01-26-2006, 01:30 AM
Quote:அ. பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கேக்க ஒராள் எப்பிடி அணி மாறலாம்????????????? ரசிகையக்கா பட்டிமன்றம் தொடங்க முதலே எல்லாரையும் கேட்டவா..........அப்பிடியிருக்கேக்க பட்டிமன்றம் நடக்கேக்கயே அணி மாறுறனதிண்ட காரணமென்ன?????????????????
பட்டி மன்றத்தில் அணிமாறமுடியாது என்பது உண்மையே. ஆனால் மேடையில் நடக்கும் பட்டிமன்றத்திற்கும் யாழில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கு ஏற்கனவே பட்டிமன்றத்திற்கு என்று ஒருவரின் வழிகாட்டலின் கீழ் பயிற்சி எடுத்தவர்கள் வந்திருந்து விவாதம் வைப்பார்கள். அவற்றில் ஒருவர் அல்லது அதிக பட்சமாக இருவர் புதியவர்களாக பயிற்சிக்கு வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு பலரும் அனுபவம் அற்றவர்கள். ஆகவே தாம் எடுக்கும் நிலையின் படி அவர்களின் கருத்துக்களை வைக்க விடுவதே பட்டிமன்றத்தை சிறப்பாகக் கொண்டு செல்ல உதவும். அதைவிடுத்து அவரைப் பிடித்து இதில் தான் கருத்து வைக்கவேண்டும் என்று சொன்னால் ஒரே விடயமே மீண்டும் மீண்டும் கூறப்பட்டு ஒரு சோர்வுப்போக்கை அளித்து விடும்.
Quote:ஆ. செல்வமுத்தண்ணா நல்ல நடுநிலமையா கருத்த வைக்கிறார்............ ஆனா தமிழனியக்காக்கா நடுநிலமை தவறுற மாதிரி இருக்கு.............தன்ர கருத்துக்கள சொல்றதெண்டா அவா பட்டிமன்றத்தில கலந்துகொள்ளலாமே........... இருந்தாலும் இது அவான்ர முதலிதெண்டுற படியா நடுநிலமை தவறாம நடுவர் பணிய தொடந்து செய்ய பழகட்டும்.................
இது நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்தது. உங்களின் இக்கருத்தை பட்டிமன்றம் முடிந்தபின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் வைத்திருந்தால் ஒப்புநோக்கிப் பார்த்திருக்கலாம். ஒரு பட்டிமன்றம் சுவையாகப் போவதற்கு ஒரு அணி சொல்லும் விடயங்களில் தன் கருத்தையும் நடுவர் சொல்லி நகர்த்துவது வழமை. அதில் உங்கள் கருத்து வெட்டப்படுகிறதா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட நிலையைப் பொறுத்தது. அது உங்களிற்கு தெரியாது என்று நான் எண்ணவில்லை. ஏதோ குழப்பவேண்டும் என்று நீங்கள் முடிவு பண்ணியது போல் தோன்றுகிறது.
Quote:இ. இந்த பட்டிமன்றத்தில என்ர கருத்த நான் வைக்கணுமெண்டா.......கடைசியா நான் என்ர கருத்த வைக்க விடணும் .....சோழியான் அண்ணாக்கு முதல்ல........... இல்லாட்டி எதிரணிக்கு மாத்திவிடுங்க..........................................................
அட இப்படி குழம்பிவிட்டீர்களே. முதல் மாறுவது மறுக்கப்படவேண்டும் என்று கூறிவிட்டு அதனை நீங்களே இறுதியில் கேட்பது வேடிக்கையாகத் தெரியவில்லையா. ஒரு அணியில் ஒருவர் எத்தனையாவதாக கருத்து வைக்கவேண்டும் என்று தெரிவு செய்வது அந்த அணியைப் பொறுத்த விடயம். அதாவது அது அணித் தலைவரால் தீர்மானிக்கப்பட வேண்டியது. இங்கு அதை தீர்மானிப்பவராக இரசிகை இருக்கிறார்(பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்து நடத்திக் கொண்டிருப்பவர். எங்க தமிழன் கடைசீல காலை வாருவான் எண்டு தெரிஞ்சு அதை தானே தனிய நிண்டு செய்கிறார் :twisted: ) அதைவிட்டுவிட்டு நீங்கள் வெருட்டுறீங்களே. எப்பிடீங்க. :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
hock: எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்காங்க...(வயிதெரிச்சலோடதான் சொல்லுறன்) <!--emo&