[quote=Vasampu]
<b>பி.கு:</b> அந்தக் கதையை இப்ப என் காதுக்குள் சொல்லுங்களேன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐரோப்பாவில இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை.
அதில் நம்மவர் ஒருவர் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது.
நானும் சுவாரஸ்யமா படித்துக் கொண்டே வந்தேன்.
இறுதியில் அவர் பற்றிய தகவல்களுக்கு 11ம் பக்கம் பார்க்கவும் என்று இருந்தது.
11ம் பக்கத்தில் தேடினால் அது பற்றிய தொடுப்பு எதுவுமேயில்லை.
சரி தவறாகி வேறு எங்காவது இருக்கும் என்று முழு பத்திரிகையிலும் தேடினேன்.
தொடரே இல்லை...............
இறுதியாக
அந்த பத்திரிகை ஆசிரியருக்கு போண் பண்ணி கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
<b>அவனைப் பத்தி இவ்வளவு போட்டதே பெரிசு.</b>
எனது அடுத்த கேள்வி:
எனக்கு உண்மையை சொல்றீங்க.
அவங்கள்ள யாராவது கேட்டா?
<b>அது பிரிண்டிங் மிஸ்டேக்.
பத்திரிகை நடத்துற எங்களுக்கா கதைக்கத் தெரியாது.</b>
நச்சென்று எனக்கு விளங்கியது.
நல்ல காலம் இணைய ஊடகம் என்று ஒன்று வந்தது.
அதன் தாக்கத்தின் வரிகளே இவை:
[quote]மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது.
சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.
"சிறியோரை இகழ்தலும் இலமே" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் இணைய ஊடகம்
சம-மரியாதை தருகிறது.
புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காத பத்திரிகைகள் இருக்கின்றன.
புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்தும் இணைய ஊடகத்தின் பணி முக்கயமானது.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது.
இது தமிழனின் துரதிர்ஷ்டம்.
அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள்.
மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.
குக்கிராமத்திலே இருக்கும் மாணவனின் சிந்தனையில் உதித்த பூமியைப் புரட்டும் கவிதையையோ அல்லது கட்டுரையோ வெளிவர இணையம் உதவுகிறது.
வெகுஜனப் பத்திரிக்கைகள் அடையாளம் காணாத
மிகச் சிறந்த கலைஞர்களை நாம் இணையத்தில் காணமுடியும்.
வெகுஜனப்பத்திரிக்கைகள் பிரசுரிக்காத இலக்கிய வடிவின் புதிய வடிவங்களும் எதிர்கால இணையத்தில் உருவாகும். [/quote]
இதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15