Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாற்று
#21
அட கடவுளே நீங்கள் எல்லாம் எந்த உலகத்திலை இருக்கிறியள்.. சம்பந்தப்பட்டவையிற்றை விசயத்தை கேட்டன். படம் போட்போற நோட்டீஸ் விட்டு பல மாதங்களாகிவிட்ட நிலையில் நிகழ்ச்சிக்கு முதல்நாள் போடவேண்டாம் எண்டு ஒருத்தரும் இல்லை இது என்றை எண்டு இன்னொருத்தரும் அடிபடுகினம். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்pறர்களிடம் முன்னரே நிறுத்தச் சொல்லாது கடைசி நெரத்தில் சொன்னதன் மர்மம் எனக்கு தெரியாது. மற்றது இன்னுமொரு வியம் நம்மட படங்கள் எண்ட உடனை சனம் வந்து குவியுது தானே.. கேட்டாலே மைல் தொலைவுக்கு ஓடுறாங்கள். தங்கடை பணத்தை செலவு செலவு செய்து மற்றவையி;றை படங்கள் மற்றவையிடம் பேய் சேர வேண்டு மெண்டு நினைத்தவர்கள் ஒரு போதும் குளிர்காய்பவர்கள் இல்லை. லண்டனில் படமெடுத்த பல கலைஞர்களை அந்த மேடையில் தமது சொந்த காசில் கௌரவிhத்து அவர்களின் படங்களில் இருந்து சில பகுதிகளை போட்டுக் காட்டி நமது படைப்புகள் வெகுவிரைவில் நம்பிக்கை தரும் என்று நம்பிக்கை ஊட்டியவர்கள் எங்களுக்கு பூச்சாண்ட காட்டுபவர்கள். தேசம் பத்திரிகை தாம் ஒழுங்கு செய்த நிகழ்வில் படமாக்கிய படங்களை மக்கள் இலவசமாக பாரக்கட்டும் என நினைத்தது தவறாயிருக்கலாம். ஆனால் அன்றைய நிகழ்வில் இலவசமாக இவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொடுத்தவர்கள் முகமூடி போட்டவர்களா? காலம் பதில் சொல்லும். அன்று அதைக்காட்டி அவர்கள் பணம் உழைத்திரந்தால் உங்கள் கேழ்விகள் நியாயமானதே. ஆனால் அந்த நிகழ்ச்சியே ஈழ மக்களின் திரை வளர்ச்சி பற்றிய உரு விளம்பரமே. இதில் அஜீவன், சண், கீர்;த்தி போன்ற கலைஞர்களை 400க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்த அவர் தம் செய்ற்பாடுகளை அங்கெ வெளிக் கொணரந்தவர்கள் புலுடா விடுபவர்கள் என்றால் நான் என்ன செய்ய.. அன்று போடப்பட்ட படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அத்துடன் அதை தயாரித்த அனைத்து கலைஞர்கள் பலரை அன்றுதான் பலர் அறித்தும் கொண்டனர். இந்த அறிமுகத்தை இலவசமாக செய்தவர்கள் நிச்சயம் கோமாளிகளே... தன்னலங்க கருதாது அடுத்தவர் படைப்பும் வரவேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை குளிர் காய்வதே..

நன்றி வணக்கம்.
Reply
#22
அட கடவுளே நீங்கள் எல்லாம் எந்த உலகத்திலை இருக்கிறியள்.. சம்பந்தப்பட்டவையிற்றை விசயத்தை கேட்டன். நிகழ்ச்சியலை போட போற பட லிஸ்ட் நோட்டீஸ் விட்டு பல மாதங்களாகிவிட்ட நிலையில் நிகழ்ச்சிக்கு முதல்நாள் இருந்தால் போல ஒருத்தர் போடவேண்டாம் எண்டு தடுக்க மற்றவர் இல்லை இது என்றை எண்டு சொல்ல. காசு செலவு செய்து நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தியவர்கள் என்ன விசரரே.. நிகழ்ச்சியை விளம்பரப்படுத்pறர்களிடம் முன்னரே நிறுத்தச் சொல்லாது கடைசி நேரத்தில் சொன்னதன் மர்மம் எனக்கு தெரியாது.

மற்றது இன்னுமொரு விடயம் நம்மட படங்கள் எண்ட உடனை சனம் வந்து குவியுது தானே.. கேட்டாலே மைல் தொலைவுக்கு ஓடுறாங்கள். தங்கடை பணத்தை செலவு செலவு செய்து மற்றவையி;ன்றை படங்கள் மக்களிடம் பேய் சேர வேண்டு மெண்டு நினைத்தவர்கள் ஒரு போதும் குளிர்காய்பவர்கள் இல்லை. லண்டனில் படமெடுத்த பல கலைஞர்களை அந்த மேடையில் தமது சொந்த காசில் கௌரவிhத்து அவர்களின் படங்களில் இருந்து சில பகுதிகளை போட்டுக் காட்டி நமது படைப்புகள் வெகுவிரைவில் நம்பிக்கை தரும் என்று நம்பிக்கை ஊட்டியவர்கள் உங்களுக்கு பூச்சாண்ட காட்டுபவர்கள்.
தேசம் பத்திரிகை தாம் ஒழுங்கு செய்த நிகழ்வில் படமாக்கிய படங்களை மக்கள் இலவசமாக பாரக்கட்டும் என நினைத்தது தவறாயிருக்கலாம். ஆனால் அன்றைய நிகழ்வில் இலவசமாக இவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொடுத்தவர்கள் முகமூடி போட்டவர்களா? காலம் பதில் சொல்லும்.
இந்த படங்களை காட்டி அவர்கள் பணம் உழைத்திரந்தால் உங்கள் கேழ்விகள் நியாயமானதே. ஆனால் அந்த நிகழ்ச்சியே ஈழ மக்களின் திரை வளர்ச்சி பற்றிய விளம்பரம். இதில் அஜீவன், சண், கீர்;த்தி போன்ற கலைஞர்களை 400க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்த அவர் தம் செய்ற்பாடுகளை அங்கே வெளிக் கொணரந்தவர்கள் புலுடா விடுபவர்கள் என்றால் நான் என்ன செய்ய.. அன்று போடப்பட்ட படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அத்துடன் அதை தயாரித்த கலைஞர்கள் பலரை அன்றுதான் பலர் அறித்தும் கொண்டனர். இந்த அறிமுகத்தை இலவசமாக செய்தவர்கள் நிச்சயம் கோமாளிகளே... தன்னலங்க கருதாது அடுத்தவர் படைப்பும் வரவேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை குளிர் காய்வதே..

நன்றி வணக்கம்.
Reply
#23
ஆம்.. உங்கள் கேள்வியில் நியாயமிருப்பின்.. இதையிட்டு சந்தோசப்பட வேண்டிய ஒரு கலைஞன்.. நம் அஜீவன் ஏன் தனது கருத்தை யாழ் களத்தில் பொறிக்கவேண்டும்?
Quote:புலம் பெயர் நாடுகளில் பல இன்னலுகளுக்குள் வளரத் துடிக்கும் கலைஞர்களை மலினப்படுத்தும் ஒரு கட்டுப்பாடற்ற தன்மையோடு நடந்து கொள்ளும் நிலையில் தமது சுய விளம்பரங்களுக்காக நல்ல கலைஞர்களை அடகு வைக்கும் நிலையை இனியும் தொடர வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
.
Reply
#24
திரு அஜீவன் அவர்கள் குறிப்பிட்ட அந்த இரு படங்களும் தேசத்தின் ஆதரவில் தயாரிக்கப்படட்ட படங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டனவே தவிர தேசத்தின் தயாரிப்புகள் என்று விளம்பரப்படுத்தப்படவில்லை. உரிமை கோருவதும், அதற்கு சட்ட நடிவடிக்கை எடுப்பதும் அவர் அவர் விருப்பம். ஆனால் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு பண்ணியவர்கள் கடைசி நேரத்தில் அதை போட வேண்டாம் தடுத்தால் நிகழ்சியை ஒழுங்கு பண்ணியவர்களின் நிலைமையை யாராவது சிந்தித்தார்களா? பல மாதகாலமாக தயார்பண்ணிய நிகழ்ச்சியை இறுதி நேர்தில் மாற்றம் செய்ய முடியுமா? ஒன்று மட்டும் சொல்ல முடியும். நல்லது செய்ய நினைப்பவர்கள் எப்பொழுதம் இவ்வாறு இடை நடுவில் அகப்படுவது வழமை. ஆனால் இதை அவர்கள் ஒருபொருட்டாக எடுப்பார்களா என்பது சந்தேகமே.
Reply
#25
நிகழ்ச்சியை பல மாத காலமாகத் தயார்செய்தவர்கள்.. அதுபற்றி சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்குத் தெரிவித்து.. அந்தக் கலைஞர்கள் கடைசி நேரம்வரை மெளனித்து தடுத்தால் அது முறையற்றதுதான். ஆகவே, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அக்குறும்படங்களை திரையிடுவதுபற்றி முதலிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் முறைப்படி அனுமதி கோரினார்களா? விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்தினோம் என்றுமட்டும் கூறிவிடாதீர்கள்.
.
Reply
#26
<span style='font-size:21pt;line-height:100%'>சில விடயங்களை நான் தெளிவுபடுத்துவது பலருக்கு உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொள்ள கூடியதாக இருக்குமென்று நம்புகிறேன்.

மாற்று திரைப்படத்தை சுவிசில் திரையிட உதவுவது சம்பந்தமாக திரு.வாசுதேவன் அவர்களோடு பேசும் போது நடைபெறப் போகும் விழா பற்றியும் விழாவில் எனது குறும்படமொன்றை திரையிட விரும்புவது பற்றியும் நிகழ்சிக்கு லண்டன் வருமாரும் அழைத்தார். பின்னர் அவரை லண்டனில் சந்தித்தேன். அப்போது என்னால் நிகழ்ச்சிக்கு வர இயலாமலுள்ளது பற்றி கூறி எனது குறும்படமான நிழல்யுத்தம் குறும்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

அதன் பின்னர் கூட திரு.வாசு அவர்களோடு பேசினேன். ஆனால் அவர் திரையிட வேண்டாம் என்று கூறிய மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய குறும்படங்கள் பற்றி எதையுமே அவர் பேசவில்லை.

ஆனால் தமயந்தியின் மழை (நோர்வே) மற்றும் கனடா குறும்படமொன்று மற்றும் சில லண்டன் குறும்படங்கள் என்று மட்டுமே அவர் கூறினார். எனவே இது பற்றிய விபரங்கள் தெரியாமலே இருந்தது.

திடீரென 29ம் திகதி இரவு லண்டனில் இருந்து தொடர்பு கொண்ட கலைஞர்கள் எமது குறும்படங்கள் தேசம் வெளியீடு என்ற பெயரில் திரையிடப்பட இருப்பதாகவும் அவற்றை வெளியிடுவதைத் தடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய குறும்படங்கள் பயிற்சிப் பட்டறையின் போது பயிற்சிக்காக எடுக்கப் பட்டது மட்டுமல்லாமல் இது வெளியாருக்கு காட்டப்பட மாட்டாது என்ற கருத்தில் உருவாக்கப் பட்டாலும் மட்டை குறும்படம் திருட்டு கிரடிட் காட்கள் பற்றிய பிரச்சனைகளை மையப்படுத்தியிருப்பதால் அவை அக் கலைஞர்களை ஏற்கனவே பிரச்சனைக்குள்ளாக்கியிருந்தது. இது சம்பந்தமானவர்களுக்கு நன்கு தெரியும்.

இப் படங்கள் என்னைப் பொறுத்த வரை தரமானவை அல்ல. பரீட்சைக்கு போகுமுன் எழுதும் பரீட்சார்த்தமான வினாக்களுக்கு எழுதும் பரீட்சை போன்றதே.

என்னால் லண்டனில் இலவசமாக நடத்தப்பட்ட குறும்பட பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்தவர் (ஆதரவு தந்தவர்) என்ற முறையில் தேசம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.ஜெயபாலன் அவர்கள் வசம் மட்டுமல்ல ஏனைய பல கலைஞர்களிடமும் இதன் பிரதிகள் உள்ளன. ஆனால் இவை எவராலும் எங்குமே திரையிடப்படவில்லை.

அவர் வசமிருந்த இப்பிரதிககளே 31ம் திகதி தேசம் வெளியீடு என்ற பெயரில் திரையிட ஏற்பாடாகியிருந்தது.

நான் கேள்வியுற்றதும் 30ம் திகதி திரு.வாசு அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவற்றை திரையிட வேண்டாம் என்று கூறினேன். அவர் முதலில் சரியென்று கூறி விட்டு சிறிது நேரத்தில் தொடர்பு கொண்டு அவை தேசத்தின் தயாரிப்பு என்று திரு. ஜெயபாலன் கூறுவதாகக் கூறினார். நான் உடனே குறும்படங்களின் எழுத்தோட்டததை தயவு செய்து பாருங்கள் உண்மை விளங்கும் என்றும் நான் எழுத்து மூலம் எதிர்ப்பு கடிதத்தை அனுப்பினேன்.

ஆனால் அதையும் மீறி இக் குறும்படங்கள் திரையிடப்பட்டது வேதனையானதாகும்.

எனது குறும்படங்களை என்னால் கொடுப்பதற்கு எதுவித பிரச்சனையுமில்லை. ஆனால் வேறொருவரோடோ அல்லது ஒரு குழுவோடோ அல்லது ஒரு அமைப்போடோ நான் இணைந்து வேலை செய்த படைப்புகளை என் விருப்புகளில் திரையிடவோ கொடுக்கவோ மாட்டேன்.அப்படிச் செய்வது அநாகரீகமானது வெட்கப்பட வேண்டியதாகவே கருதுவேன்.</span>

இதோ நான் அவர்களுக்கு எழுதிய மடல் :-

<img src='http://www.yarl.com/forum/files/ayarl.jpg' border='0' alt='user posted image'>

திரு.வாசு அவர்களுக்கு
லண்டன்

ஐரோப்பிய திரைப்பட கழகத்தின் பயிற்ச்சிப் பட்டறை படைப்புகளான மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய குறும்படங்களை 31.01.2004 அன்று லண்டனில் உங்கள் அமைப்பினால் நடத்தும் திரைக்கலை விழாவில் திரையிட உள்ளதாக அறிந்து இவற்றை திரையிட வேண்டாம் என்று 30.01.2004 தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன்.

இக் குறும்படங்களைத் தயாரித்த ஐரோப்பிய திரைப்பட கழகத்தின் அல்லது இவற்றை இயக்கிய இயக்குனர்களது எழுத்து மூல அனுமதி பெறாது திரையிட இருப்பது அறிந்து வருந்துகிறேன்.

தவிரவும் இக் குறும்படங்கள் பயிற்சி பட்டறை படங்களே தவிர வெளியார் திரையிடல்களுக்கான நிலையில் உருவாக்கப் பட்ட குறும்படங்கள் அல்ல.

இக் குறும்படங்கள் ஐரோப்பிய திரைப்பட கழகத்தின் தயாரிப்பு என்பதும் இப்படைப்புகள் வேறு எவர் பெயரிலும் வெளியீடு செய்யவோ - உரிமை கொண்டாடவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தயவு செய்து இக் குறும்படங்களினால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இக் குறும்படங்களை திiயிட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

உண்மையுடன் 30.01.2004
அஜீவன்
Founder
Europe Movie Club
http://www.ajeevan.com/movieclub.html
Head Office
Switzerland
www.ajeevan.com
The official member of Swiss Movie
and
Swiss Film Federation
Reply
#27
ஆக.. மாற்று என்ற பதம் படத்தைப் பொறுத்தவரையல்ல... சிலருக்கு போர்வையாகவும் தேவைப்படுவதுபோலுள்ளதே! எதற்கும் முகமட் என்ன விளக்கத்தடன் வருகிறார் எனப் பார்ப்போம்.
.
Reply
#28
திரு.மொகமட் அவர்களது கருத்துகளுக்கு நான் பதில் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
காரணம் நீங்களே இன்னொருவரிடம் கேட்டுத்தான் கருத்துகளை முன் வைக்கிறீர்கள். உங்களுக்கும் பிரச்சனைகள் புரியாமலிருக்கிறது.

நிகழ்ச்சி நடை பெற்றது தேசம் பத்திரிகையால் அல்ல அது மாற்று படம் சம்பந்தப்பட்டவர்களால் என்பதும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று படம் சம்பந்தப் பட்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

சில தொலைக்காட்சிகள் சிலரது தயாரிப்புகளுக்கு இறுதியில் தமது தயாரிப்பு என்று டைட்டில் போடுவதை கண்டு அதை நிறுத்தியிருக்கிறேன். காரணம் அப் படைப்புகள் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருபவை. அவற்றை இங்கு ஒளிபரப்பும் போது அவர்களால் பார்க்க முடிவதில்லை. எனவே அவர்களது உழைப்பு அவர்களுக்கு தெரியாது களவாடப்படுகிறது.

இது போலவே யாழில் எழுதப்பட்ட ஒரு விடயம் , ஒருவரது கதை, இலங்கை பத்திரிகையொன்றில் இன்னொருவரது பெயரில் வெளிவந்தது. அதுவும் முடிந்து போன விடயமாகவே ஆகியது. இவை நடந்து முடிந்து விட்டதால் தடுக்க முடியவில்லை.

ஆனால் இங்கே, இறுதி நேரத்திலாகிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தேசம் பத்திரிகையாளர் நியாயமானவராக இருந்தால் அவர் இது பற்றி அக் குறும்படங்களின் இயக்குனர்களது அல்லது தயாரிப்பாளரது அனுமதியைப் பெற்று அதன் பின் கொடுத்திருக்க வேண்டும். அவர் ஆதரவு கொடுத்தார் என்பதற்காக அது அவருடயதாகாது. இங்கு அவரது பத்திரிகைகளை அனுப்பிய போதெல்லாம் நான் அவற்றை விநியோகித்துள்ளேன். இதுவும் ஒருவிதத்தில் ஆதரவுதான். அதற்காக தேசம் பத்திரிகையின் தலைப்பில் உள்ள பெயரைத் தூக்கி விட்டு எனது பெயரைப் போட நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்?

அடுத்து மாற்று குழவினர் நடத்திய விழாவுக்கு வரும் படங்களை பார்க்காமலே அது பற்றிய எதுவித விபரங்களை தெரிந்து கொள்ளாமல் கிடைத்த குறும்படங்களை ஒரு முறையாவது பார்க்காமல் இறுதி நேரத்தில் திரையிட நினைத்திருக்கிறார்கள்.

சினிமாவின் வளாச்சிக்காக துடிக்கும் இளைஞர்கள் அவர்கள் திரையிடப் போகும் குறும்படங்கள்
(1) தரமானவையா?
(2) திரையிடலுக்கு தகுதியானதா?
(3) யாருக்கான உரிமை கொண்டது
என்பவை கூட தெரியாமல் இருந்தது கவலைக்குரியது.

<span style='font-size:22pt;line-height:100%'>இதனிடையே அக் கலைஞர்களை கௌரவித்ததாக கூறுகிறீர்கள். படத்தை பார்க்காமல் எவரை கௌரவிக்க நினைத்தீர்கள்?

படத்தைக் கொண்டு வந்து தந்தவரையா? அல்லது படைப்பாளிகையா?</span>

இந்நிகழ்வை நடத்தியவர்கள் படித்தவர்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் விமர்சனங்கள் செய்து வரும் கல்விமான்கள்.

இப்படியானவை இனியும் தொடரக் கூடாது என்பதே எனது ஆதங்கம். இன்னொருவரது படைப்பை அவர்களது அனுமதியின்றி மலினப்படுத்தும் எவருமே உண்மைக் கலைஞர்களாக முடியாது.

தவிரவும் எவருக்கும் அஞ்சி வளைபவர்கள் சுயநலவாதிகளேயன்றி நேர்மையானவர்களல்ல. இவர்களால் ஒரு போதும் நிலைத்து நிற்க முடியாது.

யாரும் எழுதட்டும் இது பொது வாழ்வு சம்பந்தப்பட்ட நிகழ்வு. இங்கே நேர்மை அவசியம்.

நீங்கள் நீதிபதியானால்
தந்தை குற்றவாளிக் கூண்டில் இருந்தால் நீதி வழங்குவீர்களா அல்லது தந்தையென்பதற்காக மன்னிப்பீர்களா?

நீதி வழங்குவேன் அல்லது யாராவது நீதி வழங்கட்டும் என்று ஆசனத்தை விட்டு எழுந்து செல்வேன் என்றால் பொது வாழ்வுக்கு வரலாம்.

அல்லது வீட்டு வேலையை மட்டும் பார்ப்பது முழு சமூகத்துக்குமே சிறந்தது.
Reply
#29
சில விடயங்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.

1. வாசுதேவன் என்பர் ஈழம் நண்பர்கள் என்ற குழுவின் சாதாரண உறுப்பினர். அவரின் வேண்டுதலின் பெயரில் தான் நிழல் யுத்தம் என்ற குறுந்திரைப்படம் அங்கு போடப்பட்டது. மற்றை திரைப்படங்களை அவர் பரிந்துரைக்கவில்லை.

2. தேசம் சஞ்சிகையின் வேண்டுதலின் பெயரில் தான் மட்டை, மற்றும் எதிர்பாரப்புகள் ஆகிய குறும் படங்கள் போடப்பட்டன.

ஈழம் நண்பரகள் திரை மன்றத்தில் கிட்டத்தட்ட 50 மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதில் இருந்த இன்னுமொரு அங்கத்தவிரின் சிபாரிஸில் ஒரு கனடிய திரைப்படமும், இன்னுமொரு தென்னிந்திய உறுப்பினரின் வேண்டுகேளை அடுத்து ஒரு தென்னிந்திய குறந்திரைப் படமும் அங்கு போடப்பட்டது. நான் யாருடைய கதையையும் கேட்டு இங்கு எழுதவில்லை. நானும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பின் ஒரு அங்கத்தவன்.

தேசம் பத்திரிகை தந்த அந்தப்படங்கள் இரண்டும் ஒரு பயிற்சிப்பட்டறை படங்கள் என்ற அறிவித்தே போடப்பட்டன. இவை திரையிடப் போவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இருந்தது. கடைசி நேரத்தில் போட வேண்டாம் என்று நீங்கள் வாசுவுக்கு அனுப்பிய மடலை அவர் மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்த போதும் தேசம் சஞ்சிகையின் உறுதிமொழியை அடுத்தே இவை திரையிடப்பட்டன. நமது பிரச்சனைகளை நாம் திPர்த்துக் கொள்ளுவேம் என்ற உறுதி மொழியுடன் அவர் தான் அனுசரணை வழங்கியதுடன் அந்த பட்டறைக்கு காரணமாக இருந்தவன் என்று வாதிட்ட பின்னரே ஈழம் நண்பர்கள் அதை போட்டனர். இறுதி நேர மாற்றம் நிச்சயம் நிகழ்ச்சியை குழப்பும். அத்துடன் விளம்பரம் செய்த படங்களை போடாது மக்களை ஏமாற்றவும் முடியாது. திரையிடப்பட்ட குறும் திரைப்படத்தில் யாரும் மாற்றம் செய்ய வில்லை. ஆனால் தான் பணம் செலவு செய்து லண்டனில் நடத்திய அந்த அந்த பயிற்சிப் பட்டறை படங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது சில வேளை தேசம் சஞ்சிகையின் முட்டாளதானமான முடிவாக இருக்கலாம். ஆனால் பல இளைஞர்களின் கடும் உழைப்பில் ஒழங்கு செய்த அந்த நிகழ்வு குழும்புவதை தேசம் விரும்பவி;லலை. என்ன பிரச்சனை வந்தாலும் தான் பொறப்பேற்பதாக அவர் உறுதி செய்தததை அடுத்தே அவை திரையிடப்பட்டன.

மாற்று என்பது ஒரு படத்தின் பெயர். அதை தயாரித்தது மதுரா, மற்றும் பிரியாலயா என்ற ஸ்தாபனங்கள், அதற்கு அனுசரணை வழங்கியவர்கள் ஈழம் நண்பர்கள். ஈழம் நண்பர்கள் குழு ஈழ மக்கள் படைப்புகளை ஊக்குவிக்க இலாப நோக்கம் கருதாது செயற்படும் ஒரு ஸ்தாபனம். அதன் முதலாவது முயற்சி ஈழவர் படைப்பகளை மக்கள் முன் கொண்டு வருவது, அவர் தம் முயற்சிகளை மக்கள் முன் காட்டுவது. பல நாடுகளில் பலரும் எடுக்கும் முயற்சிகளை மக்கள் முன் காட்டுவதே அவர்களின் நோக்கம். இதற்காக மன்ற உறுப்பினர்களிடம் காசு சேர்த்தே இந்த நிகழ்ச்சியை நடாத்தினர்கள். விளம்பரம் உட்பட அதிகளவு பணத்தை செலவு செய்தவர்கள் பற்றி கவலை இல்லை காரணம் அவர்கள் வடி கட்டிய முட்டாள்கள்.

மட்டை, எதிர் பார்ப்பு ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்ட போது அது தேசத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது என்றே அங்கு அறிவிக்கப்பட்டது அவர்கள் தயாரித்ததாகவோ அல்லது அவர்கள் அயக்கியதாகவே அறிவிக்கப்படவில்லை. தரம் குறைவு திரையிட வேண்டாம் என்ற அஜீவனின் வேண்டுதல் நியாயமானதே ஆனால் இவை சந்தைபடுத்த இங்கு போடப்படவில்லை. மாறாக ஒரு பயிற்சிப்படங்களாகவே போடப்பட்டது.
இருந்தாலும் தரம் என்று பாரத்தால் கூட அன்று மட்டை குறுந்திரைக்கு மக்கள் கைதட்ட ஆதரவு செய்ததை என்ன வென்பது? இந்த படங்கள் போடப்பட்ட பின் அதில் பங்கு பற்றிய அனைவரையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டதுடன் அவர்கள் அனைவரும் நன்றி கூறப்பட்டார்கள். அன்றைய நிகழ்சி ஈழம் நண்பர்களுக்கு எந்த ஒரு ஆதயத்தையும் தேடித் தரவில்லை, மாறாக இலை மறை காயாக இருந்த பல கலைஞர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. தேசம் சஞ்சிகை அங்கே இந்த படங்களுக்காக கௌரவிக்கப்படவில்லை. மாறாக இந்த படைப்புகளை ஊக்குவிக்க அவர் செய்யும் சேவைக்காகவே கௌரவிக்கப்பட்டார். உரிமை கோரல் அல்ல இங்கு பிரச்சனை தரம்தான் பிரச்சனை என்றால், இங்கை இவை விற்பனைக்காக திரையிடப்படவில்லை, ஈழவர் கலையில் ஆர்வமுள்ள அனைத்து மக்களின் அறிவிற்காகவும், அறிமுகத்திற்காகவுமே இவை திரையிடப்பட்டன. லண்டனில் இவ்வாறான ஈழவர் திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்க கூட்டம் வருவது குறைவு. ஆனால் 400 பேரை அங்கே கொண்டு வந்து அனைவரிற்கும் நமது ஈழவர் படைப்புகள் பற்றி கஸ்டத்தை காட்டியதுடன் இனி வரும் காலத்தில் நம்மவர் படைப்புக்க ஆதரவு தர அந்த கூட்டத்தை வேண்டியது நிச்சயம் ஈழம் நண்பர்களின் குளிர் காய்தலே.

நான் எனது, உனது என்ற வேறபாடுகள் இங்கே தேவையில்லை. ஈழவர் கலை வளர நாம் படம் எடுப்பதை விட் செய்ய வேண்டிய விடயம் நிறயவே உள்ளது. அதில் முக்கியமானது இந்த கலைஞர்களை மக்களிடம் கொண்டு செல்வது. அன்று போடப்பட்ட அனைத்து படங்களும் மக்களின் வரவேற்பை பெற்றன குறுpப்பாக மட்டை மற்றும் கனடிய கறுந்திரைப்படமான ஒரு கணப்பொழுது.. இதனை தயாரித்தவர்கள் இயக்கியவர்கள் என்று அனைவரினது பெயரும் மக்களிடம் சென்றடைந்தள்ளது. மக்கள் மிகந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அன்றைய குறந்திரைப்படைப்புகளில் மக்கள் முன்னின்ற முக்கிய விடயங்கள் பல அதில் சில..
1. கனடிய குறுந்திரையில் நடித்த அந்தப் பெண்..

2. மூன்று குறுந்திரையிலும் கமராவில் தன் வல்லமையை காட்டிய அஜீவன்

3. 25 நிமிட நேரம் தனியாக ஒருவர் நடத்து சலிப்பை ஏற்படுத்தாது மக்கள் மனதில் இடம் பெற்ற ஒரு ராஜாங்கத்தின் முடிவு.

இவை அங்;கு மக்கள் மத்தியில் நாம் கேட்ட சிலவற்றின் துளிகளே. அனால் தேசம் பற்றியோ, மாற்று பற்றியோ அல்லது ஈழம் நண்பர்கள் பற்றியோ யாரும் பெரிதாக பேசவில்லை.. ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க முன் வழக்கை நன்கே விசாரிக்க வேண்டும்;. இருவருக்குள் உள்ள பிரச்னை மற்றவர்களை பாதிக்குவரை சென்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். விட்டுக் கொடுப்பது என்பது உரிமையை அல்ல உணர்வுகளை..
Reply
#30
இனியும் எனது காலத்தை இங்கு விரயம் செய்ய விரும்பவில்லை. மீண்டும் கூறுகிறென் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.. அன்புடன் நன்றி வணக்கம்.
Reply
#31
நிழல் யுத்தம் தவிர அடுத்த இரு படங்களும் (மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள்) எனது ஒளிப்பதிவில் உருவானவை அல்ல.

<span style='color:red'>எதிர்பார்ப்புகள்

கலைஞர்கள்:
சிலோன் சத்யராஜ் ( சாஜகான்)
மூ.நித்தியானந்தன்
மீனா நித்தியானந்தன்

கதைக் கரு:

மீனா நித்தியானந்தன்

ஒளிப்பதிவு:
கே.சுதாகர்
(தற்போது தீபம் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர்)

தொகுப்பு

அஜீவன்

கதை-வசனம்-நெறியாக்கம்
மு.நித்தியானந்தன்

[size=18]மட்டை

கலைஞர்கள்

கிருஸ்ணராஜ்
எஸ்.கே.மைக்கேல்
அகில்

கதை
எஸ்.கே.மைக்கேல்

இசை
கே.செந்தில்குமரன் (டென்மார்க்)

பின் குரல்
மீனா நித்தியானந்தன்

ஒளிப்பதிவு:கே.சுதாகர்
(தற்போது தீபம் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர்)

தொகுப்பு
அஜீவன்

இயக்கம்
எஸ்.வீ.ஜெயராஜ்

mohamed Wrote:2. மூன்று குறுந்திரையிலும் கமராவில் தன் வல்லமையை காட்டிய அஜீவன்

[size=16]
மட்டை மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய குறும்படங்களின் தொகுப்பு மற்றும் மேற்பார்வை மட்டுமே என்னுடையது.
ஒளிப்பதிவு:கே.சுதாகருடையது மொகமட் அவர்களே...........
(தற்போது தீபம் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர்)

இன்னும் எழுத்தோட்டத்தையே ( டைட்டலை) பார்க்கவில்லையே? அதற்குள் எப்படி நீங்கள் நீதி வழங்குவது?


ஏனைய கலைஞர்களுக்குரிய மரியாதை அவர்களுக்கு உரியதாக வேண்டும்.

mohamed Wrote:ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க முன் வழக்கை நன்கே விசாரிக்க வேண்டும்;. இருவருக்குள் உள்ள பிரச்னை மற்றவர்களை பாதிக்குவரை சென்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். விட்டுக் கொடுப்பது என்பது உரிமையை அல்ல உணர்வுகளை..

[size=18]உரிமையை இழந்தோம்
உடமையை இழந்தோம்
உணர்வையும் இழக்கலாமா?</span>

[size=15]தன்கென்று ஒரு நாள் வேதனை ஏற்படும் போது மட்டுமே அடுத்தவர் வேதனை தனக்கு புரியும்.

அதுவரை நட்புடன்
அஜீவன்
Reply
#32
Quote:இவை அங்கு மக்கள் மத்தியில் நாம் கேட்ட சிலவற்றின் துளிகளே
Reply
#33
எல்லாவற்றையும்விட இந்த மாற்று இன்னும் நல்லாயிருக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#34
mohamed Wrote:படம் போட்டது தேசம் பத்திரிகை. போடா விட்டால் ஈழவர் படைப்பை ஊக்குவிக்க மறுத்ததாக அவர் எழுதுவார். நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சி யாரும் பணம் பண்ண போடவில்லை. மாறாக ஈழவர் படைப்புகளை மக்கள் முன்னிலையஜில் கொண்டு வரவே இந்த படங்கள் போடப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

mohamed Wrote:அட கடவுளே நீங்கள் எல்லாம் எந்த உலகத்திலை இருக்கிறியள்.. சம்பந்தப்பட்டவையிற்றை விசயத்தை கேட்டன். படம் போட்போற நோட்டீஸ் விட்டு பல மாதங்களாகிவிட்ட நிலையில் நிகழ்ச்சிக்கு முதல்நாள் போடவேண்டாம் எண்டு ஒருத்தரும் இல்லை இது என்றை எண்டு இன்னொருத்தரும் அடிபடுகினம். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்pறர்களிடம் முன்னரே நிறுத்தச் சொல்லாது கடைசி நெரத்தில் சொன்னதன் மர்மம் எனக்கு தெரியாது. மற்றது இன்னுமொரு வியம் நம்மட படங்கள் எண்ட உடனை சனம் வந்து குவியுது தானே.. கேட்டாலே மைல் தொலைவுக்கு ஓடுறாங்கள்.

அப்போ 300 - 400 பேர் வந்ததாக சொல்வது உண்மையில்லையா?

[quote=mohamed]சில விடயங்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.

1. வாசுதேவன் என்பர் ஈழம் நண்பர்கள் என்ற குழுவின் சாதாரண உறுப்பினர். அவரின் வேண்டுதலின் பெயரில் தான் நிழல் யுத்தம் என்ற குறுந்திரைப்படம் அங்கு போடப்பட்டது. மற்றை திரைப்படங்களை அவர் பரிந்துரைக்கவில்லை.

2. தேசம் சஞ்சிகையின் வேண்டுதலின் பெயரில் தான் மட்டை, மற்றும் எதிர்பாரப்புகள் ஆகிய குறும் படங்கள் போடப்பட்டன.

ஈழம் நண்பரகள் திரை மன்றத்தில் கிட்டத்தட்ட 50 மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதில் இருந்த இன்னுமொரு அங்கத்தவிரின் சிபாரிஸில் ஒரு கனடிய திரைப்படமும், இன்னுமொரு தென்னிந்திய உறுப்பினரின் வேண்டுகேளை அடுத்து ஒரு தென்னிந்திய குறந்திரைப் படமும் அங்கு போடப்பட்டது. நான் யாருடைய கதையையும் கேட்டு இங்கு எழுதவில்லை. நானும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பின் ஒரு அங்கத்தவன்.
mohamed Wrote:
Quote:இவை அங்கு மக்கள் மத்தியில் நாம் கேட்ட சிலவற்றின் துளிகளே

ஒட்டு மொத்தமாக பார்த்தால் திரு.மொகமட் அவர்களும் திரு.வாசு அவர்களும் சாதாரண உறுப்பினர்கள். உங்கள் எழுத்துக்கள் ஒன்றும் பொருட்படுத்தப்பட வேண்டியவையல்ல.காரணம் திரு.வாசு அவர்கள் முன் வைத்த மடல் ஏற்றுக் கொள்ளப்படாத போது நீங்களும் அதே நிலையில்தான் இருப்பீர்கள்.

எனவே இதன் தலைமையை ஏற்று நடத்துவது யார்?
அவர்கள் ஏன் எனது மடலுக்கு பதில் கூட தராமல் இருக்கிறார்கள்?
Reply
#35
அஜீவன்! உங்களுக்கு நேரமிருந்தால் 'வேசம்' என்றொரு பத்திரிகை ஆரம்பிப்போமா?! வாருங்கள்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#36
இப்பவே வாழ்த்துக்கள்
Reply
#37
யோசித்து பார்க்க வேண்டிய விடயம். பெயர் நல்லா இருக்குது சோழியன்.

வாழ்த்துக்கும் நன்றி BBC.
Reply
#38
mohamed Wrote:சில விடயங்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.

தேசம் பத்திரிகை தந்த அந்தப்படங்கள் இரண்டும் ஒரு பயிற்சிப்பட்டறை படங்கள் என்ற அறிவித்தே போடப்பட்டன. இவை திரையிடப் போவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இருந்தது. கடைசி நேரத்தில் போட வேண்டாம் என்று நீங்கள் வாசுவுக்கு அனுப்பிய மடலை அவர் மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்த போதும் தேசம் சஞ்சிகையின் உறுதிமொழியை அடுத்தே இவை திரையிடப்பட்டன. நமது பிரச்சனைகளை நாம் திPர்த்துக் கொள்ளுவேம் என்ற உறுதி மொழியுடன் அவர் தான் அனுசரணை வழங்கியதுடன் அந்த பட்டறைக்கு காரணமாக இருந்தவன் என்று வாதிட்ட பின்னரே ஈழம் நண்பர்கள் அதை போட்டனர். இறுதி நேர மாற்றம் நிச்சயம் நிகழ்ச்சியை குழப்பும். அத்துடன் விளம்பரம் செய்த படங்களை போடாது மக்களை ஏமாற்றவும் முடியாது. திரையிடப்பட்ட குறும் திரைப்படத்தில் யாரும் மாற்றம் செய்ய வில்லை. ஆனால் தான் பணம் செலவு செய்து லண்டனில் நடத்திய அந்த அந்த பயிற்சிப் பட்டறை படங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது சில வேளை தேசம் சஞ்சிகையின் முட்டாளதானமான முடிவாக இருக்கலாம். ஆனால் பல இளைஞர்களின் கடும் உழைப்பில் ஒழங்கு செய்த அந்த நிகழ்வு குழும்புவதை தேசம் விரும்பவி;லலை. என்ன பிரச்சனை வந்தாலும் தான் பொறப்பேற்பதாக அவர் உறுதி செய்தததை அடுத்தே அவை திரையிடப்பட்டன.


மட்டை, எதிர் பார்ப்பு ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்ட போது அது தேசத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது என்றே அங்கு அறிவிக்கப்பட்டது அவர்கள் தயாரித்ததாகவோ அல்லது அவர்கள் அயக்கியதாகவே அறிவிக்கப்படவில்லை. இந்த படங்கள் போடப்பட்ட பின் அதில் பங்கு பற்றிய அனைவரையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டதுடன் அவர்கள் அனைவரும் நன்றி கூறப்பட்டார்கள். மாறாக இலை மறை காயாக இருந்த பல கலைஞர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. <span style='color:red'>தேசம் சஞ்சிகை அங்கே இந்த படங்களுக்காக கௌரவிக்கப்படவில்லை. மாறாக இந்த படைப்புகளை ஊக்குவிக்க அவர் செய்யும் சேவைக்காகவே கௌரவிக்கப்பட்டார்.

மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள்
கலைஞர்கள்
சிலோன் சத்யராஜ் ( சாஜகான்)
மூ.நித்தியானந்தன்
மீனா நித்தியானந்தன்
கே.சுதாகர்
கிருஸ்ணராஜ்
எஸ்.கே.மைக்கேல்
அகில்
எஸ்.வீ.ஜெயராஜ்

[size=18]இக் குறும்படங்களின் உரிமையாளர்களாக கருதப்படும் அனைவரும்
லண்டனைச் (London) சேர்ந்தவர்கள்.(இருவரைத் தவிர)

இவர்கள் யாரையும் அழைத்து கௌரவிக்காமல் ஆதரவு தந்தவரை கௌரவித்தது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்?</span>


[size=15]இப் பயிற்சிப் பட்டறைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் (ஒளிப்பதிவு கருவி முதல் தொகுப்புக்கான கணணி வரை சுவிசிலிருந்து எனது பணத்தில் கொண்டு வந்து ஒரு சதமேனும் வாங்காமல் 3-4 மாத காலமாக பயிற்சி பட்டறைக்கான பாடத் திட்டத்தை தயாரித்து செய்த நானே அப் படங்ளுக்கான உரிமை கொண்டாட முடியாது. காரணம் அதை உருவாக்கிய கலைஞர்களது வியர்வை அங்கே சிந்தியிருக்கிறது. அவர்கள் அனைவரும் (என்னையும் கே.செந்தில்குமரனையும் தவிர அனைவரும் லண்டனில் வாழ்பவர்கள்............
[size=24]அவர்களுக்கு கொடுக்காத கௌரவத்தை மரியாதையை ஆதரவளித்தவர் வாங்கியதும் தவறு, அவருக்கு கொடுத்ததும் தவறு..........

அத்தனை கலைஞகளும் நான்தான் அப் படங்களைக் கொடுத்ததாக எண்ணியிருக்கிறார்கள். இப்படியான மூன்றாம் தர வேலைகள் செய்து எனக்கு பழக்கமில்லை.

[size=24]புத்தகம் எழுதியவனை விட்டு விட்டு பத்தகம் வெளியிட்டவனுக்கு பரிசு கொடுத்தது போன்ற செயலே நீங்கள் செய்தது.

தவிரவும் நீங்கள் முன் வைக்கும் வினா சிறு பிள்ளைத் தனமானது.

[quote=mohamed] ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு பண்ணியவர்கள் கடைசி நேரத்தில் அதை போட வேண்டாம் தடுத்தால் நிகழ்சியை ஒழுங்கு பண்ணியவர்களின் நிலைமையை யாராவது சிந்தித்தார்களா? பல மாதகாலமாக தயார்பண்ணிய நிகழ்ச்சியை இறுதி நேர்தில் மாற்றம் செய்ய முடியுமா?

நல்லாயிருக்கு கதை. நீங்கள் விம்பரம் செய்யுமுன் யாருடைய படம் என்று தெரிந்து இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது படத்தை வாங்கு முன் அதன் விபரங்களை கேட்டு வாங்கியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நல்ல நீதி, மனுநீதிச் சோழன் கதை வேற,

ஒருவன் குற்றவாளியாக கருதப்பட்டு தூக்கு மரத்தில் தூக்கும் இறுதி நொடியில் அவன் நிரபராதி என்று தெரிந்தாலும் தண்டனையை நிறுத்துவதே நீதி.

உங்கள் நீதியோ அவன் நிரபராதியாக இருந்தாலும் தூக்கு என்பதாக இருக்கிறது. சுப்பர்????????????????

AJeevan
Reply
#39
அஜீவன்.. நலமா..? கருகப்போகுது.. கவனம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#40
அஜீவன்
நடந்தது நடந்துவிட்டது.
திரைப்படவிழாவை செய்தவர்களுக்கு இது முதல் அனுபவமாக இருக்கலாம்.
சிலவிடயங்களை கவனிக்க தவறியிருக்கலாம். இனி இப்படி நடக்காது இருக்க இது ஒரு அனுபவமாக இருக்கும்.
வளர்ந்துவரும் கலைஞர்களை தொடர்ந்து இப்படி விமர்சனம் செய்வது நல்லதாக எனக்குப்படவில்லை. எனவே இந்தவிடயத்தை இத்துடன் விட்டுவிடுங்கள்.

(இது எனது தனிப்பட்ட கருத்து)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)