Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்...
#1
<b>ஜோசப் பரராஜசிங்கம்!
--------------------</b>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/12/mandur_1_21998_150px.jpg' border='0' alt='user posted image'>

<b>சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்....
அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்!
எங்களுக்கு மட்டுமே அது புரியும்!!


எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு...
விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் ..
எப்படி விடை பெற்று போயிற்று

தன் மானத்துடன் வாழ்பவனுக்கு...
சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு?

யுத்தம் அழித்தது...
மேகம் அழித்தது...
கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது!

இன்று எம் கூட நின்றவரையும் கொன்று - கர்த்தரே
உன் காலடியில் அவர் ரத்தம் தெளித்து போகிறார்!

அழிவென்றால் தமிழன் - என்று அகராதி
ஒன்று ஆகிடுமோ?

உம்மை அழிவு கொடுத்து எம்மை காத்தவரே - கர்த்தரே
இப்போ நாமழிகிறோம்... வந்து
எப்போது .............
எமை காப்பீர்????</b>
<b> .. .. !!</b>
Reply
#2
சுதந்திரத்திற்காப் போராடிய மகாத்மா காந்தியும் துப்பாக்கினால்தான் இறந்தார்.
சுதந்திரமாகப்போகும் தமிழீழத்தின் சிங்கமும் துப்பாக்கியினால்தான் இறந்தார்.
யேசுவும், காந்தியும், எமது சிங்கம் அவர்களும் இரத்தம் சிந்தியே இறந்தனர். அவர்கள் மனித இனத்தின் விடிவுக்காகவே இரத்தம் சிந்தினர் என்று ஆறுதலடைவோம்.
கண்ணீர் கவிதைக்கு நன்றி இரசிகை.

Reply
#3
ஆமாம் ரசிகை.
அவ் மாமனிதர் கொண்ட தமிழீழக் கனவை நனவாக்க தலைவருக்கு தோள் கொடுப்போம்.
[size=14] ' '
Reply
#4
மனிதம் காக்க வந்த இறைமகனை வீதியில் இழுத்து சித்திரவதை செய்து கொன்றார்கள் அன்று அநியாயக்காரர்கள்..! இன்று ஒரு அப்பாவியை இறைவாசலில் சுட்டுக்கொன்றார்கள் அநியாயக்காரர்கள்..! துப்பாக்கிகள் அநியாயக்காரர்களின் கைகளில் எனியும் இருப்பது தவிர்க்க முடியாததே...!

மனிதர்களில்...அநியாயக்காரர்கள் என்றும் இருக்கிறார்கள்..அவர்கள் உருவாகிக்கொண்டும் இருக்கிறாகள்..அவர்கள் மாறுவதும் இல்லை...அவர்களின் வேசங்கள் மட்டுமே நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருக்கிறது..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<img src='http://img516.imageshack.us/img516/3581/pararajasingam13wq.jpg' border='0' alt='user posted image'>
<b>மாசற்ற பேரொளியே!!
மங்காத ஒளி விள்க்கே!!
மாமனிதன் உங்களிற்கு
மானத்தை விற்றவரால்
மரணம் வந்ததுவோ??

பாலகன் யேசு பிரான்
அவதரித்த நள்ளிரவில்
உன் உயிரை பறித்தனரோ???
யேசுபிரானையும்
இப்படித்தான் கொன்றிருப்பார்
போலும்மைய்யா..

தமிழரின் விடியலுக்காய்
அயராது உளைத்த
தமிழ் அன்னையின் மைந்தனே.
நீங்கள் தமிழரின் வாழ்க்கை
மேட்டில் விதைக்கப்பட்டிருக்கின்றீர்கள்.

உங்கள் உயிர் பறிப்பின் மூலம்
சிங்கள வெறியர்கள்
கூற விளையும் சேதிதான்
என்ன???

சேட்டை பண்ண சிங்களரும்
செத்து மடிய தமிழரும் என்பதையா?

சிங்கள இன மத வெறி பிடித்த
பிக்குகள் சிருத்து மகிழ்கின்றனர்.
சிறுக்கர்களின் மனிதம் அப்படி.
செருக்களம் புலிகள் புக அழைக்கிறார் போலும்..

மகிந்த ராசபக்ச
மனிதமற்ற மனிதனாக
பக்கச்சார்வோடு
தமிழரை கொன்றொளிப்பதன் மர்மம்தான் என்ன????

உலகம் யேசு பாலனின்
பிறப்பால் மகிழ்ந்திருக்க
தமிழர் நாம்,
உன் இழப்பால்
சோகத்தீயில் ஆழ்திருக்கின்றோம்.

இதற்கு பதில் யார் எப்போது கூறுவார்???????</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#6
கவிதை மூலம் நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
எங்களின் எச்சில் சோத்துக்கு ஆசைப்பட்ட சில ...............களை வைத்துக் கொண்டு சிங்கள இனவாதமும் மதவாதிகளும் எமது பொறுமையுடன் விளையாடிப்பாக்கிறார்கள் கூடிய விரைவில் இதன் பலன் தெரியும் அந்த நேரமாவது இப்படி கூட்டிக்குடுக்கிற .............களுக்கு விளங்குதோ எண்டு பாப்பம் (அதுசரி தலையிலை மூளை எண்டு ஒண்டு இருந்தா தானே விளங்கிறத்துக்கு ) பிரதேச வாதம் பேசும் இவர்கள் என்ன செய்கிறார்கள் கிழக்கு மாகாண படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்த்து அழிப்பதன் மூலம் தங்கள் தலையில்தானே மண்ணைப் போடுகிறார்கள் சிங்களவன் தனக்கு தேவைக்கு சரியாக பாவித்து விட்டு தூக்கியெறியும் போது என்ன செய்யப்போகிறார்கள் ..............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
பத்திரிக்கையாளர்கள் பட்டியலை குறைத்துவிட்டு.?? அரசியல்ப்பக்கம் திரும்பிவிட்டார்கள்.?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
முகத்தார், அடிமட்ட ஆயுததாரிகளை பொறுத்தவரை எல்லாம் அறியாமை தான். அதோடை மிகமோசமான வறுமை, வேலைவாய்ப்பு பிரச்சனையாலை சம்பளம் குடுக்கிறாங்கள் எண்டது இன்னொரு ஊக்குவிப்பு. அடுத்த நேரத்துக்கு சாப்பாடு எப்படி என்று தவிக்கிற மனத்தை இப்படியான விடையங்களுக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறது சுலபம்.

உதவி வழங்கல், பொருளாதார முதலீடுகள், சுயதொழில் முயற்சி ஊக்குவிப்புகள் என்பனவற்றில் தென்தமிழீழம் அதிவிசேட கவனிப்பை பெறவேண்டும். முக்கியமாக புலத்திலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் மீண்டும் தமது ஊர் தாம் படித்த பாடசாலைகள் என்று அளவுக்கு அதிகமாக யாழ்பாணத்தில் செலவு செய்கிறார்கள். இதில் மாற்றங்கள் தேவை, நாம் கவனிக்கா விட்டால் வேறுயார் கவனிப்பார்கள்?

துரோகி இருக்கும் மட்டும் தான் நிர்வாக சேவைகளை தென்தமிழீழத்திற்கு விரிவாக்கம் செய்வதில் முட்டுக்கட்டையாக இருந்தான். இப்பொழுது தமிழீழ நிர்வாக சேவைகளின் ஒவ்வொரு அலகுகளும் அங்கு தோற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றன. இதற்கு பக்கபலமாக நின்று எமது பொருளாதார நிபுணத்துவ பங்களிப்புகளை வழங்கி தென்தமிழீழ மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்.

யாழ்பாணத்திற்கு போதியளவு கணனிகளும் தொலைபேசிகளும் அனுப்பிவிட்டம். ஏனைய இடங்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.
Reply
#10
குறுக்குஸ்.........வடக்குகிழக்கு மாகாணசபை ஆரம்பித்தது திருகோணமலையிலை இங்கு வேலைக்கு முதலில் கிழக்கு மாகாண ஆட்களுக்குத்தான் இடம் ஒதுக்கப்பட்டது பிறகு அதை கொண்டு நடத்துவதுக்கு படித்த அனுபவசாலிகள் இல்லாதாதல் வடக்கில் அரச ஓய்வு பெற்றவர்களை மீள் வேலைவாய்ப்பு என்று குடுத்து வேலைக்கு அமர்த்தினார்கள் அவர்கள் மூலமாக சில யாழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலை கிடைத்தது இண்டைக்கு திருகோணமலையை எடுத்துப் பாத்தால் நிறைய யாழ் சனங்கள் சொந்த இடம் வாங்கி வியாபாரம் தொழில் என செட்டில் ஆகிவிட்டார்கள் ஆனால் மட்டக்களப்பு அப்பிடியல்ல 50வருடம் பரம்பரையாக இருந்த ஆட்களையே 5மணித்தயலாத்திலை ஊரைவிட்டு போகச் சொன்னார்கள் பிரதேச வாதம் பேசுகிறவர்கள் இந்த லட்சணத்திலை யாராவது அங்கு போய் ஒரு தொமில் நிறுவனத்தைத் தொடங்க முன் வருவார்களா.....?????
இதைவிட சாப்hட்டுக்கு வழியில்லை எணடா பிச்சை எடுக்கிறது இதை விட்டுட்டு இனத்தைக் காட்டிக்குடுத்து சாப்பிடுவதைவிட ....................... செய்து சம்பாதித்து சாப்பிடலாம்.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
ரசிகை அக்காஇ இருவிழி கவிதைகள் நன்றாக இருக்கு ....கவி மூலம் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்..
Reply
#12
காலம் அறிந்து ரசிகை, இருவிளி வடித்த கவி மனதின்ர பாரத்தைக் கூட்டி விட்டதுதான் உண்மை... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Reply
#13
முகத்தார் என்ன நீங்கள் இப்படி சலித்துக் கொள்ளுறியள். யாழ்ப்பாணத்தை எடுங்கோ, ஊர்சண்டை குத்து வெட்டு என்று சடைபிடிக்கிறமோ இல்லையோ? அதுவும் ஒருவகை பிரதேசவாதம் தான். குழப்பத்தில் அவலத்தில் இருக்கும் பலவீனமான மனங்கொண்டவர்களை ஏதே ஒரு வழியால் பிரித்தாள நினைத்தால் நடத்தி முடிக்கலாம். அதேபோல் தான் மட்டக்களப்பிலையும் நடந்தது. அதுவும் மிகவும் திட்டமிட்டு நயவஞ்சகமாக பிரச்சாரங்கள் பல தரப்பாரின் உதவியுடன் கட்டவிள்த்து விடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அவாறான மிக ஆழமான தூண்டுதலுக்கு மத்தியிலும் இறுதியில் நடந்து முடிந்ததை பார்க்கும் போது மட்டக்களப்பு மக்கள் மிகவும் பக்குவத்தோடும் நிதானத்தோடும் வெற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தென்தமிழீழத்தில் பொருளாதார முதலீடு என்பது, முதலாளித்துவ நோக்கோடு ஆக ஆரம்பத்தில் இருக்க முடியாது. அதாவது வினைத்திறன் இலாபநோக்கம் என்பன இருக்க வேணும் ஆனால் அவர்களின் உழைப்பை மூலப்பொருட்களை சுரண்டாது முதலீட்டில் கிடைக்கும் வருவாயை அந்தப் பிரதேசத்திற்கே (முக்கியமாக மனிதவளங்களில்) மீள்முதலீடு செய்யப்பட வேண்டும்.

எமது நிலையில் இருந்து கொண்டு சாப்பிட வழியில்லாட்டி பிச்சை எடுத்துச்சாப்பிடலாமே இல்லாட்டி ....... செய்து சாப்பிடலாமே என்று கருத்தளவில் சொல்லிவிடலாம். முதற்கண் பாமரமக்களிற்கு இனப்பற்று மொழிப்பற்று தேசியப்பற்று வருவதற்குரிய விளக்கங்கள் தொளிவுகள் எந்தளவிற்கு இருக்கும் என்றும் கொஞ்சம் யோசியுங்கள். இன்று மட்டக்களப்பில் எதிரிகளால் விலைபேசப்பட்டு துரோகிகளாகும் எம்மினத்தவர்களின் தவறில் ஒருபகுதி எம்மையும் சாரும் என்பது எனது தாழ்மையான கருத்து. யாழ்பாணத்திற்கு பணம் அனுப்பி தேர்கட்டுவோர், கோயில்களிற்கு பளிங்குக்கற்கள் போடுவோர் கொஞ்சம் சிந்தியுங்கள்.
Reply
#14
kurukaalapoovan Wrote:.எமது நிலையில் இருந்து கொண்டு சாப்பிட வழியில்லாட்டி பிச்சை எடுத்துச்சாப்பிடலாமே இல்லாட்டி ....... செய்து சாப்பிடலாமே என்று கருத்தளவில் சொல்லிவிடலாம். முதற்கண் பாமரமக்களிற்கு இனப்பற்று மொழிப்பற்று தேசியப்பற்று வருவதற்குரிய விளக்கங்கள் தொளிவுகள் எந்தளவிற்கு இருக்கும் என்றும் கொஞ்சம் யோசியுங்கள். இன்று மட்டக்களப்பில் எதிரிகளால் விலைபேசப்பட்டு துரோகிகளாகும் எம்மினத்தவர்களின் தவறில் ஒருபகுதி எம்மையும் சாரும் என்பது எனது தாழ்மையான கருத்து. யாழ்பாணத்திற்கு பணம் அனுப்பி தேர்கட்டுவோர், கோயில்களிற்கு பளிங்குக்கற்கள் போடுவோர் கொஞ்சம் சிந்தியுங்கள்.

:oops: :oops: :oops: :oops:
::
Reply
#15
குறுக்கால போவான் யாதார்த்த நிகழ்வுகளை சம்மட்டியால் அடித்தது போன்று இடித்துரைக்கும் உங்கள் வாதம் அற்புதம் என்று ஐஸ் வைக்க மாட்டேன் . நீங்கள் சொன்னவை அனைத்தயும் (ஒரு சில தவிர்த்து)மறுதலிக்க நினைப்பவர்கள் முதலில் ஒரு கணம் யோசித்தே ஆக வேண்டும் என்ற நிலையை விட்டு வைத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! ஆனாலும் சிறு நெருடல்

"அவாறான மிக ஆழமான தூண்டுதலுக்கு மத்தியிலும் இறுதியில் நடந்து முடிந்ததை பார்க்கும் போது மட்டக்களப்பு மக்கள் மிகவும் பக்குவத்தோடும் நிதானத்தோடும் வெற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்." --- இதுதான் அது. நீங்கள் குறிப்பிட்டு சொல்ல வந்தது மீளவும் எமது கட்டுபாட்டுக்குள் அந்த பிரதேசங்களை கொண்டு வந்ததை பற்றி என்றால் --
அதனை செய்து முடித்தது எங்கள் இராணுவ பலம் என்பதே நான் நினைப்பது! :roll:

ஆகவே அம்மக்களின் ஐயங்கள் சோர்வுகளை போக்க
நாம் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்றும் நினைக்கிறேன். 8)
-!
!
Reply
#16
நன்றி வர்ணன். இங்கு எழுத முற்படுவது அங்குள்ள பிரச்சனைகளின் சமூகப்பர்வையிலிருந்து மாத்திரம். துரோகியின் சதி வெற்றி கொள்ளப்பட்டதுக்கு புத்திசாதுரியமான பக்குவமான தலமை, புலநாய்வுப்பலம், இராணுவ பலம் என பல. ஆனால் அந்த ஆரம்ப வெற்றியை தக்க வைக்க இன்றைவரை உறுதுணையாக இருப்பது பிரதேசவாதத்தால் விலைபோகாத மக்கள்.

ஆனாலும் ஒரு சிலர் பரிதாபகரமாக விலைபோவதால் மிகுதி அறுதிப்பெருமான்மையான மக்களின் பக்குவமும் நிதானமும் தியாகங்களும் கொச்சைப்படுத்த சந்தர்பங்களை கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த புத்திமான்களை தலைவர்களை இழக்கிறார்கள். மனிதவள இழப்பை ஈடுசெய்வது இலகுவான ஒன்றல், ஒன்று இரண்டு சந்ததிகள் உழைக்கவேண்டும்.

இங்கே அடிப்படையில் ஏன் ஒருவன் சமூகவிரோதி தேசவிரோதி ஆகிறான்? அதுவும் தண்டனை என்ன என்று தெரிந்தும்?

ஒரு சமூகத்துக்கு யார் மிகவும் ஆபத்தானவன்?
எந்த வழியிலும் தண்டிக்கப்பட முடியாதவன்.

ஏன் தண்டிக்கப்பட முடியாதவன்?
அவனுக்கு இழப்பதற்கு என்று ஒன்றும் இல்லை.
Reply
#17
குறுக்கால போவான் அவர்களே...
உங்கட கருத்து ஆழத்தின் மீது நான் வைச்ச நம்பிக்கையை நீர்த்து போக வைக்கிறீர்கள்.

அந்த ஆரம்ப வெற்றியை நாங்கள் தக்க வைத்து கொள்கிறோம்.. எங்கே?
அரச கட்டுப்பாட்டு பகுதியிலா?இல்லை எங்கள் ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்திலா?
-!
!
Reply
#18
நீங்கள் சொன்ன கருத்து சரி என்று சொல்லலாம் . ஆனால் கெளசல்யன் அண்ணா இ சேனா இ பாவா போன்ற போராளிகளை எப்படி இழந்தோம்?
-!
!
Reply
#19
எனது தாழ்மையான கருத்து, இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மக்களும் புலிகளில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கை நிலைப்பாடு என்றுபார்க்கும் போது அவர்கள் யாருடைய கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என்ற வாதத்தில் அர்த்தம் இல்லை எனநினைக்கிறேன்.
Reply
#20
varnan Wrote:அதனை செய்து முடித்தது எங்கள் இராணுவ பலம் என்பதே நான் நினைப்பது! :roll:

ஆகவே அம்மக்களின் ஐயங்கள் சோர்வுகளை போக்க
நாம் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்றும் நினைக்கிறேன். 8)

நிற்சயமாய் இராணுவ பலம் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்..! போர் நிறுத்த நேரம். படை நகர்வு சாத்தியமானதல்ல.... அங்கு இருந்த மக்களின் பங்களிப்பு இல்லாமல் கைப்பற்ற முன்னம் அங்கு உள் நுளைந்து பதுங்குதல் சாத்தியம் இல்லை.... அது மக்களின் வளிகாட்டல். இதைவிட விபரம் தேவை இல்லை..... அங்குள்ள மக்கள் மட்டும் எதிர்த்திருந்தால் கதை வேறுமாதிரி இருந்திருக்கும்..... இப்போதும் அங்கு நிலைதல் முடியாத செயலாகியிருக்கும்.......
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)