<b>யாழ். குடாநாட்டில் ஆள்கள் மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுதல், காணாமல்போதல் மற்றும் இரவுவேளைகளில் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள், பயங்கரக் கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றால் மக்கள் பீதியில் உறைந்துபோய் இருக்கின்றனர்.</b>பெரும் பதற்றமும், நிம்மதியுமற்ற சூழலுக்குள் சிக்கி அடுத்த கணம் என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் நாள்களைக் கழிக்கும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எப்போது, எங்கே, என்ன நடக்குமோ என்பது தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழவேண்டிய அச்சமூட்டும் சூழ்நிலை நீடித்துவருவதால் பலரும் பாதுகாப்பான பகுதிகளை நாடிச் செல்லத் தலைப்பட்டுள்ளனர்.
இரவுவேளைகளில் வாகனங்களில் வரும் ஆயுதபாணிகள் வீடுகளைச் சோதனையிடு வதாகக் கூறி, உள்நுழைந்து, அங்குள்ள ஆண் களை விசாரணைக்கென்று கூறி அழைத்துச் செல்வதும், அவ்வாறு அழைத்துச் செல்பவர் கள் பின்னர் காணாமல் போதல் அல்லது சூட்டுக் காயங்களுடன் சடலமாக வீசப்படுதல் போன்ற சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறு கின்றன.
தினசரி இரண்டு, மூன்று என்ற கணக்கில் மர்மக் கொலைகள் இடம்பெறுகின்றன.
சீருடையினரால் பகல் நேரத்தில் சோதனை யிடப்படும் வீடுகளுக்கு இரவில் வெள்ளை வானில் வரும் மர்ம நபர்கள் ஆண்களை மிரட்டி விசாரணைக்காக என்று கொண்டுசெல்கின்றனர்.
இளவாலை, அச்சுவேலி, புத்தூர், பருத் தித்துறை ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களில் பலர் இவ்வாறு மர்மமான முறை யில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர். இத் தகைய கடத்தல்கள் கிராமப் பகுதிகளில் மக் களைப் பெரும் பீதிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
இளவாலைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு மட்டும் இரண்டு பேர் வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
டெனிஸ் நாட்டுக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் தொண்டர்களாகப் பணியாற் றும் இரண்டு இளைஞர்கள் நேற்றுக்காலை பருத்தித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்தோரோல் கடத்திச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
புத்தூர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிலிருந்து சீருடையினரால் அழைத் துச் செல்லப்பட்ட 50 வயது குடும்பஸ்தர் ஒருவர் நெஞ்சில் துளையிடப்பட்டது போன்ற மிக ஆழமான காயம் ஒன்றுடன் நேற்றுக் காலை சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
<span style='font-size:25pt;line-height:100%'>இதேவேளை, பாடசாலை மாணவி என்று கூறப்படும் யுவதி ஒருவர் படையினரால் பல வந்தமாக தோட்டப் புறம் ஒன்றுக்கு இழுத் துச் செல்லப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் திருநல்வேலி மற்றும் கோண்டாவில் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை உரு வாக்கியுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்டார் என்று கூறப் படும் யுவதி பற்றி எந்தத் தகவலும் இது வரை தெரியவரவில்லை.
அவர் யார், எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற விவரங்களும் இன்னும் தெரியவர வில்லை என்றும், யுவதியைப் படையினர் இழுத்துச் சென்றதை <b>வழிப்போக்கர்கள் கண் டிருக்கின்றனர் என்றுமே கூறப்படுகின்றது.</b>இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் ஒரு புறம் நடக்க,</span>
நன்றி:உதயன்
http://www.uthayan.com/pages/news/today/01.htm
தமிழிழ் தானே இருக்கு?
வழிப்போக்கர்கள் கண்டு மக்களிடம் சொன்ன படியால் மக்கள் அந்த யுவதியும் என்னும் ஒரு தர்சினி மாதிரி ஆக கூடாது என்று உடனே தேடினார்கள் தப்பா?