Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்டுமிராண்டிக் கலாச்சாரம்
#1
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களே கூடி ஒருவனை அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துக்கள், செய்திகள், வதந்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
என்வரையில் இதுதொடர்பான எனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ள இப்பதிவு.

யாரோ கலாச்சாரக் காவலர்களாம். ஒருவனைக் கட்டி வைத்து அவனருகில் ஒரு பட்டியலையும் அறிவிப்பையும் வைத்துவிட்டுப் போவார்களாம். அதைப்பார்த்த எங்கள் "செம்மறியாட்டு மந்தைக் கூட்டம்" எல்லாரும் கூடி அவனை அடித்துக் கொல்வார்களாம்.
என்ன நடக்கிறது? யார் அந்த கலாச்சாரக் காவலர்கள்? அவர்கள் எழுதிவைத்த அறிவிப்பினதும் பட்டியலினதும் உண்மைத்தன்மை என்ன? எப்படி அவர்கள் அவ்வளவு விவரங்களையும் சேகரித்தார்கள்? அதுவொரு குழுவா? அல்லது தனிப்பட்ட சிலர் சேர்ந்த கும்பலா? யாழ்ப்பாணத்தில் இப்படி கலாச்சாரம் பேணும் குழுவென்று ஒன்றேயொன்றுதான் இருக்கிறதா? அல்லது யாரும் நினைத்தால் இப்படியொரு குழுவைக்கூட்ட முடியுமா? இந்த முடிவு பலரின் ஏகோபித்த முடிவா? அல்லது இரண்டொருவரின் முடிவு மட்டுமா?

கலாச்சாரம் பேணும் குழுவென்ற பெயரில் சில நல்லதுகள் யாழ்ப்பாணத்தில் நடந்தன. அதை மறுப்பதற்கில்லை. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்தாலும் சமூகத்துக்குப் பயன்தரத்தக்க வகையில் அவர்களின் பல செயற்பாடுகள் அமைந்தன.
ஆனால் இப்போது நடந்தது சுத்த அயோக்கியத்தனமான செயல். வெட்கப்பட வேண்டிய செயல்.
தெரிவிக்கப்பட்ட குற்றங்களில் திருட்டுக்கள் தான் இருப்பதாகத் தெரிகிறது. (யாரும் முழு விவரமும் வெளியிடவில்லை)
அதுவும் 20 வயது இளைஞன் ஒருவன்தான் இதிற் சம்பந்தப்பட்டுள்ளான்.

நீதிசெய்வதற்கென்று தார்மீக அடிப்படையில் சில வரையறைகள் இருக்கின்றன. ஒருவனுக்கு இன்ன தண்டனை என்றாற்கூட அதை யார் கொடுப்பது என்பதுகூட வரையறைக்குட்பட்டது. ஒருவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தால் அதை யாரும் நிறைவேற்றிவிட முடியாது. தூக்குத்தண்டனை பெற்ற ஒருவனை தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவனல்லாத வேறுயாரும் கொன்றாற்கூட அது தண்டனைக்குரிய குற்றம்தான்.
புலிகள் ஒரு நீதியமைப்பை வைத்திருக்கிறார்கள். சமூகம் சார்ந்த வழக்குகளில் இதுவரை (ஏறத்தாள 13 வருட வரலாற்றில்) வெறும் நான்கு மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் விதிக்கப்பட்ட மரணதண்டனையொன்று தேசியத்தலைவருக்குக் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டு பதிலுக்காகப் பிற்போடப்பட்டுள்ளது.
அவையனைத்தும் பாலியல் வல்லுறவு வழக்குகள். (தகவல்:ஒப்பிலான், முதன்மை நீதியாளர், தமிழீழ உச்சநீதிமன்றம்).
ஆக புலிகளே தம் நீதியமைப்பில் மரணதண்டனையை இயன்றவரை தவிர்க்கவே முயல்கிறார்கள். மரணதண்டனை நீக்கம் பற்றி ஆலோசித்து, வாதித்து வருகிறார்கள். திருட்டுக்கெல்லாம் மரணத்தைப்பற்றி அவர்கள் யோசித்ததேயில்லை. பாலியல் வல்லுறவு வழக்கில்கூட மரணதண்டனை இல்லாமல் ஆயுள்தண்டனையோடு பல வழக்குகள் புலிகளால் முடிக்கப்பட்டிருக்கின்றன.


இங்கே கலாச்சாரக் காவலர்கள் அவனைக் கொல்லவேண்டுமென்று முடிவெடுத்திருந்தாற்கூட அதைத் தாமே செய்திருக்க வேண்டும். பொறுப்புணர்ச்சியற்று பொதுமக்களிடத்தில் அவ்வேலையைக் கொடுத்திருக்கக்கூடாது. (இங்கே கலாச்சாரக் காவலாளிகளுக்குக் கொலை செய்யும் உரிமையை நான் கொடுக்கவில்லை.)
இது பற்றி ஒருவருடன் உரையாடியபோது, "சனம் அடிச்சுக் கொல்லுமெண்டு அவங்கள் நினைச்சிருக்க மாட்டாங்கள். ஆனா பிசகிப்போட்டுது" என்றார். இது சுத்த கயமைத்தனமான பதில்.
வேறெப்படி நடக்குமென்று எதிர்பார்த்து இவர்கள் இதைச்செய்தார்கள்? மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று நினைத்தா இதைச் செய்தார்கள். சரி அவனைச் சாகடிப்பது அக்குழுவின் நோக்கமல்ல என்றால், அதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 3 மணிநேரம் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்யும்வரை வாய்பார்த்து நின்றார்களோ?
என் உறுதியான நம்பிக்கைப்படி, அக்குழுவைச் சேர்ந்தவர்கள் அவன் சாகும்வரை அங்கே நின்றிருப்பார்கள். சனம் சோர்ந்து போனாலும் உசுப்பேற்றிக்கொண்டு நின்றிருப்பார்கள்.

நான் அறிந்ததன்படி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தயவுடன்தான் இந்த கலாச்சாரம் பேணும் குழு செயற்படுவதாக ஒரு கேள்வி. உண்மையென்றால், இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் அனைவரின் மீதும் எனக்கு விசனம்தான் வருகிறது.
இன்றுள்ள நிலையில் யார் வேண்டுமானாலும் ஒரு கும்பலாகக்கூடி எதுவும் செய்ய முடியுமென்ற நிலைவந்துவிட்டது.
தனிப்பட்ட காழ்ப்புணர்விற்கூட இப்படி யாரையும் பிடித்துவிட்டு ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டிவிட்டால் சரி.

இச்சம்பவத்தில் புலிகளுக்குத் தொடர்பிருக்கிறதா?
அறிவிப்பில் வழமைபோலவே புலிகளையும் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பில் புலிகளின் நிலையென்ன?
அவர்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதா? ஏற்றுக்கொள்கிறார்களா? இதுதொடர்பில் எந்த விமர்சனமுமில்லையா?
இக்கொலை புலிகளுக்கு ஏற்படுத்தப்போகும் அபகீர்த்திக்கு யார் பொறுப்பு? அப்படி எதுவும் நடந்துவிடாதா?

நிற்க, இச்சம்பவத்தைப் பெருமையாகப் பேசுவோரும் உளர். இது கட்டாயம் செய்தே தீரவேண்டியதென்ற ரீதியிற் கருத்துச் சொல்வோருமுளர்.
யாரும் எக்கருத்தையும் சொல்லலாம். அவரவர்க்கென்று சொந்தக் கருத்துக்கள் உள்ளன. அவ்வகையில் என் சொந்தக்கருத்தைப் பதிவு செய்கிறேன்.
இச்சம்பவம் காட்டுமிராண்டிச் சம்பவம் என்று சொல்வதில் எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை. "கலாச்சாரம் பேணும் குழு" பேணும் கலாச்சாரம் இதுதானென்றால் இதைக் "காட்டுமிராண்டிக் கலாச்சாரம்" என்று சொல்வதற்கும் நான் வெட்கப்படப்போவதில்லை. நான் வெட்கப்படுவது, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன் என்ற வகையில் அங்கு அம்மக்களால் நடத்தப்பட்ட இக்காட்டுமிராண்டித்தனத்துக்குத்தான்.
(நான் தான் வெட்கப்படுகிறேன். எங்களுக்காக நீ எப்படி வெட்கப்படலாம் என்று அறிவுஜீவித்தனமான கேள்விகள் கேட்க வேண்டாம்)

[b]இது தொடர்பான என் சிபாரிசு இதுதான். அக்கும்பல் உண்மையிலேயே சமூகம் மீது அக்கறையுடன் செயற்படும் குழுவாயிருக்கும் பட்சத்தில், அவர்கள் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தாங்களே அதைச் செய்திருப்பது. மாறாக மக்களிடத்தில் பொறுப்புக் கொடுத்தது, அயோக்கியத்தனம், காட்டுமிராண்டித்தனம். அதைவிட சாகும்வரை ஒருவனை அடித்துக் கொல்வது, அதுவும் கதறியழுத தாயையும் தமக்கையையும் அடித்துத் துரத்திவிட்டு தொடர்ந்து தாக்கிக் கொல்வது என்பது கடைந்தெடுத்தக் காட்டுமிராண்டித்தனம் தான்
#2
இது அதெல்லே..............அங்கை மூட இஞ்சை வந்து திறந்திட்டீர் அதுதானே அனேகமாக கள உறவுகள் கண்டிக்கப் பட வேண்டிய செயல் எண்டு சொல்லியாச்சு பிறகென்ன.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
#3
கலாசாரம் பேணும் குழு இதுதான் என நிச்சயப்படுத்தி கூற முடியவில்லை. இதற்கும் புலிகளுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்பு குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன்.. சரிவரத் தெரியவில்லை.

பெண்களோடு பகிடிவிடும் ஆண்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து யாழ் வாசி ஒருவரை கேட்ட போது.. நீ காதலிக்கிற பெட்டையை இன்னொருவன் பகிடி விட்டால் நீ உன்ரை சினேகிதர்களோடு போய் அவனுக்கு அடிப்பாய் தானே.. அது தான் நடக்கிறது என்றார். பார்க்கப் போனால் அது தான் நடக்கிறது போல..

எனது ஆதங்கம்.. இந்த சம்பவம் தொடர்பில் புலிகளின் நிலையென்ன..? வெறுமனே.. மக்களின் உணர்வு வெளிப்பாடு என்று சொல்லி விட்டு இருக்கப் போகிறார்களா..?

வன்னியிலிரந்து இயங்கும் ஊடகத்தை சேர்ந்த ஒருவர் இது யாழ்ப்பாணத்திலியங்கும் அடிதடிக் கும்பல்களின் வேலைதான் எனவும் இதங்கு புலிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்..

எனது வெறுப்பை எப்படி காட்டுவது என தெரியவில்லையாதலால்.. அந்த காட்டுமிராண்டி செயலை செய்தவர்கள் எவராயினும் அவர்கள் மீது.. ச்சீ... தூ...
#4
நிலவன் உங்கலுக்கு எப்படி தெரியும் அவனை கொண்டது
கலாச்சாரக் காவலர்கள் தான் எண்டு? யாரோ அடித்து கொண்டு விட்டு கலாச்சாரக் காவலர்கள் மிது வீண் பழி போட்டு இருக்குறார்கள்


Quote:கலாச்சாரம் பேணும் குழுவென்ற பெயரில் சில நல்லதுகள் யாழ்ப்பாணத்தில் நடந்தன. அதை மறுப்பதற்கில்லை. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்தாலும் சமூகத்துக்குப் பயன்தரத்தக்க வகையில் அவர்களின் பல செயற்பாடுகள் அமைந்தன.

இப்படி நல்லது செய்வதை பிடிக்காத குழு யாழ்ழில் இல்லையா? :wink: :wink: :wink:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#5
உண்மைதான் அடித்து கொல்வது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, நாம் என்ன அரபு நாட்டிலா இருக்கிறோம் கல்லால்(பொல்லால்)அடித்து கொல்ல, அவர்செய்த தறுகளுக்கு மரணம்தான் முடிவு என்றால், அதற்கு ஒரு றவுன்ஸ் போதும், முன்பு 1984,85 ல் எமது ஊரில் நடந்தது, சைக்கிள் களவெடுத்தவனுக்கும் மரணம், கடை உடைத்து களவெடுத்தவனுக்கும் மரணம். அதுஆரம்பகாலம், தறுகள் திருத்தப்படலாம், ஆனால் இப்பவும் அதே நிலையில்தான் இருக்கிறோமா? தவறுகள் செய்யாத மனிதர் உண்டா? தண்டனைகள் மனிதனை திருத்தி நல்வழிபடுத்த வேண்டும், அதற்கும் திருந்தாவிடில் மரணம்தான் முடிவு என்றால் அதை முறையாக கொடுக்கலாம்தானே. இந்த தாயின் கதறலை படிக்கும் போது, சைக்கிள் களவெடுத்து மகன் இறந்தை பாத்து கதறிய அந்ததாயின் நினைவு வந்துபோனது.
.

.
#6
பரவாயில்லை.. இது வரைக்கும்.. அந்த திருடிய இளைஞனை இராணுவ முகாமில் கண்டதாகவோ, அல்லது ஈபிடிபி முகாமில் கண்டதாகவோ இங்கு யாரும் செய்தி காவி வரவில்லை..
#7
இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்களில் வந்த செய்திகள் ஒண்டுக்கு ஒன்று முரணானதாக இருக்கின்றது. தினகுரலில் ஒரு கும்பல் கடத்திக்கொண்டு வந்து அந்த இளைஞனை தாக்கியதாகவும் அப்பொழுது அந்த இளைஞன் இறந்துவிடவே அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் எனவும், உதயனில் பொதுமக்கள் 3 மணித்தியாலம் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றது, இதில் எது உண்மை எது பொய் எண்டு தெரியவில்லை, யாழ்குடாவில் கலாச்சார இளைஞர்களின் மேல் பழி சுமத்துவதற்கு சோடிக்கப்பட்ட காரியங்களாக கூட இருக்கலாம்,, தயவு செய்து உங்களின் கருத்துக்களை அறிந்து தெரிந்து முன்வையுங்கள், ஊகத்தின் அடிப்படையில் கொட்டாதீர்கள், கொட்டியதை திருப்ப அள்ளுவது கடினம்,,

ஏற்கனவே நானும் அப்படி நினைத்து பல வார்த்தைகளை கொட்டிவிட்டேன்,, இப்படியான காட்டுமிராண்டித்தனத்தை எங்களின் கும்பல்கள் (ஈபிடி***, ஈஎண்டிஎல்.எவ்) செய்திருக சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன, எனவே நிலவன்,உங்கள் கருத்தை ஒரு சாரரை தாக்காத வன்னம் முன்வையுங்கள்,, ஆதரம் இல்லை, எதுவுமே இல்லை,, எடுத்த உடனே கொட்டாதேங்க,, (சந்தில சிந்து பாடாதேங்க எண்டு சொல்லவந்தன்) :roll: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#8
உதயன் செய்தி சனம் தான் அடித்துக் கொன்றதாக சொல்கிறது. ஒருவேளை டன் உங்கட இயக்க காரரே கொண்டு வந்து போட்டால் அடித்த சனத்துக்கு எங்கெ போனது புத்தி.? யுத்தம் இறுக்கம் எல்லாரையும் மனநோயாளிகள் ஆக்கிவிட்டதா..?
#9
எவனைக் கொண்டு வந்து கட்டிப்போட்டாலும் வாறவன் போறவன் எல்லாம் கேள்வி கேட்பாரற்று அடி கொடுத்துப் போகும் அளவிற்கு வக்கிரம் பிடித்தலைகிறார்களா.. இதில் சம்மந்தப் பட்ட மக்கள்..?
#10
ஆருக்கு தெரியும் சனம் அடித்தது என்று, அடிச்சு கொண்டுபோட்டு, கொன்டுவந்து போட்டு சனம் அடிச்சுதான் செத்தது எண்டு கதையை மாத்தியும் விட்டிருக்கலாம், உண்மை தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் கதைப்பது நல்லதல்ல.
.

.
#11
அடித்துக் கொல்லப்பட்ட அதே வீதியில் கொஞ்ச தூரம் போனால் வருகின்ற உதயன் செய்திகள் சொன்னதின் அடிப்படையில் சொன்னேன். இனி ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்!உண்மையில் புலிகளுக்கும் கலாசாரம் பேணும் குழுவிற்கும் தொடர்புகள் ஏதும் இருந்தால்.. புலிகள் விசாரித்து அறிந்து அவ்வாறேதும் நடந்திருந்தால் கொஞ்சம் பிடரியில் தட்டி வைப்பது நன்று
#12
நல்லவன் உந்த விடயத்தில் எனக்கும் உடன் பாடில்லை. இது போல் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சமீப காலமாக மோட்டார்சைக்கிளில் முகத்தை மறைத்தபடி வரும் குழுவொன்று சந்திகளில் கூட்டமாக நின்ற இளைஞர்கள் மீது மிருகத்தனமாக பொல்லுகளால் தாக்குதல் நடாத்தி வந்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இத்தாக்குதல் தலையிலும் முதுகிலுமே கூடுதலாக நடாத்தப்பட்டிருக்கின்றது.. இவ்விடயத்தை பல சங்கதிகளைத் தரும் இணையத்தளமும் பெருமையாகப் போட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் இதே தளத்தில் இத்தாக்குதலுக்கு வேறு விதமான சாயம் புூசப்பட்டு கருத்தொன்று எழுதப்பட்டிருந்தது.. இந்தத் தாக்குதல்களுக்கு வக்காலத்து வாங்கிய இணையத் தளத்திற்கு உடன் சென்று பார்த்தேன். என்ன ஆச்சரியம் அங்கே அந்தப் பகுதியே நீக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக பல இணையத்தளங்கள் புதுப்புதுப் பெயர்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா இணையத்தளமும் குறிப்பிட்ட ஒரு குழுவே நடாத்துகின்றன என்பதை அவர்களது செயற்பாடே காட்டிக் கொடுத்துவிடுகின்றன். இதில் என்ன அநியாயம் என்றால் இவர்கள் வேற்று மொழிகளிலும் செய்திகளை இணைக்கின்றார்கள். ஆனால் தமிழிலுள்ள செய்தி ஒன்றாகவும் வேற்று மொழிகளிலுள்ள செய்திகள் வேறொன்றாகவும் இருக்கின்றன. நம் தமிழர்களைப் பற்றி நம்மவர்களே நன்றாகத்தான் கணித்து வைத்திருக்கின்றார்கள். <b>நமக்குள்ளேயே நிறைய ஓட்டைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஓட்டகைளைச் சுட்டிக் காட்டுவதில் நம்மவர்கள் கில்லாடிங்கப்பா</b>
#13
முக்கிய குறிப்பு.
நான் இப்பதிவை எழுதத் தொடங்கும்வரை இது பற்றிய முந்தைய களம் நிறுத்தப்படவில்லை. எனவே அதை நிறுத்த, இங்கே வந்து எழுதுகிறேன் என்று சொல்வது சரியன்று.

மேலும், நான் எதை உறுதிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
கலாச்சாரம் பேணும் குழு என்ற பெயரில்தானே அறிவிப்பு இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன?
அதைவிட நானே கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஒரு கலாச்சாரம் பேணும் குழுதான் இருக்கிறதா? அதுவொரு நிறுவனப்படுத்தப்பட்ட குழுவா? அல்லது வெறும் அடாவடிக் கும்பலா? அவர்களின் நோக்கம் என்ன? எவையெவற்றைக் கலாச்சார மீறலாகப் பார்க்கிறார்கள்? தண்டனைகள் பற்றி ஏதாவது வரையறைகள் வைத்திருக்கிறார்களா? அல்லது எழுந்தமானத்துக்கு அவரவர் விரும்பியபடி தண்டனையா?

எங்கள் ஊரிலும் இருட்டடி போடும் கும்பல் இருந்தது. குடித்துவிட்டு வருபவர்களுக்கு இருட்டடி போடுவது. அதுவும் கலாச்சாரம் பேணும் கும்பல் என்று தங்களைச் சொல்லிக் கொண்டது.

சரி, இதில் உண்மையில் சமூக அக்கறையுள்ள கலாச்சாரம் பேணும் குழு சம்பந்தப்படவில்லையென்றால் அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே?
புலிகளும் இது விடயத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், வார்த்தைகளைக் கொட்ட வேண்டாமென்று சொல்கிறீர்கள். நான் சொன்ன எதற்குமே வருத்தப்படப்போவதில்லை. ஏனென்றால் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். இப்படியொரு கொலை நடக்கவில்லையென்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நான் சொன்னவற்றை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையுண்டு. மற்றும்படி நான் சொன்னவை சரியே.
எதையும் தீர்மானமாக நான் உறுதிப்படுத்திச் சொல்லவில்லை. நான் சொன்னது இது காட்டுமிராண்டித்தனமானதென்பதையே.
இதைப் புலிகள்தான் செய்தார்கள் என்று நாiளைக்குக் கதைவந்தாற்கூட, நான் என் கருத்திலிருந்து மாறப்போவதில்லை.

நிற்க, தமிழ் ஊடகங்கள் இதைப் பெருமையாகத்தானே சொல்கின்றன?
ஏன் தமிழர்கள் பலரும் பெருமையாகத்தான் கதைக்கிறார்கள். இதே இளைஞன் யார் செய்தார் என்பதைப்பொறுத்து துரோகியாகவோ தேசப்பற்றாளனாகவோ மாறக்கூடும்.
இக்கொலையைச் செய்தது ஈ.பி.டி.பி தான் என்றொரு கதைவந்தால் உடனே இந்த இளைஞன் சிலரால் தேசப்பற்றாளனானப் போற்றப்படுவான்.
இப்போதைய நிலைப்படி, இவன் இராணுவ உளவாளி, துரோகி, சமூகச்சீர்கேடுகளில் ஈடுபட்டவன் (இது ஏற்கெனவே ஊடகத்தால் சொல்லப்பட்டாயிற்று) என்ற பட்டங்கள் வரவே சந்தர்ப்பமிருக்கு.
#14
இதை ஏற்றுக் கொள்ளமுடியாது தான். ஆனாலும் எதை எடுத்தாலும் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டும் முறைமை தவறானது. பெரிய புலனாய்வுகாரர் போல விடுதலைப் புலிகள் தான் செய்திருப்பினம் என்ற கருத்துப்பட எழுதுவது தவறு,

வசம்பு
உங்களின் தனிப்பட்ட போபதாபங்களை இதுக்குள் புகுத்தி விளம்பரம் தேடாதீர்கள்.
[size=14] ' '
#15
விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டவில்லை.. தூாயவன். இதனை கலாசாரம் பேணும் குழுவினலே செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் புலிகளுக்கு வந்துவிட்டது என்கிறோம்..
#16
<b>மன்னிக்க வேண்டும் து}யவன்</b>
எனக்கு எவருடனும் தனிப்பட்ட கோபதாபம் கிடையாது. அதுபோல் விளம்பரம் தேடுவதற்கு இங்கு நான் வியாபார நிலையமொன்றும் நடாத்தவில்லை. தற்போது நடைபெற்ற கொலையை நியாயப்படுத்தி புலிகளின் இணையத்தளமே செய்திகளை வெளியிட்டிருக்கின்றது. அப்படியாயின் அதன் அர்த்தம் என்ன. சரி பிழைகளை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம். நான் எழுதியதில் ஏதாவது தவறாகவோ அல்லது பொய்யாகவோ எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கருத்தைக் கருத்தால் முடிந்தால் எதிர் கொள்ளுங்கள் முடியாவிட்டால் குறைந்தபட்சம் தனிநபர் தாக்குதலாக்காமலாவது இருககப் பாருங்கள்.
#17
தூயவன்,
புலிகள்தான் செய்தார்கள் என்று யார் சொன்னது?
ஆளைச்சொல்லுங்கள். அவனை அடித்துக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேணும்.
பெரிய கொம்பா முளைத்திருக்கிறது அவனுக்கு?
#18
"கொம்பா முளைத்திருக்கிறது அவனுக்கு" என்று கேட்டதற்காக, மன்னிப்புக் கேள் என்று தமிழ்க்கலாச்சாரக் காவலர்கள் யாரும் வரமாட்டீர்களென்று நினைக்கிறேன். (யாழ்க்களத்தில் அப்படி யாராவது காவலர்கள் இருந்தால் முதலே சொல்லி வையுங்கோ, வார்த்தைகளை அளந்துவிட உதவியா இருக்கும்.)
#19
//தேடுவதற்கு இங்கு நான் வியாபார நிலையமொன்றும் நடாத்தவில்லை. தற்போது நடைபெற்ற கொலையை நியாயப்படுத்தி புலிகளின் இணையத்தளமே செய்திகளை வெளியிட்டிருக்கின்றது//

எது புலிகளின் இணையத்தளம்.. நிதர்சனமா.. மண்ணாங்கட்டி.. புலிகளே அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று விட்டார்கள்.. அவர்கள் அடிக்கும் கிலிய கெட்ட கூத்திற்கு புலிகள் பொறுப்பு ஏற்க வேணுமா.. அவனவன்.. கொஞ்ச காசும் பழைய கொம்பியூட்டரும் இருந்தால் இணையம் தொடங்குறாங்கள்.. அதுகளை புலிகளின் இணையம் எண்ட வேணாம். அதுவும் நிதர்சனம் ஒரு லூசுத்தளம். அதைப் போய் புலிகளின் தளம் எண்டுறீங்கள்..
#20
இவோன்
நிதர்சனம் நெற் மற்றும் கொம் என இரு இணையத்தளமியங்குகின்றன. அதில் ஒன்றைத்தான் தமதல்ல என்று சொன்னார்கள். மற்றும்படி தமிழ்நெற்றில் உங்களுக்கு சந்தேகமில்லைத்தானே??


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)