Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து'
#1
<b>வீட்டிலிருந்து உலகம் வரை சகல பூசல்களையும் தீர்க்கும் `அருமருந்து'

சி. வையாபுரி

ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளில் ஒன்றாய் நலிந்து கிடந்த இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது பற்றி நடந்த இங்கிலாந்து பாராளுமன்ற விவாதம் ஒன்றில் பேசிய வான்டர்டன் பிரபு காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

காந்தியத்தில் பற்றுக் கொண்டிருந்த அகதா ஆரிசன் என்பார், இங்கிலாந்திலிருந்து காந்திக்குக் கடிதம் மூலம் இதை விபரித்திருந்தார். `என் கருத்திலும் செயலிலும் அசைக்க இயலாத உறுதியுடன் நான் இருக்கின்றபோது, என்னைப்பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ யார் எங்கு பேசினால் என்ன?' என்று இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் அகதாவுக்கு எழுதிய பதிலில் தெரிவித்துள்ளார் காந்தியடிகள்.

பெருங்குணங்கள் பலவற்றையும் தம்முள் தொகுத்துக் கொண்டு, உயர்ந்த சான்றாண்மையுடன் திகழ்ந்த அவர், நாடு விடுதலை அடைந்த நாளில்கூட நூற்பு வேள்வியில்தான் இருந்தார். பள்ளிப் பாடங்களிலும் பட்டிமன்றங்களிலும் கடவுள் வாழ்த்துகளிலும் உரக்கப் பாடப்படுகிற திருக்குறள் வழியில் மனிதர்களைத் தேடினால், குறளின் மறுபதிப்பாக மகாத்மா காந்தி மட்டுமே, உலகு அறிந்த ஒரே மனிதராய் விளங்குகிறார்.

கடவுள் இல்லை என்கிற கொள்கையில் உறுதியாய் வாழ்ந்த ` கோரா' என்கிற ஆந்திர கோ. ராமச்சந்திர ராவ் காந்தியின் மீது அளவற்ற பற்றுதல் கொண்டிருந்தவர்.

கடவுள் உண்டு என்று வாழ்ந்த காந்திக்கு பல முறை கடிதம் எழுதி, அவரது கடவுள் நம்பிக்கையை விஞ்ஞானபூர்வமாய் விளக்குமாறு கேட்டு வந்தார்.

பல கடிதங்களுக்கும் பதில் கூறாமைக்குக் காரணம், கடவுள் மறுப்புப் பற்றிய கோராவின் கருத்துகளை விமர்சிக்கின்ற அளவுக்குத் தம்மிடம் போதுமான அறிவுத் தெளிவு இல்லாததுதான் என்று சொல்லி, தண்டி யாத்திரைக்குச் செல்லும்போது, தம்மோடு கலந்து கொள்ள வந்தால் இருவரும் விரிவாக விவாதிக்கப் போதுமான நேரம் கிடைக்கும் என்று அவருக்கு எழுதினார். ஆனால் என்ன சொன்னாலும் எத்தனை விளக்கங்கள் வந்தாலும் கடவுள் உண்டு என்று தமது அடிமனத்தில் பதிந்துவிட்ட அந்த நம்பிக்கையை உலகின் எந்த சக்தியாலும், மாற்றிவிட இயலாது என்று தம்முள் உறுதி கொண்டிருந்தார் காந்தியடிகள்.

கோராவும் காந்தி ஆசிரமத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டார்.

நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால் மக்களுக்கு உணவும் உடையும் கடும் பற்றாக்குறை என்பது உணரப்பட்டது. எல்லோருக்கும் பகிர்மானம் செய்வதை உறுதி செய்வதென்றால் இவ்விரண்டுக்கும் கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்று உடனடித் தேவையானது.

டில்லியிலிருந்த நூல் மற்றும் துணி வியாபாரிகள் காந்தியிடம் இந்தக் கட்டுப்பாடு, அரசு எண்ணுகிற பலனை நிச்சயம் தராது என்று வாதிட்டனர். தானியம் மற்றும் துணிக் கட்டுப்பாடுகள் ( இˆ‡கூகீˆஃ) சுதந்திர நாட்டிற்கு ஒவ்வாத நடவடிக்கை என்றாலும், வியாபாரிகளிடம் நம்பிக்கை வைக்க இயலாத அச்சத்தின் அடையாளமே இந்தச் சட்டம் என்று அரசின் நிலையை ஒப்புக்கொண்ட கையோடு, சாதாரண ஒரு தொழிலாளியைக் காட்டிலும் அதிக வருமானத்தை ஏன் விரும்ப வேண்டும் என்று அவர்களிடமே வினவினார் காந்தி! ஐயத்திற்கு அப்பாற்பட்டதான நடத்தைகள் வியாபாரிகளிடம் வரும்வரை, கட்டுப்பாடுகளைத் தவிர்க்க இயலாது என்றும் கூறி விட்டார்.

அறிவுத்திறம் நிரம்பப் பெறாத சுயநலவாதிகளால், மதக் கலவரம் வெடித்தது. பாதிக்கப்பட்ட இந்து, முஸ்லிம் அகதிகளைப் பராமரிக்கும் ஒரு முகாமில் சேவை செய்து வந்த சுபத்ரா குப்தா தம்மைச் சந்தித்தபோது, அவரோடு சேவையில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடம்பர உடைத் தோற்றத்தைக் கடுமையாக விமர்சித்தார் காந்தி. தோற்றத்திலும் செயலிலும் எளிமையும் உண்மையும் இருந்தாலொழிய, எந்தச் சேவையும் எவரிடத்திலும் பலன் தராது என்று கண்டித்தார்.

தம்மைப் பின்தொடர்வோர், மக்கள் நேசிக்கும்படியான எளிமையும் உழைக்கும் திறமையும் கொண்டவர்களாய், நம்பும்படியான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாய் வாழ்தல் வேண்டும் என்று அவர்தம் இலக்கணத்தை வரையறை செய்து தந்தார்.

ஆண் - பெண் பாகுபாட்டை அவர் ஏற்றதில்லை, ஆயினும் பெண்கள் என்றால் அவர்களுக்கு முன்னுரிமையே பொருத்தமானது என்பது அவரின் முடிவு.

சாதி - மதங்களை அவர் வெறுத்ததில்லை. ஆனால், தீண்டாமை ஒன்றை மட்டும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது தீயை விடவும் கொடியது என்றே சாடி வந்துள்ளார்.

சுதந்திரம் அடைந்த மறுகணமே அனைத்துப் பள்ளி விடுதிகளையும் ஹரிஜனப் பிள்ளைகளுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்று அறுதியிட்டுச் சொன்னார்.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனி ஒதுக்கீடுகள் கோருவதையும் அதை ஒரு சட்டமாக்குவதையும் அவர் ஏற்கவில்லை. ஒரு சகோதரனை ஏன் சட்டப்படியும் விலக்கி வைக்க வேண்டும் என்பதுவே அவரது கேள்வியாக இருந்தது. அப்படிப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டம் இல்லாமல் - அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தரும் கடமை கட்டாயமாக நிறைவேற்றப்பட்டிருக்குமானால், இன்றளவும் தீண்டாமை நீடித்திருக்காது.

காந்தி பற்றி ஒரு வரி சொல் என்று என் பேத்தியைத் கேட்டேன்; அவரது எளிமை என்றாள். பேரனைக் கேட்டேன்; அவர் செய்த தொண்டு என்றான். பக்கத்திலிருந்த இளைஞன் ஒருவனைக் கேட்டேன்; அவர் கடைப்பிடித்த ஒழுக்கம் என்றான். என் மனைவியைக் கேட்டேன்; அவரது புலனடக்கம் என்றாள். மொத்தத்தையும் கூட்டிப் பார்த்தேன். காந்தியம் வீட்டிலிருந்து உலகம் வரையிலும் உள்ள பூசல்களையும் மோதல்களையும் அகற்றும் தீர்வுக்கான ஓர் அருமருந்து என்பதை உணர்ந்தேன்.

(நேற்று திங்கட்கிழமை காந்திஜி நினைவு நாள் ) - தினமணி -</b>
Reply
#2
காந்தியம் பற்றிய தகவல்களுக்கு நன்றி..! தொடர்ந்து இப்படியான நல்ல சிந்தனைக்குரிய கருத்துக்களை வழங்குங்கள்..!

"ஒருவனின் ஆடம்பரம் இன்னொருவனின் அழிவு என்பதை இன்றைய முதலாளித்துவ உலகம் புரிந்து கொள்ளுமா..??!"
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி சங்கர்லால் காந்திஜியின் நினைவு தினத்தில் அவரின் எளிமையை பகிர்ந்து கொண்டதற்கு.
<i><b> </b>


</i>
Reply
#4
காந்திஜி பற்றிய சுவையான தகவல் :

இது வரை உலகில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு தலைவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றால் அது காந்திஜிக்கு மட்டுமே.....

அமெரிக்கா 1962ஆம் ஆண்டு காந்திஜிக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது....

42 நாடுகள் ஒரே நேரத்தில் (காந்திஜியின் நூற்றாண்டு விழாவின் போது) ஒருவருக்கு தபால் தலை வெளியிட்டது என்றால் அது காந்திஜிக்கு மட்டும் தான்....

இங்கிலாந்து முதன் முதலாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தபால் தலை வெளியிட்டது என்றால் அது காந்திஜிக்கு தான்....
,
......
Reply
#5
அதுமட்டுமல்ல.. உலகின் பல பல்கலைக்கழகங்களில் காந்திக்கான நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு மட்டுமன்றி இந்திய உபகண்ட தேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே பெருமை அளிக்கின்ற விடயம்..! ஈழத்தில் கூட பல பாடசாலைகளுக்கு காந்தி நேரடி விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு கூட வந்திருக்கிறார்..! சமீப கால இந்தியத் தலைவர்கள் போலல்லாது பொது வாழ்வில் காந்தி தன் தேசத்து மக்களை மட்டுமன்றி சோதனைக்குள்ளான அனைத்து மக்களையும் நேசித்திருக்கிறார்..என்றால் அது மிகையல்ல..!

ஒரு மனிதன் எப்படியும் வாழலாம் என்பதிலும் தனக்கென்று ஒரு நெறி, கொள்கை, இலட்சியம் என்று உறுதியாக வாழ்பவனே உலகிற்கு உதாரணம் ஆகின்றான்..! பலர் வார்த்தை அளவில் இலட்சியத்தனம் பேசினும் நடைமுறை வாழ்வில் அடுத்தவரின் வார்த்தைகளால் சுயசிந்தனை இழந்து கொண்ட இலட்சியத்தையும் மறந்துவிடுகின்றனர்.. செயலிழந்துவிடுகின்றனர்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)