Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு கண்காணிப்புக்குழு செல்வதை தவ
#1
தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு கண்காணிப்புக்குழு செல்வதை தவிர்த்துக்கொள்ளும்?
(எஸ்.என்.ஆர். பிள்ளை)


அம்பாறை அறுகம்பை பகுதியில் வைத்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து நாம் வழங்கிய தீர்ப்பை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளõவிட்டாலும் எமது தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லையென யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹொக்லண்ட் நேற்று கேசரிக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என நாம் தீர்ப்பு வழங்கினோம். ஆனால், அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அவரது நீண்ட கடிதத்தில் மறுத்துரைப்பதற்கான காரணங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் வழங்கியுள்ள தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லையென தமிழ்ச்செல்வனுக்கு அறிவித்துள்ளேன்.

புலிகள் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், புலிகளே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் ஹொக்லண்ட் தெரிவித்தார்.

அதேவேளை, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதால் அதற்குப் பின்னர் யாழ். மாவட்டத்தில் பரவலான பேரணிகள், கலவரங்கள் நடைபெறலாம் என யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை மோதல்கள், தாக்குதல்கள் இடம்பெறும் வேளைகளில் அவ்விடத்துக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் தமது கடமையை செய்யும் அதேவேளை, தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.


Virakesari
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)