Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாநிதியின் சந்தர்ப்பவாதக் கூச்சல்
#1
விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல்

[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.


தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார்.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதை பிரதான கட்சிகளான கருணாநிதியின் தி.மு.க.வும் ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க.வும் தங்களது பேச்சுக்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக வைகோவை பொடா சட்டத்தில் சிறையிலடைத்த அண்ணா தி.மு.க.வின் சார்பில் இப்போது பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

செஞ்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசியதாவது:

கர்நாடக மாநில புதிய முதல்வர் சொல்கிறார்..தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலை ஆந்திராவிற்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை ஆந்திராவிற்கும் வேண்டாம். தமிழ்நாட்டிற்கும் வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆந்திராவில் நக்சலைட்கள் இருக்கிறார்கள், ஆகவே அந்தத் தொழிற்சாலையை கர்நாடகத்திற்குத் தாருங்கள். இங்கே அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார் என்றால், இதைப் பற்றி தமிழ்நாட்டு முதலமைச்சர் வாய் திறந்திருக்கிறாரா?

இங்கே விடுதலைப் புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்க வேண்டாமா?

விடுதலைப் புலிகள் எப்போதே இருந்தார்கள், இப்போது இல்லை என்று சொல்ல வேண்டாமா முதலமைச்சர். அதிகாரபூர்வமாக பதிலளிக்க வேண்டாமா?

சொன்னவர் சாதாரணமானவர் அல்லவே!

பக்கத்து மாநில முதலமைச்சர் அல்லவா? புதிய முதலமைச்சர் தமிழ்நாட்டிலே விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆகவே, அந்தத் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்திற்குத் தாருங்கள் என்று கேட்கிறார்.

அதை மறுத்துப் பேச தமிழக முதல்வருக்கு முடியவில்லை.

ஏன் விடுதலைப் புலிகள் என்றால் உங்களுக்குப் பயமா?. இந்த அம்மையாருக்குத்தான் பயமே கிடையாதே!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் விடுதலைப் புலிகளையெல்லாம் விரட்டியே தீருவேன். விடுதலைப் புலிகள் துரோகிகள், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எள்ளளவு இடமும் தரமாட்டேன் என்று நீட்டி முழக்கிய இந்த வீராங்கனை ஏன் இப்போது கர்நாடக முதல்வரின் கூற்றுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார். அப்படி ஒன்றும் விடுதலைப் புலிகள் இங்கேயில்லை, அவர்களால் தொழில் வளருவது ஒன்றும் கெடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? என்றார் கருணாநிதி.
Reply
#2
வைகோ போய்விடுவார் எண்ற ஏக்கத்தில பேசுறார் போலகிடக்கு......!
::
Reply
#3
இந்த செய்தி வந்தது http://www.eelampage.com/?cn=24203 , யாரேல்லாம் நம்ம்கு புத்தி சொல்றாங்க !! கொடுமைடா சாமி
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
Reply
#4
அப்படி என்ன புத்தியை அந்த செய்தி சொல்லீட்டுது....??? ஓ கருணாநிதி சொன்ன புத்தியா...??? அவரை யார் மதிக்கிறார்கள்.....???
::
Reply
#5
ஐயா கருணாநிதியே!

நீங்கள், குடும்பத்திற்காக ஆடிவரும் அரசியல் நாடகத்திற்கு எம் வாழ்விற்கான போராட்டம்தான் கிடைத்ததா?? பல வருடங்களின் பின் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் வரும் சூழ்நிலைகளை மீண்டும் சிதைப்பதற்காகவா உந்த ஊளைகள்??

மக்கள் மத்தியில் அஞ்ஞாதாவசத்திலிருக்கும் உங்கள் மகனை முதல்வராக்குவதற்கு என்ன என்ன நாடகமெல்லாம் ஆடவேண்டியிருக்கிறது!! வெட்கக்கேடு!! உங்களுக்கு, வைகோவை தூக்கியெறியும் போது புரியவில்லையா உனக்கு, அவரின் பலம்??

தயவுசெய்து ஈழத்தமிழரின் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை, உங்கள் மூன்றாம்தர குடும்ப அரசிலுக்கு பலியாக்காதீர்கள்!!
Reply
#6
கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து என்ற இணைய தளம் சமீபத்தில் தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வருவார்கள் என்று கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் வைகோவுக்குத்தான் அடுத்த முதலமைச்சர் என்ற முறையில் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

மு.க.ஸ்டாலினுக்கு 10 விழுக்காடுதான் கிடைத்துள்ளது.

http://www.eelampage.com/?cn=24201
Reply
#7
ஹா... ஹா..... உங்கள் ஓலம் தான் அதிகமாக கேட்கிறது......
,
......
Reply
#8
<img src='http://img123.imageshack.us/img123/3475/140220060040090gk.jpg' border='0' alt='user posted image'> ஒரு குடும்பமே தொகுதியை பங்கிட்டுக்கொள்ளுது பகல் கொள்ளை அடிக்கிறதுக்கு.........
Reply
#9
Luckyluke Wrote:ஹா... ஹா..... உங்கள் ஓலம் தான் அதிகமாக கேட்கிறது......



அதுக்கு ஏன் நீங்கள் ஊளை இடுகிறிர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#10
இந்திய உளவுத்துறை செய்யும் கொலைப்பட்டிலையும் போட்டீர்கள் என்றால் இன்னும் கண்ணீர் வரும்

மூக்குடைபட்டும் திருந்தவில்லை இந்த இந்திய பத்திரிகைகளும் இந்நிய உளவுத்துறையும் திரும்பவும் திரும்பவும் மூக்குடை பட நிக்கிறது இவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வோண்டும்
Reply
#11
யாரை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்? ஏற்கனவே சிலரை நிர்க்கதியாய் விட்டு வைத்திருக்கிறார்.......
,
......
Reply
#12
Luckyluke Wrote:ஹா... ஹா..... உங்கள் ஓலம் தான் அதிகமாக கேட்கிறது......



[/quote]

உங்களைப் போல அடிவாங்குகின்ற நேரத்தில் எல்லாம் வாயைப் பொத்திக் கொண்டு அழுவது எல்லாம் எமக்கு சரி வராது கண்ணா! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#13
Luckyluke Wrote:யாரை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்? ஏற்கனவே சிலரை நிர்க்கதியாய் விட்டு வைத்திருக்கிறார்.......

யாரை உங்களைப் போன்றவர்களையா
பாவம் செய்தவர்களை கண்டு கெள்வதில்லை
Reply
#14
நாங்களா நாடில்லாமல், வீடில்லாமல் திரிந்து கொண்டிருக்கிறோம்.... வாய் மட்டும் அடங்காதே உங்களுக்கெல்லாம்......
,
......
Reply
#15
எதுக்கும் ஒருக்கால் யாழ்ப்பாணம் அல்லது வன்னிக்கு சென்று பாருங்கள் அதன் பின்பு கருத்தை வையுங்கள் (செல்வது கடினமாக இருந்தால் இலங்கைக்கு வாருங்கள் அங்கிருந்து நான் கூட்டிச் செல்கின்றேன்)
Reply
#16
Luckyluke Wrote:நாங்களா நாடில்லாமல், வீடில்லாமல் திரிந்து கொண்டிருக்கிறோம்.... வாய் மட்டும் அடங்காதே உங்களுக்கெல்லாம்......

அப்படி எல்லாம் இருக்கு எண்டா எதுக்காக வேறு நாடுகளில போய் plate கழுவுறீங்க :roll: :roll: :roll: :roll:
. .
.
Reply
#17
இந்த்க் கருணாநிதிக்கு, தேர்தல் வருவதென்றால் மட்டும் வைகோ கண்ணில் தெரியும்!! மற்றும்படி அவருடைய குடும்ப அரசியல்வாதிகளுக்கும், குடும்ப ஊடகங்களுக்கும் வைகோவை தெரியவே தெரியாது!

இன்று மீண்டும் அதிமுக வின் செல்வாக்கு அதிகரித்துள்ள போதுதான், வைகோவை விட்டால் கதை கந்தல் என்று நினைத்து விட்டார் போல!!

இன்று வைகோவை வைத்திருப்பதற்காக எப்படி எப்படியெல்லாம் ஊளையிடலாமோ, அப்படியெல்லாம் ஊளையிட தொடங்கி விட்டார்! அதன் ஒரு வெளிப்பாடே இதெல்லாம்!!!
Reply
#18
வைகோவுக்கே 13 வருடங்களாக தமிழ் மக்கள் ஆப்படித்து வருகிறார்கள்....

இவரை நம்பி ஜெயாவும், கருணாநிதியும் இருக்கிறார்கள் என்றால் நகைச்சுவையாக இருக்கிறது....

சுப்பிரமணிய சாமியை விட வைகோவுக்கு கொஞ்சம் ஆதரவு உண்டு... அவ்வளவு தான்... இல்லாவிட்டால் சென்ற தேர்தலில் 200 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பாரா என்ன?
,
......
Reply
#19
வைகோவை எங்கே ஜெயலலிதா தன்பக்கம் இழுத்துவிடுவார் என்கிற அச்சத்தினால், பழைய சம்பவங்களை கருணாநிதி தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாநிதி, வைகோவுக்கு எப்படியும் அதிகளவு ஆசனங்களை கொடுக்கப் போவதில்லை. அதேவேளை வைகோவை ஜெயலலிதா பக்கம் செல்ல விடாமல் தனது வார்த்தை ஜாலங்கள், நினைவாற்றல் சக்தி(!?) ஆகியவற்றினூடாக தடுக்க முனைகிறார்.

கருணாநிதி அரசியலில் சாதித்தது எனில், அவருடைய குடும்பத்தையும், சொத்தையும் சேகரித்ததுதான். கட்சிக்காக உழைத்தவர்களை கருணாநிதி தூக்கி வைத்ததில்லை. மாறாக தூக்கியெறிந்திருக்கிறார். இதில் வைகோ உட்பட பலர் அடங்குகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் அண்மையில் ஜெயலலிதா கேபிள் டிவி உரிமையை அரசு உடமையாக்க போவதாக அறிவித்தார்.

வெள்ள நிவாரணத்துக்கு நிதி கொடுக்க செல்லாத கருணாநிதி, தனது குடும்ப தொலைக்காட்சியான சண் டிவிக்கு ஆபத்துவந்துவிட்டதனை அறிந்து ஆளுநரிடம் மனு கொடுக்க சென்றிருக்கிறார்.

இதிலிருந்தே நீங்கள் எல்லோரும் கருணாநிதியை புரிந்துகொள்ளுங்கள்.

முன்னர் இதே கருத்துக்களம் பகுதியில் கூறியதனை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் ஜெயலலிதாவுக்கு வக்காளத்து வாங்க இங்கே வரவில்லை.

புலிகளை எதிர்க்கிறேன் அல்லது ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியும், கூறிவருகிறார். ஆனால் இந்த கருணாநிதி தன்னையும் குழப்பி மக்களையும் குழப்பி அறிக்கை விடுகிறார்.

இவருடைய அறிக்கை வேண்டுமெனில், தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றலாம். ஆனால் ஈழத் தமிழர்களை ஏமாற்ற முடியாது. இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

வைகோ, ஜெயலலிதா கட்சியிலிருந்தாலும் சரி, இந்திரா காங்கிரசிலிருந்தாலும் சரி தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காதவர். ஆகவே அவர் தமிழ்நாட்டில் தனது இருப்பை உறுதிப்படுத்த ஜெயலலிதாவின் அழைப்பையேற்று அவருடன் இணைந்து தேர்தலில் நின்றால் அவரது கெளரவம் காப்பாற்றப்படும். இல்லையேல் கருணாநிதி மீண்டுமொரு தடவை வைகோவை புதைகுழிக்கே அனுப்புவார். அல்லது அழித்துவிடுவார்.

இதில் இன்னொரு விடயம் குறிப்பிட்டாக வேண்டும்.

நீண்டகாலத்துக்குப்பின்னர் ஈழப்பிரச்சனை தமிழக தேர்தல் களங்களில் சூடுபிடித்திருப்பதுதான். ஆக, விடுதலைப் புலிகள் விவகாரம் தமிழ்நாட்டிலும் அரசியலாகிவிட்டது.
S.Nirmalan
Reply
#20
கூலிகள்/அடிமைகளுக்கு உலகிற்கு வரவிலக்கணமானவர்கள் நீங்களே!! உங்களுக்கெங்கே புரியப் போகிரது அகதி என்ரால் என்னவென்று??

உலகில் முதல் அகதியான யூதனே, இன்று உலகையையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக வந்துள்ளான்!! நாளை ஈழத்தமிழனும் .... உலகையையே ஆழ்வோம்!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)