Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லேக்குள்ளை!!!!!!!
#1
வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவ தளபதி ஆலோசனை
[வியாழக்கிழமை, 1 டிசெம்பர் 2005, 16:58 ஈழம்] [வவுனியா நிருபர்]
இந்தியாவின் தென்பகுதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் பி.எஸ் தக்கார் இன்று வியாழக்கிழமை வவுனியாவின் சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவல் நிலைகளுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.


இன்று காலை வவுனியாவுக்கு உலங்குவானூர்தியில் சென்ற அவர் சிறிலங்கா இராணுவ தளபதியை வவுனியா ஜோசப் முகாமில் சந்தித்தார்.

பின்னர் வவுனியா ஓமந்தை பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அப்பகுதி இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் முன்னரங்க காவல் நிலைக்கும் சென்று அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகளை செய்து செய்ய வேண்டிய மாற்றீடுகள் தொர்டபாகவும் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது வவுனியாவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் வவுனியா மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு இருப்பதாகவும் இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/index9.php?cn=22162
" "
Reply
#2
ஜெயசுக்குறுவை புூசை பண்ணி திரும்பத் தொடங்கப்போயினமோ?
.
Reply
#3
இலங்கை படைகள் புலிகளோடு மரபு வழியில் மோதுவார்களா என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏற்கனவே ஆக்கிரமித்த பிரதேசங்களை தக்கவைப்பதில் பல சிக்கல்கள்.

அவர்கள் புலிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்க கூடியது ஒட்டுப்படைகள், LRRP உளவாளிகளை வைத்து கரந்தடி பாணியிலான நடவடிக்கைகள். புலிகளின் கோட்டையான வன்னி மீது இந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முக்கி பின் தளமாக இருந்து வந்தது வவுனியா ஜோசப் முகாம். இன்றும் எதிர்காலத்திலும் அது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய முக்கியத்துவத்தை வவுனியா இன்னும் இழக்கவில்லை.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)