Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டக்ளசின் நியமனத்துக்கு யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் க
#1
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்து யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் நேற்று செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அறிக்கை:

யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ்பேசும் மக்களது மனித உரிமைகளை மீறுகின்ற சிங்களப் பேரினவாத அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் துணைபோகின்ற துணை இராணுவக் கும்பலாகிய ஈ.பி.டி.பியினர் தமிழ்பேசும் மக்களது அபிவிருத்தி குறித்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவோ அபிவிருத்தி கொள்கை வகுத்தலிலோ அல்லது நடைமுறைப்படுத்தலிலோ எவ்வகை அக்கறை கொண்டிருப்பார் என்பது யாவரும் அறிந்ததே.

சிறிலங்கா படையினரது அத்துமீறல்கள் கொடூரங்களுக்கு துணைபோவது மட்டுமன்றி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்பேசும் மக்களை வதைக்கின்ற அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றும் கைங்கரியத்திற்கு துணைபோவோர் மெய்யாகவே தமிழ்பேசும் மக்களது அபிவிருத்தியில் அக்கறை கொண்டிருப்பாரா?

சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் சமாதானம் என்னும் வெற்றுக் கோசத்தை முன்வைக்கும் அதேவேளையில் போரிற்கான முன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் பேசும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒரு பேர்வழியை தனது தேவைக்காக சிறிலங்கா பேரினவாதம் நியமித்துள்ளது.

வழமையாக ஒரு மாவட்டத்தின் பெருன்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் மூத்த உறுப்பினரே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். இதனை மீறி நடைபெற்ற இந்நியமனம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாமரம் வீசும் ஒட்டுக்குழுவினரதும் பேரினவாதத்தினரதும் கபட நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.

எனவே இந்நியமனம் தமிழ்பேசும் மக்களது இயல்பான கண்டனத்தினை பெற்றுள்ளது என்பதை தெரிவிப்பதுடன் இந்நியமனம் மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும். இல்லையேல் இதனை தடுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் தமிழ் மக்கள் போராட்டங்களில் குதித்து இக்கபடத்தை முறியடிப்பர் என்பதை தெரிவிக்கின்றோம்.

பொது அமைப்புக்களின் ஒன்றியம்
யாழ். மாவட்டம்.

நன்றி புதினம்
-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)