Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்'
#1
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்'
தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினரின் செயல்களும், நடந்து கொள்ளும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பல தேர்தல் கூட்டங்களில் வேட்டி உருவுதல், சட்டையை கிழித்தல் போன்றவை நடக்கும்.

இவை காங்கிரஸ் கட்சியில் தான் அதிகமாக இருக்கும். இன்னும் காங்கிரசில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காத நிலையில், தி.மு.க., உடன்பிறப்புகள் வேட்டி உருவும் "திருவிழாவுக்கு' பிள்ளையார் சுழி போட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மெண்ட் பகுதியில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததையடுத்து, உள்ளூர் உடன் பிறப்புக்களே பேசி முடித்தனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்டோன்மென்ட் தி.மு.க., நகர செயலர் பாபு. இக்கூட்டத்தை முன்னிட்டு ஆங்காங்கே தெருக்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அந்த போஸ்டரில் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி மோகன் பெயர் இல்லை. பொதுக்கூட்டம் முடிக்கும் நேரம் மோகனின் ஆதாரவாளர்கள் அங்கு வந்தனர்.போஸ்டரில் எங்கள் தலைவர் (மோகன்) பெயரை ஏன் சேர்க்கவில்லை என ஆத்திரப்பட்டனர். அதற்குள் பாபுவின் ஆதாரவாளர்கள் ஒன்று கூடினர். வாய் பேச்சு ஓடிக் கொண்டிருந்த நேரம், கூட்டத்தில் இருந்த ஒரு "உடன்பிறப்பு' அங்கிருந்த எதிர் கோஷ்டி உடன்பிறப்பின் வேட்டியை இழுக்க... ஆரம்பமானது "வேட்டி உருவும் திருவிழா'.பாதுகாப்பிற்காக வந்த போலீஸ் "இதென்னடா வம்பா போச்சே' என்று ஓடிச் சென்று இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். பின்னர் அவரவருக்கு கிடைத்த வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு துண்டை உதறித் தோளில் போட்டு கிளம்பினர்.



தினமலர் இணையத்திலிருந்து உருவிய செய்தி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)