Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மடிமீது!
#1
[size=18]இதயம் அனலில் வேகுதடி-
எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி!
செல்லமாய் என்னை கிள்ளு-
உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு!

சுட்டெரிக்கும் வெய்யில் கூட
மழையென்றாச்செனக்கு!
சுந்தரி நீ கள்ளி - பாரேன்
உன் உதட்டு சிவப்பில்
என் உயிர் ஒளிந்து கொண்டதடி!

நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!

ஆயிரம் பாஷை இங்காகலாம்!
உந்தன் செல்ல அதட்டல் பேச்சே-
தாய் மொழிடி எனக்கு!

ஏய்டா என்பாய் குட்டிமா-
என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே!
ஏது வாழ்வு ? அதுவல்லவோ ?
என் இருகரங்களில் -தலை சாய்த்து
குழந்தை என்றாகி நீ தூங்கு!


நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன்
தந்தையென்றாகாமலே - உன்னை
என் மழலை எண்றெண்ணி நான் மகிழ்வேன்!
இடம் ஒன்று நான் தருவேன் -
மாடப்புறாவே- என்
மடிமீது வந்து கூடு கட்டேன்!
-!
!
Reply
#2
கவிதை நன்றாக உள்ளது வர்ணன். உங்கள் மாடப்புறா மடிமீது வந்து கூடு கட்டிட்டா? :wink:
<b> .. .. !!</b>
Reply
#3
உங்கள் கவிதை அழகா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்
Reply
#4
Rasikai Wrote:கவிதை நன்றாக உள்ளது வர்ணன். உங்கள் மாடப்புறா மடிமீது வந்து கூடு கட்டிட்டா? :wink:

எல்லாரும் கவிதை எழுதிறாங்க - நானும் எழுதி பார்த்தா என்ன- எண்ட வயிதெரிச்சல்ல- ஏதோ கிறுக்கினன் - அது கவிதை- எண்டு நீங்க நினைச்சா - யஸ்ற்- கவிதையா மட்டும் பாருங்க ரசிகை -! நன்றி! 8)
-!
!
Reply
#5
iniyaval Wrote:உங்கள் கவிதை அழகா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்

முயற்சிப்பேன்!- இனியவள் 8) -நன்றி!
-!
!
Reply
#6
கவிதையா என்று தெரியவில்லை வர்ணன். ஆனால் RAP இசையினூடு பாட நன்றாக இருக்கும். பாடட்டுமா?

..
Reply
#7
sayanthan Wrote:கவிதையா என்று தெரியவில்லை வர்ணன். ஆனால் RAP இசையினூடு பாட நன்றாக இருக்கும். பாடட்டுமா?

பாடுங்க - ஆனால் ஒரு கொண்டிஷன் - நான் தான் ரம் - செற் ப்ளே பண்ணுவன் -! 8)
-!
!
Reply
#8
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நெருப்பை நீர் அணைக்கும்!  
மழையை மண் அணைக்கும்!  
நான் கொண்ட காதலை நீ அணையேன்-  
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.


Reply
#9
கவிதை நன்றாக உள்ளது வர்ணன்.
வாழ்த்துக்கள்...
Reply
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆயிரம் பாஷை இங்காகலாம்!  
உந்தன் செல்ல அதட்டல் பேச்சே-  
தாய் மொழிடி எனக்கு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆகா..அழகான வரிகள்..அதட்டல் பேச்சில அழகு பார்க்கிறீங்களே..வாழ்த்துக்கள்..தொடருங்கள்..உங்கள் கவியை யஸ்ற் கவியாகவே நாங்களும் பார்க்க முயல்கிறோம்..ஆனால் அதையும் தாண்டி ஒரு உணர்வு கவிதைக்குள் இருக்கு..அதை யஸ்ற் கவியாக பார்க்க முடியவில்லை..உயிருள்ளது போல இருக்கு..பொதுவாக உணர்வோடு எழுதப்பட்ட கவிகள் எனக்கு அப்பிடி தோணுவதுண்டு..அப்பிடி தான் இதுவும்.. :!: சொல்வதில் தப்பேதும் கண்டால் சாறி
..
....
..!
Reply
#11
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->எல்லாரும் கவிதை எழுதிறாங்க - நானும் எழுதி பார்த்தா என்ன- எண்ட வயிதெரிச்சல்ல- ஏதோ கிறுக்கினன் - அது கவிதை- எண்டு நீங்க நினைச்சா - யஸ்ற்- கவிதையா மட்டும் பாருங்க  ரசிகை -! நன்றி! 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரியுங்கோ. ஏன் அதுக்கு கோவிக்கிறீங்கோஒ நான் சும்மா பகிடிக்குத்தான் கேட்டேனுங்கோ :roll:
<b> .. .. !!</b>
Reply
#12
வர்ணன் கவிதை அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் .

Reply
#13
இளைஞன் Wrote:
Quote:நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!

நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.

நன்றி இளைஞன் - உங்களின் பாராட்டை -என் வரிகளுக்கு கிடைத்த - பெரிய கெளரவமாக கருதுகிறேன் -! 8)
-!
!
Reply
#14
தெரிந்தோ தெரியாமலோ யஸ்ற் எண்ட சொல்லை யூஸ் பண்ணிட்டன் - அதுக்காக இவ்ளோ யஸ்ற்றா?-
நன்றி ப்ரியசகி - ரசிகை- (கோவம் எல்லாம் இல்ல- இணைய தளத்தில கோவம் காட்டுறவன் கோழை -எண்ட அவ பெயர் எனக்கு வேண்டாம் சும்மா- சும்மா-எழுதினன் )-சண்முகி- ரமா! 8)
-!
!
Reply
#15
varnan Wrote:
இளைஞன் Wrote:
Quote:நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!

நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.

நன்றி இளைஞன் - உங்களின் பாராட்டை -என் வரிகளுக்கு கிடைத்த - பெரிய கெளரவமாக கருதுகிறேன் -! 8)

அப்போ நம்ம பாராட்டுக்கள்? :wink: Cry

Reply
#16
ரமா அப்பிடி இல்லை - உங்கள் பாராட்டை குறைச்சு நினைக்கல நான் - இளைஞனின் கவி திறமை இந்த களம் அறிந்தது- !
அதாலதான் - நான் எழுதியதும் நல்லா இருக்கு என்று - தலைகனம் இல்லாம அவர் சொன்ன கருத்தை - மதிச்சன் -! 8) அவ்ளோதான் !
-!
!
Reply
#17
varnan Wrote:ரமா அப்பிடி இல்லை - உங்கள் பாராட்டை குறைச்சு நினைக்கல நான் - இளைஞனின் கவி திறமை இந்த களம் அறிந்தது- !
அதாலதான் - நான் எழுதியதும் நல்லா இருக்கு என்று - தலைகனம் இல்லாம அவர் சொன்ன கருத்தை - மதிச்சன் -! 8) அவ்ளோதான் !

வர்ணன் நானும் பகிடிக்கு தான் அப்படி சொன்னேன். ஆமா இளைஞனைப்போல் உள்ளவர்கள் நாங்கள் எழுதும் கவிதைகளை பாராட்டுவதிலும் பார்க்க பிழைகளை சுட்டிக்காட்டினால் தான் எமக்கும் உதவியாக இருக்கும். சும்மா நகைச்சுவைக்காக தான் அப்படி சொன்னேன். தப்பாய் நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

Reply
#18
வரணன் இன்றுதான் இந்தக் கவிதை வாசித்தேன்.நல்ல கவிதை.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!


இந்த வரிகள் எனக்கும் பிடிச்சு இருக்கு.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வர்ணன்...
Reply
#20
நன்றி சினேகிதி & ஜெனனி 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)