11-15-2005, 12:30 AM
<img src='http://www.frontlineonnet.com/fl2213/images/20050701003911106.jpg' border='0' alt='user posted image'>
<b>தனுஷ் படம் பார்க்க வந்த பாலுமகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.</b>
<img src='http://www.teakada.com/archives/icons/athuoru.gif' border='0' alt='user posted image'>
அது ஒரு கனாக்காலம் படம் பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. முன்னதாக பாலுமகேந்திரா வந்து அமர்ந்திருந்தார்.
திரையில் படம் போடுவதற்கு முன் பேசினார் பாலு, …இப்படத்தை தொடங்கிய நாளிலேயே எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. மீண்டும் உயிர் பிழைப்பேனா?
இந்தப் படத்தை முடிப்பேனா? என்ற சந்தேகம் எனக்கு. உடல் நிலை சரியானதும் ஒரு வழியாக படத்தை கஷ்டப்பட்டு எடுத்து முடித்தேன். படத்தைப் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்† என்று கூறியபாலு, முழுபடத்தையும் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
படம் தொடங்குவதற்கு முன் எல்லோரும் செல்போனை …சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒருவருக்கு செல்போனில் அழைப்புவர அவர் சற்று சத்தமாக பதில் பேசினார். பாலுவுக்கு கோபம் வர, இருக்கையிலிருந்து எழுந்தவர் கொஞ்சம் மெதுவா பேசுங்க† என்று சத்தமாகவே கடிந்துகொண்டார்.
படம் முடிந்தபிறகு பேசுவதற்காக முன்பகுதிக்கு மீண்டும் வந்த பாலு, இப்படத்தில் எந்த இடத்தில் நான் லைட்டிங் செய்திருக்கிறேன் என்பதை யாரும் கண்டுபிடித்துவிட முடியாதபடி எடுத்திருக்கிறேன். படத்தின் உருக்கமான காட்சிகள்....என்றவர் திடீரென்று விசும்பத் தொடங்கிவிட்டார். அதற்குமேல் அவருக்கு பேச்சு வரவில்லை. கண்ணீர் பீறிட்டது.
கைத்தாங்கலாக அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.உடல்நலமில்லாமல் போனது, சம்பளப் பாக்கியை பெற நடத்திய போராட்டம் என வரிசையாக அவரது கண்முன் சம்பவங்கள் வந்து போய்கொண்டிருக்கும் போது பாலுவுக்கு சிரிப்பு எப்படி வரும்? என்றார் அங்கிருந்த ஒரு திரையுலக பிரமுகர்.