11-16-2005, 12:57 PM
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைப் புலிகளின் பெயரில் மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரங்களை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுவினரே விநியோகித்தது அம்பலமாகி உள்ளது.
தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்ட மூவரும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.
பெரியகல்லாறு வாசியான ஜோன்சன் ஜெயகாந்தன், அக்கரைப்பற்று வாசியான இராமலிங்கம் யோகராஜா, கருவப்பன்கேணி வாசியான பிரகாசம் சகாயமணி ஆகியோர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.எச்.எம். அஜ்மீர் முன்னிலையில் இந்த மூவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வாக்களிக்கும் உரிமைகளை தடுக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை மீறியதாக நீதிமன்றில் காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.
தலா ரூபா 10 ஆயிரம் ஆட்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:
மட்டக்களப்பு நகரிலிருந்து கல்முனைக்கு இவர்கள் பயணம் செய்த வாகனம் களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப்படையின் வீதித் தடையினால் சோதனையிடப்பட்டது.
அப்போது துண்டுப்பிரசுரங்கள் 1,600 கண்டெடுக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டு அம்பாறை மாவட்ட மாவட்ட அரசியல்துறை என அந்த துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று கூறினர்.
ஜோன்சன் ஜெயகாந்தன் தன்னை விடுதலைப் புலி எனக் கூறி கழுத்தில் சயனைட் அணிந்திருந்ததகாவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிணையில் விடுதலையாகி உள்ள மூவரில் ஜோன்சன் ஜெயகாந்தன் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் விடுதலைப் புலிகளின் மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் போராகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.
இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள் கல்முனையில் இவரது நடமாட்டம் அவதானிக்கப்பட்டு விடுதலைப் புலிகளினால் பிடிக்க முற்பட்ட போது ஓடிச் சென்று கார்மேல் பற்றிமா கல்லூரி அகதி முகாமுக்குள் நுழைந்து கொண்டார். அங்கு இருந்த விசேட அதிரடிப்படையினரிடம் சில மாதங்களுக்கு முன்பு தான் தான் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறி தஞ்சமடைந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
Ò¾¢Éõ

" "

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&