு படுத்தலாமே.அதாவது உமது மதம் அல்லது உட் பிரிவு , எவ்வாறு கூலின் மதத்தில் அல்லது உட்பிரிவில் இருந்து வேறு படுகிறது என.

நாரதரே

தனிப்பட்ட தகவல்கள் வேண்டாமே என்றுதானே புனைப்பெயரிலேயே வருகிறோம்? நான் தனிப்பட்ட தகவல்களை இவ்வாறான களங்களில் கொடுப்பது வழக்கம் அல்ல. தங்கள் குழப்பத்தை தவிர்க்க ஒரு சிறிய தனிப்பட்ட தகவல் தங்களுக்கு. <b>நான் கிறிஸ்தவன் அல்ல</b>. போதுமா?

narathar Wrote:கூலை நீர் ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்கலாமே?

யார் சொன்னார்கள் நான் ஹூலின் யாழ். பல்கலைக்கழக நியமனத்தை ஆதரிக்கிறேன் என்று?. தாங்களே யான் "ஹூலின் நியமனம் ஜே.வி.பியின் விருப்பு" என்று எழுதியதை மறுபடியும், மறுபடியும் பிரசுரிக்கிறீர்கள்.

narathar Wrote:இங்கே முன்னுகுப் பின் முரணாக கருத்துக்களைச் சொல்லிக் கொன்டிருப்பது யார்?

முன்னுக்கு பின் முரணாக எழுதவில்லை நாரதரே. தங்களுக்கு அப்படி எழுதியிருப்பதாக தெரிகிறது. காரணம் தங்களை பொறுத்தவரை ஆதரவு அல்லது எதிர்ப்பு, கறுப்பு அல்லது வெள்ளை. எல்லா விடயங்களும் அப்படி அமைவதில்லை. கருத்துக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக எழுதப்பட்டன. அவ்வளவே.


நிறையவே எழுதுகிறீர்கள் நாரதரே. மக்களின் கருத்து மாற்றத்தில் பங்களிப்பு செய்து வருகிறீர்கள். ஆய்வாற்றலை நிறையவே வளர்த்துக்கொள்ளுங்கள். ஒன்று இந்த எல்லை அல்லது மற்ற எல்லை என்று எல்லா விடயங்களும் முடிந்து போக முடியாது.

உதாரணத்துக்கு இந்த ஹூல் சங்கதியையே எடுத:து கொள்ளுங்கள்.

தமிழ்க்கூடட்டமைப்பில் உள்ள சிலர் ஒரு காலத்தில் விடுதலைப்புலி போராளிகளின் சாவுக்கு காரணமாக இருந்த ஈ.பி.ஆர்.எல.எவ். காரர். இன்று தலைவரின் ஆதரவுடன் செயற்படுகிறர்ர்கள்.

ஹூல் வன்னி சென்று தலைவருடன் கதைத்து ஒரு உடன்பாட்டுக்கு வரக்கூடும். நடக்காது என்று சொல்கிறீர்களா?
ஹூல் செய்த தவறுகளை தலைவர் மன்னிக்கலாம். சுரேஷ் பிரேமச்சந்திரனையும் சேரனையும் ஜெயபாலனையும் மன்னித்த தலைவரல்லவா?

தமிழீழ விடுதலையை எடுத்து கொள்ளுங்கள். இன்றைக்கு முஸ்லிம் இராணுவம் என்று பேச்சு அடிபடுகிறது. நாளைக்கு இலங்கையின் தமிழ் இராணுவம் விடுதலைப்புலிகள் என்றும் வடகிழக்கு ஐரோப்பிய யுனியன் போன்ற இலங்கையில் ஸ்கொட்லாந்து போன்ற நாடாகவும் (தமிழீழம்) விடுதலைப்புலிகளின் ஆட்சியாகவும் என்றும் முடியலாம்.

தனிநாடு அல்லது அடிமைவாழ்வு என்றுதான் அமைய வேண்டும் என்றல்ல.
ஆகவே ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் பிரச்சினையை ஆராய பழக வேண்டும். நாரதரே. அப்போது தான் தீர்வுகள் பிறக்கும் உண்மைகள் தெரியும்.
''
'' [.423]
Reply
ஜூட்,

உமது ஆலோசனைகளுக்கு நன்றி, நீர் எழுதியவறிற்கும்,அதற்கு நான் எழுதிய பதில்களையும் வாசிப்பவர்கள் தமது புலனால் உயித்தறிந்து முடிவு எடுக்கட்டும், அதுக்குத் தானே கருத்தாடுகின்றோம்.

வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று கூறுவதற்கு நான் ஒரு ஞானி கிடயாது,அதற்காக நிகழ்காலத்தைப் பற்றி எழுதாமல் விடுவதற்கு நான் சிந்திக்கும் ஆற்றல் அற்றவனும் கிடயாது.இங்கே கருப்பு ,வெள்ளயாக நான் ஒன்றையும் வாதிடவில்லை. முடிந்தவரை தர்க்க ரீதியாகவே வாதிடுகிறேன்.அதற்கு எதிர்வாதம் நீர் தாராளமாக கண்ணியமான முறையில் செய்யலாம்.

அதை விடுத்து ,தனி நபர் தாக்குதல்களையும்,கருத்தை திசைதிருப்பும் வேறு விடயங்களை புகுத்தியும் , நேர்மயற்ற கருத்தாடல்களை இங்கே நடத்துகிறீர்.

எனது நோக்கம் தேசிய விடுதலைப் போரைப் பற்றிய தெளிவை உண்டு பண்ணுவதே. நீர் சொன்ன மாதிரி கூல் தேசிய விடுதலைப் போருக்கு ஆதரவாக தமது சொல்லாலும்,செயலாலும் செயற்படுவார் ஆகில் அவரை ஆதரிக்கத்தயங்க மாட்டேன்.எனக்கு கூலுடன் தனிப்பட்ட ரீதியில் எந்தப் பகையும் கிடயாது.

பிழை விடுவது மனித இயல்பு, ஆனால் விட்ட பிழையை ஏற்றுக் கொண்டு, சரியான பாதயில் செல்வதே, ஒருவர் திருந்தியதற்கான அறிகுறி.அதை விடுத்து பகிரங்கமாக அறிக்கை விடுவதும்,இராணுவத்தைக் கொண்டு சுவரொட்டி ஒட்டுவதும், உள் வீடு அரசியலைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து அரசியல் நியமனங்களை மேற் கொள்ளுவதும் திருந்தியதற்கான அறிகுறிகள் அல்ல.
Reply
Niththila Wrote:ஜூட் அண்ணா உண்மையில் உங்களுக்கு இது தொடர்பான தகவல் தேவை எனில் என்னுடன் தனிமடல் மூலமாகவோ அல்லது வேறு ஒரு தலைப்பிலோ இது பற்றி விவாதிக்கலாமே எனக்கு அமெரிக்க பல்கலைக்கழக அனுமதி நடைமுறை பற்றி தெரியாது ஆனால் பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் எப்படி அனுமதி எடுப்பது என்பது பற்றி எழுத முடியும்

தனிப்பட்ட முறையில எமக்குள் சண்டை பிடிப்பது சரியில்லைதானே அது தேசியத்துக்கு எதிரானவர்களுக்கு எம்மைபலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாகும் இது உங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

லோயர் நோனா, உந்த பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் எப்படி பிஸ் அண்ட் சிப் சாப்பிட வாறது எண்டு எல்லாரும் வாசிக்கக் கூடியமாதிரி எழுதுங்கோவன்.
Reply
<b><span style='font-size:30pt;line-height:100%'>ரட்ணஜீவன் கூலினால் யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பயமுறுத்தல் கடிதம் </span>
- சங்கிலியன் - Friday, 31 March 2006 12:09

[b]யாழ். பல்கலைக் கழக பதிவாளருக்கு, யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தராக ஸ்ரீலங்கா அரசுத் தலைவரினால் நியமிக்கப்பட்ட ரட்ண ஜீவன் கூல் பயமுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளபோதும், அவர் இதுவரை தனது பதவியை ஏற்கவில்லை. இந்நிலையில் கொழும்பிலிருந்த அவர் தொலை பேசியூடாக விடுத்த அறிவுறுத்தலை பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கவில்லை எனத் தெரிவித்து அப்பதிவாளருக்கு ரட்ணஜீவன் கூல் பயமுறுத்தல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். </b>

நன்றி: சங்கதி


ஜ.வி.சசி எழுதியது:

நானும் இந்த தலைப்பை வாசித்து கொண்டு வாறன் இவருக்காகவும் குரல் கொடுக்க எமக்குள்ளும் ஒரு சிலர் இருக்கினம் அதுவும் அவர்கள் எழுதுவதை வாசிக்கும் போது அவர்கள் மீது கோபமோ இல்லை எரிச்சலோ வரவில்லை மாறாக அனுதாபம் தான் ஏற்படுகிறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


எல்லா ஆடுகளும் பசியில் இருக்கும் போது ஒரு நொண்டி ஆடு மாட்டும் எதுக்கோ அழுதுச்சாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)