Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படிப்போகுது ஜெயா 'ஆட்சி.....!'
#1
ஸ்பிக் ஊழல்: ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை:

அரசின் வசம் இருந்த ஸ்பிக் நிறுவனத்தின் பங்குளை அந்த நிறுவனத்துக்கே மிகக் குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு ரூ. 28 கோடி நஷ்டம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் நடந்தது. அந்த நிறுவனத்தின் பங்குகள் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திடம் இருந்தன.

அதை அடிமாட்டு விலைக்கு ஸ்பிக் நிறுவனத்துக்கே அரசு விற்றது. இதனால் அரசுக்கு ரூ. 28 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய நிதித்துறை செயலாளர் மற்றும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. திமுக ஆட்சியில் இது தொடர்பாக தனி நீதிமன்றத்திலும் ஒரு வழக்குப் பதிவானது.

இந்த வழக்கில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்ட 18 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இன்று சாட்சிகளின் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்தது.

இதையடுத்து குற்றவியல் நடைறைச் சட்டம் 313ன் கீழ், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில் போயஸ் கார்டனுக்கே கேள்விகளை நீதிபதி அனுப்ப, அங்கு உட்கார்ந்து கொண்டே நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா பதில் அனுப்பி நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்கியது குறிப்பிடத்தக்கது. இதை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாகக் கண்டித்து தான் விசாரணையை பெங்களூருக்கு மாற்றியது நினைவுகூறத்தக்கது.

ஜெசசி முதுமலை பயணம்?

<img src='http://thatstamil.com/images16/ele-275.jpg' border='0' alt='user posted image'>
முதுமலை யானைகள் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படை வீரர்களில் ஒருவர்

இப்போது ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் வரும் 8ம் தேதி மைசூர் செல்கின்றனர்.

சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் செல்லும் அவர்கள் பூஜை முடித்துவிட்டு அங்கிருந்து முதுமலை செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

முதுமலையில் கோவில் யானைகளுக்கு ஓய்வு தருவதற்காக முகாம் நடத்துவதாகக் கூறி, அவை அடித்து லாரிகளில் ஏற்றி இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

யானைகள் ஓய்வு முகாம் என்ற பெயரில் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் கூறின.

8ம் தேதி பௌர்ணமி என்பதால், அன்றைய தினம் கஜபூஜை நடத்துவது மிகப் பெரும் நலன்களைத் தரும் என்பதால் அன்றைய தினம் முதுமலையில் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதுமலை பகுதி வீரப்பன் நடமாட்டம் உள்ளது என்பதால் இப்போதே அங்கு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய முதுமலை யானைகள் முகாமில் இப்போது 81 யானைகள் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு ராசியான 9) உள்ளன.

Thanks thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஜெயலலிதா முதுமலைக்கு போனால் அங்கே மொத்தம் 82 யானைகளாகி விடுமே பின்பு ராசியான எண் குழம்பிடுமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Tharma Big Grin
Reply
#3
அவர் போனால் கூடவே இன்னொரு யானையும போகுமே !
அப்ப கணக்கு சரியாகும் (சசிகலா )
[b] ?
Reply
#4
யானை இப்படியும் பிளிறுகிறது...எல்லாம் சிங்கத்தின் மேலான விடுவாசமோ...அப்பதானே ஒவ்வொரு வழக்கா வெளிவர வெளிவர பாராட்டுப் பறந்து வரும்....சுத்துமாத்தான உலகமடா... ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனுக்கு பாராட்டுறான்......இதுகள் எல்லாம் இருந்தால் அமெரிக்க சி ஐ ஏ சொன்னது போல 2015இல் இந்தியா பிராந்திய வல்லராசாவது கனவுதானோ...என்னவோ....!

இதையும் தான் கொஞ்சம் வாசியுங்கோவன்...

விடுதலை புலிகளை எச்சரிக்க வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கோரிக்கை

சென்னை:

தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரும்,இலங்கை மீனவர்களும் அடிக்கடி, தமிழக மீனவர்களை கடத்திச் செல்வதைத் தடுக்கக் கோரி பலமுறை தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக கடந்த 16ம் தேதியும் கடிதம் எழுதியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தியதாகத் தகவல் வெளியானது. ஆனால் அந்த மீனவர்கள் திரும்ப வந்த பிறகு, அவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் என தெரியவந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளது, தமிழக பாதுகாப்புக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இந்தியாவின் இறையாண்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கூட்டு ரோந்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

News from Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)