Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம்...
இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் இளையோர் நன்மை அடைகிறார்களா? சீரழிகிறார்களா? என்கிற பட்மன்ற விவாதத்தில் - நன்மையடைகிறார்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் மகிழ்ச்சி. சிறப்பான தமது கருத்தாடல்களின் மூலம் தீர்ப்பை நமது பக்கமாகத் திருப்பிய அனைத்து அணித் தோழர்களுக்கும் எனது நன்றிகள் + பாராட்டுக்கள். அதேபோல் எதிரணியினரின் உற்சாகமானதும், சிறப்பானதுமான கருத்தாடல்கள் தான் எம்மை வெற்றி நோக்கி உந்தித்தள்ளியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்தவகையில் எதிரணித் தோழர்களுக்கும் பாராட்டுக்கள் + நன்றிகள்.
இந்தப் பட்டிமன்றத்தை ஒருங்கமைத்து ஒழுங்கமைத்து சிறப்பாக முன்னெடுத்துச்சென்ற தோழி இரசிகைக்கும் எமதணி சார்பில் நன்றிகள். மற்றும் பட்டிமன்றத்துக்கு நடுவர்களாக இணைந்து செயலாற்றிய செல்வமுத்து ஐயா அவர்களுக்கும், தோழி தமிழினிக்கும் வாழ்த்துக்கள் + நன்றிகள்.
பட்டிமன்றம் கொஞ்சம் இழுபட்டுப் போயிருந்தாலும் கூட சுவாரசியமாகவே இருந்தது. இந்த இணையப் பட்டிமன்றத்தில் இருந்து பல அனுபவப்பாடங்களைக் கற்றிருக்கிறோம். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பட்டிமன்றங்கள் நிகழவேண்டும்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
தீர்ப்பு வந்திருக்கிறது.... அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எண்ற அவசியம் இல்லைத்தான் எண்றாலும். எங்கள் எதிரணிக்கு வாழ்த்துக்கள்..........
Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்....  hock:  hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
Thala Wrote:தீர்ப்பு வந்திருக்கிறது.... அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எண்ற அவசியம் இல்லைத்தான் எண்றாலும். எங்கள் எதிரணிக்கு வாழ்த்துக்கள்..........
Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்.... hock: hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
என்ன தல லொள்ளா நடுவர் ஒரு இடத்தில் கூறியிருந்தால் தவறாக கூறிவிட்டார் என நினைக்கலாம். அவர் எதிரணியில் வாதாடிவிட்டு கமுக்கமாக இருந்து தீர்ப்பும் கூறியிருக்கின்றார். இதுவே இணையத்தின் நன்மை(செல்வமுத்து) அவர்களுக்கு. இணையபட்டிமன்றம் என்ற படியால் எதையும் செய்துகொள்ளலாம்.
எதிரியாக இருந்தாலும் செல்வமுத்து நடுவார் சொன்ன தீர்ப்பின்படி வெற்றிபெற்ற எதிரணியினருக்கு(செல்வமுத்து உட்பட) வாழ்த்துக்கள். தலைமை ஏற்று நடத்திய இளைஞனுக்கு பாராட்டுக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>ஆகா தீர்ப்பு சொன்னாச்சா? ம்ம் ஒரு மாதிரி பட்டிமன்றத்தை முடித்து தீர்ப்பு சொன்னாச்சு,. பட்டின்மன்றத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும். வெற்றி பெற்ற அணியினருக்கு எனது வாழ்த்துக்கள். </b>
<b> .. .. !!</b>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ஆஹா - மொதல்ல நடந்த ரவுசுகள பார்த்து - பட்டிமன்றம் என்னு - ஆரம்பிக்க யாரும் முன்வர தயங்குவாங்க என்னு ஃபீல் பண்ணினேனுங்க நானு- !
ஆத்தாடி -இப்போ நடக்கிற புடுங்கலை பார்த்தா - எதிர்காலத்தில - நடுவரா வரவும்- யாரும் திங்க் பண்ணமாட்டாங்கபோல இருக்கே-!
ஏனுங்க - இதுல என்ன அம்புட்டு மானபிரச்சினைங்களாம்?
வாதிடுறதுல -ஒங்களுக்கு இருந்த டாலன்ற் என்னனு நீங்களே பார்க்க கெடச்ச ஒரு சந்தர்ப்பமா நெனச்சிட்டு போவீங்களானு பார்த்தா -ரொம்பதான் --!
மனசுக்கு சங்கடமா இருக்குதுங்க - நடத்துங்க -! 8)
-!
!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நடுவர்கள் தமது பணியை நன்றே செய்திருக்கின்றார்கள். ஓரு இடத்தில் சறுக்கி விட்டார்கள் என்றால் அதை மன்னித்து விடலாமே....இந்த கருத்துக்கள் அடுத்த முறை நடுவர்களாக வருபவர்களுக்கு ஒரு பயத்தை தோற்றுவிக்கின்றது.
நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
வர்ணன் ரமா நீங்க இருவரும் வக்காலத்து வாங்கவேண்டாம். நன்மை அணியினர் வாதாடியதுபோல நடுவரும் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்று தீர்ப்பு கூறினாரே ஒழிய தலைப்பின்படி புலம்பெயர் நாட்டில் இணையம் எமது இளைஞர்களுக்கு நன்மை செய்கின்றது என்று ஒரு உதாரணம் காட்டீனாரா? எந்த ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு சில நன்மைகளும் இருக்கும்.ஆனால் பெரும்பான்மை வீதம் நன்மையா தீமையா என்பதை பார்க்கவேண்டும்.
வக்காலத்து வாங்க வந்தனீங்கள். நடுவர்(?) எதிரணியினர் என்று பலமுறை சுட்டிக்காட்டியதை பற்றி ஏதாவது சொல்லலாமே?
இந்த முடிவு யாருக்காகவோ பட்டிமன்றம் தொடங்கும்போதே எடுக்கபட்டமுடிவுபோல் இருக்கின்றது.
தகுதியில்லாதவர்கள் பொறுப்புக்களுக்கு வரக்கூடாது என்பது எனது எண்ணம்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<b>பட்டி மன்றம் இனிதே நிறைவு பெற்று முடிவுகளும் வந்துவிட்டது. வெற்றி பெற்ற நன்மை அணியினருக்கும்,சளைக்காது தமது திறமையான வாதங்களை முன்வைத்த தீமை அணியினருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். </b>
<b>இங்கு நடைபெற்றது நட்புணர்வோடுகூடிய பட்டி மன்றம் எனும் பெயரிலான கருத்து பரிமாற்றமே. இதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்து உடனடியாக கூறமுடியாத பல விடயங்களை அவை நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம், அறிந்து கொள்ளமுடிந்தது.</b>
அதற்கப்பால் பட்டி மன்றம் எனும் தலைப்பிட்டதனால் அதன் வரையறைக்குள் நின்று அனைவரும் வாதிட்டு சிறப்பாக கருத்துக்களை வைத்திருந்தார்கள்.
இதுவே பொதுவாக ஒரு தலைப்பில் கருத்து வையுங்கள் என்றால் அது கருத்து திசைதிருப்பல்களுக்குட்பட்டு வெறெங்கோ இழுக்கப்பட்டு தலைப்பு மூடப்பட்டு கூட இருக்கலாம்.
போட்டி என்று வந்துவிட்டால் ஒரு அணி வெல்வது இயற்கை. இது துடுப்பாட்ட ரெஸ்ட் போட்டி அல்ல வெற்றி தோல்வி இன்றி முடிந்தது என அறிவிக்க.
<b>நடுவர்கள் தமது தீர்ப்பை சரியாக சீர்தூக்கி பார்த்து வைத்துள்ளார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.</b>
<b>அதில் ஒரு சொற்பிரயோகத்தை வைத்து அவர் பக்க சார்பாக நடந்துவிட்டார் எனும் வகையில் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக படவில்லை</b>.
<b>அத்துடன் இன்று ஓரணியில் இருப்பவர்கள் நாளைய பொழுதுகளில் நடக்கும் பட்டி மன்றங்களில் வேறணியில் வாதம் புரியலாம். நடுவராக இருப்பவர் வாதிடுபவராகவும், வாதிட்டவர் நடுவராகவும் இருக்கலாம். உதாரணம் சோழியன் அண்ணா போல்.
இது அனைவரையும் பயிறுவிக்கும், திறமையையும் வெளிகொணர்ந்து வளர்க்கும் ஒரு பயிற்சிகளமே. அவருக்கு தகுதியில்லை, இவருக்கு தகுதி இருக்கிறது என்று சொல்லி ஒருவரை ஒருவர் தாக்கும் இடமல்ல.
[b]தலைமை பொறுப்பில் இருப்பதும், வாதியாக இருப்பதும் , நடுவராக இருப்பதும் , வெவ்வேறு பரிமாணங்களில் ஒவ்வோருவரையும் வளர்க்க, அனுபவங்களை பெற உதவும்.
எனவே ஒருவரை ஒருவர் சீண்டும், அல்லது குற்றம் சாட்டும் பாணிகளை விடுத்து முன்னோக்கி நகர்வோம்.</b>
நன்றி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
பட்டி மன்றம் என்கின்ற வடிவம் ஒரு போட்டியாக பல்வேறு கருத்துக்களை வெளிக் கொணர்வதற்காகவும்,அது ஒரு போட்டியாக இருந்தால் விறு,விறுப்பாக இருக்கும் என்பதாலும், அதை ஒரு போட்டியாக்க இறுதியில் தீர்ப்பு என்றும், அதை வழங்க நடுவர்கள் என்றும் ஒரு கட்டுமானத்தில் ,வடிவத்தில் நடத்தப் படுகிறது.ஆனால் நடைமுறையில் எந்த விடயமுமே இவ்வாறு கறுப்பு ,வெள்ளயாக இருப்பதில்லை.
அகவே இங்கே தீர்ப்பு என்பது பட்டி மன்றத்துடன் முடிந்து போக வேண்டிய ஒன்று.இங்கு முக்கியத்துவம் பெற வேண்டியது கருத்தாளர் சொன்ன கருத்துக்களும்,அங்கே சொல்லப் பட்ட விடயங்களும்,தர்க்க ரீதியான கருத்தாடலுமே.இதை விடுத்து தீர்ப்பு எமக்கு சாதகமில்லை, நடுவர்கள் பிழை விட்டு விட்டனர் என்று புலம்புவது சிறு பிள்ளைத் தனமானது.இங்கே எவருமே வெற்றி பெறவில்லை.இங்கே வெற்றி பெற்றது யாழ்க் களமே,இங்கே அது சிந்தனையைத் தூண்டும் களமாக,ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடை பெறும் களமாக அது வெற்றி பெற்றுள்ளது.பலர் தாம் முன்னர் சிந்திக்காத ,அறியாத விடயங்களை இதன் பயனாக அறிந்து கொண்டனர்,அதுவே இங்கே யாழ்க் களத்தின் வெற்றியாகக் கணிக்கப் பட வேண்டும்.
அம்பயர் அவுட் குடுத்த பின், நான் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன் ,அந்த அவுட் அம்பயருக்கே பொருந்தும் என்று அடம்பிடிப்பது,சிறுவர்கள் ஆட்டக் களங்களில் செய்யும் செயல்,இங்கே நாம் எவரும் சிறுவர்கள் அல்ல , அம்பயர் பிழை விட்டிருக்கலாம், அது வேறு விடயம், ஆனால் விதிமுறை ,களம் என்று வரும் போது,இப்படியான விசயங்கள் நடை பெறக் கூடும்.அதற்காக சிறு பிள்ளைத் தனமாக அடம் பிடிப்பது,ஒருவரின் முதிர்ச்சியின்மையையே பிரதிபலிக்கிறது. இதை ஒரு பெரிய விடயமாக எடுத்து ,பேசுவது , நடுவர்களாக செயற்பட்டவர்களுக்கு சலிப்பையும், மன உளைச்சலையுமே தரும். இதை விடுத்து அடுத்த பட்டி மன்றத்தில் எமது கரிசனையைச் செலுத்துவது சாலச் சிறந்தது.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
இது சம்பந்தமாய் பட்டிமண்றத்தை ஆரம்பிக்காதையுங்கப்பா..! நடுவரின் பல கோணங்களில் வந்த தகவல்களில் இருந்து ஒரு தகவலை மட்டும்தான் கேட்கக் நேர்ந்தது....! அதோடு தீர்ப்பின் முடிவை நாங்கள் சரி எண்றும் சொல்லியாச்சுது....! எங்கள் எதிரணிக்கும் முடிந்தளவு வாழ்த்தும் சொல்லியாச்சு...! பிறகு என்னப்பா பிரச்சினை.
மரபு மீறப்பட்டதுதான் சுட்டிக்காட்டப்பட்டது...! இதில் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை எண்று யாரப்பா சொன்னது...???
::
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
Thala Wrote:Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்.... hock: hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
<b>என்ன சகோதரம் நீங்களுமா? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
செவமுத்து அண்ணா (நடுவர்) எதிரணியினர் என்று சொன்னதில் அப்படி என்ன தப்பு இருக்கெண்டு தெரியல.... </b>
Quote:"வாதம் செய்வது என் கடமை - அதில்
வழியை காண்பது உன் திறமை"
யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.
எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.
<b>இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....
இப்ப உங்கள் அணி கருத்து வைத்தால், அதை வாசித்து விட்டு நடுவர்கள் கருத்து வைப்பினம் தானே ... அதில் கடைசியாக சொல்வது என்ன ,? எங்கே எதிரணியினர் என்ன சொல்லப் போகினம் எண்டு பாப்பம் எண்டுதானே... அப்படி எங்கள் அணியையும் சொலிருக்கினம் உங்கள் அணியையும் சொல்லிருக்கினம்,
அதே மாதிரித்தான், கடைசியாக நடுவர் எழுதினதும் எங்கள் அணி வெற்றி பெற்றதால் எங்கள் வாதங்களையும் சொல்லி உங்கள் அணியை எதிர் அணி என்றார் இதில் என்ன தப்பு...?</b>
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
நாங்கள் தோல்விக்காக கவலைப்படவில்லை. இங்கு நடுநிலை தவறப்பட்டது என்பதைத்தான்சட்டிக்காட்டுகின்றோம்.
மற்றபடி யாருக்கும்பல்லக்கு துாக்க தயாரில்லை. பலவண்ணத்தில் எழுதினால் அவையாவும் உண்மையாகிவிடாது
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
இல்லை சகோதரம் நடுவர் என்பவர் மரபுக்கு உட்பட்டு கருத்துக்களை சீர்தூக்கி பார்த்து சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து.... அதை நியாயம் எண்றும் சொல்லலாம்... ஆனால் ஒரு இடத்தில் இருந்து ஒரு கோணத்தில் இருந்து மட்டும் பார்த்து சொல்வது நடு நிலைமை கிடையாது....!
Quote: தமிழ்மொழி:
தமிழ்மொழி வளர்ச்சியிலே இணையத்தின் பங்கு ஏராளம். பல்கலைக் கழகங்களிலே இணைய மின் நு}லகங்கள் அமைக்கப்பட்டு அங்கே இலக்கிய நு}ல் வைப்பகங்கள், கலை பண்பாட்டு ஒலி ஒளி வடிவங்கள், பாடத்திட்ட நு}ல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என சகல துறைகளிலும் ஆக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. நு}லகங்களை எரித்தாலும் இந்த நு}ல்களை அழிக்கமுடியாது. இதனால் பயனடைவது அனேகமாக இளைஞர்கள்தான். இதனை விரிவாகத் தந்தனர் நன்மை அணியினர். இணைய ஊடகம் வந்ததின் பின்னர் தமிழின் வளர்ச்சி உரம்பெற்றிருக்கிறது. முகமறியா உறவுகளின் திறமைகளை வெளிக்கொணரவும், இணையவழி நு}லாக்கம் போன்றன அமைக்கவும் ஏதுவாகின்றது.
<b>இது நடுவரின் தீர்ப்பில் வளங்கப்பட்ட கருத்துகளில் ஒண்று.....! இதில் நடுவரால் எவ்விடயங்களில் இணையத்தில் தமிழ் பாதிக்கப்படுகிறது நன்மை தீமை இரண்டையு எண்று சீர்தூக்கி பார்த்திருக்கிறாரா...??? இல்லை தீமை அணியினர் தமிழ் இணையத்தில் சீரளிகிறது எண்று சொல்லவில்லையா...???</b> :roll: :roll: :roll:
எனக்கு புரியவில்லை.....  hock:
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote]பொது:
<b>சில வேளைகளில் மாற்று அன்புக்குத்தான் அடிமையாகவேண்டும் போதை போன்ற இணையத்திற்கு அல்ல என்றும் புதிய புதிய விடயங்களிலே ஆர்வம் காட்டும் இளையோர் வேறுபட்ட, ஒவ்வாத கலாச்சாரத்தைப் பழகி இணையத்தில் உள்ள நன்மைகளை விட்டுவிட்டு தீமைகளையே நாடுவார்கள். இது இளமைக்கே உரிய குணாதிசயம் என்று கூறினர். "இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல்" என்றும் குறிப்பிட்டனர். அதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்றனர். ஒரு சடப்பொருள் எப்படிச் சீரழிக்கும்?
எதிரணியினரில் ஓரிடத்தில் 1900 புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்தான் பாவிக்கிறார்கள் என்றார் பின்னர் அதனை விடுத்து இன்னொரு பக்கத்தில் எத்தனையே இலட்சம் பாவிக்கிறார்கள் என்கிறார் இங்கே அவருடைய கருத்தே மாறுபடுகின்றது.
[b]இது எந்தக் கோணத்தில் இருந்து நடுவரால் பார்க்கப்பட்டது என்பதை யாராவது அறிஞர்கள் வந்து விளக்கினால் நல்லது...... ! </b> 8) 8) 8)
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நண்பரே நடந்துமுடிந்துவிட்ட ஒரு நிகழ்வுக்காக நாம் வாதாடுவது .முட்டாள்தனம்.ஆனால் ஒரு நெருடல் எதிரணியினர் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்ற கருத்தை வைத்து எல்லோரும் தலைப்பிலிருந்து நழுவி வாதாடினார்கள். நாங்களும் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டோம்.ஆனால் தலைப்பினை இரசிகை புலம்பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் என்ற தலைப்பை இட்டிருந்தார். எதிரணியினரால் புலம்பெயர் இளைஞர் ஏதாவது ஒரு நல்லமுயற்சியை இணையத்தில் செய்திருக்கின்றனர் என்று உதாரணம் காட்டவில்லை. நடுவரும் எதிரணியினரின் மூளைச்சலவையில் மூளை கலங்கிவிட்டார். மறப்போம் மன்னியோம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
RaMa Wrote:பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நடுவர்கள் தமது பணியை நன்றே செய்திருக்கின்றார்கள். ஓரு இடத்தில் சறுக்கி விட்டார்கள் என்றால் அதை மன்னித்து விடலாமே....இந்த கருத்துக்கள் அடுத்த முறை நடுவர்களாக வருபவர்களுக்கு ஒரு பயத்தை தோற்றுவிக்கின்றது.
நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.
நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் தீர்ப்பு பற்றி
நீதிபதிகள் பின்னர்
தமது நிலைபாடுகளை சொல்வதில்லை.
கொடுக்கப்பட்ட தீர்பை ஏற்பதோ அல்லது ஏற்காமல் விடுவதோ
அவரவர் பிரச்சனை.................
நானும் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன்.
வென்றும் இருக்கிறேன்.
தோற்றும் இருக்கிறேன்.
வெற்றியை விட தோல்விகள் அதிகம்..............
பின்னர் நடுவராகக் கூட இருந்திருக்கிறேன்.
இங்கு என்னவோ மனம் நோகும் படியான நிகழ்வுகளே தொடர்கின்றன.
யாரும் டேக் இட் ஈசி எனும் நிலையில் "இது ஒரு பொழுது போக்காய்............" எடுத்துக் கொள்ளாமை மனதுக்கு உறுத்தலாய் இருக்கிறது.
[b]இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.
இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................
வேதனைகளை உருவாக்கும்.
அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.
நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.
நன்றி.
வணக்கம்..................
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Anitha Wrote:இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....
ஆ.ஊ என்றால் நான் தான் கிடைக்கின்றனோ? :evil: :evil:
என்ன இருப்பினும், நான் தீர்ப்பு தொடர்பாக எவ்வித கருத்தையும் கூறப்போவதில்லை. ஆனால் தீர்ப்பு தொடர்பாக விவாதிப்பது மற்றுமொரு பட்டிமன்றத்தை ஆரோக்கியமாக நடத்துவதை முடக்கப்பார்க்கும்.
அடுத்த பட்டிமன்றம் வைத்தாலும் அங்கே வாதாட நான் தயார். :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
தூயவன் Wrote:ஆ.ஊ என்றால் நான் தான் கிடைக்கின்றனோ? :evil: :evil:
என்ன இருப்பினும், நான் தீர்ப்பு தொடர்பாக எவ்வித கருத்தையும் கூறப்போவதில்லை. ஆனால் தீர்ப்பு தொடர்பாக விவாதிப்பது மற்றுமொரு பட்டிமன்றத்தை ஆரோக்கியமாக நடத்துவதை முடக்கப்பார்க்கும்.
அடுத்த பட்டிமன்றம் வைத்தாலும் அங்கே வாதாட நான் தயார். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இன்னும் ஒரு நன்மையா..??? ஆரம்பீங்கப்பா ஆரம்பீங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
AJeevan Wrote:[b]இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.
இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................
வேதனைகளை உருவாக்கும்.
அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.
நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.
நன்றி.
வணக்கம்..................
அஜீவன் அண்ணா,
ஒரு சில பக்குவப்படாதவர்களினால் மற்றவர்களும் பாதிக்கப் பட வேண்டுமா?
யாழ்க் களத்தில் உபயோகமான,ஆரோக்கியமான ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றமும் ஒன்று.தோல்வியையும் ,வெற்றியையும் கையாளத் தெரியாதவர்கள் போட்டிகளில் பங்கு பற்றாமல் இருப்பது நல்லது.
யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா என்று ஒரு பட்டி மன்றம் வச்சா என்ன? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
narathar Wrote:AJeevan Wrote:<b>இனி தயவு செய்து இப்படியான பட்டி மன்றத்தையோ அல்லது இது போன்ற ஒரு நிகழ்வையோ தொடர வேண்டாம்.
இது களத்துக்குள் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி கோஸ்டி பூசல்களை .................
வேதனைகளை உருவாக்கும்.
அதற்கான பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை.
நாம் என்றும் போல் இனிமையாக இருப்போம்.
நன்றி.
வணக்கம்..................
அஜீவன் அண்ணா,
ஒரு சில பக்குவப்படாதவர்களினால் மற்றவர்களும் பாதிக்கப் பட வேண்டுமா?
யாழ்க் களத்தில் உபயோகமான,ஆரோக்கியமான ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றமும் ஒன்று.தோல்வியையும் ,வெற்றியையும் கையாளத் தெரியாதவர்கள் போட்டிகளில் பங்கு பற்றாமல் இருப்பது நல்லது.
யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா என்று ஒரு பட்டி மன்றம் வச்சா என்ன? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முதலில்
[b]பட்டி மன்றத்துக்கு நடுவர்கள் தேவையா ? இல்லையா?</b>
என்று நடுவர்கள் இல்லாமல் நடத்தி விட்டு
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பின்னர்
<b>யாழ்க் களத்தில் பட்டி மன்றங்கள் தேவையா, இல்லையா? </b>
என்று ஒரு பட்டி மன்றம் நடத்தலாம் நாரதர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|