Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
இந்திய ஊடகங்களுகக: வக்காலத்து வாங்கும் ராக்கோழி அவர்களே மன்னிக்கவும் ரோக்கோழி அவர்களே இந்திய ஊடகம் எமக்கு என்ன நல்லது யெ;திருக்கிறது? அண்மையில் நடைபெற்ற அனைத்து சமாதான நடவடிக்கைகளையும் ஒரு அம்மைக்கு பயந்து (விசக்கிருமி??) செய்த அனுபவம் மாதிரி நமது கருத்து இல்லை! நாம் ஆருக்கும் பயப்பட வேண்டிய தேவைலயில்லை. நீங்கள் சந்தா அட்டை வித்து தான் சாப்பிடவேணுமெண்டால் அது உங்கடை தலை விதி! ஆனால் அட்டை விலைப்படும் எண்டு மட்டும் கனவு காணாதையுங்கோ. நம்மடை ஆக்கள் ஓசி எண்ட படியால் தான் பாத்;தவை, காசு கொடுத்து குப்பையை பார்க்க அவைக்கு விசரோ அல்லது ரோக்கோழியோ??
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இலங்கைத்தமிழர்களுக்கென்று ஒரு சனலை இயக்கும்படி சன் டிவியைக்கேட்கலாம்.
அவர்களின் வளர்ச்சியைத்தடுக்க முடியாது. அவர்களின் ஒலிபரப்பை ஒட்டுமொத்தமாக பகிஸ்கரிக்க எம்மவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவ்வாறு செய்ய அவர்கள் எதிரிகளும் அல்லவே.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இந்திய ஊடகங்களுக்கு கருத்துதெரிவிப்பதை விட
நம்மக்களுக்கு தெரிவியுங்கள்
எமக்கு இந்த நாட்டில் வதிவிடஉரிமை கிடைத்துவிட்டது
எமக்கு எமது நாடு தேவையில்லை எமது மொழி தேவையில்லை என்று பெரும்பாலான எமது மக்கள் எண்ணும்போது இந்திய ஊடகங்களை குற்றம்சொல்லி
என்ன பயன் நாங்கள் ஒற்றுமையாகும் வரை இதனைப்பற்றி கருத்துஎழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தமிழக தொலைக்காட்சிகள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் எம்மவர்கள்தான். இந்திய சினிமாவின் தாக்கம்.. எம் புலம் பெயர் சமுதாயத்தின் தொலைக்காட்சிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
சின்னத்திரை தொடர்களுக்காக செலவிடும் பணத்தை... முன்பு எம்மவரின் ஆக்கப்படைப்புகளுக்கு ஊக்கம் கொடுத்திருக்கலாம். எம்மிடையே வளரத்துடிக்கும் பல கலைஞர்கள் எம்மிடையே இருக்கின்றார்கள். அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஊடகங்களே பெரும் பங்கை வகிக்கின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழக தொலைக்காட்சிகள் எம்பிரச்சனைகளுக்கு கைகொடுக்க போவது இல்லை. அதைப்பற்றி ஆராயப் போவதும் இல்லை. எமது வளர்ச்சியை மழுங்கடிக்கவும், தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவுமே இந்த தொலைக்காட்சிகளின் ஊடுருவல் அமைந்திருக்கின்றது. அழுது வடியும் தொடர்களை பார்த்து இந்த பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள். புலம்பெயர் மண்ணில் சாதிக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. குடும்பத்தின் உறவில் கூட ஒற்றுமை குறைந்து கொண்டு வருகின்றன. குடும்பத்துடன் வெளியே உலாத்தசெல்ல முடியாத நிலை. ஓன்றாக உணவு உண்ண முடியாத நிலை என்று இப்படி பல அடுக்கிக் கொண்டே போகலாம். காலம் கடந்து சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பகி~;கரித்த நாம் தமிழக தொலைக்காட்சிகளை ஆரம்பத்திலிருந்தே எம் எதிர்பை தெரிவிப்போம்.
தமிழக ஊடகங்களின் வரவால் நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். இது எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்.
புலம்பெயர் வாழ்வின் யதார்த்தமான நிகழ்வுகள்… நாடகங்களாக பரிணமிக்கபட வேண்டும். நேர்முக பேட்டிகள், கலந்துரையாடல்கள் இன்னும் பல நிகழ்ச்சிகள் முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த நிகழ்வுகள் எம்மவரிடையே நீங்காத இடத்தைப் பிடிக்கவேண்டும். ஐரோப்பா அரங்கில் எம் தொலைக்காட்சியையும் ஓர் சிறந்த தொலைக்காட்சியாக பரிணமிக்க வைக்க எம்மவரால் முடியும். <b>அதை நடைமுறைப் படுத்த நாம் அனைவரும் முன் வரவேண்டும். ஆதரவு வழங்குவோம்.</b>
யாரோ சிலரால் கொடுக்கப்பட்ட மாவீரர் நாள் அன்று sun tv விளம்பரங்களை அங்கு கண்ணுற்ற போது மனம் வேதனைப் பட்டது
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சரி அனைவருக்கும் ஒரு உதவி நீங்கள் புலம் பெயர் ஊடங்கள் அதாவது இந்திய தமிழ் ஊடகங்கள் என்ன செய்யவேன்டும் என கேட்கின்றீர்களோ அவற்றை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள் அவை அவர்களிடம் கையளிக்கப்படும்.
ஒவ்வொருவரும் இன்றே ஆரம்பியுங்கள்.
mediaindia@hotmail.com
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
எதுவுமே செய்யாம வந்த வழியே போகச் சொல்லுங்க.. போதும்.
.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தலைமுடியை பிச்சுக்கொள்கிற மாதிரி ஏதாவது அனிமேசன் படம் போடுங்கோ மோகன்ணா
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
வசி.. அசோகா அப்படித்தான் குழப்புவார்.. ரீஆர்ரீ தொடங்கி.. முதல் வருட பூர்த்தி கொண்டாட்டத்தில் ரீஆர்ரீய சுமப்பவர்கள் என்று ஒரு தொகை சொல்லப்பட்டது.. அவர்களுள் எத்தனை பேர் ரீஆர்ரீயை ரீரீஎன் ஆக்க சம்மதித்தார்கள்.. எதனால் அப்போதய இயக்குனர் வெளியேறினார்.. வெளியேறிய பின் எதனால் சிலர் ரீரீஎன்னுள் புகுந்து முக்கியமான வயர் இணைப்புகளை பிடுங்கிச் சென்றார்கள் என்றாவது தேரியுமா? இதாவது தெரிந்தால் விபரம் தாருங்கள் அசோகா.
.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இந்திய ஊடகங்களுக்கு அனுப்புவதால் பிரயோசனமில்லை
நம்மக்களுக்கு அனுப்புங்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நமது ஊடகங்களை நம்பி சந்தாஅட்டையை வேண்டலாமா?
இன்று வருவார்கள் நாளை மறைந்து போய்வார்கள் பின்பு வருவார்கள் இடமாற்றம் என்பார்கள்
பொருளாதாரப்பிரச்சனையென்பார்கள் நிர்வாகப்பிரச்சனையென்பார்கள்
அறவிப்பாளர்கள் திடீர் என மறைவார்கள் இது தான் எமது பெரும்பாலான ஊடகங்களில் நடைபெறுகின்றது இவைகள் எல்லாம் எமது ஊடகங்களில்தான்
நடைபெறுகின்றது ஆகவே ஆழம்
அறிந்து காலை வையுங்கள்
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
<b>சந்தைப்படுத்தல் திறமையும்,சரியான திட்டமிடலும்,தரமான நிகழ்ச்சிகளையும் இந்தியத் தொலைக்காட்சிகள் கொண்டிருக்காவிட்டால்................... ?</b>
என்று ஒரு கேள்வியை முன்வைத்துப்பார்த்தால் நம்மவர்கள் இயக்கும் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?எங்கே பின்நிற்கின்றன?எதனால் முன்னேற முடியவில்லை என்பதற்கு விடை கிடைக்கும்.
எப்போதுமே சுற்றிச் சுற்றியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோமே தவிர எப்போதாவது வழி தேடியதுண்டா?
ஊடகங்களை உருவாக்கியவர்கள்,தற்போது இயக்கிக்கொண்டிருப்பவர்களில் ஏன் சண் தொலைக்காட்சியை 100 வீதம் நம்பி ஆரம்பிக்கப்பட்ட தீபம் தொலைக்காட்சிக்கே தெரிந்த ஒரு விடயம் தான் 2001ல் அமெரிக்க,கனேடிய நாடுகளில் நேரடியாகவும் பின்னர் 2003 மே மாதத்திற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் சண் தொலைக்காட்சி நேரடி சேவையை ஆரம்பிக்கப்போகின்றதென்பது.
2000 ம் ஆண்டிலிருந்து ஓரளவு நிலையான இடத்தினைப்பிடித்த தீபம்,பின்னர் சில மாதங்களின் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ரிரிஎன் கூட இதுவரை தம்மை நிலைப்படுத்திக்கொள்ள என்ன செய்தன?
ரிஆர்ரி மூடுவதும் வருவதுமாக இருந்ததனால் அதனை விட்டுப் பார்த்தாலும் இதில் எந்தத் தொலைக்காட்சிகளாவது தமிழக சினிமா,நாடகங்கள் இல்லாது தமது சேவையை நினைத்துப்பார்த்திருக்கவாவது முடியுமா?
ரிஆர்ரி கூட தமது நேயர்களைத் திருப்திப்படுத்த கீறல் விழுந்தி விசிடிக்கள்,பழைய வீடியோ கசட்டுகளிலாவது கஸ்டப்பட்டு டப்பிங் படத்தையும் ஒளிபரப்பிவந்தார்கள்.
முழுமையாக இல்லாவிடினும் பெரும் பாலும் தென்னிந்தியத் தயாரிப்புக்களில் தங்கி வளர்ந்தவர்கள் .. அவர்கள் வரவைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த பின்னராவது<b> நமது சமூகத்தினரை வேறு வழியில் அடைய முயற்சி செய்திருக்கலாம்</b>.
இவர்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?
<b>யாராவது ஓசியில் கமராவும் பிடித்து,எடிட்டிங்கும் செய்து இந்தாங்கோ அண்ணை என்று இவர்கள் கையில் கொடுத்தால் மாத்திரம் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னர் அதை ஒளிபரப்பித் திருப்தி கண்டார்களே தவிர....</b>
இங்குள்ள திறமைசாலிகளுக்கு சம்பளங்கொடுத்துத் தயாரிப்புகளைப் பெற்றுக்கொண்டார்களா? இல்லவே இல்லை.
ஆனால்.... ஒவ்வொரு தொலைக்காட்சி நிலைய அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் (ஓரளவு) சம்பளத்திற்காவது வேலை செய்கிறார்கள்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளங்கொடுக்கத்தான் வேண்டும்.நேரம் பொன்னானது,ஆனால் தயாரிப்புக்கள் எங்கே?
அதுதான் இந்தியாவிலிருந்து இறக்கலாம் என்று தம்பட்டம் அடித்துத் திரிந்தார்கள்..இப்போது திகைக்கின்றார்கள்.
எனவே உண்மை எங்கே இருக்கிறது?
சிந்திக்க வேண்டும்.லட்சத்தில் ஒருவருக்குக் கிடைத்த 100 ஐயுரோ அனைத்துக் கலைஞர்களின் தேவைக்கும் ஈடாகாது.
இவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
இல்லை..<b>அவங்கள் காட் வாங்கச்சொன்னால் எங்கட சனம் வாங்காது </b>என்று மழுப்பிக்கொண்டே வாழ்க்கை நடத்துவார்களா?
ஏன் காட் வாங்க மாட்டார்கள்?நீங்களும் அதே தென்னிந்திய நிகழ்ச்சிகள்,நாடகங்களைக் காட்டித்தானே காட் விற்றீர்கள்?
நமது தொலைக்காட்சி,தேசியத் தொலைக்காட்சியென்றொரு தனியிடம் ரிரிஎன்னுக்கு இருந்தாலும் கூட .. சந்தைப்படுத்தல்,திட்டமிடல்,தயாரிப்பு என்று தம்மைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை அவர்களும் மறப்பார்களேயானால்..ஏதோ கடமைக்காகத்தான் சந்தாப்பணம் கிடைக்கப்போகின்றது என்பதை உணர மறுத்தால்..
இறுதியில் இதற்கு விடை இனி இல்லை.
<b>கேள்வியும் பதிலும் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
எந்தத்திட்டமும் எமது தொலைக்காட்சி என்ற உணர்வும் தொலைக்காட்சியை வளர்க்க நீண்ட கால முறையில் நடைமுறைச்சாத்தியப்படாது.இது பற்றி பழைய களத்தில் ஏற்கனவே நிறையவே எழுதிவிட்டேன்.
இயந்திரத்துப்பாக்கியடன் வருபவன் முன் நின்று நான் கராட்டியில் ப்ளாக் பெல்ற் என்று சொல்வதுபோன்ற காட்சிகள்தான் ; தற்சமயம் காட்டப்படுகின்றன..
தரமானதாகவிருந்தாலும் தொலைக்காட்சிக்கு ஆதாரமான
நிதியை மக்களிடமிருந்து பல காலத்திற்கு பெறமுடியாது.
வானொலிகள் மக்களை நம்பி ஆரம்பித்த கதை இதில் புறம்பாகச்சொல்லத்தேவையில்லை
ராஜா ரஹ்மான் சண்டையின் இடையில் தேவா தனது வளர்ச்சியை தக்கவைத்தது போல வெக்ரோன் இடையால் சுழி ஓடுகிறது.
இன்னும் சில காலங்களில் பழைய சந்தாக்கள் நிற்க மக்கள்
வெக்ரோனில் விழுவார்கள்.
எந்த தொலைக்காட்சியை மக்கள் அதிகம் பார்க்கிறார்களோ அதற்கே அதிகம் விளம்பரம் போகும்.
இதற்கு மேல் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன்.
எமது தேசியம் உலகமெல்லாம் பரவ வழி செய்வோம்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
இங்கே (புலத்தில்) ஓரு நிகழ்ச்சியை தயாரிக்க கொடுக்கும் பணத்தில் , ஒரு நாள் புரோகிறாமையே வாங்கி விடலாம் என்று சொன்னவர்கள் இப்போதுதான் கன்னத்தில் கை வைத்து தடவுகிறார்கள்.
இப்போது அழுவதெல்லாம் , சாவுக்கு வைக்கும் ஒப்பாரியே தவிர வேறெதுவுமில்லை.
இந்திய தொலைக் காட்சிகள் வந்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். அவர்களது திட்டமிடல் , தொலை நோக்கு அவர்களை இந்தளவுக்கு வளர்த்திருக்கிறது.
ஆனால் நம்மவர் தொலை நோக்கு , யார் மீதாவது பழிகளை போட்டுக் கொண்டே , குளிர் காய நினைப்பது.
எந்த நாட்டு நிகழ்ச்சிகளை வாங்கினாலும், தமக்கென சொந்த நிகழ்ச்சிகளை தயாரிக்காத எந்த ஊடகமும் நிலைக்காது. (டெலிபோன் நிகழ்ச்சிகள் அல்ல. அதைச் செய்ய வானோலி போதும். அதற்கு ஏன் ஒரு தொலைக் காட்சி?)
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
கருத்தை எழுதினால் நல்லது
கண்ணைச்சிமிட்டுவதின் அர்த்தம்
புரியாமல்உள்ளது