Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்
#21
நிர்மலன்
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.
அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.
நிர்மலனது வேதனை நியாயமானது.

Quote:ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள்.
அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.


இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?

Quote:இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.

உண்மை
Reply
#22
என்றாலும் எனக்கொரு கவலை. லங்காசிறி என்று பெயரை வைத்துக் கொண்டு மற்றைய மொழிகளின் இணைப்பு இருக்கின்றது. ஆனால் சிங்களமொழி இணைப்பு இல்லையே. ஆரம்பித்தவர்கள் அதனையும் சேர்த்திருக்கலாமல்லவா??? :roll: Cry
Reply
#23
AJeevan Wrote:நிர்மலன்
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.
அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.
நிர்மலனது வேதனை நியாயமானது.

Quote:ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள்.
அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.


இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?

Quote:இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.

உண்மை

நன்றி கூறி மூலத்தளத்தின் பெயரைப்போடுவதில் தப்பொன்றும் இல்லையே! :? அல்லது தாங்கள் தான் தந்ததாக இருக்கவேண்டும் என்ற வரட்டுப்பிடிவாதமா? :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#24
தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் தமிழீழ நிர்வாக கட்டமைப்பின் அலகுகள் பற்றிய விவரணம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்கள்.
Reply
#25
kurukaalapoovan Wrote:தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் தமிழீழ நிர்வாக கட்டமைப்பின் அலகுகள் பற்றிய விவரணம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்கள்.


நல்ல முயற்சி.
பலருக்கு அங்கு இருக்கின்ற நிர்வாகத்தை பற்றி தெளிவாக புரிய வைக்கவேண்டும்.
[size=14] ' '
Reply
#26
தமிழ் தேசிய தொலைக்காட்சியினர் தமது நிகழ்ச்சகளுக்கு அனுசரனையாளர்களை ஆதரவாளர்களை எதிர்பார்க்கின்றார்கள்.

கள உறவுகள் இணைந்து உதவி செய்யலாமே.....?
[size=18]<b> ..
.</b>
Reply
#27
எப்படியான உதவிகள் ஆதரவுகள் என்று எழுதுங்கள். நிச்சயாமாக இங்குள்ள பல உறவுகள் செய்ய காத்திருக்கிறார்கள்.
Reply
#28
<!--QuoteBegin-ஈழமகன்+-->QUOTE(ஈழமகன்)<!--QuoteEBegin-->தமிழ் தேசிய தொலைக்காட்சியினர் தமது நிகழ்ச்சகளுக்கு அனுசரனையாளர்களை ஆதரவாளர்களை எதிர்பார்க்கின்றார்கள்.  

கள உறவுகள் இணைந்து உதவி செய்யலாமே.....?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

விளம்பரதார்களை எதிர்பார்க்கின்றார் என நினைக்கின்றேன்.
[size=14] ' '
Reply
#29
நல்லம் நிர்வாகம் அனுமதித்தால் யாழ் களத்துக் ஒரு விளம்பரம் குடுப்பம்.

ஒரு கல்லில் இரு மாங்காய். :wink:

தேசியத்துக்குச் சார்பாக இயங்கும் அனைத்து ஊடகங்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்த வேண்டும். அத்தகைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
Reply
#30
அவர்களின் நிகழ்ச்சிக்கான செலவினை பொறுப்பேற்று அதனை திறம்பட நடாத்துவதற்கு உதவலாம்....

விளம்பரங்களை சேகரிக்கும் போது அது புலத்திலுள்ள தேசிய ஊடகங்களை பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.....
[size=18]<b> ..
.</b>
Reply
#31
நிச்சயமாக எங்கள் தொலைக்காட்சியை நாங்கள் தானே வளர்க்கவேண்டும். அவர்கள் எந்த வழியில் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். தெரிந்தவர்கள் கூறுங்கள் நாங்கள் முடிந்த உதவிகளைச் செய்ய தயாராகவே இருக்கிறோம்.
Reply
#32
எமது தொலைக்காட்சி எம் நாட்டின் தொலைக்காட்சி அதனை வளர்க்காமல் எதை வளர்க்கப்போகிறோம், வேறு குப்பைகளையா?!
சொல்லுங்கப்பா எப்படியான உதவிகள் தேவை என்று, உதவக்காத்திருக்கிறம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#33
இங்கே உடனடித்தேவைகள் இருப்பின் தற்காலிக தீர்வாக உணர்வாளர்கள் நேரடியாக பொருளாதார உதவிகளை செய்யலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்பது உரிய விளம்பரதாரர்களை பெற்றுக் கொள்ளுவது.

தமிழ் தேசிய தொலைக்காட்சியின் நாளாந்த ஒளிபரப்பு நேரமானது (2100-2200 மத்திய ஜரோப்பிய நேரம்/CET) தமிழ் ஒளி இணையத்தின் 24 மணி சேவையில் மிகவும் பெறுமதிமிக்க அதிக பார்வையாளர்களை கவரும் நேரம் (prime time). அதிலும் மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் <b>நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்</b> என்ற அரசியல் கலந்துரையாடல் நடக்கும் நேரமானது மிகவும் பெறுமதிவாய்ந்தது.

தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளும் <b>அம்பலம்</b> பேன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டது.
அதைவிட தமிழீழத்தின் பொருளாதாரம், கல்வி, கலை கலாச்சாரம், வாழ்வியல், சமூகங்களின் இன்னல்கள், பின்தங்கிய கிரமாங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கான குறைபாடுகள் பற்றி தமிழீழ நிர்வாகத்தின் அலகுகள் பற்றி என பல புதிய பயனுள்ள விவரணங்கள் சேர்க்கப்படுகின்றன அவர்களது வாரநாள் நிகழ்ச்சிகளில்.

தமிழீழத் தொலைக்காட்சியானது அவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சிகள் மூலம் தமிழீழத்தின் அன்றாட வாழ்வின் சவால்கள் முதல் வராலாற்று வெற்றிகள் வரை நிதானமாக ஆவணப்படுத்தி உங்களோடு பகிருகிறார்கள். அங்குள்ள யதார்த்தத்தை நாள்தோறும் உங்களின் வீடுகளின் சொகுசில் இருந்து அறிந்து கொள்ள உதவுகிறார்கள். புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் உடனுக்குடன் ஒளிக்காட்சிகளாக சாட்சிகளாக அனுப்பி வைக்கிறார்கள். உதாரணத்திற்கு 19 மார்கழியில் யாழ்பல்கலைக்கழ சமூகத்தின் அமைதி ஊர்வலத்தின் போது அவர்கள் மீது இராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறை அன்றைய தமிழ்தேசிய தொலைக்காட்சியின் செய்திகளில் ஒளிவடிவில் சொற்களால் வர்ணிக்க முடியாத அந்த அராஜகம் உலகம் முழுவதற்கும் சாட்சியாக்கப்பட்டது 24 மணத்தியாலங்களிற்குள்.

தமிழ்த் தேசிய தொலைக்காட்சி செய்யும் இந்த வரலாற்றுச் சேவையை தமிழ் உணர்வுள்ள வியாபார வணிக நிறுவனங்கள் உணர வேண்டும். உங்கள ஆதாரவு தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்பது மாத்திரமல்ல உரிய விளம்பரத்தையும் உடனடிப்பயனாக பெற்றுக் கொள்வீர்கள்.

கள உறவுகளே உங்களில் யாராவது விளம்பரத்துறையில் படித்து கொண்டிருந்தால் அல்லது வேலை செய்து கொண்டிருந்தால் உங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தொலைக்காட்சிக்கு ஒரு சிறந்த விளம்பர அறிமுக தந்திரோபாயத்தை (marketing & promotional strategy) உருவாக்கி கொடுக்க முன்வாருங்கள்.
Reply
#34
தமிழ் தேசிய தொலைக்காட்சியில் புதிதாக <b>சமகால அரசியல்</b> என்ற <i>கல்விமான்கள், ஆய்வாளர்கள் ஊடகவியலாளர்களை கொண்ட கலந்துரையாடல்</i> ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு புதன்கிழமைகளில் நடைபெற உள்ளது என நினைக்கிறேன்.
Reply
#35
<b>நிலமும் நிறைவும்</b> என்ற நிகழ்ச்சி வியாளக்கிழைமைகளில் ஒளிபரப்பப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சி மட்டகளப்பில் சோளப்பயிற் செய்கை பற்றியதாக இருந்தது.

பெரும்பாலும் சேனைப்பயிற் செய்கை முறையில் தான் செய்கிறார்கள்.

விவசாயிகளிற்கு சந்தைப்படுத்தல் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருப்பதாக கூறியிருந்தார்கள்.

சிறுவர்கள் இயக்கத்தில் சேர்பது பற்றிய சர்சைக்கு நல்ல தொரு விளக்கம் இன்று தமிழ் தேசிய தொலைக்காட்சியில் விவரணமாக வழங்கப்பட்டது. இந்த சர்ச்சையை கிளப்புவதில் முக்கிய பங்கு சர்வதேச நாடுகளிற்கும் அரசச் சார்பற்ற நிறுவனங்களிற்கும் உண்டு.
இருந்தும் ஆங்கிலத்தில் subtitle கொடுக்க முயற்சிக்காதது கவலைக்குரியது.
Reply
#36
நானும் பாத்தேன்

நீங்கள் சொல்வது சரிதான்
எங்களுக்குள்ள கதைச்சு பிரியோசனமில்லை
சர்வதேசத்திற்குத் தெளிவாக்க வேணும்
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
Quote:சிறுவர்கள் இயக்கத்தில் சேர்பது பற்றிய சர்சைக்கு நல்ல தொரு விளக்கம் இன்று தமிழ் தேசிய தொலைக்காட்சியில் விவரணமாக வழங்கப்பட்டது. இந்த சர்ச்சையை கிளப்புவதில் முக்கிய பங்கு சர்வதேச நாடுகளிற்கும் அரசச் சார்பற்ற நிறுவனங்களிற்கும் உண்டு.
இருந்தும் ஆங்கிலத்தில் subtitle கொடுக்க முயற்சிக்காதது கவலைக்குரியது.
இதனை அங்கத்துவர்களுக்கு மட்டும் பகுதியில் பார்வையிடலாம்.
http://www.yarl.com/forum/music_page.php?song_id=81
Reply
#38
இணைப்புக்கு நன்றி மோகன் அண்ணா.
உண்மையில் எம்மவருக்கு காட்ட வேண்டியது அவசியமாக இருந்தாலும் இதை மற்றைய நாட்டு மக்களுக்கும் விளக்கமாக எடுத்து சொல்லகூடியவகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு சேய்யப்பாட்டு இன்னும் இதைப்பற்றி தெளிவான கருத்துருவாக்கம் உருவாக்கப்பட வேண்டும். ஆங்கில் உப தலைப்புஇடலாம் அல்லது இப்போது பல நாட்டிலும் எம்மவர்கள் இருக்கிறார்கள் அவர்களை கொண்டு அம்மொழிகளில் மொழிபெயர்த்து ஒரு தெளிவை எல்லாருக்கும் உண்டு பண்ண முயல வேண்டும். இலங்கை அரசின் பிரச்சார ஊடகம் எவ்வாறு அனைத்து நாட்டு மக்கலையும் சென்றைடைகிறதோ அதனிலும் வினைத்திறனாக எமது ஊடக அமைப்பு செயற்பட வைக்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மட்டும் தகவல் சென்றடைவது போதுனானதாக இருக்காது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#39
யாழ் இணைய உறவுகள் அனைவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கான செலவினை பொறுப்பேற்று உதவலாம் என நினைக்கின்றேன்......

ஒரு நிகழ்ச்சியை தயாரிப்பதற்கு வருடத்திற்கு அண்ணளவாக 60 இலட்சம் ருபாய்கள் வரை தேவைப்படுவதால் ஆகக் குறைந்தது 100 உறுப்பினர்களாவது (களத்தில் உறுப்பினர்களாக 1956 பேர் இருக்கின்றார்கள்.)இணைந்து கொண்டால் ஒருவருக்கு வருடம் 340 பவுண்கள் மட்டுமே.
<b> </b>
Reply
#40
Quote:மேற்கோள்:

சிறுவர்கள் இயக்கத்தில் சேர்பது பற்றிய சர்சைக்கு நல்ல தொரு விளக்கம் இன்று தமிழ் தேசிய தொலைக்காட்சியில் விவரணமாக வழங்கப்பட்டது. இந்த சர்ச்சையை கிளப்புவதில் முக்கிய பங்கு சர்வதேச நாடுகளிற்கும் அரசச் சார்பற்ற நிறுவனங்களிற்கும் உண்டு.
இருந்தும் ஆங்கிலத்தில் subtitle கொடுக்க முயற்சிக்காதது கவலைக்குரியது.


இதனை அங்கத்துவர்களுக்கு மட்டும் பகுதியில் பார்வையிடலாம்.
http://www.yarl.com/forum/music_page.php?song_id=81
அங்கத்துவர் பகுதியிலிருந்து அனைவரின் பார்வைக்காக மாற்றப்பட்டுள்ளது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)