12-29-2005, 07:14 PM
Nitharsan Wrote:அட என்னை விட்டுவிட்டீங்களே! நானும் வாறன் இரசிகை தீமைகள் பக்கத்துக்கு வாதாட தயார்...
உங்களை தீமை என்ற அணியில் இணைத்துள்ளேன்
<b> .. .. !!</b>
|
பட்டிமன்றம் தொடர்வோமா???
|
|
12-29-2005, 07:14 PM
Nitharsan Wrote:அட என்னை விட்டுவிட்டீங்களே! நானும் வாறன் இரசிகை தீமைகள் பக்கத்துக்கு வாதாட தயார்... உங்களை தீமை என்ற அணியில் இணைத்துள்ளேன்
<b> .. .. !!</b>
12-29-2005, 07:19 PM
<b>அற்புதமான ஆரம்பம், வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள் இளைஞன்!
நடுவரின் தீர்ப்பு பின்பு வரும்தானே! அதற்கிடையில் என் வாழ்த்துக்கள்! இனி அடுத்த அணிக்கு வாதிட சோழி அண்ணா வருவார்! சூடு பிறக்கட்டும் பட்டிமன்றம்!</b>
<b> .. .. !!</b>
12-29-2005, 09:23 PM
[b]உண்மையில் அற்புதமான ஆரம்பம். எமது அணி சார்பில் ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்து கவிதைகளில் மட்டுமல்ல கருத்துக்களாலும் மனங்களை வெல்வேனென்று நிரூபித்த இளைஞனே உம்மை மனமகிழ்ந்து மனமார வாழ்த்துகின்றேன்.
12-29-2005, 09:28 PM
குறுக்காலைபோய் குளப்புறதுக்கு மன்னிக்கவும். இணைய ஊடகத்தால் நன்மையில்லை சீரழிந்து தான் போகிறார்கள் என்று வாதிடப்போகிறவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கு.
தனியே பட்டிமன்ற வாதத்திற்காக என்று இல்லாமல் உண்மையிலும் இளைஞர்களும் யுவதிகளும் சீரழிகிறார்கள் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள்: -1- அச்சடிக்கும் தொழிநுட்பம் வழர்ந்து எழுத்துக்களும் படங்களும் கொண்ட பத்திரிகைகள் சஞ்சிகைகள் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் இருந்தால் அச்சடிக்கும் தொழிநுட்பம் ஆபாசத்தை பிரதி பண்ணி இலகுவாக பகிர வழிவகுக்கிறது என்று சொல்லியிருப்பார்களா? -2- புகைப்பட தொழில்நுட்பம் பாவனைக்கு வந்த காலத்தில் இருந்திருந்தால், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வக்கிரத்தை ஆபாசத்தை பரப்பி பகிர்ந்து சீரழிக்கிறது என்று வாதிட்டிருப்பார்களா? -3- தொலைக்காட்சி தொழில்நுட்பம் பாவனைக்கு வந்த ஆரம்ப காலத்திலிருந்திருந்தால் ஆபாசம் கட்டுப்பாடு இன்றி வானலைகளில் வந்த எல்லோரையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிறது. எம்மை சுற்றியுள்ள வானலைகளில் ஆபாசம் இருக்கு என்றதை நினைக்கவே ஏதோ செய்கிறது என்றிருப்பார்களா? -4- தொலைபேசி பாவனைக்கு வந்த ஆரம்ப காலத்திலிருந்திருந்தால் ஆபாசங்களை நேருக்கு நேர் சந்திக்காமலே உடனுக்கு உடன் அன்னியேன்னியமான முறையில் பகிர வழிகோல்கிறது என்று தொலைபேசியை வீடுகளில் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டிருப்பார்களா? மொத்தத்தில் எந்த வழிதேடித்தரும் தொழில்நுட்பத்தையும் (enabling technologies) அதைப்பாவிப்பவர்களின் கையில்தான் நன்மையும் தீமையும் உண்டு. எந்த ஊடகத்தை எடுத்தாலும் வயதுக்கு மற்றும் பக்குவத்திற்கு ஏற்ற மாதிரி ஆணும் பெண்ணும் பாவிக்கிறார்கள். எதனால் கவரப்படுகிறார்களோ தூண்டப்படுகிறார்களோ வசீகரிக்கப்படுகிறர்களோ அதையே கிடைக்கும் எல்லா ஊடக மற்றும் தொடர்பாடல் முறையினாலும் தொடர்கிறார்கள். அந்த வகையில் புலத்திலோ அல்லது எங்கு இருப்பவர்களுக்கோ இணையத் ஊடகம் விதிவிலக்கல்ல. இந்த விவாத தலைப்பானது பட்டி மன்றம் சூடுபிடிக்க முதலே முடிவு தெரிந்த நிலமையில் இருக்கிறது போலவே தெரிகிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
12-29-2005, 09:40 PM
குறுக்காலபோவான் ஏன் எப்பவும் குறுக்கால போறீங்கள்?? நீங்கள் வாதத்தில் பங்கு பற்ற விரும்பினால் உங்கள் பெயரை பதிவு செய்து இருக்கலாம். மற்றது நீங்கள் சொன்ன கருத்துக்களை வாதம் முடிந்த அப்புறம் சொல்லி இருக்கலாம். மற்ற அணியினர் வாதத்தை வைக்க முதல் அவர்களை சோர்வடையச் செய்யகூடிய கருத்துக்களை தயவு செய்து வைக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பட்டிமன்றத்தில் பங்கு பற்றாதோர் பட்டிமன்றத்தில் பங்குப்ற்றுவோரை உற்சாகம் ஊட்டக் கூடிய கருத்துக்களை முன்வைக்கவும். அவ்வாறு இல்லாத கருத்தை பட்டிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகு வைக்கவும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
<b> .. .. !!</b>
12-29-2005, 09:43 PM
செத்த பாம்பை அடிக்காமல் உயிரோடை இருக்கிற பாம்போடை விளையாடினால் சுவார்சியமாக இருக்கும் எல்லோ?
12-29-2005, 09:58 PM
<b>வாழ்த்துக்கள்!அற்புதமான கருத்துக்கள்! பாராட்டுக்கள்! சோழி அண்ணா! நடுவர் பாடு படு திண்டாட்டம்தான்!ஆஹாஆஹா பட்டிமன்றம் நன்றாக சூடு பிடிக்கிறதே! வாழ்த்துக்கள்! </b>
<b> .. .. !!</b>
12-29-2005, 10:30 PM
எங்கள் பக்க வாதத்தை உங்கள் ஆழமான கருத்துக்களால் எடுத்து வையுங்கள் அஜிவன்
12-29-2005, 10:50 PM
<b>நடுவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு பட்டிமன்ற வழமையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்..!</b>
ஒவ்வொருவரின் வாதமும் முன்வைக்கப்பட்டதும் வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஒரு சுருக்கம் வழங்கி அடுத்தவரை வாதம் முன்வைக்க அழைக்க வேண்டும்..! முன்னைய பட்டிமன்றத்தில் சோழியான் அண்ணாவின் நடைமுறையை அவதானியுங்கள்..! http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 நன்றி..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
12-29-2005, 11:29 PM
அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள்.
இளைஞனுடைய வாதத்தைப்படித்து அதற்காக என் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே சோழியான் தனது கருத்துக்களை முன்வைத்துவிட்டார். அப்படித்தான் நான் நேற்று எழுதியும் இருந்தேன். ஆனால் பின்னர் இரசிகை புதிய அணித்தலைவரைத் தெரிவுசெய்தார். இப்போது இரு அணித்தலைவர்களும் தமது கருத்துக்களை தந்துவிட்டனர் எனது கருத்துக்களை சிறிது நேரத்தில் வைப்பேன் அடுத்து கருத்துச்சொல்ல வருபவரை சிறிது பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
12-29-2005, 11:46 PM
Vasampu Wrote:எங்கள் பக்க வாதத்தை உங்கள் ஆழமான கருத்துக்களால் எடுத்து வையுங்கள் அஜிவன் சின்ன மாற்றம் அடுத்ததாக அனித்தா வருகிறார் அஜீவனுக்காக.
<b> .. .. !!</b>
12-30-2005, 12:13 AM
பிரியசகி அவர்களே! அனித்தா அவர்களுக்கு அடுத்ததாக கருத்தை முன்வைக்க உற்சாகமாகத் தயாராகுங்கள். உங்கள் கருத்துக்கள் எமது வாதத்தை பலமாக்க வாழ்த்துக்கள்.
கமோன் ப்ரியசகி!!! <img src='http://img523.imageshack.us/img523/8451/soli6ji.gif' border='0' alt='user posted image'>
.
12-30-2005, 12:49 AM
<b>இரு நடுவர்களும் தங்கள் கடமையை மிக அழகாக செய்கிறார்கள் வாழ்த்துக்கள்.</b>
<b> .. .. !!</b>
12-30-2005, 01:01 AM
தமிழினி மற்றும் செல்வமுத்து இருவரும் தமக்கே உரிய சிறப்புகளுடன் நடுவர் பணியை சிறப்பாக ஆரம்பித்திருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்..!
சோழியான் அண்ணாவைக் களத்தில் இறக்கியதால் மிகவும் உற்சாகமாக பட்டிமன்றம் நகர ஆரம்பித்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துக்கள் சோழியான் அண்ணா..! இது யாழில் சென்ஜோண்ஸ் - சென்றல் பிக் மச் பார்த்த அதே சூழலை நினைவுபடுத்துகிறது. உங்கள் உற்சாகம் உரமூட்டட்டும்..தொடருங்கோ..! இளைஞன் தலைமையிலான அணியினருக்கு உற்சாகம் நல்க அஜீவன் அண்ணாவை நாரதரை தாழ்மையோடு அழைக்கின்றோம்..! நாரதரே வெளியில் நிற்காமல் பங்காளியாகுங்கள்..! இளைஞன் அணியினரே உங்கள் பக்கம் திறமை நியாயம் இருக்கிறது.. தொடர்ந்து உற்சாகமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள்..! வெற்றி நமதாக்குவோம்..முயற்சியால்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: கள உறவு குறுக்காலபோவானிடமும் நல்ல வளமான சிந்தனையோட்டமும் கருத்துக்களும் இருக்கின்றன. அதையும் இங்கு உள்வாங்க முனையலாமே ரசிகை.! அவர் விரும்பும் பட்சத்தில் அவர் விரும்புகிற அணியில் அவரைச் சேர்த்துவிடுங்களேன்..! <b>எல்லாக் கள உறவுகளுக்குள்ளும் இத்தலைப்பு தொடர்பில் ஒரு கருத்து இருக்கும் விரும்பியவர்களை விரும்பிய அணியில் சேர்ந்து கருத்து வைக்க உதவுகள்..!</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
12-30-2005, 02:18 AM
Quote:நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு இளைஞர் பல தமிழ் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசை தட்டிச் செல்வார். அபார புத்திசாலியாக இருக்கிறாரே என நினைத்து.. ஒருமுறை அவர் பேச்சுப் போட்டியில் பேசி வெற்றியடைந்த பேச்சை, மறுநாள் சிறிதளவாவது பேசிக்காட்டுமாறு கேட்டேன். அவரோ அலங்க மலங்க முழித்து, எதுவுமே நினைவிலில்லை என்றார். எனக்கு அது பெரிய திகைப்பாக இருந்தது. சிறிது காலத்தால் அந்த பெற்றோருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஒரு பேச்சுப் போட்டிக்கு தயாராகும்போது.. தயார் அப் பேச்சை வாசிக்க.. அந்த இளைஞன் திருப்பி சொல்லுவார். இப்படியே திரும்ப திரும்ப சில நாட்கள் நடைபெறும். பின்னர், தாயாருக்கு பேச்சு மனனமாகிவிடும். அவர் பேச்சை பாராமலேயே சொல்ல.. மகன் தாயாரைப் பார்த்தவாறே திரும்ப கூறுவார்.. பின்பு.. தாயார் சத்தத்தை படிப்படியாக குறைத்து சொல்ல, மகன் சத்தமாக கூறுவார். ஒருநிலையில்... தாயார் சத்தமில்லாமல் பேச்சுக்கு ஏற்றவாறு வாயசைக்க, மகன் சத்தமாக பேசுவார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> போட்டி ஆரம்பமாச்சா..?? மண்டபத்திலே பேசுபவர்கள் நிற்கும் இடத்துக்கு நேர் எதிரே தாய் அமர்ந்திருப்பார். பேச வரும் மகன், தாயை பார்ப்பார். தாயின் வாய் சத்தமில்லாமல் அசைந்துகொண்டிருக்கும். அதை சத்தமாக்கி பரிசை தட்டிவிடுவார் மகன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆக, நடுவர் அவர்களே!! கண்ணால் காண்பதுவும் பொய்.. காதால் கேட்பதும் பொய் என்று தங்களுக்கு நானா கூற முடியும்?! என்னதான் பேச்சு, நாட்டியம் என பாண்டித்தியம் காட்டினாலும், அவர்களுக்குள் அந்தந்த நாட்டு மொழியாடல்தானே விருப்புடன் வெளிவருகிறது?!
.
12-30-2005, 02:28 AM
ஈஸ்வர் அணியில் உள்ளீர்கள்.. தயாராக இருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
12-30-2005, 05:51 AM
kuruvikal Wrote:கள உறவு குறுக்காலபோவானிடமும் நல்ல வளமான சிந்தனையோட்டமும் கருத்துக்களும் இருக்கின்றன. அதையும் இங்கு உள்வாங்க முனையலாமே ரசிகை.! அவர் விரும்பும் பட்சத்தில் அவர் விரும்புகிற அணியில் அவரைச் சேர்த்துவிடுங்களேன்..! <b>எல்லாக் கள உறவுகளுக்குள்ளும் இத்தலைப்பு தொடர்பில் ஒரு கருத்து இருக்கும் விரும்பியவர்களை விரும்பிய அணியில் சேர்ந்து கருத்து வைக்க உதவுகள்..!</b> <!--emo& ம்ம் குறுக்காலபோவான் இதுவரையும் அவரது பெயரை பதிவு செய்யவில்லை. அவருக்கு பட்டிமன்றத்தில் பங்கு பற்ற விருப்பமாயின் பெயரை பதிவு செய்யலாம். குருவிகள் சொன்னமாதிரி பட்டிமன்றத்தில் இதுவரை பதிவு செய்யாதோர் பட்டிமன்றத்தில் பங்கு பற்ற விருப்பமாயின் சீக்கிரம் பெயரை பதிவு செய்யவும். நன்றி வணக்கம்
<b> .. .. !!</b>
12-30-2005, 03:10 PM
sOliyAn Wrote:Quote:நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும்<!--emo& சோழியன் பட்டி மன்றத்தில உள்ள எமது கட்சினரை திசை திருப்ப இந்தப் பக்கத்தில் புதுக் கதையெல்லாம் அவிழ்த்து விடுறீங்க...... பார்த்தப்பா............... அவதானமா இருங்க. இவர் இப்படித்தான்.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
|
« Next Oldest | Next Newest »
|