Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
முகத்தார் வேலையைக் காட்டீட்டிங்கள். உதைத்தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதென்பதோ?? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
பாவம் சின்னப்பு. வந்த சின்னாச்சி ஒரு நாள் பிந்தி வந்திருக்க கூடாதா? இல்லை சின்னப்புக்கு விழுந்த பூசையையும் பார்த்திருக்கலாம்.
இந்த பாகத்தில் சிரிக்க வைத்துவிட்டீர்கள் அங்கிள். நன்றிகள்
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
பாருடா சின்னப்பு எவ்வளவு கோபமாய் இருக்கார்ணு, அப்பு உங்களுக்கும் ஒரு நேரம் வரும்தானே முகத்தாரப் போட்டுக்குடுக்க.
இப்படி அப்புக்கு உசுப்பேத்தனாத்தன் 2 போட்டுட்டு வந்து அந்த ம**ல முகத்தாற்ற திருவிளையாட்டெல்லாம் எடுத்துவுடுவார். :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆகா முகத்தார் சின்னப்புவை இப்படி போட்டு தாக்கிறீங்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த சமயத்தில் பிரித்தானியாவில் அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பார்த்த காட்சி .... (நகைச்சுவைக்காக மட்டும்)
இடம்: ஒரு சட்டதரணியின் அலுவலம்
தொலைபேசி ஒலிக்கின்றது. அலுவலகத்தின் இருப்பவர் பதிலளிக்கின்றார்
<i>போன் செய்தவர்: எனக்கு மனுசிட்ட இருந்து டிவோர்ஸ் எடுத்து தரவேணும். அதுக்கு தான் அவசரமா போன் பண்ணினான்
அலுவலகத்தில் இருப்பவர்: சரி காரணத்தை சொல்லுங்கோவன் சும்மா டிவோஸ் எடுக்க முடியுமே
போன் செய்தவர்: அதில்லை தம்பி எனக்கு இப்ப கிட்டடியிலை பிள்ள பிறந்தது. நல்ல பால் வெள்ளை ஆனா நானும் கறுப்பு என்ட மனுசியும் கறுப்பு எப்பிடி இது எண்டு மனுசியை கேட்டால் கடவுள் தந்த கொடை எண்டுறாள். நான் என்ன செய்ய சொல்லும்
அலுவலகத்தில் இருப்பவர்: உதுக்கேன் டிவொஸ் எடுக்கிறியள் ஐயா. மனுசியை அரவணைச்சு குடும்பத்த கொண்டு நடத்துற வழியை பாருங்க. ஆனான ஒண்டு அந்த கடவுளை கண்டா இருட்டடி கொடுங்கோ</i>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Mathan wrote:
ஆகா முகத்தார் சின்னப்புவை இப்படி போட்டு தாக்கிறீங்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த சமயத்தில் பிரித்தானியாவில் அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பார்த்த காட்சி .... (நகைச்சுவைக்காக மட்டும்)
<i>
இடம்: ஒரு சட்டதரணியின் அலுவலம்
தொலைபேசி ஒலிக்கின்றது. அலுவலகத்தின் இருப்பவர் பதிலளிக்கின்றார்
போன் செய்தவர்: எனக்கு மனுசிட்ட இருந்து டிவோர்ஸ் எடுத்து தரவேணும். அதுக்கு தான் அவசரமா போன் பண்ணினான்
அலுவலகத்தில் இருப்பவர்: சரி காரணத்தை சொல்லுங்கோவன் சும்மா டிவோஸ் எடுக்க முடியுமே
போன் செய்தவர்: அதில்லை தம்பி எனக்கு இப்ப கிட்டடியிலை பிள்ள பிறந்தது. நல்ல பால் வெள்ளை ஆனா நானும் கறுப்பு என்ட மனுசியும் கறுப்பு எப்பிடி இது எண்டு மனுசியை கேட்டால் கடவுள் தந்த கொடை எண்டுறாள். நான் என்ன செய்ய சொல்லும்
அலுவலகத்தில் இருப்பவர்: உதுக்கேன் டிவொஸ் எடுக்கிறியள் ஐயா. மனுசியை அரவணைச்சு குடும்பத்த கொண்டு நடத்துற வழியை பாருங்க. ஆனான ஒண்டு அந்த கடவுளை கண்டா இருட்டடி கொடுங்கோ</i>
ஆ ஆ ஆ(சாமி) மதனா இணைத்தது :roll: :roll:
<i><b> </b>
</i>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
முகத்தாரின் தொடரை படிச்சதும் அண்மையில் பார்த்தது நினைவுக்கு வந்தது. இணைப்பமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து தான் இணைச்சன். இப்ப இணைச்சிருக்க வேண்டாமோ என்று தோணுது <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i>இல்லை மதன் நகைச்சுவைக்காகத் தானே இணைத்துள்ளீர்கள். நானும் கொஞ்சம் நகைச்சுவைக்காகத்தான் கடித்தேன்.</i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு அங்கம் 19</b></span>
பொண்ணம்மா : உங்களுக்கென்ன நிம்மதியா நல்லா நீட்டி நிமிந்து கிடவுங்கோ
முகத்தார் : என்னடியப்பா சும்மா சரியக் கூட விடமாட்டியே
பொண்ணம்மா : நேற்று உங்களிட்டை என்ன சொன்னான் புதன் கிழமை கொழும்புக்கு போக வேணும் சீலன்ரை வானுக்குச் சொல்லச் சொல்லி எல்லோ
முகத்தார் : இப்ப என்னத்துக்கு திடீரெண்டு கொழும்புக்கு
பொண்ணம்மா : சரியாப் போச்;சு வயசுபோனா அறளை பேந்துபோகும் எண்டது உண்மைதான் அதுதானப்பா தம்பி ராசன் பிரான்ஸ்சிலை இருந்து வாறனெல்லோ ஏயாப்போட்டிலை போய் கூட்டியற வேண்டாமே. . . .
முகத்தார் : அவன் வரச் சொல்லி சொல்லேலையே எதாவது ஒழுங்குகள் செய்திருப்பான்
பொண்ணம்மா : அவன் சொல்லாட்டிக்கு போகப்பிடாதே 10 வருஷம் வெளியிலை இருந்து வாறவனை கூப்பிடப் போகாட்டி ஊருக்கை என்ன கதைப்பினம்
முகத்தார் : போகேக்கை இந்த உருக்கத்தை காணேலை இப்ப வருகுது அதுசரி அவனுக்கு பேசி வைச்சிருக்கிற சம்மந்தபகுதி கொழும்பிலைதானே இருக்கினம் எப்பிடியும் அவைக்குச் சொல்லியிருப்பான்
பொண்ணம்மா : லூசாப்பா நீங்க பேசித்தான் வைச்சிருக்கு இன்னும் சம்மந்தம் கலக்கேலையே அவையை போகவிட்டா ராசன் கொண்டு வாறதெல்லாத்தையும் அப்பிடியே அமத்திப் போடுவினம்
முகத்தார் : அப்ப நீர் போய் அமத்தப் போறீர் வயசுபோண நேரத்திலை ஏன் அலைச்சல் எண்டு சொல்ல வந்தன்
பொண்ணம்மா : நீங்க வராட்டி நில்லுங்கோ நான் போறன் சம்மந்தி மாணிக்கத்தாரின்ரை குணம் உங்களுக்குத் தெரியாது ஏயாப்போட்டுக்கே பெடிச்சியை கொண்டு போய்க் காட்டி அப்பிடியே வறுகிப் போடும் மனுசன்
முகத்தார் : அதுவும்சரிதான் உன்ரை தம்பியும் பெம்பிளையைக் கண்டா என்ன செய்யிறதெண்டு தெரியாது இஞ்சையே எத்தினை பிரச்சனைகள் காட்டினவன்
பொண்ணம்மா : சும்மா எதுக்கு பழசுகளை கிளறீங்கள் இப்ப அவன் வெளிநாட்டு மாப்பிளை
முகத்தார் : கொழும்பிலை போய் எங்கையப்பா தங்கிறது மாணிக்கத்தின்ரை வீட்டுக்கு போவமோ
பொண்ணம்மா : சா. . சா. . அங்கை போனா எங்கடை டிமான்ட் குறைஞ்சிடாது பேசாம ஒருநாள்தானே லொஜ்சிலை தங்குவம்
முகத்தார் : ஏதோ ஆட வெளிக்கிடுறீர் நானும் சேந்தாடவேண்டிக்கிடக்கு வானுக்கு சொல்லிப்போட்டு வாறன்
<i>(அடுத்தநாள் மாலை வான் ஒண்டு முகத்தார் வீட்டில் வந்து நிக்கிறது அதிலிருந்து ராசனும் இன்னொரு பெண்ணும் இறங்கி வருகினம்)</i>
பொண்ணம்மா : உங்கை பாருங்கோ ராசன் வாறான். அது ஆர் பக்கத்திலை மாணிக்கத்தாற்ரை பெடிச்சி சுமதி போலக் கிடக்கு
முகத்தார் : எனக்கு அப்பவே தெரியும் உன்ரை தம்பி என்ன வேலை செய்திருப்பான் எண்டு
பொண்ணம்மா : ஒரு பிளானோடைதான் மாணிக்கத்தார் பெடிச்சியையும் சேத்து அனுப்பி வைச்சிருக்கிறார்
முகத்தார் : பிளான் இல்லையடி உன்ரை தம்பின்ரை குணம் தெரிஞ்ச மனுசன்
தனிய விட்டா ஊருக்கை என்ன செய்வான் எண்டு மனுசனுக்குத் தெரிஞ்சிருக்கு
பொண்ணம்மா : இதெல்லாம் நான் இருக்கேக்கை எப்பிடி நடக்குதெண்டு பாக்கிறன்
தம்பி ராசன் எப்பிடியடா இருக்கிறாய் இப்பிடி இழைச்சுப் போட்டியே?
முகத்தார் : இந்தா போனதைவிட 2மடங்கா வந்திருக்கிறான் இழைச்சுப் போட்டான் எண்டு சொல்லுறாய்
ராசன் : எப்பிடி அக்கா இருக்கிறீயள்?? இரண்டுநாள் முன்னுக்கு வரக் கிடைச்சுது உங்களுக்கு என்னத்துக்கு கஷ்டம் எண்டுதான் நானே வந்திட்டன்
பொண்ணம்மா : வாங்கோ பிள்ளை என்ன அப்பர் தனிய அனுப்பியிருக்கிறார் சும்மா சம்மந்தம் தான் பேசியிருக்கு ஊருக்கை பாத்தா வடிவில்லைத்தானே. .
ராசன் : அக்கா என்ன இன்னும் பழைய காலத்திலையே இருக்கிறீயள் இப்பத்தைய காலத்திலை கலியாணத்துக்கு முன்னம் ஆண்ணும் பெண்ணும் பழகினால்தான் ஒருவரை ஒருவர் சரியா புரிஞ்சு கொள்ள முடியும்
முகத்தார் : அது வாஸ்தவம் தான் தம்பி ஆனா ஒருவர் ஒருவற்றை மனசை புரிஞ்சு கொள்ளுங்கோ எண்டா பெடியள் எல்லாத்தையும் எல்லோ புரிஞ்சு கொள்ள நிக்கினம்
ராசன் : இதுக்குத்தான் அக்காவை சொன்னான் ஒருக்கா உங்களையும் கூட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு வந்து அந்தக் கலாச்சாரங்களை பாக்கச் சொல்லி இது இங்கே அடைஞ்சு கிடந்து கொண்டு உலகம் விளங்காம நிக்கிறீயள்
முகத்தார் : தம்பி இப்பிடிச் சொல்லித்தான் இஞ்சையும் ஆட்கள் காதல் கலியாணம் திறம் என்;கிறவை பிறகு பாத்தால் இரண்டு மூண்டு வருஷத்திலை கவிழ்ந்து போய் கிடக்குது
பொண்ணம்மா : ராசன் நீ ஆம்பிளையடா வெளிநாட்டு பிளானிலை நாலு பெட்டையளோடை பழகிட்டு வந்தாலும் டிமாண்ட்தான் மாணிக்கத்தாருக்கு எங்கை அறிவு போட்டுது பிள்ளையை தனிய அனுப்பிறதுக்கு
முகத்தார் : இஞ்சை பாற்ரா அக்காச்சி சொல்லுற புத்திமதி வந்த பிள்ளையை வைச்சுக் கொண்டு கதைக்கிற கதையை முதலிலை பிள்ளைக்கு ஏதன் குடிக்கக் குடுமன்
பொண்ணம்மா : இல்லையப்பா பிள்ளையை நான் பேசேலை கல்யாணம் முடியாமல் இரண்டு பேரையும் பழகவிடுகிறது நம்மடை ஊருக்கு புதிசா எல்லோ கிடக்குது
ராசன் : அக்கா இஞ்சை ஊரிலை இருக்கிற ஆட்கள்தான் இன்னும் மாறமல் கிடக்கிறீயள் இப்ப வெளியிலை எங்கடையாட்கள் கலியாணம் முடிக்காமல் குடும்பம் நடத்தி பிள்ளை பிறந்தாப் பிறகே தாலிக்கட்டினம் இந்த விதத்திலை கொழும்பிலை இருக்கிற ஆட்களே மாறியிட்டினம் நீங்கள்தான். . . .
முகத்தார் : இஞ்சரும் இப்ப பெண்ணைப் பெத்தவையும் கொழும்புவாசிகள்தானே அவையே யோசிக்காமல் பிள்ளையை அனுப்பியிருக்கினம் நீர் ஏன் குதிக்கிறீர்
ராசன் : சரி அக்கா. கதையை விடு . ஒரு அட்டியல் கொண்டு வந்தனான் சுமதிக்குக் குடுப்பம் எண்டு ஒருக்கா பார்
பொண்ணம்மா : (தன்ரை கழுத்தில் வைத்து பாத்துவிட்டு) சா. . .நல்லாத்தான் இருக்கு அட்டியல்
முகத்தார் : அட்டியல் நல்லாத்தான் இருக்கு ஆனா கழுத்து வடிவில்லையே அப்பிடியே கழட்டிக் குடுத்திடம்மா. .
பொண்ணம்மா : வேண்டியும் தர மாட்டியள் ஆசைக்கு வைச்சுப்பாத்தாலும் உங்களுக்குப் பொறுக்காது
முகத்தார் : எனக்கு தெரியுமப்பா உம்மடை குணம்
ராசன் : அக்கா சரியான அலுப்பாக்கிடக்கு முதலிலை குளிச்சிட்டு வாறன் நல்ல தேத்தண்ணி ஒண்டு போட்டுத் தா பாப்பம்
<i>(சுமதியையும் கூட்டிட்டு சமையலறைக்கு போற பொண்ணம்மா )</i>
பொண்ணம்மா: பிள்ளை உமக்கும் தேத்தண்ணி போடுறன் நீரும் குளிச்சிட்டு வாருமன்
சுமதி : பாத்றூம் எங்கையன்ரி இருக்கு?
பொண்ணம்மா: பிள்ளை பாத்றூம் இல்லை கிணத்தடிதான் உந்தச் சட்டையோடையே குளியும்
சுமதி : ஜயோ என்ன அன்ரி எனக்கு பாத்றூமிலை குளிச்சுத்தான் பழக்கம் இதென்ன முத்தவெளியிலை குளிக்கச் சொல்லுறீயள்
பொண்ணம்மா: பிள்ளை முந்தி நீங்க 18வயசுமட்டும் வடலியடைப்புக்கை இருக்கேக்கை பொது கிணத்திலைதான் குளிக்கிறதெண்டு அம்மா சொன்னா இப்ப 3 வருஷம் கொழும்புக்கு போணவுடனை எல்லாம் மறந்து போச்சே அங்காலை வெறும் வளவுதான் ஒருதரும் பாக்கமாட்டினம் போய் குளியும்
<i>(சுமதி குளிக்கப் போக முகத்தாரிடம் வருகிற பொண்ணம்மா)</i>
பொண்ணம்மா: இஞ்சரப்பா இண்டைக்கு நீங்க விறாந்தேலை படுங்கோ என்ன
முகத்தார் : ஏனப்பா என்ன நடந்தது?
பொண்ணம்மா: ஒரு அறைக்கை நானும் சுமதியும் படுக்கிறம் மற்ற அறைக்கை ராசன் படுக்கட்டும் கலியாணம் முடியும் மட்டும் கண்ணுக்கை எண்ணெயை ஊத்திக் கொண்டிருக்கனுமப்பா மாணிக்கத்தாரை ? நானா எண்டு பாக்கிறன் பேசாமல் நான் சொல்லுறதைக்கேட்டு நீங்க வெளியிலை படுங்கோ என்ன
முகத்தார் : கடைசிலை படியிலை காவலுக்கு படுக்கிற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திட்டாய் சரி. . .சரி. . .
[b]முற்றும் :roll: :roll:
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<b>கள உறவுகளுக்கு வணக்கம் உங்களுடன் ஒரு நிமிடம் </b>
<b>முகத்தான் விடை பெறும் நேரம் இது . . . ஆமாங்க கடந்த 5 வருடங்களாக சவுதி பாலவனத்தில் சொந்தங்கள் நண்பர்கள் எவருமின்றி தனித்திருந்த எனக்கு யாழ் களம் ஒரு பெரிய குடும்பத்தையே அமைத்துத் தந்தது நான் இங்கு இணைந்து சரியாக 1வருடம் ஆகிறது. . .வருடத்தில் கிடைக்கும் ஒரு மாத லீவு எப்ப வரும் ஊருக்கு போக என கலண்டரை பார்த்து நாட்களை எண்ணிய எனக்கு யாழ்களத்தில் இணைந்ததின் பின் நாட்கள் போவதுகூடத் தெரியவில்லை பணம்தான் வாழ்க்கை அல்ல என்று கூறும் பொண்ஸ்சின் பேச்சை நம்பி மார்ச் 15ம் திகதியுடன் எனது ஒப்பத்த அடிப்படையிலான வேலையை முடித்துக் கொண்டு தாயகம் செல்லவுள்ளேன். . . .நிச்சயம் தாயகத்திலிருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்த விடை பெறுகிறேன். . . அதற்கு முன்னம் இங்கு நான் நகைச்சுவையாக எழுதிய கருத்துக்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் </b>
<b>நன்றி. . . .வணக்கம் . . .என்றும் உங்கள் முகத்தார்</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
வணக்கம் அங்கிள்..கனத்த இதயத்துடன் விடை தருகின்றோம்...

சென்று தயவு செய்து அங்கு இருந்து எங்களுடன் இனைந்து கொள்ளுங்கள்....
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கள் நகைச்சுவையால்...எங்களை சிரிக்க வைத்த உங்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் முகம்ஸ் இந்தத்தொடரையும் நல்லா எழுதியிருக்கிறியள்.. பொன்ஸ் பாவம் ஒரு அட்டியல் வாங்கிக்கொடுக்கிறது தானே..
எங்க போனாலும் யாழிற்கு வருவியள் என்று நம்பிறன் முகம்ஸ்
<b> .</b>
<b>
.......!</b>