12-17-2005, 02:13 AM
<b>தமிழர்களிடையே இருவேறு கலாச்சார முறைகளும் குடும்ப முறன்பாடுகளும்</b>
சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா? அடடா இளையராசாவின் காந்தக்குரலில் ஒலிக்க தமிழ் மக்கள் பலர் கேட்டிருப்பர். கேள்ப்பதோடு நிக்காது, ஊர்விட்டு வேறு ஊர் சென்று வாழ்பவர்கள் நிச்சயமாக தமது பளைய நினைவுகளை மீட்டி பார்த்திருப்பர். இதே போலத்தான் பெரும் பாலான புலம்பெயர் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்ந்தாலும், தாம் தவழ்ந்து உறவுகளோடு கூடி வாழ்ந்த அந்த இனிய சுற்றத்தையும் சூழலையும் எண்ணி மனம் வெதும்புவர்.
புலம்பெயர் தமிழ்மக்களின் வாழ் நிலைதனை சரியான முறையில் சொல்லுவதாயின், புலம்பெயர் தமிழர்களை நான்கு பிரிவினராக பிரித்தல் வேண்டும்.
1. முதலாம் பிரிவினர்: புலம் பெயர்நாடுகளிற்கு முதலாம் தலைமுறையாக வந்தவர்கள் ( மேற்படிப்பிற்காவும், தமிழர்மீதான ஆரம்பகால அரசபயங்கரவாதத்தினால் பாதிப்பிற்குள்ளாகி புலம்பெயர்நாடுகளில் தஞ்சம் கோரியவர்களும் அடக்கம்)
2. இரண்டாவது பிரிவினர்: இவர்கள் குறிப்பாக 1990-2005 வரையான காலப்பகுதில் புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினர்( இவர்கள் பெற்றவர்களைப் பிரிந்து புலம்பெயர்நாடுகளின் தனிமையாகவோ இல்லை உறவினர் கூடவோ வாள்கின்றனர். அத்தோடு இவர்களின் புலம்பெயர்விற்கானா காரணம்: சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையாளர்களின் கொடுரத்தாக்குதல்களால் பாதிப்பிற்குள்ளாகி உறவுகளை இளந்து புலம் பெயர் நாடுகளில் தஞ்சம்மடைந்து வாழ்கின்றார்கள், இவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் புலம்பெயர் நாடுகளால் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு. வாழ்வுரிமை நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றார்கள்.
3. மூன்றாவது பிரிவினர்: இவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இரண்டாம் தலைமுறையினர். இவர்கள் முதலாம் தலமுறையினரின் பிள்ளைகள். அத்தோடு புலம்பெயர்நாடுகளின் பிறந்து இரண்டு கலச்சாரங்களில் சிக்குண்டு வாழ்கின்றவர்கள். சொல்லப்போனால் இரண்டு படகில் கால் வைத்தவர்களின் நிலைதான் இவர்களின் நிலையும்.
நன்றி.
சோழியனண்ணாவின் நினைவுபடுத்தலோடு
4. நான்காவது பிரிவினர்: உறவினர் என்னும் அடைமொழியுடன் உறவுகளால் தாயகத்திலிருந்து புலம்பெயர் நாடுகளிற்கு அழைக்கப்பட்டவர்கள். ( இவர்களில் கூடுதலானோர் தமது பிள்ளைகளால் வரவழைக்கப் பட்டு அவர்களுக்கு முற்றிலும் அன்னியமான வாழ்கைச்சூழலில் அவதியுறுகின்றவர்கள்)
<b>எனது பார்வையில் தமிழரின் கலாச்சாரம்</b>
தமிழர்களும் ஏனைய இனங்களைப்போல தமது கலை காலாச்சாரத்தின் பால் பற்றுக்கொண்டவர்கள். கலாச்சாரம் என்பதற்கு வரைவிலக்கணம் கொடுக்க நான் ஒரு மேதை அல்ல. இருந்தபோதிலும் எனது பார்வையில் கலாச்சாரம் என்பது மனித நாகரீக வளர்ச்சியில் தோன்றிய புதிய சிந்தனையின் வெளிப்பாடும், ஒவ்வொரு சூழலுக்கேற்ப மனிதனது வாழ்வியலை மேம்படுத்தவல்ல ஒரு சாரம் மனிதனின் வாழ்வாதாரம் ( ஆடல் பாடல் மூலம் இன்னொரு மனிதனுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு) இவ்பாங்கானது ஒவ்வொரு சமூகங்களாலும் வெவ்வேறு கோணங்களின் பார்க்கப் படுகின்றது. இந்த அடிப்படையில் தமிழ் மொழி பேசுகின்ற மக்களாகிய நாமும் நமது மொழியின் உதவியோடு ஆடல் பாடல்கள் இன்னும் பல செயல்களினூடாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு சமூகக் கட்டமைப்பை நிறுவி. அக் கட்டமைப்பின் துணையோடு காலம் காலமாக நமது மூதாதயரின் சமூக முன்னேற்ற பாதைக்கான விழுமியங்களின் வளிகாட்டலோடும் பண்படுத்தப்படும் ஒரு சாரம் அதுவே கலாச்சாரம் என எனது பார்வையாய் முன்வைத்து. மேலும் தொடர்கின்றேன்.
<b>எனி புலம்பெயர் நாடுகளில் முதலாம் தலமுறையினரின் வாழ்வும் அவர்கள் எதிர் நோக்கிய/நோக்குகின்ற சவால்களைப்பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்</b>.
இன்று நாம் புலம் பெயர்வில பல சிரமங்கள் இருந்தாலும், எப்படியாவது புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற உறவுகள்(அப்பா,அம்மா, அண்ணன்,அக்கா, மாமா மாமி, சித்தப்பா, சித்தி......) நம்மை வரவேற்க இருக்கின்றார்கள் என்கின்ற துணிவு ஒரு தெம்பை நமக்கு தந்ததுண்டு. அதே போல காசு பணம் என பார்த்தால், காலோ என்னும் ஒரு வார்த்தையில் மறுநாளே நம்மை நெருங்கும் வசதிவாய்ப்புக்கள் இன்றுபோல அன்று அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. எனக்கு ஒரு பெரியவர் சொன்னார் "நான் வெளிநாடு வர வெளிக்கிட்ட போது, கையில அஞ்சு சதம் காசு கூட இல்ல, தெரியுமோ தம்பி. என்ர கூடப்பிறந்த உறவுகளட்டயும் உற்றார் சுற்றத்தட்டையும் குருவி சேர்ப்பதைப்போல சேர்த்து, காணாததற்கு வட்டிக்கு கடன்வாங்கி ஒருவாறு கடலைக் கடந்து வந்தா பின்னால் தீராத சோகம் எம்மை சுழ்ந்ததையா" என கனத்த மனதோடு தனது பழய நினைவினை மீட்டி. இன்றய வாழ் நிலையை சொல்லியும் சொல்லாமல் என்னிடம் விட்டுச்சென்றார். அவரை நினைத்தால் எனக்கு இப்பவும் கண்கலங்குகின்றது. அவரின் இன்றய நிலை அவ்வளவு சங்கடங்களோடு கூடிய சோகம் நிறைந்த கதை. இப்படி பல முதலாம் தலமுறையினர் வாழ்வைழந்து அவலத்துள் வாழ்கின்றார்கள் ஆனானும், பலர் சவால்களை சமாளிக்கும் திறன்படைத்த வெற்றியாளர்களாகவும் திகள்கின்றார்கள். அண்மையில் நான் பிருத்தானியாவிற்கு சென்றிருந்தேன்.
பிருத்தானியாவில் பல தமிழர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லாது விடினும். சௌத்கரோவில் இருக்கக்கூடிய பல வியாபார நிறுவனைங்களை பார்த்தேன். அங்கே பல வியாபார நிறுவனங்கள் இருந்த போதிலும் சில நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர்கள் தாம் முன்பு இதுபோன்ற வியாபார நிலையங்களை தொடங்கிய பொழுது தாம் சந்தித்த சவால்களையும். தமது இணைவிடாத முயற்சியின் பயனாக தாம் அது போன்ற நிலையங்களை இன்று நடத்த முடிகின்றதென சொன்னார்கள். அவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை விடுத்து. நான் நோர்வேயில் வசிப்பவன் ஆகையால். பிருத்தானுயாவிற்கு அண்மையிலே தான் முதல்த்தடவையாக சென்றிருந்தேன். அங்கே என்னை அதிசயிக்க வைத்த விடயம். சௌத்தோல் என்னும் நகரில் கிமாலயா என்னும் திரையரங்கில் இலங்கை இந்தியாவைப்போலவே வண்ணப்படங்கள் வெளியே ஒட்டப்பட்டு. தினமும் இரண்டு அல்லது மூன்றுகாட்சிகள் திரையிடப்படுகின்றன. தமிழ் படத்தினை ஐங்கரன் நிறுவனம் காண்பிக்கின்றது. நான் சில நாட்களே அங்கு தங்கி இருந்தமையால், அதிகம் தமிழர் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு வேதனையான செய்தி நமது இளைய தலைமுறை (என் வயதிலும் இரன்டு மூன்று வயது குறைந்தவர்கள்) மிகவும் கவலைக்கு இடமான முறையில் தாய் தந்தயர் இருந்தும் யாரும் அற்றவர்போல், தெருக்களில் கூட்டாக சேர்ந்து குறிக்கோள் அற்றவர்போல் சுற்றுவதைப் பார்க்கயிலே கொஞ்சம் நெருடலாக இருந்தது. இதனைப்பற்றி இளைஞ்னர்கள் பற்றி எழுதும் பொழுது கொஞ்சம் விரிவாக எழுதுகின்றேன்.
நோர்வேயில் இடர்கள் நிறைந்திட்ட போதினிலும், வெற்றி என்னும் கனி பறித்து நின்மதியை தொலைத்துவிட்ட உறவுகளின் நிலை.
நோர்வேயில் பல முதலாம் தலமுறைனரோடு தொடர்புகளை பேணுகின்றவகின்ற என்ற வகையில். அவர்களின் உணர்வுகளையும் இங்கே பகிந்துகொள்ள முயலுகின்றேன். நல்லாச் சிரித்து பேசுகின்ற ஒருவர். எனது கருத்துக்களோடு முறன்படுகின்ற ஒரு ஐபது வயது மதிக்கத்தக்க அனுபவங்கள் நிறைந்த மனிதர். நான் அவரின் உணர்வுகளைக் கிளறும் வண்ணம். ஐயா இப்ப இப்படி சந்தோசாமா எங்களோடு கதைப்பதைபோல எப்போதும் சந்தோசத்தோடா இருப்பீர்கள்? தம்பி மனிதன் எல்லாநேரமும் இருக்க முடியாது, ஆனாலும் சிலநேரங்களில் சந்தோசமா இருக்க வேணுமெண்டு விரும்பினாலும் அது சாத்தியப் படுவதில்லை. ஐயா நீங்கள் நோர்வேக்கு வந்த போது, நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எப்படியானவை? ம்ம் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறீர். ஆள் சின்னவனெண்டாலும் விசயத்தில கண்ணாகத்தான் இருக்கின்றீர். சரி நமது அனுபவத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ளத்தானே வேணும், என்றவாறு தொடர்ந்தார்.
நாங்கள் நோர்வேக்கு ஒருமாதிரி விமானமூலம் இங்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் எம்மை ஒரு கப்பலில் கொண்டுபோய் இங்கத்தய பொலித்தி( காவல்துரையினர்) விட்டாங்கள். தனிய நான் மட்டுமில்லை என்னோட என்னும் எத்தனையோ அங்கட சனமும் வந்தது. அங்க ஒரெ சந்தொசமாய்த்தான் எல்லாரு இருந்தனாங்கள். வந்தவுடன் இங்கத்தய சாப்பாடுகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு மூண்டு நாளா இந்த பிரச்சினை தொடர்ந்தது. ஒருநாள் பொரிச்ச கோழி கால் கொண்டுவந்து தந்தாங்கள். எனக்கு அதைப்பார்த்ததும் பாம்பின் தோல் தொன்றியதால் அன்று போராவும் சாப்பிடாமலே படுத்துவிட்டேன். பிறகு நாள் போக போக என்ன கருமாந்திரமெண்டாலும் திண்டுதானே ஆக வேண்டும் என்கின்ற நிலையில், நான் ஒரு மதிரி என்னை பநோர்வேயில் பல முதலாம் தலமுறைனரோடு தொடர்புகளை பேணுகின்றவகின்ற என்ற வகையில். அவர்களின் உணர்வுகளையும் இங்கே பகிந்துகொள்ள முயலுகின்றேன். நல்லாச் சிரித்து பேசுகின்ற ஒருவர். எனது கருத்துக்களோடு முறன்படுகின்ற ஒரு ஐபது வயது மதிக்கத்தக்க அனுபவங்கள் நிறைந்த மனிதர். நான் அவரின் உணர்வுகளைக் கிளறும் வண்ணம். ஐயா இப்ப இப்படி சந்தோசாமா எங்களோடு கதைப்பதைபோல எப்போதும் சந்தோசத்தோடா இருப்பீர்கள்? தம்பி மனிதன் எல்லாநேரமும் இருக்க முடியாது, ஆனாலும் சிலநேரங்களில் சந்தோசமா இருக்க வேணுமெண்டு விரும்பினாலும் அது சாத்தியப் படுவதில்லை. ஐயா நீங்கள் நோர்வேக்கு வந்த போது, நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எப்படியானவை? ம்ம் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறீர். ஆள் சின்னவனெண்டாலும் விசயத்தில கண்ணாகத்தான் இருக்கின்றீர். சரி நமது அனுபவத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ளத்தானே வேணும், என்றவாறு தொடர்ந்தார்.
நாங்கள் நோர்வேக்கு ஒருமாதிரி விமானமூலம் இங்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் எம்மை ஒரு கப்பலில் கொண்டுபோய் இங்கத்தய பொலித்தி( காவல்துரையினர்) விட்டாங்கள். தனிய நான் மட்டுமில்லை என்னோட என்னும் எத்தனையோ அங்கட சனமும் வந்தது. அங்க ஒரெ சந்தொசமாய்த்தான் எல்லாரு இருந்தனாங்கள். வந்தவுடன் இங்கத்தய சாப்பாடுகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு மூண்டு நாளா இந்த பிரச்சினை தொடர்ந்தது. ஒருநாள் பொரிச்ச கோழி கால் கொண்டுவந்து தந்தாங்கள். எனக்கு அதைப்பார்த்ததும் பாம்பின் தோல் தொன்றியதால் அன்று போராவும் சாப்பிடாமலே படுத்துவிட்டேன். பிறகு நாள் போக போக என்ன கருமாந்திரமெண்டாலும் திண்டுதானே ஆக வேண்டும் என்கின்ற நிலையில், நான் ஒரு மதிரி என்னை பழக்கப் படுத்திக் கொண்டேன். என்றவழர்....
தொடரும்......

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->