11-15-2005, 01:59 PM
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரித்தால் சிறிலங்கா கொடுக்கப்போகும் விலை மிகக் கடுமையாக இருக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை!! </span>
[செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2005, 16:54 ஈழம்] [ம.சேரமான்]
<b>இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயகம் இருந்தது என்ற வரலாற்று உண்மையை சிறிலங்கா நிராகரிக்குமேயானால் அதற்கான விலையை ஒருநாள் அவர்கள் கொடுக்க நேரிடும் என்றும் அந்த விலையானது மிகக் கடுமையானதாக, ஈடுசெய்ய முடியாத பேரழிவாக இருக்கும் என்றும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்</b>.
சர்வதேச ஆங்கில ஊடகமான ரைம்ஸ் ஏட்டிற்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:
கேள்வி: இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்: நாங்கள் இந்தத் தேர்தல் தொடர்பாக அக்கறை கொள்ளவில்லை. இரு கட்சிகளுடனான எமது அனுபவங்களின் அடிப்படையில் அனைவருமே தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைப் பற்றி பேசுகின்றனர். வாக்குகளுக்காகத்தான் அவர்கள் பேசுகிறார்கள். தேர்தலுக்குப் பின்னால் இதை கருத்தில் எடுக்காது விட்டுவிடுகிறார்கள். இதுவிடயத்தில் அக்கறையற்று இருப்பதுதான் அவர்களது வழமையாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் கவலைப்படவில்லை. இருவேட்பாளர்களிடமும் எந்த ஒரு வேறுபாட்டையும் மக்கள் பார்க்கவில்லை.
கேள்வி: ரணில் ஒரு சமாதானவாதி. மகிந்த ஒரு கடும்போக்கு நிலையை மேற்கொண்டுள்ளார் என்ற வேறுபாடு அங்குள்ளதே?
பதில்: மகிந்தவினது செயற்பாடுகள் ஆபத்துகளை வெளிப்படையாகச் சொல்லுகின்றன. ஆனால் சமாதானவாதி என்று நீங்கள் சொல்லுகிற ரணிலைப் பொறுத்தவரை எமது அனுபவத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அதிக சந்தர்ப்பங்கள் இருந்தும் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எமது மக்கள் இன்று நம்பிக்கையன்று விரக்தி நிலையில் இருப்பதற்கு யார் பொறுப்பானவர் என்றால் ரணில்தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் எதையுமே செயற்படுத்தவில்லை.
கடந்த சில மாதங்களாக தமிழர் தாயகமெங்கும் மக்கள் நடத்தி வரும் எழுச்சிப் பேரணிகளுடாக இதை நாம் பார்க்கிறோம். சிங்களத் தலைமைகள் மீது எம் மக்கள் முற்று முழுதாக நம்பிக்கையற்று இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திய 1970-களின் நிலையை சிங்களத் தலைவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால் மக்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள். அது மக்களின் உணர்வுகள். எம்மால் அந்த உணர்வுகளைக் காயப்படுத்த முடியாது.
கேள்வி: மீண்டும் யுத்தத்துக்குத் திரும்பப் போவதாக நீங்கள் சொல்கிறீர்களா?
பதில்: மக்களின் இந்த நிலையானது யுத்தத்தை நோக்கிச் செல்லும் என்று கண்டிப்பாக நாம் கூற முடியாது. ஆனால் மக்களே நீதிபதிகள். எங்களுக்கு எம்மக்களே உத்தரவிடுவார்கள். அவர்கள் அண்மை மாதங்களாக ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அவர்களது எழுச்சிப் போராட்டங்களின் போது இராணுவத்தினரது வன்முறைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது. மக்கள் சக்தியை இராணுவ ஒடுக்குமுறை மூலம் அழிக்க நினைத்தால் நிச்சயமாக அந்த மக்கள் ஜனநாயகப் பாதைக்கு எதிராகத் திரும்புவதை கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய செயற்பாடுகளைத்தான் சிறிலங்கா அரசாங்கம் அதிகளவில் செய்து வருகிறது.
மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தால் மக்களே ஆயுதங்களை ஏந்துவார்கள். அப்படியான நெருக்கடியான நேரங்களில் எமது தலைமைப்பீடம் மக்களுக்குப் பின்னால் நிற்பதற்கு முடிவு செய்யும். இராணுவ ஒடுக்குமுறைகளை உலகின் எந்தப் பகுதி மக்களும் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். ஒரு கட்டத்தில் அந்த மக்களின் எழுச்சியானது அவர்களது விடுதலையை மீட்டெடுப்பதில் வெற்றி பெறும்.
கேள்வி: மக்கள் வாக்களிப்பதைத் தீர்மானிப்பதில் நீங்கள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: அது தவறு. தமிழர் தாயகத்தின் எந்தப் பகுதிக்கும் நீங்கள் சென்று பார்க்கலாம். எம் மக்கள் தேர்தல் ஆர்வம் கொள்ளாதிருப்பதை. அவர்கள் புதிதாக எதையும் பார்த்துவிடவில்லை. அவர்கள் எந்த ஒரு புதிய நம்பிக்கையையும் பெற்றிருக்கவில்லை. ரணிலின் யாழ்ப்பாண பயணத்தைப் பார்த்தீர்கள் எனில் அவர் பலாலி இராணுவ தளத்துக்கு சென்றார். அங்கு இராணுவத்தினர் மத்தியில், இராணுவத்தை நவீனமயமாக்கப் போவதாகவும் ஆயுதங்கள் வாங்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். அவர் தமிழ் மக்களைச் சந்திக்கவில்லை. அவர்களது குறைகளைக் கேட்கவில்லை. அப்படியானால் மக்களின் மனநிலையை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.
கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை குறித்து....
பதில்: நுட்பமாக பார்த்தால் அது தடை அல்ல. எமது பிரதிநிதிகளுக்கான உத்தியோகபூர்வமான வரவேற்பை இடைநிறுத்தம் செய்து வைத்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்துள்ள இன்னொரு தரப்பாளர் நாங்கள். ஆனால் சிறிலங்காவினது அழுத்தத்தால் எம்மீது ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அது எதிர்பாராதது.
கதிர்காமர் கொலையைப் பொறுத்தவரை குற்றவியல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு தரப்பினரால் எம்மீது குற்றம்சாட்டப்படுகிறது. எம்மீது குற்றம் சொல்லுகிறவர்கள் எமக்கு விளக்கம் அளிக்கவோ எம்மை கலந்து ஆலோசிக்கவோ இல்லை. எந்தக் கொலைகள் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளே செய்ததாக உடனே குற்றம்சாட்டுகிறார்கள். சிறிலங்கா அரசாங்கமானது இந்தப் பொய்மைப் பண்டத்தை சர்வதேச சமூகத்துக்கு விற்பனை செய்கிறது. சர்வதேச சமூகமும் இதை வாங்கிக் கொள்வது எதிர்பாராத ஒன்று.
உண்மை ஒருநாள் வெற்றி பெறும். ஐரோப்பிய சமூகமானது ஒரு ஜனநாயக ரீதியான சமூகம் என நாம் எண்ணுகிறோம். அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளை தங்களது குடிமக்களாக அங்கீகரித்துள்ளார்கள். இந்த நாட்டினது ஒடுக்குமுறைகளை அவர்கள் பார்க்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல்-இராணுவ இயக்கத்தினர். நாம் அரசியல் ரீதியான போராட்டங்களைத் தொடங்கினோம். இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எமது பாதுகாப்புக்காக நாம் ஆயுதமேந்த வேண்டியேற்பட்டது. நாம் இராணுவ அமைப்பாக மாறினோம். ஆனால் எமது இலக்கு என்பது முழுமையாகவே அரசியல்மயமானது. இதில் எமது தாயகத்திலோ எம்மிடத்திலோ எதுவித வேறுபாடும் இல்லை. ஆனால் மக்களின் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்கிக் கொண்டே இருந்தால் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்ற பொறுப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்குரிய தக்க பதிலடியைக் கொடுப்பார்கள். எமது இலக்கு என்பது தமிழ் மக்களின் முழுமையான அரசியல் விடுதலைதான். நாம் அதை பேச்சுகளினூடே அடையமுடியுமானால் நாம் அதற்குத் தயார். ஆனால் அனைத்துமே சிறிலங்கா அரசாங்கத்தைச் சார்ந்திருக்கிறது.
கேள்வி: உங்களது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதியைப் பார்க்கிற போது தனியரசுக்கான கட்டமைப்பைப் பார்க்கிறோம். எல்லைகளை வரையறுத்துள்ளீர்கள், இராணுவம், காவல்துறை, நீதிமன்றங்கள், மக்கள் நிர்வாகம், தேசியக் கொடி ஆகியவற்றை உருவாக்கி உள்ளீர்கள். நாட்டுக்கான தேசிய பண்ணைக் கூட உருவாக்கி வருவதாக கேள்விப்பட்டோம். தமிழர் தாயகக் கோட்பாடு பற்றி....
பதில்: தமிழர் தாயகம் என்பது வரலாற்று உண்மை. வரலாற்றை சிறிலங்காத் தரப்பினர் திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழர்களுக்கான ஒரு நாடு இங்கே இருந்தது என்பது வெளிப்படையான உண்மை. இங்கே தமிழர்களின் இறையாண்மையுள்ள நாடு இருந்தது. உயர்ந்த பண்பாட்டுடனும் கலாச்சாரத்துடன் தமிழ் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்ந்தனர். இழந்துவிட்ட அதை தற்போது மீட்டு எடுக்கிறார்கள். 60 முதல் 70 வீதமான எமது தாயகப் பகுதியை விடுதலை செய்துள்ளோம். இந்த செயற்பாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதை எவராலும் தடுக்க முடியாது. அதுவே உண்மை. சிறிலங்கா தரப்பினர் சொல்வது போல் ஒற்றையாட்சி கோட்பாடு என்பது கற்பனையானது. இந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால், அதற்காக உரிய விலையை அவர்கள் கொடுக்க நேரிடும். அந்த விலையானது மிகக் கடுமையாக, அவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
நாம் இப்போது இருண்ட காலத்தைத்தான் பார்த்து வருகிறோம். ஆனால் நாம் முழுமையாக நம்பிக்கையற்றவர்கள் அல்ல. தொலைதூரத்தில் உள்ள அடிவானத்தில் ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்பட்டாலும் நாம் மகிழ்ச்சியடைவோம். அதைத் தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வோம். நாங்கள் ஒளிமயமான எதிர்காலத்தையே விரும்புகிவர்கள் என்றார் தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&