Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலையில் மடத்தடிப்பகுதியில் கைக்குண்டு வீச்சு! ஒருவர் படுகாயம் </b>
இன்று முற்பகல் 11 மணியளவில் திருகோணமலை மடத்தடிப் பகுதியில், இனந்தெரியாத நபர்களின் கைக்குண்டு வீச்சினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனையாள ரான தேவதர்சன்(26) என்பவரே இதன்போது படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றாக்
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
திருகோணமலையில் கடற்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்- திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் பலி!
திருகோணமலையில் நிலாவெளியில் கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுத் தாக்குதலின் போது வாகனத்தில் பயனம் செய்த 13 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை துறைமுக படைத்தளத்திற்கு படையினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு றிமோட் கொன்றோல் மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. எனவும் ஆனால் இலக்கு தவறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b><i>வினித் இத் தகவலை எற்கனவே இணைத்தாலும், செய்திகளின் "பொதுத் தன்மை" கருதி
இங்கு மீளவும் இணைக்கிறேன்..
உறவுகள் பொறுத்தருள்க....</i></b>
<span style='color:red'><b>இன்று மாலையுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு விலகல்!</b>
இன்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக திருகோணமலை யுத்த நிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளதாக பிந்திக்கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும். வன்முறைச் சம்பவங்களும், கொலைகளும் இங்கு யுத்தநிறுத்தம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கண்காணிப்புக்குழுவினரும் பாரிய அச்சுறத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.</span>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>திருகோணமலையில் கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம்</b>
திருகோணமலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக புதினம் செய்தியாளருக்கு விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்ததாவது:
திருகோணமலை மாவட்டத்தின் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் 3.30 மணிக்கு எமக்கு ஒரு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
அந்த அறிவிப்பில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை மாலை 4 மணியிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகளை நிறுத்தி அலுவலகத்தையும் மூடி வைக்குமாறு கொழும்பு தலைமையகத்திலிருந்து அறிவித்தல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான காரணத்தை நாம் அவரிடம் வினவியபோது, அவர்கள் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் கொழும்புத் தலைமையகம் கட்டளை பிறப்பித்திருப்பதால் அலுவலகத்தை மூடி இருப்பதாகத் தெரிவித்தனர் என்றார் சி. எழிலன்.</span>
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலையில் வன்முறைகள் தொடர்வதால் தமது பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன் </b>
திருகோணமலையில் தொடரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அப் பகுதியில் தங்களது பணிகளை இடைநிறுத்தி வைப்பதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
சமூக வன்முறைகள் மற்றும் கதவடைப்பு போராட்டங்கள், கடற்படையினருக்கு எதிராக தாக்குதல்கள் என்பவற்றை அடுத்து திருகோணமலை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் அங்கு எமது கண்காணிப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது என்று நாம் முடிவு செய்துள்ளோம் என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஹெலன் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவமானது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு திருமலையை விட்டு வெளியேறுகிறோம் என்று அர்த்தமல்ல, வன்செயல்களின் அதிகரிப்பு எமது அன்றாட கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
<b>தகவல் மூலம்- பதிவு</b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலை தாக்குதலுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரல்
இன்று திருமலையில் கடற்படையினர் பயணித்த பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதலுக்கு திருமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.
இது தொடர்பாக பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட அறிக்கை வருமாறு:
<i>தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாளர்களே! இது உங்கள் கவனத்திற்கு!
இன்று திருகோணமலை மாவட்டத்தில், இடம்பெற்ற ஸ்ரீலங்கா படையணியினருக்கு எதிராக இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலை திருமலை பொங்கியெழும் மக்கள் படையணியினராகிய நாமே மேற்கொண்டோம்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் மீது மேலும், மேலும், இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யத்தவறும் பட்டத்தில் நாமும் எமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம்.
அகிம்சை வழியில் தமிழ் மக்கள் எத்தனையோ தடவைகள் இராணுவ வன்முறைகளை எதிர்த்து போராடியபோதும் அதற்கு சரியான எந்தவிதப்பதிலும் வழங்கப்படாமல், மாறாக தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. இந்த நிலமைகளிலேயே இராணுவத்தினரின் மக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலாகவே எம்மால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது </i>என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[b]<i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
யாருங்க தலைப்பை மாற்றியது...
அதிகாரமுடையவர்களாக இருக்கக்கூடும்.....
<i><b>"திருமலை கொதிக்கிறது" </b></i>என்ற தலைப்பே இதுவரை இடம்பெற்ற செய்திகளுக்குப் பொருந்தும்...
இப்படி <b><i>"திருமலைச் செய்திகள்"</i></b> என்று போட்டால் "எல்லா திருமலைச்" செய்திகளும் இதனுள் அடங்க வேண்டியாதாகி விடுமே...
தயவு கூர்ந்து சம்பந்தப்பட்டோர் கவனிக்கவும்.....
(சிலர் தனித் தலைப்புக்களில் போட்டு
"இட்டு நிரப்பல்" செய்து
"முக்கிய" கருத்துகளைப் பின் தள்ளி விடக் கூடும் என்பதையும் கவனிக்கவும்...)
"
"
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
மேகநாதன் Wrote:யாருங்க தலைப்பை மாற்றியது...
அதிகாரமுடையவர்களாக இருக்கக்கூடும்.....
<i><b>\"திருமலை கொதிக்கிறது\" </b></i>என்ற தலைப்பே இதுவரை இடம்பெற்ற செய்திகளுக்குப் பொருந்தும்...
இப்படி <b><i>\"திருமலைச் செய்திகள்\"</i></b> என்று போட்டால் \"எல்லா திருமலைச்\" செய்திகளும் இதனுள் அடங்க வேண்டியாதாகி விடுமே...
தயவு கூர்ந்து சம்பந்தப்பட்டோர் கவனிக்கவும்.....
(சிலர் தனித் தலைப்புக்களில் போட்டு
\"இட்டு நிரப்பல்\" செய்து
\"முக்கிய\" கருத்துகளைப் பின் தள்ளி விடக் கூடும் என்பதையும் கவனிக்கவும்...)
À¾¢ø þ§¾¡
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=159407#159407
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
உங்கள் பரந்த மனதிற்கு நன்றி வினித்
"
"
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
மேகநாதன் Wrote:உங்கள் பரந்த மனதிற்கு நன்றி வினித்
ܼ À¢Èó¾ ÌÉõ <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¿ýÈ¢ìÌ ¿ýÈ¢ மேகநாதன் :wink: :wink:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலையில் கண்காணிப்புக்குழு விலகியதையடுத்து அதன் அலுவலகத்தில் இருந்த கொடியை
விசமிகள் அரைக்கபம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர. </b>
திருகோணமலை நகரில்
நேற்று மாலையில் இருந்து தமது பணிகளை
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர்
விலக்கியுள்ள நிலையில் இன்று
அதன் அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த
அவர்களின் கொடியினை
விசமிகள் சிலர் அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர்.
இதனால் அப்பகுதிகளால் சென்ற மக்கள்
பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
<i>இந்த அலுவலகம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தில் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது</i>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளிதனர்.</b>
திருகோணமலையில்; ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் நேற்று இரண்டு பெற்றோர்கள் சாட்சியமளித்துள்ளனர். அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட சஜீந்தரனின் தந்தை சண்முகராஜா சாட்சியம் அளிக்கையில்சம்பவ இடத்தில் இருந்த அரச படையினருக்கு தனது மகனின் மரணம் குறித்து தெரியும் எனவும், தனது மகன் துப்பாக்கிச் சூட்டினால்தான் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது மகனுக்கு அரசியலில் எதுவித தொடர்பும் இல்லை எதிரியும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் கட்டுமானப் பொறியியல் படிப்புக்கு தேர்வாகியிருந்தார் தன் மகன் சாலி கிராமத்தில் கணணி கற்பிக்கும் ஆசியராக இடைக்காலத்தில் பணியாற்றி வந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
றொகன்த் என்ற மாணவரின் தாயார் லோகிதாசன் லோகநாயகி சாட்சியம் அளிக்கையில்சம்பவத்தில் தன் மூத்த மகன் கொல்லப்பட்ட சம்பவ இடத்திலிருந்த இராணுவத்தினருக்குகே தன் மகன் எப்படி இறந்தான் என்பது தெரியும் எனவும் தன் மகன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான் என்பதை மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்துகொண்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:red'><b>திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்: மரண விசாரணையில் தீர்ப்பு </b>
திருகோணமலை கடற்கரை பகுதியில் ஜனவரி 2 ஆம் நாள் 5 தமிழ் மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை நீதிபதி வீ.இராமகமலன் நேற்று புதன்கிழமை தீர்ப்பு அளித்தார்.
இது தொடர்பான மரண விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்களினாலேயே அவர்கள் பலியானதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவர் சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டார்.</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலையில் 3 தமிழ் இளைஞர்கள் கைது! </b>
திருக்கோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேசம் இலங்கைத்துறை என்னும் இடத்தில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த 3 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த செய்வாய்கிழமை தோப்பூர் பட்டியடி இராணுவ காவலணில் இடம்பெற்றது.
கணேசமூர்த்தி நாகராசா வயது 18, தம்பிநாதன் லகேஸ்வரன் வயது 20 பாக்கியதுரை திலீபன் வயது 18 ஆகியோர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளாக்கள் என்பது பற்றிய விபரங்ளைப் பெறமுடியாது உறவினர்கள் அலைந்து திரிகின்றனா
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் </b>
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் எனக் கோரும் கடிதம் ஒன்றினை திருக்கோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையினர் அனுப்பியுள்ளனர். இது பற்றி 18ம் திகதி அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். இதன் பிரதி யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
திருக்கோணமலை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா இனவாத இராணுவத்தாலும் பெரும்பான்மையின வன்முறையாளர்களாலும் மிகம் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசினதும் அரச படைகளதும் பயங்கரவாத செயல்களுக்கு நீதித்துறையூடாக கூட நிவாரணம் பெற முடியாது தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இழந்தவர்கள்.
சமாதான காலத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பின்பு கண்காணிப்புக் குழு தனது பணியை ஆரமபித்த பின்னே தமிழ் மக்கள ஓரளவு நிம்மதி மூச்சு விட முடிந்தது. திருக்கோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான கண்காணிப்புக் குழு தலைவரதும் அவரது குழுவினரதும் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாகவே மக்கள் இரவில் நித்திரை கொள்ள முடிகிறது. சமாதான ஒப்பந்தத்தை கண்காணிக்கவே கண்காணிப்ப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அவசரகால விதிகளின் கீழ் சமாதான ஒப்பந்தத்தை இல்லாதொழித்து விட்டு அரச படைகளும் ஆயுத கும்பலும் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை தொடுத்துள்ள நிலையில் எங்களுக்குரிய ஒரே ஒரு பாதுகாப்பு அரண் நீங்கள் மட்டுமே. இந்நிலையில் தங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உரிய காரணங்களை நாங்கள் தெளிவாக அறிவோம். ஏத்தனையோ இடர்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் எமக்காக தாங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை ஒவ்வொரு தமிழ் மக்களும் மறக்க மாட்டோம்.
எனவே இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பணி மிகவும் அவசியமானதாகும். தாங்கள் இப்பணியில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வது என்ற முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து சமாதான ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்துவதனை உறுதி செய்தால் மட்டுமே தமிழ் மக்கள் திருக்கோணமலையில் நிம்மதியாக வாழ முடியும். தங்களுக்கும் தங்கள் சேவைக்கும் தமிழ் மக்கள சார்பிலான சகல ஒத்துழைப்பையும் எப்போதும் தருவதற்கு தயாராக உள்ளோம் என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>காளிகோயிலுக்கு சென்ற எனது மகனை சடலமாகவே காண முடிந்தது: மாணவர் படுகொலை விசாரணையில் சஜிந்திரனின் தந்தை </b>
காளிகோயிலுக்கு சென்று வருவதாக கூறியே எனது மகன் போனார். பின்னர் அவரைப் பிணமாகவே மீட்க முடிந்தது. இவ்வாறு திருமலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சஜீந்திரனின் தந்தை சண்முகராசா தெரிவித்தார். இந்தப் படுகொலை தொடர்பான மரண விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எனது மூன்று மகன்களில் ஒருவர் சஜீந்திரன். சம்பவ நாளன்று மாலை 6 மணிக்கு காளி கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கோயில் சிறி கோணேஸ்வரா இந்து கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது. அதன் பின்னர் கடற்கரைப் பகுதியில் குண்டுவெடித்ததாக தகவல் கிடைத்தது.
வித்தியாலயம் வீதியூடாக அங்கு சென்று பார்த்தேன். அதன் பின்னர் எனது மகன் வீடு திரும்பாததால் திருகோணமலை அரசமருத்து வமனைக்குச் சென்று பார்த்தேன். எனது மகனின் சடலம் அங்கே இருந்தது. சம்பவ இடத்தில் இருந்த அரச படையினருக்கு எனது மகனின் மரணம் குறித்து தெரியும். எனது மகன் துப்பாக்கிச் சூட்டினால்தான் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனது மகனுக்கு அரசியலில் எதுவித தொடர்பும் இல்லை. எதிரியும் இல்லை. கட்டுமானப் பொறியியல் படிப்புக்கு தேர்வாகியிருந்தார் என் மகன். சாலி கிராமத்தில் கணணி கற்பிக்கும் ஆசிரியராக இடைக்காலத்தில் அவன் பணியாற்றி வந்தான் என்றார்.
றொகன்த் என்ற மாணவரின் தாயார் திருமதி லோகிதாசன் லோகநாயகி சாட்சியம் அளிக்கையில்:
சம்பவத்தில் என் மூத்த மகன் கொல்லப்பட்டான். சம்பவம் நடந்த நாளன்று காளி கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு என் மகன் சென்றான். ஆனால் இரவு 9 மணி வரை அவன் வீடு திரும்பவில்லை. அவனது கையடக்க தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பதிலேதும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மாணவர்கள் சிலரை இராணுவம் கைது செய்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனால் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். அங்கிருந்த பொலிசார் எனது மகனின் பெயரும் இறந்தவர்கள் பட்டியலில் இருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அடுத்த நாள் பிணவறையில்தான் என் மகனின் சடலத்தைப் பார்த்தேன். சம்பவ இடத்திலிருந்த இராணுவத்தினருக்குத்தான் என் மகன் எப்படி இறந்தான் என்பது தெரியும். என் மகன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான் என்பதை மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்துகொண்டேன் என்றார்.
இந்த விசாரணையின் போது, சாட்சியம் அளிக்க விரும்புவோர் இரகசியமாக சாட்சியமளிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை மூத்த சட்டத்தரணி ஏ. ஜெகசோதி, சிறிலங்கா பிரதி சட்ட மா அதிபர் டி. லிவெர மற்றும் இரண்டு அரசத் தரப்பு சட்டத்தரணிகளும் இந்த விசாரணையின் போது உடனிருந்தனர்.
கடந்த 10 ஆம் திகதி இந்த விசாரணை தொடங்கியது. அதன் பின்னர் 12ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடந்தமையால் இந்த விசாரணை 16 ஆம் திகதி நடைபெற்றது.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>[/b]
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:red'><b>திருகோணமலையில்; வெள்ளைவான் நடமாட்டம் அதிகரிப்பு! பீதியில் மக்கள்!! </b>
திருகோணமலை அன்புவழிபுரம், மற்றும் அபயபுரம் ஆகிய இடங்களில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக வெள்ளை வான்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலமைகளால் அண்மைக் காலமாக இப்பிரதேச மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இரவுநேர வெள்ளைவான்கள் காரணமாக தம் நிந்மதியினை இழந்த இப்பிரதேச தமிழ் மக்கள் தமக்கு போதிய பாதகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்காணிப்புக்குழுவினரும் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரிதும் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.
மாலை நேரங்களில் எதுவும் நடக்கலாம் என்ற பீதியினால்; தமது வீடுகளிலேயே முடங்குவதுடன் தமது வீட்டின் முன்முற்றத்திற்கே இறங்க பயத்துடன் வாழ்ந்து வருகின்ற நிலைமையே அங்கு காணப்படுகிறது.</span>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>திருமலையில் வான்படை ஜீப் வண்டி மீது கிளைமோர் தாக்குதல்! </b>
திருகோணமலை மாவட்டம் அனுராதபுரம் சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் ஸ்ரீ லங்கா வான்படையினர் பயணித்த ஜீவ் வண்டி ஒன்றின் மீது கிளைமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக ஸ்ரீ லங்கா வான்படையினரின் ஜீப் வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், முன்று வான்படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>சிங்கை \"வசந்தம்\" தொலைக்காட்சி
செய்திப்படி மேற்படித் தாக்குதலில் 13சிங்களப் படையினர் காயம்</span>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>இராணுவ அடாவடித்தனங்கள் காரமாணமாக திருமலையில் இருந்து 250 குடும்பங்கள் வாகரைக்கு இடப்பெயர்வு </b></span>
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இராணுவ கெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த 250 குடும்பத்தினர் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் தங்கியுள்ளனர்.
இவர்களின் 50 குடும்பத்தினர் தமது நண்பர்கள், உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் ஏனைய 200 குடும்பத்தினரும் வாகரை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய ஏற்பாடுகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தினரின் பெரும் அச்சுறுத்தல்களையும், அடாவடித்தனங்களும், கொலை மிரட்டல்களையும் தாங்க முடியாமலேயே தமது உயிரையாவது காப்பாற்றும் நோக்கில், பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி வந்ததாகவும், தொடர்ந்தும் வெருகல் ஆற்று வழியாக பல குடும்பங்கள் தங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"