11-17-2005, 01:59 PM
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களே கூடி ஒருவனை அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துக்கள், செய்திகள், வதந்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
என்வரையில் இதுதொடர்பான எனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ள இப்பதிவு.
யாரோ கலாச்சாரக் காவலர்களாம். ஒருவனைக் கட்டி வைத்து அவனருகில் ஒரு பட்டியலையும் அறிவிப்பையும் வைத்துவிட்டுப் போவார்களாம். அதைப்பார்த்த எங்கள் "செம்மறியாட்டு மந்தைக் கூட்டம்" எல்லாரும் கூடி அவனை அடித்துக் கொல்வார்களாம்.
என்ன நடக்கிறது? யார் அந்த கலாச்சாரக் காவலர்கள்? அவர்கள் எழுதிவைத்த அறிவிப்பினதும் பட்டியலினதும் உண்மைத்தன்மை என்ன? எப்படி அவர்கள் அவ்வளவு விவரங்களையும் சேகரித்தார்கள்? அதுவொரு குழுவா? அல்லது தனிப்பட்ட சிலர் சேர்ந்த கும்பலா? யாழ்ப்பாணத்தில் இப்படி கலாச்சாரம் பேணும் குழுவென்று ஒன்றேயொன்றுதான் இருக்கிறதா? அல்லது யாரும் நினைத்தால் இப்படியொரு குழுவைக்கூட்ட முடியுமா? இந்த முடிவு பலரின் ஏகோபித்த முடிவா? அல்லது இரண்டொருவரின் முடிவு மட்டுமா?
கலாச்சாரம் பேணும் குழுவென்ற பெயரில் சில நல்லதுகள் யாழ்ப்பாணத்தில் நடந்தன. அதை மறுப்பதற்கில்லை. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்தாலும் சமூகத்துக்குப் பயன்தரத்தக்க வகையில் அவர்களின் பல செயற்பாடுகள் அமைந்தன.
ஆனால் இப்போது நடந்தது சுத்த அயோக்கியத்தனமான செயல். வெட்கப்பட வேண்டிய செயல்.
தெரிவிக்கப்பட்ட குற்றங்களில் திருட்டுக்கள் தான் இருப்பதாகத் தெரிகிறது. (யாரும் முழு விவரமும் வெளியிடவில்லை)
அதுவும் 20 வயது இளைஞன் ஒருவன்தான் இதிற் சம்பந்தப்பட்டுள்ளான்.
நீதிசெய்வதற்கென்று தார்மீக அடிப்படையில் சில வரையறைகள் இருக்கின்றன. ஒருவனுக்கு இன்ன தண்டனை என்றாற்கூட அதை யார் கொடுப்பது என்பதுகூட வரையறைக்குட்பட்டது. ஒருவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தால் அதை யாரும் நிறைவேற்றிவிட முடியாது. தூக்குத்தண்டனை பெற்ற ஒருவனை தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவனல்லாத வேறுயாரும் கொன்றாற்கூட அது தண்டனைக்குரிய குற்றம்தான்.
புலிகள் ஒரு நீதியமைப்பை வைத்திருக்கிறார்கள். சமூகம் சார்ந்த வழக்குகளில் இதுவரை (ஏறத்தாள 13 வருட வரலாற்றில்) வெறும் நான்கு மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் விதிக்கப்பட்ட மரணதண்டனையொன்று தேசியத்தலைவருக்குக் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டு பதிலுக்காகப் பிற்போடப்பட்டுள்ளது.
அவையனைத்தும் பாலியல் வல்லுறவு வழக்குகள். (தகவல்:ஒப்பிலான், முதன்மை நீதியாளர், தமிழீழ உச்சநீதிமன்றம்).
ஆக புலிகளே தம் நீதியமைப்பில் மரணதண்டனையை இயன்றவரை தவிர்க்கவே முயல்கிறார்கள். மரணதண்டனை நீக்கம் பற்றி ஆலோசித்து, வாதித்து வருகிறார்கள். திருட்டுக்கெல்லாம் மரணத்தைப்பற்றி அவர்கள் யோசித்ததேயில்லை. பாலியல் வல்லுறவு வழக்கில்கூட மரணதண்டனை இல்லாமல் ஆயுள்தண்டனையோடு பல வழக்குகள் புலிகளால் முடிக்கப்பட்டிருக்கின்றன.
இங்கே கலாச்சாரக் காவலர்கள் அவனைக் கொல்லவேண்டுமென்று முடிவெடுத்திருந்தாற்கூட அதைத் தாமே செய்திருக்க வேண்டும். பொறுப்புணர்ச்சியற்று பொதுமக்களிடத்தில் அவ்வேலையைக் கொடுத்திருக்கக்கூடாது. (இங்கே கலாச்சாரக் காவலாளிகளுக்குக் கொலை செய்யும் உரிமையை நான் கொடுக்கவில்லை.)
இது பற்றி ஒருவருடன் உரையாடியபோது, "சனம் அடிச்சுக் கொல்லுமெண்டு அவங்கள் நினைச்சிருக்க மாட்டாங்கள். ஆனா பிசகிப்போட்டுது" என்றார். இது சுத்த கயமைத்தனமான பதில்.
வேறெப்படி நடக்குமென்று எதிர்பார்த்து இவர்கள் இதைச்செய்தார்கள்? மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று நினைத்தா இதைச் செய்தார்கள். சரி அவனைச் சாகடிப்பது அக்குழுவின் நோக்கமல்ல என்றால், அதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 3 மணிநேரம் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்யும்வரை வாய்பார்த்து நின்றார்களோ?
என் உறுதியான நம்பிக்கைப்படி, அக்குழுவைச் சேர்ந்தவர்கள் அவன் சாகும்வரை அங்கே நின்றிருப்பார்கள். சனம் சோர்ந்து போனாலும் உசுப்பேற்றிக்கொண்டு நின்றிருப்பார்கள்.
நான் அறிந்ததன்படி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தயவுடன்தான் இந்த கலாச்சாரம் பேணும் குழு செயற்படுவதாக ஒரு கேள்வி. உண்மையென்றால், இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் அனைவரின் மீதும் எனக்கு விசனம்தான் வருகிறது.
இன்றுள்ள நிலையில் யார் வேண்டுமானாலும் ஒரு கும்பலாகக்கூடி எதுவும் செய்ய முடியுமென்ற நிலைவந்துவிட்டது.
தனிப்பட்ட காழ்ப்புணர்விற்கூட இப்படி யாரையும் பிடித்துவிட்டு ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டிவிட்டால் சரி.
இச்சம்பவத்தில் புலிகளுக்குத் தொடர்பிருக்கிறதா?
அறிவிப்பில் வழமைபோலவே புலிகளையும் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பில் புலிகளின் நிலையென்ன?
அவர்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதா? ஏற்றுக்கொள்கிறார்களா? இதுதொடர்பில் எந்த விமர்சனமுமில்லையா?
இக்கொலை புலிகளுக்கு ஏற்படுத்தப்போகும் அபகீர்த்திக்கு யார் பொறுப்பு? அப்படி எதுவும் நடந்துவிடாதா?
நிற்க, இச்சம்பவத்தைப் பெருமையாகப் பேசுவோரும் உளர். இது கட்டாயம் செய்தே தீரவேண்டியதென்ற ரீதியிற் கருத்துச் சொல்வோருமுளர்.
யாரும் எக்கருத்தையும் சொல்லலாம். அவரவர்க்கென்று சொந்தக் கருத்துக்கள் உள்ளன. அவ்வகையில் என் சொந்தக்கருத்தைப் பதிவு செய்கிறேன்.
இச்சம்பவம் காட்டுமிராண்டிச் சம்பவம் என்று சொல்வதில் எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை. "கலாச்சாரம் பேணும் குழு" பேணும் கலாச்சாரம் இதுதானென்றால் இதைக் "காட்டுமிராண்டிக் கலாச்சாரம்" என்று சொல்வதற்கும் நான் வெட்கப்படப்போவதில்லை. நான் வெட்கப்படுவது, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன் என்ற வகையில் அங்கு அம்மக்களால் நடத்தப்பட்ட இக்காட்டுமிராண்டித்தனத்துக்குத்தான்.
(நான் தான் வெட்கப்படுகிறேன். எங்களுக்காக நீ எப்படி வெட்கப்படலாம் என்று அறிவுஜீவித்தனமான கேள்விகள் கேட்க வேண்டாம்)
[b]இது தொடர்பான என் சிபாரிசு இதுதான். அக்கும்பல் உண்மையிலேயே சமூகம் மீது அக்கறையுடன் செயற்படும் குழுவாயிருக்கும் பட்சத்தில், அவர்கள் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தாங்களே அதைச் செய்திருப்பது. மாறாக மக்களிடத்தில் பொறுப்புக் கொடுத்தது, அயோக்கியத்தனம், காட்டுமிராண்டித்தனம். அதைவிட சாகும்வரை ஒருவனை அடித்துக் கொல்வது, அதுவும் கதறியழுத தாயையும் தமக்கையையும் அடித்துத் துரத்திவிட்டு தொடர்ந்து தாக்கிக் கொல்வது என்பது கடைந்தெடுத்தக் காட்டுமிராண்டித்தனம் தான்